• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen..! EPI - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்.....

எல்லாரும் எப்படி இருக்கீங்க... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்.... வாத்தி இன்னைக்கு என்ன பண்ணபோகிறான் என்று பார்ப்போம் வாங்க... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே :):)...

காதல் – 9

நான் விழும் போது தாங்கி பிடிக்கின்ற...

உன் விரலோடு உண்டானது என் காதல்...!!!

காலேஜ் வாசலில் நின்ற மதியின் கண்கள் நாலா பக்கமும் அவளையும் மீறி ஆர்வமாய் சுழன்றது. ஏன் என அவளுக்கே தெரியவில்லை. ‘அந்த போன் கால் எதுவும் உண்மை இல்லை’ எனத் தனக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாலும், அலைப்பேசி இசைக்கையில் சட்டென ஒரு பரப்பரப்பு எழுவது எதனால் என அவளுக்குத் தெரியாதா என்ன?

இத்தனை வருடங்கள் தன்னைத் தீண்டாத காதல் உணர்வு, டீன் ஏஜில் வராத காதல் உணர்வு, ஒரு நிலைக்கு வந்த பிறகு தீண்டுவதை சற்று அதிர்வாய் உள்வாங்கி நின்றிருந்தாள். அது காதல் தானா? அவளுக்கே தெரியவில்லை... இந்த நிலையிலும் காதல் வருமா? விடை தெரியா கேள்வி அவளிடம்... அங்கு மரத்தடியில் நின்றிருந்த மாணவர்கள் அனைவரையும் பாராமல் பார்த்திருந்தாள்.

‘யாராவது தன்னையே பார்கிறார்களா? தன் செய்கையை கவனிக்கிறார்களா? இங்கே அவன் இருப்பானா? அவன் இதே கல்லூரியில் படிக்கிறானா? இல்லை வேறெங்கும் இருந்து என்னை கவனிக்கிறானா? நான் செல்லும் பஸ்சில் வருவானா? இன்று அவன் பேசுவானா? இல்லையென்றால் நேற்று யாரோ விளையாடி இருக்கிறார்களா? ஒரு நாள் வந்த கிச்சா இனி வரமாட்டானா? அது கிச்சா தானே? இல்லையென்றால்....’ அப்பப்பா வேண்டாம்..., இந்த நினைவே வேண்டாம்... அதை சட்டென உதறி தள்ளியவள் கண்களோ எங்கும் சுழலுவதை மட்டும் நிறுத்தவில்லை.

அதே நேரம், “டேய், கிளம்புடா போகலாம்?” கெளதம் அருகில் அஷோக் வந்து அமர்ந்தப் படிக் கூறினான்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுடா, அவளும் வரட்டும்”

“அவளா, அது யாருடா?”

“அதான்டா உன் தங்கச்சி”

“என்ன தங்கச்சியா? அவ எங்கடா இங்க?”

“டேய், அவ இங்க தான்டா இருக்கா, இங்க தான் படிக்கிறா” என்றவன் மதியை காட்ட,

“ஓஹோ, நம்மாளு பிரண்டா” உற்சாகமானான் அஷோக்.

“அது யாருடா, உனக்கு போய் ஆளா வந்தது?” கிண்டலாக கேட்டான் கெளதம்.

“ஏன்... ஏன்... எனக்கு என்ன குறை, நான் அழகன்டா?” என,

வாய் பொத்தி சிரித்தான் கெளதம். அவனைப் பார்த்தவன் “சரி விடு, வீட்டுக்கு கிளம்பலாம் வண்டியை எடு” என,

“அவளும் கிளம்பட்டும்டா?”

“சரி, எத்தனை நாள் தான் இப்படியே பார்ப்ப, போய் அவகிட்ட பேசு”

“இல்ல, வேண்டாம்டா, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல, நான் அவளுக்கு தாலி கட்டியவன்னு அவ முன்னாடி போய் நின்னா என்னை ஏத்துப்பாளா? கண்டிப்பா மாட்டா?”

“அப்போ கிச்சாவா போ?”

“அதுவும் முடியாதுடா, எப்படி உடனே போய் அவள் முன்னாடி நிற்பது, அவள் மனசில நான் இருப்பேனான்னே தெரியல?”

“சரி இப்போ என்ன தான் பண்ணபோகிற?”

“அவ மனசில், யார் இருக்கான்னு தெரிஞ்ச பிறகு தான் அவளை நேரில் சந்திக்க போகிறேன்”

“அதுவரை இப்படி அவ பின்னாடியே சுத்த போறியா?”

“ஆமா”

“ஏன்டா மச்சான்... டீனேஜ் பசங்க மாதிரி என்னடா விளையாட்டு இது? அவ போற இடம் எல்லாம் போறது... அவளையே பாலோ பண்ணுறது... இதெல்லாம் நல்லாவா இருக்கு? ப்ரோபசர் மாதிரி இரேன்டா” கொஞ்சம் நக்கலாகவே கேட்டான் அஷோக்.

“ஜஸ்ட் என்ஜாய் தி மொமென்ட் டா” கெளதம் வெகு கேஷுவலாகச் சொல்ல, அவனை கொலைவெறியில் முறைத்தான் அஷோக்.

“ஏன்டா டேய்... காலேஜ் படிக்கும் போதே இதெல்லாம் செய்தால், ஏதோ திரில், கிக் இருக்குன்னு சொல்லலாம், இதென்னடா இப்போ போட்டு இப்படி எல்லாம் பண்ணுற? அடி வாங்க வச்சிராத... அவளுக்கு ஏதோ பாடிகார்ட் இருக்குன்னு வேற சொல்லுற பயமா இருக்குடா” புலம்பி தள்ளினான் அஷோக்.

அஷோக் புலம்பலை கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளாமல், தலையை கார் கண்ணாடியில் கொஞ்சமாய் சீவியவன், சட்டையை நீவி விட்டுக் கொண்டு “மச்சான், நான் எப்படி இருக்கேன் ஓகே தான?” ஷர்ட் கையை மடக்கி விட்டப்படி கேட்டான் கெளதம். அவனை கொலை வெறியில் முறைத்தான் அஷோக்.

“ஏன்டா என் உயிரை வாங்குற.., என்னவோ உன்னை பார்த்ததும் அவ ஓடி வந்து கட்டிபிடிச்சி கன்னத்துல இச்... இச் ன்னு முத்தம் கொடுக்க போற மாதிரி பில்டப் பண்ணுற, அவ, அவ வேலையை பாக்கபோறா, நீ ஒளிஞ்சிருந்து அவளை பாக்கப் போற? அதுக்கு நீ சட்டையை கிழிச்சு போட்டும் போகலாம்? சட்டையே போடாமலும் போகலாம், ஒரு வேளை அப்படி போனாலாவது வித்தியாசமா ஒரு மனுஷன் வர்றான்னு உன்னை கொஞ்சமாவது பார்க்க வாய்ப்பிருக்கு?”

அஷோக் சொல்லிமுடிக்கவும் முதுகில் பொத்தென்ன ரெண்டு அடி போட்டான் கெளதம். “ஹையோ... அம்மா எனக்கு ஆளு கிடைச்ச பொறாமையில் போட்டு அடிக்குறானே... இதை கேட்க யாருமே இல்லையா?” சன்னமாய் அலறினான் அஷோக்.

“அடேய்... சனியனே வாயை மூடுடா, ஏன்டா இப்படி கத்துற, அவ இங்க பாத்திற போறா?” அஷோக் வாயை மூடிய படியே சீறினான் கெளதம். நல்ல வேளை கார் கதவு மூடி இருந்ததால், அவர்கள் சத்தம் வெளியில் கேட்கவில்லை.

“பின்ன இப்படி கதவை மூடி வச்சு அடிச்சா, கத்தாம என்ன செய்வாங்க?” அவன் கையை வாயில் இருந்து விலக்கியபடியே நெளிந்தான் அஷோக்.

“ஒரு ஃபிரண்ட்... ஏதாவது கேட்டால் ஹெல்ப் பண்ணாம நக்கல் பேச்சு பேசுறியா நீ, பஸ் வருதான்னு பாரு போ?” அவனை பிடிச்சு கதவோடு தள்ள,

“எனக்கு ஒரு டவுட்?”

“என்ன, கேளு?”

“ஆமா, பஸ் வந்தா மட்டும் அவளை தள்ளிட்டு போய் நீ டூயட் ஆடிருவியா என்ன?”

“எங்கே சரியா கேட்கல, இன்னொரு வாட்டி சொல்லு பாப்போம்?” கெளதம் அவன் அருகில் காதை கொண்டு வர, அதே நேரம் பஸ் சத்தம் கேட்கவே, தற்சமயம் அவனை விட்டவன், “பஸ் பின்னாடியே மெதுவா வா, எனக்கு ஒரு சின்ன வேலை பஸ்ல இருக்கு, அதை முடிச்சுட்டு இறங்கவும் அப்படியே பிக் அப் பண்ணு?” எனக் கூறி இறங்க,

“உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா?” மெதுவாக புலம்ப,

“என்ன சொன்ன? சரியா கேட்கல, என் பக்கத்துல வந்து சொல்லு” கெளதம் திரும்பி கேட்க,

“இல்லைடா மச்சான், வண்டியை இப்படியே ஒட்டவா? இல்லை டோர் திறக்கவான்னு கேட்டேன்டா?” என்றவன் விட்டால் போதுமென அவனை தாண்டி சென்றான்.

பஸ் வரவே ஏறிக் கொண்டாள் மதி. பள்ளி, கல்லூரி முடியும் நேரம் என்பதால், மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. அனைவரது முகங்களும் களைப்புடன் இருக்க, மதி கண்கள் அடிக்கடி போனையே பார்த்துக் கொண்டது.

அதே நேரம் போன் அழைக்கவும், ஒரு வேளை, நேற்று பேசியவன் தான் அழைக்கிறானோ என ஆர்வமாக பார்த்தாள். இந்தர் தான் அழைத்திருந்தான்.

“சொல்லுடா இந்தர்”

“மதி பாத்து, பத்திரமா போ”

“சரிடா, நீ சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு வா?”

“எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ வருகிறேன்” எனக் கூறி அழைப்பை நிறுத்தினான்.

‘அவள் எங்கே...?” எண்ணியவனதுப் பார்வை ஒவ்வொரு ஆளாக சுற்றி வந்தது. அவன் தன் பார்வையில் விழவே அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். மங்கி இருந்த வீட்டில் எல்.ஈ.டி. பல்ப் எரிந்தது போல் பிரகாசமானது.

கண்டக்டர் இருக்கும் பக்கம் பார்க்க அவர் மும்முரமாய் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘தான் இங்கிருப்பதை எப்படி அவளுக்கு தெரிவிப்பது?’ எண்ணியவன் அவளையே பார்த்திருந்தான்.

‘இப்பொழுது நேராக சென்று அவள் முன் போய் நின்றால் கூட, அவள் அவனை கண்டுக் கொள்வதில்லை தான், ஆனால் அவன் கண் அவளை ஜொள்ளுவதை கண்டாலே போதும், வாத்தி என்ற மரியாதை இல்லாமல் போகும்’ என்னப் பண்ணுவது யோசிக்க, அவள் கண்களோ யாரையோ தேடுவதைப் போல் அங்கும்... இங்கும் சுழன்றுக் கொண்டும், போனை பார்ப்பதுமாக இருந்தது.

“தம்பி எப்படி இருக்கீங்க?” அருகில் ஒருவர் அவன் தோள் தட்டி விசாரிக்கவே, சட்டென பார்வையை அவர் பக்கம் திருப்பினான் கெளதம்.

கண்டக்டர் தான் அவனிடம் விசாரித்தார். “நல்லா இருக்கேன் தாத்தா” அவரிடம் கூறியவன், அவனுக்கும், மதிக்குமாக இரு டிக்கெட் எடுத்துக் கொண்டான்.

அவர் அவனுக்கு நன்கு பரிச்சயமானவர். மெதுவாக அவரிடம் எதுவோ கூற, சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டார். , உடனே பாக்கெட்டில் இருந்து பென் எடுத்தவன் எதையோ டிக்கெட் பின்னே எழுதினான்.

“டிக்கெட் எடுக்காதவங்க டிக்கெட் எடுங்கம்மா?” அவர் குரல் கொடுத்துக் கொண்டே மெதுவாக நகர, அவர் பின்னே அவனும் நகர்ந்தான்.
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
மதி போன் பார்த்துக் கொண்டே அவர் கையில் காசை கொடுத்து, டிக்கெட் வாங்க கையை நீட்ட, அந்த கையில் தான் எடுத்த டிக்கெட்டை வைத்த கெளதம், அப்படியே மெதுவாக பின்னால் நகர்ந்து இறங்கிக் கொண்டான்.

பஸ் பின்னால் மெதுவாக வந்த அஷோக், கெளதம் பஸ் விட்டு இறங்கவும், அவன் அருகில் காரை நிறுத்த அதில் ஏறிக் கொண்டான் கெளதம்.

சிரிப்புடன் தன் போனை கையில் எடுத்து அவளுக்கு அழைக்க, அவனையே பார்த்திருந்தான் அஷோக்.

இதுவரை போனையே பார்த்திருந்தவள், ‘இனி அழைப்பு வந்தால் எடுக்கவே கூடாது’ என எண்ணியிருக்க, அதே நேரம் அழைப்பு வரவே தான் எண்ணியதையும் மீறி போனை எடுத்திருந்தாள்.

“யாரையோ தீவிரமா தேடுற போல, எதிரில் உன் கண் முன் வந்து உனக்கு டிக்கெட் தந்த பிறகும் என்னை கவனிக்கவே இல்ல போல...” அவன் சொல்லிக் கொண்டே போக, சட்டென தன் கையில் இருந்த டிக்கெட்டைப் பார்க்க, “இன்று உனக்களிக்கும் முத்தத்துடன் உன் கிச்சா” என்ற வாசகம் குட்டி இதயத்துடன் அவளை பார்த்து சிரித்தது.

ஒரு நொடி அவளால் அவள் கண்களையே நம்பமுடியவில்லை. அவன் இங்கு இருந்தானா? அதிலும் என் அருகிலேயே. கண்களை எங்கும் சுற்றிப் பார்த்து, பின்னால் வேகமாக திரும்ப பின்னால் நின்றவர் மேல் மோதி, மன்னிப்பை கேட்டுவிட்டு, பின்னால் சென்றுப் பார்க்க, அந்த வயதான கண்டக்டர், டிக்கெட் எண்ணை குறித்துக் கொண்டிருந்தார்.

அந்த நொடி அவள் மனதில் மிக பெரிய ஏமாற்றம் வந்து குடியேறியது. “என்னை ரொம்ப தேடுற போல?” அவன் குரல் மீண்டும் ஒலிக்க, ‘அவன் இங்கு தான் இருக்கிறானா?’ கண்களை மீண்டும் சுழல விட்டுக் கொண்டாள்.

“சொல்லு, தேடுறியா?” அவன் உல்லாசமாக வினவ,

அவளுள் மெல்லியதாக ஒரு கோபம் துளிர்க்க “உன்னை இல்லை, அந்த போட்டோக்கு சொந்தக்காரரை பார்க்க முடியுமான்னு தேடினேன், வேற எதுவும் இல்ல” இருக்கும் இடம் கருதி மிக மெல்லிய குரலில் பதில் கொடுத்தாள்.

“அப்படியா...?” யோசித்தவன் போல பாவ்லா செய்தவன் “எனக்கு என்னவோ...?” மெதுவாக இழுக்க,

வேகமாக மூச்சை இழுத்து விட்டவள், அந்த அழுத்தத்தை, ஏமாற்றத்தை தாங்க முடியாமல் “பிளீஸ், உனக்கு என்ன வேணும், ஏன் இப்படி விளையாடுற? எதுக்கு இப்படி என்னை தொல்லை பண்ணுறீங்க? என... எனக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு?” மிகவும் டென்சனாக பேசினாள்.

அவள் குரலில் நிஜமான, ஒரு ஏமாற்றத்தை கண்டவன் “சரி... கூல்... பிளீஸ் இனிமேல் நான் பேசல...” அலைபேசியை சட்டென வைத்துவிட்டான்.

அதென்னவோ அவளை கஷ்டபடுத்தி பார்க்க அவன் மனம் விரும்பவில்லை... சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே அவள் எந்த தப்பு செய்ததாலும், அவளின் அந்த சிரிப்பில் அவளை தூக்கி கொஞ்சுபவன், அவளை வருந்த வைக்க விரும்பவில்லை.

அவளின் மனநிலையை அறிய தான் முயற்சித்தானே தவிர, வருத்தபடவைக்க அவன் நினைக்கவே இல்லை. அவளை தொந்தரவு செய்யவேக் கூடாது என முடிவெடுத்தவன், தலையை அழுந்த பிடித்துக் கொண்டான். ‘இனி என்ன செய்வது?’ இது தான் அவனது யோசனையாக இருந்தது.

“என்னாச்சுடா?”

“ஒன்னும் இல்லைடா...” என்றவன் நடந்ததைக் கூற,

“கொஞ்சம் விட்டு பிடிடா, எல்லாம் நல்லதே நடக்கும்” என கூற, சன்னமாய் தலையாட்டிக் கொண்டான்.

ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தர் மனம் கொஞ்ச நாட்களாக தேவியையே சுற்றி வந்தது. மதி திருமணத்தில் நடந்த குளறுபடியில் அவன் அவளை விட்டு விலகி இருந்தான்.

தன் தேவதை வாழ்க்கை எப்பொழுது சரியாகிறதோ, அப்பொழுது தான் அவன் வாழ்க்கையை பார்ப்பதாக கூறியிருந்தான். அதிலும் எப்பொழுது அவள் அண்ணன் வந்து, அவளை அழைக்கிறானோ அன்று தான் ரதியை தேடுவதாக கூறியிருந்தான்.

ஆனால் ரதி அதை பற்றி யாரிடமும் கூறவில்லை, தன் அண்ணனுக்கு விருப்பம் இல்லாத வாழ்வில் அவனை நுழைக்க அவள் விரும்பவில்லை.

அன்று போன கெளதம் இன்று வரை மதியை அழைக்கவில்லை. அன்று சிக்னலில் அவளை கண்ட பின்னும் பார்க்காமல் சென்றவன், கெளதம் மேல் இந்தருக்கு கோபமாக வந்தது.

அதற்க்கு மேலும் யோசிக்க முடியாமல் தலை வலிக்கவே, தலையை வேகமாக குலுக்கிக் கொண்டு எழுந்து கேண்டீன் பக்கமாக நடந்து சென்றான் இந்தர்.

அந்த நேரத்தில் ஒலித்தது அவன் அலைப்பேசி, திரையில் ஒளிர்ந்தது “ரதி”.

யோசனையோடு அதை அட்டென் பண்ணாமல், அப்படியே நடந்தான் இந்தர்.

அழைப்பு நின்று மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. நடந்தபடியே “ஹலோ” என்றான் இந்தர்.

மறுமுனையில் மௌனம் நிலவியது. எத்தனை மாதங்கள் ஆகியது அவன் குரலைக் கேட்டு!

மீண்டும் “ஹலோ” என்றான்.

அவன் குரலில் மெலிதாக அழுகை எட்டிப் பார்த்தது. “எப்படி இருக்கீங்க இந்தர்?” மெல்லியதாக வினவினாள் ரதி.

“ம்ம்ம்... நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க?” ஊடல் கொண்ட காதல் மனம் மெதுவாக விசும்பியது.

“இருக்கேன், அண்ணி எப்படி இருக்காங்க?”

பதிலில்லை அவனிடம், அவளுக்கு தெரியும், அவன் பதில் கூறமாட்டான் என்று. ஆனாலும் கேட்டாள். அவனின் தேவதை, அவளுக்கும் தேவதை தானே!

“அடுத்த மாதம், இந்தியா வருகிறேன்?” அறிவிப்பாக கூறினாள்.

“வா” ஒற்றை சொல்லோடு முடித்துக் கொண்டான் காதலன்.

“வைக்கவா?”

“ம்ம்.. வை” ஒன்றை சொல்!

அந்த பக்கம் போன் வைக்கப் பட, போனை பார்த்தவன் கண்களில் ஒன்றை துளி கண்ணீர்! அவனின் ஆனந்த கண்ணீர்!

அடுத்த எபி செவ்வாய் கிழமை..:)
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஐயோ! மதி உங்கையிலேயே டிக்கட்டை தந்துட்டு போனவனை இப்படி மிஸ் பண்ணிட்டியேம்மா...
ஆனாலும் இந்த வாத்திக்கு தில்லு கொஞ்சம் அதிகம் தான் பா....
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா..மதி மிஸ் பண்ணிட்டாளே கிச்சாவ....கௌதம் நீ என்ன தான் பண்ண போற...அஷோக் நீ ரொம்ப பாவம்....ரதி இந்தர் எப்ப சேருவாங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top