• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu...: Aththiyaayam 16.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 16.

சென்னையில் மாலினியும் சேகரும் கவலைப்பட்டுக்கொண்டிஉர்ந்தார்கள். கீதா ஊருக்குப் போய் நாட்கள் மூன்று ஆகி விட்டன. ஆனால் அவளிடமிருந்து எந்த ஃபோனும் வரவில்லை. இவர்கள் ஃபோன் செய்து பார்த்தும் அவள் எடுக்கவே இல்லை. என்ன ஆனதோ எனக் கவலைப்பட்டனர். கிளம்பிச் சென்று நேரிலேயே என்னவென்று அறிந்து கொள்ளலாம் என்றால் கயலுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. மலேரியாக் காய்ச்சல் என்று சொல்லி விட்டார்கள். குறைந்தது பத்து நாட்கள் வீட்டில் ஓய்வாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் அவளை மிகவும் பத்திரமாகக் கவனித்துக்கொண்டான் சேகர். மிகக்கடுமையாக காய்ச்சலடிக்கும் நேரத்திலிலும் அண்ணி கூட இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறினாள் அந்தச் சிறு பெண்.

கயலுக்கு உடம்பு கொஞ்சம் சரியானதும் அவளை பக்கத்து வீட்டம்மாவிடம் சொல்லி கவனித்துக்கொள்ள சொல்லி விட்டு அலுவலகம் சென்றான் சேகர். அங்கே அவனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மாலினி. அவளது முகத்தில் கலக்கம் இருந்தது.

"கயல் நல்லா ஆயிட்டா மாலினி மேடம்! இனி கவலைப்பட ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்க! ரெண்டு நாள் வீட்டுல ரெஸ்ட் எடுத்தாப் போதுமாம். அடுத்த வரத்துல இருந்து ஸ்கூலுக்குப் போகலாம்னு சொல்லிட்டாங்க" என்றான்.

பதில் ஒன்றும் கூறாமல் அவனை ஏறிட்டாள் மாலினி.

"என்ன மேடம் அப்படிப் பார்க்கறீங்க?"

"சேகர் சார்! கீதா வேலையை ரிசைன் பண்ணிட்டா. இன்னைக்குக் காலையில தான் மின்னஞ்சல் வந்தது." என்றாள்.

அதிர்ந்து போனான் சேகர்.

"வேலையை ராஜினாமா செய்துட்டாளா? ஏன்? என்ன காரணம் சொல்லியிருக்கா?"

"எதுவுமே சொல்லல்ல! என்னோட சொந்த காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்யறேன்னு சொல்லியிருக்கா. மூணு மாச நோட்டீஸ் கூடக் கொடுக்கல்ல!"

"என்ன காரணமா இருக்கும் மாலினி மேடம்? நேத்து நைட்டு கூட நான் அவளுக்கு கால் பண்ணுனேன். ஆனா அவ எடுக்கவே இல்ல! "

"சே! நாம தப்பு பண்ணிட்டோம் சேகர் சார்! அவங்க அம்மா நம்பரை நாம வாங்கி வெச்சிருக்கணும். இப்ப என்ன ஆச்சுன்னே தெரியலியயே?"

"பேசாம நான் வேணும்னா கிளம்பிப் போயிப் பார்க்கட்டுமா? எனக்கு என்னவோ கலக்கமா இருக்கு" என்றான் சேகர்.

"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நாளைக்கு இரண்டாவது சனிக்கிழமை. ஆபீஸ் லீவு தான். இன்னைக்கு நைட்டே கிளம்புங்க. கயலை எங்க வீட்டுல விட்டிருங்க நான் பார்த்துக்கறேன். ஊருக்குப் போயிட்டு முடிஞ்சா கீதாவைக் கையோடு கூட்டிக்கிட்டு வந்திருங்க" என்றாள் மாலினி.

அப்படியே செய்வதாக தீர்மானித்துக்கொண்டு மாலையில் சீக்கிரமே வீட்டுக்குத் திரும்பினான். ஆனால் அங்கே அவனுக்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அத்தையும் மாமாவும் வந்து கூடத்தில் அமர்ந்திருந்தனர். இவன் தலையைக் கண்டவுடன் அத்தை மிகவும் உரிமையோடு அதட்டினாள்.

"ஏண்டா சேகரு! கயலுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமே? மலேரியாக் காய்ச்சல் வந்து இப்பத்தான் சரியாச்சாம்? ஏன் எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லல்ல? நாங்க பார்த்துக்க மாட்டோமா?" என்றாள்.

"இல்லத்த! உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு தான் சொல்லல்ல! திங்கட் கிழமையில இருந்து ஸ்கூலுக்குப் போகலாம்னு சொல்லிட்டாங்க!"

"உம் சொன்னா சொன்னா! ஆனா நீ ஏன்ப்பா அவளை அழைச்சுக்கிட்டு நம்ம வீட்டுக்கு வரல்ல? நாங்க அவ்வளவு அன்னியமா போயிட்டோமா?"

அத்தையின் கேள்விக்கு உண்மையிலேயே பதில் சொல்ல முடியவில்லை சேகரால். காரணம் கயலுக்கு உடல் நலமில்லாமல் போன போது கூட அத்தையின் நினைவோ அவர்களின் உதவியை நாடலாம் என்ற எண்ணமோ அவனுக்கு வரவே இல்லை. மனதில் எப்போதும் கீதாவைப் பற்றிய நினைவே ஓடிக்கொண்டிருந்தது.

கயல் தோழியிடம் ஏதோ நோட்டு வாங்க வேண்டும் என்று போய் விட்டாள். அத்தையும் மாமாவும் சேகரை ஏறிட்டனர்.

"ஏன்ப்பா! கொஞ்ச நாள் முன்னாடி நாங்க வந்து ஒரு விஷயம் சொன்னோமே நினைவு இருக்கா?"

மனதில் திக்கென்றது சேகருக்கு. அதைப் பற்றி அவன் சிந்திக்கவும் இல்லை.

"சொல்லுங்கத்த"

"அதென்னப்பா அவ்வளவு அலட்சியமா கேக்குற? எங்க மகளை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி உன்னைக் கேட்டோமே? அதுக்கு நீ இன்னமும் பதிலே சொல்லல்லியே!"

"நான் அதைப் பத்தி யோசிக்கவே இல்லத்த! கயலுக்கு உடம்பு சரியில்லாமப் போயிட்டதால எனக்கு அதுவே கவலையா இருந்தது"

"இன்னும் என்னப்பா யோசனை? உனக்கு முறைப் பொண்ணு தானே அவ? முஹூர்தத்த்தை ஃபிக்ஸ் பண்ணிடலாமா?

என்ன சொல்லி இவர்களை அனுப்புவது என திகைத்தான். கீதாவோ ராஜினாமாச் செய்து விட்டாள். ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப். இவர்கள் ஒரு பக்கம் நெருக்கிறார்கள். அவனுக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது

"இப்ப எங்க ஆபீசுல நெருக்கடியான சமயம். இன்னும் ஒரு பத்து நாளைக்குத்தான் அப்படி இருக்கும். அதுக்குப்புறம் தான் என்னால தெளிவா சிந்திக்க முடியும் அத்தை. ஏற்கனவே கயலுக்கு உடம்பு சரியில்லைன்னு நானு ரெண்டு மூணு நாள் லீவு எடுத்துட்டேன். அதான் யோசிக்கறேன். எனக்கு ஒரு பத்து பதினஞ்சு நாள் டயம் குடுங்களேன். சொல்றேன்" என்றான் நிதானமாக. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஏற்கனவே யோசித்து அளந்து சொல்வது போல இருந்தது.

அத்தையும் மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"என்ன சேகர் நீ? போன தடவை வந்திருக்கும் போதே நாங்க முடிவோட தான் போகணும்னு நெனச்சோம். அப்பவும் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிச்சுட்ட! இப்பவும் டயம் கேக்குறியே? என்ன நியாயம் இது?"

மாமாவுக்குக் கோபம் வந்தது.

"இதைப் பாருப்ப சேகர்! நீ எங்க சொந்தக்காரன்றதால தான் உங்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கோம். கயலை நினைச்சுப் பாரு. அவ பிறப்பைப் பத்தித் தெரிஞ்ச யாராவது அவளை ஏத்துக்க முன் வருவாங்களா? அப்படியே வந்தாலும் நாளைக்கே அது மாறாதுன்னு என்ன நிச்சயம்? ஆனா நாங்க அப்படி இல்ல? கயல் பேரிலேயே ஒரு வீடு தோப்பு ரெண்டையும் எழுதி வெச்சிடறோம். அப்புறம் என்ன?" என்று கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தார்.

கயல் பெயரில் தோப்பும் வீடும் என்றதும் மனம் சற்றே இளகியது. அவள் பெயரில் ஏதாவது சொத்து இருந்தால் நல்லது தானே? அவள் வருங்காலத்துக்கு மிகவும் பயன் படும் வெளி நாடு சென்று கூடப் படிக்க முடியும். அப்படிச் சென்றால் மிகப்பெரிய இடத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று எண்ணம் ஓடியது. மறு கணம் கீதாவின் இனிய முகம் வந்து புன்னகை சிந்தியது. தலையைப் பிடித்துக்கொண்டான் அவன். எங்காவது காற்றோட்டமாக வெளியில் சென்றால் தேவலை போல இருந்தது.

"அத்தை! நான் கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன். நீங்க வீட்டுல ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி விட்டு சட்டையைப் போட்டுக்கொண்டு போனான். கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். அவனது தலை மறைந்ததும் அத்தை பேசினாள்.

"என்னங்க! நீங்க எதுக்கு அந்த அனாதைப் பொண்ணு பேர்ல வீடு தோப்பு எழுதி வெக்கறேன்னு சொன்னீங்க? உங்களுக்கென்ன பைத்தியமா?" என்று சீறினாள்.

"யாருடி எழுதி வெக்கப்போறா? நம்ம மக துளசி கழுத்துல தாலி ஏறட்டும். அப்புறம் பாரேன். முதல் வேலையா அந்தக் கயலை ஏதாவது ஹாஸ்டல்ல கொண்டு போய்த் தள்ளிடணும். சேகரை நம்ம மாப்பிள்ளையாக்கிக்கிட்ட பாவத்துக்கு மாசா மாசம் பணம் மட்டும் அழுதுடுவோம். கயல் கவலையை நீ விடு" என்றார்.

நெஞ்சில் கை வைத்து நிம்மதிப் பெருமூச்செறிந்தாள் அத்தை செண்பகம்.

"நான் கூட உங்களை என்னவோன்னு நெனச்சுட்டேங்க! அதான் கவலையாப் போயிடிச்சு. அது சரி! நம்ம பொண்ணு முழுகாம இருக்கான்னு சேகர் கிட்ட சொல்ல வேண்டாமா?"

"யாருடி இவ? அப்படி அவன் கிட்ட சொன்னா கல்யாணத்துக்கு அவன் ஒத்துப்பானா?"

"அவன் நல்ல பையங்க! கண்டிப்பா ஒத்துப்பான்.

"நீ புரியாமப் பேசுற செண்பகம்! ஏதோ தப்பு நடந்து அதனால நம்ம மக இப்படி ஆயிருந்தான்னா கட்டாயம் அவன் ஏத்துக்குவான். ஆனா அப்படி இல்லையே இது? முறையாக் கல்யாணம் பண்ணி அப்புறம் தானே உன் பொண்ணு கர்ப்பமானா? வேரு ஒருத்தன் குழந்தையை சேகர் தன் குழந்தைன்னு சொன்னா ஒத்துக்கவே மாட்டான்."

"அப்ப பேசாம அந்தக் குழந்தையை அழிச்சிட்டா என்ன?" வாய் கூசாமல் கேட்டாள் சென்பகம்.

"எனக்கும் அந்த யோசனை வரல்லேன்னு நினைக்கறியா நீயி? ஆனா நாம இருவது வருஷம் கழிச்சு என்ன நடக்கும்னு இப்பவே யோசிச்சுப் பார்க்கணும். துளசியை கட்டிக்கொடுத்த இடம் நல்ல வசதியான இடம். அவங்களுக்கு தோழிற்சாலை வீடு ரொக்கம்னு ஏகப்பட்ட சொத்து இருக்கு. அவங்க என்ன சொன்னாலும் சரி இப்ப துளசி வயத்துல இருக்குறது அவங்க வீட்டு வாரிசு. பின்னாடி நாம அதை நிரூபிச்சா நம்ம பேரனுக்கோ பேத்திக்கோ கொழுத்த பணம் வந்து சேருமே?"

கணவனின் திறமையையும் திட்டமிடும் நேர்த்தியையும் கண்டு மகிழ்ந்து போனாள் அந்த பெண் ரத்தினம்.

"எல்லாம் சரி! ஆனா இப்ப சேகர் கிட்ட என்ன சொல்லப் போறீங்க?"

"எதுவும் சொல்லப் போறது இல்ல! இன்னும் நாலே நாள்ல கல்யாணத்தை முடிச்சுட்டு பிறக்கப் போற குழந்தைக்கு அவன் தான் அப்பன்னு சொல்லிருவேன். கேட்டா குறை மாசத்துல பொறந்துட்டுதுன்னு சொல்லிருவேன். நீ கவலைப் படாதே செண்பகம். "

யோசையாக அமர்ந்திருந்தாள் செண்பகம். அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

"இப்ப சேகரோட குழந்தைன்னு சொல்லிட்டு பின்னாடி எப்படி சம்பந்தி வீட்டுக்குழந்தைன்னு சொல்லுவீங்க? அவங்க நம்ப வேண்டாமா?"

"அதுக்கும் நான் நல்ல யோசனை வெச்சிருக்கேன். இப்ப நமக்குத் தேவை நம்ம பொண்ணு கழுத்துல ஒரு தாலி. ஏன்னா அப்பத்தான் அவ கொஞ்சமாவது நல்லா ஆவா! சில வருஷம் கழிச்சு சமயம் வரும் போது நம்ம பேரப்பிள்ளைக்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க வெச்சு அவங்க வீட்டு வாரிசுன்னு முடிச்சுட மாட்டேன்?" என்றார் பெருமையாக.

அத்தை மாமனின் திட்டத்தை அறியாத சேகர் கல்யாணத்துக்கு சம்மதமில்லை என அவர்களிடம் எப்படி மனம் நோகாமல் சொவது என குழம்பிக்கொண்டிருந்தான். கீதாவின் நினைவு அவனை வாட்டியது என்றால் அவளது ராஜினாமாவினால் அவனுக்குப் பைத்தியமே பிடிக்கும் போலிருந்தது. முதலில் அத்தையையும் மாமனையும் அனுப்பி விட்டு நாளையே ஊருக்குக் கிளம்ப வேண்டும். அப்போது தான் அங்கே என்ன நடக்கிறது எனத் தெரியும் எதற்கும் ஒரு முறை கீதாவின் நம்பரை முயர்சி செய்து பார்த்து விடுவோம் என தீர்மானித்து எண்ணைச் சுழற்றினான். அதிசயமாக ரிங்க் போகவே அப்படியே நின்றான் சேகர்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Ivalo selfish irukangale sekar athai mama eppidi sekar ivanga kitta irunthu thappikka poraan geetha malini idam koota sollala ava situationa arumaiyana epi sis
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
sekar atthai mama romba romba mosam....evlo kevalama avanga pennoda manatha pathi kavalai padaama sotthukkum kanakku podranga.........Geethavum ean ipdi muttal tanama mudivu eduthurukka.......sekar kitta sollainalum malini kitta oru varthai pesirkalam.......
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
அச்சோ அத்தை மாமன் எவ்வளவு கேவலமான ஆட்கள். சேகரின் முடிவு என்ன
கயல் தான் பாவம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top