• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu....: Aththiyaayam 23.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 23.

வர வர எதுவுமே பிடிக்கவில்லை கீதாவுக்கு. தான் தவறு செய்கிறோம் எனத் தெரிந்தே இருந்தது அவளுக்கு. ஆனாலும் இன்னொரு முறை அம்மாவின் சொல்லை எப்படித்தட்டுவது? அவளிடம் சேகரைப் பற்றிச் சொன்னால் புரிந்து கொள்வாளா? இல்லை தன்னை நடத்தை கெட்டவள் என முடிவு செய்து விடுவாளா என்று குழம்பினாள். எப்போதோ வெளியுலகமே அறியாத போது ராஜேந்திரனின் மேல் அவள் கொண்ட இனக்கவர்ச்சியை காதல் என நினைத்து அவசரமாகக் கல்யாணத்தை முடித்தது எத்தனை பெரிய தவறு? அப்போது நான் கொஞ்சம் நிதானமாக யோசித்திருந்தால் இத்தனை இடையூறுகள் இல்லையே? இந்நேரம் சேகர் வீட்டில் கயலுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருவருக்கும் பிடித்தவைகளை சமைத்துப் போட்டு என்று எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கும் வாழ்வு? எப்போதோ நான் செய்த தவறுக்கு கடவுள் இப்போது தான் எனக்கு தண்டனை கொடுக்கிறார். சேகரும் கயலும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவருக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கும். அது தான் அந்த அத்தை மகள் இருக்கிறாளே? கயல் சிறு குழந்தை என்னை எளிதில் மறந்து விட்டு புது அண்ணியுடன் ஒன்றி விடுவாள். ஆனால் அவர்கள் உண்மைலேயே நல்லவர்களாக இருபார்களா? இல்லை கயலை துன்பத்துக்கு உள்ளாக்கி விடுவார்களோ? இப்படி பல விதமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டாள் கீதா.

அம்மாவின் ஏற்பாடுகள் அதி வேகமாக இருப்பதாகத் தோன்றியது கீதாவுக்கு. வீட்டை விற்றாளா? பணத்தை ராஜேந்திரனிடம் கொடுத்தாளா? என எதுவும் தெரியவில்லை. ஏதேனும் கேட்டால் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். கல்யாணப் பொண்ணா லட்சணமா இரு என்று சொல்லி விடுகிறாள். பாவம் அம்மா! இனி என்ன செய்யப் போகிறாள்? என்னும் கேள்வி கீதாவிடம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் அவளது மூளை இனி நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டது. மனம் சஞ்சலமாக இருந்தது, அம்மா எங்கோ வெளியில் போயிருந்தாள். அப்பாவின் படத்துக்கு நேரே வந்து நிறாள். அவரிடம் பேச வேண்டும் போலத் தோன்ற கண்களை மூடிக் கண்ணீர் வழியப் பேசினாள்.

"அப்பா! என்னை மன்னிச்சிருங்க! நீங்க ஆசைப்பட்டபடி நான் இல்ல! எதுவுமே தெரியாத வயசுல எல்லாம் தெரிஞ்சா மாதிரி அவசர அவசரமா கல்யாணம் செஞ்சுக்கிட்டு ஊருல அம்மாவுக்கு தீராத அவமானத்தை உண்டாக்கிட்டேன். எல்லாத்தையும் மறந்து சென்னையில நான் பாட்டுக்க வாழ்ந்துக்கிட்டு இருக்கும் போது ஏன்ப்பா என் கண்ணுல சேகர் பட்டாரு?ஏன் என் மனசு அவரை நினைக்கணும்? அது தான் போகட்டும்னா கயலைப் பத்தி ஏன் மனசு கவலைப்படணும்? எனக்கும் அவளுக்கும் என்ன உறவு? ஏன்பா எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? நான் தப்பானவளா? நல்ல வாழ்க்கை வாழ எனக்குத் தகுதி இல்லையா? தெரியாம செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாதா? ராஜேந்திரனை நெனச்சலே எனக்குள்ள புழு ஊறுவது மாதிரி இருக்கே? எப்படி நான் அவனோட குடும்பம் நடத்தப் போறேன்? அவனும் அவன் அம்மாவும் பணத்தை மட்டுமே தானே பெருசா நினைக்கறாங்க? இப்பக் கூட அவன் தான் செஞ்ச தப்பை நெனச்சு வரல்ல! என்னால பணம் கிடைக்கும்னு தான் வரான். சேகர் கால் தூசுக்குக் கூட வன் ஈடாக மாட்டான். ஆனா இனிமே சேகரை நெனச்சு என்ன புண்ணியம்? அவரைத்தான் நான் கோட்டை விட்டுட்டேனே?"

கண்ணீர் கரகரவென வழிய நின்றிருந்த மகளைக் கண்டு பதறினாள் கன்னியம்மாள்.

"கண்ணு! கீதா! என்ன ஆச்சும்மா? ஏன் இப்படி ஏங்கி ஏங்கி அழற? உனக்கு இனிமே என்ன குறை ராசாத்தி? அம்மா இருக்கேன்ல? என்னம்மா அப்படி பிரச்சனை?"

"அம்மா! வந்து...அம்மா வந்து...எனக்கு எனக்கு "

"சொல்லும்மா! உன் மனசுல என்ன தான் இருக்கு? இப்பவாவது சொல்லு கீதா! திரும்பவும் என்னை தலையில நெருப்பை அள்ளிப் போட்டுராத! சொல்லு"

தீர்மானித்துக்கொண்டாள் கீதா. இனியும் அம்மாவின் தலையில் நெருப்பை அள்ளிப் போடப்போவதில்லை என்று.

"ஒண்ணுமில்லம்மா! உன்னை விட்டுப் பிரிஞ்சி போறோமேன்னு தான் அழுதேன்" என்று மேலும் அழுதாள்.

"இல்ல கீதா! எனக்காகச் சொல்லாதே! உன் மன்சுல என்னவோ இருக்கு. எங்கிட்ட சொல்லு! நான் உனக்கு நல்லது தான் செய்வேன்னு நீ நம்புனா சொல்லு! இல்லைன்னா வேண்டாம்" என்றாள்.

சொன்னால் தான் என்ன? அம்மா தவறாக நினைத்துக்கொள்ளலாம் அவ்வளவு தானே? எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாளா? இது என்வாழ்க்கை பிரச்சனை மட்டுமல்ல அம்மாவின் பிரச்சனையும் தான். இருக்கும் பணத்தை எல்லாம் ராஜேந்திரனிடம் தூக்கிக் கொடுத்து விட்டு அம்மா என்ன செய்வாள்? எங்கே போவாள்? அதனால் சொல்லி விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்தாள். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் சொல்ல வாயைத்திறந்த நேரம் பக்கத்து வீட்டு அண்ணன் சங்கர் வேகமாக உள்ளே நுழைந்தார்.

"என்ன அம்மாவும் மகளும் பேசிக்கிட்டு இருக்கீங்க? சித்தி உங்களை இலஞ்சி கோயில் குருக்கள் வரச் சொன்னாரு. என்னவோ ஏற்பாடு பத்திப் பேசணுமாம். இப்பவே கிளம்பு. உங்களை கோயில்ல விட்டுட்டு நான் போகணும்"

"சரிப்பா! இதோ வந்துட்டேன்! நீ போய் வண்டி கிட்ட இரு" என்று அவனை அனுப்பி விட்டு மகள் பக்கம் திரும்பினாள்.

"கீதா! ஏதாவது கன்னா பின்னான்னு செஞ்சு என்னைத் தவிக்க விட்டுறாதே! கல்யாண விஷயமாத்தான் கூப்பிட்டிருப்பாரு குருக்கள். நான் போயி என்னன்னு கேட்டுட்டு ஓடி வந்துடுறேன். வந்து நாம விவரமாப் பேசிக்கலாம் என்ன?" என்று சொல்லிவிட்டு விரைந்தாள்.

திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள் கீதா. சற்றே புத்தி தெளிந்து நாம் சொல்வதற்குள் அம்மா கிளம்பி விட்டாளே? இதை இப்படியே விடக் கூடாது. கமான் கீதா! நீ இப்படி சோர்ந்து போகக் கூடியவளே இல்லையே? நீ ராஜேந்திரன் கையால திரும்பவும் தாலி வாங்கினா அது தான் உங்கம்மாவுக்கு சந்தோஷம்னு நீயா எப்படி முடிவு செஞ்ச? நீ சந்தோஷமா இருக்குறது தான் அவங்களுக்கு முக்கியமே தவிர வேற எதுவும் இல்ல! சேகரையும் கயலையும் பத்தி சொன்னா அம்மா நிச்சயமா தன் முடிவை மாத்திப்பாங்க! அவங்களே சேகருக்கு ஃபோன் செஞ்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல! ராஜேந்திரனும் அவன் அம்மாவும் பணப்பிசாசுங்க! கல்யாணத்துக்கு அப்புறமும் எங்கம்மாவை பணம் பணம்னு பிடுங்கி எடுக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இனியாவது எங்கம்மா நிம்மதியா இருக்கணும். அதுக்கு நான் ராஜேந்திரனைக் கல்யாணம் செய்துக்கக் கூடாது. எங்கம்மா கிட்ட பேசுறதுக்கு முன்னால ஏன் நான் சேகரோட பேசக் கூடாது? அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல?"

தனது யோசனை சந்தோஷம் தர ஆவலோடு சேகரின் எண்ணை அழைத்தாள். ரிங்க போகுமா போகுமா? என்ற எதிர்பார்ப்பில் அவளது இதயத்துடிப்பு எகிறியது. நீண்ட மௌனத்துக்குப் பிறகு நீங்கள் அழைக்கும் இந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று ரெக்கார்டட் வாய்ஸ் சொல்ல வெறுத்துப் போனாள். அரை மணி இடைவெளியில் மீண்டும் முயற்சி செய்ய மீண்டும் அதே பதில்.

"சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்ல! எல்லாம் என் விதி" என்று வருந்தியவளுக்கு அப்போது தான் தோழி மாலினியின் நினைவு வந்தது. நான் ஏன் அவளோடு பேசக் கூடாது? நிச்சயம் சேகர் எங்கே இருக்கிறார் என்று அவளுக்குத் தெரிந்திருக்கும். நம்பிக்கையோடு மாலினியை அழைத்தாள். ரிங்க் போய்க்கொண்டே இருந்தது. கட்டாகும் சயம எடுத்தாள் மாலினி.

"ஹலோ" அவள் குரல் கடுமையாக இருந்தது.

"மாலு! நான் கீதா பேசுறேன்! எப்படி இருக்கே?'

"ஓ! கீதா மேடமா? என்ன மேடம்? இப்பத்தான் எங்க நினைவு உங்களுக்கு வந்ததா?"

"ப்ளீஸ்! என்னைக் கொல்லாதே மாலு! நான் பயங்கரமான சிக்கல்ல இருக்கேன். அந்த ராஜேந்திரன் திரும்ப வந்துட்டான். அவனே தான் எனக்கு மறுதாலி கட்டப்போறான் மாலு. எங்கம்மா பாவம் வீட்டை வித்து அவன் கேட்ட பணத்தைக் கொடுக்கறாங்க! எனக்கு என்ன செய்யன்னே தெரியல்ல"

மறுமுனை சற்று நேரம் மௌனம் சாதித்தது.

"அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற?" என்றாள் மாலினி.

திகைத்தாள் கீதா. மாலினியா இப்படிப் பேசுகிறாள்? அவ்வளவு தூரமா என்னை வெறுத்து விட்டாள்?

"என்ன மாலு இப்படிக் கேக்குற? நீ தானே எனக்கு எல்லாம்? என் கஷ்டத்தை உங்கிட்ட தானே நான் ஷேர் பண்ண முடியும்? சேகர் நம்பர் ஸ்விட்ச் ஆஃப்னு வருது"

"ஓ! உனக்கு இன்னமும் சேகர் கயல் இவங்களை ஞாபகம் இருக்கா? நல்லது! சரி நீ இப்ப எனக்கு எதுக்கு ஃபோன் செஞ்ச? நான் ஆபீஸ்ல இருக்கேன். ரொம்ப நேரம் பேச முடியாது."

"கொஞ்சம் சேகரைக் கூப்பிடறியா மாலு! நான் அவர் கிட்ட நான் பேசணும்?"

"உனக்கு விவரமே தெரியாதா? சேகர் வேலையை ராஜினாமாப் பண்ணிட்டுப் போயிட்டாரே? வர ஞாயிற்றுக்கிழமை அவருக்குக் கல்யாணம். இனிமே இங்க வருவாரான்னு தெரியல்ல"

பலமாக அடி வாங்கியது கீதாவின் இதயம்.

"மாலு! இது என்னடி விபரீதம்? நான் இருக்கும் போது சேகர் எதுக்குடி இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கணும்?"

"எப்படி? எப்படி? நீ இருக்கும் போதா? நீ எங்கடி இருந்த? அவரு ஃபோன் பண்ணப்ப வேற பண்ணிக்கச் சொல்லி நீ தானே சொன்ன? இப்ப என்ன?"

"கடுமையாப் பேசாதடி! அப்ப எனக்கு புத்தி தெளிவா இல்ல! இப்பத்தான் நான் சரியா யோசிக்க ஆரம்பிச்சுருக்கேன். உன்னைப் புண்படுத்தினதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். அவர் கிட்டயும் நான் மன்னிப்புக் கேக்கறேன். என்னை கை விட்டுடாதேடி பிளீஸ்" அழுதாள் கீதா.

"கீதா அழாதே! என்னால இப்ப எதுவும் செய்ய முடியாத நிலையில நானே முழிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. கல்யாணத்தை எப்படி நான் நிறுத்த முடியும்? என்ன காரணம் சொல்ல? புரிஞ்சிக்கோ கீதா! நீ ரொம்ப லேட்டா வந்துட்டடி! "

எதுவும் பேசாமல் ஃபோனை வைத்து விட்டுக் குமுறிக் குமுறி அழுதாள் கீதா. அவள் மனதில் விபரீதமான எண்ணம் ஒன்று முளைக்க அதை செயல்படுத்த பின் கட்டில் செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்துகள் வைத்திருக்கும் அலமாரியை நோக்கிச் சென்றாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சபாஷ், கீதா and சேகர்
இரண்டு பேருக்கும் ஒரே
நாள்ல கல்யாணமா?
சூப்பர், ஸ்ரீஜா டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Kalam kadantha nyanaudayam geetha vuku amma kitta solrathuku enna sekrai pathi ippo enna suicide panna porala paavampa yaar kaapatha poranga geetha va waiting sis
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கீதா நோ தப்பான முடிவை எடுக்காதே நீ ராஜெந்திரனை கல்யாணம் பன்ன முடியாது என்று தைரியமாக சொல்லு Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கயலை பார்த்து கொள் அவளுக்காக வாழனும் நீ அப்புறம் நல்லவனாக கல்யாணம் பன்னிக்கொ ராஜெந்திரனை ரிஜக்ட் செய் ஆனால் தப்பான முடிவு எடுக்காதே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top