• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu....:Aththiyaayam 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 5:

வண்டலூர் போய் விட்டு வந்ததிலிருந்து சேகர் கயல் மற்றும் கீதா மிகவும் நெருங்கி விட்டார்கள். சனிக்கிழமைகளில் ஒன்றாகவே இருந்தனர். கீதாவுக்கு ஒரு குடும்ப சூழலில் இருப்பது மனதுக்கு மிகவும் பலத்தையும் ஆனந்தத்தையும் அளித்தது. கயலுக்கு விவரம் புரியும் வயது என்பதால் அவள் கீதாவை தன் அண்ணியாகவே பார்த்தாள் அப்படியசே அழைக்கவும் செய்தாள். ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றப்பட்ட கீதா போகப் போக அந்த அழைப்பை எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஏற்றுக்கோண்டாள். சேகரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் மாலினிக்கு ஒரு யோசனை தோன்ற அதனை செயல்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்தாள். அந்த ஞாயிறு மாலினியும் சேகரின் வீட்டுக்கு வந்தாள். அவளது கணவன் வரவில்லை. குழந்தையை அழைத்துக்கொண்டு சிதம்பரம் போய் விட்டான்.

"சேகர் சார்! கீதா வரதுக்கு முன்னால உங்க கிட்ட சில விஷயம் பேசணும்னு தான் நான் சீக்கிரம் வந்தேன்." என்றாள்.

"நீங்க என்ன பேசப் போறீங்கன்னு என்னால ஊகிக்க முடியுது மேடம்! ஆனா எனக்கு கொஞ்சம் அதுல தயக்கமா இருக்கு"

"ஏயப்பா! நீங்க என்னை விட ஸ்பீடா இருக்கீங்களே? நான் கேக்க வந்ததை சொல்லிடறேன். உங்களுக்கு கீதாவைப் பிடிச்சிருக்கா? அவளைக் கல்யாணம் செஞ்சுக்க உங்களுக்கு இஷ்டமா?"

"இதை நீங்களா கேக்கறீங்களா? இல்லை கீதா கேட்டாங்களா?"

"கீதா கேக்க மாட்டா சேகர் சார்! நான் தான் கேக்கறேன். அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க"

"எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு வயசு 31 அவங்களுக்கு 25 தான். அதான் எனக்கு ரொம்பத் தயக்கமா இருக்கு! அனாவசியமா என் சுயநலத்துக்காக ஒரு சின்னப் பொண்ணோட வாழ்க்கையை நான் பாழாக்கிடுவேனோன்னு தான் பயப்படுறேன்"

"இதுலயே உங்க நல்ல மனசு தெரியுது சேகர் சார்! கீதாவை நீங்க எந்த நேரத்திலும் கை விட மாட்டீங்களே?"

சிரித்தான் சேகர்.

"இன்னும் கல்யாணமே ஆகல்ல! அட்லீஸ்ட் காதலிக்கக் கூட ஆரம்பிக்கல்ல! அதுக்குள்ள கை விடுவேனா மாட்டேனான்னு கேக்கறீங்க?"

மாலினியின் முகம் சீரியசாக இருந்தது.

"கீதாவைப் பத்தி எல்லா விவரமும் எனக்குத் தெரியும் சேகர் சார்! அவ ரொம்பப் பாவம்! ரொம்ப சின்ன வயசுலயே பல கஷ்டங்களுக்கு ஆளானவ! அதனால தான் கேக்குறேன். அவளைப் பத்தின எல்லா விவரமும் தெரிஞ்ச பிறகும் அவளைக் கல்யாணம் செய்துக்க நீங்க தயாரா முன் வருவீங்களா?"

"அபடி என்ன கஷ்டம்? பொருளாதார ரீதியாவா? இல்லை உளவியல் ரீதியாகவா?"

"ரெண்டுமே தான்! அவ கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக் கூட மாட்டா! அது தான் அவ நிலை"

சற்று நேரம் மௌனமாக இருந்தான் சேகர். கயல் குளித்துக்கொண்டிருந்தாள். சுற்று முற்றும் பார்த்து விட்டு மெல்ல கேட்டான்.

"கீதா சின்ன வயசுல ஏதாவது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி அதனால கல்யாணமே வேண்டாம்னு இருக்காங்களோ? அப்படி இருந்தா எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல! தெரியாம நடந்த தப்புக்கு அவங்க என்ன செய்வாங்க?" என்றான் .

சிரித்தாள் மாலினி.

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல!"

"அப்ப என்ன தான் பிரச்சனை? புதிர் போடாம சொல்லுங்க மாலினி மேடம்" என்றான் சேகர்.

மீண்டும் சற்று நேர மௌனத்துக்குப் பின் பேசினாள் மாலினி.

"ரொம்ப சாரி சேகர் சார்! அவளோட கடந்த காலத்தை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்குறதை விட அவ வாயாலேயே தெரிஞ்சுக்குகுறது தான் நல்லது. அப்பத்தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்க முடியும்"

"என்ன மேடம் நீங்க? இப்ப நான் என்ன தான் செய்யணும்னு சொல்றீங்க?"

"அவளுக்கு உங்க மேல நம்பிக்கையும் காதலும் வரா மாதிரி செய்ங்க! ஏற்கனவே அவளுக்கு கயல்னா உசிரு. அதைப் பத்தி விவரமாப் பேசத்தான் நான் வந்தேன்."

"சொல்லுங்க"

"கீதாவுக்கு குடும்ப வாழ்க்கை தான் ரொம்பப் பிடிக்கும். தனக்கு ஒரு வீடு இல்லையேன்னு அவ எவ்வளவு ஏங்குறான்னு எனக்குத்தான் தெரியும். அதனால அவளை முதல்ல ஹாஸ்டல்ல இருந்து தூக்கி ஏதாவது ஒரு வீட்டுல வாழ வைக்கணும்"

"அவங்க எங்க வீட்டுக்கே வரட்டுமே?"

"ரொம்ப பேராசைப் படதீங்க சேகர்" என்று சொல்லி சிரித்தாள். சேகர் வெட்கத்துடன் சேர்ந்து சிரித்தான்.

"நீங்க அவ மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்கன்னு இதுல இருந்து தெரியுது. உங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஏதாவது சின்ன போர்ஷன் வாடகைக்கு வருதா? அப்படி வந்தா அதுல அவளைக் குடி வெச்சிரலாம். அப்ப கயலையும் உங்களையும் இன்னும் நெருங்கி வருவா அவ! "

"திட்டம் நல்லாத்தான் இருக்கு! அவ எப்ப என்னைக் காதலிச்சு நான் எப்ப கல்யாணம் செஞ்சு...." இழுத்தான் சேகர்.

"நல்லா இருக்கே? நான் புள்ளி தான் வைக்க முடியும். அதை டெவலப் செஞ்சு கோலம் போட வேண்டியது உங்க பொறுப்பு!"

இருவரும் சிரித்த போது மிகச் சரியாக உள்ளே வந்தாள் கீதா.

"யார் கூட இப்படிப் பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க சேகர் சார்! " என்று கேட்ட படி உள்ளே நுழைந்தாள். அவள் குரலில் சற்றே பொறாமை இருந்ததை மாலினி சேகர் இருவருமே கவனித்தார்கள். ஒருவரை ஒருவர் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.

"ஓ! நீயா மாலு! இத்தனை சீக்கிரமே வந்துடுவேன்னு நான் நினைக்கல்ல! எங்கே கயல்? அவளுக்கு நான் புதுசா ஒரு ஹேர் பேண்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்."

"அவ குளிக்கப் போனா! எப்படியும் இன்னைக்குள்ள வந்திருவா" என்றான் சேகர். மூவரும் சிரித்தனர். யாரும் சொல்லாமலே நேரே அடுப்பங்கரைக்குச் சென்று நால்வருக்கும்ஸ் சேர்த்து டீ போட்டாள் கீதா. இவைகளை மகிழ்ச்சி நிறைந்த விழிகளோடு பார்த்தாள் மாலினி. அவள் டீ போடவும் கயலும் குளித்து விட்டு வந்தாள்.

"மாவு இல்லையா சேகர் சார்? காலையில தோசை சுட்டுரலாம்னு பார்த்தேன். கயல் பசி தாங்க மாட்டாளே?"

"வாங்கிட்டு வர மறந்துட்டே கீதா! கடையில வாங்குற மாவு கயலுக்கும் எனக்கும் பிடிக்கவே இல்ல! இட்லி ஊத்துனா கல்லு மாதிரி இருக்கு! சரின்னு தொசையா சுட்டோம்னா அது ரப்பர் மாதிரி வருது"

"ஆமாண்ணி! கடை மாவுல செஞ்ச டிஃபன் ஒரு வாடை வேற வருது. சாப்பிடவே பிடிக்கல்ல" என்றாள் கயல்.

"சே! நான் பக்கத்துல இருந்தா இட்லி மாவு தோசை மாவு ஆட்டிக்கொடுத்துடுவேன். ஹாஸ்டல்ல அந்த வசதி இல்லையே?" என்றாள் கீதா வருத்தத்தோடு.

இது தான் சரியான சந்தர்ப்பம் என அதைப் பிடித்துக்கொண்டான் சேகர்.

"கீதா கேக்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க? நீங்க எதுக்கு இவ்வளவு காசைக் குடுத்து ஹாஸ்டல்ல தங்கணும்? சாப்பாடு வேற சரியில்ல! ரூமுல உங்களைத் தவிர ரெண்டு பேர் இருக்காங்க! பிரைவசியே இருக்காதே?"

"அதுக்கு என்ன செய்ய?"

"அப்படியாவது கஷ்டப்பட்டுக்கிட்டு நீங்க ஏன் ஹாஸ்டல்ல இருக்கணும்? எங்கியாவது சின்னதா ஒரு போர்ஷன் வாடகைக்குப் பிடிச்சு அதுல இருந்தா உங்களுக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்கும். நீங்க நெனச்சா கயலுக்கு இட்லி தோசை சுட்டுக்கொடுக்கலாமே?" என்றான்.

கவனிக்காதது போலக் கேட்டுக்கொண்டிருந்தாள் மாலினி. யோசிக்க ஆரம்பித்தாள் கீதா. தனக்கென ஒரு வீடு இருந்தால் நல்லதல்லவா? எனக்குப் பிடித்த உணவு வகைகளை சமைத்துக்கொள்ளலாம். கயலுக்கும் கொடுக்கலாம். சனி ஞாயிறுகளில் சேகரையும் கயலையும் அங்கேயே வரச் சொல்லி விடலாம். வாழ்க்கை நன்றாக இருக்குமோ? இந்த யோசனை தனக்கு இது வரையில் தோன்றவில்லையே? ஆனால் என்ன செலவாகுமோ?" என்று யோசித்தாள்.

"கீதா! சேகர் சார் சொல்லுறது எனக்கும் நல்லதுன்னு படுது! உனக்குன்னு ஒரு போர்ஷன் இருந்தா அதுல நீ உன் இஷ்டத்துக்கு சுதந்திரமா இருக்கலாம்"

"ஆனா பாதுகாப்பு வேணுமே மாலு? தனியா இருக்குற பொம்பளைன்னு யாராவது வம்பு பண்ணாங்கன்னா? அதான் எனக்குப் பயமா இருக்கு"

"அவ சொல்றதும் நியாயமான பாயிண்டு தானே சேகர் சார்! பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியமாச்சே? யோசனை செஞ்சு தான் நாம இதுல இறங்கணும்" என்றாள் மாலினி. அசந்தே போனான் சேகர். இந்த ஐடியாவைக் கொடுத்ததே அவள் தானே? இப்போது இப்படிப் பேசுகிறாளே என்று எண்ணிக்கொண்டான். தொடர்ந்து அவள் பேசியதைக் கேட்டதும் சந்தேகம் விலகியது.

"ஏன் சார் நாம இப்படி செஞ்சா என்ன? உங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஏதாவது போர்ஷன் இருந்தா அங்க கீதா குடி வரட்டுமே? உங்களுக்கும் துணை அவளுக்கும் பாதுகாப்பு என்னடி சொல்ற கீதா?" என்றாள் மாலினி.

சட்டென கைகளைத் தட்டினாள் கயல்.

"அண்ணே! நம்ம பக்கத்து வீட்டு மாடியில பரிமளாக்கா இருந்தாங்க இல்ல? அந்தப் போர்ஷன் காலியாத்தானே கெடக்குது! அதை நாம அண்ணிக்கு வாங்கிக்கொடுத்தா என்ன?" என்றாள் கயல்.

அப்போது தான் நினைவுக்கு வந்தவன் போல தலையை ஆட்டினான் சேகர்.

"அட ஆமாங்க! எனக்கே கயல் சொன்னப்புறம் தான் ஞாபகம் வருது. ஆனா அது ரொம்ப சின்ன போர்ஷன். ஒரு ரூம் ஒரு கிச்சன் பாத்ரூம் அவ்ள தான்., உங்களுக்குப் போதுமா?"

"உங்களுக்கு எப்படித் தெரியும்? அந்த பரிமளா அங்க இருந்தப்பா நீங்க அடிக்கடி போவீங்களா?" என்றாள் கீதா வெடுக்கென. மனதுக்குள் பூத்த மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு சிரித்தான் சேகர்.

"இல்ல கீதா! ப்ரிமளாவுக்கு முன்னால என் நண்பன் ரமேஷ் அங்க இருந்தான். அப்ப நான் அங்க போயிருக்கேன்." என்றான். பிறகே கீதாவின் முகத்தில் நிம்மதி பரவியது. அப்போதே சென்று போர்ஷனைப் பார்க்க வேன்டும் என முடிவு செய்து கொண்டு எழுந்தனர் அனைவரும்.
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அருமை ? கலக்கல் மாலினி, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி அடடா... கீதாவின் காதல் வெளிப்படுமா? அவளின் கடந்த கால பக்கங்கள் வலி நிறைந்ததா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top