• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu....: Aththiyaayam 7.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 7:

கீதா புது வீட்டுக்குக் குடி வந்து இரு வாரங்கள் ஓடி விட்டன. மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவுமாக நாட்கள் நகர்ந்தன. தினமும் காலையில் டிஃபன் சாப்பாடு இரண்டும் செய்து விடுவாள். கயலுக்கு டிஃபன் பாக்சில் விதம் விதமாக கொடுத்தனுப்ப வேண்டும் என்று ஒரு நாள் லெமன் ரைஸ், ஒரு நாள் புளி சாதம் ஒரு நாள் வெஜிடபிள் ரைஸ் என செய்து அசத்தினாள். அதோடு ஒரு பொரியலும் செய்து விடுவாள். காலையில் கயல் ஆறு மணிக்கெல்லாம் கீதாவின் வீட்டுக்கு வந்து விடுவாள். அவளும் காய்கறி நறுக்கிக் கொடுப்பது வீடு கூட்டுவது என சின்னச் சின்ன வேலைகள் செய்து உதவுவாள். பிறகு 7:30 மணியளவில் டிஃபனை சாப்பிட்டு விட்டு கையில் கீதா கொடுக்கும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். சேகர் வீட்டுக்குப் போய் ஹாட் பேக்கில் டிஃபன் சாப்பாடு இவைகளை வைத்து கொண்டு போய்க் கொடுப்பாள். சில நாட்கள் கயல கொடுத்து விடுவாள். சில நாட்கள் கீதாவே தான் செல்ல வேண்டியிருக்கும். காரணம் சேகர் வந்தால் வீட்டுக்காரம்மா ஏதாவது பேசலாம் என்ற எண்ணம் தான்.

"நீங்க எப்படியும் நம்ம ஆபீசுக்கு தான் வரப்போறீங்க? எனக்கும் சேர்த்தே மதியத்துக்கு டிஃபன் பாக்ஸ் நீங்களே கொண்டு வந்துட்டா என்ன?" என்றான் சேகர் ஒரு நாள்.

"இல்லை சேகர் சார்! நம்ம ஆபீசுல நிறையப் பேரு வேலை பார்க்குறாங்க! நான் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கட்டிக்கிட்டு வரேன்னு தெரிஞ்சா ஒரு மாதிரியாப் பேசுவாங்க! அது நமக்கு நல்லதில்ல! அதனால தான். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க" என்று ஆணித்தரமாக சொல்லி விட்டாள்.

அந்த இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பள்ளி அலுவலகம் என அனைத்தும் லீவு. ஆனால் தேர்வுகள் நெருங்கி வருவதால் கயல் படிக்க வேண்டும் என்று எங்கேயும் அழைத்துச் செல்ல மறுத்து விட்டான் சேகர். "படி எக்சாம்ல எல்லா சப்ஜெக்டுலயும் 80க்கு மேல வாங்குனா உன்னை ஊட்டி கூட்டிக்கிட்டுப் போறேன்" என்றான். மற்ற பாடங்களைப் பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் கணக்கு தான் கயலுக்கு எப்போதுமே தகறாரு. இந்த முறை கீதா முறையாகச் சொல்லிக் கொடுத்தாள். தேர்வு நடந்து முடிந்து விட்டது. அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் ஓய்வாக அமர்ந்திருந்தாள் கீதா. கயல் ஓடி வந்தாள்.

"அண்ணன் உங்களை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லிச்சு" என்றாள்.

"எதுக்குடி?"

"தெரியாதண்ணி! நேத்து எங்க அத்தை கிட்ட இருந்து ஃபோன் வந்தது. அதுல இருந்து அண்ணன் ரொம்ப டென்ஷனா இருக்கு" என்றாள்.

"உங்களுக்கு அத்தை இருக்காங்களா? அவங்க ஃபோன் செஞ்சாங்களா? எனக்கு தெரியாதே?"

"எனக்கே தெரியாது! இத்தனை வருஷம் கழிச்சு இப்ப திடீர்னு ஃபோன் பண்ணியிருக்காங்க! வாங்க அண்ணி! அண்ணன் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்" என்று இழுத்தாள். வேறு ஒரு சுடிதார் அணிந்து கிளம்பினாள் கீதா.

சோஃபாவில் காலையில் அவள் கொடுத்தனுபிய டிஃபன் அப்படியே இருந்தது. கயல் கூட சாப்பிடவில்லை எனத் தெரிந்தது.

"சேகர் சார்! என்ன ஆச்சு உங்களுக்கு? கொடுத்துப்பின சாப்பாட்டைக் கூட சாப்பிடல்ல போல இருக்கே? கயல் நீயும் ஏம்மா பட்டினி இருக்க?"

"அண்ணனே சாப்பிடல்ல! எனக்கு எப்படி சாப்பிடத்தோணும் அண்ணி? அதுவும் போக நான் அண்ணன் கிட்ட கேட்டதுக்கு என்னை திட்டி அனுப்பிரிச்சு அண்ணன். எனக்கு அழுகையாவந்தது" என்றாள் கயல் பாவமாக.

சொல்ல முடியாத ஏதோ ஒரு பிரச்சனை சேகருக்கு இருக்கிறது எனப் புரிந்து கொண்டாள் கீதா. தனியாக தான் அவனிடம் கேட்க வேண்டும். முதலில் இவர்களை சாப்பிட வைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

"கயல் போயி தட்டு எடுத்துக்கிட்டு வாம்மா! ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க! லீவு நாளாச்சேன்னு கஷ்டப்பட்டு காரப் பணியாரம் செஞ்சா இப்படியா வேஸ்ட் பண்ணுவீங்க? முதல்ல சாப்பிடுங்க சேகர் சார்! அப்புறமா நாம பேசலாம்" என்றாள்.

மௌனமாக சுவைத்து உண்டனர் அண்ணனும் தங்கையும். தட்டுக்களை எடுத்துப் போட்டாள் கயல்.

"கயல்! நான் கொஞ்சம் பூன்டு எடுத்து வெச்சிருக்கேன். அதோட முருங்கைக் கீரையும் இருக்கு. அதை ஆஞ்சு வெக்கறியா? பூண்டையும் உரிச்சிடு. நான் உங்க அண்ணனோட பேசிட்டு வரேன்" என்றாள். தலையாட்டி விட்டு ஓடி விட்டாள் கயல். நாற்காலியை பக்கத்தில் போட்டு அமர்ந்தாள் கீதா.

"இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை? யாரோ உங்க அத்தை ஃபோன் செஞ்சாங்களாமே?"

"கயல் சொன்னாளா? ஆமா கீதா! எங்கப்பாவோட கூடப் பொறந்த தங்கச்சி! எங்கப்பா செயலா இருக்கும் போது எவ்வளவோ செஞ்சிருக்காரு. பணம் நகை காய்கறி நெல்லுன்னு எல்லாமே எங்க அத்தை வீட்டுக்குப் போகும். நான் சொன்னேன்ல எங்கப்பா சொத்தை எல்லாம் அழிச்சுட்டாருன்னு அதுக்குப்பிறகு அவங்க எங்களை ஏன்னு கூடக் கேக்கல்ல! அதுவும் கயல் பொறந்த பிறகு எங்களை எல்லாரும் ஒதுக்கியே வெச்சுட்டாங்க! "

"அப்புறம் இப்ப ஏன் கூப்பிட்டாங்களாம்?"

"அது தான் விஷயமே! எங்க அத்தைக்கு ஒரு மகன் ஒரு மகள். இரட்டைக் குழந்தைங்க! அதுல பையன் ராஜேஷ் நல்லா இருப்பான் நல்லா படிப்பான். ஆனா பொண்ணு துளசி கொஞ்சம் ஒரு மாதிரி. சின்ன வயசுல இருந்தே ரொம்ப வித்தியாசமா நடந்துப்பா! அவளுக்குப் பிடிக்காததை யாராவது செஞ்சா கையில கெடச்சதைப் போட்டு உடைப்பா! இல்லைன்னா அவங்களை நகத்தாலே கீறுவா அடிப்பா அப்புறம் மயக்கமா ஆகிடுவா! மயக்கம் தெளிஞ்சதும் நானா அப்படி நடந்துக்கிட்டேன்னு கேப்பா"

"சே! பாவம் தான்"

"பேய் பிடிச்சிருக்குன்னு நெனச்சு அதுக்கு பூசாரி வெச்சு என்னென்னவோ பூஜை செஞ்சாங்க! அப்புறமா இது மன நோய்னு தெரிஞ்சு சென்னையில இருக்குற பெரிய பெரிய மனோதத்துவ டாக்டர்ங்க கிட்ட காமிச்சாங்க! ஆனா அவ மாறவே இல்ல! மேலும் மேலும் வயலண்டா நடந்துக்கிட்டாளே தவிர குறையவே இல்ல. ஆதுக்குப் பிறகு அவளுக்கு என்ன ஆச்சு எப்படி இருக்கா இது எதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்கம்மா இறந்ததுக்குக் கூட அவங்க வீட்டுல இருந்து யாருமே வரல்ல! ஆனா இப்ப திடீர்னு ஃபோன் செஞ்சிருக்காங்க"

"எதுக்கு?"

"நாளைக்கு எங்க அத்தையும் மாமாவும் வராங்களாம். வந்தா தான் தெரியும்"

"இன்னும் எதுக்கு வராங்கன்னே தெரியாது! அதுக்குள்ள ஏன் கவலைப் படுறீங்க? அவங்க நல்ல நிலைமையில தானே இருக்காங்க? அப்புறம் என்ன? பணம் எதுவும் கேக்க மாட்டாங்க! பயப்படாதீங்க" என்றாள் ஆறுதலாக,
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Me too have the same feel sekar thalaiyil antha pennai katta pakrangala
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top