• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
கட்டங்கள் – 13

காலை நேரம்.

சூரிய பகவான் அவர் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார். வெயிலின் தாக்கம் மதுசூதனன் அறையின் பால்கனியிலும் இருந்தது.

"நான் ஆபீஸ் போயிட்டு எல்லா formalities முடிச்சிட்டு உங்க ஆபீஸ் வந்திறேன்..." , என்று கூறி மதுசூதனனின் முகம் பார்த்தாள் நித்யா.

மதுசூதனன் கண்ணாடி முன் நின்று தன் முடியை கோதி கொண்டிருந்தான்.

"ஆபீஸ் எங்க இருக்குனு தெரியுமா..?" என்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த படியே மதுசூதனன் வினவ, "நீங்க அட்ரஸ் கொடுத்தா தெரிஞ்சிக்குறேன்..", என்று தன் மூடிய உதடுகளை பெரிதாக்கி கூறினாள் நித்யா.

"பார்க்க ஒல்லியா இருந்தாலும்.., உடம்பு முழுக்க கொழுப்பு... உன் கொழுப்பை ஓட்ஸ் போட்டே குறைக்கிறேன்..", என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, "வாட்ஸப்ல மெசேஜ் பண்றேன்...", என்று கூறி படியே நித்யாவை பார்த்தான் மதுசூதனன்.

தலையில் கேட்ச் கிளிப், முடி ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தது. சின்ன பொட்டு , திருமணமான அடையாளமாக மேல் நெற்றியில் குங்குமம். சின்னதாக தோடு, அவன் கட்டிய தாலி பளபளவென்று மின்னியது. மெலிதாக செயின் உற்று பார்த்தால் தான் அந்த செயினை பார்க்க முடியும். கருப்பு லெக்கின்ஸ் , பிங்க் டாப்ஸ் அதில் கருப்பு பூக்கள். எந்தவித ஒப்பனையும் இன்றி நித்யாவின் முகம் புத்தம்புது பூவாய் இருந்தது.

"ஆபிஸ் கிளம்பிட்டியா..?" , என்று சந்தேகமாக மதுசூதனன் கேட்க, "ம்ம்..", என்று தலை அசைத்தாள் நித்யா.

தன் கைகளை திருப்பி மணி பார்த்தான் மதுசூதனன். "அம்மா, அப்பா காத்துகிட்டு இருப்பாங்க... காலையில நான் அம்மா, அப்பாவோட சேர்ந்து சாப்பிடுவேன்... போகலாம்... " , என்று கூறி படியிறங்கி டைன்னிங் டேபிளை நோக்கி நடந்தான் மதுசூதனன்.

"உப்பு இல்லாத ஓட்ஸ்.. அதுக்கு இவ்வளவு பில்ட் அப்..." , என்று நினைத்தபடி அவனை பின் தொடர்ந்தாள் நித்யா.

டைன்னிங் டேபிளில் அனைவரும் அமர, நித்யாவின் மூளை படு வேகமாக வேலை செய்தது. "நீ என்ன யோசித்தாலும் இன்று தப்பிக்க முடியாது..." , என்று மனதிற்குள் எண்ணியபடியே , அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்த மதுசூதனின் உதட்டோரம் வளைந்தது. அவன் புன்னகை கண்களில் தெரிந்தது. பெரியவர்கள் மதுசூதனனை கவனிக்கவில்லை. மாடியிலிருந்து , இவற்றை கவனித்து கொண்டிருந்தான் முகிலன்.

பெரியவர்களின் கவனம் வீட்டிற்கு புதியவளான நித்யாவின் மீது இருக்க, "என்ன நித்யா யோசிக்கிற..?", என்று வினவினார் கோவிந்தன்.

"நித்யா.. வாழ்க்கையில கிடைக்கிற சான்ஸ் தவற விடவே கூடாது..", என்று நினைத்த நித்யாவின் மூளை படு வேகமாக சிந்தித்து.

"அது... இன்னக்கி விரதம் மாமா.." , என்று கூறினாள் நித்யா. "என்ன விரதம் நித்யா?" , என்று புஷ்பா வினவ, "பதட்டத்துல நாள் கிழமை கூட ஞாபகம் வர மாட்டேங்குதே..." , என்று எண்ணியவளாக, "அது.. அது... ", என்று நித்யா தடுமாற, மதுசூதனன் தன் சிரிப்பை மறைக்க தன் கவனத்தை முழுமையாக கார்ன் பிலகேசில் செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

"பயப்படாத நித்யா... தைரியமா சொல்லு... ", என்று கோவிந்தன் கூற, "பயமா...? இவளுக்கா...?", என்று தன் இரு கண்களை விரித்து அவளை பார்த்தான் மதுசூதனன்.

"அது வந்து. விரதம்னா முழு நாள் எல்லாம் இல்லை... இன்னக்கி இவங்க ஆபீஸ் வர சொன்னங்க... புது இடம் இல்லையா..? அது தான் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாமுன்னு" , என்று நித்யா இழுக்க, " நல்ல விஷயம் தானே.... இதை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்...?", என்று சிரித்த முகமாக கூறினார் புஷ்பா.

அவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பார்த்து, "நீங்க தினமும் ஓட்ஸ் தான் சாப்பிடுவீங்களா..?" , என்று கரிசனத்ததோடு வினவினாள் நித்யா.

"உடம்புல நிறைய வியாதி.. பக்குவமா நிறைய பண்ணலாம்.. ஆனால் பேச்சியம்மா ஓட்ஸ் மட்டும் தான் பண்ணுவா.. " , என்று புஷ்பா சோகமாக கூற, "நாளைல இருந்து நான் பண்ணட்டுமா அத்தை...?", என்று நித்யா ஆர்வமாக வினவினாள்.

"உனக்கு சமைக்க தெரியுமா?", என்று கோவிந்தன் ஆச்சர்யமாக வினவினார்.

"சமைப்பேன் மாமா.. நாளைல இருந்து என் சமையல்.. எல்லாரும் சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ", என்று இன்முகத்தோடு கூறினாள் நித்யா.

"இது என்ன டிராக் மாறுது...?", என்று மதுசூதனன் சிந்திக்க, நித்யா எதிர் பக்கத்தில் நின்று கொண்டு மதுசூதனனை பார்த்து கண்ணடித்தாள்.

"எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருப்ப...? உட்காரு...", என்று கோவிந்தன் கூற, "இல்லை மாமா நேரம் ஆகுது நான் கிளம்பறேன்...", என்று நித்யா கிளம்ப எத்தனித்தாள்.

"எங்க தனியா போற...? சேர்ந்து கிளம்புங்க..", என்று புஷ்பா கூற, "நான் என்ன இவளுக்கு டிரைவர் வேலையா பாக்கறேன்.. எப்படி மறுப்பது", என்று மதுசூதனன் சிந்திக்க.., "ஐயோ... அத்தை அதெல்லாம் வேண்டாம்... நான் பார்த்துகிறேன்...", என்று நித்யா பதறினாள்.

அந்த பதட்டம் அவனை சிந்திக்க வைத்தது. "இவள் ஏன் இப்படி பதட்டப்படறா... எங்கயோ இடிக்குதே....", என்று மதுசூதனன் யோசிக்க, "எந்த கோவிலுக்கு போகணும்...?", என்று கோவிந்தன் வினவினார்.

"வெளிய கிளம்பினா இவ்வளவு கேள்வியா...? எந்த கோவிலை சொல்லுவேன்.. ஏதாவது சொல்லு டி...", என்று தனக்கு தானே நித்யா புலம்பிக்கொள்ள, "எந்த கோவில் நித்யா..?" , என்று தன் கடைசி ஸ்பூன் கார்ன் பிளக்ஸ் சாப்பிட்டபடி வினவினான் மதுசூதனன்.

"என்ன அண்ணியை நிக்க வச்சி, எல்லாரும் கேள்வி கேக்கற மாதிரி இருக்கு..?", என்று வினவியபடியே படியிறங்கி வந்தான் முகிலன்.

" அப்படியெல்லாம் இல்லை... ", என்று மதுசூதனன் பதிலளிக்க, "ஆபீஸ் கிளம்பியாச்சா..? ", என்று வினவினார் கோவிந்தன். முகிலன் பதில் ஏதும் கூறாமல் தன் தலையை அசைக்க, "இவன் எப்பொழுது மாறுவானோ..?", என்று நினைத்துக் கொண்டான் மதுசூதனன்.

புஷ்பா எதுவும் பேசாமல் மெளனமாக உணவருந்த, "ப்ரோ.. நான் வடபழனி ஆபீஸ் போயிட்டு, அங்கிருந்து கம்பனிக்கு வந்திறேன்..", என்று மதுசூதனனிடம் கூறிவிட்டு , "byee...." , என்று பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பினான் முகிலன்.

"இந்த "bye..." நித்யா இருப்பதால் ", என்று நித்யாவை தவிர அனைவருக்கும் தெரிந்தது.

"எந்த கோவில்?" , என்று மீண்டும் மதுசூதனன் வினவ, "வடபழனி முருகன் கோவில் " , என்று அனைவரிடம் கூறிவிட்டு, "முகிலன் கூறிய வடபழனி வேலை செய்துவிட்டது" என்று நினைத்தாள் நித்யா.

"உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் கிளம்பறேன்..", என்று நித்யா அவசரமாக கிளம்ப, "இரு.. நானும் வரேன்.. நாம சேர்ந்தே போயிடலாம்...", என்று கூறினான் மதுசூதனன்.

தன் கண்களை விரித்து அவனை பாவமாக பார்த்தாள் நித்யா.

சற்று நேரத்தில் இருவரும் காரில் ஏறிக்கொள்ள, மதுசூதனன் காரை கிளப்பினான்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
கார் வேகம் எடுக்க, "அதோ அந்த பஸ் தான்.. இங்க ட்ரோப் பண்ணிருங்க.. என் வேலையை முடிச்சிட்டு நான் உங்க ஆபீஸ் வந்திறேன்..", என்று கூறினாள் நித்யா.

"வடபழனி தானே..", என்று கூறிவிட்டு கார் வேகமாக வடபழனியை நோக்கி செலுத்தினான் மதுசூதனன்.

தன் விரல்களை மடித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் நித்யா.

மதுசூதனின் கார் கோவில் கார் பார்க்கிங்கில் நின்றது. "இறங்கு.." , என்று மதுசூதனன் கூற, "சாரி..." , என்று கூறினாள் நித்யா.

அவளை பார்த்து புன்னகைத்து, "வா.. கோவிலுக்கு போவோம்...", என்று மதுசூதனன் கூற, "எனக்கு கோவிலுக்கு போற பழக்கம் எல்லாம் பெருசா கிடையாது..", என்று கடுப்பாக கூறினாள் நித்யா.

"ஆனால், எனக்கு உண்டு.." , என்று அழுத்தமாக கூறினான் மதுசூதனன்.

"மறுத்து பயனில்லை...”, என்றறிந்து அமைதியாக மதுசூதனனை பின் தொடர்ந்தாள் நித்யா.

பிள்ளையாரை தரிசித்துவிட்டு, முருகனையும் தரிசித்துவிட்டு இருவரும் பிரகாரத்தை அமைதியாக சுற்றினார். மதுசூதனின் முகம் தெளிவாக இருந்தது.

"என்ன கல்யாணமோ... நினைச்ச இடத்துக்கு போக முடியலை.. ஒரு சுதந்திரம் இல்லை.. நை நைன்னு கேள்வி கேக்கறாங்க..", என்ற எண்ணம் தோன்ற, எண்ணத்தின் விளைவோ அல்லது பசியின் விளைவோ நித்யாவின் கண்கள் கலங்கியது.

"என்ன ஆச்சு ?", என்று மதுசூதனன் வினவ, "கண்ணல திருநீரு விழுந்திருச்சு... ", என்று தரையை பார்த்தபடி கூறினாள் நித்யா.

"கீழ விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலை...", என்று நினைத்துக் கொண்டான் மதுசூதனன்.

பிரகாரத்தை சுற்றி விட்டு, ஒரு தூணின் அருகே அமர்ந்தான் மதுசூதனன். வேறு வழின்றி அவனருகே அமர்ந்தாள் நித்யா.

"எங்க போகணுமுன்னு நினைத்த..? ", என்று மதுசூதனன் அவளை நேரடியாக பார்த்து கேட்க, நித்யா தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"உங்க வீட்டுக்கு போகணுமா..? அம்மா அப்பாவை பார்க்கணுமா...? அதை நீ நேரடியாகவே சொல்லிட்டு போயிருக்கலாம்.. எதுக்கு விரதம்.. கோவில்.. அது இதுன்னு பொய் சொல்லணும்.. நீ எதோ பொய் சொல்றேன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்.. ", என்று மதுசூதனன் வீரப்பாக கூற, "புத்திசாலி... ", என்று கடுப்பாக கூறினாள் நித்யா.

"இவள் என்ன நான் சீரியஸா பேசினா நக்கல் பண்ரா..?", என்று சிந்திக்க, "எதையுமே சிம்பிளா யோசிக்க மாட்டிங்களா..? மனுசிக்கு பசி.. ஹோட்டல் போய் சாப்பிட்டுட்டு நேரா ஆபீஸ் போய்டலாமுன்னு பார்த்தேன். கேள்வி கேட்டு.., கார்ல கூட்டிட்டு வந்து என் வேலையை கெடுத்துடீங்க.. ", என்று சிடுசிடுத்தாள் நித்யா.

"ஹா.. ஹா... ", என்று மதுசூதனன் வெண்பற்கள் தெரிய சத்தமாக சிரிக்க, "சிரிச்சது போதும்.. கிளம்புங்க.. என்னை எங்க ஆபீஸ் கூட்டிட்டு போங்க.. ", என்று வெறுப்பாக கூறிக் கொண்டே, தன் உடையை தட்டிக் கொண்டே எழுந்தாள் நித்யா.

மதுசூதனின் கார் ஹோட்டல் முன் நின்றது.

அவன் நேராக எ.சி. ஹாலுக்கு செல்ல, அவனை பின் தொடர்ந்தாள் நித்யா. “இவனை பின் தொடர்வதே நமக்கு வேலை ஆகிருச்சு..", என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

"என்ன வேணும்?" , என்று மதுசூதனன் அவள் எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தபடி கண் உயர்த்தி வினவ, "பொங்கல், வடை..", என்று நித்யா ஸ்டைலாக கூறினாள்.

அவள் ஆர்டர் செய்தது வர, "நீங்க எதுவும் சாப்பிடலியா.?" , என்று கேட்டாள் நித்யா. "என் பிரேக் பாஸ்ட் முடிஞ்சிருச்சு. அவ்வளவு தான். ", என்று மதுசூதனன் கூற, தன் தோள்களை குலுக்கி கொண்டு சாப்பிட்டாள் நித்யா.

" முடிஞ்சிதா? பில் சொல்லிரலாமா..?", என்று மதுசூதனன் வினவ, "ஸ்ட்ரோங் காபி..", என்று கண் சிமிட்டியடியே கூறினாள் நித்யா.

"இதுக்கு இன்னக்கி காலைல வீட்ல இவ கிட்ட வம்பு வளர்க்கமா இருந்திருக்கலாம்" , என்று மதுசூதனன் சிந்திக்க, "காலைல வீட்லயே காபி கொடுத்திருக்கலாமுன்னு தோணுதா..? " , என்று நித்யா வினவினாள்

"எதுக்கு டிபன், காபி வாங்கி கொடுத்தேன் தெரியுமா?" , என்று மதுசூதனன் வினவ, அவனை கூர்ந்து பார்த்தாள் நித்யா.

“காலைல இருந்த ஒரு வீராப்பு.., இப்ப உன்கிட்ட இல்லை.. பசியால் பயங்கர டல்லா ஆகிட்ட.. என்கிட்டே போராட போட உனக்கு தெம்பு வேணும்.. அதுக்கு தான்... இப்ப போலாமா ?" , என்று மதுசூதனன் புருவம் உயர்த்தி கேட்க, பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள் நித்யா.

கார் நித்யாவின் கம்பெனியை நோக்கி சென்றது. மதுசூதனன் எதுவும் பேசவில்லை. அவன் முகம் எந்தவித உணர்ச்சியின் பிரதிபலிப்பின்றி அமைதியாக இருந்தது. நித்யா ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நித்யாவின் ஆபிஸ் நெருங்க மௌனத்தை கலைத்தான் மதுசூதனன்.

"நான் வெயிட் பண்றேன்.. நீ வேலையை முடிச்சிட்டு வா.", என்று மதுசூதனன் கூற, "எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியலை.. ட்ரோப் பண்ணிட்டு கிளம்புங்க..", என்று நித்யா தயக்கமாக கூற, "நான் எல்லாம் பேசிட்டேன்.. உனக்கு just 10 minutes formalities தான். வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வந்திரு.. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு...", என்று மதுசூதனன் வண்டியை நிறுத்தியபடியே கூற, அவனை ஆச்சரியமாக பார்த்தாள் நித்யா.

நித்யா உள்ளே செல்ல, மதுசூதனன் சுயசிந்தனையில் ஆழ்ந்தான்.

அவன் முகம் கண்ணாடியில் தெரிந்தது. "என்னடா பண்ணிட்டு இருக்க? பிடிக்கலைன்னா அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பணும்.. இல்லைனா அவள் மனசை காயப்படுத்தாமல் இருக்கனும். ", என்று மனசாட்சி கூற, "நான் என் ஸ்டேட்டஸ்ல தான் friendship கூட மெயின்டெய்ன் பண்ணுவேன்.. ஆனால் எனக்கு ஸ்டேட்ஸ்ன்னா என்னன்னு கேக்கற மனைவி.", என்று தனக்குள் புலம்பிக்கொண்டு கோபமாக தன் கைகளை ஸ்டேரிங் மீது அழுத்தினான் மதுசூதனன்.

நித்யா பத்து நிமிடத்தில், தன் வேலைகளை முடித்துவிட்டு காரை நோக்கி நடந்தாள். நித்யா கார் கதவை, திறக்கும் ஓசையில், நிகழ் காலத்திற்கு திரும்பினான் மதுசூதனன்.

மதுசூதனன் காரை கிளப்ப, இருவரும் மௌனம் கலைக்க விரும்பவில்லை. வேலையை ரிசைன் செய்வது நித்யா நினைத்ததை விடவும் அவளுக்கு வலித்தது.

"எனக்கு இந்த வேலையை ரிசைன் செய்ய கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை." , என்று நித்யா கூற, "எனக்கு கூட தான் உன்னை கல்யாணம் செய்துக்க இஷ்டமே இல்லை... ", என்று மதுசூதனன் கடுப்பாக கூறினான்.

"இவனுக்கு இவன் பிரச்சனை... ", என்று எண்ணி அமைதியாக இருந்தாள் நித்யா.

"எல்லாம் இனி என் இஷ்டப்படி தான் நடக்கும்.. ", என்று மதுசூதனன் கூற, "எப்படி formalities இவ்வளவு சீக்கிரம் முடிந்தது?", என்று நித்யா முகம் திருப்பி கார் ஓட்டிக் கொண்டிருந்த மதுசூதனனை பார்த்துக் கேட்டாள் நித்யா.

"பணமும், செல்வாக்கும் இருந்தா எல்லாம் முடியும்.. ", என்று உதட்டோர புன்னகையோடு கூறினான் மதுசூதனன்.

அவனிடம் விவாதம் செய்யவோ, சண்டையிடவோ நித்யாவிற்கு மனதில் தெம்பில்லை போல் தெரிகிறது. அமைதியாக அமர்ந்திருந்தாள்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
கார் எட்டுமாடி கட்டிடத்திற்குள் நுழைந்தது. "GM Technologies" என்ற பெயர் பொறிக்கப் பட்டிருந்தது.

அவன் லிப்ட் நோக்கி நடக்க, "உங்க கம்பெனி எந்த floor ?", என்று வினவினாள் நித்யா.

அதற்குள் "குட் மார்னிங்... ", என்று செக்யூரிட்டி கூற, கம்பீரமாக தலை அசைத்தான் மதுசூதனன். முகத்தில் எள்ளவும் புன்னகை இல்லை. கோபமும் இல்லை. உணர்ச்சி துடைத்த முகம். வெள்ளை சட்டை அணிந்திருந்தான். நடை,உடை, பார்வை அனைத்திலும் கம்பீரம் அதோடு கர்வமும் தெரிந்தது. அவனை பார்த்த நித்யா சற்று அயர்ந்து தான் போனாள். " காலையில் இவன் தான் நம்மிடம் ஓட்ஸ் சாப்பிட சொல்லி கேலி பேசியவனா..?" , என்று கண்களை சுருக்கி யோசித்தாள். வேகமான அவன் நடை கம்பனிக்குள் மிக வேகமாக மாறியிருந்தது.

சிந்திக்க நேரமின்றி அவனை பின் தொடர்ந்தாள்.

அவன் லிஃட்க்குள் நுழைய வேறு யாரும் உள்ளே செல்லவில்லை.

இவள் உள்ளே செல்ல, லிப்ட் மூடி கொண்டது. சற்று இடைவெளி விட்டு அவன் அருகில் நின்று கொண்டாள்.

"மொத்தமமும் நம்ம கம்பெனி தான்..", என்று மூடிய லிப்ட் கதவை பார்த்த படி கூறினான் மதுசூதனன்.

கண்களை அகலமாக விரித்தாள் நித்யா. திறந்த வாயை மூடாமல் அவனை பார்த்தாள் நித்யா.

சில நொடிகளில், லிப்ட்டின் கதவு திறந்தது.

அவன் தன் கேபினுள், நுழைந்து தன் சுழற் நாற்காலியில் அமர்ந்து தனக்கு எதிரே இருக்கும் நாற்காலியை கை காட்ட நித்யா அதில் அமர்ந்தாள். மதுசூதனனின் அறைக்குள் நுழைந்தான் முகிலன்.

"ப்ரோ.. வர சொன்னீங்களா..? ", என்று முகிலன் வினவ,.. "Yes..", என்று தலை அசைத்தான் மதுசூதனன்

அறைக்குள் நுழைத்த முகிலன், "ஹாய்.. அண்ணி.. "Welcome to GM Technologies" , என்று சிரித்த முகமாக கூறியபடி அவள் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.

தன் தொண்டையை கனைத்துக் கொண்டு, "ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் ஷேர் பண்ணு. அடுத்த மாசம் Client visit இருக்கு. இவங்க Research & Development டீம் new project Live Demo காட்டணும்.. எதாவது புதுசா… Anything innovative… client impress ஆகுற மாதிரி இருக்கனும். ", என்று மதுசூதனன் கூற, "ப்ரோ.. one month ரொம்ப short duration , என்று பதட்டமாக கூறினான் முகிலன்.

அவனை நிமிர்ந்து பார்த்த மதுசூதனன், "உங்க அண்ணிக்கு அவ்வளவு கஷ்டமா இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்...", என்று தன் பேச்சை நித்யாவின் முகம் பார்த்து முடித்தான்.

முகிலன் பரிதாபமாக தலை அசைக்க, அங்கு பார்வையாளராக மாறி போனாள் நித்யா.

"ஒகே ப்ரோ.. என் வேலையை பாக்கறேன்.. I am ready for knowledge sharing session anytime, என்று பொதுவாக கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான் முகிலன்.

"இந்த ப்ராஜெக்ட் successfully complete பண்ணலைன்னா, நீங்க தான் இங்க என் பர்சனல் secretary", என்று மதுசூதனன் கூற, "இவ்வளவு நாள் உங்களுக்கு பர்சனல் secretary தேவை பட்ட மாதிரி தெரியலியே...?" ,என்று நித்யா வினவ, "இனிமேல் தேவைப்படும்...", என்று கூறினான் மதுசூதனன்.

"Successfully complete பண்ணிட்டா?" , என்று நித்யா கேள்வியாக நிறுத்த, "மேடம் இதே போஸ்ட்ல continue பண்ணலாம்", என்று பெருந்தன்மையாக கூறினான் மதுசூதனன்.

" It should be a WIN-WIN situation. உங்க டீலை நான் ஒத்துக்க மாட்டேன்..", என்று மறுப்பாய் நித்யா தலை அசைத்தாள்.

"என்ன பண்ணலாம்? Salary double பண்ணட்டுமா?", என்று மதுசூதனன் நக்கலாக கூற, மறுப்பாய் தலை அசைத்தாள் நித்யா.

" அவசியமில்லை…. உங்க வீட்ல மூணு வேலை சாப்பாடு.. தங்க தூங்க இடம் இருக்கு... எனக்கென்ன பெரிய செலவு... ", என்று பேசியபடியே நாற்காலியில் சாய்ந்தாள் நித்யா.

தன் கம்பனியில் , தன் அறையில் அமர்ந்து தன்னிடமே தைரியமாக டீல் பேசி கொண்டிருந்த நித்யாவை கூர்மையாக பார்த்தான் மதுசூதனன்.

"சரி... என்ன வேணும்? நீயே சொல்லு...", என்று கூறி மதுசூதனன் அமைதி காக்க, நித்யாவின் குறும்புத்தனம் எட்டி பார்த்தது. " இவனிடம் விளையாடினால் என்ன?" , என்று தோன்ற, "டைவோர்ஸ்.. ", என்று நிதானமாக கூறினாள் நித்யா.

" நான் உங்க ஸ்டேட்டஸ் இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்க.. உங்களுக்கு என்னை பிடிக்கலை.. நானும் அதை தான் நினைக்கிறேன்..”, என்று கூறி சற்று இடைவெளி விட்டு, "அங்க பாருங்க" என்று எ.சி. அறை கண்ணாடிக்குள் பலர் பணி புரிந்து கொண்டிருக்க, அவர்களை கை காட்டினாள் நித்யா.

" இவங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு , மாசம் ஒண்ணாம் தேதி சம்பளம் வந்தா பொதுமுன்னு நினைக்கிற சராசரி பொண்ணு நான்.. எனக்கு இந்த வாழ்க்கை செட் ஆகுமுன்னு தோணலை.... ", என்று மதுசூதனனை பார்த்து கூறினாள் நித்யா.

அவள் பேசுவதை சூழல் நாற்காலியில் அமர்ந்து அதை அங்கும் இங்கும் அசைத்தபடி அவளையே கூர்மையாக பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் மதுசூதனன்.

" ப்ராஜெக்ட் successfully complete பண்ணலைனா நான் உங்களுக்கு wife and Personal secretary , ப்ராஜெக்ட் successfully complete பண்ணிட்டா Not even wife", என்று நித்யா அழுத்தமாக இன்முகத்தோடு கூறினாள்.

கட்டங்கள் நீளும்....
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top