• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal -20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
கட்டங்கள் – 20

அசோக் வருடக்கணக்காக வேலை தேடிக் கொண்டிருந்த வேளையில் கிடைத்த இந்த வேலை அவனுக்கு ஓர் பொன்னான வாய்ப்பாக தோன்றியது.

Advent_Tech, வெண்பா இந்த பெயரை சொன்ன உடன், அவன் கூகிளில் பிரௌஸ் செய்ததில் கிடைத்த விஷயத்தில் அசோக் மகிழ்ச்சியாக இருந்தான்.அது ஒரு Gaming Software உருவாக்கும் கம்பனி. ஆனால் அவனுக்கு வெண்பாவின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை.

"இவர்கள் எப்படி எனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியும்...? பார்த்தால் படித்தவர்கள் போல் தான் தெரிகிறது. அத்தனை செல்வாக்கு இருந்தால் இவர்கள் ஏன் இந்த வேலைக்கு செல்லாமல் நம் வீட்டில் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு, முயற்சி செய்து பார்க்கலாம்”, என்று எண்ணி காலையில் கிளம்பிருந்தான் அசோக்.

ஆனால், அங்கிருந்த company magazine ல் வெண்பாவின் புகைப்படத்தை பார்த்த அசோக் அதிர்ச்சியில் உறைந்தான்.

தன் டேபிளில் இருந்த, அனைத்து magazine யையும் வேகமகா புரட்டினான். விதவிதமாக வெண்பாவின் புகைப்படங்களை அவனால் பார்க்க முடிந்தது. "இந்த கம்பெனியில் பெரிய பதவியில் இருந்திருக்க வேண்டும்", என்று எண்ணியவனாக, அனைத்து புகைப்படங்களையும் பார்த்தான்.

Formal pant shirt அணிந்து கொண்டு ஒரு மீட்டிங்கில் இருப்பது போன்ற புகைப்படம். பட்டு சேலை, பல வைரங்களோடு ஜொலித்தார் போல் cultural program இல் ஒரு புகைப்படம். Jeans, Tshirt அணிந்து கொண்டு Team Outing இல் எடுத்த புகைப்படம் என பல.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் வெண்பாவின் புகைப்படத்தை காட்டி,” யார்?”, என்று கேட்டான் அசோக். அந்த பெண் இவனை மேலும் கீழுமாக பார்த்து, " இந்த கம்பனி CEO சதாசிவத்தோடு பொண்ணு வெண்பா. இப்ப கொஞ்சம் நாளா அவங்க இங்க வரவில்லை.”, என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். தலை அசைத்து அமைதியாக கேட்டுக் கொண்டான்.

அனைவரயும் பெயர் சொல்லி அழைக்கும் IT culture அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பெண் கூறிய செய்தி அதை விட, அதிர்ச்சியாக இருந்தது.

அந்த அதிர்ச்சியை பின்னுக்கு தள்ளுவது போல், அவன் கண்முன், தண்ணியை கவிழ்த்துவிட்டு, காட்டன் சுடிதாரில் பரிதாபமாக அமுதவள்ளியின் முன் நின்ற வெண்பா தோன்றினாள். எத்தனை ஏச்சு பேச்சுக்கள்.. இதெல்லாம் இவர்களுக்கு தேவையா..? ராணி போல் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறதே.. இவர்களுக்கு இத்தனை கஷ்டம் எதற்காக..? முரளியின் மேல் கொண்ட காதலா..? அப்படி என்ன பெற்றோரை உதறி தள்ளும் காதல்...!!! அசோக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்த பெண்கள் எத்தகையவர்கள்? அம்மா மீதும், சித்ராவின் மீதும் அவனுக்கு பாசம் உண்டு.. ஆனால் மரியாதை, முதல் முறையாக வெண்பாவின் மீது வந்தது.

தன் வசதி, சொந்த பந்தம் என் அனைத்தையும் விட்டுவிட்டு கணவனுக்காக வும், காதலனுக்காக வும் வரும் பெண்களை இந்த ஆண் சமுதாயம் எப்படி நடத்த வேண்டும்.??

"நான் எத்தனை சிறு பிள்ளை தனமாக பெண்களுக்கு ரோஜா பூ கொடுப்பது, கேலி செய்வது..", என்று இருந்திருக்கிறேன் ,என்று முதல் முறையாக வருந்தினான் அசோக். "ஆண் பிள்ளை என்று கர்வமாக வளர்த்த என்னை, பெண்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சொல்லித் தரவில்லையே....", என்று வருந்தினான் அசோக்.

ஆனால் அண்ணி, “என்னை அவர்கள் சாம்ராஜ்யத்திற்கு அனுப்பிவைத்து ஓரே நாளில் பாடம் கற்பித்து விட்டார்களே..!!!", என்று நினைத்தான். வெண்பாவின் மீது மதிப்பு அவனுக்கு பன் மடங்காக உயர்ந்தது.

"இனி என்னை வேலை இல்லையென்று ஏளனமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.. என்ன வெட்டி முறிக்குற..? , என்ற குத்தல் பேச்சு இருக்காது.. ", இந்த எண்ணங்கள் அசோக்கிற்கு நிம்மதியையும், நிமிர்வையும் கொடுத்தது.

முதல் நாள் ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தோடு பைக்கில் வீட்டை நோக்கி சென்றான் அசோக். வீட்டிற்கு செல்லும் வழியில், ஸ்வீட் வாங்கி கொண்டு தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்த படியே அவர்கள் அபார்ட்மெண்டை வந்தடைந்தான் அசோக்.

அசோக் படி ஏற, முற்படுகையில், காயத்திரி அவர்கள் வீட்டில் இருந்து கீழே இறங்க எத்தனித்தாள். அசோக்கை பார்த்த உடன், "ஐயோ.. இவன் நிச்சயம் எனக்கு வழி தராமல் வம்பிழுப்பான்", என்ற எண்ணம் தோன்ற அங்கே நின்று கொண்டு அசோக்கிற்கு வழி கொடுத்தாள் காயத்ரி.

காயத்ரி மேலே நிற்பதை பார்த்து விட்டு, "காயத்ரி, கீழ அங்கிள் உனக்காக வெய்ட் பன்றாங்க.. ", என்று குரல் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நின்றான் அசோக். ஆச்சரியமாக அவனை மேலும் கீழும் பார்த்தபடி படி இறங்கினாள் காயத்ரி. "இவனுக்கு என்ன ஆயிற்று..? போதி மரத்தடியில் இன்று அமர்ந்திருப்பானோ..?", என்ற நினைத்துக்கொண்டே, தன் தந்தையை நோக்கி நடந்து சென்றாள் காயத்ரி.

படி ஏறி வீட்டிற்குள் நுழைந்த அசோக், "அப்பா.. எனக்கு வேலை கிடைச்சிருச்சு..", என்று கூறி, தன் தந்தையிடம் இனிப்பை நீட்டினான். "என்னடா.. இன்டெர்வியூன்னு சொல்லவேயில்லயே...?", என்று சுந்தரம் வினவ, "எப்ப பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேளுங்க..? இன்டெர்வியூன்னு சொல்லுவான்... என்ன ஏதுன்னு கேட்பீங்க.. அது தான் கிடைத்த பிறகு சொல்லிக்கலாமுன்னு நினைத்திருப்பான்.. அவன் எவ்வளவு நல்ல விஷயம் சொல்லிருக்கான்.., அதை மட்டும் பாருங்க.. ", என்று அமுதவள்ளி அவனுக்கு திருஷிட்டி சுற்றினாள்.

"அம்மா... ஸ்வீட் எடுத்துக்கோங்க...", என்று தன் தாயிடம் இனிப்பை கொடுத்து விட்டு , "கங்கிராட்ஸ் அண்ணா..", என்று கூறி கை குலுக்கிய சித்ராவின் தலையில் தட்டி, "இனி நீ என்ன கேட்டாலும்..இந்த ப்ரோ வாங்கி கொடுப்பான்..", என்று ஸ்டலாக கூறினான் அசோக்.

தன் கண்களால் வீட்டை அசோக் அளக்க, "முரளி அண்ணா இன்னும் வரலை..", என்று சித்ரா கூறினாள். "அண்ணி....", என்று இழுத்த அசோக்கை சுந்தரமும் , சித்ராவும் ஆச்சர்யமாகி பார்க்க, அமுதவள்ளி கூர்மையாக பார்த்தார்.

"அண்ணி அவங்க ரூம்ல தான் இருக்காங்க..", என்று சித்ரா இன்முகத்தோடு கூற, "அண்ணி...", என்று அழைத்துக் கொண்டு அறை வாசலில் அசோக் நிற்க, "அசோக் உள்ள வா.. ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கிற..?", என்று வெண்பா சிரித்த முகமாக கூற, "தேங்க்ஸ் அண்ணி " , என்று மெதுவாக கூறினான் அசோக்.

வெண்பா அங்கும் இங்கும் ஏதோ தேட, "அண்ணி , என்ன தேடறீங்க..?", என்று கையில் இனிப்புகளை வைத்துக்கொண்டே அசோக் கூர்மையான கண்களோடு கேட்க, "அன்று மாடியில கெத்தா ஸ்டைலா அசோக்ன்னு ஒருத்தரை பார்த்தேன், அவரை காணும்", என்றும் அங்கும் இங்கும் தேடியபடியே வெண்பா கூறினாள். "அண்ணி...", என்று அசோக் மென்மையாக அழுத்தமாக அழைத்தான்.

"ஏன் ? பணம் பதவின்னா.. அவ்வளவு பயமா..?", என்று வெண்பா கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி புருவம் உயர்த்தி வினவ, "இல்லை அண்ணி... அத்தனையும் விட்டுட்டு அண்ணனுக்காக வந்திருக்கீங்க...? இங்க அவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழற உங்க மேல எனக்கு ஏற்பட்ட மரியாதை...", என்று அசோக் தன்மையாக கூறினான்.

"உங்க அண்ணனுக்காக என் வாழ்க்கையில், நான் எதையும் விட்டுக்கொடுத்திருவேன்....", என்று வெண்பா கண்களில் கனிவோடு கூற, "எல்லாரும் சொல்லுவாங்க... ஆனால் நடைமுறையில் வாழறது பெரிய விஷயம்.You are really great… அண்ணா so lucky… என்று பெருமிதத்தோடு கூறினான் அசோக்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
“company Details யார்கிட்டையும் சொல்ல வேண்டாம் ", என்று வெண்பா தலை அசைத்து கூற, "அண்ணனுக்கு தெரியும்...", என்று அசோக் கீழே குனிந்த படியே தயக்கத்தோடு கூறினான். "ம்... தெரியும்.. நான் பார்த்திருக்கிறேன்.." , என்று சிந்தனையில் ஆழ்த்தவளாக கூறினாள் வெண்பா.

அசோக் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கையில், "No smoking.. No drinks.. இது தான் என் மூணாவது கண்டிஷன்" , என்று வெண்பா சிரித்த முகமாக கூற, அவளை பார்த்து சிரித்து விட்டு சென்றான் அசோக்.

அசோக் காலையில் வேலை கிடைத்த உடனே, முரளியிடம் தெரிவித்திருந்தான். முரளி, வெண்பாவிடம் எதுவும் கேட்கவில்லை. முரளியின் அமைதி, வெண்பாவிற்கு அவன் கோபத்தை தெரியப்படுத்திருந்தது.

முரளி வீடு திரும்பி, சில மணி நேரமாகியும் அவன் வெண்பாவிடம் ஏதும் பேசவில்லை. வெண்பா கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் கூறவில்லை.

"இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி பேசாம இருக்கீங்க..?", என்று கோபமாக கேட்டாள் வெண்பா. முரளி அவளை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு மொபைலில் ஆழ்ந்துவிட்டான்.

அவன் கையிலிருந்த மொபைலை படக்கென்று பிடுங்கினாள் வெண்பா.
வெண்பாவை முறைத்து பார்த்தான் முரளி.

"பேசமாடீங்களா..?", என்று கோபமாக கேட்டாள் வெண்பா. முகத்தை திருப்பி கொண்டான் முரளி. "உங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா..? எனக்கும் கோபம் வரும்..", என்று வெண்பா தீவிரமாக கூற அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி அதில் Candy crush விளையாட ஆரம்பித்தான் முரளி.

" என் கிட்ட பேசாம, மொபைலை பார்த்திட்டே இருந்தீங்கனா, அந்த மொபைலை தூக்கி போட்டு உடைக்க தான் போறேன்...", என்று வெண்பா கடுப்பாக கூறினாள்.

"நீ தூக்கி போட்டு உடைத்தா நினைத்த உடனே வேற ஒரு மொபைல் வாங்கிறதுக்கு நான் Advent_Tech CEO சதாசிவம் இல்லை..", என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான் முரளி.

வெண்பாவிற்கு கோபம் சுறுசுறுவென்று ஏறியது.

இரவு உணவை முடித்துவிட்டு, முரளி அமைதியாக படுத்து விட, "நீங்க இன்னக்கி பேசின வார்த்தைக்காகவும் , பேசாமல் இருப்பதற்காகவும் உண்மையா வருத்தப்படுவீங்க..", என்று கோபமாக கூறிவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள் வெண்பா.

"அவள் நல்லது செய்தும், நான் ரொம்ப அதிகமா கோபப்பட்டுவிட்டேனோ ?" , என்று முரளியின் மூளை காலம் கடந்து சிந்திக்க, "அவள் செய்த விதம்... என்னிடம் கேட்கவில்லையே....", என்று முரளியின் மனம் தன் கோபம் சரி என்று வாதிட விட்டத்தை பார்த்தபடி அமைதியாக படுத்திருந்தான் முரளி.

"உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தரேன்.. நீங்க சாரி எல்லாம் கூட சொல்ல வேண்டாம்.. போன போகுதுன்னு நானே மன்னிப்பு கொடுத்தறேன்.. நீங்களே என் கிட்ட பேசிருங்க..", என்று மறுப்பக்கம் திரும்பி சுவரை பார்த்து படுத்தபடியே சமாதான கொடி பறக்க விட்டாள் வெண்பா.

"ஓ... நான் சாரி வேற கேட்கனுமுன்னு நினைப்பு இருக்கா..? ஒரு வார்த்தை கூட, என்கிட்டே கேட்காம செய்றதையும் செய்த்திட்டு இப்படி வேற..", என்று நினைத்து கொண்டே, மொபைலில் இளையராஜா பாடலை ஒலிக்கவிட்டு அதை கேட்டபடியே படுத்திருந்தான் முரளி.

" பத்து நிமிடம் முடிவதற்கு இன்னும் 2 நிமிடம் தான் இருக்கிறது ", என்று வெண்பா குரலில் தேக்கி வைத்திருந்த கோபத்தை இழுத்து பிடித்து கூறினாள்.

பதில் ஏதும் பேசாமல் முரளி அமைதியாக படுத்திருக்க, முரளி மொபைலில் ஒலித்து கொண்டிருந்த பாடலை விட தன் மொபைலில் அனிருத் பாடலை சத்தமாக ஒலிக்க விட்டு கண்களை உருட்டியபடி கோபமாக படுத்திருந்தாள் வெண்பா.

இவர்களை பார்த்தால், சண்டை போடுவதும் போலவும் தெரியவில்லை. சமாதானம் ஆவது போலவும் தெரியவில்லை.

நாம் நித்யாவும், மதுசூதனனும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

மதுசூதனனின் வீட்டிற்கு உள்ளே செல்லவே நாம் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டிருக்கிறது. இரண்டு காரும் வீட்டில் இருக்கிறது. மதுசூதனன், முகிலன் இருவரும் வீட்டில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.

அட..!! வீட்டிற்குள் நுழைந்ததும், நித்யாவின் கை மணம் நம் மூக்கை துளைக்கிறது. நாம் அப்படியே டைனிங் டேபிள் அருகே சென்று பார்த்தால், ராகி சேமியா இனிப்பும், காரமுமாக காட்சி அளிக்கிறது. வெல்லம், ஏலக்காய் மணக்க இனிப்பு சேமியாவை ருசித்து கொண்டிருக்கிறான் மதுசூதனன். கார ராகி சேமியாவிற்கு தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான் முகிலன்.

அனைவரையும் கவனித்தபடியும், பேச்சியம்மாளுக்கு வேலை கூறிய படியும் சாப்பிட்டு கொண்டிருந்தாள் நித்யா.

ஒரு சில நாட்களில், வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நித்யாவை பார்க்க நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

"நித்யா, ஆபீஸ்ல எல்லாம் செட் ஆகிருச்சா?", என்று கோவிந்தன் அக்கறையாக வினவ, "அப்பா.. அண்ணி வீட்ல இருக்கிற மாதிரி தான் ஆபிஸ்லயும்.. Highly Talented ", என்று அவன் தட்டில் இருந்த கறிவேப்பிலையை ஓரமாக வைத்தபடியே முகிலன் நித்யாவை மனதார பாராட்ட, அவனை கோவிந்தன், புஷ்பா , மதுசூதனன் மூவரும் ஆச்சர்யமாக பார்த்தனர். நித்யா வெட்க சிரிப்போடு சாப்பிட்டு கொண்டிருந்தாள். "இவன் இப்படி கலகலப்பாக பேசி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது..? அம்மாவும்.., அப்பாவும் இதை தானே ஆசை பட்டார்கள்.. நண்பரகள் வீடு போல் நம் வீடில்லை.. அன்பு இல்லை.. பாசம் இல்லை.. என்று கூறி கொஞ்சம் காலமாக விலக ஆரம்பித்துவிட்டான்.. இப்பொழுது இவள் என்ன செய்தாள்..? அன்பால் நிரப்பி விட்டாளா..?" , என்று மதுசூதனன் நித்யாவை ஆராய்ச்சி கண்களோடு பார்த்தவாறே சிந்திக்க தொடங்கினான்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
மதுசூதனனின் சிந்தனையை கலைக்கும் விதமாக, புஷ்பா, "நித்யா.. நான் அன்னைக்கே சொல்லணுமுன்னு நினைத்தேன்.. என் சொந்தம் தான்.. பெரிய இடம்.. மதுசூதனனுக்கு தம்பி முறை… அமெரிக்கால படிச்சிட்டு இங்க பிசினெஸ் செய்றான்..", என்று அவர் கூற, "இதை ஏன் என்கிட்டே சொல்றாங்க", என்று சிந்தித்த படியே அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.

"அவங்க உன் தங்கை காயத்ரியை கேட்டாங்க.. அம்மா, அப்பா கிட்ட கேட்டு சொல்றியா..?", என்று அவர் வினவ, "வேண்டாம் அத்தை... அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு சொல்லிருங்க..." , என்று நித்யா தெளிவாக கூறினாள்.

"நீ அம்மா, அப்பா கிட்ட கேட்டு சொல்லு... இல்லை நான் பேசட்டுமா…?", என்று புஷ்பா கூற, "இப்ப வேண்டாம் அத்தை.. இப்ப பேசினா அவள் படிப்பு பாதிக்க படும்..", என்று முழுதாக நித்யா மறுத்து விட, புஷ்பா மேலும் பேச தொடங்கினார்.

"புஷ்பா.. மருமக வேண்டாமுன்னு சொன்னா எதாவது காரணம் இருக்கும்.. எதுக்கு கட்டாய படுத்தனும்….? இந்த பேச்சை விடு..", என்று கோவிந்தன் கூற, இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு காற்று வாங்க தோட்டத்திற்கு சென்றனர்.

முகிலன் நித்யாவின் முகத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அம்மா இவ்வளவு சொல்றதுக்காகவாது, நீ கேட்டு சொல்லிருக்கலாம்...", என்று மதுசூதனன் சிடுசிடுவென்று கூற, "சொன்னால், இந்த கல்யாணம் நடந்திருமோன்னு ஒரு பயம்....", என்று கடுப்பாக கூறினாள் நித்யா.

"ஏன் அண்ணி.. நடந்தால் நல்லது தானே..?", என்று புரியாமல் கேட்டான் முகிலன்.

சிரித்து கொண்டாள் நித்யா.

"என்கிட்டே பதில் சொல்ல மாட்டிங்களா அண்ணி..?", என்று தன்மையாக கேட்டான் முகிலன்.

புன்னகையோடு பேச ஆரம்பித்தாள் நித்யா, "ஒவ்வொரு அம்மா, அப்பாவும் பெண்ணை நல்ல இடத்துல பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணுமுன்னு ஆசை படுறது இயல்பு. ஆனால் ஒரு பெண்ணோட ஆழ் மனதோடு ஆசை என்ன தெரியுமா..? அந்த பொண்ணு கல்யாணம் ஆன பிறகு அவங்க அம்மா, அப்பா தனிமையாகிற கூடாதுங்கிறது தான். ஒரு ஆணோடு அம்மா, அப்பாவை பற்றி யோசிக்கிற இந்த சமுதாயம், பெண்ணோட அம்மா அப்பாவை பற்றி யோசிப்பதில்லை. ஒரு வேளை, எங்க அம்மா அப்பா எனக்கு எங்க குடும்ப தகுதிக்கு ஏற்றார் போல ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தா, அவங்க சகஜமாக என்னை பார்க்க இங்க வந்திருப்பாங்களோ என்னவோ...!! நானும் எல்லா பொண்ணுங்களை மாதிரி பொண்ணு, மாப்பிள்ளைன்னு போய் வந்திருக்க முடிந்திருக்கும்...!! எனக்கு அந்த குடுப்பின்னை இல்லை.. என் தங்கை வாழ்க்கையிலும் அந்த தப்பு நடந்துவிட கூடாது..", என்று கண் சிமிட்டி கூறினாள் நித்யா.

"அண்ணி, எங்க அண்ணனை கல்யாணம் செய்ததுக்கு வருத்தப்படுறீங்களா..?" , என்று முகிலன் தன்மையாக கேட்க, பக்கென்று சிரித்துவிட்டாள் நித்யா.

"ஏன் அண்ணி சிரிக்கிறீங்க...", என்று முகிலன் பரிதாபமாக கேட்க, "என்னை கல்யாணம் பண்ணதுக்கு உங்க அண்ணன் தான் வருத்தப்பட்டுட்டு இருக்காங்க..", என்று நித்யா சிரித்துக் கொண்டே கூறினாள்.

தண்ணீர் அருந்தியபடியே, "நீங்க தான் Black & white sentiment, படம் ஓட்டறீங்கனா.., அதுல ஏன் என்னை இழுக்கிறீங்க..?", என்று கடுப்பாக கேட்டான் மதுசூதனன்.

"ப்ரொ.. தப்பு.. உன் மேல இருந்தா.., உன்னை தான் இழுப்பாங்க...", என்று முகிலன் மதுசூதனனை பார்த்தபடி கூற, "அப்படி எல்லாம் இல்லை.. உங்க அண்ணன் கிட்ட என்ன தப்பு இருக்கு..? அவங்கவங்களுக்கு அவங்களோட நியாயம்.. அவங்களுக்குன்னு ஆசை... அதை தப்பு சொல்ல முடியாதே..", என்று தன்மையாக நித்யா கூறினாள்.

சில வேலைகளை முடித்து விட்டு, நித்யா தங்கள் அறைக்கு சென்று கண்ணுறங்கிவிட்டாள். "எத்தனை வேலை.. எத்தகைய கவலை இருந்தாலும் நிம்மதியாக தூங்கிவிடுவாள்.. .!!", என்றெண்ணி தன் தலையை அசைத்துக் கொண்டான் மதுசூதனன்.

ஆனால் மதுசூதனனிற்கு தூக்கம் வரவில்லை. "இவள் பலவீனம் இவள் குடும்பம்.", என்று மதுசூதனனிற்கு தோன்றியது. "தைரியமானவள், அழுத்தக்காரி, ஆனால் இன்று முகிலனிடம் பேசும் பொழுது கண் கலங்கினாளோ.?", என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

அது மதுசூதனனுக்கு அவ்வளவு உவப்பான விஷயமாக இல்லை.

"நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரனா..?", என்ற எண்ணம் மதுசூதனனிற்கு கேள்வியாய் எழுந்தது.

“அவளை எழுப்பி கேட்டுவிடாலாம்?”, என்ற எண்ணம் தோன்ற, என்று நித்யாவின் அருகே சென்றான் மதுசூதனன்.

கள்ளம், கபடமில்லாத சிறு புன்னகையோடு தூக்கத்திலும் அழுத்தமான அவள் முகம் மதுசூதனின் கம்பீரத்தோடு போட்டி போட்டது. அவளை எழுப்ப மனமின்றி அவளை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான் மதுசூதனன்.
கட்டங்கள் நீளும்....
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top