• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal-22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வெண்பா வர வர எங்களை ரொம்ப இம்பரஸ் பன்ற நீ கண்டிப்பா முரளி பேமிலி உன்னை ஏற்று கொள்ளும் தொலைவில் இல்லை அருமை அருமையான பதிவு அகிலா சிஸ்டர் (y)(y)(y)(y)
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
அழுத்தக்கார புத்திசாலி.....அவளுக்கு
முட்டாள் அண்ணா.....தம்பிக்கு
மதுசூதனா.....நீ யார்....?
 




6RAMASAMY

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
280
Reaction score
98
Location
CHENNAI
அதில் வேலைப்பாடு நிறைந்த கத்தி இருந்தது. அந்த கத்தி நித்யாவை சற்று அச்சுறுத்தியது. அந்த கத்தியை சற்று பயத்தோடு கையில் எடுத்து பார்த்தாள் நித்யா. அந்த கத்தியில் உள்ள வேலைப்பாடு அவளை ஈர்த்தது.

அந்த கத்தியின் கீழ் எழுதப்பட்ட வாசகத்தை அப்பொழுதான் கவனித்தாள் நித்யா.

"உன் வாழ்க்கை பாசமில்லா பணம் என்னும் நூல் மேல் கட்டப்பட்டுள்ளது. கத்தியால் விரைவில் அறுக்கப்படும்..."

இந்த வாசகத்தை பார்த்தவுடன் முகம் சுழித்து சளித்துக் கொண்டாள் நித்யா.

"இது தான் எனக்கே தெரிந்த விஷயம் ஆகிற்றே.. இதுக்கு இந்த கத்தி அனுப்பி பில்ட் அப் பண்ணனுமா..", என்று தனக்கு தானே நொந்து கொண்டாள் நித்யா.

" ஆனால் இதை யார் செய்திருப்பார்கள். மதுசூதனன் என்னை மறைமுகமாக மிரட்டுகிறானோ..?", என்ற எண்ணம் தோன்ற , தன் கண்களை கசக்கி சோர்வாக சோபாவில் கண் மூடி அமர்ந்தாள் நித்யா.



கிட்சேன் வேலைகள் நினைவு வர, அந்த கத்தியை, ஸ்மைலி அருகே மறைத்து வைத்துவிட்டு., முகம் கழுவிக்கொண்டு உடை மாற்றி கிச்சேனை நோக்கி ஓடினாள் நித்யா. அவள் கண்முன் அந்த அழகிய கத்தி பூதாகரமாக காட்சி அளித்தது.

வேகமாக உள்ளே சென்ற நித்யாவை கோவிந்தனும், புஷ்பாவும் வினோதமாக பார்த்தனர்.

தன் வேலைகளை முடித்து விட்டு ஹாலுக்கு வந்த நித்யா அங்கு கண்ட காட்சியில் ஸதம்பித்து நின்று விட்டாள்.

"என்னம்மா அப்படியே நின்னுட்ட..? நீ ஆஃபீஸ்ல் இருந்து வந்த உடனேயே பார்த்து ஆச்சரியப்படுவேன்னு நினைத்தேன்..", என்று புஷ்பா கூற, நித்யாவால் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியவில்லை.

அப்பொழுது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மதுசூதனன், " எப்படி இருக்கு?", என்று இன்முகமாக வினவ, "ரொம்ப பிரமாதம்...", என்று புஷ்பா கூறினார்.

"எல்லாம் நித்யா ஐடியா தான்..", என்று மதுசூதனன் அவளை பார்த்து கண்ணடித்து கூற, "என் மருமக எது செய்தாலும் அது பிரமாதமாக இருக்கும்...", என்று கோவிந்தன் மெச்சுதலாக கூறினார்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் நித்யா முழிக்க, "நித்யா ரூமுக்கு வா...", என்று அழைத்த படியே அறைக்குள் நுழைந்தான் மதுசூதனன். " இவன் என்ன நினைத்து கொண்டிருக்கிறான்.." , என்று மனதிற்குள் சிடுசிடுத்த படியே அவனை பின் தொடர்ந்தாள் நித்யா.

நித்யா அறைக்குள் நுழைந்தவுடன் அவளை பார்த்து மதுசூதனன் புன்னகைக்க, "இது என்ன புன்னகை..?", என்று மதுசூதனனை நித்யா ஆச்சரியமாக பார்த்தாள்.

அவன் லைட் ஆப் செய்ய, ஒரு நிமிடம் நித்யா சிறிதாக பதட்டம் அடைந்தாள். அதன் பின் அவர்கள் அறையில் தெரிந்த காட்சி அவளை மெய் சிலிர்க்க வைத்தது.

அவர்கள் அறைக்குள் கருநீல வானம். அங்கு பிறை வடிவில் நிலா.., கணக்கில்லாமல் நட்சத்திரம்.. செயற்கை என்று சொல்ல முடியாதபடி இயற்கை போல் காட்சியளிக்க நித்யா கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவர்கள் அறையின் ஓரத்தில், சில செடி.. , அதில் சின்ன நீர்வீழ்ச்சி.. அந்த நிலவின் ஒளியில் மெல்லிய நீரோட்டமாய் காட்சி அளிக்க .., நீர் விழும் சத்தம் அவளை எங்கோ அழைத்து சென்றது. அந்த அழகை என்னவென்று நித்யாவால் வர்ணிக்கமுடியவில்லை.

View attachment 3633

மதுசூதனன் லைட் ஆன் செய்ய, அவளை நினைவுலகத்திற்கு கொண்டு வந்தது அந்த செயல். "நிறைய செலவழித்திருப்பான் போல தெரிகிறதே..", என்று எண்ணினாள் நித்யா.

" தோட்டத்தை பார்க்கவில்லையா..?" , என்று மதுசூதனன் வினவ, "இன்று நான் இருந்த குழப்பத்தில் எதையும் கவனிக்கவில்லையே..", என்று மனதிற்குள் எண்ணியபடி , "இல்லை", என்று தலை அசைத்தாள் நித்யா.

அவன் பால்கனிக்கு செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்ற நித்யா, பூத்து குலுங்கிய தோட்டத்தை பார்த்து அதிசயித்து போனாள். "இன்னும் ரெண்டு நாள்ல நீ கேட்ட மாதிரி.., முழுசா மாறிடும் இந்த தோட்டம்..", என்று கூறினான் மதுசூதனன்.

அதிர்ச்சியில் வார்த்தை வராமல், அவனை நித்யா பார்த்துக் கொண்டிருக்க, "எப்படி இருக்கு..?", என்று அவளருகே வந்து மெதுவாக மென்மையாக கேட்டான் மதுசூதனன்.

அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று, நித்யாவை அமைதி காக்க வைத்தது. "பணத்தால் வாங்க முடியாதது எதுவும் இல்லை நித்யா..", என்று அவள் காதில் கிசுகிசுத்தான் மதுசூதனன்.

புன்னகைத்தாள் நித்யா.

"எவ்வளவு அழகாக இருந்தாலும்... இது செயற்கை தானே..!!", என்று நித்யா நக்கலாக கூற, "இயற்கை பொருள் எல்லாருக்கும் சொந்தம் பேபி.. மற்றவர்கள் பொருள் மேல் ஆசை படுவது தப்பு..", என்று ஆள் காட்டி விரலை அங்கும் இங்கும் அசைத்து நித்யாவை எச்சரித்தான் மதுசூதனன்.

அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் நித்யா.

" இந்த உலகத்தில் அனைத்திற்கும் விலை உண்டு... பணத்தால் மட்டுமே இந்த உலகத்தை ஆள முடியும்.. இதை நீயும் ஒரு நாள் ஒத்து கொள்வாய்..", என்று மதுசூதனன் கூற, நித்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் நித்யாவின் மனதை பாதித்திருந்தது.

நிரப்பப்படாத கட்டங்கள் அவள் முன் தோன்றி அவளை பார்த்து கேலியாக சிரித்தது போன்ற பிரமை.

"நான் இவன் பணத்தை பார்த்து மயங்கிவிட்டேனா...?", என்று நித்யாவின் மனம் சிந்திக்க, "அட முட்டாள் பெண்ணே.. இன்று மதுசூதனன் மாய உலகை உருவாக்கி தான் நினைத்தை முடித்த மிதப்பில் உன்னை குழப்பி விட்டு செல்கிறான்.. நாளை நீ வைக்க போகும் check mate இல், சப்த நாடியும் ஒடுங்கி அமைதியாக இருப்பான்..", என்று நித்யாவின் அறிவு அவளுக்கு தைரியம் கொடுத்தது.

தனக்கு தானே புன்னகைத்து கொண்டாள் நித்யா.

" இருந்தாலும் இவன் செய்த மாற்றங்கள் அதிகப்படி தான். படு வேகமான அழுத்தக்கார புத்திசாலி..", என்று முணுமுணுத்தாள் நித்யா.

இன்முகத்தோடு படி இறங்கிய மதுசூதனனை படி ஏறிக் கொண்டிருந்த முகிலன் வழி மறித்தான்.

"என்ன ப்ரோ.. வீடு அழகா மாறி இருக்கு...", என்று முகிலன் கேலியாக வினவ, "உங்க அண்ணி என்னால் முடியாதுன்னு நினைத்தாள், அது தான் நம்மால் முடியாது எதுவும் இல்லைன்னு காட்டிட்டோமில்லை.. நம்ம செல்வாக்கு அப்படி..", என்று மதுசூதனன் பெருமையாக கூற, "அட முட்டாள் அண்ணா.... இது உன் செல்வாக்கில்லை… அண்ணி உன் மனதில் கொண்ட செல்வாக்கு.. இது உனக்கு என்னைக்கு புரியுமோ..?", என்று சிந்தித்த படி மதுசூதனனை ஒரு மார்க்கமாக பார்த்தான் முகிலன்.

இவை எதுவும் புரியாமல் தன் போக்கில் படி இறங்கினான் மதுசூதனன்.

இவர்களை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நித்யா, அவன் வீடு முழுவதும் செய்திருந்த மாற்றங்களை பார்த்தாள். ஆங்காங்கே செடி.. சின்ன மரங்கள்.. நீர்வீழ்ச்சி என வீடு இயற்கையோடு இணைந்து அழகாக காட்சி அளித்தது.

" இவன் நினைத்தை முடிப்பவன்... இவனை நான் எப்படி சமாளிக்க போகிறேன்?", என்று சிந்தனையில் மூழிகினாள் நித்யா.

கட்டங்கள் நீளும்....
Nice
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top