• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal -23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
கட்டங்கள் – 23

அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு, அவர்களது அறைக்கு செல்ல, நித்யா தன் வேலைகளை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.

மதுசூதனன் அவர்கள் அறையில் சோபாவில் சாய்ந் து தன் வேலைகளை பார்த்தபடி லேப்டாப்பில் மூழ்கிருந்தான். நித்யா பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தபடி தோட்டத்தை ரசித்து கொண்டிருந்தாள்.

"நித்யா ஐந்து நிமிடம்.., என் வேலை முடிந்திரும்..", என்று மதுசூதனன் வேலை பார்த்தபடியே குரல் கொடுக்க, "எதுவும் அவசரம் இல்லை..", என்று வானத்தை பார்த்தபடி பதில் கூறிவிட்டு, காலை தரையில் ஊன்றி ஊஞ்சலை முன்னும் பின்னும் ஆடச் செய்தாள்.

சிறிது நேரம் கழித்து, மதுசூதனன் லைட் ஆப் செய்துவிட்டு படுக்க, நித்யா தூக்கம் வராமல் மெத்தையில் அங்கும் இங்கும் புரள, தன் ஓரக்கண்களால் மதுசூதனன் அவளை நோட்டமிட்டான்.

"பிடிக்காத புருஷன்.., புது இடமாக இருந்தாலும்.., நிம்மதியா தூங்குவாளே.. ", என்று சிந்தித்தபடி அவளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் மதுசூதனன்.

தூக்கம் வராமல் மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்தாள் நித்யா.

"தூக்கம் வரலியா பேபி..?", என்று மதுசூதனன் நக்கலாக வினவ, "என்னை நீங்க ஏன் பேபின்னு அடிக்கடி கூப்பிடறீங்க...?", என்று முகத்தை சுருக்கி கொண்டு நித்யா கேட்டாள்.

"அதனால் தான் தூக்கம் வரலியா..?", என்று தனக்குள் தோன்றிய புன்னகையை மறைத்து சுவரை பார்த்தபடி கேட்டான் மதுசூதனன்.

அவனை முறைத்து பார்த்தாள் நித்யா.

"சரி கோபப்படாத.., நான் எதுவும் கேட்கல..", என்று மதுசூதனன் சமாதான கோடியை பறக்க விட, "இது இவன் குணமே கிடையாதே...", என்று அவனை ஆழமாக பார்த்தாள் நித்யா.

"நீங்க எதுவுமே கேட்காம இருந்தாலும் நான் சொல்லுவேன்... ", என்று நித்யா அவனை பார்த்தபடியே கூறினாள்.

"அது தானே பார்த்தேன்... இவளாவது அமைதியா இருக்கிறதாவது..", என்று நினைத்தபடி அமைதியாக படுத்திருந்தான் மதுசூதனன்.

"என் தூக்கம் கெட்டதுக்கு நீங்க தான் காரணம்..", என்று அவனை முறைத்தபடி கூறினாள் நித்யா.

அதிர்ச்சி அடைந்தவனாக எழுந்து அமர்ந்தான் மதுசூதனன்.

"நீ ஆயிரம் பேர் தூக்கத்தை கெடுப்ப, நான் உன் தூக்கத்தை கெடுத்தேனா..?" , என்று அவளிடம் சண்டைக்கு சென்றான் மதுசூதனன்.

"எனக்கு யார் தூக்கத்தைக் கெடுத்தும் பழக்கம் கிடையாது..", என்று எங்கோ பார்த்தபடி நித்யா கூற, "சரி அதை விடு.., நான் என்ன செய்தேன்.. அதை சொல்லு...", என்று சுவாரசியமாக கேட்டான் மதுசூதனன்.

"தூங்கிற இடத்துக்கு இவ்வளவு அழகு தேவையா..? எனக்கு தூக்கம் வரலை.. இதை பார்த்துகிட்டே இருக்கணுமுன்னு தோணுது...", என்று குற்றம் சாட்டும் குரலில் நித்யா கூற.., "இது தான் விஷயமா..? நான் கூட வேற எதுவோ நினைத்தேன்...", என்று சலிப்பாக கூறிவிட்டு மீண்டும் படுத்தான் மதுசூதனன்.

அவள் பக்கமாக திரும்பி படுத்த மதுசூதனன், அவளை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

நித்யா தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

"நித்யா" , என்று மெதுவாக அழைத்தான்.

பதில் ஏதும் பேசாமல், அவனை திரும்பி பார்த்தாள் நித்யா.

"அவசியம் இந்த டீல் வேணுமா..?" , என்று ஆழமாக கேட்டான் மதுசூதனன்.

நித்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"இது தான் உனக்கு கடைசி சந்தர்ப்பம்.. நீ டீல் கேன்சல் பண்ணலாமுன்னு சொல்லு.. நான் உன் ப்ரொஜெக்ட்க்கு இடைஞ்சலா இருக்கமாட்டேன்... ", என்று மதுசூதனன் இன்முகமாக கூற, "கடைசி சந்தர்ப்பமா...? நாளைல இருந்து நீங்க எனக்காக எல்லாமே பண்ணுவீங்க.. நான் பண்ண வைப்பேன்.. உங்களுக்கு எப்படி Society Status முக்கியமோ..? அதே மாதிரி எனக்கு என் சுயமரியாதை முக்கியம்...", என்று கூறிவிட்டு எதிர் பக்கம் திரும்பி படுத்து கொண்டாள் நித்யா.

நித்யா தன் கண்களை மூடிக்கொண்டு வராத தூக்கத்தை வா..! வா..! என்றழைக்க, அவள் கண்முன்னே அந்த வேலைப்பாடு நிறைந்த கத்தி தோன்றியது.

கண்களை இறுக மூடிக்கொண்டு, "இது யாருடைய வேலையாக இருக்கும்..?", என்று சிந்தித்தபடியே கண் அயர்ந்துவிட்டாள் நித்யா.

"சுயமரியாதை.. இந்த சுயமரியாதை இருந்திருந்தா என்னை கல்யாணம் செய்திருக்கவே கூடாது.. இந்த வாழ்க்கையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது... ", என்று எண்ணியபடி மதுசூதனன் கண்ணுறங்கினான்.

வெள்ளை சட்டை அணிந்துகொண்டு அலுவலகத்திற்கு தயாரான நிலையில், படியிறங்கினான் மதுசூதனன். அவனை பார்த்த நித்யா, "இது என்ன எப்பொழுதுமே வெள்ளை சட்டை சீருடை போல.. ", என்று எண்ணினாள் நித்யா. "அதை பற்றி நமக்கென்ன...", என்ற எண்ணம் தோன்ற தோளைக் குலுக்கி கொண்டு தன் வேலையை தொடங்கினாள்.

சாப்பிடுவதற்காக மதுசூதனன் நாற்காலியில் அமர, அவனை பார்த்தது கண் சிமிட்டி சிரித்தாள் நித்யா.

"ஏதோ சரியில்லையே..!!", என்று மதுசூதனன் சிந்திக்க, " என்னவாக இருக்கும்..?", என்று நித்யாவை கூர்மையாக பார்த்த படி சிந்தித்தான் மதுசூதனன்.

நித்யா அனைவருக்கும் சப்பாத்தி , பச்சைப்பயிறு தால்.., வெள்ளரிக்காய் ரெய்தா.., செய்த்திருந்தாள். கோவிந்தன், புஷ்பா இருவரும் தினமும் இவள் சமையலை பாராட்ட தவறியதே இல்லை..

"அண்ணி.. இந்த வீக்கெண்ட் நீங்க எனக்கு சமையல் சொல்லி கொடுக்கறீங்க..", என்று முகிலன் சப்பாத்தியை கையில் எடுத்த படி கூற, "சொல்லி குடுத்திட்டா போச்சு..", என்று நித்யா இன்முகமாக கூறினாள்.

"உனக்கு எதுக்கு டா.. இந்த தேவை இல்லாத வேலை...", என்று மதுசூதனன் வினவ, "எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் யூஸ் ஆகும்..", என்று மதுசூதனன் சிரித்த முகமாக கூறினான்.

கோவிந்தன் பெருங்குரல் எடுத்து சிரிக்க, "மாமா.. இன்னக்கி நைட் டின்னர் பேச்சியம்மா தான் பண்ணுவாங்க..", என்று நித்யா மதுசூதனனை பார்த்தபடி கூற, நித்யாவை அதிர்ந்து பார்த்தார் கோவிந்தன்.

"என்ன மாமா அப்படி பாக்கறீங்க.. இன்னக்கி ஒரு நாள் இல்லை.. இந்த கிளைன்ட் விசிட் முடியற வரைக்கும் அப்படி தான்...", என்று சோகமாக கூறினாள் நித்யா.

"கிராதகி... ஏதோ திட்டம் போட்டுட்டா..." , என்று நினைத்தான் மதுசூதனன்.

"ஏம்மா.. இப்பொழுது தான் சந்தோஷமா சிரிக்கிறேன்.. அதுக்குள்ள இப்படி குண்டை தூக்கி போடறியே...", என்று கோவிந்தன் பரிதாபமாக கூற, "ஆஃபீசிலே நிறைய வேலையா..?", என்று புஷ்பா அக்கறையாக வினவினார்.

" வேலை எல்லாம் பெருசா இல்லை.. ஆனால் ட்ரைனிங் ரூம் availability இல்லை. எங்க ப்ரொஜெக்ட்க்கு தேவையான software இருக்கிற ரூம் சாயங்காலம் 7 டு 9 தான் இருக்கு..", என்று நித்யா சோகமாக கூறினாள்.



"ஏற்கனவே நித்யாவிற்கு வீட்டில் வேலை அதிகம்.. இதுல ஆஃபீசிலே அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை பார்த்து பண்ண மாட்டிங்களா..?", என்று கோவிந்தன் மதுசூதனன், முகிலன் இருவரையும் பார்த்து வினவ, "ஐயோ.. அப்பா... எனக்கு இந்த விஷயமே தெரியாது... ", என்று முகிலன் தட்டில் கவனமாக நழுவிக்கொண்டான்.

நித்யா தன் வேலை முடிந்துவிட்டது போல், சப்பாத்தியை ரசித்து ருசித்து உண்டாள். "சின்ன புள்ளைங்களோட சேர்ந்தா இப்படி தான்!!! தன்னால் முடியலைன்னா அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்திர வேண்டியது..", என்று தனக்குள் புலம்பினான் மதுசூதனன்.

"என்ன அமைதியா இருக்க மது..? அவளுக்கு என்ன வசதி வேணுமோ எல்லாம் செய்து தர வேண்டியது உன் பொறுப்பு...", என்று கோவிந்தன் கூற, வேறு வழின்றி நித்யாவை முறைத்த படியே அமைதியாக தலை அசைத்தான் மதுசூதனன்.

"எதாவது பிரச்சனைனா என்கிட்டே சொல்லு..", என்று நித்யாவை பார்த்து கூறிவிட்டு தன் உணவில் கவனத்தை செலுத்தினார் கோவிந்தன்.

"ஆனால் ஒரு கண்டிஷன்..", என்று கோவிந்தன் கூற, அனைவரும் அவரை பார்த்தனர். "நித்யா, இனிமேல் பேச்சியம்மாள் சமையல்ன்னு சொல்லி என்னை பயம்புடுத்த கூடாது.. அவள் ஓட்ஸ் கொடுத்தே என்னை கொன்றுவிடுவாள் ", என்று அவர் தீவிரமாக கூற, மதுசூதனனை தவிர அனைவரும் சிரித்த படி உண்ண ஆரம்பித்தனர். "இது மிடில் கிளாஸ் mentality, செலவில்லாமால் எதையும் சிம்பிளா முடிச்சிருவோம்...", என்று மதுசூதனனின் காதில் கிசுகிசுத்தாள் நித்யா. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக உண்ண ஆரம்பித்தான் மதுசூதனன்

முகிலன் அலுவலகத்திற்கு கிளம்ப, மதுசூதனனும் நித்யாவும் ஒன்றாக கிளம்பினர்..
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
"இவளுக்கு தேவையானதை நான் செய்ய வேண்டுமா..?" , என்ற நினைப்போடு, எதுவும் பேசாமல் மதுசூதனன் காரை செலுத்தினான். தன் புன்னகையை மறைத்த படியே, மதுசூதனன் பக்கமாக திரும்பி அமர்ந்து, "நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லட்டுமா..?", என்று நித்யா வினவ, "வேண்டாமுன்னு சொன்னா அமைதியா இருப்பியா..?", என்று மதுசூதனன் கடுப்பாக கேட்டான்.

"இல்லை..", என்று நித்யா மறுப்பாக தலை அசைத்தாள். "அப்புறம் என்ன கேள்வி.. எல்லாம் உன் இஷ்டப்படி தான் நடக்கப் போகுது.. சொல்லு...", என்று சிடுசிடுத்தான் மதுசூதனன்.

"ரொம்பா கோபப்படாதீங்க பி.பி. வந்திரும்.. ", என்று இன்முகமாக நித்யா கூற, "இதை தான் சொல்லணுமுன்னு சொன்னியா..?", என்று மதுசூதனன் காரை ஓட்டியபடியே கேட்டான்.

"இல்லை.. இந்த கிரிக்கெட்ல எனக்கு 1 ரன் , 2 ரன், 4 எல்லாம் பிடிக்காது.. நேராக 6 தான் பிடிக்கும்..", என்று புருவம் உயர்த்தி கண் விரித்து நித்யா கூற, "பார்த்து ஜாக்கிரதையா விளையாடனும்.. கேட்ச் குடுத்துட்டு மைதானத்தை வெளிய போற மாதிரி ஆகிரும்...", என்று மதுசூதனன் நக்கலாக கூறினான்.

சிரித்துக் கொண்டாள் நித்யா.

"அப்பா சொன்னா நான் செய்வேன்னு, என்ன நம்பிக்கை..?", என்று ஸ்டெயரிங்கை திருப்பிய படியே மதுசூதனன் வினவ, "அம்மா அப்பா சொன்னாங்கன்னு கல்யாணமே பண்ணிருக்கீங்க..? இதை பண்ண மாட்டிங்களா..? நீங்க ரொம்ப நல்லவர்ன்னு எனக்கு தெரியுமே..", என்று கண்சிமிட்டி நித்யா கூற, தனக்குள் தோன்றிய புன்னகையை மறைத்து தன் முகத்தை சிடுசிடுப்பாக வைத்துக்கொண்டு காரை ஓட்டினான் மதுசூதனன்.

" இப்படி சிரிச்சிகிட்டே இரு… உன் டீல் படு தோல்வியில் முடியப்போகுது..", என்று மதுசூதனின் அறிவு எச்சரிக்க , மதுசூதனனின் மனமோ..., “"என்னை வைத்தே அவள் வேலையை முடித்துக் கொண்டாள்..”, என்று எண்ணி நித்யாவின் சாமர்த்தியசாலித்தனத்தை பார்த்து வியந்து கொண்டிருந்தது.

நாட்கள் வேகமாக செல்ல, நித்யா தன் ப்ரொஜெக்ட்டில் வெற்றி நடை போட்டு சென்று கொண்டிருந்தாள்.

கனவிலும், நேரிலும் தக்காளி பச்சை மிளாகாய் என பல காய்கறிகள் அவளிடம் சண்டையிட்டாலும், வெண்பா போராடி வெற்றி பெற்று சமையல் வேலையை தவிர, மற்ற வேலைகளை கற்றுக் கொண்டாள்.

அசோக்கிற்கு வேலை சற்று பழகிருந்தது.

முகிலனின் நாட்கள் அவன் நினைத்தபடி இனிதாக நகர்ந்தது.

மதுசூதனன் மற்ற வேலையில் கவனம் செலுத்த கிளைண்ட் டெமோவிற்கு முதல் நாளும் வந்து சேர்ந்தது.

"நித்யா நீ மட்டும் ஸ்டே பண்ணு.. நான் ஒரு தடவை உங்க project review பண்ணிடறேன்...", என்று மதுசூதனன் தீவிரமாக கூற, நித்யா சம்மதமாக தலை அசைத்தாள்.

மதுசூதனன் நித்யா இருவர் முகத்திலும் ஒரு பதட்டம் இருந்தது.

முகிலன் அவர்களை நோக்கி வர, "முகிலன்.. எல்லா வேலையும் முடிஞ்சிருச்சா..?" , என்று நாற்காலியில் சாய்ந்தபடி மதுசூதனன் வினவ, "ஆம்..", என்று தலை அசைத்தான் முகிலன்.

கிளைண்ட்ஸ் மீட்டிங் ஏற்பாடு செய்த அறையில், இவர்கள் அனைத்தையும் டெமோ பார்க்க, அனைத்து application அதன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தது.

நித்யா அவள் project யை click செய்ய அது Launch Error என்று வந்தது.



"ட்ரைனிங் ரூம்ல சரியாக வந்ததே..", என்று நித்யா முணுமுணுக்க, " இங்கு verify பண்ணலியா..?" , என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் மதுசூதனன்.

"காலைலயே பார்த்துட்டோம்... இங்கையும் ஒர்க் ஆச்சு...", என்று நித்யா கம்மலான குரலில் கூற, "ஒ...", என்று முகிலன் வருத்தமாக கூறினான்.

"என்னாச்சு முகில்..?", என்று நித்யா தயக்கமாக வினவ, "மத்தியானம் சிஸ்டம் upgrade பண்ணாங்க.. அதுல எதாவது நடத்திருக்கும்.. அதுக்கு அப்புறம் மற்ற எல்லா ப்ரொஜெக்ட்டும் check பண்ணிட்டோம்.. உங்க ப்ரொஜெக்ட்டை மிஸ் பண்ணிட்டாங்க போல..", என்று யோசனையில் ஆழ்ந்தவனாக கூறினான் முகிலன்.

"மற்ற எல்லாம் சரியா இருக்குதா?", என்று மதுசூதனன் வினவ,

" Everything is working fine ", என்று முகிலன் கூறினான்.

" Admin Team கிட்ட மட்டும் தான் access இருக்கும்.. நான் அவங்க கிட்ட பேசி ரெடி பண்றேன்.. நீங்க கிளம்புங்க அண்ணி..", என்று முகிலன் கூற, நித்யா மறுப்பாக தலை அசைத்து .., "நான் வேலையை முடித்துவிட்டு கிளம்பறேன்..", என்று கூறி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

முகிலன் Admin team உடன் பேசுவதற்காக, வெளியே செல்ல, சோகம் சூழ்ந்த நித்யாவின் முகத்தை பார்த்தான் மதுசூதனன்.

"டிவோர்ஸ் கிடைக்காதுன்னு அவ்வளவு வருத்தமா இருக்குதா..?", என்று மதுசூதனன் தாழ்ந்த குரலில் வினவ, "ம்..ச்.. ", என்று மறுப்பாக தலை அசைத்தாள். பின் அவளை நோக்கி கேள்வியாக மதுசூதனன் கண்ணுயர்த்தி வினவ, "என் டீம் எல்லாரும் சின்ன பசங்க.., இது first project.. Demo இல்லைனா ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க.. ", என்று மிக வருத்தத்தோடு கூறினாள் நித்யா.

"அதுக்கு தான் இந்த மாதிரி அழுகுணி ஆட்டம் ஆட கூடாது...", என்று மதுசூதனன் தீவிரமாக கூற, அவனை அப்பாவியாக பார்த்தாள் நித்யா.

"என்ன அப்படி பார்க்கிற..? என்னை மாதிரி அப்பாவியை ஏமாத்தினா இப்படி தான் ஆகும் ", என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கண்களில் புன்னகையோடு கூறினான் மதுசூதனன்.

"பக்கத்துல ஒருத்தர் ப்ராஜெக்ட் முடிய கூடாதுன்னு நினைச்சிகிட்டே இருந்தா என் ப்ராஜெக்ட் எப்படி உருப்படும்..?" , என்று அவனிடம் சண்டைக்கு போனாள் நித்யா.

"கூல் பேபி.. கூல் பேபி... எல்லாம் சரி ஆகிரும்.. நம்ம Admin Team தானே.. நானே பேசி சரி பண்ண சொல்லிறேன்.. நீ சண்டைக்கு வராத...", என்று அவளிடம் மெதுவாக கூறினான்.

தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தலை அசைத்தாள் நித்யா.

"சிரித்த முகமாக இருந்தால் தான், வேலை நடக்கும்...", என்று மதுசூதனன் இவளை பார்த்த படி கூற, "எல்லாம் என் நேரம் ", என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் நித்யா.

"உண்மையில் உங்களை நம்பலாமா..?", என்று தன் தலை உயர்த்தி, மதுசூதனனை பார்த்து சந்தேகமாக நித்யா கேட்க,. "ஒரு மாசமா நல்லவன்னு சொல்லிட்டு.. இப்படி திடீருன்னு கேட்டா என்ன அர்த்தம்..?", என்று நாற்காலியில் சாய்ந்து கால் மேல் கால் போட்ட படி வினவினான் மதுசூதனன்.

"இவன் கொஞ்ச நாளாக சரி இல்லை..", என்ற எண்ணத்தோடு நித்யா அவனை பார்க்க, "என்ன நித்தி அப்படி பாக்கற..?", என்று மதுசூதனன் கேட்க, தலை அசைத்து நித்யா மௌனம் காத்தாள்.

"நாளைக்கி உன் ப்ராஜெக்ட் successfully முடியும்.. எந்த டென்ஷனும் வேண்டாம்.. ஒரு மிடில் கிளாஸ் நித்யா தோல்வியை பற்றி I am least bothered.., ஆனால் Mrs. Nithya Mathusoothanan எங்கையும் தோல்வியை சந்திக்க கூடாது. எனக்கு அது பிடிக்காது..", என்று மதுசூதனன் அழுத்தமாக கூறினான்.

"இது எப்பொழுதிலிருந்து?", என்ற எண்ணம் நித்யாவிற்கு தோன்றினாலும், "வேலை பார்த்தது நான்.. இவன் இவ்வளவு அழகா டயலாக் பேசுறான்", என்று நித்யா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"வாழ்க்கையும் சேர்த்து தான் சொல்றேன்...", என்று கம்பீரமான புன்னகையோடு மதுசூதனன் கூற, நித்யாவின் ஆச்சர்ய பார்வை அதிர்ச்சி பார்வையாக மாறியது.

சிறிது நேரத்தில், அனைத்து பிரச்சனைகளையும் சரி ஆனது. நித்யாவின் புரோஜெக்ட் மதுசூதனனை வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல, முகிலன், மதுசூதனன் ஆச்சரியத்தோடு அவர்கள் கண்களை விரித்தனர்.

மதுசூதனின் மனம் நித்யாவின் செயலால் ஆனந்தம் அடைய, அவன் அறிவோ " நாளை நீ என்ன செய்ய போகிறாய்..?", என்று வினவியது.

நித்யா என்ன ப்ராஜெக்ட் செய்திருப்பாள்...? மதுசூதனன் டீல் பேசியபடி நடந்து கொள்வானா..?

கட்டங்கள் நீளும்....
 




Last edited:

MeenaTeacher

மண்டலாதிபதி
Joined
May 17, 2018
Messages
354
Reaction score
909
Location
Chennai
Super Super, Nithya well done

என் டீம் எல்லாரும் சின்ன பசங்க.., இது first project.. Demo இல்லைனா ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க.. ",
That shows her beautiful mind ... Thanks Akila mam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top