• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal-26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
Sooppero soopper????????????????
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
சமையல் அறையிலிருந்து நித்யா வெளியே வர, "ஆண்ட்டி புது வேலைக்காரியா..? நான் பார்த்ததில்லையே..", என்று ரூபா அப்பாவியாக வினவ, அவள் கேள்விக்கான அப்பாவித்தனம் அவள் கண்களில் இல்லை என்று நித்யாவிற்கு தோன்றியது.

ரூபாவின் பின் பக்கமாக வந்த முகிலன் அவள் தலையை தட்டி , "அண்ணியை ப் பார்த்தா எப்படி தெரியுது..? அண்ணனுக்கு கோபம் வந்திரும் பார்த்துக்கோ..." , என்று அவளை தோழமையுடன் மிரட்டினான் முகிலன்.

"விடுங்க தம்பி.. ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க..", என்று சமாதானமாக பேசினாள் நித்யா. "இது தான் அண்ணியின் குணம்..", என்ற பெருமை முகிலனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

"உன்னை யார் எப்பொழுதும் சமையலறையில் இருக்க சொன்னது..", என்று குற்றம் சாட்டும் பார்வையில் நித்யாவை முறைத்தான் மதுசூதனன்.

நித்யா ரூபாவை ஆராயும் பார்வையில் பார்க்க, "She is my wonderful daughter-in-law", என்று நித்யாவின் தோள் மேல் கைபோட்டு அறிமுக படுத்தினார் கோவிந்தன்.

நித்யா மென்மையாக சிரிக்க, "நான் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த சொத்தை.. afterall ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு கெடுத்துட்டா... அதுவும் எல்லார் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பாள் போல் தெரிகிறதே...", என்று சிந்தித்த படியே, நித்யாவை பார்த்து சிரித்தாள் ரூபா.

"நான் நாட்டுல இல்லாத நேரமா கல்யாணத்தை வைத்துடீங்க.. நான் தான் இங்கில்லை.., என் நினைப்பெல்லாம் இங்க தான் இருந்தது.", என்று கொஞ்சலாக கூறியபடியே.., "ஹலோ.. நித்யா மதுசூதனன்... I am Roopa", என்று நித்யாவிடம் கை குலுக்கினாள் ரூபா.

நித்யாவின் மூளை வேகமாக வேலை செய்து, அவளுக்கு பொறி தட்ட, மெலிதாக புன்னகைத்து கொண்டாள்.

"டிபன் ரெடி... வாங்க சாப்பிடலாம்...", என்று நித்யா கூற, அனைவரும் டைனிங் டேபிளை நெருங்கினர்.

நித்யாவை பார்த்தபடியே மதுசூதனன் அருகே ரூபா அமர, எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை கவனித்தாள் நித்யா.

"அழுத்தக்காரி போலும்..", என்று எண்ணிக்கொண்டு உணவை பார்க்க, "காலைல கார்ன் பிளக்ஸ் இல்லையா..? மது நீ எப்ப மாறின..?", என்று சிணு ங்களாக கேட்டாள் ரூபா.

"அண்ணி சமையல் ருசியா இருக்கும் பேசாம சாப்பிடு..", என்று முகிலன் உரிமையாக கூற, "இவன் எப்பொழுது இப்படி மாறினான்.. மதுவை கல்யாணம் செய்துகொண்டு இவனை வீட்டை விட்டு விரட்டிவிடணுமுன்னு நான் யோசித்திருந்தேன்.. இந்த மிடில் கிளாஸ் கொஞ்ச நாளில் அனைவரையும் மாற்றி, கெடுத்து வைத்திருக்கிறாள்...", என்று யோசனையாக அமர்ந்திருந்தாள்.

“வீடு., தோட்டம் என அனைத்தும் மாறியிருக்கிறது..", என்று சிந்தித்தாள் ரூபா.

"இதெல்லாம் மிடில் கிளாஸ் food habit..", என்று கடுப்பாக கூறிக்கொண்டே உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ரூபா.

அங்கு வந்த பேச்சியம்மாள் ரூபாவிற்கு பரிமாற, "அறிவில்லை.. நான் இதை கேட்டேனா..? உன்னை யார் இதை வைக்க சொன்னது..?", என்று கோபமாக கத்தினாள் ரூபா..

"ரூபா.. ஏன் கோபப்படுற..?", என்று மதுசூதனன் மிக மெதுவாக கேட்க, "ரூபாவை ஏன் திட்டறீங்க குழந்தை பாவம்.., பயப்பட போகுது..", என்று நித்யா அக்கறையாக கூற, "நான் எப்பொழுது திட்டினேன்..", என்று நித்யாவை குழப்பமாக பார்த்தான் மதுசூதனன்.

"இவள் உண்மையை சொல்லுகிறாளா..? இல்லை நக்கலாக கூறுகிறாளா.?", என்று ரூபா அதீத குழப்பத்தோடு பார்த்தாள்.

"சிறிது நேரம் பேசிவிட்டு, ஓகே.. பை.. இந்தியா வந்த உடனே உங்க எல்லாரையும் பார்க்கணுமுன்னு நினைத்தேன்.. அது தான் காலைலயே வந்துட்டேன்.. கூடிய சீக்கிரத்தில் அம்மா அப்பாவோட வருகிறேன்..", என்று கூறி ரூபா விடை பெற அவளை பின் தொடர்ந்தாள் நித்யா.

அவள் அனைவரின் கண்களில் இருந்து சற்று தொலைவில் சென்றவுடன் "ஹல்லோ..", என்று அவளை சொடக்கிட்டு அழைத்தாள் நித்யா.

ரூபா நித்யாவை திரும்பி பார்த்த நேரத்தில், படாரென்று ரூபாவின் கன்னத்தில் அறைந்தாள் நித்யா. ரூபா சுதாரிக்கும் முன் மறு கன்னத்தில் மீண்டும் பளாரென்று அறைந்தாள் நித்யா. இந்த காட்சியை செடிக்கு பின் மறைவாக நின்று அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் ராமசாமி.

சுற்றும் திரும்பி யாரும் இதை பார்க்கவில்லை, என்று உறுதி செய்து கொண்டு நித்யாவை அடிக்க கை ஓங்கினாள் ரூபா.

ரூபாவின் கையை பின் பக்கமாக திருப்பி, "உன்னால என்னை தொட கூட முடியாது..", என்று ரூபாவை எச்சரித்தாள் நித்யா.

"எதுக்கு அடிச்சேன் தெரியுமா..?", என்று நித்யா அவள் எதிர் பக்கமாக நின்று கேட்க, "தெரியும்.. புத்திசாலித்தனமா நான் தான் உன்னை மிரட்டினேன்னு கண்டுபிடிச்சிட்ட....", என்று ரூபா முணுமுணுக்க, மறுப்பாக தலை அசைத்தாள் நித்யா.

"என்னை பார்த்து தெரிஞ்சிகிட்டே அப்பாவியா வேலைக்காரியான்னு கேட்டதுக்கு.. அடுத்த அடி.., இங்க வேலை செய்றவங்ககிட்ட மரியாதை இல்லாம நடந்து கிட்டத்துக்கு...", என்று அழுத்தமாக கூறினாள் நித்யா.

"உன் மிரட்டலை , நான் பெருசா மதிக்கலை.. ஏன் தெரியுமா..?", என்று ரூபாவின் காரில் சாய்ந்தபடி ஸ்டைலாக நித்யா வினவ, ரூபா அவளை முறைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

"கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வரத்தானே செய்யணும்.. நீயா என்னை தேடி வருவன்னு எனக்கு தெரியும்.. ", என்று நித்யா கண் சிமிட்டி கூற, அவளை கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபா.

"உன் hand bag யை திறந்து பாரேன்..", என்று நித்யா தலை சாய்த்து கூற, ரூபா தன் கைப்பையை திறந்தாள். வாயிலிருந்து ரத்தம் வடிய கொடூரமாக ஒரு பொம்மை..சட்டென்று தலையை வெளியே நீட்டியது.. ரூபா அலறியபடி கைப்பையை தூர எரிய, அதை நித்யா பிடித்தாள்.

" இது நீ என்னை மிரட்டினத்துக்கு.., இதெல்லாம் பிளான் பண்ணி வாங்கறதில்லை.. சும்மாவே கைல வச்சிருப்போம்.. யாரையாவது மிரட்டணுமுன்னா இந்த அளவுக்காவது பயம் புடுத்தனும்.. சின்ன புள்ளதனாமா பண்ண கூடாது.. ஒகே...?" , என்று புருவம் உயர்த்தி நித்யா வினவ, "என்னை பத்தி தெரியாம நீ பேசிட்டு இருக்க, இன்னக்கி உன் நாளாக அமைஞ்சிருச்சி.. ஆனால் என்னைக்கும் இப்படி இருக்காது.. உன்னை இந்த வீட்டை விட்டு வெளிய அனுப்பறேன்...", என்று ரூபா விரலை உயர்த்தி நித்யாவை எச்சரித்தாள்.

நித்யா சவால் விடுவாள் என்று ரூபா எண்ண.., "வாவ்.. சூப்பர்...எப்ப பண்ணுவ..?", என்று நித்யா ஆர்வமாக கேட்க, "மதுசூதனன் மேல் அத்தனை நம்பிக்கை.., அவ்வளவு நெருக்கம் போலும்..", என்று மனதில் எண்ணியவாறே காரின் கதவை ரூபா திறக்க.., "பொதுவா நான் பொறுமைசாலி தான்.. ஆனால் எல்லார் கிட்டயும் எப்பொழுதும் அப்படியே இருப்பேன்னு சொல்லமுடியாது... இங்க வந்தா அமைதியா வந்துட்டு போகணும்.. ", என்று நித்யா அழுத்தமாக கூறினாள்.

"உனக்கு இனி கெட்ட காலம் தான்..", என்று எண்ணியபடி கோபமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ரூபா.

ரூபாவை சிரித்த முகமாக வழியனுப்பிவிட்டு, நித்யா வீட்டிற்குள் நுழைந்தாள்.

கட்டங்கள் நீளும்....
Nithya....Nithya dhan.....😊
Avanga bold ah na character super....porumaiya and bold ah
Venba um amaithiya and bold ah irukanga....😊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top