• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kattangal-32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
"மன்னிப்பை கூட எளிதாக கேட்டுவிடலாம்.., ஆனால் தன் விருப்பத்தை இந்த ஜென்மத்தில் என்னால் சொல்ல முடியாது போல தெரிகிறதே....", என்று ஏக்கமாய் உணர்ந்தது மதுசூதனின் மனம்.

"நீங்க சாரி சொல்லாதீங்க.. எனக்கு சுத்தமா பிடிக்கலை.. தப்பு பண்ண கூடாது.. பண்ணிட்டா கூட நான் அப்படி தான்னு கம்பீரமா நிற்ப்பீங்களே.. அது தான் நல்லா இருக்கு.. எனக்கும் எதிர்த்து கேள்வி கேட்க வசதியாக இருக்கும்.. இல்லைனா நான் யார் கூட சண்டை போடுறது", என்று நித்யா சிரித்தமுகமாக கூற, "இவளை நான் பல முறை காயப் படுத்திருக்கிறேன்.. இவள் பெருந்தன்மைக்கு முன் எதுவும் ஈடாகாது....", என்ற சிந்தனை தோன்ற சிரித்துக் கொண்டான் மதுசூதனன்.

"நீ ஏன் நான் பேசினதை உங்க வீட்ல சொல்லலை..?", என்று நித்யாவின் முகம் பார்த்து கேட்க, "அது ஒரு சோக கதை...", என்று பெருமூச்சு விட்டாள் நித்யா.

மதுசூதனன் அவளை அமைதியாக பார்க்க, "நான் B.E. முடித்தவுடன் ஒரு மாப்பிள்ளை.. எல்லாம் பேசி கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க... நான் மேலே படிக்கனுமுனு நினைத்தேன்.. மாப்பிள்ளை என் கிட்ட phone இல் என்னை பிடிக்கலை கல்யாணத்தை நிறுத்த சொன்னாங்கன்னு பொய் சொல்லிட்டேன்.. என்னை நம்பி எங்க வீட்லயும் அந்த மாப்பிள்ளை வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க.. கொஞ்சம் நாள் கழித்து விஷயம் தெரிஞ்சி அடி வெளுத்துட்டாங்க... அதனால் இப்பவும் நான் அதே காரணத்தை சொன்னால் நம்ப மாட்டாங்க.. அம்மா, அப்பா ரொம்ப விருப்பப்பட்டு இந்த கல்யாண ஏற்பாடு பண்ணாங்க... இந்த முறையும் அவர்கள் ஏமாறுவது எனக்கு பிடிக்கலை..", என்று நித்யா சோகமாக கூற, மதுசூதனன் பெருங்குரலில் சிரித்தான்.

"மனைவி அடி வாங்கினதுல அவ்வளவு ஆனந்தமா...?", என்று நித்யா மதுசூதனனை கடுப்பாக பார்த்தபடி கேட்க, "பின் இருக்காதா என்னால் அடிக்க முடியலை.. அதை வேறு யாரவது செய்தா சந்தோஷம் தானே..?", என்று மதுசூதனன் சிரித்துக் கொண்டே கூற, நித்யா கோபமாக எழுந்து காரை நோக்கி நடந்தாள்.

அவள் பின்னே நடந்த மதுசூதனன், ஓடி சென்று அவள் முன் நின்று, "அந்த கல்யாணப் பேச்சு நின்ற சந்தோஷமா கூட இருக்கலாம்ல..?", என்று மதுசூதனன் கண் சிமிட்டி கூற, "நேரமாச்சு வீட்டுக்கு போகலாம்..", என்று நித்யா கூற, இருவரும் காரை நோக்கி நடந்தனர்.

கார் அருகே சென்றவுடன், "தேங்க்ஸ்...", என்று நித்யா கூற, அவளை ஆழமாக பார்த்தான் மதுசூதனன்.

"அம்மா.. அப்பா.. இன்னக்கி ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க.. Thanks for everything..", என்று நித்யா மனதார கூறினாள்.

"எனக்கு எதுக்கு தேங்க்ஸ்... அப்படி பார்த்தா நீ நம்ம வீட்டுக்கு பண்றதுக்கு நான் இந்த ஜென்மம் முழுக்க தேங்க்ஸ் சொல்லணும்... நீ வந்த பிறகு நம்ம வீடே மாறிடுச்சு.. ", என்று கூறிக்கொண்டே காரை கிளப்பினான் மதுசூதனன்.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் அறைக்குள் செல்ல, இதை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.

அவர்கள் அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி, நித்யா மெத்தையில் அமர அவள் எதிரே அமர்ந்த மதுசூதனன், "கருவிழி ஜோசியம் என்ன சொல்லுது...?", என்று மதுசூதனன் அவள் முகம் பார்த்து கேலி தொனித்த குரலில் கேட்க, "நீங்க வெண்பா அப்பா கிட்ட பேசுவீங்களா..?", என்று நித்யாவும் விடாப்பிடியாக கேட்டாள்.

"சரி..", என்று மதுசூதனன் தலை அசைக்க, சிரித்த முகத்தோடு நித்யா அவன் கண்களை பார்த்தாள்.

நித்யாவின் முகத்தில் தெரிந்த குறும்பு, மதுசூதனனையும் தொற்றி கொள்ள, அவள் முகத்தை ஆர்வம்கா பார்த்தான்.

"ம்ம்ம்ம் ", என்று நித்யா அவள் தொண்டையை சரி செய்ய, "பாடவா போற..? சொல்லப் போற பொய்க்கு இவ்வளவு பீல்ட் அப்..", என்று மதுசூதனன் நக்கல் அடிக்க, "நான் சொல்றதெல்லாம் உண்மை.", என்று நித்யா தீவிரமாக கூறினாள்.

“சொல்லு", என்று மதுசூதனன் செய்கை காட்ட, "நீங்க இன்னக்கி பீச்சல ஒரு பொண்ணு கிட்ட பேசினீங்க... அந்த பொண்ணு நீங்க பேசும் பொழுது குறுக்க பேச கூடாதுன்னு KULFI வாங்கி கொடுத்து அவள் வாய் பேச விடாம செய்துடீங்க..", என்று நித்யா தீவிரமாக கூற, அவனை முறைத்து பார்த்தான் மதுசூதனன்.

"ஜோசியம் சொல்லும் பொழுது இப்படி முறைக்க கூடாது.. அப்புறம் செல்லாது...", என்று நித்யா தலையை அங்கும் இங்கும் அசைத்து கூற, அவளை சந்தேகமாக பார்த்தான் மதுசூதனன்.

"இப்படி நம்பிக்கை இல்லாமல் பார்த்தால் சொல்லமாட்டேன்...", என்று நித்யா அழுத்தமாக கூற, "சொல்லு..", என்று செய்கை காட்டினான் மதுசூதனன்.

"ஆனால் நீங்க பேச நினைத்தை கடைசி வரை இன்று பேசவேயில்லை..", என்று நித்யா ஆழமாக கூற, "நித்யா", என்று மதுசூதனன் மெதுவாக அழைக்க, "ஜோசியம் இன்னும் முடியலை.. குறுக்க பேச கூடாது...", என்று நித்யா அழுத்தமாக கூறினாள்.

"அந்த பெண்ணிடம் நீங்க சொல்ல நினைத்த வார்த்தைகள் உங்க கண்களில் சொல்ல முடியாத தவிப்பை சொல்லுது... இது நிகழ் காலம். எதிர் காலம் என்ன சொல்லுது தெரியுமா..? உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இருக்கும் பொழுது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருப்பதில்லை... ", என்று நித்யா அழுத்தமாக ஆழமாக கூற, மென்மையாக சிரித்தான் மதுசூதனன்.

அவனை பார்த்தபடி நித்யா அமைதியாக அமர்ந்திருக்க, அவளை பார்க்கும் சக்தி இல்லாமல், "குட் நைட்..", என்று கூறிவிட்டு கண்களை மூடிக் கொண்டான் மதுசூதனன்.

நித்யா தன் டைரியை எடுத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத சந்தோஷத்தோடு ஒரு கட்டத்தின் நிறத்தை மீண்டும் வெண்மையாக மாற்றினாள் நித்யா

நிறங்களால் நிரப்பப்பட்ட ஏழு கட்டங்கள் ஆறாக குறைந்தது.

டைரியை மூடி சிந்திக்க, மீண்டும் ஒரு கட்டத்தின் நிறத்தை மாற்றினாள் நித்யா. நிறங்களால் நிரப்பப்பட்ட ஆறு கட்டங்கள் ஐந்தாக குறைந்தது.

View attachment 3855

அவள் செய்கையை அவளறியாமல் ரசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனன், "தூங்கு நித்யா... நாளைக்கி ஆபீஸ் போகணும்.. என் Travel dates வேற நெருங்குது.. நீயும் முகிலனும் தான் எல்லாம் பார்த்துக்கணும்..", என்று மதுசூதனன் கண்களை மூடியபடியே கூற அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்து படுத்துக்கொண்டாள் நித்யா.

இருவரும் நித்திரையில் ஆழ, சுமார் அரைமணி நேரத்தில், இவர்கள் அறை கதவு பதட்டமாக தட்டப்பட்டது.

கட்டங்கள் நீளும்....
Ennavayitukum???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முகிலன் ஏன் மதுசூதனனின்
அறைக் கதவைத் தட்டுகிறான்,
அகிலா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெற்றோர் புஷ்பா, கோவிந்தன்
யாருக்காவது உடம்புக்கு
சரியில்லையாப்பா,
அகிலா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top