• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kattangal -36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
கட்டங்கள் – 36

வெண்பாவின் கண்ணீர் அவர் பாதங்களை தொட, அவருள் ஏற்பட்ட பாசப் பெருக்கினை வெண்பாவின் தாயால் வார்த்தைகளால் கூற முடியாது. கண்ணீர் மல்க வெண்பாவை தோள் தொட்டு தூக்கி, தன் மேல் சாய்ந்து கொண்டார்.

குழந்தை எத்தகைய தவறு செய்தாலும், ஒரு தாயால் குழந்தையை வெறுக்க முடியுமா..?

வெண்பா நிறுத்தாமல் அழ, அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் வெண்பாவின் தாயும் கண்ணீரில் கரைந்தார்.

கோவில் தூண் மேல் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு முரளி கண்களில் நீர் வழிய, முகத்தில் புன்னகை யோடு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் சமாதானம் ஆக, சில நிமிடங்கள் கொடுத்து அவர்கள் அருகே சென்ற முரளி, "வெண்பா...", என்று மென்மையாக அழைத்தான்.

அந்த அழைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்டு, சிரித்த முகமாக வெண்பா முரளியை பார்த்தாள்.

முரளி ஏதோ பேச தொடங்க, "என் வெண்பா அழ மாட்டா.. இதை தானே சொல்ல போற.. உன் வெண்பா அழவில்லை..", என்று முரளியை பார்த்து குறும்பாக வெண்பா சிரித்த முகமாக கூற, தலை அசைத்து சிரித்தான் முரளி.

" கண்களில் துள்ளல் சிரிப்போடு வெண்பா பழைய வெண்பாவாக மாறிவிட்டாள்", என்ற எண்ணம் முரளிக்கு தோன்றியது.

"வெண்பா.., பாசத்தால் உன்னிடம் பேசிவிட்டாலும்.., என்னால் நீ செய்த தவறை மன்னிக்க முடியாது.. மறக்க முயற்சிக்கிறேன்..", என்று வெண்பாவின் தாய் ஆழமாக கூற, வெண்பா மெலிதாக புன்னகைத்தாள்.

வெண்பா அமைதியாக தன் தாயை பார்க்க, "உங்க அப்பாவை பற்றி உனக்கு தெரியும்...", என்று அவர் தூண் அருகே அமர்ந்தபடி கூற, தன் தாய் அருகே சிரித்த முகமாக அமர்ந்தாள் வெண்பா.

தன் தாய் தன்னிடம் பேசிய சந்தோஷத்தில் வெண்பாவிற்கு மற்ற விஷயங்கள் எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.

"நீங்க பேசிட்டு இருங்க.. நான் பிரகாரத்தை சுற்றிவிட்டு வருகிறேன்...", என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து முரளி ஒதுங்க, "நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை.. உங்க மனைவி கிட்ட தனியா பேசுவதற்கு என்கிட்டே பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை..", என்று வெண்பாவின் தாய் கூற, வெண்பாவின் முகத்தை பார்த்தான் முரளி.

வெண்பா சம்மதமாக கண் அசைக்க, அவள் அருகே அமர்ந்தான் முரளி. அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தார் வெண்பாவின் தாய்.

வெண்பாவின் தாய் வெண்பாவிடம் பல விஷயங்களை பேச நினைத்தாலும், அவர் மன வருத்தம் அவரை அமைதி காக்க செய்தது.

சிறிது நேரம் பேசிவிட்டு முரளி, வெண்பா வீட்டிற்கு கிளம்பினர்.

வெண்பா முகத்தில் சந்தோஷமிருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் வெண்பா.

"வெண்பா.. என்ன ஆச்சு ? ஏன் அமைதியாக இருக்க....?", என்று முரளி வெண்பாவின் முகம் பார்த்து கேட்க, "ஏன் இப்படி பண்ண முரளி..?", என்று அழுத்தமாக கேட்டாள் வெண்பா.

"என்ன பண்ணேன்...?", என்று முரளி சாலையைப் பார்த்தபடி கேட்க, "முரளி நீ என் கிட்ட பொய் கூட சொல்லுவியா..?", என்று வெண்பா மெதுவாக கேட்டாள்.

முரளி எதுவும் அறியாதவன் போல் அமைதியாக நடக்க, "கடவுளா பார்த்து நமக்கு கொடுத்த சந்தர்ப்பமுன்னு சொன்னியே... அந்த கடவுள் யார்?", என்று வெண்பா புருவம் உயர்த்தி முரளியை பார்த்து கேட்க, முரளி மீண்டும் பதில் சொல்லாமல் அமைதியாக நடந்தான்.

"என் வெண்பா அழமாட்டான்னு சொல்ல தெரிந்த உனக்கு.., உன் மனைவி புத்திசாலின்னு தெரியாம போச்சே..!!!", என்று வெண்பா நக்கலாக கூற, முரளி புன்னகைத்தான்.

"உன் புன்னகை மறுபடியும் உன் முகத்தோடு ஒட்டிக் கொண்ட மாதிரி தெரியுதே..", என்று வெண்பா கண் சிமிட்டி கேலியாக கூற, "நீ சந்தோஷமா இருக்கிறதால..", என்று கூறிக் கொண்டே முரளி முன்னே நடக்க, அவனை கை பிடித்து நிறுத்தினாள் வெண்பா.

வெண்பாவின் முகத்தை முரளி கேள்வியாக பார்க்க, "என்ன பண்ண..?", என்று வெண்பா கறாராக கேட்டாள் வெண்பா.

அவள் முகத்தை பார்த்த முரளி, "தெரிந்து என்ன பண்ண போற...?", என்று வெண்பாவிடம் அமைதியாக கேட்க, வெண்பா மெளனமாக நடந்தாள்.

"வெண்பா..", என்று முரளி குழைவாக அழைக்க, "ம்..", என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள் வெண்பா.

"வெண்பா... பாப்பா என்ன சொல்லுது...!", என்று முரளி பேச்சை மாற்ற, "அப்பா.. வர வர உன் கிட்ட பொய் சொல்றாங்கன்னு சொல்லுது...", என்று வெண்பா நடந்தபடியே இடக்காக கூற, முரளி சத்தமாக சிரித்தான்.

"சிரித்தது போதும்.. நான் எதுவும் கேட்கலை.. நீயே சொல்லனுமுனு நினைத்தா சொல்லு...", என்று வெண்பா கோபமாக கூறிவிட்டு வேகமாக நடந்தாள்.

அவள் பின்னால் வந்த முரளி, வெண்பாவை பார்த்து,



"ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்

வண்ண சிங்காரம் குலைந்துவிடும்

ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்"

என்று மெதுவாக பாட, "ஐயோ... மனைவியைப் பார்த்து யாரவது இப்படி பாடுவாங்களா...?", என்று வெண்பா தலையில் கை வைத்து வெட்கத்தோடு கேட்க, "காதல் மனைவியை பார்த்து பாடலாம்.." , என்று முரளி மென்மையாக கூறினான்.

வெண்பா வெட்க சிரிப்போடு, "அமைதியா வாங்க...", என்று முரளியின் கை பிடித்து மெதுவாக நடந்து சென்றாள்.

"அது...", என்று முரளி பெருமையாக சிரித்தான்.

அவர்களை கடந்து ஒரு கார் வேகமாக சென்றது.

அது மதுசூதனின் கார் போல் தெரிகிறது.

நாம் அவர்களோடு பயணித்து அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று பார்ப்போம்.

காரை மதுசூதனன் சாலையில் கவனமாக ஓட்டிக் கொண்டிருக்க,

அவனருகில் நித்யா அமர்ந்திருந்தாள்.

பின் சீட்டில், முகிலன் அமர்ந்திருக்க , "தம்பி.., லண்டன் ரீச் ஆன உடன் கால் பண்ணுங்க..", என்று நித்யா அக்கறையாக கூற, "முகிலன்.., இதை உங்க அண்ணி உன் கிட்ட பல தடவை சொல்லிட்டா..." , என்று மதுசூதனன் சலிப்பாக கூறினான்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
நித்யா மதுசூதனனை கோபமாக முறைக்க, "அண்ணி... நான் உங்களுக்கு கால் பண்றேன்..", என்று முகிலன் சமாதானமாக கூறினான்.

"சீக்கிரம் உன்னை Flight ஏத்தணும்.. இல்லைனா உங்க அண்ணி நீ கிளம்பறது விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா.. இந்த தடவையும் மீட்டிங் கான்செல் ஆகிரும் முகிலன்...", என்று நித்யாவை பார்த்தபடி மதுசூதனன் கூற, "தம்பி, நீ போகும் பொழுது உங்க அண்ணனையும் கூட்டிட்டு கிளம்பு.. நான் ஒரு வாரம் நிம்மதியாக இருப்பேன்...", என்று நித்யா முகிலனைப் பார்த்தபடி கூறினான்.

"முகிலன், உங்க அண்ணியை தனியாக விட்டுவிட்டு நான் எப்படி நிம்மதியாக இருப்பேன்...", என்று மதுசூதனன் மென்மையாக கூற, நித்யா அவனை அதிர்ந்து பார்த்தாள்.

"நீ யார் கிட்ட, எப்ப வம்பு வளர்ப்பன்னு சொல்ல முடியாது.. அதை சொன்னேன்..", என்று மதுசூதனன் கண்சிமிட்டி புன்னகையோடு கூற, நித்யா மதுசூதனனை கோபமாக பார்த்தாள்.

ஏர்போர்ட் அருகே செல்ல, "அண்ணி... எனக்கு ஒரு சந்தேகம்..!!", என்று முகிலன் கேள்வியாக நிறுத்த, நித்யா தன் முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.

"நான் இறங்கிய பிறகு, நீங்க ரெண்டு பேரும் யார் கிட்ட பேசுவீங்க...?", என்று தீவிர யோசனையோடு முகிலன் கேட்க, "நாங்க ரெண்டு பேரும் ரொம்ப அமைதியான சுபாவம்.. அதனால் அமைதியா.. பேசாம வருவோம்.. ", என்று நித்யா தலை சாய்த்து சிரித்த முகமாக கூற, "ஆஹான்...", என்று தலை அசைத்து கேட்டான் முகிலன்.

ஏர்போர்ட்டில் இறங்கியவுடன், பயண பரபரப்பு தொற்றிக் கொள்ள தன் பெட்டியோடு மும்முரமாக ஏர்போர்ட்டிக்குள் நுழைந்தான் முகிலன்.

மதுசூதனன் செல்லவிருந்த பிசினெஸ் மீட்டிங், இப்பொழுது Reschedule ஆகி, அதற்காக முகிலன் லண்டன் செல்வது அவர்கள் பேச்சிலிருந்து நமக்கு தெரிகிறது.

முகிலனுக்கு கை அசைத்து விடைபெற்று மதுசூதனனும், நித்யாவும் வீடு திரும்பினர்.

அப்பொழுது வீட்டில் ரூபாவின் பெற்றோர் , கோவிந்தன் புஷ்பா இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தனர்.

மதுசூதனனும், நித்யாவும் அவர்களோடு பேச்சில் கலந்து கொள்ள, சிறிது நேரம் பேசிவிட்டு ரூபாவின் பெற்றோர் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் சென்றவுடன், "அப்பா.. என்ன விஷயம் திடீருன்னு வந்திருக்காங்க...", என்று சோபாவில் சாய்ந்து மதுசூதனன் தந்தையை பார்த்தபடி கேட்க, "ரூபா கல்யாண விஷயமா பேச வந்திருக்காங்க...", என்று மெதுவாக கூறினார் கோவிந்தன்.

"ரூபா கல்யாண விஷயமா இங்க வந்து ஏன் பேசணும்..?", என்று தன் கண்களை சுருக்கி கொண்டு மதுசூதனன் மீண்டும் வினவ, "புத்திசாலி... ", என்று மனதிற்குள் நொந்து கொண்டாள் நித்யா.

"முகிலனை பேச வந்திருக்காங்க...", என்று கோவிந்தன் சோபாவில் சாய்ந்து கால் நீட்டி கூற, "ஓ... நல்ல விஷயம்...", என்று சிரித்த முகமாக கூறினான் மதுசூதனன்.

"எனக்கும் உடம்பு சரியில்லை.. சீக்கிரம் முகிலன் கல்யாணத்தை முடித்துவிட்டால், எங்க பொறுப்பு முடிந்துவிடும்...", என்று புஷ்பா மெதுவாக கூற, "அத்தை.. உங்க உடம்புக்கு ஒன்றும் இல்லை.. எல்லாம் சரி ஆகிருச்சு....", என்று அழுத்தமாக கூறினாள் நித்யா.

புஷ்பா தலை அசைத்து சிரித்து கொள்ள, நித்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

"நான் நினைத்தது தான்... ஆனால்....", என்று நித்யா சிந்திக்க, "நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க...? முகிலனும் ரூபாவும் நல்ல நண்பர்கள். அதனால தைரியமா பேசுங்க.. நானும் முகிலன் கிட்ட பேசுறேன்....", என்று மதுசூதனன் கூற, மறுப்பாக தலை அசைத்தார் கோவிந்தன்.

"ஏன்..?" , என்று மதுசூதனன் கேள்வியாக நோக்க, "முகிலனுக்கு நிச்சயம் சம்மதமாகத் தான் இருக்கும்.. கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. ஆனால் பிரச்சனை என்னன்னா.., அவங்க முகிலனுக்கும் தனி பிசினெஸ் கேட்கறாங்க.. ரூபா வீட்டு பிஸ்னெஸ்ஸை விட, நம்ம பிசினெஸ் high level ளாக இருந்தாலும்.. அதை பிரிக்கும் பொழுது..", என்று கோவிந்தன் நெற்றியை தடவி சிந்தித்தார்.

மதுசூதனனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. "ஆனால் எப்படி சொல்வது...? தாயின் உடல் நிலை கண் முன் தோன்ற.., சிந்தனையில் ஆழ்ந்தான்.

மதுசூதனன் அமைதியாக அமர்ந்திருக்க, "நித்யா நீ என்னம்மா சொல்ற...?", என்று கோவிந்தன் நித்யாவை பார்த்து கேட்டார்.

முகிலன் ரூபாவை திருமணம் செய்து கொள்வதில் நித்யாவுக்கு சிறிதும் விருப்பம் இல்லையென்றாலும், இப்பொழுது மறுப்பு தெரிவித்தால், பணத்திற்க்காக தெரிவிப்பது போல் ஆகிவிடும் , என்ற எண்ணம் தோன்ற, "என்ன பதில் சொல்லலாம்..?", என்று நித்யா சிந்தித்தாள்.

கட்டங்கள் நீளும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top