• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kavalaipadatha kanniyar sangam-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹாய் நட்புக்களே
நான் முதல் அத்தியாயத்தோடு வந்து விட்டேன். கதையை வெறும் காமெடியில் கொண்டு செல்ல முடியவில்லை. அதற்காக மன்னித்து விடுங்கள். நிறைய மர்மங்கள் வரும் அதனால் கதையை படித்து விட்டு வெப்பன்களை தூக்காமல் சமர்த்தாக திட்டி கமெண்ட் போட்டு விடுங்கள்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முதல் அத்தியாயம் எங்கே,
சினேகா பிரதர்?
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
காலை ஏழு மணி. சூரியன் தன் ஒளி கதிர்களை உக்கிரமாக பூமியில் பாய்ச்சி கொண்டு இருந்தார். அவருக்கு என்ன கடுப்போ? மற்றவங்க கதை நமக்கு எதற்கு? நம் கதைக்கு செல்வோம்.

வீட்டு கதவை திறந்து கொண்டு வந்து டிராக் சூட், டிசர்ட் அணிந்த இரு இளம்பெண்கள் உள்ளே வந்தார்கள்.

அம்மாவின் சாம்பாரை மோப்பம் பிடித்தபடி நேராக சமையலறை நோக்கி சென்று விட்டார்கள்.

"அம்மா!" என்றபடி வந்த கனிமொழியை பார்த்து மலர்விழி சிரித்தாள்.

"வாங்கம்மா... என்ன ஜாகிங் எல்லாம் முடிந்ததா?"

"நல்லபடியாக முடிந்தது" என்ற மகளிடம் டீயை தர அதை வாசம் பிடித்த பின் ரசித்து குடித்தார்கள்.

"அம்மா... பரி, தேனு எழுந்து விட்டார்களா?" என்று சியாமளா கேட்க "அந்த கும்பகர்ணிகள் இன்னும் எழுந்திரிக்கவில்லை." என்றார் மலர்விழி.

"இன்னுமா அந்த வாலுகள் தூங்கி கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு இன்றைக்கு காலேஜில் முதல் நாள்மா" என்றாள் கனிமொழி.

"உனக்கு தெரியுது? அவளுக்கு தெரியுதா? நீ போய் கொஞ்சம் எழுப்பு" என்றார் மலர்விழி.

"சரிம்மா" என்றபடி தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்து கொண்டு சென்று அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள் சியாமளா மற்றும் கனிமொழி.

கட்டிலில் அவர்கள் இருவரும் போர்வையை இழுத்து மூடியபடி தூங்கி கொண்டு இருந்தார்கள்.

கனிமொழி தன் பாட்டிலை ஊற்ற அதேசமயம் சியாமளா தன்னுடைய பாட்டிலை ஊற்றினாள்.

"ஆ! மழை! மழை!" என்றபடி இருவரும் போர்வையை விலக்கி கொண்டு எழுந்து அமர்ந்தார்கள்.

"சென்னையில் அதுவும் வீட்டில் பெட்ருமில் உங்கள் இரண்டு பேருக்கும் மட்டும் தனியாக மழை பெய்கிறதா?" என்று கேட்டாள் கனிமொழி.

"அக்காஸ்! உங்கள் இம்சை அளவு மீறி போகுது. இப்பொழுது எதற்கு தண்ணீர் ஊற்றி எழுப்பி விட்டிர்கள்" என்று பரிமளா கேட்க அதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் தேன்மொழி.

"தூங்குமூஞ்சிகளா! உங்களுக்கு இன்று காலேஜ் தொடங்குது. காலேஜ் பர்ஸ்ட் டே அன்று எல்லோரும் பரபரப்பாக எழுந்து ரெடியாவாங்க. நீங்க இரண்டு பேரும் ஏழு மணி வரைக்கு தூங்கறிங்களா?" என்றாள் சியாமளா.

பரிமளாவும், தேன்மொழியும் சில நொடிகள் தங்கள் சிறிய மூளையை கசக்கி பிழிந்து விட்டு "ஆமாக்கா" என்றார்கள்.

"இதற்கே இவ்வளவு நேரமா? இரண்டு பேரும் போய் சீக்கீரம் ரெடியாகுங்கள்" என்றாள் சியாமளா.

"சரிக்கா" என்றபடி இருவரும் காலேஜ்க்கு தயாராக செல்ல தங்கள் அறையை நோக்கி சென்றார்கள் அக்காக்கள்.

காலை எட்டு மணி என்பதை உணர்த்தும்விதமாக எட்டு முறை குக்கூ குக்கூ என்று காட்டி விட்டு ஒய்ந்தது சுவர் கடிகாரத்தில் இருந்த குயில்.

மலர்விழி இட்லிகளை ஹாட் பாக்சில் எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்க பின்னால் சட்னி, சாம்பாருடன் வந்தார்கள் சியாமளா மற்றும் கனிமொழி.

"அம்மா! டிபன் ரெடியா?" என்று கேட்டபடி வந்தாள் பரிமளா.

இளம் பச்சை வண்ணத்தில் சிறிய வெள்ளை பூக்கள் போட்ட சுடிதார் அணிந்து வத்தாள் பரிமளா.

வட்ட வடிவ முகத்தில் பெரிய கண்கள். பெரிய நாசி, சதை பற்றான கிள்ள தூண்டும் கன்னங்கள், பெரிய உதடுகள், சற்று பருமான உடல்வாகும், மத்திம உயரமும் உடைய அவள் அடர்ந்த கூந்தலை பின்னலிட்டு இருந்தாள்.

"அவள் எங்கேடி?" என்று கேட்டபடி பரிமளா தட்டில் இட்லியை வைத்து சட்னியை ஊற்றினார் மலர்விழி.

"அம்மா! அந்த பியூட்டி குயின் இன்னும் மேக்கப் போட்டு கொண்டு இருக்கிறாள்" என்றபடி இட்லியை விழுங்கினாள் பரிமளா.

"அவள் சும்மாவே கண்ணாடி முன்னாடி அரைமணி நேரம் நிற்பாள். இன்று காலேஜ்க்கு வேறு போகிறாள் இல்லையா? கேட்கவா வேண்டும்" என்றபடி கனிமொழி இட்லியை சாப்பிட்டாள்.

"அம்மா! நான் வந்துட்டேன்" என்றபடி வந்தாள் தேன்மொழி.
சின்ன வட்ட வடிவ முகம், அழகான இரு கண்கள், சிறிய நாசிகள், சிறிய இரு உதடுகள், சின்ன கண்கள். ஒல்லியான சற்று அதிக உயரமான தோற்றம் கொண்டவள் தேன்மொழி.

லைட் பிங்க கலர் சுடிதார் அணிந்து லூஸ் ஹேர் விட்டு கிளிப் போட்டு இருந்தாள்.

"ஹனி! இன்றைக்கு நீ ரொம்ப அழகாக இருக்கிறாய" என்றாள் சியாமளா.

"அக்கா! நீ கூட இன்றைக்கு தேவதை மாதிரி இருக்கிறாய்" என்று சியாமளாவை பார்த்து சொல்லிவிட்டு இட்லியை சாப்பிட ஆரம்பித்தாள் தேன்மொழி.

லைட் சாண்டல் கலர் சுடிதார் அணிந்து கூர்மையான பார்வை கொண்ட இரு விழிகள், பெரிய நாசி, சிரிக்கும் உதடுகள், சற்று கடினமான சதை கொண்ட வலிமையான கன்னங்கள், அகன்ற மார்பு, வலிமையான தோள்கள், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இருபத்தி ஒரு வயது பெண் சியாமளா.

"கனி அக்கா கூட இன்றைக்கு அழகாக இருக்கிறார்கள்" என்று சொன்னாள் பரிமளா.

"அப்படி சொல்லுடா என் தங்கம். நீதான் இன்றைக்கு அழகு" என்று தன்னை பாராட்டி பேசிய தங்கையை பார்த்து சொன்னாள் கனிமொழி.

"சென்னையின் நாலு அழகான இளம் பெண்களும் நம்முடைய வீட்டில்தான் இருக்கிறார்கள். என்ன பன்றது அக்கா?" என்றாள் தேன்மொழி.
Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சினேகாஸ்ரீ பிரதர்
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சிறிய முகத்தில் கூர்மையான கண்களும், பெரிய நாசி, சிறிய உதடுகள், வளவளப்பான இரு கன்னங்கள், வலிமையான தோள்கள், அகன்ற மார்புகள், சராசரி எடை கொண்ட ஆஜானுபாகுவான தோற்றம் உடைய இருபத்தி ஒன்று வயது கொண்ட இளம் பெண்தான் கனிமொழி

லைட் மஞ்சள் சுடிதார் அணிந்து லூஸ் விட்டு கிளிப் போட்டு இருந்தாள்.

நான்கு இளம் பெண்களும் இட்லியை விழுங்கி விட்டு கை கழுவி எழுந்தார்கள்.

"அக்காஸ்! காலேஜ்க்கு டைம் ஆகி விட்டது. இன்றைக்கு ஒருநாள் மட்டும் டிராப் ப்ளீஸ்" என்றாள் தேன்மொழி.

"சரி... அப்பா வந்து விடட்டும். அவரிடம் சொல்லி விட்டு கிளம்பலாம்" என்று சியாமளா சொல்லி கொண்டிருக்கும் போது வீட்டுக்கு உள்ளே நுழைந்தார் நரேஷ்குமார்.

"என்னம்மா... இரண்டுபேரும் காலேஜ் போக தயாராகி விட்டிர்களா?" என்றவர் இரு மகள்களை பார்த்து கேட்டார்.

"நாங்கள் ரெடிப்பா" என்று ஒற்றை நோட்டுடன் நின்ற பரிமளா மற்றும் தேன்மொழி இருவரையும் பார்த்து "ஆல் தி பெஸ்ட்" என்றார் நரேஷ் குமார்.

"தாங்க்யூப்பா" என்று இருவரும் சொல்லிவிட்டு சிரித்தார்கள்.

"சரிப்பா... எங்களுக்கு காலேஜ் டைம் ஆச்சு. நாங்கள் போயிட்டு வருகிறோம்" என்று தேன்மொழி சொல்ல "சரிம்மா" என்றார் நரேஷ்குமார்.

"அப்பா... இவர்களை காலேஜில் டிராப் செய்துவிட்டு அப்படியே பர்ஸ்ட்டே மீட்டிங் அட்டெண்ட் செய்து விட்டு வருகிறோம்" என்றாள் கனிமொழி.

"சரிம்மா... என் காரை எடுத்து கொண்டு போங்கம்மா. நான் பைக்கில் சென்டருக்கு வந்து விடுகிறேன்" என்றார் நரேஷ்.

"இல்லப்பா... இந்த டிராபிக்கில் வண்டிதான் சரிபட்டு வரும். நாங்கள் எங்கள் ஸ்கூட்டியில் சென்று விடுகிறோம்" என்று சியாமளா சொல்ல,
"ஆமாம்பா... சியாம் சொல்வது போல் வண்டிதான் கரெக்ட்" என்றாள் கனிமொழி.

"சரிம்மா... உங்கள் இஷ்டம்" என்றார் நரேஷ்குமார்.

"அப்பா பை... அம்மா பை..." என்றபடி பரிமளா, தேன்மொழி இருவரும் கிளம்ப,
"பத்திரமாக போயிட்டு வாங்க" என்றார் மலர்விழி.

சியாமளா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய தேன்மோழி அதி ஏறி கொள்ள. கனிமொழி ஸ்கூட்டியில் பரிமளா ஏறி கொள்ள நால்வரும் கல்லூரி நோக்கி பறந்தனர்.

மலேசியா ஏர்போர்ட வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

ஏர்போர்ட்டுக்கு வெளியே போர்டு கார் வந்து நிற்க அதில் இரு இளைஞர்கள் கார் கதவை திறந்தபடி இறங்கினார்கள்.

தங்கள் சூட்கேஸ், டிராவல் பேக் முதலான உடைமைகளை காரிலிருந்து எடுத்து கொண்டு கார் கதவை மூடினார்கள்.

"நீங்கள் உள்ளே போயி மற்ற வேலைகளை பாருங்கள். நான் காரை பார்க் செய்து விட்டு வருகிறேன்" என்றபடி காரை ஒட்டி வந்த நபர் சொல்ல,
"சரிங்க அண்ணா" என்றபடி இருவரும் உள்ளே சென்றார்கள்.

அடுத்ததாக பெரரி கார் ஒன்று வந்து நின்றது.

ஒரு வயதான நபரும், ஒரு இளைஞனும் காரிலிருந்து இறங்கி கொள்ள கார் சென்றது.

அவர்கள் இருவரும் சென்று காத்திருக்க உள்ளே சென்ற இருவருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

சற்றே நரைத்த தலை முடி உடைய கம்பீரமான பார்வை, எடுப்பான நாசி, அகன்ற மார்பு, வலிமையான தோள்கள், மிடுக்கான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஐம்பத்து ஆறு வயதான பெரியவரின் பெயர் ராஜேஷ் குமார்.

அவர் அருகில் ஸ்டைலான ஹேர் ஸ்டைலுடன் பார்க்கும் நபர்களை ஈர்க்கும் தோற்றம் கொண்ட கோர்ட் சூட் அணிந்து நின்ற இளைஞன் அவரின் இருப்பத்து இரண்டு வயதான மூன்றாவது மகனின் பெயர் விஜய் பிரகாஷ்.

"அங்கிள்" என்றழைத்தபடி வந்து அருகில் நின்றான் கோர்ட் சூட் அணிந்து நின்றான் இருப்பத்தி எட்டு வயது இளைஞன்.

நன்கு வாரபட்ட அலைபாயும் கேசம், ஸ்டைலான ரேபான் கிளாஸ், சிரிக்க மறுக்கும் உதடுகள், கம்பீர தோற்றம், சிவப்பு நிறமும் கொண்டு இருந்தான்.


"வாப்பா" என்று பெரியவர் அழைக்க சிறிய புன்னகையை மட்டும் சிந்தியபடி பிரகாஷ் அருகில் நின்றான்.

"பிரகாஷ்! பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா? என் தம்பி விஜய் வரலையா?" என்று அருகிலிருந்த இளைஞனிடம் குருபிரசாத் கேட்டான்.

"எல்லாம் பைன் அண்ணா. அவன் ஒரு முக்கியமான கிளையன்ட் மீட்டிங்கில் இருக்கிறான். என் பிரதர் ஆனந்த் வரலையா?" என்று கேட்டான் விஜய் பிரகாஷ்.

"அவனும் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறான். நான் போனில் பேசி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான்" என்றான் குருபிரசாத்.

"டாட்!" என்றபடி வந்தான் விஜய் சந்தோஷ்.

பார்மல் வெள்ளை நிற சர்ட், புளூ ஜீன்ஸ் அணிந்து காற்றில் பறந்த முடியை கோதியபடி வந்து நின்றான்.
சிரிக்கும் உதடுகள், சந்தோஷம் கூத்தாடும் கண்கள், எடுப்பான நாசி, பாரப்பவர்களை கவரும் தோற்றம் சிவப்பு நிறம் உடைய இருப்பத்தி ஐந்து வயது இளைஞன்.

"சந்தோஷ்! என்ன செக்கிங் வேலை எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டதா?" என்று கேட்டார் ராஜேஷ் குமார்.

"நல்லபடியாக முடிந்தது டாட்" என்றவன் சொல்லும்பொழுது பின்னால் வந்து நின்றான் விஷ்வ பிரசாத்.

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"ஹாய் அண்ணா" என்றவனின் வயது இருபத்தி ஐந்து.
ஸ்டைலான ஹேர்ஸ்டைல், சிரிக்கும் உதடுகள், எடுப்பான நாசி, குறும்பான கண்கள், எந்த பெண்ணையும் ஒரு நிமிடம் பார்க்க வைக்கும் நல்ல சிவப்பு நிறம் உடைய ஆணழகன்.

"அப்பா வரலையா அங்கிள்?" என்று விஷ்வபிரசாத் கேட்க,
"உங்க அப்பா ஒரு முக்கிய கிளையண்ட் மீட்டிங்கிற்காக சென்று விட்டார்" என்றார் ராஜேஷ் குமார்.

"விஷ்வா! அங்கே தங்க நம் கெஸ்ட் அவுஸ் ரெடி பன்ன சொல்லியிருக்கிறேன். அது ரெடியாகிறவரைக்கும் நல்ல ஹோட்டலில் இரண்டு பேரும் தங்கி கொள்ளுங்கள். உங்கள் இரண்டு பேர் டார்கெட் எல்லாம் எப்படியாவது சியாமளாவை மலேசியாவிற்கு வர சம்மதிக்க வைக்க வேண்டும். எவ்வளவு ஆனாலும் சரி பணத்தை பற்றி கவலைபடாதே" என்று அவனிடம் சொல்லி விட்டு பார்த்தான் குருபிரசாத்.

"சரி அண்ணா... நான் அதை பார்த்து கொள்கிறேன். நான் எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்து விடுகிறேன்" என்றான் விஷ்வபிரசாத்.

"பணம் அவர்களுக்கு பெரிய மேட்டர் இல்லை. அந்த பெண் சியாமளாவிற்கு சொந்தமாக வீடு, கார் என்று பல கோடி ருபாய் சொத்து இங்கு உள்ளது. அந்த சொத்துகளையே நரேஷ் இங்கு இருக்கும் நம்பகமான நண்பன் மூலம் பராமரித்து வருகிறான். அந்த பெண்ணை சொத்திற்காக கூட இங்கே நரேஷ் கூட்டி வரவில்லை. நீ வேறு வழியில்தான் அவளை சம்மதிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்." என்றார் ராஜேஷ் குமார்.

"சியாமளா, அவள் தங்கை, நரேஷ் அவர் குடும்பம் பற்றிய முழு விவரத்தையும் உன் பர்சனல் மெயிலுக்கு அனுப்பி இருக்கிறேன். நான் கொடுத்த சிடி மற்றும் பென் டிரைவில் காபி உள்ளது. நீ அதை நன்றாக பார்த்து விட்டு கவனமாக திட்டம் போட்டு செயல்படு" என்றான் குருபிரசாத்.

"நம் கம்பெனி நிலை உனக்கு தெரியும். சியாமளாவை தங்கள் வசபடுத்த ஆண்டனி குருப் முயற்சி செய்வதாக தகவல். நீ விரைவில் காரியம் முடிக்க வேண்டும்" என்றார் ராஜேஷ்.

"சந்தோஷ்! நீ விஷ்வாவுக்கு துணையாக இருக்க வேண்டும். அவன் தடுமாறினால் நீதான் காரியத்தை முடித்து விட்டு வர வேண்டும்" என்று சந்தோஷிடம் கூறினார் ராஜேஷ் குமார்.

"சரிப்பா" என்று சந்தோஷ் கூற, "சரி... பிளைட்டுக்கு டைம் ஆச்சு. நீங்கள் உள்ளே போங்க" என்றான் குருபிரசாத்.

விஜய் சந்தோசையும், விஷ்வ பிரசாத்தையும் கட்டி பிடித்து மூவரும் வாழ்த்து சொல்ல அவர்களுக்கு டாட்டா காட்டி விட்டு பிளைட்டை நோக்கி இருவரும் சென்றார்கள்.

அவர்கள் தலை மறைந்தபின் ராஜேஷ்குமார், குருபிரசாத், விஜய் பிரகாஷ் மூவரும் கார்களில் ஏறி கம்பெனி நோக்கி சென்றார்கள். Write your reply...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top