• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kayam Kakkum kasaayangal....Thoothuvalai kasaayam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காயம்காக்கும் கசாயங்கள் - தூதுவளை கசாயம்.

ஒரு சகோதரி நாட்பட்ட வாயுத்தொந்தரவைப் பற்றிக் கேட்டிருந்தார். அதற்கு அருமையான மருந்து இருக்கிறது. கடைந்த மோரில் இரு சிட்டிகை அளவு பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து மோரை சுமார் 15 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் பெருங்காயம் நன்கு கரையும்வரை அதனை ஆற்றி அருந்தினால் வாயுத்தொந்தரவும் அதற்கு மூல காரணமான மலச் சிக்கலும் நீங்கி விடும். உணவில் பிரண்டையை சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. மூல நோய் உள்ளவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் பிடி கருணை லேகியம் எனக் கேட்டு வாங்கி இரவு படுக்கப் போகுமுன் ஒரு பெரிய ஸ்பூன் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.

மழை மற்றும் பனிக்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் வாட்டுவது சளி இருமல் மற்றும் வறட்டு இருமல் தொந்தரவுகள் தான். நெஞ்சில் சளி பற்றிக்கொண்டால் மூச்சு முட்டுதல் போன்ற தோந்தரவுகள் அதிகமாகும், அதோடு நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படலாம். இவைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் பல வகையான மூலிகைகளைப் பற்றி நம் சித்தர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவை தூதுவளை, ஆடாதோடை, சித்தரத்தை, அதி மதுரம், திப்பிலி மற்றும் துளசி. இவற்றில் தூதுவளை, ஆடாதோடையைக் கசாயம் செய்தும் அருந்தலாம் அல்லது துவையல் செய்தும் சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். ஆனால் சித்தரத்தை, அதிமதுரம் கசாயமாக மட்டுமே அருந்தப்பட வேண்டும். முதலில் சளிக்கான மூலிகைகளைப் பார்ப்போம்.

தூதுவளை, துளசி, ஆடாதோடை ஆகியவை நெஞ்சுச் சளிக்கும், இருமலுக்கும் ஏற்ற மருந்துகள். பொதுவாகவே இருமல் என்றால் சித்தரத்தை அதிமதுரம் தான் ஏற்றவை. இவை அனைத்தையும் போட்டு கசாயம் செய்யலாம். அல்லது வெறும் வறட்டு இருமல் தான் என்றால் சித்தரத்தையும் அதிமதுரமும் மட்டுமே போதுமானது. தயவு செய்து வறட்டு இருமலுக்கான கசாயத்தில் தூதுவளை துளசி சேர்க்க வேண்டாம். முதலில் சளித்தொந்தரவுக்கான கசாயத்தைப் பார்ப்போம்.

தூதுவளை கசாயம்:

தேவையான பொருட்கள்: 4 நபருக்கு

தூதுவளை இலை (முள்ளோடு கூடியது) - 15 (எண்ணிக்கை)
பொடி என்றால் - 1 ஸ்பூன்
ஆடாதோடை இலை - 4 (எண்ணிக்கை)
பொடி என்றால் - 1/2 ஸ்பூன்
துளசி இலை - ஒரு கைப்பிடி
சித்தரத்தை - அரை இன்ச்
அதி மதுரம் - 4 (எண்ணிக்கை)
வெல்லம்/கருப்பட்டி - தேவையான அளவு
தூய்மையான தண்ணீர் - 5 கிளாஸ்கள்.

மேற்கூறிய பொருட்களில் இலைகள் கிடைக்கவில்லை என்றால் பொடிகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். துளசி எங்கும் கிடைக்கும். நல்ல தண்ணீரில் இலைகளையோ பொடிகளையோ போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றியவுடன் பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டியைப்போட்டு மேலும் சிறிது தூய நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். வெல்லம்/கருப்பட்டிக் கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.

வடிகட்டிய இந்த கசாயத்தை பாலுடன் சேர்த்தும் அருந்தலாம், அப்படியேவும் அருந்தலாம். வயிற்றில் புண் உள்ளவர்கள் சித்தரத்தை சேர்க்க வேண்டாம். இந்தக் கசாயத்தை ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும். முதல் நாள் எந்த நேரத்துக்குக் கொடுத்தோமோ அதே நேரத்தில் அடுத்தடுத்த நாட்கள் கொடுத்தால் நல்லது. தூதுவளை மிகவும் சூடு. எனவே மூலச் சூடு உள்ளவர்கள் தூதுவளைக் கசாயம் குடிக்கும் போது பிரண்டைத் துவையல் சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது. (பிரண்டைத் துவையல் செய்யும் முறையையும்தெரியப்படுத்துகிறேன்).

வறட்டு இருமல் கசாயம்:

சிலருக்கு தொண்டையில் இர்ரிடேஷன் போல ஏற்பட்டு இருமல் வரலாம். இதற்கும் ஒரு கசாயம் இருக்கிறது. அதில் சித்தரத்தையும் அதிமதுரமும் தான் இடம்பெறும். வயிற்றில் புண் உள்ளவர்கள் சித்தரத்தையை விடுத்து வெறும் அதிமதுரத்தை வாயில் அடக்கிக்கொண்டு உமிழ் நீரை விழுங்கலாம்.

தேவையான பொருட்கள்: 4 நபருக்கு

சித்தரத்தை - 2 இஞ்ச்
அதிமதுரம் - 3 அல்லது 4 (இவை பார்க்க குச்சிகள் போல இருக்கும்)
மிளகு - 5 (எண்ணிக்கை)
தண்ணீர் - 4 கிளாஸ்கள்

சித்தரத்தையை சுத்தம் செய்து லேசாகத் தட்டிக்கொள்ள வேண்டும். அதிமதுரத்தையும் தட்டிக்கொள்ளலாம் அல்லது ஒடித்தும் போடலாம். தண்ணீரில் இவற்றைப் போட்டு பாதியாக வற்றும் வரையில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம். 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நாளைக்கு ஒரு முறை 1/4 கிளாஸ் கொடுக்கலாம். அப்படி மூன்று நாட்கள் கொடுத்தால் போதும். தயவு செய்து அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் சித்தரத்தையைச் சேர்க்க வேண்டாம்.
 
Rukmani Sankar

நாட்டாமை
Joined
Jan 7, 2019
Messages
70
Reaction score
68
Location
Chennai

Super sis, thx for the post
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அடிக்கடி கேள்வி படும் பெயர்கள் எதையும் உபயோகித்து இல்லை இனி வரும் காலம் அல்லோபதியை விட இது போல ஆரோக்யா ஆயுர்வேத வீட்டு குறிப்புகள் நல்ல உபயோகம் நன்றி மா ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top