• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kayam Kakkum Kasayangal - Enney theyththuk Kulikkalaam Vanga!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காயம் காக்கும் கசாயங்கள் - எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் வாங்க....

பழந்தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியமான அம்சம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல். வாரம் இரு முறை என்ற பாரம்பரியம் போய் இப்போது மாதம் ஒரு முறை கூட நாம் இதனை அனுசரிப்பதில்லை. முற்காலங்களில் வீட்டுக்கு விருந்தாளி வந்தால் மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து பெண்களுக்கு வெள்ளிக்கிழமையும், ஆண்களுக்கு சனிக்கிழமையும் என்ணெய் தேய்த்துக்கொள்ள கொடுப்பார்கள். விருந்தோம்பலின் உச்சக்கட்டம் அது. புற நானூற்றுப் பாடல்களில் கூட இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்கள் வாரம் ஒரு முறை எண்ணெய் பெறின் வெந்நீர் முழுகுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது எண்ணெய்க் குளியல்.

ஏதோ நல்லெண்ணெய் தேய்த்தோம் முழுகினோம் என்று செய்வதல்ல எண்ணெய்க் குளியல் அதற்கென முறை இருக்கிறது. காலையில் 8 மணிக்குள் எண்ணெய்க் குளியல் செய்து விட்டால் நல்லது. இயலாதவர்கள் அவர்களுக்கு உகந்த நேரம் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக மாலை நேரத்தில் எண்ணெய் குளியல் செய்யவே கூடாது. சிலருக்கு நல்லெண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன் படுத்தலாம். எண்ணெய் குளியல் அன்று மிகவும் எளிய உணவு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவத்தையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் எண்ணெய் குளியல் செய்தால் உடலின் உள் உறுப்புக்கள் தூண்டப்படும். அவற்றிற்கு புத்துயிர் கிடைக்கும். அது நிலைக்க வேண்டுமானால் அன்று செரிமான சுரப்பிகளுக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது.

மிக அதிகமான புளிப்பும், காரமும் எண்ணெயும் உணவில் அன்று இடம் பெறக் கூடாது. பொதுவாக அந்த நாட்களில் சீரக ரசமும், ஏதாவது ஒரு துவையலும் செய்வார்கள். வேண்டுமானால் அப்பளத்தை சுட்டுக்கொள்ளலாம். அன்று உணவில் மோர் அல்லது தயிர் சேர்ப்பது அவரவர் வழக்கத்தைப் பொறுத்தது. எந்தக் குளிர் காலத்திலும் மோர் அல்லது தயிர் சாப்பிட்டு பழக்கம் உள்ளவர்கள் எடுத்துக்க்கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது. துவையலும் நீர் காய்கறியான சுரைக்காயில் செய்ய வேண்டாம். அன்று கல்யாண பூசணி, புடலங்காய், தக்காளி, பீர்க்காங்காய் இவைகளை தவிர்த்தால் உடலுக்கு சீதளம் செய்யாது. இதர காய்கறிகளை பொரியல் செய்து சாப்பிடலாம்.

இனி எண்ணெய்க் குளியலுக்கு தயாராவோம்.

தேவையான நல்லெண்ணெயை (தேங்காய் எண்ணெய்) ஒரு சட்டியில் போட்டு லேசாக சூடு படுத்தவும். அதில் பூண்டு, மிளகு இவைகளைப் போட்டு மேலும் சூடு படுத்தவும். அவற்றின் சாரம் எண்ணெயில் இறங்கி விடும். இளஞ்சூடாக இருக்கும் போதே தேய்க்க வேண்டும். முதலில் தொடையில் ஏழு புள்ளிகள் வைத்து சூட்டை சரி பார்க்கவும். பின்னர் உச்சந்தலையில் வைத்து நன்கு அழுத்தித் தேய்க்கவும். கை கால்கள், பாதம் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம். கண்களை மூட வைத்து இமைகள் மேல் தேய்க்கலாம். உடல் முழுவதும் நன்றாகத் தேய்த்தானதும் சுமார் 20 நிமிடங்கள் ஊற விடவும். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது எண்ணெய்க் குளியலை கட்டாயம் வெந்நீரில் தான் செய்ய வேண்டும். என்ன கடுங்கோடை ஆனாலும் வெந்நீர் தான். கோடை காலங்களில் வெது வெதுப்பான வெந்நீரே போதுமானது.

20 நிமிடம் ஊறிய பின்னர் குளிக்கலாம். சீயக்காய் தான் பயன் படுத்த வேண்டும் என்பதில்லை. ஷாம்பூ போட்டுக்கொள்ளலாம். அதனால் தவறில்லை. குளித்ததும் தலை, பின் முதுகு ஆகிய இடங்களில் ஈரமே இல்லாதவாறு நன்றாக துவட்ட வேண்டும். குறிப்பாக நெற்றிப் பொட்டு எனப்படும் நெற்றி தலையோடு சேரும் காதுப்புறப்பகுதியில் நன்றாக துவட்டி விட்டால் சைனஸ் தொந்தரவு வராது. சாம்பிராணி போடுதல் மிக நல்லது. மதிய உணவில் சீரக ரசமும் , பருப்புத்துவையல்/ இஞ்சி கருவேப்பிலைத் துவையல் நல்லது. எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகளை கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். மேலே குறிப்பிட்ட சில காய்களை தவிர்ப்பது நல்லது.

உடலில் இருக்கும் அலுப்பு, மனதில் இருக்கும் டென்ஷன் என எல்லாமே போய் விட்ட ஒரு உணர்வு கிடைக்கும் எண்ணெய்க் குளியல் செய்தால். மதியம் உண்டு விட்டு உடனே உறங்க வேன்டாம். அரை மணி நேரம் கழித்து உறங்கலாம். உடலுக்கு நல்ல வலு சேர்க்கும் இந்த உறக்கம். பொதுவாக ஆண்கள் சனியன்றும் பெண்கள் வெள்ளியன்றும் என்ணெய் தேய்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் இன்றைய நடை முறையில் அது சாத்தியமில்லை என்பதால் ஞாயிறன்று இரு பாலருமே குளிக்கலாம். விடுமுறை தினங்களில் எந்தக் கிழமையாக இருந்தாலும் எண்ணெய் குளியல் செய்யலாம். கட்டாயம் வியாழன் அன்று மட்டும் வேண்டவே வேண்டாம். அன்று எண்ணெய் குளியல் செய்தால் குழந்தைகளுக்கு ஆகாது. அதனால் பெற்றோர் கவனமாக இருக்கவும்.

வெறும் வயிற்றில் தான் எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும். டிஃபன் சாப்பிட்டு விட்டோ, மோர் அருந்தி விட்டோ இதனைச் செய்யாதீர்கள். அப்படி செய்தால் தலைவலி, ஜல தோஷம், அலர்ஜி, தும்மல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

அன்றைய உணவு

சீரக ரசம்
பருப்பு அல்லது கருவேப்பிலை இஞ்சி துவையல்
சுட்ட அப்பளம்.

இதனைக் கடைப்பிடித்தால் உடலிலின் உள்ளுறுப்புக்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு நல்ல குளுமை உண்டாகும். வெயிலில் இருக்கும் புற ஊதக் கதிர்கள் நம் சருமம் மீது படுவதால் உண்டாகும் தாக்கம் குறையும். மனம் லேசாகும். குழந்தைகளுக்குக் கூட எண்ணெய் குளியல் செய்து வைக்கலாம். சில குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயே போதுமானது. செய்து பார்த்து விட்டு நற்பலனை அனுபவியுங்கள் நண்பர்களே! உங்கள் அனுபவங்களை என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் சீரக ரசம் மற்றும் இஞ்சி கருவேப்பிலை , பருப்புத்துவையல் செய்வது பற்றிப் பார்ப்போம்.
 




Preethu

இணை அமைச்சர்
Joined
Apr 18, 2018
Messages
662
Reaction score
841
Location
Chennai
Useful info, every sat I used to give both my daughters this oil bath... But I will not heat it... Actually I don't know... Now onwards ll try to heat and do... Thanks for the food tips u posted..
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
தெரியாத சில தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
எங்க வீட்டில் oil பாத் எடுத்த அன்று மதியம் தூங்கவே விடாம காவல் காப்பாங்க.... நீங்க சொன்ன விஷயங்கள் பயனுள்ளவை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top