• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Keladi kanmani 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
மெட்ரோ டிரெயினில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான் அன்று. ஏதேதோ எண்ணங்களின் ஊடே அலுவலகத்திற்குள் நுழைய, அன்று ஏகப்பட்ட பணி. வரிசையாக அமைந்திருந்த மீட்டிங் முடித்து மின்தூக்கியில் முப்பத்திரண்டாவது மாடியில் உள்ள அவனின் இருக்கைக்கு வர, அன்றிருந்த அலுவலக வேலை அவனை வேறெதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை.
சற்று நேரத்தில் சகலமும் ஆடியது. தலைச்சுற்றலா, சற்று நேரம் பொறுத்துப் பார்த்தான். இல்லை அலுவலக மொத்தமும் ஆடிக்கொண்டிருந்தது. பில்டிங் கீழே சரிந்துவிடும் போல் அத்தனை ஆட்டம். எழுந்து நிற்க முயல, அவனையும் தள்ளியது அந்த ஆட்டம்.
இவன் காபினின் வழியே பார்க்க அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். என்றும் ஆடும் ஆட்டம் இல்லை இது. மற்ற நாளானால் ‘ஆடுதா ஓகே’ என்று பணியில் மூழ்கியிருப்பர். ஆட்டமும் சற்று நேரத்தில் அடங்கிவிடும். இன்றானால் எல்லாரும் ஓட ஆரம்பிக்க இவனும் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
மின்தூக்கியை இச்சமயம் பயன்பாட்டில் இல்லாமல் நிறுத்தி வைத்திருப்பர். அதனால் மொத்த கூட்டமும் படியில் இறங்க இவனும் அதையே செய்தான். முப்பத்திரண்டவது மாடியில் படியிருங்க ஆரம்பிக்க, நேராக நடக்க விடாமல் ஆட்டம் வேறு. கைப்பிடியின் உதவியுடன், பதட்டமான கூட்டத்தையும் சமாளித்து ஒரு வழியாய் இறங்கி முடித்த பின்பும் அந்தக் கட்டிடம் இன்னும் ஊசலாடுவதைக் காண முடிந்தது.
ஜப்பானின் கட்டிடங்களைக் கட்டும் முறை சற்று வித்தியாசமானது. ஓரளவிற்கேனும் நில நடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும், சிலது ரிக்டர் அளவு ஏழு வரையிலும். அதற்குமேல் வந்தால் மண்ணோடு மண் தான்.
அலுவலகத்திலிருந்து கிளம்ப எந்த டேக்ஸியும் கிடைக்கவில்லை. மெட்ரோ சேவையும் நிறுத்தப் பட்டிருந்தது.
சாலையெல்லாம் அல்லோல்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் வீடு போய் சேரும் உந்துதலில் இருக்க, ஆட்டம் ஒருபக்கம் சிறு சிறு இடைவெளியில் இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தது. இதற்கு மேல் அதே இடத்தில் நிற்க எத்தனிக்காமல், நடராஜா பயணத்தில், வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான்.
நடையைத் தொடர்ந்தபடி, கார்த்தியிடம் மெசேஜ் மூலமாய்ப் பேசினான். போனில் அழைக்க முடியவில்லை. எல்லாச் சேவையும் அவுட். கடவுள் புண்ணியத்தில் மெசேஜ் மட்டும் வேலை செய்தது. கார்த்தி நல்ல வேளையாக இன்று வீட்டில் இருந்தானாம். பதில் மெசேஜில் தெரிவித்தான். வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் முகில். இருபது கிலோமீட்டர் குறையாமல் இருக்கும். இயற்கையின் கோபம் இன்று அதிகமாகிவிட்டது.
அந்த நடைப்பயணத்தில் மைதிலியுடனான முதல் நிலநடுக்க அனுபவம் ஞாபகம் வந்தது. இவன் ஆபிஸில் இருந்த சமயம் போன் செய்தாள் பதட்டமாக,
“என்னங்க, பில்டிங் ஆடுது. நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.”
அவள் பதட்டத்தில் சிரித்தான் இவன். இவன் முதல் தடவை எத்தனை பதட்டப்பட்டான் என்பதை மறந்தவனாய்,
“அதெல்லாம் ஒன்னும் பயப்படாதே. இந்த ஊரில் இப்படி அடிக்கடி வரும்..”
“அப்படியா, நிஜம்தானா? அப்போ வீட்டுக்குள்ள போகட்டுமா?”
சிரித்துவிட்டான், அவள் கேட்ட தொனியில்.
“ஏங்க சிரிக்கிறீங்க..?” என்றாள் பாவமாய்.
“ஒண்ணுமில்லைம்மா, நீ வீட்டுக்குள்ள போ, வாசல் கதவை மட்டும் திறந்து வை. ரொம்ப ஆட்டம் ஜாஸ்தியான மட்டும் வெளியே ஓடு சரியா?”
“ம்ம்” என்றபடி போனை வைத்தாள்.
அன்றிரவு வீடு திரும்பியதிலிருந்து நிலநடுக்கம் பற்றிய கூகுளில் தன் கண்டுபிடிப்புகள் அத்தனையும் அவனிடம் சொல்லிவிட்ட பிறகு தான் அவளுக்குப் நிம்மதி. ஆனால் அவள் இருந்த வரை இதைப் போல் ஒரு பேரிடரை அவள் பார்த்ததில்லை.
இந்த முறை சற்றுச் சேதம் ஜாஸ்தி. நான்கு மணிநேர நடைப்பயணத்தில் வீட்டை அடைத்தான். அவன் வீடு இருந்த இடத்தில் சாலை எல்லாம் விரிசல், நிறைய இடங்களில் தண்ணீர் பைப் உடைந்து நீர் வெளியாகியிருந்தது. முகிலின் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. இவன் வந்து சேர்ந்த சமயம் மின்தூக்கியும் பணிசெய்ய ஆரம்பித்திருந்தது.
கார்த்தி அப்பார்ட்மெண்டில் சுத்தமாகத் தண்ணீர் நின்றுவிட்டதாம். இருபத்தி நான்கு மணிநேரமும் நீர் வரத்து இருக்கும் ஜப்பானில், திடீரென்று தண்ணீர் நின்றுவிட்டால் படு சிரமமாயிற்றே. அதுவும் குழந்தையை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வான்? அவனை இந்த வீட்டில் வந்து தங்க சொல்ல, அதுவே நடந்தது.
மூன்று நாள் வரை எந்த அலுவலகமும் இல்லை. கடைகள் இருந்தாலும் போக்குவரத்து அதிகமில்லாததால் பால், தயிர், போன்ற அத்தியாவசிய சாமான்களே பற்றாக்குறையாக இருந்தது. இருப்பதை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
பூமியைப் போலப் பொறுமை வேண்டும் என்பது பழமொழி. இந்த யுகத்தில் அந்தப் பூமியும் பொறுமை இல்லாமல் ஆட ஆரம்பித்துவிட்டது, மனிதனின் தவறுகளால்.

பிரச்சனை அத்தோடு முடியவில்லை. அணுமின் நிலையம் பாதிப்படைந்ததால், அதிலிருந்து கதிர்வீச்சு இருக்கலாம் என்ற புரளி பரவியது. இங்குள்ள அரசாங்க அதிகாரிகள் அந்த அளவுகள் கட்டுக்குள் இருக்கிறது, மக்களுக்கு எந்த விதமான தீங்கும் அதனால் இல்லை என்று சொல்லியிருந்தாலும், அவ்வூரில் பணி நிமித்தம் தங்கியிருந்த வெளிநாட்டினர் தற்காலிகமாகத் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்து விட்டனர். கார்த்தியும் அதே போல் ஒரு நிலையில் இருந்தான்.
“திவ்யா நிரல்யாவை கொஞ்ச நாள் ஊருக்கு அனுப்பிடலாம்னு இருக்கேன் முகில்.”
இன்னமும் நிலவரம் சரிவராமல், அவர்கள் முகில் வீட்டில் தங்கி இருந்தனர். மனைவி மகள் உறங்கிவிட்ட சமயம் முகிலிடம் கார்த்தி இப்படியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இந்தக் கதிர் வீச்சு பிரச்சனையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்கலாமாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.”
“நீ...?”
“நான் இப்போதைக்குப் போகலை...”
அதன்பின் இரண்டு நாளில் மனைவி குழந்தையை ஊருக்கு அனுப்பிவிட்டு அவன் அப்பார்ட்மெண்டுக்கு சென்றுவிட்டான்.
அவர்கள் இருவரும் வசிக்கும் பகுதியில் ஏகப்பட்ட இந்திய குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பூகம்பத்தின் விளைவால், அந்தப் பகுதியே காலியானதைப் போல் ஒரு உணர்வு. ஏகப்பட்டவர்கள் கிளம்பியிருந்தனர்.
ஜப்பானியர்கள் இருந்தார்கள், அவர்கள் ஊர் ஆயிற்றே. எங்கும் செல்ல அவர்கள் நினைக்கவில்லை. எந்த விதமான சூழ்நிலைகளிலும் தங்கள் நாட்டை விட்டுத் தரவும் மாட்டார்கள். அத்தனை தேசப்பற்று.
நாம் நம் ஊரினை குறித்துக் குறை சொல்வதைப் போல் அவர்கள் ஒரு நாளும் சொல்லி முகில் கேட்டது கிடையாது. அத்தனை நிறைவாக அவர்கள் சர்க்காரும் இருந்தது.
இதற்கிடையில் ஊருக்குச் சென்று விட்ட கார்த்தியின் மனைவியால் அவனுக்கு நாளுக்கு நாள் தொல்லை அதிகமானது. சிறிது காலம் அவனும் அங்கு அவர்களுடன் வந்து இருக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தாள் திவ்யா.
“கார்த்தி நீங்களும் கொஞ்ச நாள் இந்தியா வந்திடுங்களேன், ப்ளீஸ்...”
“உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது திவ்யா.”
“அடம்பிடிக்காதீங்க, கொஞ்சம் வந்துட்டு போங்க, நாம தான் முன்னமே மூணு வாரம் லீவ் சொல்லியிருந்தோமே, அதைத் தானே எடுக்கச் சொல்றேன்.”
“இல்ல டி, முகிலை இங்க தனியா விட யோசனையா இருக்கு...” என்றவன் கூற்றில் அவளுக்கும் உடன்பாடு இருந்தது, அதற்காக இவனைக் குடும்பத்தை விட்டு தனியே விடவும் அவளுக்கு மனமில்லை.
“அவரையும் சேர்த்து ஊருக்கு கிளப்புங்க, கொஞ்ச நாள் தானே? நிலைமை சரியானதும் போயிடலாம்...”
“அது நடக்காதக் காரியம், அந்த கம்பெனியே அவன் தான் தூக்கி நிறுத்தணும்ன்ற அளவுக்கு யோசிப்பான்...”
“ப்ளீஸ் கார்த்தி என்னை படுத்தாதீங்க. சீக்கிரம் இங்க வர ஏதாவது வழி பண்ணுங்க...” என்றபடி ஃபோனை வைத்தாள்.
கார்த்தி யோசிக்க வேண்டியிருந்தது. இது முதல் தடவை இல்லை திவ்யா சொல்வது. பல தடவைகள் சொல்லிவிட்டாள். இதற்கு மேலும் தாமதிக்க முடியாது.
அன்று வீட்டிற்குத் திரும்பியிருந்தவன், இரவு உணவிற்காக முகிலையும் தன் இல்லத்திற்கு அழைத்திருந்தான். அவன் வரும்முன் சில ஃபோன் கால்களை முடித்தவன், தன் காரியம் வெற்றியடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டியபடி, சமையலை தொடர, சிறிது நேரத்தில் முகிலும் வந்தான்.
நண்பர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி சந்தித்துக் கொள்ள நேரம் வாய்த்திருக்கிறது. வேலைப் பளுவும், குடும்பத்தை ஊருக்கு அனுப்ப வேண்டியிருந்த வேலை என்று ஆளுக்கு ஒரு பக்கம் இத்தனை நாளும் பிஸியாய் இருந்தவர்கள், இன்று மிகவும் சுகந்திரமாய் இருந்தனர்.
முகிலுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் கார்த்தி சமைத்து வைத்திருந்தான். முகிலும் இன்று ஏனோ சலனமற்றிருந்தான். சற்று நேரத்தில் அது கெட்டுப்போகும் என்ற உண்மை கார்த்திக்கு மட்டுமே தெரியும்.
ஒரு தமிழ் படத்தைப் பார்ப்பதில் மூழ்கியிருந்த இருவரையும், கலைத்தது முகிலின் அலைபேசி. அவன் தந்தை தான்.
“அப்பா, என்னப்பா? இந்நேரத்துக்கு? நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கீங்க தானே.”
எப்போதும் பத்மநாதன் காலை வேளையில் மட்டுமே கூப்பிடுவார், இச்சமயம் போன் வந்ததும், கொஞ்சம் பதட்டமானான் முகில்.
“நல்லாயிருக்கோம் ப்பா, உன்கிட்ட முக்கியமான விஷயம் பேச தான் இந்நேரம் கூப்பிட்டேன் முகில்.”
“சொல்லுங்கப்பா...”
“மைதிலி இறந்து ஒரு வருஷம் முடிஞ்சது, அதற்கான காரியங்கள் சிலதை நீ செய்யணும். நீ கொஞ்சம் ஊருக்கு வர வேண்டியது இருக்கும். அம்மாவை ஆஸ்பத்திரியில் காட்ட வேண்டிய வேலைகள் வேற கொஞ்சம் இருக்கு, நீ வந்தா தான் இது எல்லாம் நடக்கும். உன்னால் இப்ப வர முடியுமா?”
வெளிநாட்டில் பிள்ளைகளை விட்டுவிட்டு தன்னந்தனியே ஊரில் காலம் கழிப்பது எத்தனைச் சிரமம்? அவர் நிலை புரிந்தும், அவன் உடனே பதில் கூறவில்லை.
“உன் வசதியையும் பாருப்பா, ஆஸ்பத்திரி வேலை கூடப் பரவாயில்லை, தர்ப்பணம் சீக்கிரம் கொடுக்கணும், அது செய்யாம இழுத்தடிக்கிறது குடும்பத்துக்கு நல்லதில்லையாம், அம்மா அதையே நினைச்சு ரொம்ப கவலைப்படுறா...”
“எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, நான் யோசிச்சிட்டு, ஆபிஸ் நிலையும் பார்த்திட்டு சொல்றேன்...”
அவன் குரல் தணிந்துவிட்டது. தன் பெற்றவர்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமையிருக்கிறதே. அதுவுமில்லாமல், மைதிலி பெயரை கேட்டதும் அவனின் இலகுவான மனநிலை மாறிவிட்டிருந்தது.
அதற்குள் தன் தனிமை வாழ்க்கையில் ஒரு வருடம் கடந்து போய் விட்டதா? அவன் யோசனையைக் கலைத்தது பத்மநாதனின் குரல்.
“சரிப்பா, யோசிச்சிட்டு சொல்லு. கார்த்தியை ரொம்ப விசாரித்ததா சொல்லிடு, வைக்கட்டுமா...”
ஃபோன் பேச்சு முடித்தவன் கார்த்தியிடம் எதுவும் சொல்லாமல், யோசனையில் ஆழ்ந்தவன், சற்று நேரத்தில் கிளம்புவதாகச் சொல்ல,
“இங்கேயே தங்கிடேன் முகில் நாளைச் சனிக்கிழமை தானே...” என்றான் கார்த்தி.
“இல்லை கார்த்தி கிளம்புறேன்...” அவன் வாய் சொன்னாலும், யோசனையாய் அதே இடத்தில் நின்றான்.
அவன் நிலையைக் கண்டபடி, “என்ன முகில், எதுவும் பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே.” என்றான் தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல.
தெரிந்த விஷயத்தையே அவன் கேட்க, முகிலும் சொல்ல, “அவங்க சொல்றது சரிதானே, செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்கா செஞ்சிடு முகில்...” என்றான்..
அவனைக் கேள்வியாய் பார்த்தவன், “உடனே எந்த முடிவுக்கும் என்னால் வர முடியலை கார்த்தி. யோசிக்கணும்...” என்றபடி கிளம்பியும் விட்டான்.
அவன் சென்றதும் பத்மநாதனுக்கு ஃபோன் செய்தான் கார்த்தி.
“அப்பா, இப்பதான் கிளம்பினான். ஊருக்கு கிளம்பிடுவான்னு நினைக்கிறேன் ப்பா, நான் பார்த்துக்குறேன். ஆனா அவன் வந்தா ஒரு மூணு மாசமாவது அவனை அங்கேயே வச்சிகோங்க.”
“சரி கார்த்தி. நீ செய்ற உதவிக்கெல்லாம் ரொம்ப நன்றி ப்பா..” என்றபடி ஃபோனை வைத்தார். கார்த்தியும் தன் பயணத்துக்குத் தயாராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Last edited:

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
மனைவி இல்லை
அம்மா அப்பா ஊரிலேயே
ஜப்பானில் நிலநடுக்கத்தில்
கஷ்டம்
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Thanks Banu ma,Yasmine, Chitra,saro,sri pathi,akila??
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top