• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kk 25-Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 25

இத்தனை நாள் தாமதித்தவனுக்கு இப்போது அப்படி இருக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தவன் தன் பார்மல்ஸ் உடையில் இருந்து மாறி இப்போது ஒரு டி ஷர்ட், ‘போலீஸ்’ கூலர்ஸ் என்று தயாரானான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணாடி முன் அதிக நேரம் நின்றதில் ஜம்மென்று கிளம்பி விட்டிருந்தான். அவனின் செய்கையில் அவனுக்கே முகத்தில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

உதடுகளில் மென்னகை நிலையாய் நிற்கக் கீழே பார்க்கிங் வந்தவன், வண்டியில் ஏறவும் கார்த்தியிடம் தன் விஷயத்தைச் சொல்ல எண்ணி, அவனை அழைத்தான்.
“தமிழினியை இன்னிக்கி உங்க வீட்டில் வச்சிக்கோ கார்த்தி, கண்மணி வந்து கூப்பிட நேரமாகும்...”
“என்ன ஆச்சு, எனி பிராப்ளம்?”
“இல்லை... அவளை வெளியே கூப்பிட்டு போறேன் அதான்...”
தயக்கத்துடன் அவன் சொன்னாலும், நண்பனின் குரலில் புரிந்துவிட்டது கார்த்திக்கு எல்லாமே. இதற்காகத் தானே நான் காத்துக் கொண்டிருந்தேன் என்று சந்தோஷப்பட்டான் கார்த்தி.
“ஓகே நாங்க பார்த்துக்குறோம். ஹாவ் எ நைஸ் டைம்...”என்று வைத்தவன், திவ்யாவிடம் ‘வெற்றி’ என்று கைகோர்த்துக் கொண்டான். நண்பனின் வாழ்க்கை சரியானதற்கு கார்த்தி திவ்யாவின் பங்கு அதிகம்.

கண்மணி வேலைச் செய்யும் பள்ளிக்கு சென்ற முகில், அவளைப் பார்க்க அனுமதி கேட்டு ரிஸப்ஷனில் காத்திருந்தான். சற்று நேரத்தில் வந்தவளுக்கு இவனை அங்குக் கண்டதில் ஆச்சரியம். தன் வகுப்பில் உள்ள பிள்ளையின் பெற்றோரோ எவரோ என்று நினைத்து அங்கு வந்தாளே!
“என்ன முகில் என்ன திடீர்னு வந்திருக்கீங்க? தமிழுக்கு எதுவுமில்லையே...?” அவள் பதட்டம் கண்டு, இல்லை என்பது போல் தலையசைத்தவன்,
“ஏன் நான் சும்மா உன்னைப் பார்க்க வர கூடாதா?” என்றான்.
‘என்னாது, சும்மாவா...? என்னடா என்னவோ மாதிரி பேசுறே? பார்வை வேற வித்தியாச படுதே.?’ என்றெண்ணியவளுக்கு அவன் முன் நிற்பதே இப்போது என்னவோ போலிருந்தது.
தயக்கங்களைத் தளரவிட்டு, “காலைல பார்த்திட்டு தானே போனீங்க? அதுக்குள்ள என்ன மறுபடியும்?” என்றாள் சட்டென்று குறைந்துவிட்ட குரலில்.
“அதுபத்தி தான் பேசணும். இங்க முடியாது... நீ லீவ் சொல்லிட்டு என் கூட வா”
சொன்னவன் பள்ளிக்கு வெளியே வந்து அங்குக் காத்திருக்க ஆரம்பித்தான். கண்மணிக்கு, நான் என்ன உன் வீட்டு நாய்க் குட்டியா என்ற ஆத்திரம். மனுசிக்கு எத்தனை வேலையிருக்கு.? திடீர்னு வான்ன எப்படி? ஆனால் என்ன செய்ய. அவளுக்கு அவனுடன் போக வேண்டும் என்ற ஆசை வந்து தொலைத்ததே...
அவன் சொன்னபடி அவனிடம் வர. “கார், பக்கத்தில் உள்ள பார்க்கிங்கில் விட்டிருக்கேன். அதுலையே போயிடலாம்...” அவன் சொல்ல,
“அப்ப என் சைக்கிள்...” என்றாள்.
“சைக்கிள் நாளைக்கு எடுத்துக்கோ, ஸ்கூல் கேம்பஸ்சில் தானே இருக்கு. பத்திரமா இருக்கும்...” என்று அதற்கான வழியை அவனே சொல்லி அவளைக் கிளப்ப,
‘ம்ம்’ என்றபடி வேக நடை போட்டு முன்னே சென்றவனைத் தொடர்ந்தாள்.

வண்டியினுள் ஏறியவர்கள் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். எங்கே அழைத்துச் செல்கிறான், என்ற கேள்வி கண்மணிக்குள் இருந்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
‘ஒதாய்பா...’ என்பது அவர்கள் சென்ற இடத்தின் பெயராம். அவர்கள் நின்று கொண்டிருந்த பக்கமிருந்து பார்க்க அங்கு ஓடிக்கொண்டிருந்த நீளமான நதியின் குறுக்கே ஒன்றல பல மேம்பாலங்கள் வரிசையாய். எல்லாப் பாலத்திலும் வாகனங்கள் அணிவகுத்துக் கொண்டிருந்தன. மாலை வெயிலில் ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு விதமாய் அழகாய் தெரிந்தது.
இஷ்டப்படுகிறவன் அருகில் இருக்கும்போது இந்த உலகமே அழகாய் ஆனதோ! கண்மணிக்கு தன் மனநிலையை கணிக்க முடியவில்லை. ஏன் இங்கு அழைத்து வந்தான் என்று ஒரு பக்கம் குழப்பமாகவும், இந்த தனிமையை எண்ணி ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நீளமும் அகலமும் காவேரியை நினைவுபடுத்துவது போலிருந்தது அந்த ஆறு. அதை ஒட்டியிருந்த பூங்காவில் நடப்பதற்கு மட்டும் வழிவிட்டு, மற்ற இடங்களிலெல்லாம் குட்டி செடியும் கொஞ்சம் மரங்களும்!
அவர்கள் இருந்த பூங்காவை ஒட்டியபடி வானுயர கட்டிடங்கள். இவற்றிற்கு நடுநாயகமாய் காதலர்கள் சந்தித்து கொள்ளும் இடமாய் அமைந்திருந்தது அவ்விடம்.

அந்த இயற்கை சூழல் கண்மணியின் மனதில் அழகாய் பதிந்துக்கொண்டது. ரம்மியமான சூழ்நிலை. இதையெல்லாம் ரசிக்கும்படியான ஒரு இருக்கையில் அவளை அமரச் சொன்னவன், தானும் நெருங்கி அவள் பக்கமே அமர்ந்தான். கால் மேல் கால் போட்டுக் கொண்டு தோரணையாய் அவள் தோளை சுற்றி தன் கையை வேறு போட்டுக் கொண்டான், அதுவும் உரிமைக்காரனாய்.
கண்மணிக்கு என்னவோ போலிருந்தது... அவன் செய்வது எல்லாம் அவனின் விதி மீறல்கள்.
‘நீ இப்படி எல்லாம் செய்யும் ஆள் இல்லையே. ’
அவள் எங்கே செல்கிறோம் என்பதைக் கேட்காததால், அவனும் எதுவும் சொல்லாமல் இங்கு அழைத்து வந்திருக்கிறான். அவன் செய்கையெல்லாம் பிடித்திருந்தாலும், ஏனோ ஒரு படபடப்பு அவளுக்குள். சந்தோஷ நிலைகளில் ஒரு படபடப்பு வருமே அதே போல்.
அவன் பக்கம் இப்படி அமர்ந்திருப்பது இன்பமாய் ஒரு இன்ப அவஸ்தை.
“கண்மணி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
அவன் கைபோட்டது அவளைப் பாதிக்கவில்லை என்பது போல் இருந்தவளுக்கு இப்போது அவன் அவள் தலை பக்கம் குனிந்து சொல்லவும், நெஞ்சம் தடதடத்தது.
“சொல்லுங்க...” அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.
“கண்மணி நீ என் பொண்ணுக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்கிறதுபோல, நானும் உனக்கு ஒரு நல்ல கணவனா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன்...உனக்கு அதில் சம்மதம் தானே...” என்று முகில் அவன் நினைத்ததைச் சொல்லிவிட்டான்.

‘அப்படியா? அயம் வெயிட்டிங்’ என்று சொல்லலாம் தான்.
அவன் சொன்னதில் அவனை நிமிர்ந்து பாராமல் இருந்த கண்மணிக்கு இத்தனையும் மனதில் ஓட, பதில் சொல்ல நினைத்தாலும் உதடுகள் திறப்பேனா என்றிருந்தது. இந்தத் தாமதிப்பில்,
“உனக்கும் சம்மதம் தானே...” என்றான் இரண்டாம் முறையாய்.
“என் சம்மதத்தை நான் ஏற்கனவே சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன்.” என்றாள், வரவழைத்துக் கொண்ட சீரியஸான முகத்துடன்.
அவள் சொன்ன பிறகு இருவருக்கிடையில் ஒரு நீண்ட அமைதி.
என்றும் தனக்குச் சரிக்குச் சமமாய் பேசுபவள் இன்று அமைதியில் மூழ்கி தன் கை விரல்களைப் போட்டு பிசைந்து கொண்டிருக்க, அவன் வலக்கரத்தைக் கொண்டு இப்போது அவளின் தளிர் விரல்களைப் பற்றினான். அதனை தன் இரு கைகளுக்குள் பொதிந்து வைத்தபடி
“இன்னும் ஏதாவது கேட்க இருக்கா என்கிட்ட?”
கண்மணிக்கும் இப்போது வாயைத் திறந்தால் பேச்சு வரவில்லை, வெறும் காத்து தான் வந்தது.
‘நிறைய இருக்கு, ஆனா கையை விட்டா தான் கேட்க முடியும்.,, ’ அவள் மனசாட்சி சொன்னதை எல்லாம் மீறி, 'இல்லை’ என்பது போல் தலையாட்டி வைத்தாள்.
அவள் பதில் தெரிந்ததும், “உனக்கு ஒரு அன்பளிப்பு தரணும்...” என்றான்.
அவள் அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருக்க, தன் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு வெல்வெட் டப்பாவை எடுத்தான். அதிலிருந்து ஒரு பிளாட்டினம் மோதிரத்தை எடுத்தவன், அவளைப் பார்த்து தான் பற்றியிருந்த அவளின் வலக்கையைத் தேர்ந்தெடுத்தான்.
மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தவன், குனிந்து அதே கையில் முத்தமிட்டான். அவன் செய்கையில் விளைந்த சந்தோஷத்தில் கண்மணிக்கு கண்கள் பணிந்தன. வடிகின்ற கண்ணீரை துடைக்க அவள் கைகள் இரண்டுமே அவள் வசம் இல்லை.
அவளைப் பார்த்திருந்தவன் அவளைத் தன் தோளோடு சேர்த்துக் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான். காதலுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் கண்மணி. அவளின் பல மாத வேண்டுதலுக்குக் கிடைத்த பலன். முகில் அவளை ஏற்றுக் கொண்டான்.
அவன் அணைப்பில் இருந்தவளின் மோன நிலை சில பல நேரம் தொடர்ந்தது.
தமிழினியை அழைக்க கண்மணியை தனியே செல்ல விடாமல் கூடவே வந்தான் முகில். திவ்யா ‘ராகிங்’ செய்வாள் என்று தெரிந்து கொண்டானோ என்னவோ. அவளுடன் சேர்ந்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த தமிழினியை தன் தோளில் தூக்கிக் கொண்டான்.
அவன் முன் எதுவும் கேட்க வழி இல்லாத திவ்யாவை ஏமாற்றாமல், தன் மோதிர விரலை அவளிடம் காட்டி சந்தோஷப்படுத்தினாள் கண்மணி. தோழிகள் இருவர் முகங்களிலும் புன்னகை.
வீடு வந்ததும் கண் முழித்த தன் மகளுக்குக் கண்மணி பால் கொண்டு வர, தமிழுக்கு இப்போது தூக்கம் தெளிந்துவிட்டது. எப்போதும் போல் தன் பேச்சாற்றலை காண்பிக்க ஆரம்பித்தாள்.
“ப்பா, நிரல்யாவோட பாப்பா இன்னிக்கி எங்களை கிக் பண்ணிட்டு, உள்ளே இருந்து...” என்றாள் மழலையில்.
“அப்படியா குட்டி...” என்ற முகில் தமிழினியிடம் கேட்டாலும், பார்வை கண்மணியின் வசம்.
தந்தையிடம் மேலும் பேச்சு வளர்க்காமல் ஓடிச் சென்றவள், கண்மணியின் வயிற்றில் காதை வைத்து ஒட்டுக் கேட்பதை போல் செய்தாள்.
பிள்ளை என்ன சொல்லப் போகிறாள் என்பது இருவருக்கும் புரிந்தது. பிள்ளை கவனிக்காதவாறு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“நம்ம பாப்பா எப்போ வந்து என்னை கிக் பண்ணும்?” என்றாள் முகிலிடம்.
கண்மணி இந்தப் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருக்க, அவனோ, “சீக்கிரமே” என்றான்.
“ஹைய்யா, ஜாலி” என்று குதித்த குழந்தை பெற்றோரை சேர்ந்தார் போல் கட்டிக் கொண்டது.

தன் மனைவி இறந்ததும் தன் வாழ்க்கை அஸ்தமமானது என்று முகில் நினைத்தாலும், அவனுக்கு அப்படி அமையவில்லை. அவனுக்காக கண்மணியை படைத்து அவளை அவனிடம் சேர்த்தும் வைத்திருக்கிறது விதி. விதி வலியது தான், அதில் சில நன்மைகளும் அடங்கும். முகிலின் மனைவியாய் மட்டும் இல்லாமல் தமிழினியின் அன்னையாகவும், எப்போதும் அவனைக் காதலிப்பவளாகவும் இருப்பாள் கண்மணி.
வாழ்க வளமுடன்.
 




Last edited:

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Again and again read panna thonuthu intha story and this my favourite story and again thank you sis
Happy to hear this ma..
Thanks
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top