• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kk24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 24

“ஐயோ...” சட்டென்று கண் விழித்தான்.
இத்தனை நேரம் தான் அனுபவித்த அத்தனையும் கனவு. தான் கண்டதிலேயே மகா கெட்ட கனவு இதுதான். வாழ்க்கையில் எதையும் தாமதிக்கக் கூடாது என்பதை அவனுக்கு உணர்த்திவிட்ட கனவு.
படுக்கையில் இருந்து எழுந்தவன், கிட்சனிலிருந்தவளிடம் வந்து,
“ஏன் டி நேரில் தான் நான் சொன்ன பேச்சு எதையும் கேட்க மாட்றே, இப்ப கனவுலயும் ஆரம்பிச்சிட்டியா?” என்று கேட்க,
‘ங்கே’ என்று விழித்தது அவளே தான்.
காலையிலேயே சம்மந்தமே இல்லாமல் சுப்ரபாதமா? என்றைக்கும் இல்லாத இந்த டி அழைப்பு. இதுவும் நல்லாத்தான் இருக்கு என்றிருந்தது. ஆனாலும் தான் ஒன்றுமே செய்யவில்லையே, எதற்கு இப்படிக் குதிக்கிறான்? அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் என்ன பண்ணேன்?” என்றாள்.
“நீ ஒண்ணுமே பண்ணலைன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்.”
‘இந்த மனுஷனுக்கு என்னவோ ஆகிடுச்சு...’ என்றெண்ணியவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தனை பதட்டத்தில் இருந்தான். இவள் அமைதி காக்க, அவன் கண்ட கனவை அவளிடம் விளக்கமாகச் கூறியப் பின்,
“திரும்பி பார்த்தா ஆளை காணோம், எனக்கு எப்படி இருந்தது தெரியுமா...?”
அவனின் முதல் அக்கறையை அன்று கண்டாள்... கண்மணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகமெல்லாம் புன்னகை சூழ,
“எப்படி இருந்தது?” என்றவளை முறைத்தபடி சென்றுவிட்டான்.
கனவில் சொல் பேச்சு கேட்கவில்லை என்பதற்கு நினைவில் திட்டு வாங்கினாள் கண்மணி.
ஆனாலும் அவன் பின்னோடு போனவள் ,
“அதான் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இந்த சேர்ந்து வாழ்றதுன்னு சொன்னீங்களே, அப்புறம் என்னவாம் ”
சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டாள்.

அவனுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. மாறிவிட்ட மனநிலையை இப்போதே ஒத்துக்கொள்ளவும் தோன்றாமல், அவளை முறைத்த வாக்கிலேயே அந்த இடத்திலிருந்து போய்விட்டான்!

அவள் தமிழுக்கு மட்டுமில்லை தனக்கும் இன்றியமைதவளாக ஆகிப் போனாள் என்பதை முகில் இந்த கொஞ்ச நாளில் உணர்ந்திருந்தான் தான். ஆனால் மைதிலி இடத்தில் மனைவி என்ற உரிமையைத் கண்மணிக்கு தரும் தயக்கம் மட்டும் இன்னமும் நீடித்தது. இதற்கு சீக்கிரமே ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதை அவன் மனசாட்சி அவனுக்கு நினைவுப்படுத்தியது.


இதனிடையில் திவ்யா இரண்டாம் முறையாய் கருவுற்றாள். பிள்ளைகள் நிரல்யா, தமிழினி இருவரிடமும் இன்னொரு குட்டி பாப்பா வரப் போவதை சொல்ல அவர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். வரப் போகும் குழந்தையைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டனர். அதற்கெல்லாம் பிள்ளைகளுக்கேற்ப பதில் சொல்லிவிட்டாலும், இதைச் சாக்காக வைத்துக் கொண்ட திவ்யா,
“உனக்கும் தம்பி பாப்பா வேணுமின்னு உன்னோட அப்பாக் கிட்ட சொல்லு குட்டி, கட்டாயம் கிடைக்கும்...” என்றாள், கண்மணியின் முறைப்பைக் கண்டு கொள்ளாது.
தமிழ் ஆவலாகி, “அப்டியா...” என்று யோசிக்க ஆரம்பித்தது. கண்மணிக்கு இதைக் கண்டதில் கோவம்.
“ஹேய் சும்மா இரு திவ்யா, அவளைக் கிளப்பி விடாதே! என்னைப் பிடுங்கி எடுப்பா. ப்ளீஸ் திவ்யா..”
“பிழைச்சுப் போ...’' என்று தோழியை விட்டாலும் அவள் சொன்ன வாக்கியம் அந்த பிள்ளையின் மனதில் நச்சென்று பதிந்துவிட்டதை இருவரும் அறியவில்லை.
அன்றிரவு தந்தை பணியில் இருந்து திரும்பி வரவும், அவன் பின்னோடையே அலைந்தாள் தமிழினி.
“ப்பா, என்கு குட்டி தம்பி பாப்பா வேணும். எப்போ வரும்?”
முகில் அவள் கேள்வி புரியாமல் கண்மணியை நோக்க, அவளோ அவன் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்தாள்.

தமிழினி அவள் தந்தையை விடாது கேள்வி கணைகளால் துரத்த, கொஞ்சம் புது விளையாட்டுச் சாமான்களை அவளுக்குப் பிரித்துக் கொடுத்து, திசை திருப்பினான். சமையலறைக்கு வந்து கண்மணியிடம்,
“சத்தியமா என்னால முடியலை. ஏதாவது செய்யேன்... கொஞ்சம் அவளை சமாளியேன்...” என்றான் பாவமாய்!
அங்கும் அவனைத் துரத்திக் கொண்டு அந்தக் குட்டி,
“ப்பா எனக்கும் குட்டி பாப்பா வேணும்...” என்றாள் இம்முறை தெளிவாய்.
பல முறை அதே வாக்கியத்தைச் சொல்லி சொல்லி, வாக்கிய முறையே தெளிவாயிற்று. பதிலே இல்லாத கேள்விகள் கேட்பதில் மகள்களே சிறந்தவர்கள்!

இவன் என்னென்னவோ அதற்குப் பதில் சொல்லிப் பார்த்தும் அவனின் மகள் சமாதானமாகவில்லை. அவன் திணறுவதைப் பார்க்கத் தான் கண்மணிக்கு எத்தனை சந்தோஷம்? மனம் குளிர அதை ரசித்து முடித்தவள், தமிழினியை தூக்கி கிட்சன் மேடையில் அமர வைத்தாள்.
“நீ தினமும் சாமிக்கிட்ட எனக்குத் தம்பி பாப்பா வேணும் சாமின்னு நிரல்யா மாதிரி கும்பிடுவியாம். நீ கேட்டதும் சாமி உனக்குச் செஞ்சி தருவாங்களாம்...”
மூன்று வயது பிள்ளைக்கு என்ன தெரியும்?
“அப்டியா! அது எப்டி இருக்கும்?”
“இதே மாதிரி கண்ணு, மூக்கு, குட்டி வாய், குட்டி தொப்பை...” சொல்லியபடி ஒவ்வொரு இடமாய்த் தமிழினியை தொட்டுக் காண்பித்துக் கிச்சு கிச்சு மூட்ட, அவள் சிரித்தாலும் காரியத்தில் கண்ணாய்,
“நான் சாமி கிட்டச் சொல்ல போறேன்...” என்று இறங்கி ஓடிவிட்டாள்.
“மெதுவா போடி என் அவசரக் குடுக்கை...” என்று சொல்லிவிட்டு நிமிர, முகில் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கேயே நின்றிருக்கிறான், வழக்கத்துக்கு மாறாய்!

அவனின் இந்த புதிய பார்வையை காணவும் அவளின் இதயக் குதிரை வேகமாய் ஓட ஆரம்பித்தது. அப்பார்வையில் ஒன்றிப் போய், அவனை இவளும் பார்க்க, இருவரும் இப்போது வேறு உலகத்தில் ஐக்கியமாகியிருந்தனர். அதிலிருந்து முதலில் நினைவுக்கு வந்தது கண்மணியே. சட்டென்று வேறு பக்கம் திரும்பியவள், என்ன செய்வதென்று தெரியாது பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள்.
அந்தச் சத்தத்திற்குப் பிறகே முகிலும் நினைவுக்கு வந்தான்.

“எத்தனை அழகாய் சமாளிச்சிட்டே என் பொண்ணை...”

அவனை முறைத்தவள்,
“மிஸ்டர் மூங்கில், நீங்க ஒத்துக்குறீங்களோ இல்லையோ, அவ என் பிள்ளையும் தான்...” என்றாள்.
அவன் உரிமையைக் கொடுக்க தவறினாலும் அவள் அதை ஏற்கனவே எடுத்திருந்தாள். அதில் அவனை மூங்கில் என்று சொன்னது கூட உரைக்கவில்லை அவளுக்கு.
“என்ன மூங்கிலா?” என்று தலைசரித்து அவளைப் பார்த்தவன்,
“எனக்குப் பட்டப்பெயர் எல்லாம் வச்சிட்டியா?”
அவனின் கேள்விக்குப் பிறகே தன் தவற்றை உணர்ந்து,
“ஒரே மாதிரி இருக்கீங்களா, ச்சே இருக்கா, அதான் மாத்தி சொல்லிட்டேன்...”

“எனிவே, தேங்க்ஸ் கண்மணி என்னை காப்பாற்றி விட்டதுக்கு”
சொன்னவன் சும்மா போகாமல் தன் இரு கைகளால் அவள் கையைப் பற்றி குலுக்கிவிட்டு போனான்.

இவனுக்கு என்ன தான் ஆனதோ !
இரண்டு நாட்களாய் இவன் போக்கு சுத்தமாய் சரியில்லை. சந்தேகமும் சந்தோசமாவும் தன் கையை பார்த்துக் கொண்டாள்.

டோக்கியோ மெட்ரோவில் பயணித்துக் கொண்டிருந்தான் முகில். கூட்டம் என்றால் கொஞ்சம் நஞ்சமில்லை. ஆனாலும் அதில் இடிபடாமல் இருக்கையில் அமர்ந்திருந்தவன், எப்போதும் போல் தன் ஃபோனை நோண்டாமல் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
மனம் முழுவதையும் கண்மணி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். வீட்டுப் படி இறங்கிவிட்டால் அலுவலகச் சிந்தனைகள் மட்டுமே இருக்கும். ஆனால் சில நாட்களாய் நிலை வேறு.
கண்மணியுடன் வாழ்வது இயலாத காரியம் என்றும், அவளுக்கு வேறு வாழ்க்கை அமைத்துத் தரலாம் என்றும் தான் எண்ணியிருந்த எண்ணமெல்லாம் தற்போது முரணாய் தோன்றியது. அதுவும் இத்தனை நாளும் இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்காத மனம், இப்போது முழுதாய் கண்மணியின் வசம்.
அவளுக்கும் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அதை மாற்ற வேண்டும்! தானும் தன் மகளும் இருக்கிறோமே அவளை நம்பி. அவள் இல்லையெனில் எங்களின் நிலை தான் பரிதாபம். ‘ஆமா நினைச்சிட்டே இருந்தா போதுமா? கண்மணிக் கிட்ட சொல்ல போறது யாராம்?’ என்று கேட்டது அவனின் மனம்.
அவனுக்கும் அந்தக் கேள்வி இருந்தது தான். ‘சொல்லணும், சீக்கிரமா சொல்றேன்’ என்று எண்ணி முடிக்க அலுவலக நிறுத்தம் வந்துவிட்டது.
கண்மணியை இனியும் காத்திருக்க வைக்காமல் விரைவில் தன் மனமாற்றத்தை சொல்ல வேண்டுமென்று முடிவெடுத்தான். ஆனால் எப்படி என்பதில் ஒரு தயக்கம்!

வாழ வேண்டுமானால் கொஞ்சம் வளைந்துத் தான் போக வேண்டும்.
கண்மணிக்கும் அவ்வாறே தோன்றியது. அவன் முன்பு போல் இல்லை. மூங்கில் இப்போது சற்று வளைந்திருக்கிறதோ.?
அவள் பார்க்காத போது அவளைப் பார்ப்பதும், வலிய வந்து பேசுவதும், வீட்டில் சில வேலைகளில் உதவுகிறேன் என்றிருப்பதும். அவன் வேறு நிலையில் இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொன்னது.

திவ்யாவிடம் முகிலின் மாற்றம் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பகிர, ஏனடா இந்தப் பெண்ணிடம் சொன்னோம் என்பது போல் அவளை ஒரு வழி செய்தாள் அவள் தோழி.
“அப்போ தமிழோட வேண்டுதல் சீக்கிரம் பலிக்கப் போகுதோ...”
‘அதுக்குள்ள எத்தனை யோசிச்சிட்டா பார்...’
“சும்மா இரு திவ்யா, உன்கிட்ட சொன்னதே தப்பு... அவசரப்பட்டு உளறிட்டேன்...” என்று, கோபமாய்ச் சொல்ல நினைத்தாலும், கண்மணிக்கு குரலில் கோபம் வரமாட்டேன் என்றது.
“ஓ, நீ சொல்லலைன்னா எங்களுக்குத் தெரியாதோ. நான் தான் என் ரெண்டு கண்ணால பார்த்தேனே... பொது இடத்திலேயே இப்படியா? அப்போ, இப்ப வீட்டுக்குள் என்னலாம் நடக்குதோ? ஆண்டவா...” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள் திவ்யா.
அவள் சொன்னதில் வெட்கச் சிரிப்பு சிரித்தாலும், “ஆமா ஆமா நீ பார்த்த? உன் கண்ணுல பவர் வந்திடுச்சுன்னு சொன்னியே, அது இது தானா?” என்றாள் இவளும்.
“நல்லா சமாளிக்கிற டி... ஆனா நடந்தது என்ன?”
“சீ... போடி... நீ ரொம்பக் கெட்ட பொண்ணு. நான் ஃபோனை வைக்கிறேன்...” என்று திவ்யா பேச பேசப் ஃபோனை வைத்துவிட்டாள் கண்மணி.
இவள் அந்த மொபைல் ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு கண்மூடி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவள் தோள் தொட்டு அழைத்தான் முகில். தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு... இவன் எப்போது வந்தான்?

“நீங்களா... எப்ப வந்தீங்க? எனக்கு கதவு திறக்கிற சத்தமே கேட்கலையே...”
அவள் பதட்டத்தை ரசித்தாலும் முகம் மாறாமல்,
“இப்படிச் சிரிச்சு பேசிட்டிருந்தா, இடி சத்தம் கூடக் கேட்காது...” என்று சோபாவில் அவள் புறம் வசதியாய் அமர்ந்து கொண்டவன் சொல்ல.
‘ஐயோ எப்போது வந்தானோ, என்னவெல்லாம் கேட்டானோ?’ அதை அவனிடம் கேட்க வழியில்லாது அப்படியே விட்டுவிட்டாள்.
அவன் பொதுவாய், தமிழினி பற்றிப் பேசிவிட்டு, தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டான், இல்லை மூழ்கியிருந்ததைப் போல் காட்டிக் கொண்டான். முகிலுக்கு தான் எண்ணியதை இன்றே அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்றிருந்தது. தயக்கம் தடுத்தது. நீண்ட நேர போராட்டதின் பிறகு,

“கண்மணி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...” என்றதும், அவளிடம் பதிலில்லை.
“கண்மணி...” அவள் தோள் தொட்டு அழைக்க, உட்கார்ந்த நிலையில் தூங்கிவிட்டிருந்தாள்.
முகில் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போனது. இத்தனை காலம் அவன் மாறுவான் என்று அவள் மட்டும் காத்திருந்தாள். அதெல்லாம் தெரிந்திருந்தும் எத்தனை நிதானம் அவனுக்கு!

அவளைப் பற்றிய சிந்தனையை அவன் மனதிலிருந்து ஒதுக்க முடியவில்லை! அவளிடம் எப்படியாவது தன் மனதிலுள்ளதை சொல்லிவிட வேண்டும் என்ற அவனின் முயற்சியில் தோற்றுப் போவது மட்டுமே நடந்துக் கொண்டிருந்தது. இப்போதும் அவனிருந்த ஆபிஸ் கான்ஃபரன்சில் மனம் லயிக்காமல், பாதியில் கிளம்பி விட்டான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top