• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KKA 2.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Epi 2.2


"ஹேய் கயல் ரெடியா? " என கேட்டவாறு தானும் வேலைக்கு செல்ல தயாராகி வந்தவர் தன் பெண்ணை பார்த்தபடி அப்படியே இருக்க,
"என்ன ஹனி? எனவும்
" எப்போவுமே டெனிம் லேயே பார்த்து பழகிட்டேனா, இப்போ ( டாப் லெகிங்ஸ் அணிந்து ஷோலை கழுதை ஒரு முறை சுற்றி போட்டிருந்தாள் ) இது ரொம்ப அழகா இருக்குடா" என்றவர்,

அவள் நெற்றியில் வைத்திருந்த கருப்பு நிற சிறு பொட்டினை சரி செய்து விட்டு அப்படியே உங்க அம்மாடா போட்டோ கோப்பியாட்டம் இருக்க. எந்த வித்தியாசமும் இல்ல.

ஆனா பொட்டு மட்டும் பெரிய பொட்டா வெச்சுப்பா, என்று விட்டு, சரி வாடா டைமாச்சு கிளம்பலாம்."

என அவர் வண்டி சாவியையும், இவள் இவளது ஸ்கூட்டி சாவியுடனும் வர,
"கண்ணம்மா மேனேஜ் பண்ணிப்பியா? இல்லனா நானே ட்ரோப் பன்னிட்டு, ஈவினிங் நானே பிக் பண்ணிக்கிறேன், கார்லயே போலாம்டா " என அரசு கேட்க,

"அச்சோ ஹனி! நா போய்ப்பேன்... இந்த ட்ராபிக்ல இதுதான் லேசா இருக்கும்.. " என்றவாரே வீட்டை பூட்டிக்கொண்டு இருவருமாக அவர்களது வண்டிகளில் கிளம்பினர்.

அவளது கம்பனி வாசலில் அவள் வண்டி நிறுத்தவும் சொல்லிக்கொண்டு அவர் அலுவலகம் சென்றார்.

கருப்பு நிற கண்ணாடியிலான முகப்பு கொண்ட கட்டிடம் அது. "RV CONSTRUCTIONS " பெரியளவிலான அரசாங்க மற்றும் தனியார் கட்டுமானங்களை தரமான முறையில் சிறந்த பொறியிலாளர்கள், நிர்மானர்களை கொண்டு பொறுபேற்று அமைத்து கொடுக்கின்றனர்..

பதினைந்து வருடங்கள் தொடர்ந்து நடத்தி வரும் இன் நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பானதொரு முன்னேற்றம் அடைந்துள்ளது.

பெண்ணுக்கு கடினமானது என நினைக்கும் துறையில் தனி பெண்ணாக தன் அண்ணனின் பக்க பலத்தில் ஆரம்பித்தவர் இன்று தனித்து விளங்கும் ஒருவராக வணிக உலகில்.

உள் நுழைந்தவள் வரவேற்பில் தன் பெயர் கூறி வந்திருக்கும் காரணம் சொல்லி அனுமதி பெற்றவள் நேராக சென்று நின்றது அந்த கம்பனியின் உரிமையாளினி எம். டி மீனாட்சியின் அறையில்..

" குட் மோனிங் மேம்". எனும் இவள் குரல் கேட்டு தேநீர் கோப்பையுடன் திரும்பியவர், அடர் நீல நிற காட்டன் சேலை அரை அடி அகல மெரூன் வண்ண பார்டர் இட்ட சேலை அவர் உடலை சுற்றி இருக்க, முகத்தில் எவ்வித ஒப்பனையும் இன்றி நெற்றி நடுவே இவள் வைத்திருந்ததை போன்ற ஒரு சிறு கருப்பு பொட்டு, கழுத்தில் தடித்த ஒரு செயின்.

இருவரும் இருவரையும் உற்று நோக்கியவாறு சிறிது நேரம் இருந்தார்கள்... முதலில் நடப்புக்கு வந்த கயல்,"மாம் "எனவும்...

"யா கம் இன்" என அழைத்தவர், அவரிருக்கையில் வந்தமர்ந்து அவளையும் அமருமாறு கூற அவளும் அமர்ந்தவள் தன்னை அறிமுக படுத்திக்கொண்டாள்...

'ஏன் இந்த துறையை செலக்ட் பண்ணின கயல்? ' எனவும்

எங்கப்பா இந்த பீல்ட் மேம். சோ எனக்கும் அதுலயே இன்டெரெஸ்ட் வந்துருச்சி...

"உங்களுக்கு ஜாப் செய்ய இன்னும் டைமிருக்கே கயல், கனடாலேயே மேற்படிப்பை தொடர்த்திருந்தா நல்ல கம்பெனி ஒன்னுல ஜோயின் பண்ணலாமே".

"இங்க அதையே பண்ணலாம்னு இருக்கேன் மேம்.அதோட கொஞ்ச நாளைக்கு பொறுப்பான ஒருத்ருக்கு கீழ இருந்து இந்த துறை பற்றிய தெளிவை பெற்று கொள்ளணும்னு இருந்தேன்.

அதற்கு இந்த ஜாப், அதுவும் இந்த கம்பனில நல்ல வாய்ப்பா அமைஞ்சது....

வீகென்ட்ஸ் என் ஸ்டடீஸ் தொடரலாம்னு இருக்கேன் "என கூறி அவர் முகம் காண,

'குட். நானுமே இந்த பீல்ட் வரப்ப கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனா இப்போ..' என மீனாட்சி கூற

"எல்லோரும் உங்களை பார்த்து பயப்புட ஆரம்பிச்சுட்டங்க"என்று கயல் முடித்தாள்...

"ஹ்ம்ம்" என்று சிரித்தவாறு " நான் மட்டுமில்ல இந்த கம்பனியோட ஓனர். என்னுடைய பையனும் இருக்கான். எனவும் எதிலோ சந்தோஷமடைந்திருந்தவள் மனம் ஏமாற்றத்தை உணர, ஆனா கம்பனி பக்கம் லேசில வரமாட்டான்.சோ எல்லாமே தனியா நானே பார்க்க வேண்டிய நிலை.. சோ இதுக்கப்றம் நீயும் சப்போர்ட்டா இருந்தன்னா எனக்கு ரொம்ப ஹெல்ப் புள்ளா இருக்கும்.. "என்று பேசிக்கொண்டவர், அவளை தனது பி.ஏ வாக வேலையில் அமர்த்திக்கொண்டு அவளுக்கான வேலைகளை கூறினார்...

இரண்டு மாதங்களாக மனம் நிரம்ப தன் தொழிலில் ஈடுபாட்டுடன் செய்துகொண்டு செல்ல தான் இந்தியா வந்த காரணத்தை செயல்படுத்த வழி தெரியாது ஒவ்வொரு நாளும் மனதில் பல எண்ணமிட்டுக்கொண்டிருந்தாள். ...

அரசு ஓர் அரச நிறுவனத்தில் அதுவும் அரச கட்டிடங்களை கட்ட கட்டுமான கம்பனிகளுக்கு காண்ட்ராக்ட் வழங்கும் போது, போட்டி கம்பெனிகளின் இடையே அதன் சரி நிகர்களை தரம் பார்த்து எதற்கு வழங்க வேண்டும் எனும் இறுதி முடிவை சரிவர ஆராய்ந்து எடுக்கும் தகுதியை கொண்டவராக இருக்க இதற்கு முன் இருந்தோர் பலரும் பணத்தின் பின் செல்ல வேண்டிய தேவையில் தமக்கு சாதகமான நிறுவனத்துக்கு காண்ட்ராக்டினை வழங்கி வந்தனர்.

பணத்தேவை இன்றி தொழிலில் இருந்த பற்றுக்காக தொழில் புரிபவர் தரமான கம்பனிகளை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்தெடுத்தார். அதனால் இன்னும் நாலு மாதத்தில் ஆரம்பிக்க இருக்கும் RVC க்கு கிடைத்த காண்ட்ராக்ட் இவர் வந்து இரண்டு மாதங்களில் அது பற்றி ஆராய்ந்து
இடை நிறுத்தம் செய்திருந்தார்....

காரணம் சிறு குறை ஒன்றே என்பதை அறிந்திருந்தவர் அதோடு RVC யின் என்ஜினீயரில் ஏதோ குளறுபடி இருப்பதையும் ஊகித்தவர் அதனை தெளிய படுத்தும் முகமாக கம்பனி உரிமையாளருக்கே நேராக கடித மூலமான கோரிக்கை ஒன்றினை அனுப்பி இருந்தார்..

அதோடு வேறு கம்பனிகளிடையே இது பற்றி தெரிய வரும்முன் சரி செய்துகொள்ள தன்னை சந்திக்குமாறு கூறியிருக்க, அதனை வாசித்து பார்த்தவர் முகமோ கோவத்தில் சிவந்து இருந்தது.

'என்னாச்சு மேம்? ' என கயல் வினவியவள் அதனை அவளும் வாசிக்க, ' டேய் ஹனி நம்ம கம்பனிக்கே லெட்டரா நல்லா வருவ' என மனதில் நினைத்துக்கொண்டாள்,

'மேம் அவங்களை மீட் பண்ணினா என்னனு தெரிஞ்சுக்கலாமே'.

அவளை நிமிர்ந்து பார்த்தவர் " என்ன
தெரிஞ்சுக்க இருக்கு.டிரெக்டா எனக்கே லெட்டர் அனுப்பிருக்கான்னா பெருசா எதிர் பார்க்குறான் போல."

'புரியல மேம் ' என கயல் மீண்டும் கேட்க "பணம் தான் கயல் இவன்களுக்கு. பணத்தாசை முத்திப்போச்சு... நோகாம உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாரிக்க பார்கிறான்கள்.."

"மேம்! எல்லோருமே அப்படி இருபாங்கன்னு சொல்ல முடியாது தானே. நாம அவரை மீட் பண்ணி என்னனு பார்க்கலாம்" என தன் தந்தை காரணமின்றி தடை செய்திருக்க மாட்டார் எனும் நம்பிக்கையில் இவள் கூற
"ஹ்ம்ம் மீட் பண்ணறேன்" என கூறி எப்போது எங்கு என கேட்டவர் அத் தகவலை நினைவில் வைத்துக் கொண்டார்....

இரண்டு மாதங்களை கடந்தும் யார் எவரென குழம்பிப்போய் இருந்தான் ருத்ரா... அவனது ப்ராஜெக்ட் ஆரம்பமாகி இருந்தாலும் மற்றையது போல இதில் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை. அதிகம் கல்லூரி மாணவர்களின் பங்கு... அவர்களை முன்னிட்டே அனைத்தும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது..
மாதவனும் அவனுக்கு தேவையான விடயங்களை சேகரித்து தர இவனது தலையோ குழம்பியிருந்தது..


'அண்ணா பசங்களை எதுன்னாலும் பண்ணிக்கலாம்.. ஆனா பொண்ணுங்க தான்'.
"அதான் மாதவா நானும் யோசிச்சிட்டு இருக்கேன் காலேஜிக்குள்ள சப்ளை பண்றவன்ல இதுக்கு யாரு பிரதானமா இருக்கான்றதை பிடிச்சாதான் எதுன்னாலும் பண்ணலாம். "

என்னை நீ தெரிஞ்சதா காட்டிக்கிட்டாதான் உன்ன காலேஜில நம்புவானுங்க..' சரிண்ணா பார்த்துக்கலாம்.' என இருவரும் பேசிக்கொண்டு இருக்க, மீனாட்சி வீட்டுக்குள் நுழைந்தார்....

"ஹேய் என்னடா அண்ணனும் தம்பியும் தீவிரமாக டிஸ்கஸ் பன்னிட்டு இருக்கீங்க"..
' ஹாய் அத்தம்மா என்ன இன்னக்கி ஏர்லியா வந்திருக்க? ' என ருத்ரா கேட்க
"ஏன் ரெண்டுபேருக்கும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? " என

" அச்சோ அதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான்" என்றான்.

' சரிடா பேசிட்டு இருங்க வந்துர்றேன் ' என அவறைக்கு செல்ல...

"மேடம் மூட் அப்செட் போல சுடச்சுட காபீ போட்டு மூடை மாத்திருவோம்" என்று எழுந்தவன், 'மாதவா உனக்கும் காபி தரட்டுமா?'என கேட்டவாறே அவன் சமயலறைக்கு செல்ல "ஹ்ம்ம் ஓகே " என்றவன் அவன் பின்னே சென்று சாப்பிட எதாவது இருக்கா என தேட
'அதோ அந்த கபோர்ட்ல ஸ்னாக்ஸ்
இருக்கும் 'பாரு என்றான்...

"டேய் அண்ணா நம்ம வீட்ல ஹால்ல எத்தனை சேயார்ஸ் இருக்குன்னு தெரியுமா உனக்கு ஆனா இங்க கிச்சேன்ல இருக்க கபோட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சு வெச்சிருக்க " என மாதவன் கூற,

அதை கேட்டவாறு வந்த மீனாட்சி "அவன் சாப்பிடறது எங்க இருக்கும்னு அவனுக்கு தானேடா தெரியும் "என்றவாறு சமயலறையில் இருந்த மேசையிலேயே மூன்று பேருமாக அமர்ந்து காபீ குடித்தனர்.

தம்பி செல்லவும் தன் அத்தையை பார்த்தவன் "அத்தம்மா என்ன ப்ரோப்லேம் இன்னக்கி இவ்வளவு டல்லா இருக்கீங்க? " எனவும்

" அது வரு... "என்று ஆரம்பித்தவர் இன்று வந்த கடிதம் பற்றி கூறவும்

"இவ்வளவு நாளும் இல்லாம திடிர்னு என்னை புதுசா? " ருத்ரா கேட்க,

"அதான்டா எனக்கும் புரியல, புதுசா வந்திருக்க ஒருத்தர் தான் டிரெக்டா எனக்கே அனுப்பி இருக்கான் போல..லேடின்னதும் எதுனாலும் பண்ணலாம்னு நினைச்சிருப்பான். நாளைக்கி இருக்கு" என இவர் பொரிந்து தள்ள.

"அத்தம்மா என்ன இது எப்பயுமே நீங்க இப்படி நிதானம் தவறி பேசினது இல்ல. அதோட அவன் பணம் தான் கேட்கப்போறான்னு எப்படி தெரியும்.

ஜஸ்ட் ஒன்ஸ் பேசி பார்க்கலாம்" என்றான் ருத்ரா.
'ஹ்ம்ம் 'என்றவர் . 'ரொம்ப அசிங்கம் டா.இது வெளில தெரிய வந்ததுன்னா, இதற்கு முதல் செய்து கொடுத்த எல்லாருமே நம்ம மேல வெச்சிருக்க நம்பிக்கை இல்லாம போக வாய்ப்பிருக்கு..'

"அச்சோ அப்டிலாம் ஒன்னும் ஆகாது... நாளைக்கு நான் அவரை மீட் பண்றேன். அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு டிசைட் பன்னுவோம் ஓகே.."

'உனக்கு ஏற்கனவே வேலை அதுக்குள்ள இதும் முடியுமாடா வரு?'

" அத்தம்மா பீல் பிரீ.. வரு இருக்க பயமேன்... நா இப்போ வெளில போறேன்.. காலைல அவரை மீட் பன்னிட்டு நாம ரெண்டு பேரும் வெளில லஞ்ச்க்கு மீட் பண்ணலாம் ஓகே டன்" என்றவன் அவரிடம் விடைப்பெற்றான்.


கயலுக்கு அலைபேசியில் அழைப்பெடுத்தவர் 'கயல் நாளைக்கு அந்தாளை மீட் பண்ண வாரதா மெயில் பன்னிரு' என்றார்.

'ஓகே மேம் என்றவள் 'ஆ யூ ஓகே? ' எனவும் 'ஓகே டா தேங்ஸ்' என்றவர் "நாளைக்கு நீ சொன்னா மாதிரி பேசிட்டே முடிவு பண்ணலாம் ' என்று விட்டு போனை வைத்தார்...

ஹைய்யா !!!என மனம் குதூகலிக்க நாளை நடப்பது யாவும் நல்லதாகவே நடக்கட்டும் என அவசரமாக இறைவனுக்கு ஒரு மெயில் அனுப்பியவள், அடுத்த அறையில் இருந்த தன் தந்தைக்கு மீனாட்சியின் பிஏ வாக ஒரு மெயிலும் அனுப்பிவிட்டு உறக்கத்தை தழுவினாள்.
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அத்தமா, ஹனி ஏதாவது லிங்க் இருக்குமா:unsure::unsure::unsure:.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top