• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Akshara Dev

மண்டலாதிபதி
Joined
Oct 3, 2018
Messages
147
Reaction score
950
Location
Chennai
'இவ நிச்சயம் வெளியூர்கார புள்ளையாதான் இருக்கனும்... அப்புறம் ஏன் அன்னைக்கு இவளை எங்கனையோ பார்த்தது போல தோணுச்சு' என்றவன் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் அவனை நெருங்கி வந்திருந்தாள்.

அவளுக்கும் அவனை அடையாளம் தெரிந்துவிட சற்று குழுப்பமாய் அவனைப் பார்வையாலேயே அளவெடுத்தவள்,

"நீங்க அந்த ரெஸ்டிரான்ட் ஓனர்தானே" என்றவள் ஆர்வமாய் கேட்க,

"ஓ... அப்போ தெரிஞ்சிதான் இதை என் மேல எறிஞ்சிங்களோ"என்றான்.

"நோ... லா" என்றவள் அதிர்ச்சியாக,

"அப்ப... இதுவும் அன்எக்ஸ்பெக்டட்னு... சொல்லுதீகளோ" என்றவன் தலையசைத்து கிண்டலாய் கேட்டான்.

அவள் அதிசயத்து பார்த்து,

"அப்போ நீங்களும் என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்க போல" என்று கேட்டாள்.

"எப்படி மறக்க? நீங்கதான் உங்க கைத்தடத்தை என் சட்டையில பதிச்சிட்டு போனிகளே" என்று சொல்லவும் அந்தச் செயலை எண்ணி உதட்டைக் கடித்து கொண்டு புன்முறுவலித்தாள்.

அந்த நேரம் குருவின் முன்னே சென்றிருந்த நபர், "ஏ குரு... அங்கனேயே ஏன் நிக்க... உள்ளர வா" என்றழைக்க அவன் தன் கரத்திலிருந்த அந்த இறகுபந்தை அவள் கையில் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

மோகன் அப்போது அவள் பின்னோடு, "ஷிவா" என்று குரல் கொடுக்க

"யா கம்மிங்" என்று அவனை நோக்கி ஓடினாள்.

அவன் அருகாமையில் சென்றவள்,

"உனக்கு தெரியுமா லா... அந்த ரெஸ்டிரன்ட் ஓனர் நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு" என்று வியப்புகுறியோடு சொல்லித் தன் கரத்திலிருந்த இறகுபந்தை அவனிடம் கொடுக்க,

"எந்த ரெஸ்டிரன்ட் ஒனர்" என்றவன் கேட்டபடியே மீண்டும் விளையாட்டைத் தொடங்க தயாரானான்.

"அதான் மோக்... நீ என்னை கூட்டிட்டு போனியே... சம் நேம்... நான் கூட ஹேன்ட் வாஷ் பண்ண போய் அவர் மேல இடிச்சி" என்று சொல்ல,

அவன் யோசனையோடு அவளை நோக்கி,

"அந்த ஆளா அது" என்று கேட்டான்.

"ஆளுகீளுன்னெல்லாம் சொல்லாத லா... கொஞ்சம் ரெஸ்ப்பெக்டா பேசு"

"ரெஸ்பெக்ட்டா... போ ஷிவா... அவன் பார்க்க ரவுடி கணக்கா இருக்கான்"

ஷிவானி எரிச்சலோடு, "ஸ்டாப் இட் மோக்... யாரு என்னன்னு தெரியாம நீயா அவங்களை பத்தி ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே... தட்ஸ் நாட் ரைட்" என்று படபடவெனப் பொறிந்தவளை ஏற இறங்க பார்த்தவன்,

"ஆமா... நான் எவனையோ பத்தி பேசினா... உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது?" என்று சொல்ல அவள் அதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாமல் தன் கரத்திலிருந்த பேட்டை தூக்கிவீசினாள்.

அதோடு நிறுத்தாமல் நேராக வந்து மோகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு,

"நான்தான் மரியாதையா பேசுன்னு சொல்லிட்டிருக்கேன்... நீ என்னடான்னா திரும்ப திரும்ப அவன் இவன்னு சொல்லிட்டிருக்க" என்க, அவளின் அந்தச் செய்கையால் மோகன் திகைத்து நின்றான்.

இந்தக் காட்சியைப் பார்த்த சங்கீதா, "போங்க... திரும்பியும் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்க" என்று ரஞ்சனிடம் சொல்ல,

அவன் பதறியபடி அவர்களை நெருங்கி ஷிவானியின் கரத்தைத் தன் தம்பியின் சட்டையிலிருந்து விலக்கிவிட்டான்.

அவள் கோபமாக அங்கிருந்து சென்றுவிட ரஞ்சன் தன் தம்பியிடம் "என்னாச்சு டா" என்று வினவினாள்.

அவனோ பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட, இவர்களுக்கிடையலான உறவு எப்படி இருக்க போகிறதென்று என ரஞ்சன் எண்ணி அச்சமுற்றான்.

இதற்கிடையில் வீட்டிற்குள் சென்ற குருவும் அவன் உடன் வந்த நபரையும் இருக்கையில் அமர வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் அரவிந்தன்.

"நம்ம ஊர் சுத்திலும் என்ன விசேஷம் நடந்தாலும் அது குரு தம்பி சமையலதான் இருக்கும்... அதுவும் அம்புட்டு ருசியா இருக்கும்... யாரும் ஒரு குறை சொல்ல முடியாது" என்று குரு உடன் வந்தவர் பாராட்டிக் கொண்டிருக்க,

"அதெல்லாம் சரிதான்... ஆனா ரேட்டெல்லாம் எப்படி?" என்று குருவை கேட்க,

"எல்லாமே இலை கணக்குதாம்... எத்தனை ஆயிட்டம் என்னன்னு சொன்னிகன்னா அதுப்படி விலையைப் பேசி முடிச்சிக்கிடுவோம்" என்றான்.

அவர் உடனே, "நளினி" என்றழைக்க நளினி வெளியே வந்து தன் கணவனைப் பார்க்க,

"உன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியை கூப்பிடு நிச்சயத்துக்கு சமையலாடர் பத்தி பேசிடுவோம்" என்க, அவரும் உள்ளே அவர்களை அழைக்கச் சென்றார்.

அரவிந்தன் அப்போது, "என் மச்சான் வந்து பேசிட்டா பைனஃல் பண்ணி அட்வான்ஸ் கொடுத்திடலாம்" என்று சொல்ல,

குரு அவரிடம், "அப்புறம் விசேஷம்... எங்கே வைச்சிருகீக... எப்போன்னு தேதி சொன்னிகன்னா... எனக்கும் எப்படி தோதுபடுன்னு பார்த்துக்கிடுவேன்... ரொம்ப தூரம்னு கொஞ்சம் யோசிச்சிதாம் பண்ணனும்" என்று சொல்லித் தயங்க,

"தம்பி சொல்றதும் சரிதான்... இடம் தேதி எல்லாம் சொல்லிட்டீங்கனா" என்று கூட வந்த நபர் கேட்க,

ஆரவிந்தனும் அவர் சொன்னதை ஏற்று
தன் மனைவியிடம் "நளினி அப்படியே நிச்சியதார்த்த இன்விட்டேஷனை எடுத்துட்டு வாம்மா" என்றார்.


அதே சமயம் சபரியும் வேதா அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர,

நளினி தன் நாத்தனாரிடம், "இன்விடேஷன் உங்க ரூம்லதானே இருக்கு...அதை கொஞ்சம் எடுத்துட்டு வா வேதா" என்க,

"சரிங்க மதினி எடுத்துட்டு வர்றேன்" என்றவர் செல்ல,

"வேதா ஒண்ணு மட்டும்" என்றதும்,

"ஆ சரி" என்று தன் அறை நோக்கி விரைந்தார்.

அப்போது ஆரவிந்தன் அருகில் சபரி அமர்ந்து எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டிருக்க,

குரு ஸ்தம்பித்துப் போனான். அவன் தன் விழிகள் காண்பவை மெய்தானா என்று யோசித்த மேனிக்கு அமர்ந்திருக்க,

வேதா அப்போது தன் கரத்தில் அழைப்பிதழோடு வந்து நின்றார்.

ஆரவிந்தன் அதனை குருவை காண்பித்துக் கொடுக்கச் சொல்ல, வேதா அந்த அழைப்பிதழை நீட்டினாள்.

அதனைப் பெற்று கொள்ளாமல் அவன் வேதாவின் முகத்தையே கூர்ந்து பார்த்திருக்க, அந்த நொடியே அவன் விழிகளில் நீர் தளும்பி நின்றது.

"என்ன குரு அப்படி பார்க்க... பத்திரிக்கையை வாங்கிக்கிடும்" என்று அருகிலிருந்த நபர் குருவின் காதோடு சொல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் சட்டென்று எழுந்து நின்றான்.

வேதா அவனைக் குழப்பமுற நோக்க குருவின் முகத்தில் பலவிதமாக உணர்வுகள் ஒன்றெனக் கலந்திருந்தது.

வேதாவை நெகிழ்ந்தபடி பார்த்தவன்,

"எப்படி இருக்கீங்க?... சுகமா இருக்கீகளா? என்னைய நினைவு வைச்சிருக்கீகளா?" என்றவன் கேட்டுத் தன் விழியில் எட்டி பார்த்த நீரை கலைந்தான்.

வேதா புரியாத பார்வையோடுஅவனை ஏற இறங்கப் பார்க்க, மற்ற எல்லோருமே அவன் பேசியதை கேட்டு வியப்படைந்தனர்.

வேதாவிற்கு அவன் விசாரித்த தொனியில் உள்ளமெல்லாம் பதைக்க, ஏனோ வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் திக்கி நின்றன.

குரு அவர் பார்வையை உணர்ந்து,

"கூட பிறந்த பிறப்பையே அடையாளம் கண்டுக்கிட முடியல" என்றவன் குத்தலாய் கேட்க,

அவர் ஆச்சர்யம் பொங்க அவனை உற்றுப் பார்த்துவிட்டு, "சிவா" என்றார்.

அப்போது அவர் கையில் பிடித்திலிருந்த அழைப்பிதழை வாங்கி பார்த்தவன் , "எல்லோரும் தாய்மாமனை சீர் செய்தான் கூப்பிடுவாயிங்க... ஆனா நீ என்னை சமையல் செய்ய கூப்பிடுதே... இல்ல" என்று கோபம் பொங்க வினவியவனை வேதாவால் எதிர்கொள்ள முடியவில்லை.

அவர் விழியில் நீர் தாரைத் தாரையாய் ஊற்ற,

"பிறந்த வீட்டு சொந்தத்தையே அத்து எறிஞ்சிட்டு உம்மை மவ கல்யாணத்தை பண்ணிதீகளோ... அப்படி என்ன ஐயனும் ஆத்தாவும் உனக்கு செஞ்சுபுட்டாக?!" என்று கனலேறிய பார்வையோடு அவன் அத்தனை சீற்றமாய் கேட்க வேதா உடைந்து,

"அப்படி எல்லாம் இல்ல சிவா" என்று அழ

"தம்பி உட்காருங்க... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்" என்றார் அரவிந்தன்.

"இனி என்னத்தை பேசி என்னவாக போகுது" என்றவன்,

அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமின்றி விறுவிறுவென நடந்து செல்ல அவன் உடன் வந்த நபர் "நில்லு குரு" என்று அழைத்துக் கொண்டு போனார்.

வேதா அழுத மேனிக்கு அவன் பின்னோடு போக முயல, நளினி அவர் கரத்தைப் பற்றி நிறுத்திச் சமாதானப்படுத்தினார்.

அவன் கேள்விகள் ஒவ்வொன்றும் சபரியையும் குத்தி காயப்படுத்ததியது.

அதே நேரம் அவன் வயதிற்கு இவ்வளவு பேசியிருக்க வேண்டாமென்று கோபமும் அளவு இல்லாமல் பொங்கியது.

குரு வீட்டின் வாயிலை நெருங்க எதிரே வந்த ஷிவாணியை ஒரு நொடி நின்று பார்த்தான். அவளை முதன்முதலில் பார்த்தபோது தோன்றிய இனம் புரியாத உணர்விற்கான அர்த்தம் இப்போது விளங்கிற்று.

அந்த ஒரு நொடியில் அவன் விழிகள் அவளை அத்தனை ஆழமாய் ஊடுருவிவிட்டுக் கடந்து செல்ல, அவள் சற்று அரண்டுதான் போனாள்.

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி...
*****************************************************************
ஹாய் மக்களே,

நெல்லை ஸ்லேங் நல்லா இருந்ததுன்னு எல்லோரூம் என்னை பாராட்டினிங்க. ரொம்ப நன்றி. தெரியாத ஒன்றை செய்யும் போது அதுல அவ்வளவு பெஃர்பக்ஷன் வராது.

தப்பு இருந்தா சொல்லிபுடுங்க.. அதை நாம திருத்திகிடுதோம்

So much of loveeeeeee :love::love::love::love::love::love::love::love:to u all
Nanum Trinelveli pakam tha.. Bt slang lam avlo varathu.. Bt unga story read panum pothu Trinelveli Ku poitu vantha feel varuthu.. sema ??
 




suganthiganapathi

நாட்டாமை
Joined
May 23, 2019
Messages
20
Reaction score
5
Location
Thanjavur
:love::love: இனி என்ன சூப் தான்.....
ஆனால் யார் யாருக்கு போடுவாங்க??????
???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top