• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ஷிவானி போய் என்ன பிரச்சினையை இழுத்து வைக்கப்போறாங்களோ தெரியவில்லை,ஏற்கனவே குரு எல்லோர் மேலும் கோபத்தில் இருக்கின்றார்,மாகனும் பாவம்தான் எங்க போனாலும் ஒரு வில்லன் வந்துகொண்டுயிருக்கின்றார்.

நன்றி
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Nice update Moni ?? waiting for Shiva vs Shiva meeting....
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அதற்குள் சபரிக்கும் வேதாவிற்கும் இடையில் பேச்சுவற்றை முற்றியிருக்க, அரவிந்தன் இருவரையும் கட்டுப்படுத்த ரொம்பவும் பிராயத்தனப்பட்டு கொண்டிருந்தார்.

வேதாவும் சற்று கோபமாக,

"உங்க அக்கா மகனுக்கு என் பொண்ணை கட்டிக்க உரிமை இருக்க மாறி என் தம்பிக்கும் கட்டிக்கிட உரிமை இருக்கு... அதைதானே அவன் கேட்டான்... அதிலென்னங்க தப்பு" என்றவர் சொல்ல,

ஷிவானி அதிர்ந்து தன் தாயை பார்த்தார்.

அந்த வார்த்தைகள் சபரியை ரௌத்திரமடைய செய்தது.

"என்னடி சொன்ன?" என்று ஆவேசமாய் தன் மனைவியை அவர் அடிக்க கை ஓங்க,

ஷிவானி அவரை தடுக்க முற்பட்டு கடைசியில் அந்த அறை அவள் கன்னத்திலேயே தவறுதலாய் விழுந்தது.

சபரி அந்த நொடி தான் ஷிவானியையா அறைந்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் ஷாக்கடித்தது போல் நின்றார்.

ஒருமுறை கூட வேதாவும் சபரியும் அவளை அடித்தது கிடையாது. அப்படியே வேதா அடிக்க யத்தனித்தாலும் சபரி அதற்கு அனுமதிக்க மாட்டார். அந்தளவுக்கு செல்ல மகள்.

ஷிவானி காயப்பட்ட தன் கன்னத்தை பிடித்தபடி அழுது கொண்டே நிற்க, "வாணிம்மா" என்று சபரியும் வேதாவும் அவளை நெருங்கினார்.

"ப்ளீஸ் டோன்ட்" என்று கை காண்பித்தபடி விலகி நின்றாள்.

"அப்பா தெரியாம அடிச்சிட்டேன்டா" என்று சபரி இறங்கியபடி சொல்ல,

"நீங்க அடிச்சி அடியை விட... நீங்க இரண்டு பேரும் இப்படி நடுஹாலில் நின்னு சண்டை போட்டுக்கிறீங்களே... அதுதான் எனக்கு ரொம்ப வலிக்குது... அதுவும் என்னை வைச்சே" என்றதும் இருவரும் மௌனமாய் தலைகவிழ்ந்தனர்.

ஷிவானி சபரியை பார்த்து, "ஏன் டேட்... நான் உங்க சிஸ்டரை சன்னை கல்யாணம் பண்ணிக்கனும்... அம்மாவுக்கு நான் அவங்க பிரதரை கல்யாணம் பண்ணிக்கனும்... சே! என்ன மாதிரியான கான்வேஸேஷன் இது?" என்றவள் அசூயையான பார்வையோடு கேட்க,

"நான் அப்படி சொல்ல வரல வாணிம்மா" என்று வேதா முன் வந்து நின்றார்.

"நீங்க அப்படி சொல்லல" என்று ஷிவானி முறைத்தபடி கேட்டதும் வேதாவால் பதில் பேசமுடியவில்லை.

"உங்க இரண்டு பேருக்கும் நான் உயிருள்ள மனுஷி மாறி தெரியிறேன்னா இல்லையா?!" என்றவள் கேட்க, சபரி தவிப்போடு

"ஸாரி வாணிம்மா... தப்புதான்" என்றார்.

"உங்க சாரி வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம்... இதோட எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிட்டு மலேசியாவுக்கு டிக்கெட் புக் பண்ணுங்க... இல்லன்னா... நான் புக் பண்ணி போயிக்கிட்டே இருப்பேன் சொல்லிட்டேன்... திஸ் இஸ் பைஃனல்" என்று சொல்லி தன் அறைக்குள் சென்றவள்,

அங்கிருந்த பூஜாடியை தூக்கியெறிந்து முகம் பார்க்கும் கண்ணாடியை சல்லிசல்லியாய் நொறுக்கியிருந்தாள்.

அந்த சத்தம் எல்லோர் காதிலும் விழ மோகன் அப்போது, "மொத்தமா சந்திரமுகியா மாறிட்டா" என்றான்.

அவன் சொன்னது போலதான் நிறைய பொருள்கள் தெறித்து சேதாரமாக,

சங்கீதாதான் அப்போது அவள் கரத்தை பிடித்து இழுத்து கொண்டு வெளியே வந்தாள்.

"என்ன பண்ணிட்டிருக்க ஷிவா நீ... எல்லாத்தையும் உடைச்சா பிரச்சனை ஸால்வாயிடுமா?" என்று கேட்க அவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் தன் கரத்தால் முகத்தை மூடி கொண்டு அழ ஆரம்பித்தாள்.

சங்கீதா அவள் தோளை தடவி, "ஷிவா ரிலேக்ஸ்" என்க,

அப்போது மோகன் அங்கே வந்து, "செய்றதெல்லாம் செஞ்சிட்டு அழறியா?" என்றவன் சொல்ல,

அதிர்ச்சியில் அவனை நிமிர்ந்து பார்த்து, "நான் என்ன லா செஞ்சேன்?" என்று வினவினாள்.

"நீ அவன்கிட்ட சிரிச்சி பேசினதாலதான் அவன் அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு... பத்திரிக்கை வைக்க போனவங்ககிட்ட அப்படி கேட்டிருக்கான்"

"அவர்கிட்ட நான் சாதாரணமாதான் லா பேசினேன்"

"அவன் ஆள் பார்க்க ரவுடி மாறி இருக்கான்னு அப்பவே சொன்னேனே கேட்டியா? அதை சொன்னதுக்கு மேடம் என் சட்டையை பிடிச்சீங்க... இப்ப அதை உண்மையாயிடுச்சு பார்த்தியா?!" என்று சொல்ல, ஷிவானி அவன் சொல்வது சரிதானோ என்று யோசித்தபடி மௌனமானாள்.

அவள் செய்த சாதாரணமான செய்கையை மோகன் பெரும் குற்றமளவுக்கு பேசி அவளை குற்றவுணர்வில் ஆழ்த்த, ஷிவானியின் உள்ளம் கொதிப்படைந்தது. மொத்தமாய் அவள் கோபமெல்லாம் குருவின் புறம் திரும்பியிருந்தது.
அவன்தான் இப்போது நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணி என்றெண்ணி கொண்டாள்.


அந்த வீட்டில் உள்ளவர்கள் யாருக்குமே உறக்கம் வரவில்லை. எல்லோருமே அந்த குழப்பத்தை எப்படி சீர் செய்வது என்பது பற்றியே யோசித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஷிவானி தனியே பின்புற வாசலில் யோசனையோடு அமர்ந்திருக்க, "வாணிம்மா" என்றழைத்தபடி சபரி வந்து நின்றார்.

ஷிவானி அங்கிருந்து எழுந்து செல்ல யத்தனிக்க, "ப்ளீஸ் வாணிம்மா... அப்பாவை மன்னிச்சிடுறா.... இனிமே ப்ராமிஸா நான் உங்க அம்மாகிட்ட சண்டை போட மாட்டேன்" என்றுரைக்க அவள் மேலே செல்லாமல் மௌனமாய் நின்று கொண்டாள்.

"இப்பவும் நீ அப்பாகிட்ட பேச மாட்டியா வாணிம்மா?!" என்று கேட்க அவள் சற்று இறங்கிய தொனியில், "அப்படி எல்லாம் இல்ல டேட்" என்றாள்.

உடனே அவள் கரத்தை பிடித்து அருகில் அமர வைத்தவர் பொறுமையாக, "நாங்க போன இடத்தில என்ன நடந்துச்சுன்னு தெரியுமா ?" என்று ஆரம்பித்தவர் நடந்தேறிய நிகழ்வுகளை ஒன்றும்விடாமல் சொல்லி முடித்தார்.

அவர் மேலும், "நிச்சியாதார்த்தத்தை நீ எப்படி நடத்திறவன்னு நான் பார்க்கிறன்னு அவன் என்கிட்ட சவால் விடுறான் வாணிம்மா... எவ்வளவு இன்ஸல்டிங்கா இருந்துச்சு தெரியுமா? அந்த கோபத்திலதான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்" என்க, அவளின் விழிகளில் கோபம் கனலாய் ஏறின. தன் தந்தையை அவன் அவமானப்படுத்துவது போல் பேசியிருக்கிறான் என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவர் பொறுமையாக, "இந்த எங்கேஜ்மன்ட் இப்போ என் டிக்னிட்டி விஷயம்" என்றவர் சூட்சமமாய் அவர் நினைத்ததை தன் மகளிடம் சொல்லிவிட்டார்.

ஒருவித நீண்ட மௌனம் அவர்கள் சம்பாஷணையை தடைபடுத்தியிருக்க,

ஷிவானி தீவிரமான யோசனைக்கு பின்,

"உங்க டிக்னிட்டிக்குதான் டேட் எனக்கு முக்கியம்... நீங்க எங்கேஜமன்ட்டை நடத்துங்க... அவர் என்னதான் பன்றாருன்னு நாம பார்ப்போமே" என்றாள்.

"நிஜமாவா வாணிம்மா?" அவர் ஆச்சர்யமாய் கேட்க,

"எஸ்" என்றவள் சம்மதிக்க சபரி நிம்மதியடைந்தார்.

ஆனால் ஷிவானியின் உள்ளமோ வெடிக்க காத்திருக்கும் எரிமலை போல அனலை கக்கி கொண்டிருந்தது.

அவள் தந்தை சொன்னதும் மோகன் சொன்னதையும் எண்ணி கொண்டவளுக்கு சிவகுரு பற்றிய தவறான அபிப்பிராயம் ஆழமாய் வேரூன்றியது.

சபரி தன் மகளை உறங்கச் சொல்லி உள்ளே அழைத்து சென்றுவிட, அவளோ இரவெல்லாம் உறக்கம் வராமல் படுக்கையில் உழன்றாள்.

விடிந்தும் விடியாமலும் அவள் மோகனை தேடி கொண்டு போக, அவன் சோகமே உருவமாக வீட்டை சுற்றி வளைய வந்து கொண்டிருந்தான்.

அவன் பின்னோடு தோளை தொட்டவள், "மோக் சீக்கிரம் ரெடியாகிறியா? நாம வெளியே போயிட்டு வரலாம்" என்க, அவளை ஏற இறங்க புரியாமல் பார்த்தான்.

"என்ன லா முழிக்கிற?... போய் ரெடியாகு"

"எங்கே ஷிவா?" என்றவன் குழப்பமுற கேட்க,

"க்விஷனெல்லாம் கேட்காதே... ரெடியாகு.. நம்ம இரண்டு பேரும் கிளம்பிறோம்" என்றவள் சொல்லிவிட்டு சென்றுவிட,

இவள் எப்போது எப்படி இருப்பாள் என்பதை யூகிக்க முடியவில்லையே என்று எண்ணமிட்டு அவன் மண்டையை பிய்த்து கொண்டான்.

ஷிவானி வீட்டில் உள்ளவர்களிடம், "மைன்ட் அப்செட்டா இருக்கு... நானும் மோக்கும் வெளியே போயிட்டு வரோம்" என்று சொல்ல யாரும் அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

மோகன் குழப்பமாக காரை இயக்கியபடி, "எங்க ஷிவா போகலாம்?" என்று கேட்க,

"அன்னைக்கு நீ என்னை கூட்டிட்டு போனியே அந்த ரெஸ்டிரான்டுக்கு" என்றதும் அவளை கோபமாய் முறைத்தவன்,

"இந்த களேபரத்திலயும் உனக்கு ரெஸ்டிரான்ட்ல போய் சாப்பிடனுமா?" என்று கேட்க,

"இடியட்... சாப்பிட இல்ல... சண்டை போட" என்றாள்.

அவன் அதிர்ச்சியோடு, "என்னை பார்த்தா எப்படி தெரியுது... உன் மீசைக்காரன் மாமன் கிட்ட என்னை சிக்க வைக்கலாம்னு பார்க்கிறியா? " என்றவன் கேட்க,

"ஏன் மோக் பயப்படிற?"

"பின்ன... என் உசுருக்கு கேரன்டி நீ கொடுப்பியா... திருநெல்வேலி காரங்க எல்லாம் பேசிட்டு அருவா எடுக்க மாட்டாங்க... அருவா எடுத்துட்டுதான் பேசுவாங்க"

"நீ ஓவரா பில்டப் பன்னாத லா" அவள் கடுப்பாக

"நான் சொல்றதெல்லாம் நிஜம் சிவா" என்று அச்சமுற்றான் மோகன்.

"அப்படின்னா ஒண்ணு பண்ணு... நீ உள்ள வர வேண்டாம்... நான் மட்டும் போய் பேசிட்டு வர்றேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ... வீட்டில தெரிஞ்சா பிரச்சனையாயிடும்"

"இதுக்கு மேல என்ன பெரிசா பிரச்சனை வர போகுது... எதுவாயிருந்தாலும் நான் பேஃஸ் பண்ணிக்கிறேன்... யூ ஜஸ்ட் கம் வித் மீ"

"மாமாவுக்கு தெரிஞ்சுதுனா"

"நீ என்னை கூட்டிட்டு போறியா... இல்ல நானே போயிக்கட்டுமா லா" என்றவள் காரிலிருந்து இறங்க பார்க்க,

"சரி சரி கூட்டிட்டு போறேன்" என்று வேறுவழியின்றி சம்மதித்தவன்,

பதட்டத்தோடு தன் காரை இயக்கி சிவசு மெஸ்ஸின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான்.
********--********


ஹாய் மக்களே,

Hero heroine meeting vaipanu patha konjam kooda, manasatchiye illama ipadi oru ud a waste panitale

உங்க மைன்ட் வாய்ஸை நான் கேட்ச் பண்ணிடுதேன். அடுத்த பதிவில நீங்க நினைச்சதை செஞ்சிடுறேன்.

அப்புறம் நேத்து கமெண்டெல்லாம் பார்த்ததும் சும்மா அதிருதுல்ல. Semma feel


Reply podalmnu pathu aa ud vera poda vendi irunthathu. Comment pana thozhikalukum guru vukum thol kudukum ella sagotharikalukum
நன்றி ல
Super EPI dear ???
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
திருநல்வேலி சாப்பாட்டுல எப்பிடி உப்பு காரம் தூக்கலா இருக்குமோ அதே மாதிரி திருநெல்வேலில நடக்கிற கதைல படுதூக்கலா இருக்கு....
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Superb epi...inni hero heroine meeting summa athure pothu...analum ithe epi le score pannathu namme appatha than...love you appatha...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top