KUN - 16

#1
Sorry Dears ,
Very very sry. Last week konjam health issues and college poiten. So update pana mudiala. Knjm ila nirayavey manichu read panunga.. Thanks for your valuable comments.

System la ethuvumey copy paste pana mudiala.. PDF delete panitu update paniruken.. sorry for the inconveniences

Aprm ithula Keerthi oda thought epdi nu ezhuthirupen.. Athu kavithai Ila.. Enakum ipdi oru pazhakam undu ethachum mind affect panuna diary la ezhuthuven.. so athu kavithai Ila only words..

Thank u

அத்தியாயம் 16:

காய்ச்சலால் அவதிப்பட்ட கீர்த்தியை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் ராம். ஆனால் அவன் அன்பு புரிந்தும் கீர்த்தி அவனை ஏற்க மறுத்துவிட்டாள். அவள் மனதில் அவன் இல்லாமல் இல்லை. ஆனால் அவன் தந்தையின் வார்த்தைகள் அவளை மேலும் கஷ்டபடுத்தின என்றே சொல்லலாம். அதனால் மட்டுமே ராம் சொல்ல சொல்ல கேட்காமல் கல்லூரிக்கு சென்றுவிட்டாள்.

ராம் வழக்கம் போல் புலம்ப ஆரம்பித்துவிட்டான். இது ராமின் கேரக்டர் இல்லை. ஆனால் அவளை நோகடிக்க கூடாது என்று அவன் தனக்குள்ளயே புதைக்கும் கோபம் ஆதங்கம் எல்லாம் புலம்பலாக வெளி வந்துவிடும். இன்றும் அப்படி தான்.

"சே... என்ன நினைச்சிகிட்டு இருக்கா இவ? ஒருத்தன் வேலை மெனக்கெட்டு சொல்லிட்டு இருக்கேன்.. அலட்சியம் பண்ணிகிட்டு போறா.. காய்ச்சல் சரியாக வேற இல்ல.. இப்போ காலேஜ் போய் என்ன கஷ்டபட போறாளோ? ஹெச்.ஓ.டி. கிட்ட கவனிக்க சொல்லலாம்னா யார்கிட்டயும் உறவுமுறையை சொல்ல கூடாதுன்னு பெரிய இவ மாதிரி கன்டிஷன் வேற போடுறா.. டேய் அர்ஜூன்.. நீ போய் பாத்துட்டு வாடா..” என்றவன் பின் "ஹையோ அதுக்கும் வழியில்லை. ஹெச்.ஓ.டிக்கு நீ தான் என் தம்பின்னு தெரியும். அவர் தோண்டி தோண்டி கேள்வி கேட்டா நீ உளறிடுவ. இதுக்கு நானே போயிருக்கலாம்..” என்று படபடத்தான்.

ஆச்சர்யமாக இருந்தது அர்ஜூனுக்கு. "இந்த அளவுக்கு ஒரு பெண் தன் அண்ணனை ஆட்டி படைத்து வைத்திருக்காளா?” என்று. அதே சமயம் கீர்த்தனா மேல் கோபமும் வந்தது. அவளால் தானே இப்போ அண்ணா புலம்புகிறார் என்று.. விழித்து கொண்டு நின்றான் அர்ஜூன்..

சிறிது நேரத்தில் தன்னிலை வந்த ராம், அர்ஜூன் விழித்து கொண்டு நிற்பதை பார்த்து சிரித்தான். "என்னடா என்னை பார்த்து முழிச்சிட்டு இருக்க?காலேஜ்க்கு போகணும்ல. கிளம்பு” என்றான்..

அவனை பார்த்து முறைத்தான் அர்ஜூன். "என்னடா?” என்று கேட்ட ராமிடம் "இவ்வளவு நேரம் என்னை இங்கே அங்கே அசையவிடாம காதுல ரத்தம் வராத அளவுக்கு புலம்பிட்டு இப்போ காலேஜ்க்கு போன்னு விரட்டுறீங்க.. ஆனாலும் கீர்த்தி உங்களை இவ்வளவு மாத்தியிருக்க கூடாதுண்ணா..” என்றான்.

சிறிது வெட்கத்துடன் சிரித்தான் ராம்..

"பார்ரா.. என் அண்ணாக்கு வெட்கம் எல்லாம் வருது.. ஜமாய்..” என்று சிரித்தபடியே கல்லூரிக்கு சென்றான்.

கல்லூரிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவன் வகுப்பு மாணவனுக்கு விபத்து எனத் தகவல் வர, அவனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு புறப்பட்டான். அங்கு தான் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
.............................................................................
 
Last edited:
#5
Sorry Dears ,
Very very sry. Last week konjam health issues and college poiten. So update pana mudiala. Knjm ila nirayavey manichu read panunga.. Thanks for your valuable comments.

System la ethuvumey copy paste pana mudiala.. so PDF attachment kuduthruken..

Aprm ithula Keerthi oda thought epdi nu ezhuthirupen.. Athu kavithai Ila.. Enakum ipdi oru pazhakam undu ethachum mind affect panuna diary la ezhuthuven.. so athu kavithai Ila only words..

Thank u

Nice update
 
#8
கீர்த்தி ரொம்பத்தான் ஓவரா
பண்ணுறாள், அக்க்ஷரா டியர்
ராம் சொல்லச் சொல்ல கேட்காமல் காய்ச்சலோடு காலேஜ் போய்
இப்படி மயக்கம் போட்டு
விழுந்திட்டாளே
ராம் ரொம்பவே பாவம்ப்பா
 
Last edited:
#9
கீர்த்தி மீது அருணுக்கு என்ன
அவ்வளவு அக்கறை?
ராமின் கோபம் நியாயமானதே
இப்போத்தான் பையனுக்காக
பிரகாஷ் கொஞ்சம் மனசு
மாறலாமா? வேண்டாமான்னு
ரோசனை பண்ணுறாரு
இப்போ போய் இந்த அருண்
பயல் கீர்த்தியை இங்கே
வீட்டுக்கு கூட்டிட்டு வந்தால்
பிரகாஷ் வேதாளம் திரும்பவும்
முருங்கை மரம் ஏறிடாதா,
அக்க்ஷரா டியர்?
 
Last edited:
#10
கீர்த்தி ரொம்பத்தான் ஓவரா
பண்ணுறாள், அக்க்ஷரா டியர்
ராம் சொல்லச் சொல்ல கேட்காமல் காய்ச்சலோடு காலேஜ் போய்
இப்படி மயக்கம் போட்டு
விழுந்திட்டாளே
ராம் ரொம்பவே பாவம்ப்பா
கீர்த்தி கொஞ்சம் இல்லை நிறையவே பண்றா பானுமா.. இவள வச்சிட்டு என்ன பண்றது ன்னு தான் நானும் யோசிக்குறேன்
 

Latest Episodes

Sponsored Links

Top