• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாய் பிரெண்ட்ஸ்,

போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் கொடுத்து என்ன என்கரேஜ் பண்ண எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றி??இந்த அத்தியாயம் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க....
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
விக்ரம் செல்லாவைத் திட்டியதில் இருந்து செல்லா பெரிதாக விக்ரம் இருக்கும் இடத்திற்கு வருவதில்லை.விக்ரமைப் பார்க்க நேர்ந்தாலும் ஒரு முறைப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாள்.

அன்று மங்கைக்கு சுகன்யாவின் பள்ளியில் இருந்து அவளுக்கு உடம்பு சரி இல்லை என்று அழைப்பு வர அவள் மதியமே கிளம்பிவிட்டாள்.தானும் உடன் வருவதாக சொன்ன செல்லாவிடம் வேண்டாம் என்று மறுத்தவள் “இன்னைக்கு ஸ்டாக் எல்லாம் அனுப்பனும்...சோ நீ இருந்தால் தான் கரெக்ட்டா இருக்கும்.நான் பார்த்துக்குற” என்றவள் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.

அன்று அந்த ஊரின் முக்கிய புள்ளி ஒருவர் இறந்து விட அங்கு வர வேண்டிய பேருந்துகள் எதுவும் வரவில்லை.ஒரு மணி நேரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு பேருந்தும் வராமல் போகவே என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.

அதற்குள் பள்ளியில் இருந்து இருமுறை அழைத்து விட்டனர்.கால் டாக்ஸி புக் பண்ணலாம் என்று நினைத்து போனை எடுக்க அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நெட் பேக் முடிந்து போய் 2 நாட்கள் ஆனது என்று.நெட் போடாமல் விட்ட தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அந்த வழியாக வந்த தாஸ் இவள் தனியாக கையை பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன் அவள் அருகில் வந்து “வாட் ஹாப்பண்ட்?” என்று கேட்க “நத்திங்” என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.அவள் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் “எனித்திங் அர்ஜெனட்?” என்று கேட்டான்.

அவள் மூளையோ அவனிடம் ஹெல்ப் கேளு என்று அறிவுரை வழங்க மனமோ வேண்டாம் என்றது.திரும்பி சுகன்யாவின் பள்ளியில் இருந்து அழைப்பு வர வேறு வழி இல்லாமல் அவனிடம் நடந்ததை சொல்லிவிட்டாள்.

“கம்..ஐ வில் ட்ராப் யூ” என்றவன் அவளிடம் முகவரி கேட்டு சுகன்யாவின் பள்ளிக்கு அவளை கூட்டிச் சென்றான்.அவளை இறக்கி விட்டவுடன் கிளம்பாமல் அவளுடன் உள்ளே போக “தேங்க்ஸ்..ஐ கேன் மனேஜ் “ என்று சொல்ல அதை காதில் வாங்காதவன் போல் முன்னே நடந்தான்.

சுகன்யா சோர்ந்து போய் அங்கிருந்த மேஜை ஒன்றில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.பக்கத்தில் சென்று மங்கை எழுப்ப கண்ணை திறக்க முடியாமல் திறந்தவள் “அக்கா” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்.”ஒன்னும் இல்லை டா..ஹாஸ்பிட்டல் போயிறலாம்” என்றவள் அவளை எழுப்ப அவளால் எழ முடியவில்லை.

அவளை எழுப்ப உதவிக்கு வந்த தாஸிடம் ஒரு கண்டனப் பார்வை செலுத்தியவள் அருகில் இருந்த ஆசிரியரின் உதவியுடன் அவளை எழுப்பினாள்.அவள் கோபப் பார்வையை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவன் முன்னால் சென்று காரின் கதவை திறந்து விட்டான்.

அவன் மேலும் மேலும் அவளின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் உதவி செய்தது அவளின் மனதைக் குத்த அவளால் இப்பொழுது அவனின் உதவியை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை.சுகன்யவினால் பஸ்சில் ஏற முடியாததால் வேறு வழி இல்லாமல் அவன் காரில் ஏறினாள்.

மங்கை பின்னால் அமர்ந்து சுகன்யாவின் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள்.சுகன்யா வலியால் அனத்திக் கொண்டே வந்தாள்.அவளின் தலையை அமுத்திக் கொண்டே “ஒன்னும் இல்லை டா..இப்ப ஹாஸ்பிட்டல் போயிறலாம்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

காரை ஓட்டிக் கொண்டே இதை எல்லாம் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் தாஸ்.அவனுக்கு இவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் சுகன்யாவின் மேல் மங்கை கொண்ட அக்கறை புரிந்தது.

கார் நின்றதும் தான் நிமிர்ந்து வெளியே பார்த்தாள் மங்கை.”என்.எம் ஹாஸ்பிட்டல்” முன்பு கார் நின்றிருந்தது.கோவையின் மிகப் பெரிய மருத்துவமனை! இங்கே ஆகும் செலவை நினைத்துப் பார்த்தவள் “இங்க வேண்டாம் ஜி.எச் போகலாம்” என்று சொல்ல அவன் அதைக் கேட்காமல் கீழே இறங்கினான்.

ஒரு வேளை தான் சொல்வது அவனுக்குப் புரியவில்லையோ என்று நினைத்தவள் “லேட்ஸ் கோ டூ ஜி.எச்” என்று சொல்ல அதை காதில் வாங்காதவன் போல் உள்ளே சென்றான்.

அவன் வெளியே வரும் பொழுது சக்கர நாற்காலியோடு ஒருவர் அவனுடன் வந்தார்.இப்பொழுதும் வேறு வழி இல்லாததால் மங்கை சுகன்யாவை கஷ்டப்பட்டு அந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.

உள்ளே சென்று டாக்டரைப் பார்க்க அவர் சுகன்யாவைப் பரிசோதித்து விட்டு நிறைய டெஸ்டுகளை செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.நர்ஸ் வந்து பத்தாயிரம் கட்டச் சொல்லி சொல்ல மங்கைக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாத நிலை.

மாதக் கடைசி என்பதால் அவள் கையில் இருந்தது ஐந்நூறு ரூபாய் மட்டுமே.அவள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே தாஸ் பணத்தை எடுத்து அந்த நர்ஸிடம் கொடுத்தான்.அவள் வேண்டாம் என்று மறுத்ததை காதில் வாங்காதவன் மங்கையின் தோளில் சாய்ந்திருந்த சுகன்யாவிடம் “டோன்ட் வரி..யூ வில் பீ ஆல்ரய்ட் சூன்” என்றான்.நர்ஸ் சுகன்யாவை டெஸ்ட் செய்ய அழைத்துக் கொண்டு போக மங்கை தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்.

டேஸ்டுகளின் முடிவில் சுகன்யாவிற்கு டெங்கு என்பது தெரிய அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.மங்கை தன் தாயிடம் சொல்ல அவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டார்.

தாஸ் தான் எல்லா செலவுகளையும் செய்தான்.மங்கை “சாரி..உங்ககிட்ட ரூடா நடந்துகிட்டதுக்கு...அண்ட் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இவ்வளவு ஹெல்ப் பண்ணதுக்கு...” என்றவள் தயங்கித் தயங்கி “இப்ப என்கிட்ட காசு இல்லை.நெக்ஸ்ட் மந்த் சாலரி வந்ததும் காச திருப்பிக் கொடுத்துற” என்று தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.

மங்கை சொல்லி முடித்ததும் தான் அவளுக்கு நினைவு வந்தது அவனுக்கு தமிழ் ஒழுங்காக தெரியாது என்பது.தன் தலையின் பின்னால் தட்டிக் கொண்டவள் “சாரி...வாட் ஐ மேன்ட் வாஸ்...” என்று சொல்ல வர சிரித்தவன் “ஐ டோன்ட் நோ டூ ஸ்பிக் தமிழ்...பட் ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் இட்” என்று கண்ணை சிமிட்டி சொன்னவன்

“டோன்ட் தின்க் அபௌட் தி மணி....ஜஸ்ட் டேக் கேர் ஓப் யுவர் சிஸ்டர்” என்றவன் அவள் அன்னையிடம் விடை பெற “ரொம்ப நன்றி தம்பி” என்று கை எடுத்து கும்பிட்டவரின் கையை இறக்கியவன் “டோன்ட் டூ திஸ் மா. யூ ஆர் லைக் மை மதர்…டேக் கேர்” என்றவன் மங்கையிடம் கண்களால் விடை பெற்றுச் சென்றான்.சுகன்யா தூங்கிக் கொண்டிருந்ததால் அவளிடம் விடை பெறவில்லை.

அவன் சென்றதும் அவன் கூறியதை தமிழில் தன் அன்னைக்கு சொன்ன மங்கை அவன் செய்த உதவிகள் அனைத்தையும் தன் அன்னையிடம் சொன்னாள்.

செல்லா மங்கையை அழைத்து “சுகன்யாக்கு என்ன ஆச்சு?இப்ப எப்படி இருக்கா?” என்று கேட்க “டெங்கு டி..இப்ப என்.எம் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்..இப்ப கொஞ்சம் பரவாயில்லை” என்றாள்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
“காசுக்கு என்ன டி பண்ண?எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல..தனியா எப்படி டி மானேஜ் பண்ண?” என்று கேட்க நடந்தது அனைத்தையும் சொன்னாள்.”நல்ல நேரம் தாஸ் அண்ணா வந்தாங்க...நான் இப்ப தான் கிளம்புற..வீட்டுக்கு போனதும் நானும் அக்காவும் ஹாஸ்பிட்டல்க்கு வரோம்” என்றவள் போனை வைத்து விட்டாள்.

வீட்டிற்கு சென்றதும் குயிலியிடம் விஷயத்தை சொல்ல இருவரும் சுகன்யாவை பார்க்கச் சென்றனர்.சுகன்யா சோர்ந்து படுத்திருந்தாள்.கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.அவளின் தலையை மெல்ல செல்லா வருடி விட கண் திறந்தவள் “செல்லா அக்கா” என்று சொல்ல “இப்ப பரவாயில்லையா சுகன் குட்டி?” என்று கேட்க மெல்ல தலை அசைத்தாள்.

குயிலி “சீக்கிரமா பிவர் சரி ஆயிரும் குட்டி...பயப்படாம தைரியமா இரு” என்று சுகன்யாவிற்கு தெம்பூட்ட லேசாக புன்னகை புரிந்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.

மங்கைக்கும் செல்லாவிற்கும் இரவு உணவை முருகவேலிடம் வாங்கி வரச் சொன்ன குயிலி இருவரையும் சாப்பிட வைத்து விட்டு மங்கையிடம் பத்தாயிரம் கொடுத்தவள் “கையில இதை வெச்சுக்கோ...உன் பேங்க் அக்கௌன்ட் நம்பர் சொல்லி..காசு அதுல போட்டு விட்டர்ற” என்று சொல்ல “இல்லை அக்கா..இது எல்லாம் வேண்டாம்” என்று மறுக்க “இது அக்காவ என்னுடைய கடமை” என்றாள்.

மறுக்க முடியாமல் மங்கையும் வாங்கிவிட “நாளைக்கு காலைல இருந்து சாப்பாடு நான் கொண்டு வந்து கொடுக்க சொல்லிற..சுகன்யாவை பத்திரமா பார்த்துக்கோங்க” என்றவள் அவர்களிடம் விடை பெற்றுச் சென்றாள்.

ஒரு வாரம் கழித்து சுகன்யா டிஸ்சார்ச் செய்யப்பட்டாள்.இந்த ஒரு வாரமும் மங்கை வேலைக்கு செல்லவில்லை.சுகன்யாவுடன் இருந்து அவளை நன்றாக கவனித்துக் கொண்டாள்.தினமும் காலையில் தாஸும் சாயந்திரம் குயிலியும் செல்லாவும் வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.நடுவில் ஒரு நாள் மாலதியும் ஜெயந்தியும் சுகன்யாவைப் பார்க்க வந்தனர்.சுகன்யா இப்பொழுது கொஞ்சம் நன்றாக தேறிவிட்டாள்.

ஒரு வாரம் கழித்து மங்கை வேலைக்கு சென்றாள்.அன்று அங்கு அவளைப் பார்த்தவர்கள் அனைவரும் “தங்கச்சிக்கு எப்படி இருக்கு?” என்று தான் கேட்டனர்.அனைவருக்கும் பதில் சொல்லியே சலித்து விட்டாள் அவள்.
மங்கைக்கு இப்பொழுது ஒரு மாற்றம் பிடிபட்டது..எப்பொழுதும் முறைத்துக் கொண்டு இருக்கும் செல்லாவும் விக்ரமும் இப்பொழுது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் பொழுது புன்னகை புரிகின்றனர்.

‘என்ன டா இது அதிசயமா இருக்கு?’ என்று நினைத்தவள் “ஏய் செல்லா...என்ன டி நடக்குது இங்க?” என்று கேட்க ஒன்றும் தெரியாத அப்பாவி போல் “நாய் நடக்குது..பூனை நடக்குது...நீ நடக்குற..நான் நடக்குற” என்று சொல்ல காண்டானவள் அவள் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டினாள்.

“ஆ அம்மா..வளர்ற பிள்ளையை கொட்டின வளர்ச்சி கம்மி ஆயிரும் டி எருமை மாடு” என்று தலையை தேய்த்தவள் அங்கு இருந்து நகரப் பார்த்தாள்.அவள் கையைப் பிடித்துத் தடுத்தவள் “ஒழுங்கு மரியாதையா சொல்லு” என்று சொல்ல

“அன்னைக்கு நான் உனக்கு கால் பண்ணி பேசிட்டு பஸ் ஸ்டாப் போனனா...ஒரு மணி நேரம் நின்னும் பஸ் வரல...மணி வேற ஏழு ஆயிருச்சு...பஸ் ஸ்டாப்ல நான் மட்டும் தான் நின்னுட்டு இருந்த..ரெண்டு குடிகாரங்க என்கிட்ட வந்தாங்க..நானும் நகர்ந்து நகர்ந்து போன..ஆனா என் பின்னாடி வந்துட்டே இருந்தாங்க..எனக்கு பயத்துல என்ன பண்ணறதுனே தெரியல..

அப்ப கரெக்ட்டா விக்ரம் சார் பைக்ல அங்கே வந்தாரு...என்ன பார்த்துட்டு பைக்க நிறுத்திட்டு வர அவங்க ரெண்டு பேரும் அவர பார்த்த உடனே ஓடிட்டாங்க...” என்றவள் சொல்ல “பார்டா நம்ம விக்ரம் சார் என்ன அவ்வளவு டேரர்ரா பார்த்த உடனே ஓடிட்டாங்க..” என்று மங்கை கிண்டல் செய்ய

“ஓட்டாத டி...உண்மையாவே விக்ரம் சார் ரொம்ப நல்லவரு தான்..அவங்க ரெண்டு பேரு ஓடுன உடனே யாருக்கோ போன் பண்ணி கார் எடுத்துட்டு வர சொன்னாரு...ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல..கார் வந்த உடனே டிரைவர் கிட்ட அவரோட பைக் கீ கொடுத்துட்டு அவரு கார் கீ வாங்கிட்டு என்ன கார்ல ஏற சொன்னாரு” என்றதற்கு

“ஓ அவரு கார்ல ஏற சொன்ன உடனே நீயும் ஏறிட்டியாயாயா..?” என்று மங்கை இழுத்துக் கேட்க அவள் கையில் அடித்தவள் “நான் ஏற மாட்டன்னு தான் சொன்ன...அதுக்கு அவரு ஒரு முறை முறைச்சாரு பாரு உடனே ஏறி உட்கார்ந்துட்ட” என்றாள்.

“அதுக்கு அப்புறம்?” என்று மங்கை புருவத்தை உயர்த்தி கேட்க “வீட்டுக்கு கொண்டு வந்து விடுற வரைக்கும் ஒன்னுமே பேசலை..இறக்கி விட்டுட்டு நான் தேங்க்ஸ் சொல்லறத கூட கேட்காம போய்ட்டாரு..” என்று பெரு மூச்சு விட்டாள்.

“அவருக்கு எப்படி வீட்டு அட்ரஸ். தெரிஞ்சுச்சு?” என்று மங்கை கேட்க “அதே கேள்வி தான் டி எனக்கும் வந்துச்சு...அடுத்த நாள் நான் அவர்கிட்ட இதை கேட்டப்ப உன்னோட அக்கா கலெக்டர்னு எனக்கு தெரியும்...அப்படின்னு சொல்லிட்டு அவரோட வேலை கவனிக்க ஆரம்பிச்சுட்டாரு..அதுக்கு மேல என்னாலையும் அவர்கிட்ட எதுவும் கேட்க முடியலை” என்று சொன்னாள்.

“அப்புறம் எப்படி டி உன்ன பார்க்குற அப்ப எல்லாம் அவரு சிரிக்கிறாரு?” என்று கேட்க “தெரில டி...இப்ப என்ன பார்த்த சிரிக்கிறாரு...நானும் சிரிக்குற...” என்று மழுப்ப “ஓ...ஓ...அப்படியா?” என்று மங்கை கண் சிமிட்டிக் கேட்க வெட்கப் பட்டுக் கொண்டே வெளியே ஓடிவிட்டாள் செல்லா.

குயிலி வருவாள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top