• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாய் பிரெண்ட்ஸ்,

குயிலி உங்கள் எல்லாரையும் பார்க்க வந்தாச்சு...படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
கிருபா இப்பொழுது நன்றாக தேறிவிட்டாள்.பழைய குறும்புத்தனம் மீண்டு இருந்தது.அவள் இப்படி மாறியதற்கு முழுக் காரணம் குயிலி மட்டுமே.வைத்திருந்த அரியர்ஸ் எல்லாம் கிளியர் செய்து விட்டாள்.பாடத்தில் பழைய கவனம் திரும்பி இருந்தது.

அன்று ஹோட்டலில் குயிலியை சந்தித்த பிறகு தினமும் குயிலி கிருபாவிற்கு அழைத்து பேசிவிடுவாள்.குயிலிக்கு நேரம் இல்லாது அழைக்காமல் விட்டாள் கூட கிருபா அவளை அழைத்துவிடுவாள்.குயிலியைப் பற்றி ஒரு செய்தி தொலைக்காட்சியில் வந்தால் போதும் அன்று அவளின் அருமை பெருமைகளைப் பற்றி பேசியே வீட்டில் உள்ளவர்களின் காதில் ரத்தம் வரவழைத்து விடுவாள்.

விமலா தான் எப்பொழுதும் அவளின் பேச்சை தாங்க முடியாமல் “ப்ளிஸ்..போதும் விட்டுரு..இல்லன அழுதுருவ” என்று வடிவேலுவின் பாணியில் கூறி அவளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பாள்.

மயில்வாகனணிற்கு குயிலியின் மேல் இருந்த மதிப்பு கூடிக் கொண்டே போனது.குயிலியும் கிருபாவும் சந்தித்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தது.இதற்கு நடுவில் ஆறு ஏழு முறை கிருபா குயிலியின் வீட்டிற்கு சென்று வந்துவிட்டாள்.
கிருபாவிற்கு நாய்கள் என்றாள் சிறு வயதில் இருந்தே பிரியம் ஜாஸ்தி.குயிலியின் வீட்டில் மூன்று நாய்கள் இருந்ததால் அதனுடன் விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்தது.
செல்லாவிடமும் அவள் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.அதனால் குயிலியின் வீட்டிற்கு சென்றாலே அவளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.கூடவே மங்கையும் சுகன்யாவும் வந்து விட்டாள் இன்னும் பேரானந்தம்.நால்வரும் அடிக்கும் கூத்தில் வீடே அல்லோலப் படும்.
குயிலி இவர்கள் நால்வரும் அடிக்கும் கூத்தை ஒரு ஓரத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பாள்.நால்வரும் எவ்வளவு வற்புருத்தினாலும் அவர்களுடன் சென்று விளையாட மாட்டாள்.

_----------------------------------------------------
அன்று மாலை மயில்வாகனணிற்கு அழைத்த கிருபா “மச்சி வீட்டுக்கு வர லேட் ஆகுமா?” என்று கேட்க “ம்ம் ஆமா டா..ஒரு எட்டு மணி ஆகும்.என்ன விஷயம் சொல்லு?” என்று கேட்க “குயிலி அக்காக்கு கமிங் சண்டே பர்த்டே..சோ ஏதாச்சும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு யோசிச்ச..அதை பற்றி பேச்சத்தான் கூப்ட” என்று சொன்னாள்.

அவனிடம் இருந்து ஒரு பலமான சிரிப்பு சத்தம் வந்தது “நீ போன் பண்ணப்பவே நினைச்ச..என்ன டா இந்த நேரத்துல கலெக்டர் மேடம் கிட்ட பேசாம நம்மளுக்கு போன் பண்ணறாலேன்னு..உனக்கு ஒரு பாய் பிரின்ட் இருந்திருந்த அவன் கிட்ட கூட நீ இவ்வளவு டைம் ஸ்பென்ட் பண்ணிருப்பியாணி எனக்கு டவுட் தான்” என்று கேலிக் குரலில் கூறி சிரிக்க அந்தப் பக்கம் ஒரே அமைதி.

அவள் கண்ணில் கண்ணீர் வந்தது தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் அவனுக்கு எப்படித் தெரியும்?அவளை ஓட்டுவதால் கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்தவன் “வீட்டுக்கு வந்த உடனே பர்த்டே செலப்ரேஷன்ஸ் பற்றி பேசலாம் டா” என்றவன் போனை வைத்து விட்டான்.

அவன் போனை வைத்தவுடன் பெட்டில் படுத்தவள் குலுங்கிக் குலுங்கி அழுக ஆரம்பித்துவிட்டாள்.எவ்வளவு முயன்றும் தன் மனதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.அவனின் நினைவுகள் பாராங்கல்லாய் மனதை அழுத்தியது.

அங்கே அர்ஜுன் சிரித்த முகமாக கிருபாவிடம் பேசிக் கொண்டிருந்த மயில்வாகனனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.கிருபாவிற்கு நடந்த கொடுமையை மயில்வாகனன் அர்ஜுனிற்கு மட்டும் தான் சொல்லி இருந்தான்.அவன் மூலமாகத் தான் ஒரு பெண் மருத்துவரை ஏற்பாடு செய்து கிருபாவிற்கு சிகிச்சை அளித்தது.

அவன் பேசி முடித்ததும் “இப்ப கிருபா நல்லா ரெக்கவர் ஆகிட்டால்ல?” என்று அர்ஜுன் கேட்க “ஆமா டா..கிருபா பாக் டு பார்ம்” என்று கூறி ஒரு நிறைவான புன்னகை புரிந்தான்.
“நல்ல வேளை..கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்..நான் கூட கிருபா அப்படியே இருந்துருவாலோனு பயந்துட்டே இருந்த..பரவாயில்லை இப்ப நார்மல் ஆகிட்டா..” என்று பெரு மூச்சு விட நண்பனின் தலையில் தட்டிய மயில்வாகணன் “கடவுள்ளா இருந்து அவள பழைய மாதிரி நம்மகிட்ட மீட்டுக் கொடுத்தது அந்த கலெக்டர் தான் டா..அவங்களுக்குத் தான் நாம நன்றி சொல்லணும்” என்று சொல்ல அர்ஜூனால் அதை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஏற்றுக்கொள்ள அவன் ஈகோ தடுத்தது.

வீட்டிற்கு அர்ஜுனும் அன்று மயில்வாகனனுடன் சென்றிருந்தான்.அடுத்த நாள் அதிகாலையில் இருவரும் அவர்கள் நண்பனின் திருமணத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் அர்ஜுன் இன்று அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.

அண்ணனுடன் வரும் அர்ஜுனை பார்த்தவுடன் உள்ளே சென்ற ஷ்யாமளா வெளியே வரவே இல்லை.கோகிலாவும் குமாரசாமியும் திருமண வரவேற்பு ஒன்றுக்கு சென்றிருந்ததால் வீட்டில் ஷ்யாமளா,விமலா,கிருபா மட்டும் தான் இருந்தனர்.கிருபாவும் தன் அறையில் இருந்தாள்.அதனால் விமலா தான் அர்ஜுனை வரவேற்று அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தாள்.

“எல்லாரும் எங்க டா?” என்று கேட்க “அம்மாவும் அப்பாவும் ரேவதி அக்கா ரீசப்சனுக்கு போயிருக்காங்க..ஷ்யாமளா இப்ப தான் உள்ள போன..கிருபா தூங்கிட்டு இருக்கா” என்று சொல்ல “அதுக்குள்ள தூங்கிட்டாளா?என்கிட்ட பேசணும்னு சொன்னாலே” என்றவன் சற்று யோசித்து விட்டு “ஏதாச்சும் சாப்பிட்டாளா?” என்று கேட்க “ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டு படுத்துட்டா” என்றாள்.

“நீங்க எல்லாரும் சாப்பிட்டிங்களா?” என்று கேட்க “இல்லை உனக்கு தான் வைட் பண்ணறோம்” என்று சொல்ல “சரி ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிடு..நாங்க போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் அவனின் அறைக்குச் சென்றனர்.

கிருபாவிற்கு இப்பொழுது அழுகை நின்றுவிட்டது.ஆனால் மனதில் இருக்கும் பாரம் அகலவில்லை.எப்பொழுதும் இருக்கும் கவலை தான் ஆனால் இன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வாட்டுகிறது.

விமலா வந்து அழைத்ததும் முகத்தை நன்றாக கழுவிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தவளின் மனநிலை சற்று நன்றாக இருந்தது.”என்ன ஆச்சு கிருபா?டையர்ட்டா தெரியுற?” என்று கேட்க “இல்லை மச்சி...ஒன் வீக்கா ப்ராஜெக்ட் வொர்க்ல நைட் ஒழுங்கா தூங்கல அதனாலதான்” என்றாள். அதற்குள் “அண்ணா கரண்டி மேல இருக்கு.கொஞ்சம் வந்து எடுத்து தா” என்று ஷ்யாமளா அழைக்க கிட்சனுக்குள் சென்றான்.

அர்ஜுனைப் பார்த்தவுடன் கிருபாவின் முகம் அப்படியே வாடிவிட்டது.அர்ஜுன் “நல்லா இருக்கியா கிருபா?” என்று கேட்க தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள் “ம்ம்..நல்லா இருக்க அண்ணா..நீங்க?” என்று கேட்க அவனும் அவளுடம் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தான்.

தீடிரென்று கைப்பேசி அடிக்க “தம்பி கூப்பிடறான்...ஒரு நிமிஷம் வந்தர்ற” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.வாசலில் நிற்கும் அவனையே பார்த்தவள் தன் அறைக்குள் எழுந்து ஓடிவிட்டாள்.ஓடிச் சென்று தன் கைபேசியை எடுத்தவள் அதில் இருந்த புகைப்படத்தை கையில் நீவி விட்டாள்.கண்ணீர்த் துளிகள் போனில் பட்டுத் தெரித்தது.

விமலா “கிருபா கிருபா” என்று அழைக்க “இதோ வர” என்றவள் கண்ணைத் தொடைத்துவிட்டு டைனிங் டேபிளை நோக்கிச் சென்றாள்.அர்ஜுனின் கைப்பேசி இப்பொழுது மயில்வாகனின் கையில் இருந்தது.அர்ஜுனின் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஷ்யாமளா அனைவருக்கும் பரிமாற “நீயும் உட்காரு டா.நாங்களே போட்டுக்கறோம் .” என்று மயில்வாகணன் சொல்ல “ஐயோ அண்ணா..அவள் நமக்கு எல்லாம் பரிமாறனும்னு சாப்பிடமா இல்லை.இன்னைக்கு சமையல் அவளோடது.அதனால அதை சாப்பிட்டு நமக்கு ஒன்னும் ஆகலேன்னா அவள் சாப்பிடலாம்னு தான் பரிமாறுற மாறி ஆக்ட் பண்ணிட்டு இருக்கா” என்று சொல்ல அர்ஜுன் நன்றாக சிரித்துவிட்டான்.

அவனை நன்றாக முறைத்த ஷ்யாமளா தனக்கும் ஒரு தட்டு எடுத்து பரிமாறி சாப்பிடத் தொடங்கிவிட்டாள்.சிரித்த அர்ஜுனின் முதுகில் அடித்த மயில்வாகணன் “டேய் என் தங்கச்சி எவ்வளவு பெரிய குக்கர் தெரியுமா?அவளை பார்த்து சிரிக்குற?” என்று மிரட்ட “தெரியாம உங்க குக்கர்ர பார்த்து சிரிச்சுட்ட மச்சான்..மன்னிச்சுரு” என்றான்.கிருபா இதை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் ஒரு வெறுமையான உணர்வு.

“என்ன கிருபா சாப்பாடு பிடிக்கலையா?சாப்டாம தட்டையே பார்த்துட்டு இருக்க” என்று மயில்வாகணன் கேட்க “சாப்பாடு நல்லா இருந்தா சாப்பிட மாட்டாங்களா?” என்று அர்ஜுன் சொல்ல “இல்லை இல்லை வேற யோசனை” என்றவள் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.இப்பொழுது ஷ்யாமளா அர்ஜுனை நன்றாக முறைத்தாள்.அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான்.

உண்டு முடித்தவுடன் அனைவரும் ஹாலில் அமர “சொல்லு கிருபா பர்த்டேக்கு என்ன பிளான் பண்ணிருக்க?” என்று கேட்க “ம்ம்கும்..அவள் பர்த்டேக்கு பிளான் ஒன்னு தான் குறைச்சல்” என்று அர்ஜுன் முனுமுனுக்க அவனை மயில்வாகணன் முறைக்க “நான் ஒன்னும் சொல்லல பா “ என்றவன் வாயை மூடிக் கொண்டான்.

கிருபா தன் திட்டத்தை சொல்ல அனைத்துக்கும் தலை ஆட்டியவன் “சரி டா..உன் இஷ்டப்படி எல்லாம் பண்ணிறலாம்” என்றான்.கோகிலாவும் குமாரசாமியும் வந்து விட அங்கே அரட்டைக் கச்சேரி நன்றாக நடைபெற்றது.
அவ்வளவு நேரம் மனதில் இருந்த வெறுமை இப்பொழுது இல்லை கிருபாவிடம் .மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது.அதனால் அனைவரிடமும் இயல்பாக உரையாடினாள் அர்ஜுனைத் தவிர !

சனிக்கிழமை இரவு பன்னிரெண்டு மணிக்கே குயிலியை அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டாள் கிருபா.ஞாயிறு அன்று காலை மயில்வாகனனும் குயிலிக்கு அழைத்து தன் வாழ்த்தைச் சொன்னான்.

மாலை கிருபாவின் ஏற்பாட்டுப் படி எல்லாம் நடந்தது.அந்த அறையில் அவர்கள் மட்டுமே இருந்தனர்.முழு அறையையும் அவர்களுக்காக புக் செய்திருந்தான் மயில்வாகணன்.அறை முழுக்க பலூன்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது.நடுவில் ப்ளூபெர்ரி ஐஸ் கேக்.

குயிலியை வற்புறுத்தி வரவழைத்தாள் கிருபா.வழக்கமாக குயிலி தன் பிறந்தநாளை என்றும் கொண்டாடியது இல்லை.ஆனால் இன்று கிருபா மிகவும் வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழி இல்லாமல் வந்திருந்தாள்.நைட் டின்னர் சாப்பிடத் தான் அவள் அழைக்கிறாள் என்று நினைத்து அவள் வந்திருக்க அங்கு நடந்தவற்றை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்தவுடன் அணைத்து வைக்கப்பட்ட விளக்குகள் அனைத்தும் போடப்பட்டன.”ஹாப்பி பர்த்டே டூ யூ” என்று அனைவரும் பாட கிருபா குயிலியை அணைத்துக் கொண்டாள்.



கிருபாவுடன் செல்லா ,மங்கை,சுகன்யா ,மயில்வாகணன்,அர்ஜுன்,விமலா,ஷ்யாமளா,கிருத்திகா என அனைவரும் இருந்தனர்.செல்லா மங்கையின் வீட்டிற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு காலையிலே கிளம்பிப் போயிருந்தாள்.ஆக அனைவரும் சேர்ந்து குயிலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். கிருபாதான் அனைத்தையும் பிளான் பண்ணி செய்திருந்தாள்.மயில்வாகணன் அவளுக்கு உதவியாக இருந்தான்.

கிருபாவின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் “தேங்க்ஸ் பட்டு” என்றாள்.அனைவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க அர்ஜுன் மட்டும் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.அவனுக்கு இங்கு வரவே விருப்பம் இல்லை.ஆனால் மயில்வாகனின் நச்சரிப்பு தாங்க முடியாமல் தான் வந்திருந்தான்.இப்பொழுது மீண்டும் மயில்வாகனன் வாழ்த்து சொல்லச் சொல்லி அவன் காதைக் கடிக்க வேறு வழி இல்லாமல் வாழ்த்து தெரிவித்தான்.

பின்பு கேக் வெட்டி,முகத்தில் பூசி,செல்பி எடுத்து என்று அந்த இடமே கலைக் கட்டியது.மேஜாரிட்டியான பெண்கள் அணி சந்தோசமாக பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்க மைனாரிட்டியான ஆண்கள் அணி அவர்களை வேடிக்கை பார்க்கும் வேலையை நன்றாக செய்து கொண்டிருந்தது.

அதற்குள் அர்ஜுனிற்கு தன் தம்பியிடம் இருந்து அழைப்பு வர “இவனுக்கு இப்ப தான் பாசம் பொத்துக்கிட்டு வரும்.இவ்வளவு நாள் அண்ணன பற்றி ஞாபகமே இல்லை.இப்ப நேற்றில் இருந்து ஏழாவது டைம் கூப்பிடறான்” என்று அலுத்துக் கொண்டவன் போனை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

நன்றாக கலகலப்பாக இருந்த கிருபா திடிரென்று அர்ஜுன் சென்றதைப் பார்த்தவுடன் அமைதி ஆகிவிட்டாள்.முதலில் இதை யாரும் கவனிக்கவில்லை.அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் தான் குயிலி அதை கவனித்தாள்.”என்ன ஆச்சு பட்டு?” என்று கிருபாவிடம் கேட்க (இப்பொழுது எல்லாம் கிருபா குயிலிக்கு பட்டு ஆகிவிட்டாள்) “ஒன்னும் இல்லையே..நல்லா தான் இருக்க” என்றவள் நார்மலாக இருக்க முயன்றாள்.குயிலியால் அதை எளிதாக அடையலாம் கண்டுவிட முடிந்தது.

டின்னர் முடிந்தவுடன் எல்லாரும் முன்னாடி கிளம்ப குயிலி மயில்வாகனனிடம் “நீங்க ப்ரீயா இருக்கப்ப எனக்கு போன் பண்ணுங்க..கொஞ்சம் பேசணும்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

குயிலி வருவாள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top