• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

குயிலி உங்களை பார்க்க வந்து விட்டாள்.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ....

வெண்பா.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
தன் புல்லட்டில் ஏறி அமர்ந்த மயில்வாகனன் குயிலுக்கு அழைத்தான்.''ஹலோ குயிலி ஃப்ரீயா இருக்கீங்களா?" என்று கேட்க

'இப்பதான் ஆபீஸ் வந்தேன் சொல்லுங்க, என்ன விஷயம்?' என்று கேட்க ,

'உங்களை கொஞ்சம் மீட் பண்ணனும்'

' ஓ, அப்படியா இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. மதியம் டுவல் போல வரீங்களா ?'என்றாள்.

'ஆபீஸ்ல வேண்டாம் நான் உங்களை கொஞ்சம் பெர்சனலா மீட் பண்ணனும்' என்க 'ஓகே, அப்ப நீங்க சிக்ஸ் மேல வீட்டுக்கு வாங்க' என்றாள்.

'இல்லை இல்லை..வீட்டுக்கு எல்லாம் வேண்டாம். நாம வேற எங்கயாச்சும் கொஞ்சம் தனியா மீட் பண்ணலாமா?' என்று கேட்க, 'சரி நீங்களே ப்ளேஸ் டிசைட் பண்ணி எனக்கு ஒரு மெசேஜ் பண்ணி விடுங்க',என்றவள் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றாள்.

இப்பொழுதே அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்தவனுக்கு, மாலை வரை காத்திருத்தல் மிகவும் சிரமமாக இருந்தது. வேலையிலும் அவன் கவனம் செல்லவில்லை. அதனால் தன் புல்லட்டில் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டான்.

"ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!"

அவனின் மனநிலைக்கு ஏற்ப இருந்த இப்பாடலை மனதில் ஹம் செய்து கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான். மனதில் தண்ணீரில் இருந்து அவளை காப்பாற்றிய பொழுது,' அப்பா' என்ற அவளது அழைப்பு வந்து வந்து போனது.

இறுக்கமான கம்பீரமான குயிலி, இப்பொழுது அவன் கண்களுக்கு சிறு குழந்தையாக தான் தெரிந்தாள். குயிலியை பார்த்தவுடன் அவனுக்கு அவள் மேல் கண்டிப்பாக ஈர்ப்பு ஏற்படவில்லை. அவளுடன் பழகிய பொழுதும் கூட அவள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் மட்டுமே இருந்தது.

ஆனால் இந்த 'அப்பா' என்ற ஒரே ஒரு அழைப்பு அவனை அவளுள் மூழ்கச் செய்தது. இப்படியாக அவன் குயிலியின் நினைவுகளுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, அர்ஜுன் அவனை அழைத்தான்.

போனை எடுத்தவுடன், 'டேய் மச்சான்! எங்கடா இருக்க?' என்று கேட்க 'சும்மா அப்படியே புல்லட்டில் சுத்திட்டு இருக்கேன்' என்றான். 'ஏன்? தோட்டத்துக்கு போலயா?' என்ற கேள்விக்கு,'இல்லடா போற மூட் இல்ல' என்று சொல்ல,

'ஓ அப்படியா.. எங்க இருக்க சொல்லு நானும் வரேன்' என்றான். தான் இருக்கும் இடத்தை சொன்னவுடன் 15 நிமிடங்களில் அர்ஜுனும் அங்கு வந்து சேர்ந்தான்.

சற்று நேரம் வேப்பமர நிழலில் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அர்ஜுன் தான் ஆரம்பித்தான்.


' என்ன மச்சான் ஒரே சந்தோஷத்தில் இருக்க போல' என்று கேட்க மழுப்பலாக சிரித்த மயில்வாகனன் 'அப்படி எல்லாம் இல்ல டா' என்றான்.


'டேய்.. டேய்.. மொச புடிக்கிற முயல மூஞ்சிய பாத்தா தெரியாது?' என்று அவன் முதுகில் இரண்டு அடி போட்டவன்,' சொல்லு என்ன விஷயம?' என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

அசடு வழிந்தவன் 'அது வந்து மச்சான்' என்று இழுக்க.. 'எது வந்து??'என்று அர்ஜுன் இடைமறிக்க கோபம் அடைந்தவன், 'டேய் மூடிட்டு நான் சொல்றதை கேளு டா', என்றான். 'சரிசரி சொல்லு சொல்லித் தொலை' என்று சொல்ல, 'நான் குயிலிய லவ் பண்றேன்' என்று சொல்லி விட்டான்.

'என்னது?அந்த சிடுமூஞ்சிய நீ லவ் பண்றியா? இது எப்ப இருந்துடா?' என்று கேட்க,
அவனை முறைத்தவன், 'யாருடா சிடுமூஞ்சி? அவ ஒரு குழந்தை டா..' என்றான்.

' யாரு, யாரு? அவங்க குழந்தை.. இதை நான் நம்பனும்?' என்று அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து வைத்தான் அர்ஜுன்.

'தப்பு பண்ற எல்லாத்தையும் வெரட்டி வெரட்டி அடிக்கறாங்க, அவங்க உனக்கு குழந்தையா?' என்றான்.
சிரித்த மயில்வாகனன், 'அவள் வெளிய அப்படி இறுக்கமா இருந்தா கூட அவளோட உள் மனசுக்குள்ள அவ ஒரு குழந்தைதான்.. அது எனக்கு நல்லா தெரியும்',என்றான்.

'நான் கூட உன்ன விளையாட்டுக்கு தாண்டா ஓட்டுன.. ஆனால் நீ உண்மையாவே லவ் பண்ணுவேனு நினைக்கவே இல்லை' என்று சொல்ல அசடு வழிந்தவன், அது எல்லாம் அப்படித்தான் என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.


' சரி,சரி கலெக்டர் மேடம் கிட்ட சொல்லிட்டியா?' என்று அர்ஜுன் கேட்க 'இல்ல மச்சான் நான் லவ் பண்ணுறது நேத்து நைட்டு தாண்டா எனக்கு தெரிஞ்சுச்சு. ஈவினிங் நான் அவங்க கிட்ட சொல்லனும்'

'என்னது நேத்து தான் லவ் பண்றது தெரிஞ்சுச்சா? அடப்பாவி, அப்ப இன்னும் நீ அவங்ககிட்டயே சொல்லலையா?' என்று தலையில் அடித்தவன் 'நல்லா வருவ டா நீ ...ஆமா இன்னும் எதுக்கு அவங்கள வாங்க போங்கன்னு கூப்பிடுற?' என்று கேட்க அசடு வழிந்து அவன் 'எப்பயும் போல வந்திருச்சு டா' என்றான்.

'அப்புறம் மச்சான், எப்படி ப்ரபோஸ் பண்றதுன்னு எல்லாம் யோசிச்சுட்டியா?' என்று கேட்க 'அதுதாண்டா நானும் ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கேன்' என்று சொல்ல

'டேய்! நீ ஒரு டாக்டர் டா பிஹெச்டி முடிச்சிருக்கேனு வெளியே போய் சொல்லிடாத..ஒரு பிரபாஸ் கூட பண்ண தெரியல, நீ எல்லாம்..' என்று ஒரு கேவலமான பார்வை பார்க்க, 'டேய் பிஹெச்டி முடிச்சா இது எல்லாம் தெரியணும்னு ஏதாச்சும் இருக்கா' என்று மயில்வாகனன் கேட்க, 'சரி வா நான் உனக்கு சொல்லி தரேன்' என்று அர்ஜுன் நண்பனை சமாதானப்படுத்தினான்.


இரண்டு மணி நேரம் எப்படி ப்ரபோஸ் செய்வது என்பதைப் பற்றி பேசியும் கூட இருவராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. 'டேய் நீ விடுடா, எனக்கு எப்படி தோணுதோ அது மாதிரி நான் அவகிட்ட பேசிக்கிறேன்', என்ற மயில்வாகனன் அவனையும் அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சாப்பிட சென்றான். கோகிலா இருவருக்கும் பரிமாற சாப்பிட்டவர்கள் மயில்வாகனனின் அறைக்குச் சென்றனர்.


மயில்வாகனன் வார்டரோபில் இருந்த அனைத்து துணிகளையும் எடுத்து கட்டிலின் மேல் போட்டு எதைப் போடலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். மயில்வாகனன் எப்பொழுதும் உடை விஷயத்தில் சற்று அதிக கவனம் எடுத்து தான் உடுத்துவான். அவன் ஏற்கனவே போட்டிருந்த உடை நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவன் மனசுக்கு திருப்தி இல்லாமல் போகவே வார்டரோபை பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தான்.

எப்பொழுதும் ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் வலம் வருபவன், இன்று ஃபோர்மல் டிரஸ் போட முடிவு செய்தான். குயிலுக்கு ஃபோர்மல் ட்ரெஸ் தான் பிடிக்கும் என்று ஏதோ உள்ளுணர்வு சொல்ல அதன்படி நடந்தான். எலுமிச்சை நிற மஞ்சள் சட்டையும் நீல நிற பேண்ட்டும் அணிந்தவன் பார்ப்பதற்கு அத்தனை அழகாக கம்பீரமாக இருந்தான். தலையை பத்து முறை கலைத்து வாரியபின்,

அர்ஜுனிடம் திரும்பி 'போகலாமா?' என்று கேட்டான். 'ஏன்டா ஒரு டிரஸ் பண்றதுக்கு ரெண்டு மணி நேரமா எடுத்துப்ப?' என்று முறைத்தவனை கண்டுகொள்ளாமல் 'வாடா வாடா, டைம் ஆச்சு' என்று கிளம்பி சென்றான்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
புல்லட்டை எடுக்காமல் காரை எடுத்தவனை அர்ஜுன் கேள்வியாய் நோக்க, 'ஹி ஹி இனி குடும்பஸ்தனாக போறேன் இல்ல மச்சான், இனி எல்லாம் அப்படித்தான்' என்றான்.

அர்ஜுனை மருத்துவமனையில் விட்டவன் தாங்கள் சந்திக்க இருந்த ரெஸ்டாரண்டை நோக்கிச் சென்றான்.

ஆறு மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்த குயில் ஆறே முக்கால் மணி ஆகியும் வரவில்லை. காலையிலிருந்து கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை அடக்கி வைத்தவனால், அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை.

அவளுக்கு அழைக்க 'சாரி சாரி, அதுக்குள்ள ஒரு வேலை வந்துடுச்சு. இன்னொரு கால் மணி நேரத்தில் வந்து விடுவேன்', என்றவள் போனை வைத்து விட்டாள். அவனும் அவளிடம் எப்படி சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

திடீரென்று வெளியில் 'டமால்' என்ற சத்தம் கேட்டது. ஹோட்டலில் இருந்தவன் வெளியே சென்று பார்த்தான். குயிலின் கார் ரோட்டின் ஓரத்தில் குப்புற விழுந்து கிடந்தது. ஓடிச் சென்று பார்க்க குயிலியின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

குயிலி அவனைப் பார்த்ததும் 'அப்பா' என்றழைத்து அப்படியே மயங்கி விட்டாள். அவளின் டிரைவர் அரை மயக்க நிலையில் இருந்தார். அருகிலிருந்த ஆட்களின் உதவியுடன் குயிலியையும் டிரைவரையும் வெளியே எடுக்க, அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது. இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றி ஹாஸ்பிடலிற்கு கொண்டு சென்ற மயில்வாகனன் கண்கலங்கி வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐசியூவில் அவளுக்கு ட்ரீட்மென்ட் நடந்துகொண்டிருந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என்று கேட்கும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை. அவள் நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் தன் உணர்வுக்கு வந்தவன், செல்லாவிற்கு அழைத்து எதுவும் சொல்லாமல் மருத்துவமனைக்கு வருமாறு மட்டும் சொல்லி, அவன் டிரைவரை அனுப்பினான்.

செல்லா வரும்வரை குயிலி கண் விழிக்கவில்லை. செல்லா வந்ததும் அவள் அழுகையை நிறுத்த அவன் படாதபாடுபட்டு போனான். 'ஒன்னும் இல்லடா ஜஸ்ட் சின்ன காயம் தான்.. ஒரு மணி நேரத்தில அக்கா கண்ண முழிச்சிடுவாங்க' என்றவன் டாக்டரிடம் அழைத்துச் சென்று அவள் நிலமையை செல்லாவிற்கு விளக்கினான்.

அவளுக்கு நினைவு திரும்பும் வரை அவனுக்கும் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் செல்லாவிடம் தன் பயத்தை காட்டி அவளை மேலும் பயப்படுத்த விரும்பாதவன், அவளுக்கு ஆறுதல் அளித்தான்.


குயிலியை ரூமுக்கு மாற்றியிருந்தார்கள். குயிலி கண்விழித்ததும் முதலில் மயில்வாகனனைத்தான் பார்த்தாள் . 'இப்ப எப்படி இருக்கு நல்லா இருக்கா?' என்று கேட்க அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வாய் தன்னையும் அறியாமல் 'பா' என்று முணுமுணுத்தது. 'என்ன சொன்ன? சரியா கேட்கலை', என்று அவன் சொல்ல, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை ஆட்டியவள், 'நல்லா இருக்கேன்' என்றாள்.

ரெஸ்ட் ரூம் சென்றிருந்த செல்லா கதவை திறந்து கொண்டு வர, முழித்திருந்த குயிலியை பார்த்ததும் 'அக்கா' என்றழைத்து, அவளை கட்டிக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அறையை விட்டு வெளியே சென்றவன் நர்சிடம் அவள் கண் ழுழித்ததை சொன்னான்


அவளை பரிசோதிக்க வந்த நர்ஸ் அவளுக்கு ஊசி போட வேண்டும் என்று சொல்ல குயிலுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. இவ்வளவு நேரம் மயக்க மருந்தின் வீரியத்தால் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை .

சிறுவயதில் இருந்தே அவருக்கு ஊசி என்றால் பயம் அதிகம். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலைகளை எளிதாக கடந்து வந்தவளுக்கு, இந்த ஊசி போட்டுக் கொள்ளும் பொழுது ஏற்படும் பயத்தை மட்டும் எளிதில் கடக்க முடியவில்லை. அவள் முகத்தை பார்த்த மயில்வாகனன், அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டான்.

குயிலியின் மனது 'அப்பா, அப்பா' என்று உள்ளுக்குள் கத்திக் கொண்டிருந்தது. கண்களின் ஓரம் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. அது ஆனந்தக் கண்ணீரா , இல்லை சோகத்தினால் வந்த கண்ணீரா என்பது அவளுக்கே தெரியவில்லை.

அன்றோடு குயிலுக்கு அடிபட்டு ஒரு மாத காலமாகி இருந்தது. இந்த ஒரு மாதத்தில் மயில்வாகனன் அவளை கவனித்தக் கொண்டதற்கு அளவே கிடையாது.

'வாங்க, போங்க' என்ற அழைப்பு இப்பொழுது 'வா, போ' என்று மாறி இருந்தது. குயிலியும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

குயிலுக்கு அடிபட்டதை கேள்விப்பட்டவுடன் கிருபா வந்து ஒரு வார காலம் தங்கியிருந்து அவளை நன்றாக கவனித்துக்கொண்டாள். செல்லாவினால் கிருபாவை போல் அதிகமாக வேலைகள் செய்ய முடியாததால் கிருபா எல்லா வேலைகளையும் நன்றாக பார்த்துக் கொண்டாள். குயிலி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கேயே தங்கி விட்டாள்.

மயில் வாகனமும் தினமும் அவளை வந்து பார்த்துச் சென்றான். அவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நான்கு முறை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். பயத்தில் அழுது கொண்டிருந்த செல்லாவிற்கு மங்கை தான் பெரும் ஆறுதலாக இருந்தாள்.

ஏனெனில் இவ்வளவு நாட்கள் உறவுகள் என்று யாரும் இல்லாத இவளை தனியாளாக வளர்த்து இவ்வளவு பெரிய பெண்ணாக்கியது அவளின் உடன்பிறவா சகோதரி குயிலி தானே. அவளுக்கு ஒன்று என்றவுடன் செல்லாவினால் அதை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இப்பொழுது தினமும் இரவு குயிலி படுக்கும் முன் மயில்வாகனனைப் பற்றி நினைக்கிறாள். அதற்கான காரணத்தை ஆராய முற்படவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனை நினைக்க வைத்துக் கொண்டே இருந்தது. அந்த உணர்விற்குப் பெயர் நட்பு என்று அவள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டாள்.


அன்று மாலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்த அவளின் கை பேசி சினுங்க எடுத்துப் பேசிய அவளின் முகம், கோபத்தில் செக்கச்செவேலென சிவந்தது. அவளின் கார் மீது லாரி ஒன்று விழுந்துவிடவே தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அது எதேச்சையாக நடந்த சம்பவமாக தெரியவில்லை, திட்டமிட்டு செய்ததாகத் தான் தோன்றியது குயிலுக்கு. அதனால்தான் அவள் அதை விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டு இருந்தாள்.

அந்த விசாரணையில் கிடைத்த தகவலில் தான் குயிலுக்கு கோபம் வந்தது. ஏனெனில் இந்த விபத்தை பண்ண ஆட்களை ஏவிவிட்டது மங்கையிடம் தப்பாக நடந்து கொண்ட அந்த இயக்குனர் தான். காசு கொடுத்து ஜெயிலில் இருந்து வெளி வந்து இருக்கிறார்.

வெளியே வந்து ஒரு மாத காலம் தான் ஆகி இருக்கிறது. ஆனால் இப்பொழுது அவ்வியகுநர் காரில் செல்லும் போது நடந்த விபத்தில் செயலிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இதற்குக் காரணம் மயில்வாகனன் தான் என்று அவளுக்கு செய்தி வந்திருந்தது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அவன் அப்படி செய்தது அவளுக்கு கோபத்தை கொடுக்க, உடனே மயில்வாகனனிற்கு அழைத்து தன்னைபார்க்க வருமாறு சொன்னாள். அவன் அப்படிப் பண்ணியது மனதில் ஒரு ஓரம் சந்தோஷமாக இருந்தாலும், அவன் செய்தது தவறு என்று ஒரு மாவட்ட ஆட்சியராக அவள் மனம் அவளிடம் சொன்னது.


குயிலி வருவாள்...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
வெண்பா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிஸ்காவர்ணா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இது நல்லாயிருக்கே ஞாயம்?
இவள் போய்ச் சேர்ந்திருந்திருந்தால்
ஒரு மாசத்துக்கு மேலாகியிருக்கும்
வம்பாடுபட்டு எங்கள் மயிலு
குயிலைக் காப்பாற்றினால்
கல்லைக்கட்டுற அம்மிணிக்கு
கோவம் வருதோ, வெண்பா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top