• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
மயில்வாகனன் வந்ததும் அந்த மூன்று நாய்களும் குறைத்துக் கொண்டே இருக்க அவன் அதனருகில் சென்று அவற்றைத் தடவிக்கொடுத்தான். அவற்றுடன் சிறிது நேரம் பேசியவன் பின்பு உள்ளே குயிலியை காணச் சென்றான். குயிலி "ஏன் இப்படி பண்ணீங்க?" என்று கோபமாக கேட்க அவன் "எப்படி பண்ணினேன்?" என்றான் குறும்புடன்.

" நான் எதைப்பற்றி கேட்கிறேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்" என்று அவள் முறைக்க "குயிலி நீங்க இப்ப தான் பேக் டூ ஃபார்ம்" என்று சொல்லி சிரித்தான். "தப்பு பண்ணா அவர்களை தண்டிக்க சட்டம் இருக்குறப்ப அவங்கள தண்டிப்பதற்கு நீங்க யார்?"என்றவள் அழுத்தமாக கேட்க "ஓ!அப்ப உங்க சட்டம் அந்த நாய் பண்ண தப்புக்கு கரெக்டான தண்டனைதான் குடுத்து இருக்கு இல்லையா?" என்றவன் நக்கலாக கேட்க அவள் ஒன்றும் பேச முடியாமல் பல்லைக் கடித்தால்.

"நீங்க என்ன சொன்னாலும் நீங்க பண்ணினது ரொம்ப பெரிய தப்பு தான்"என்றவள் அதிலேயே நிற்க கோபம் அடைந்தவன் "என் பொண்டாட்டிய ஒருத்தன் கொலை பண்ண ட்ரை பண்ணா அவனை விட்டு வைத்திருக்க நான் ஒன்னும் கையாலாகாதவன் இல்லை" என்று உணர்ச்சி வேகத்தில் உளறிவிட்டான்.

சொன்ன பின்பு தான் அதன் அர்த்தம் உணர்ந்தவன் அப்படியே வெளியே சென்று விட்டான். அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்தவன் "ஐயோ!என் காதலை எப்படி எப்படி எல்லாமோ சொல்லலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தேனே... கடைசியில் இப்படி உளறிட்டேனே...இப்படியா டா சொதப்புவ மயில்வாகனா...இனி அவள்வந்து கேட்கிற கேள்விக்கு எப்படி தான் பதில் சொல்ல போறியோ"என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

அவன் கூறியதில் இருந்து வெளிவர குயிலுக்கு முழுதாக பதினைந்து நிமிடங்கள் பிடித்தது.வெளியே வந்து அவன் அமர்ந்திருந்த மரத்தின் அருகில் நின்றவள் "உள்ளே நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்க "உனக்கு என்ன கேட்டுச்சோ அதைத்தான் சொன்னேன்" என்றவன் கூலாக பதில் சொன்னான்.

" நடக்காது...நீங்க சொல்றது கண்டிப்பா நடக்காது" என்றவள் சொல்ல "நான் நடத்திக் காட்டுவேன்" என்றான்."என்னால உங்களை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றவள் காதைப் ஒத்த "ஓ ...அப்ப வேற யாரையாச்சும் லவ் பண்றியா?" என்றவன் கேட்க "இல்லை... நான் என் வாழ்க்கையில் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றாள்.

"ஏன் கல்யாணம் பண்ணிக்காம ஔவையார் மாதிரி வாழ போறியா?" என்றவன் நக்கலாக கேட்க கோபத்தின் உச்சிக்கு சென்றவள் "அது என்னோட பர்சனல் விஷயம் .நல்லவர்ன்னு நினைச்சு பழகினா இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்றீங்க ...உங்ககிட்ட இருந்து இவ்வளவு ஒரு கேவலமான ஆட்டிட்யூட்ட நான் எதிர்பார்க்கவே இல்லை" என்றவள் அழுத்தமாக உரைத்தாள்.

அவள் கூறியதைக் கேட்டவுடன் அவளை ஒரு பார்வை பார்த்தவன் பின்பு திரும்பி விடுவிடுவென நடந்து சென்று விட்டான். அவள் பேசி முடித்த பின்புதான் அவள் கூறிய வார்த்தையின் தீவிரத்தை உணர்ந்தாள்.

குயிலி மயில்வாகனனுடன் சண்டையிட்டு அன்றோடு இரு மாதங்கள் ஆகியிருந்தது .இந்த 60 நாட்களில் அவனும் அவளுடன் பேசவில்லை. அவளும் அவனுடன் பேச முயற்ச்சிக்கவில்லை .ஆனால் இருவரும் மற்றவரைப் பற்றி நினைத்துக் கொண்டே தான் இருந்தனர் .

குயிலுக்கு தான் பேசியது தவறு என்று தோன்றினாலும் அவனுடன் பேச அவள் மனம் இடம் கொடுக்கவில்லை .காரணம் ஈகோ அல்ல. எங்கே அவனுடன் பேசினால் மனனது மாறி அவனை திருமணம் செய்து கொள்ள நேர்ந்துவிடுமோ என்று தான் .இவ்வளவு நாட்கள் திருமணமே வேண்டாம் என்று உறுதியாக இருந்தவளால் அவன் சொன்னதை கேட்டவுடன் அவ்வளவு உறுதியாக தன் முடிவில் இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம் .அவளுக்கும் அவனைப் பிடித்து இருந்தது .ஆனால் அந்த பிடித்ததை வெறும் நட்பு என்ற உறவுடன் முடித்துக் கொள்ளலாம் என்று அவள் நினைத்து இருந்தாள்.
*******************
வீட்டிற்கு வந்தவள் கண்ணம்மாவிடம் காப்பி கேட்டு விட்டு சோபாவில் அமர "ஏன் க்கா இப்பெல்லாம் ரொம்ப டல்லா தெரியுற?"என்று செல்லா கேட்ட கேள்விக்கு "ஒன்னும் இல்ல... கொஞ்சம் வேலை ஜாஸ்தி" என்று மழுப்ப "இல்லையே நீ எவ்வளவு வேலை இருந்தாலும் இவ்வளவு டல்லா இருந்து நான் பார்த்ததே இல்லை" என்று கேட்க "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்பது போல் தலையை அசைத்தவள் கண்ணம்மா கொண்டு வந்த காபியை "வேண்டாம்" என்று சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

கிருபாவிடமிருந்து கால் வரை எடுத்தவள் "சொல்லு பட்டு! எப்படி இருக்க?" என்றாள்."நான் நல்லா இருக்கேன் க்கா ...ஏன் உங்க வாய்ஸ் ரொம்ப டல்லா இருக்கு?" என்று கேட்க "அப்படி எல்லாம் இல்ல... நல்லா தான் இருக்கேன்... சொல்லு..." என்றாள் "அது வந்து நீ பெரியம்மா ஆக போறேன்" என்றவள் வெட்கக் குரலில் சொல்ல "உண்மையாவா பட்டு ....ரொம்ப சந்தோஷம் ..."என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
"ஆமா ...இப்ப தான் கன்ஃபார்ம் பண்ணேன்"என்று சொல்ல "கங்ராட்ஸ் பட்டு...நானும் செல்லவும் நாளைக்கு உன்னை பார்க்க வரோம்" என்றாள்.

அடுத்த நாள் செல்லாவும் குயிலும் கிருபாவை காண அவர்கள் வீட்டிற்கு சென்றபோது மயில்வாகனனின் மொத்த குடும்பமும் அங்கேதான் இருந்தது. மயில்வாகனனைத் தவிர அனைவரும் குயிலிடம் நன்றாக பேசினர்.

சவரம் செய்யப்படாத தாடியுடன் அவனை பார்ப்பதற்கு குயிலுக்கு கஷ்டமாக இருந்தது. அங்கிருந்தோருடன் குயிலி பேசினாலும் அவளின் கண்கள் அவனையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன .அவன் அதை உணர்ந்தாலும் அவளை கண்டு கொள்ளவில்லை .அர்ஜுனுடன் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான். எப்பொழுதும் முகத்தில் இருக்கும் தேஜஸ் இப்பொழுது காணாமல் போயிருந்தது .அவனை அப்படி ஒரு தோற்றத்தில் பார்க்க அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் மயில்வாகனனிற்கு அழைத்தாள். ஆனால் அவன் போனை எடுக்கவில்லைஅடுத்த நாள் காலை மீண்டும் இரண்டு முறை முயற்சிக்க இரண்டாவது முறை அவன் போனை எடுத்தான்.

" ஹலோ... நான் குயிலி பேசுறேன்" என்றவள் சொல்ல "ஹம்"என்றான் .அவன் இப்படி பேசியது அவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் தவறு தன் மேலும் உள்ளது என்றதால் "அன்னிக்கு பேசினதுக்கு சாரி... நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு பேசல ...நான் உண்மையாலுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் .நீங்க திடீர்னு இப்படி பேசினதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியாம கோபத்துல அப்படி பேசிட்டேன்.சாரி"என்றவள் வருத்தத்துடன் பேச "சரி"என்றவன் ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டான்.

குயிலியால் அவனின் இந்த உதாசினத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.மயில்வாகனனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.அதனால் தான் அவனின் செய்கைகள் அனைத்தும் அவளை மிகவும் பாதித்தது.

பக்கத்தில் இருந்த அர்ஜுன்" ஏண்டா மச்சான்.... அவங்களே இறங்கிவந்து பேசுறாங்க இல்ல...அப்புறம் எதுக்கு நீ இவ்வளவு சீன் போடுற?" என்று கேட்க "இல்லடா அவ என்ன உண்மையாலுமே லவ் பண்றா ...அவளோட மனசுக்குள்ள என்னமோ இருக்கு. அதனால தான் கல்யாணம் வேண்டாமுன்னு சொல்றாள்.நான் அவாய்ட் பண்ண பண்ணத்தான் அவளுக்கு என்கிட்ட பேசணும் அப்படிங்கிற இன்டென்சன் ஜாஸ்தியாகும்" என்றவன் புன்னகைக்க "பலே கில்லாடி தாண்டா நீ!"என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அர்ஜுன்.
************
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்த மயில்வாகனனின் புல்லட் திடீரென்று பஞ்சர் ஆகி விட 'என்ன ஆச்சு?'என்று யோசித்துக்கொண்டே கீழே டயரைப் பார்வையிட்டு கொண்டிருந்தவனை இருவர் தாக்கினார். இவனும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டிருந்தான். மயில்வாகனனிற்கு கராத்தே தெரிந்திருந்தாலும் இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க சற்று திணறினான்.

திடீரென்று ஒரு பேருந்து வர இருவரும் ஓடி விட்டனர். பின்பு மயில்வாகனனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .உடம்பு முழுவதும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு இருந்தது; வலது கையில் பிராக்சர் ஆகி இருந்தது.

விஷயம் கேள்விப்பட்டவுடன் அவனின் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு அங்கு வந்தனர் .கோகிலாவின் அழுகை குறையவே இல்லை .குமாரசாமி ஆட்களை அனுப்பியது யார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.அவரின் கண்களும் லேசாக கலங்கி இருந்தன.சீராட்டி பாராட்டி வளர்த்த மகனை அடித்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் மிகவும் கலங்கி இருந்தார்.

ஷாமளாவும் அழுது கொண்டே இருக்க "நீ எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சு இருக்க?இந்த சிச்சுவேஷன் கூட ஹேண்டில் பண்ண முடியலனா எப்படி பெரிய ஆக்சிடன்ட் கேஸ் எல்லாம் பார்ப்ப?கையில சின்ன பிராக்ச்சர் இருக்கு. கொஞ்சம் அடிபட்டிருக்கு ...அதனால் மயங்கி இருக்கான். இதுக்கு போயா இப்படி அழுவ?"என்று அதட்டி அர்ஜுன் அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

விமலா தான் சற்று தைரியமாக இருந்தாள் .விஷயம் கேள்விப்பட்டதும் கிருபாவும் சுஜித்தும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டனர் .இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவனின் கண்களில் பட்டது அழுது கொண்டிருந்த கோகிலா தான்.

"ம்மா ....என்னமா இதுக்கெல்லாம் போய் அழுதுட்டு இருக்க ...ஒரு சின்ன அடி தான்... இதுக்கு போய்யாராச்சும் அழுவாங்களா?" என்று அதட்ட "டேய் நீ பிறந்ததிலிருந்து ஒரு டைம் ஆச்சு நான் உன்னை அடிச்சிருப்பேனாடா? நீ பிறந்ததில் இருந்து ஒரு டைம் கூட நான் உன்ன அடித்தது இல்லை .அப்படி பொத்தி பொத்தி வளர்த்த என் பையனை..." என்றவர் மேலும் மேலும் குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.

" கோகிலா வெளியே போ..." என்று அதட்டிய குமாரசுவாமி மகன் அருகில் வந்தார் .கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்த தந்தையைப் பார்த்தவன்"ப்பா ...ஒன்னும் இல்லப்பா ...ஜஸ்ட் சின்ன அடி தான். நீங்க பண்ணது யாருன்னு விசாரிச்சீங்களா?" என்று கேட்க "பொங்கலூர் ஊர் தலைவரோட பையன் தான் இது பண்ணியிருக்கான்.அவனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?" என்று கேட்க நடந்த அனைத்தையும் தெரிவித்தான்." ஓ சரி" என்றவர் போனை எடுத்து வெளியே சென்று விட்டார் .

அடுத்த நாள்தான் குயிலுக்கு விஷயம் சொல்லப் பட்டது .அவனுக்கு அடிபட்டு விட்டது என்று தெரிந்தவுடன் அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தாள். ஒரு மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது தான் இந்த போன் வந்தது .அப்படியே காரைத் திருப்ப சொல்லியவள் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாள்.

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து அழுது கொண்டே தான் இருந்தாள்.தாஸ் எவ்வளவு கேட்டும் அவளிடமிருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை .எப்பொழுதும் ஒருவித கம்பீரத்துடன் இருக்கும் குயிலியை இப்படி அழுத முகமாக பார்க்க அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ரௌண்ட்ஸ் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்ப வந்த அர்ஜுன் இவள் அழுதுகொண்டே உள்ளே வருவதைப் பார்த்ததும் மயில்வாகனனின் அறை எண்ணை கூறினான்.மயில்வாகனனின் மொத்த குடும்பமும் உள்ளே தான் இருந்தனர் .அழுது வீங்கிய முகத்துடன் உள்ளே நுழைந்தவளை அனைவரும் கேள்வியாய் பார்க்க குயிலுக்கு அவை எதுவும் கருத்தில் பதியவில்லை.

அவன் படுத்திருந்த கட்டிலின் அருகில் வந்தவள் அதில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள். அப்பொழுது அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள்...அவள் அந்த ஊரின் கலெக்டர் என்பதை மறந்து விட்டாள்.... தனக்கு கல்யாணமே வேண்டாம் என்பதை மறந்து விட்டாள்.... மயில்வாகனனின் அப்பாவும் தலைவர் என்பதை மறந்து விட்டாள் ....அவனிடம்தான் பேசிய பேச்சை மறந்துவிட்டால்... மொத்தமாக தன்னையே மறந்து விட்டதால் தான் அந்த நிலையில் இருந்தாள்.

மயில்வாகனனிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .ஒரு சிறு குழந்தை தனது பொம்மையை யாரேனும் உடைத்து விட்டால் அழும் அழுகை போல் இருந்தது அவள் அழுகை.அவனுக்கு எல்லோரையும் பார்க்க அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஒரு சங்கடமான பார்வையுடன் அனைவரையும் நோக்க அர்ஜுன் தான் அனைவரும் வெளியே கூட்டிச் சென்றான் .

குயிலியின் அழுகை மயில்வாகனனை சிறகில்லாமல் பறக்கச் செய்தது .அவள் தலையை தடவியவன் "ஒன்னும் இல்லடா... ஜஸ்ட் சின்ன அடி தான்" என்று சொல்ல அவள் எதையும் கேட்கவில்லை ...அழுதுகொண்டே இருந்தாள்.

ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு அழுகை மெல்ல விசும்பல் ஆனது. அவள் தலை நிமிர்ந்தவுடன் "எவ்வளவு பெரிய கலெக்டர் நீ... இப்படி ஒரு சின்ன விஷயத்துக்குப் போய் பயந்து அழலாமா? என் பொண்டாட்டி ரொம்ப தைரியசாலி என்று நான் நினைச்சுட்டு இருந்தேன்.இவ்வளவு பெரிய பயந்தாங்கொளியா இருக்க" என்றவன் கிண்டல் செய்ய குயிலியை சுற்றியிருந்த கயிறு அறுபட்டது.

அப்பொழுது தான் அவள் செய்த செயலின் உண்மை அவளை சுட்டது .தீடீரென்று கதவு தட்டப்பட்டு ஒரு நர்ஸ் உள்ளே வந்தார். அவரின் பின்னாடியே ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளே நுழைந்தனர். அவள் செய்த காரியத்தினால் அவளால் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

தலை குனிந்து கொண்டே வெளியே சென்றாள். வாயில் நுரையுடன் தற்கொலை முயற்சி செய்தவரை ஐ.சீ.யூவிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர் .நுரை தள்ளிய வாயை பார்த்த குயிலி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டாள்.

அவள் பின்னாலேயே வந்த தாஸ் "ஹெல்ப்" என்று கத்த அர்ஜுன் உதவி செய்ய வந்தான். அவளை ஆராய அவள் மிகவும் ஸ்ட்ரேஸாக இருப்பதால் வந்த மயக்கம் என்றவன் அவளுக்கு ட்ரீட்மென்ட் அளித்தான் .விஷயம் கேள்விப்பட்டவுடன் செல்லாவும் மங்கையும் ஆபீஸிலிருந்து ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டனர் .விக்ரம் தான் அவர்களை அழைத்து வந்தான்.

மயில்வாகனனிற்கு மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தாலும் அவள் மனதில் என்ன இருக்கிறது?ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாள் ?என்று எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த குயில் யாருடனும் பேசவில்லை .யார் கேட்ட கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை .முகத்தில் எப்பொழுதும் போல் இருக்கும் இறுக்கம் குடிகொண்டு இருந்தது.

குயிலி வருவாள்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top