• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
வணக்கம் நட்புக்களே ,

இவ்வளவு நாள் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் .இனி முடிந்த அளவிற்கு சீக்கிரமாக பதிவுகள் கொடுக்கப் பார்க்கிறேன் .படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .

உங்கள் பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கும் ,
வெண்பா .
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அன்றோடு மருத்துவமனையிலிருந்து இருந்து வந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. இந்த ஒரு மாதமாக குயிலி யாருடனும் சரியாகப் பேசவில்லை .சரியாகப் பேசவில்லை என்பதை விட பேசவே இல்லை என்பதுதான் உண்மை.

அன்று அப்படிப் நடந்து கொண்டது மிகவும் தப்பு என்று அவளின் மனம் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. அவனை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேட்டவுடன் உண்மையில் அவள் உயிர் அவளிடம் இல்லை .அதனால்தான் தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அப்படி செய்து விட்டாள்.

செய்து முடித்த பின்பு தான் செய்த காரியத்தின் வீரியம் அவளுக்குப் புரிந்தது. அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற கேள்வியே அவள் மண்டையை குடைந்து கொண்டிருந்தது .வேண்டாம் வேண்டாம் என்று அவள் அவ்வளவு சொல்லியும் அவளை விடாதவன் இப்பொழுது இவள் செய்து வைத்திருக்கின்ற வேலைக்கு இனிமேல் இவளை திருமணம் செய்யாமல் விடுவானா என்று பயம் வந்துவிட்டது .

மயில்வாகனனனைப் பொருத்தவரை ஒன்றை நினைத்து விட்டால் கண்டிப்பாக அதை செய்து முடித்து விடுவான். அதனால் தன்னை எப்படியாவது திருமணம் செய்து கொள்வானோ என்ற பயம் அவளுக்கு வந்து விட்டது.ஒரு பக்கம் மனது அப்படி செய்து விட்டால் நல்லது என்று சொல்லியது. ஆனால் அதை ஒதுக்கித் தள்ளிய மூளை தன் வாழ்வில் திருமணமே இல்லை என்று உருப்போட்டுக் கொண்டிருந்தது.

இப்பொழுதெல்லாம் அவளுக்கு அவள் மேல் இருக்கும் நம்பிக்கையை விட அவன் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகமாகிவிட்டது .12 வருடமாக திருமணமே வேண்டாம் என்று இருந்த மன உறுதி இப்பொழுது இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு அவளிடம் பதிலில்லை .மனதில் அவன்மேல் கொள்ளை கொள்ளையாக ஆசை இருந்தாலும் அதனை செயல்படுத்த முடியாமல் மூளை அவளைத் தடுத்தது.

இந்த ஒரு மாதமாக கிருபா 200க்கும் மேற்பட்ட முறை அழைத்துவிட்டால் .ஆனால் ஒரு அழைப்பை கூட எடுத்துப் பேசவில்லை. இனிமேல் மயில்வாகனனின் குடும்பத்தினரை நேருக்கு நேராக அவளால் சந்திக்க முடியுமா என்ற ஐயம் அவள் மனதில் எழுந்தது.அதனால் எல்லோரையும் தவிர்த்திருந்தாள்.

இதற்கு நேர் மாறாக மயில்வாகனன் ஒருமுறை கூட அவளை அழைத்து பேசவில்லை .அவளும் அன்று மருத்துவமனையில் அவனைப் பார்த்தது தான் அதற்குப் பிறகு அவனிடம் பேச வில்லை .அவன் தனக்கு வேண்டாம் என்று நினைத்தாலும் அவன் தன்னிடம் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குயிலுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.

இந்த ஒரு மாதமாக என்னிடம் பேசவில்லையே என்ற கவலை மனதை அரித்து கொண்டே இருந்தது .ஒருவேளை தான் அன்று செய்த செயல் அவனுக்கு பிடிக்கவில்லையோ? அவனின் பெற்றோர்கள் அவனை ஏதாவது திட்டி இருப்பார்களோ? தன்னை வேண்டாம் என்று மறுத்து விட்டு அவசரமாக வேறு பெண்ணை பார்த்திருப்பார்களோ? என்ற பல குழப்பம் அவளின் மனதில் ஓடியது .

முகத்தில் எப்பொழுதும் இருக்கும் இறுக்கத்தையும் தாண்டி சோர்வு தெரிந்தது. இந்த எண்ணங்களிலிருந்து எல்லாம் விடுபட முடிந்த அளவிற்கு தன்னை வேலையில் மூழ்கடித்து க்கொண்டாள் .காலையில் சீக்கிரமாக கிளம்பி இரவுதான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். எவ்வளவு வேலை செய்தாலும் நித்திராதேவி அவளை அவ்வளவு எளிதாக தழுவுவதில்லை. யாருடனும் பேசப் பிடிக்காமல் எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுந்தாள். செல்லாக் கூட இப்பொழுது குயிலி யுடன் பேச பயப்படுகிறாள்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ஒட்டு மொத்த குடும்பமும் கேட்ட கேள்விக்கு மயில்வாகனனால் பதில் சொல்ல முடியவில்லை" நான் அவளை லவ் பண்ற .அவளும் என்ன லவ் பண்றா. ஆனா அவளுக்குள்ள என்னமோ இருக்கு... அதனால என்கிட்ட அவளோட லவ்வ சொல்ல மாட்டேங்குறா .இனி கொஞ்ச நாள்ல நான் எல்லாம் சரி பண்ணிறேன்.அது வரைக்கும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க" என்றவன் எழுந்து தன் அறைக்கு சென்று விட்டான் .

அவனின் வீட்டில் குயிலி மயில்வாகனனிற்கு மனைவியாக வருவது அனைவருக்கும் சம்மதமே .அவளின் நேர்மையான குணம் அனைவரையும் கவர்ந்திருந்தது .அதனால் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.விமலாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. குயிலியின் தைரியத்தைப் பார்த்து மிகவும் வியந்திருக்கிறாள். இப்பொழுது குயிலியே தனக்கு அண்ணியாக வரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தாள்.

குயிலியின் பிரச்சினை என்ன என்பதை பல வழிகளில் கண்டுபிடிக்க முயன்றான்மயில்வாகணன். கிருபா விடம் கேட்டபொழுது அவளுக்கு குயிலியை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி கை விரித்து விட்டாள்.ஆனால் உண்மையில் அவளுக்கு எல்லாம் தெரியும் என்பது அவனிற்கு தெரியும் .ஆனால் அவளிடமிருந்து எந்த பதிலும் அவனால் வாங்க முடியவில்லை.

" நீங்க குயிலி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷம் மச்சி .அவங்களை மாதிரி ஒரு பொண்ணு மனைவியா கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும். அவங்களுக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு .பட் அவங்களுக்கு உள்ள ஏதோ இருக்கு. நீங்க அவங்க கூட மனசு விட்டு பேசுங்க ...எல்லாம் சரியாயிடும். நானும் அவங்க கிட்ட பேச ட்ரை பண்றேன் "என்றவள் இருவருக்கும் கல்யாணம் நடந்தால் இருவரையும் திருப்பதி அழைத்து வருகிறேன் என்று வேண்டிக்கொண்டாள்.

ரொம்பவும் சிரமப்பட்டு குயிலியை பற்றி விசாரித்ததில் அவனுக்கு கிடைத்த பதில்கள் மிகவும் சொற்பம் தான் .ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் .அங்கு ஏதோ பிரச்சனை ஆனதால் அங்கு அவளுடன் வளர்ந்த செல்லாவை அழைத்துக் கொண்டு தனியாக வந்து தங்கி கொண்டாள் .அக்கவுண்டன்ட் ஆக வேலை செய்துகொண்டே படித்து ஐஏஎஸ் எழுதி பாஸ் செய்து இருக்கிறாள் என்பது மட்டுமே அவனுக்கு கிடைத்த பதில்கள் .

செல்லா அவளின் உடன் பிறந்த தங்கை இல்லை என்று கேட்டவுடன் மிகவும் அதிர்ந்து விட்டான்.குயிலி செல்லாவின் மேல் காட்டிய அக்கறை அப்படி! ஒரு வேளை தனக்கு யாரும் இல்லை என்று நினைத்து தான் தன்னை மறுக்கிறாளோ என்று நினைத்தவன் அவளிடமே சென்று பேசலாம் என்று முடிவெடுத்தான்.

கை இப்பொழுது ஓரளவிற்கு குணமடைந்து இருந்தாலும் வண்டி ஓட்டும் அளவிற்கு சரியாகவில்லை. அதனால் அர்ஜுனுக்கு அழைத்தவன் தன்னை கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டிப்போவதற்கு வரச் சொன்னான். காரில் வந்தவன் "கிளம்பலாம் மச்சி" என்று சொல்ல "இல்லடா ...நீ புல்லட் எடு அதுல போகலாம் " என்றான்.

" ஏன்டா கை இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா குணம் ஆயிட்டு இருக்கு. ஒழுங்கா கார்ல வா "என்று சொல்ல "டேய் புல்லட்டில் போயி ரொம்ப நாளாச்சு .ப்ளீஸ்டா புல்லட் எடு" என்க அவனும் வேறு வழியில்லாமல் புல்லட் எடுத்தான்.

போகும் வழியில் "அப்படி என்னடா உனக்கு இந்த புல்லட் மேல இவ்வளவு கிரேஸ் ?கை அடி பட்டிருக்கு ...அப்ப கூட உன்னால காரில் வர முடியாதா?" என்று வினவ "திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் வைஃப் டா" என்றான் சிரித்துக்கொண்டே.

" குயிலி இதை கேட்டாங்கன்னு வெச்சுக்கோ அவ்வளவுதான்...அன்னைக்கு என்ன ஒரு அழுகை... அம்மா..நான் அவங்களைப் பார்த்து அப்படியே ஃப்ரீஸ் ஆகி விட்டேன் ...உன்னைத் தவிர வேற யாரையும் அவங்களுக்கு கண்ணு தெரியல டா " என்று அர்ஜுன் கிண்டலடிக்க

"ம்க்கும்..அப்படியே கேட்டுட்டு வந்து பொறாமைப்பட்டு என் கிட்ட சண்டை போட்டாலும் ... ஹாஸ்பிடல் அவ்வளவு அடிபட்டு இருந்தப்ப அழுதுட்டே வந்தா. ஆனா வீட்டுக்கு போனதுக்கப்புறம் ஒரு போன் கூட பண்ணல இன்னைக்கு வரைக்கும். அவள வெச்சுட்டு என்னதான் பண்ண போறேனோ எனக்கு தெரியல..." என்று புலம்ப
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
"சரி மச்சான் ...கூல்... கூல்... இப்ப என்ன டிசைட் பண்ணி இருக்க?" என்றான் அர்ஜுன் "தெரியலடா எவ்வளவு விசாரித்தும் என்னால் அவளைப் பற்றி நிறைய இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ண முடியல .டைரக்டா அவ கிட்டேயே பேச போறேன்" என்றவன் சொல்ல கலெக்டர் அலுவலகம் வந்து இருந்தது.


"பாய் மச்சான். அடி கிடி பலமா கொடுத்தாங்கன்னா ஓடிவந்துரு .ஏற்கனவே அடிபட்ட உடம்பு இன்னும் அடி வாங்கினால் தாங்காது "என்று அர்ஜுன் கிண்டலடிக்க அவனை முறைத்தவன் முதுகில் தட்டி "வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுடா" என்று சொல்லி உள்ளே சென்றான்.

அன்று காலையில் எழுந்ததிலிருந்து குயிலுக்கு என்றயையும் விட அதிக சோர்வாக இருந்தது. அந்த நாளின் கணத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு மணி நேரம் தன் அறைக்குள்ளே கண்ணீர் சிந்தியவள் பின்பு அலுவலகம் கிளம்பி வந்து விட்டாள். காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை. தலை விண்விண்ணென்று வலித்து கொண்டிருந்தது.

தாஸிடம் பேசிவிட்டு அப்பாயின்மென்ட் இல்லாமல் உள்ளே செல்ல அவனைப் பார்த்ததும் குயிலியிடம் ஒருநிமிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. அவளைப் பார்த்தவுடன் மயில்வாகனன் திகைத்து விட்டான். ஏனெனில் இந்த ஒரு மாத காலத்தில் அவள் பாதியாகி விட்டிருந்தாள் .ஏற்கனவே ஒல்லியாக இருப்பவள் இப்பொழுது எலும்பும் தோலுமாக ஆகிவிட்டால் என்றுதான் சொல்ல வேண்டும். கண்களைச் சுற்றிய கருவளையம் அவள் இந்த ஒரு மாதமாக தூங்கவே இல்லை என்பதை காட்டியது .முகத்தில் அப்படி ஒரு சோர்வு இருந்தது .

"வ..ந்து... உட்காருங்க... என்ன விஷயம்...?" என்று திக்க "எனக்கு ஒரு மாசம் முன்னாடி கையில அடிபட்டிச்சு மேடம் .அப்ப வந்து பார்த்துட்டு போன என்னோட லவ்வர் தான் .அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் ஒரு போன் பண்ணி கூட எப்படி இருக்குன்னு கேட்கல. அதனாலதான் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு வந்தேன் " என்று அவன் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொல்ல குயிலுக்கு அவன் முகத்தை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை.

தனக்கு முன்புறம் இருந்த பைலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ."வீட்ல எல்லாரும் எப்ப கல்யாணம் வெச்சுக்கலாம்? எப்ப கல்யாணம் வெச்சுக்கலாம்னு? என்னை டார்ச்சர் பண்றாங்க மேடம். ஆனா அவள் இவ்வளவு பொறுப்பில்லாம இருந்தா நான் என்ன சொல்ல முடியும் வீட்டில சொல்லுங்க?" என்றவன் மீண்டும் சீரியஸாக கேட்க அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

இரு நிமிட அமைதிக்குப் பின்பு மீண்டும் அவனே தொடர்ந்தான். " நீயும் என்னை லவ் பண்றேன்னு எனக்கு தெரியும். ஆனா உனக்கு உள்ளே ஏதோ ஒன்னு இருந்துட்டு என்கிட்ட இருந்து உன்னை விலக்கி வைக்குது. என்ன ப்ராப்ளமா இருந்தாலும் சொல்லு. நான் சால்வ் பண்றேன்" என்று சொல்ல" இல்ல ப்ராப்ளம் எல்லாம் ஒன்னும் இல்ல .ஆனா இது வேண்டாம்" என்றாள் உள்ளே போன குரலில்.

" உனக்கு என்ன குடும்பமில்லாம நாம தனியா இருக்கறதுனால அவங்க வீட்டில வேண்டாம் சொல்லிருவாங்க நினைச்சு பீல் பண்றியா? அப்படி எல்லாம் நீ நினைக்காத ...நம்ம குடும்பத்தில் யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க .நீ நம்ம வீட்டு பொண்ணு டா "என்றவன் குழந்தைக்குச் சொல்வது போல் சொல்ல அவள் எதற்கும் மசியவில்லை இல்லை .

"எனக்கு இது வேண்டாம் ...வேண்டாம் ..."என்று காதைப் பொத்திக் கொண்டு கத்த வெளியிலிருந்து தாஸ் உள்ளே வந்து விட்டான் .மயில்வாகனனிற்கு அவமானமாகி விட்டது .கண்ணை மூடி காதைப் பொத்தி இருந்தவள் இன்னும் கத்திக்கொண்டே இருக்க "வாய மூடு" என்று அதட்டிய மயில்வாகனன் தாஸிடம்" ஒன்றும் இல்லை .நீங்க வெளிய போங்க "என்றான்.

அவன் சென்ற பிறகு "சரி நான் உன்னோட லைப்ல விட்டு போகணும்னா நான் ஏன் வேண்டாம்னு சொல்றானா உண்மையான ரீசன் சொல்லு நான் போறேன் "என்று சொல்ல "இல்ல இல்ல என்னால கண்டிப்பா சொல்ல முடியாது "என்று அவள் காதைப் பொத்திக் கொண்டு அழ அதற்குமேல் மயில்வாகனனால் அங்கே உட்கார்ந்திருக்க முடியவில்லை

.அவள் இருக்கைக்கு அருகில் சென்று அவள் தலையை தன்னுடைய வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் அழும் வரை அழட்டும் என்று விட்டவன் அழுகை விசும்பல் ஆனதும் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தினான். கண்ணைத் துடைத்து விட்டவன் "என்னடா ....என்ன ஆச்சு ?"என்று கேட்க அவளால் பேச முடியவில்லை .

அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவன்" ப்ளீஸ் என் கிட்ட ஒன்னும் கேட்காதீங்க "என்று சொல்ல இம்முறை மயில்வாகனன் "ஏண்டி இப்படி பண்ற ?நானும் நீ இப்ப மாறுவ..அப்ப மாறுவேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீ மார்ற மாதிரி தெரியல .இப்பவே உனக்கு 25 வயசு எனக்கு 27 .இன்னும் லேட் பண்ணிட்டு இருந்தோம்னா நம்ம கொள்ளுப் பேரன் பேத்திகள் எல்லாம் நாம உயிரோட இருக்கிறப்பவேபாக்க முடியுமான்னு எனக்கு தெரியல .எனக்கு அவங்களை எல்லாம் பார்த்துட்டு தான் போகணும்னு ஆசை" என்றவன் பாவமாக சொல்ல இம்முறை என்ன முயன்றும் குயிலாயால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை .சிரித்து விட்டாள்!

சிரிப்பவள் முகத்தையே சற்று நேரம் ஆழ்ந்து பார்த்தவன் "உனக்கு என்னடா பிரச்சனை? அப்படி என்ன தலை போற பிரச்சினை ?என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு... எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் சொல்றேன்ல... என்னன்னு சொல்லு..." என்று மாயக் குரலில் கேட்க அவளால் அதற்கு மேல் முடியவில்லை சொல்லியே விட்டாள்.

குயிலி வருவாள் ...

(குயிலி என்ன சொல்லி இருப்பாள் என்று நீங்கள் நினைப்பதை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top