• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னை மன்னிச்சுருங்க இந்த அத்தியாயம் கொஞ்சம் சின்னது தான்.அடுத்த அத்தியாயம் பெருசா கொடுக்குற...

இந்த அத்தியாயத்தில் இருந்து தான் கதை கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பிக்க போகுது...படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க...அப்படியே ஹீரோ யாருன்னு சொல்லிட்டு போங்க?..

Cheers,
வெண்பா.
 




Last edited:

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
குயிலி ஆட்சியர் அலுவலகத்தில் அவள் கையெழுத்திட வேண்டிய கோப்பைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது குன்னத்தூர் என்ற ஊரில் மருத்துவமனை கட்ட அனுமதிக்கக் கோரி வந்திருந்த கோப்பையைப் பார்த்தவள் தாஸை கூப்பிட்டு தான் அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.

ஏனெனில் மருத்துவமனை கட்ட அவர்கள் 1௦ ஏக்கர் இடத்திற்கான செயல் திட்டத்தை அதில் கொடுத்திருந்தனர்.ஒரு கிராமத்தில் 1௦ ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை கட்டினால் அந்த நிலத்தில் செய்து கொண்டிருக்கும் விவசாயம் பாதிக்கப்படும் என்று நினைத்தவள் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று தாஸிடம் சொன்னாள்.

தாசும் அங்கே செல்வதற்கான ஏற்பாட்டை செய்தான்.முருகவேல் கார் ஓட்ட குயிலியும் தாசும் அந்த மருத்துவமனை குறித்து பேசிக் கொண்டு சென்றனர்.

அங்கே சென்றதும் குயிலியின் கவனத்தை ஈர்த்தது அங்கே அழகாக பூத்திருந்த ஆவாரம் பூக்கள் தான்.அவளுக்கு சிறிய வயதில் ஆவாரம் பூ என்றால் மிகவும் பிடிக்கும்.சிறு வயதில் மனம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் அவள் நாடிச் செல்வது அந்தப் பூவைத் தான்.

அந்தப் பூவைப் பார்க்க பார்க்க அவள் சோகங்கள் எல்லாம் மறைந்து விடும்.பாலே பிடிக்காதவள் ஆவாரம் பூவிற்காக மட்டுமே பால் குடிப்பாள்.அவள் அன்னை தினமும் ஆவாரம் பூவை பாலில் போட்டு வேகவைத்து பாலை மட்டும் வடிகட்டி கருப்பட்டி போட்டுக் கொடுப்பார்.

அந்தப் பால் அவளுக்கு மிகவும் இஷ்டம்.”குயிலி கண்ணு இந்தா தங்கப் புஷ்பம் பாலு” என்ற குரல் இப்பொழுதும் அவள் காதில் ஒலிப்பது போல் இருந்தது.அவள் அன்னை ஆவாரம் பூவைத் தான் தங்கப்புஷ்பம் என்று கூறுவார்.

அந்த நாட்களை நினைக்கையில் அவளின் கண்கள் கலங்கின.அதற்குள் தாஸ் அவளிடம் ஏதோ கேட்க சிரமப்பட்டு தன் கண்களில் இருந்த கண்ணீரை உள்ளிளுத்தவள் “என்ன தாஸ்?சாரி ஐ டின்ட் லிஸ்சன்..(sorry I din’t listen) என்றாள்.

“மேம் ஆல் தி பைல்ஸ் தே ஹேவ் கிவன் இஸ் கிளியர்.அண்ட் ஐ திங்க் வி கேன் அப்ரூவ் திஸ் ப்ராஜெக்ட்..” என்று சொல்ல மறுப்பாக தலையசைத்த குயிலி “இங்க நியர்லி 500 ட்ரீஸ் இருக்கு...நாம இந்த இடத்துக்கு அப்ரூவல் குடுத்தா தே வில் கட் ஆல் தி ட்ரீஸ்...இங்க ஏற்கனவே ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் இருக்கு..சோ இங்க இட்ஸ் நாட் வெரி எசென்சியல்...சோ லேட்ஸ் கான்செல் திஸ்” என்றவள் அந்தப் ப்ராஜக்டை கான்செல் செய்தாள்.

அர்ஜுன் தன் நண்பன் மயில்வாகனனிடம் “இந்த குயிலி ரொம்ப நல்ல பொண்ணுனு நினைச்ச...ரொம்ப தைரியமான பொண்ணு...வந்த உடனே எல்லா அநியாயத்தையும் தட்டிக் கேக்கறானு நினைச்ச...ஆனா இப்ப தான் தெரியுது அவளும் மத்த எல்லாரையும் மாறி காசுக்காக ஆசைப்படறானு...ஹாஸ்பிட்டல் கட்ட எல்லா பைல்ஸும் கரெக்டா இருக்கு.ஆனாலும் நம்ம ப்ராஜெக்ட ரிஜெக்ட் பண்ணிருக்கா...”.என்று குயிலியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

அர்ஜுனும் மயில்வாகனனும் பள்ளியில் இருந்தே நண்பர்கள்.அர்ஜுன் மேற்படிப்புக்காக மருத்துவத்தை தேர்ந்தெடுக்க மயில்வாகனனோ தன் தந்தையைப் பின்பற்றி விவசாயத்தை எடுத்துப் படித்தான்.அர்ஜுன் தன் நண்பனை எப்பொழுதும் “பிளான்ட் டாக்டர்(PLANT DOCTOR)” என்று தான் கிண்டல் செய்வான்.

மயிவாகணன் பன்னிரெண்டாம் வகுப்பில் அர்ஜுனை விட அதிக மதிப்பெண் எடுத்திருந்தான்.அவனுக்கு பெரிய பெரிய மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தது.ஆனால் அதை எல்லாம் வேண்டாம் என்றவன் விவசாயம் தான் படிப்பேன் என்று சொல்லி விவசாயம் படித்தான்.
அர்ஜுன் தன் நண்பனை தன்னுடன் வருமாறு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.ஆனால் அர்ஜுன் அதைக் கேட்கவில்லை.அர்ஜுன் எப்பொழுதும் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் எல்லாவற்றையும் எளிதாகச் சமாளிக்கக் கூடியவன்.ஆனால் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் இருந்து மாறமாட்டான்.ஆனால் அர்ஜுனோ எல்லாவற்றையும் மிக சீரியசாக எடுத்துக்கொள்பவன்.
இவர்கள் இருவரும் சேர்ந்து தான் தங்கள் ஊரில் மருத்துவமனை ஒன்றைக் கட்ட திட்டம் போட்டனர்.ஆனால் தங்கள் திட்டம் ரிஜெக்ட் ஆனதால் தான் அர்ஜுன் மயில்வாகனனிடம் குயிலியைத் திட்டிக் கொண்டிருந்தான்.
மயில்வாகனனோ “டேய் மரியாதை இல்லாம அவ இவனு பேசாத..என்ன தான் இருந்தாலும் அவங்க இந்த ஊரோட கலெக்டர்..அந்தப் பதவிக்கான மரியாதைய நாம கொடுத்துத் தான் ஆகணும்” என்று அர்ஜுனை அதட்டினான்.

அர்ஜுனோ அதைக் கண்டுகொள்ளாதவனாய் “அவங்க தான கிருஷ்ணா ஆர்கேனிக்ஸ்ல ரெண்டு பொண்ணுங்களுக்கு முருகவேல் மூலமா வேலை கேட்டது?” என்று கேட்க “ம்ம்ம்...ஆமா டா..எல்லாத்துக்கும் ரொம்ப நல்லது பண்ணறாங்க...ஆனா ரொம்ப ஸ்ரேய்ட் பார்வேர்டுனு முருகவேல் அண்ணா சொன்னாரு..” என்றான்.

“சரி..நாம நாளைக்குப் போய் அவங்கள பார்த்து பேசிட்டு வந்தர லாம்..லஞ்சம் ஏதாச்சும் கேட்டா குடுத்தறலாம்.” என்றான் அர்ஜுன்.மயில்வாகனனோ “மச்சா நாளைக்கு நம்ம தோட்டத்துல சோளம் அறுவடை பண்ணறாங்க டா..அதனால நான் அங்க போகணும்...நீ போய் பேசிட்டு வந்துரு” என்றவன் பின்பு முன்நேத்தியை தேய்த்துவிட்டு “இங்க பேசற மாறி அவங்க கிட்ட கோபப்பட்டு பேசிறதா..பார்த்து பொறுமையா பேசு..நமக்கு ஹாஸ்பிட்டல் ரொம்ப முக்கியம்..நான் முருகவேல் அண்ணாகிட்டயும் இது பத்தி பேசிற..” என்றவன் கிளம்பிச் சென்றான்.

அடுத்த நாள் காலை 9 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு அர்ஜுன் சென்றுவிட்டான்.ஆனால் குயிலியைப் பார்க்க மதியம் 12 மணி வரை அனுமதி கிடைக்கவில்லை.முருகவேலுவும் தாஸிடம் அர்ஜுன் யாரென்று சொல்லிவிட்டார்.

ஆனால் தாஸ் குயிலியிடம் சென்று ஹாஸ்பிட்டல் சம்மந்தமாக அதன் உரிமையாளர் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்ல அதற்கு மேல் கேட்காத குயிலி “டஸ் ஹி ஹவ் ஆன் அப்பாய்ண்மென்ட்(DOES HE HAVE AN APPOINMENT?” என்று கேட்க மறுப்பாக முறைத்த தாஸை கண்டனப் பார்வை பார்த்தவள் தன் வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

அதற்குப் பின் தாசினாலும் ஒன்றும் பேச முடியவில்லை.முருகவேல் தான் அர்ஜுனை “அவங்க ரொம்ப நல்லவங்க தான் தம்பி..ஆனா என்ன கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி..நம்ம ஊருக்கு வந்ததுல இருந்து நிறைய நல்ல விஷயம் பண்ணிருக்காங்க..நீங்க கொஞ்சம் எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பாங்க..” என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

அர்ஜுனோ கொதிநிலையில் இருந்தான்.காலை 9 மணியில் இருந்து இப்பொழுது வரை குயிலியைப் பார்க்க அவனை அனுமதிக்கவில்லை.

தன் நண்பனை தொலைப்பேசியில் அழைத்தவன் “டேய் அந்தப் பொண்ணு இன்னும் என்ன கூப்படல..எனக்கு மண்ட காய்து..இருக்குற கடுப்புல என்ன பண்ணுவேனே தெரில...லஞ்சம் வேணுமுனா கேட்டு வாங்கிக்க வேண்டியது தான?எதுக்கு இப்படி வைட் பண்ண வெச்சு சாகடிக்கனும்?” என்று பொரிந்து தள்ளினான்.

ஒரு வேலையாக வெளியே வந்த குயிலி அர்ஜுன் பேசியதை எல்லாம் கேட்டுவிட்டாள்.தாசிடம் அர்ஜுனை தன் ரூமிற்கு அழைத்து வரச் சொன்னவள் தன் அறைக்குச் சென்றாள்.

அர்ஜுன் உள்ளே நுழைந்ததும் தன் முன் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னவள் “என்ன மிஸ்டர்..நீங்க அப்ருவல் கேட்டா நாங்க என்ன ஏதுன்னு பாக்காம உடனே பெர்மிசன் குடுத்தறனுமா?நீங்க குடுக்குற காசை வாங்கிட்டு நீங்க காட்ற இடத்துல எல்லாம் கையெழுத்து போட நாங்க ஒன்னும் உங்க வீட்டு நாய் குட்டி இல்ல..வி ஆர் கவர்மென்ட் சேர்வன்ட்ஸ்...மைன்ட்இட்..நொவ் யூ கேன் கெட் அவுட் ..” என்றவள் அவனைப் பேச அனுமதிக்கவே இல்லை.

ஆனால் அர்ஜுனை அவள் பேசியது அவன் தன்மானத்தை மிகவும் சீண்டியது.அவள் பேசிய விதத்தில் அவனுக்கும் கோபம் வந்து விட அவள் இந்த மாவட்டத்தின் ஆட்சியாளர் என்பதை எல்லாம் காற்றில் தூக்கிப் போட்டவன் “ஹலோ மிஸ்...என்ன கலெக்டர்னு மரியாதை குடுத்தா ரொம்ப ஓவரா பேசுறிங்க?எல்லா பைல்சும் கரெக்டா இருந்தும் அப்ருவல் கொடுக்கலைனா நாங்க என்னனு நினைக்கறது?லஞ்சம் வேணுமுனா டைரெக்டா கேட்டு வாங்கிக்கோங்க...அதை விட்டுட்டு இப்படி நொண்டி சாக்கு எல்லாம் சொல்லாதிங்க...” என்றான்.

அர்ஜுன் பேசியதைக் கேட்ட குயிலிக்கு கோபம் தலைக்கேறிவிட்டது “என்ன மிஸ்டர் மிரட்டிறிங்களா?நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கிங்கனு ஞாபகம் வெச்சுக்கோங்க...இப்ப நான் நினைச்சா கூட உங்கள அர்ரெஸ்ட் பண்ண முடியும்..ஆனால் நான் பிரச்சனை வேண்டாம்னு அமைதியா இருக்க...இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் நான் கண்டிப்பா உங்களுக்கு அப்ரூவல் குடுக்க மாட்ட..அப்ரூவல் கொடுக்காததுக்கு 1௦௦௦ காரணம் இருக்கலாம்..ஆனால் அதை எல்லாம் உங்களுக்கு சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை.உங்கனால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க ...” என்றவள் தாசை அழைத்து அவனை வெளியே அனுப்புமாறு சொன்னாள்.

அர்ஜுன் அவளை முறைத்துக் கொண்டே அவள் அறையில் இருந்து வெளியேறினான்...

குயிலி வருவாள்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிஸ்காவர்ணா டியர்
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹீரோ யாருன்னு உங்ககிட்ட கேட்டா நீங்க எங்ககிட்டயே திருப்பி கேட்குறீங்களே வெண்பா??? ஹீரோ யாருப்பா மயில்வாகணன் or அர்ஜூன் or விக்ரம்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top