• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

குயிலி உங்க எல்லாரையும் பார்க்க வந்தாச்சு...படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க....

Episode சின்னதா இருக்குனு நினைச்சிங்கனா அதையும் சொல்லுங்க.

Cheers,
வெண்பா.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்டேட் லிங்க் எங்கேப்பா,
வெண்பா டியர்?
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அர்ஜுன் கோபமாக குயிலியின் அறையை விட்டு வெளியேறுவதைப் பார்த்த முருகவேல் “என்ன ஆச்சுங்க தம்பி?ஏதாச்சும் பிரச்சனைங்களா?” என்று கேட்க “ஏதோ இப்ப வந்துருக்க கலெக்டர் ரொம்ப நல்லவங்க வல்லவங்கனு புகழ்ந்திங்க...இவங்களும் எல்லாரையும் மாதிரி காசுக்கு ஆசைப்படறவங்க தான்” என்றவன் தன் காரை நோக்கி நடந்தான்.

“அவங்க ரொம்ப நல்லவங்க தான் தம்பி.நீங்க அவங்களப் பத்தி ஏன் தப்பா நினைக்கறிங்கனு புரியலை.அவங்க ஹாஸ்பிட்டல்க்கு அப்ருவல் கொடுக்காம இருக்கறதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும் தம்பி.நாம எடுத்து சொன்னா அவங்க புரிஞ்சுப்பாங்க” என்று அவனுடன் நடந்து கொண்டே சொல்ல அதை எதையும் காதில் வாங்காதவனாய் தன் காரில் ஏறி பறந்து விட்டான்.


மயில்வாகனனின் அலுவலகத்திற்கு வந்த அர்ஜுன் குயிலியைப் பற்றி பொரிந்து தள்ள ஆரம்பித்துவிட்டான் “என்ன கழுத்த பிடிச்சு வெளிய தள்ளாத குறை தான் டா..காசுக்கு ஆசைப்பட்டு அப்ருவல் கொடுக்கலைன்னு நான் சொன்னது தப்பா?அதுக்குப் போய் இந்தக் குதி குதிக்குறா?அவ கேட்ட உடனே அவளோட தங்கச்சிக்கு வேலை எல்லாம் போட்டுக் கொடுத்ததையே அந்த நன்றி கொஞ்சமாச்சும் இருக்கா?பேசாம நம்ம மினிஸ்டர்ற வெச்சு அவகிட்ட பேச சொன்னா என்ன?”

“டேய் வார்த்தையைப் பார்த்து பேசு டா...அவங்க தங்கச்சிங்க நம்ம கம்பெனில தான் வேலை பாக்குறாங்கனு அவங்களுக்கு தெரியாது.முருகவேல் அண்ணாகிட்ட நான் தான் அதை சொல்ல வேண்டாம்னு சொன்ன..அப்புறம் நம்ம செஞ்சதுக்கு கைமாறு எதிர்பார்க்குற மாதிரி ஆயிரும்.

அவங்க என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு கலெக்டர்.நீயும் அங்க போய் அப்படி பேசிருக்க கூடாது.முருகவேல் அண்ணா சொன்னதை வெச்சுப் பார்க்கும் பொழுது வேற ஏதாச்சும் காரணமா கூட அவங்க நம்மளுக்கு அப்ருவல் கொடுக்காம இருக்கலாம்னு தோணுது.நான் நாளைக்கு அவங்ககிட்ட போய் பேசற.அப்புறம் முடியலேன்னா மினிஸ்டர்கிட்ட பேசலாம்” என்றான்.

இதற்குமேல் தான் என்ன சொன்னாலும் நண்பன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்த அர்ஜுன் அதை அத்துடன் விட்டுவிட்டான்.

முருகவேலிற்கு அழைத்த மயில்வாகனன் “அண்ணா..நாளைக்கு எனக்கு கலெக்டர்கிட்ட ஒரு அப்பாய்ன்மென்ட் மட்டும் வாங்கித் தர முடியுமா?” என்று கேட்க “என்ன தம்பி இப்படி கேட்குறிங்க?வாங்கித் தானு சொல்லுங்க உடனே வாங்கித் தர” என்றார்.

சிரித்த மயில்வாகனன் “சரி அண்ணா..நாளைக்கு வாங்கி வெச்சுருங்க..அப்புறம் நான் ஹாஸ்பிட்டல் விஷயமா பேசவரத சொல்ல வேண்டாம்.வேற ஏதாச்சும் சொல்லி வாங்கி வெச்சுருங்க..” என்றவன் போனை வைத்துவிட்டான்.

அடுத்த நாள் காலை 1௦ மணி,

மயில்வாகனன் குயிலியைப் பார்க்க வந்துவிட்டான்.வந்தவன் வாய் நிறைய பல்லாக வரவேற்றார் முருகவேல்.முருகவேலிற்கு மயில்வாகனன் மேலிருந்த மரியாதை அவ்வளவு!

இவ்வளவு சிறிய வயதில் ஒரு பெரிய தொழில் சம்பிராஜத்தையே உருவாக்கிய அவன் திறமையோ அல்லது இல்லாதவர்களுக்கு அவன் செய்யும் சேவைகளினால் வந்த மதிப்போ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்கும் செயலோ அல்லது தன் ஊரையே சிறந்த கிராமமாக மாற்றிய அவன் திறமையோ என்பதை யான் அரியேன்.

மயில்வாகனனை நிறைய நேரம் காத்திருக்க வைக்காமல் உடனே அழைத்துவிட்டாள் குயிலி.

உள்ளே வந்தவன் ஒரு சிறிய புன்னகையுடன் “குட் மார்னிங்” என்று சொல்ல ஒரு சிறு தலையசைப்புடன் அவனை தனக்கு முன்பு இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னால் குயிலி.

“மேம் நாங்க குன்னத்தூர் பக்கதுல ஹாஸ்பிட்டல் கட்டறதுக்கு பெர்மிசன் கேட்ருந்தோம்.நீங்க அதை ரிஜெக்ட் பண்ணிட்டிங்க...அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று நேராக கேட்டான்.

“அங்க கிட்டத்தட்ட 5௦௦ மரங்களுக்குப் பக்கமா இருக்கு.அதை வெட்டிட்டு நீங்க ஹாஸ்பிட்டல் கட்டறதுல எனக்கு உடன்பாடு இல்லை.ஏற்கனவே உங்க ஊருல ஒரு அரசு மருத்துவமனை இருக்கு.அப்புறம் எதுக்கு இன்னொரு ஹாஸ்பிட்டல்?

அண்ட் உங்க பாஸ்கிட்ட சொல்லி வைங்க காசுக்காக எல்லாரும் விலை போகமாட்டங்கன்னு..நீங்க இல்ல அந்த மினிஸ்டரே வந்தாலும் நான் அப்ருவல் குடுக்க மாட்டேன்” என்றாள் குயிலி.

அவள் சொல்லவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் “மேடம் அவரு பேசுனது தப்பு தான்.அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குற..ஆனால் நாங்க ஹாஸ்பிட்டல் கட்ட ஆரம்பிச்சதுக்கான நோக்கம் பணம் சம்பாரிக்கறதுக்காக இல்லை.அதுக்காக நாங்க ஒன்னும் ப்ரீயா மருத்துவம் பண்றோம்னும் சொல்லல..

கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல வைத்தியம் ஒழுங்கா பார்க்க மாட்டேங்குறாங்க.அதனால எங்க ஊர்ல இதுவரைக்கும் 3 பேர் இறந்துட்டாங்க.அப்புறம் அங்கே எந்த பேஸிலிட்டிஸ்யும் (facilities) ஒழுங்கா இல்லை.” என்றான்.

குயிலி “நான் விசாரிச்சுட்டு நீங்க சொல்லறது உண்மையா இருந்தா உங்களுக்கு அப்ருவல் கொடுக்குற” என்றாள். “சரிங்க மேடம்...நீங்க விசாரிச்சுட்டு சொல்லுங்க” என்றவன் குயிலியிடம் இருந்து விடைபெற்றான்.

முருகவேலிடம் “அவங்க கிட்ட பேசிட்ட அண்ணா..அங்கே நிறைய மரம் இருக்கறது நால தான் வேண்டாம்னு சொல்லிருக்காங்க...இனி விசாரிச்சுட்டு மேற்கொண்டு பண்ண வேண்டியத பண்ணறனு சொல்லிருக்காங்க..” என்றான்.

“ஓ அப்படியா தம்பி..நான் முதலையே நினைச்ச அவங்க இதுமாறி ஏதாச்சும் காரணத்துக்காக தான் வேண்டாம்னு சொல்லிருப்பாங்கன்னு...ரொம்ப நல்ல பொண்ணு தம்பி பணத்துக்காக எல்லாம் ஆசைப்பட மாட்டாங்க” என்றார்.

அவர் சொல்லவதை ஆமோதிப்பது போல் தலை ஆட்டியவன் “வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க அண்ணா.உங்க வாலுப் பொண்ணு கிருத்திகா இப்ப என்ன படிக்குறா??” என்று கேட்க “எல்லாரும் நல்லா இருக்காங்க தம்பி.நீங்க இன்னும் அவள ஞாபகம் வேச்சுருகறது ரொம்ப சந்தோசம் தம்பி.+2 படிக்குறா” என்றார்.

“ஓ அடுத்த வருஷம் காலேஜ் போக போறாளா...ரொம்ப சந்தோசம்...ஒரு நாள் எல்லாத்தையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க அண்ணா..” என்றான்.“கண்டிப்பா வரோம் தம்பி” என்றவரிடம் விடைப் பெற்றுச்சென்றான்.

இதுதான் மயில்வாகனன்.ஏழை பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவன்.அவனுக்கு ஆடிக் காரில் செல்வோரும் ஒன்றுதான் ஓட்டை சைக்கிளில் செல்வோரும் ஒன்று தான்.

______________________________

குன்னத்தூர் கிராமம் அன்று மிகப் பரபரப்பாக இருந்தது.ஏனெனில் இன்று அவர்கள் ஊரில் விவசாய மாநாடு நடக்க இருக்கிறது.அந்த விழாவிற்கு கலெக்டர்வருகை தர இருக்கிறார்.

அந்த ஊர் மக்கள் எல்லாம் அந்த விழாவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தனர்.அவற்றை எல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ஊர்த் தலைவரின் மகன்.

அவனை ஊர்த் தலைவனின் மகன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.பொதுமக்களோடு ஒன்றாக களத்தில் இறங்கி அவனும் அவர்களுடன் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவன் போட்டிருந்த அடிடாஸ்(adidas) டிஷர்ட் அவன் செய்த வேலைகளாலும் வேலை செய்ததுனால் ஏற்பட்ட வேர்வையாலும் கசங்கிப் போய் இருந்தது.

“நீங்க எதுக்கு தம்பி வேலை செஞ்சுட்டு?என்ன வேலை செய்யணும்னு சொல்லுங்க நாங்க செய்யறோம்.நாங்க இருக்கும் பொழுது நீங்க இந்த வேலை எல்லாம் செய்யறதப் பார்க்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அந்த மக்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டனர்.ஆனால் அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.அவர்களுடன் சேர்ந்து அவனும் வேலை செய்வான்.

“தம்பி விழாவுக்கு இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு.நீங்க போய் ரெடி ஆகுங்க.மீதி இருக்க வேலையை நாங்க பார்த்துக்குறோம்” என்று அனைவரும் அவனை வற்புறுத்த தன் வீட்டிற்குச் சென்றான்.

வீட்டிற்கு போனவன் அரை மணி நேரத்தில் ரெடி ஆகி மீண்டும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தான்.அங்கு அவனைப் பார்த்த அவன் தந்தை அவனை தன் அருகில் அழைத்து அங்கிருந்தோருக்கு அறிமுகம் செய்தார்.

சிறிது நேரத்தில் கலெக்டர் வந்துவிட விழா ஆரம்பமானது.கலெக்டர் வந்ததும் அவரை வரவேற்ற குமாரவேல் தன்னை அந்த ஊர்த் தலைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.ஊர்த் தலைவர் என்றதைக் கேட்டதும் அவள் முகம் சட்டேன்று மாறியது.அதனை உடனே மறைத்துக் கொண்டாள்.

குயிலிக்கு அந்த ஊர் மிகப் பிடித்தது.அங்கிருந்த வயல்களும் தோட்டங்களும் அவளை மிகவும் ஈர்த்தது.பறவைகளின் கீச் கீச் ஒலி கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.அந்த காற்றை சுவசிப்பதே அவ்வளவு புத்துணர்ச்சி கொடுத்தது.

தாஸிடம் அந்த ஊர் மக்களிடம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தாள்.அவனும் அங்கிருந்தவர்களிடம் தனக்கு தெரிந்த மொழியில் விசாரிக்க அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

பின்பு முருகவேலை அழைத்தவன் மக்களிடம் அதை விசாரிக்கச் சொன்னான்.முருகவேலுக்குத் தெரியும் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று ஆனாலும் அவர்களிடம் சென்று அதை விசாரித்தார்.



பின்பு அனைவரும் மேடை ஏறினர். ஒரு சிறு பெண் விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தாள். வரவேற்பு உரையை அந்த ஊர்த் தலைவரான குமரேசன் வாசித்தார்

.அவரைத் தொடர்ந்து குயிலி தன் கருத்துகளைத் தெரிவிக்க அதற்குப் பின் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை பெரிய பெரிய ஆய்வாளர்கள் வந்து விளக்கினர்.மேலும் நன்றாக விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா இனிதாக முடிவடைந்தது.


குயிலி வருவாள்...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Neeye solla sollita.. appuram enna.. ama kani.. update chinnatha iruku... ???

Kuyil ku mayil thaan owner nu teriyala.. ??? rhyming nalaarukula..

Yaaru athu.. puthusa oor thalaivar magan..??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top