• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

Romba romba sorry late a vanthathuku...exams and naduvula Nan konjam somberi aita....ennakulaya Oru doubt irunthuchu...kathai nallatha pogutha illa bore adikuthanu...athanala tha eluthama iruntha...but @sandhiya sri akka @sakthipriya Anna @Kavyajaya ivanga ellam ketathu than Enna thirumba elutha vechuchu...thanks a lot dears...eni weekly Oru ud kandipa varum friends...padichutu unga views a en kuda share pannikonga.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
குயிலி அன்று ஒரு வேலையாக கோவில்பாளையம் வந்தவள் மாலை ஆகிவிட்டதால் மங்கையையும் செல்லாவையும் தன்னுடனே அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தவள் முருகவேலிடம் கிருஷ்ணா ஆர்கனிக்ஸிற்கு காரை செலுத்தச் சொன்னாள்.

அங்கே சென்றவுடன் அங்கிருந்த வாத்துக்களைப் பார்த்தவள் அப்படியே கண் மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தால் என்று தெரியவில்லை முகத்தில் ஏதோ ஈரம் படுவதை உணர்ந்தவள் கண் திறந்தாள்.அங்கே மயில்வாகணன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தவுடன் அவன் எங்கே இங்கே என்று யோசித்துக் கொண்டிருக்க அவனோ “என்ன ஆச்சு மேம்?” என்று இரு முறை கேட்டு விட்டான்.”ஆங்...ஒன்னும் இல்லை ஏன் என் முகத்துல தண்ணி தெளிச்சிங்க?” என்று கேட்க “முருகவேல் அண்ணா ரொம்ப நேரமா உங்கள கூப்பிட்டு இருக்காரு ..நீங்க கண்ண திறக்கலை...நான் அப்பதான் கரெக்ட்டா வெளிய வந்த...அது தான் தண்ணி தெளிச்ச” என்று சொல்ல “ஓ சாரி..கொஞ்சம் டையர்ட்டா இருந்துச்சு...தேங்க்ஸ்” என்று மெலிதாக புன்னகைத்தாள்.

மயில்வாகனன் அவளை உள்ளே அழைக்க “இது உங்க கம்பெனியா?” என்று கேட்க சிரித்தவன் “உள்ள வாங்க” என்றான்.மறுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்தவள் வேறு வழி இல்லாமல் உள்ளே சென்றாள்.மறந்தும் வாத்துக்கள் இருந்த பக்கம் கண்களைத் திருப்பவில்லை.அந்த வாத்துக்களைப் பார்த்தவுடன் அவள் கண்கள் கலங்கியதோ?

மயில்வாகனன் குயிலியை தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.அவளை அமரச் சொன்னவன் அவளிடம் “என்ன குடிக்கிறீங்க மேம்?” என்று கேட்க “இல்லை ஒன்னும் வேண்டாம்.தங்கச்சிங்கள கூப்பிட தான் வந்தேன்..டைம் ஆகிருச்சு..” என்று சொல்ல “ஒரு டீ குடிக்க என்ன ஒரு மணி நேரமா ஆகப் போகுது?என்ன டீ சாப்பிடுறிங்க?” என்று கேட்க அவள் “நீங்களே ஏதாச்சும் சொல்லிருங்க..” என்று சொல்ல “ஆவாரம்பூ டீ சாப்பிடலாம்..என்னோட பேவ்ரட்..நல்லா இருக்கும்” என்றவன் இண்டர்காமை எடுத்து டீ கொண்டு வர சொன்னான்.

அதற்குள் விக்ரம் ஏதோ கையொப்பம் வாங்க ரூமிற்குள் வர குயிலியிடம் “இவன் என் தம்பி விக்ரம்.இங்க அக்கௌன்ட்ஸ் எல்லாம் இவன் தான் பார்த்துக்கிறான்” என்று சொல்லி அறிமுகப்படுத்த அவன் முகத்தில் மரியாதை நிமித்தமாக ஒரு மென்னகை கூட வரவில்லை.

மயில்வாகனன் கையெழுத்து இட்டவுடன் தன் வேலை முடிந்தது என்பது போல் வெளியேறி விட்டான்.”சாரி தப்பா நினைசுக்காதிங்க மேம்..அவன் கொஞ்சம் டிப்ரசன்ல இருக்கான்..வாங்க நான் செல்லா, மங்கை இருக்க இடத்துக்கு கூட்டிட்டு போற” என்றவன் எழுந்தான்.

குயிலிக்கு ஆச்சர்யமாக இருந்தது.கிருஷ்ணா ஆர்கானிக்ஸ் பொருட்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை.அவ்வளவு பெரிய நிறுவனத்தின் முதலாளி தன் தங்கைகளின் பெயரை தெரிந்து வைத்திருப்பது.அவர்கள் இருவரும் நடந்து போகும் பொழுது கூட அனைவரும் மயில்வாகனனை ஒரு முதலாளியைப் போல் பார்க்கவில்லை.தங்களுடன் வேலை செய்பவர்களைப் பார்க்கும் பொழுது எப்படி ஒரு சிறு புன்னகையை உதிர்ப்பார்களோ அதே போல் புன்னகைத்துவிட்டு தத்தம் வேலைகளில் ஆழ்ந்தனர்.

5 நிமிட நடைக்குப் பின் செல்லா இருக்கும் இடத்தை அடைந்தனர்.செல்லா அங்கிருந்த பொருட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.”செல்லா” என்று மயில்வாகனன் அழைக்க “ஹாய் மயில் அண்ணா” என்ற படியே திரும்பியவள் அங்கே நின்றிருந்த குயிலியைப் பார்த்ததும் “அக்கா நீ எப்ப வந்த?” என்று கேட்க “இங்க பக்கத்துல ஒரு வேலையா வந்த...அப்படியே உன்னையும் மங்கையையும் கூட்டிட்டு போகலானு நினைச்சு வந்த” என்றாள்.செல்லாவின் முகம் சோர்ந்து இருந்ததைப் பார்த்த குயிலி “வேலை ஜாஸ்தியா?” என்று கேட்க “இல்லை அக்கா..லைட்டா தலை வலி” என்றாள்.

பின்பு மங்கையை அழைத்துக்கொண்டு மூவரும் புறப்பட்டனர்.காரில் ஏறியவுடன் குயிலி “ஏன் அண்ணா நீங்க இந்த கம்பெனி இவரோடதுன்னு சொல்லவே இல்லை?” என்று கேட்டதற்கு “ஹாஸ்பிட்டல் கட்ட நீங்க முடியாதுன்னு சொன்னப்ப நான் உங்க கிட்ட இதை சொல்லனும்னு நினைச்சேன் ம்மா..ஆனா மயில் தம்பி தான் சொல்ல கூடாதுனு சொல்லிட்டாரு.அப்படி சொன்னா, அவரு பண்ண உதவிக்கு உங்க கிட்ட திரும்ப உதவி எதிர்பார்க்குற மாறி இருக்குன்னு சொல்லிட்டாரு.

அதனால நானும் அதுக்கு அப்புறம் உங்க கிட்ட சொல்லல.ஆனா ஹாஸ்பிட்டல் திறப்பு விழா முடுச்சு உங்க கிட்ட பேசிட்டு இருந்தப்ப சொல்ல வந்தேன், அதுக்குள்ள உங்களுக்கு ஏதோ போன் வந்ததுனால என்னால சொல்ல முடியல” என்றார்.

“நீங்க ரெண்டு பேரும் ஏன் அவரை சார்னு சொல்லாம அண்ணான்னு சொல்லறீங்க?” என்று கேட்க “அக்கா அங்கே எல்லாருமே அண்ணாவ அண்ணா இல்லைனா தம்பினு அவங்க வயசுக்கு தகுந்த மாதிரி தான் கூப்பிடுறாங்க.நான் கூட ஒரு டைம் சார்னு கூப்பிட்டதுக்கு அண்ணானு கூப்பிட சொன்னாரு.அண்ட் அவரு எங்களை எல்லாம் வொர்க்கர்ஸ் மாறி ட்ரீட் பண்ணறது இல்லை.பாமிலியா தான் ட்ரீட் பண்றாரு”,என்றாள் செல்லா.கூடவே மங்கையும் ஒத்து ஊதினாள்.

மங்கையை இறக்கி விட்டு தங்கள் இல்லம் சென்றனர்.காரில் இருந்து இறங்கும் பொழுது குயிலி “அண்ணா இந்த வீக் எண்டு ப்ரீயா இருந்தா உங்க பொண்ணு வைப் கூட்டிட்டு வாங்க.” என்றாள்.அன்று குயிலி சொன்ன பொழுது குடும்பத்துடன் வீட்டிற்கெல்லாம் செல்ல வேண்டாம் என்று நினைத்தவர் இன்று மீண்டும் அழைத்தவுடன் “சரி ம்மா.கண்டிப்பா வரோம்” என்றார்.
செல்லாவும் குயிலியும் அமைதியாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.இருவரும் தத்தம் எண்ணங்களில் மூழ்கி இருந்தனர்.சாப்பிட்டு முடித்து விட்டு குயிலி மாத்திரையை எடுத்து செல்லாவிடம் நீட்ட ‘எதுக்கு?’ என்பது போல் புரியாமல் பார்த்தவளிடம் “தலை வலி மாத்திரை.இதை போட்டுட்டு போய் தூங்கு..காலைல முடியலேன்னா ஆபீஸ்க்கு போக வேண்டாம்” என்றாள்.சம்மதமாக தலை அசைத்தவள் தன் அறைக்குச் சென்று மாத்திரையை போடாமல் படுத்து நடந்ததை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் விக்ரமைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.காலையில் மங்கையிடம் இவள் கதை அடித்துக் கொண்டிருக்க அவன் அப்பொழுது தான் அங்கே வந்தான்.இவர்களை கண்டு கொள்ளாமல் தன் கணினியில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்.

செல்லா மங்கையிடம் “இந்த சிடு மூஞ்சிக்கு ஏதோ இந்த ஆபீஸவே தூக்கி நிறுத்தறதா நினைப்பு...இவரு வேலை செய்யலேன்னா அப்படியே இங்கே எதுவுமே நடக்காதுன்னு எண்ணம்..ஒடம்பு பூரா திமிர்..ஒரு பேசிக் கர்டசிக்காகயாவது சிரிக்கிறானா பாரு?.உம்மணா மூஞ்சி” என்று கிசுகிசுக்க அது அவன் காதில் நன்றாக விழுந்துவிட்டது.

அவன் நாற்காலியில் இருந்து எழுந்து வந்தவன் ”ஆமா நான் சிடு மூஞ்சி தான்.நான் எப்படி இருந்தா உனக்கு என்ன?இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்.ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை சைட்” என்று கத்தி விட்டான்.செல்லாவிற்கு அவமானமாகப் போக அழுது கொண்டே வெளியேறி விட்டாள்.மங்கை அவளை சமாதானப்படுத்த அவள் பின்னாலையே சென்றாள்.

“அழாத டி...முதல்ல கண்ணை தொட..தப்பு உன் பேர்ல தான்.அவரு எப்படி இருந்தா நமக்கு என்ன..அவரப் பத்தி கமெண்ட் பண்ணது நம்ம தப்பு தான?” என்று அவள் மேல் உள்ள தப்பை புரிய வைக்க முயல அவளுடைய கோபம் முழுவதும் இப்பொழுது மங்கையின் பக்கம் திரும்பியது.

“ஓ, நீ அவரோட அசிஸ்டெண்ட்ல.. அப்புறம் எப்படி அவரை விட்டுக் கொடுப்ப?நான் ஒன்னும் அவனைப் பத்தி தப்பா சொல்லலையே....அவன் எப்படி இருக்கானோ அதை தான் சொன்ன..” என்று சொல்ல அதற்குள் செல்லாவை சிவராமன் கூப்பிட அங்கு சென்றாள்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
“எவ்வளவு திமிர்..ஏதோ விளையாட்டுக்கு சொன்னதுக்கு போய் எவ்ளோ ஹார்ஷா பேசிட்டான்..இடியட்” என்று மனதில் அவனைத் திட்டிக்கொண்டே தூங்கிவிட்டாள்.

குயிலி தன் அறைக்கு வந்ததும் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவள் படிக்கத் தொடங்கினாள்.எவ்வளவு சோர்வாக வந்தாலும் அவளால் ஒரு பக்கமாவது படிக்காமல் தூங்க முடியாது.தூக்கம் வராமல் தன் கடந்த கால நினைவுகள் அவளை உயிரோடு கொன்று கொண்டிருக்க அதை தடுக்கும் பொருட்டு ஏற்பட்டதே இந்த புத்தகம் படிக்கும் பழக்கம்.நன்றாக தூக்கம் வரும் வரை புத்தகம் படிப்பாள்.

ஆனால் இன்றோ அவளால் புத்தகத்தில் ஒன்ற முடியவில்லை.காரணம் மயில்வாகனன் ! அவன் இன்று தன்னிடம் வேலை செய்பவர்களிடம் நடந்து கொண்ட முறை தான் அவள் கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து போனது.கோவையில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களுள் அவனும் ஒருவன்.ஆனால் அந்த கர்வம் சிறிதும் இல்லாது தொழிலாளர்களிடம் அவன் காட்டிய அன்பு அவனின் மதிப்பை குயிலியிடம் கூட்டியது.


அந்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது.முருகவேல் தன் குடும்பத்துடன் குயிலி வீட்டிற்கு வந்திருந்தார்.அவர்களை வரவேற்ற குயிலி அனைவரிடமும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தாள்.முருகவேலின் மனைவி பத்மா குயிலி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.அவர்களின் புதல்வி கிருத்திகா பெரிதாக பேசவில்லை.

குயிலியாக அவளிடம் பள்ளிக்கூடத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்க அதற்கு மட்டும் பதில் சொன்னாள்.மிகவும் அமைதியாக உட்கார்ந்து அங்கிருந்த நாய்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.பின்பு செல்லா வந்தவுடன் அவளை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய குயிலி தனக்கு போன் வர அதை எடுக்கச் சென்றாள்.செல்லா கிருத்திகாவுடன் பேச்சுக் கொடுக்க முதலில் தயங்கியவள் பின்பு அவளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.குயிலி போன் பேசிவிட்டு வரும்பொழுது இருவரும் வெளியே சென்று அங்கிருந்த நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

குயிலி அவர்களை சாப்பிட அழைக்க அனைவரும் சாப்பிடச் சென்றனர்.சாப்பிடும் நேரம் அமைதியாகவே கழிய சாப்பிட்டு முடித்தவுடன் குயிலி கிருத்திகாவிடம் சில கேள்விகளைக் கேட்டாள்.இப்பொழுது கிருத்திக்காவிற்கும் தயக்கம் எல்லாம் போய் விட குயிலி கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக பதில் அளிக்க ஆரம்பித்து இருந்தாள்.

“உன்னோட ஆம்பிசன் என்ன?” என்று கேட்டதற்கு “கலெக்டர் ஆகிறது அக்கா” என்று பளிச்சென்று பதில் சொன்னாள்.”சூப்பர்...உனக்கு என்ன ஹெல்ப் வேணும் நாலும் என்கிட்ட தயங்காம கேளு” என்றவள் மேலும் எப்படி படித்தால் எளிதாக பாஸ் செய்து விடலாம் என்பதைப் பற்றி எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுத்தாள்.

கிருத்திகா அவளுடன் பேச ஆரம்பித்ததிலிருந்து அவள் பேச்சில் மயில்வாகனன் மற்றும் அவனுடைய குடும்பத்தினர் வந்து கொண்டே இருந்தனர்.”என் அண்ணா...என் அக்கா...” என்று அவள் கூறுகையிலே அவர்கள் மேல் இவள் வைத்திருக்கும் பாசமும் அவர்கள் இவளை தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைகின்றனர் என்பதையும் புரிந்து கொண்டாள் குயிலி.மயில்வாகனன் சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை எல்லாவற்றையும் உணர்ந்து தான் சொல்லி இருக்கிறான் என்பதும் அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது.

மாலை ஆனதும் முருகவேல் “நீங்க எங்கள உங்க வீட்டுக்கு கூப்பிட்டது ரொம்ப சந்தோசம் ம்மா..நாங்க போயிட்டு வரோம்” என்று விடை பெற புத்தாடையும் சில சுய முன்னேற்ற புத்தகங்களையும் கிருத்திகாவிற்கு கொடுத்தாள் குயிலி.முதலில் தயங்கியவள் பின்பு முருகவேலின் கண்ணசைவில் அதை வாங்கிக் கொண்டாள்.

கிருத்திகாவிற்கு குயிலியையும் செல்லாவையும் மிகவும் பிடித்து விட்டது.”எவ்வளவு பெரிய கலெக்டர்...ஆனா அந்த கெத்து கொஞ்சம் கூட இல்லாம எவ்வளவு சாதரணமா பழகுறாங்க” என்று வீட்டிற்கு போகும் வழியில் குயிலியைப் பற்றி சொல்லிக் கொண்டே சென்றாள்.

வீட்டிற்கு சென்றதும் கோகிலா வாழைப்பூ வடை செய்து கொண்டிருப்பதால் அவளை சாப்பிட அழைத்திருந்தார்.அங்கே சென்றவள் நன்றாக வடையை சாப்பிட்டுக் கொண்டே அங்கே நடந்தவற்றை விமலாவிடமும் ஷ்யாமளாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.அவர்களுக்கு அது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

தன்னிடம் வேலை செய்பவர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பது என்பது.இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த கோகிலாவும் “அந்த பொண்ணு பார்க்க ரொம்ப நல்ல மாறி தெரிஞ்சுச்சு..ரொம்ப நல்லது பண்ணுதுன்னு உங்க அப்பா கூட சொன்னாரு...ஆனா வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?” என்று கேட்டதற்கு இல்லை என்று தலை அசைத்தாள்.

ஏதோ யோசனையில் இருந்த கோகிலா மயில்வாகனன் வந்ததும் அவனுக்கும் வடையை கொடுத்து சாப்பிடச் சொன்னார்.அவனிடமும் கிருத்திகா அன்று நடந்ததை எல்லாம் கூறினாள்.அவள் கூரியதை பொறுமையாக கேட்டவன் அவள் தலையை செல்லமாக தட்டி விட்டு எழுந்து சென்றான்.

குயிலி வருவாள்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top