Love Chemistry-1

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ் முதல் எபியோட வந்திட்டேன்...இந்த சயன்ஸுக்கும் நமக்கும் எப்பவும் டுஷும் டுஷும் தான்...அதனால் அதையெல்லாம் விவரமா கொடுக்கல... படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...அழகான ப்ரௌன் பேண்ட் வெள்ளை டாப் அதற்கு பொருத்தமான ஜாக்கெட் என தயாரான சுசித்ரா கழுத்தில் வழியும் கூந்தலை தூக்கி ஹேர்பேண்டில் அடக்கினாள்.


வாயில் ஹேம்பர்கரை அடைத்தபடி கையில் கனத்த ஆஃபிஸ் பேகை கையில் மாட்டிய படி வீட்டின் வெளியே வந்தவள் கையிலிருந்த ஸ்மார்ட் போனால் அதை லாக் செய்தாள்.


முப்பந்தைந்தாவது மாடியில் இருந்தது அவளின் இரண்டு அறை வீடு.படிகள் இல்லாத காரணத்தால் அவரவர் வீட்டின் வெளியே இருக்கும் லிஃப்டில் புகுந்து கீழ் தளத்திற்கு வந்தவள் கேப் புக்கிங் மிஷினில் தான் செல்லும் இடத்தின் கோட் வார்த்தையை அழுத்தினாள்.அதில் காட்டிய கட்டணத்தை மணி ரிசீவரில் செலுத்தினாள்.இரண்டு நொடிகளில் பில் வெளியே வந்தது.


பதினைந்து நிமிடங்களில் கேப் வந்து நின்றது.இவள் பில்லைக் காட்டவும் கதவு தானாக திறந்தது.அது ரோபோட் ட்ரைவ் செய்யும் கேப்.பெரும்பாலும் கேப்கள் ரோபோட்களாலையே இயங்கியது.


டெக்னோ சிட்டியின் வழவழப்பான ரோட்டில் வழுக்கிக் கொண்டு சென்றது கேப்.அண்டர்க்ரவுண்ட் ரோடாததால் அரை மணியில் அவள் சயின்டிஸ்டாக இருக்கும் இன்டோ பயோ கெமிக்கல்ஸ் ரிசர்ச் சென்டர் உள்ளே சென்று நின்றது கார்.


நுழைவாயிலில் ஐடி கார்ட்டை காட்டி கை ரேகையை வைக்கவும் கதவு திறந்தது.உள்ளே நுழைந்தவள் ரிசப்ஷனில் இவளை நோக்கி சிநேகமாக சிரித்த ரேகாவை நோக்கி சென்றாள்.


"ஹாய் சுஷ்!குட் மார்னிங்!நாளைலேந்து உன் த்ரி மன்த்ஸ் லீவ் ஸ்டார்ட் ஆகுது இல்ல..?"


"குட் மார்னிங் ரேக்!எஸ் நா ஆவலா வைட் பண்ண லீவ்...சூப்பரா என்ஜாய் பண்ண போறேன்"


அதற்குள் ரேகாவிற்கும் இவளுக்கும் ஜூஸோடு வந்தான் ஜோஃப்.அதுவும் ஒரு ரோபோட்டே...அனேகமாக பணியாட்கள் எல்லாம் ரோபோக்களே.


"ஹாய் ரேக் அண்ட் சுஷ்!ப்ளீஸ் ஹேவ் யுவர் ஜூஸ்"என்று பணிவாக.


"தேங்க்ஸ் ஜோ!"என்று இருவரும் அதை எடுத்துக் கொண்டதும் திரும்பிச் சென்றுவிட்டது அது.


"பை ரேக்!ஈவ்னிங் பாக்கறேன்"என்று உள்ளே சென்றாள்.


விடுமுறையில் செல்லவிருப்பதால் அவள் அதிகமாக நிலுவைகள் வைத்திருக்கவில்லை.மனம் முழுவதும் சென்னையில் தனியாக இருக்கும் தாயிடம் செல்லப் போகும் கணத்திற்காக துடித்துக் கொண்டிந்தது.கணவனை இழந்து சுசித்ராவை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து விஞ்ஞானியாக மாற்ற அவர் வியர்வையல்ல தன் ரத்தத்தை சிந்தினார் என்பதே உண்மை.


மிகவும் கடினமான வேலையாதலால் வருடத்திற்கு ஒரு முறை மூன்று மாதங்கள் மட்டுமே அவளுக்கு விடுமுறை கிடைக்கும்.ஏற்கெனவே பேக்கிங் எல்லாம் ஆகியிருந்தது.இரவு பயணம் வேண்டாம் என்ற அன்னையின் கண்டிப்பாதலால் மறுநாள் ட்ரைனில் செல்ல டிக்கெட் தயாராக இருந்தது.


தன் சிறிய அளவிளான வேலையை படபடவென முடித்தவள் லேப்பை நோக்கி சென்றாள்.அங்கே ரசாயனங்களோடு சண்டைப் போட்டுக் கொண்டிருந்த ஆருயிர் தோழன் மாதவனைக் கண்டு க்ளுக் என்று நகைத்தாள்.இருவரும் ஒன்றாக காலேஜில் படித்தவர்கள்.மேற்படிப்பு வேறு வேறு இடங்களில் முடித்தவர்கள் இங்கே வேலையில் சேர்ந்த போதுதான் மீண்டும் சந்தித்தனர்.இந்த மூன்று ஆண்டுகளில் அவர்களது உயரிய நட்பாக மலர்ந்திருந்தது.


சுசித்ராவின் சிரிப்பில் கோபமாகத் திரும்பிப் பார்த்தான் அவன்.அவன் கோப முகம் அவள் சிரிப்பை இன்னும் அதிகப்படுத்தியது.கலகலவென்ற அவள் சிரிப்பு அவன் முகத்திலும் நகையை தந்தது.


"என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா... இன்னும் எண்பதஞ்சு நாள் தான் இருக்கு!அதுக்குள்ள கண்டுப்பிடிக்கலேன்னா வேலையே போய்டும்... அப்பாகிட்ட விட்ட சாலன்ச்ல தோத்துடுவேனோன்னு பயமா இருக்கு"


மாதவனின் தந்தை பெரிய பிஸ்னஸ் மேன்.மகனும் தன்னைப் போல ஆக வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்த்தால் அவன் சயின்ஸே என் விருப்பம் என்று அதையே படித்தான்.பிறகும் அது சம்பந்தப்பட்ட வேலையில் சேரப் போவதாக அறிவித்தப்‌ போது அதில் அவன் முன்னேற முடியாது!எப்படியும் அவர் காலிலேயே வந்து விழுவான் என்று ஆரூடம் கூறினார்.அதிலேயே வென்று உலகம் புகழும் விஞ்ஞானியாக ஆகிக் காட்டுவதாக சவால் விட்டு வந்திருந்தான் அவன்.


சமீபத்தில் அவர்கள் நிறுவனம் புதுவிதமான ஆராய்ச்சி ஒன்றில் இறங்கியிருந்தது. அதன் முக்கிய தலைமை மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.மூன்று மாதங்களுக்குள் அவன் ஆராய்ச்சியின் முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.இந்த ஐந்து நாட்களில் ஓரளவு முன்னேறியவன் ஒரு இடத்தில் மேலே செல்ல முடியாமல் தேங்கி நின்று விட்டான்.


"மேடி!டேக் இட் ஈசி மேன்!எப்பிடியும் நீ கண்டுப்பிடுச்சுடுவே..‌எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..."


"நோ சுஷ்!இட்ஸ் வெரி காம்ளிக்கேடட்...எல்லா ரெஃபரன்ஸும் பார்த்தாச்சு...நோ யூஸ்"


"ஒரே ஒரு சயின்டிஸ்ட் கூடவா இதைப்பத்தி ரிசர்ச் பண்ணல?"தன் வாழ்வையே மாற்றப் போகிறது என்பதை அறியாமல் அந்த கேள்வியைக் கேட்டாள்.


"இப்ப இல்ல ஒன்ஸிக்ஸ்ட்டி இயர்ஸ் முன்னாடி ஸ்காட்டிஷ் சயின்டிஸ்ட் ஸ்டீவ்ங்கறவர் பாதி வரைக்கும் கண்டுப்பிடிச்சார்..."


"ஏன் பாதி?"


"அதுக்குள்ள ஹி வாஸ் டெட்..."


"ஹோ...ஸோ ஸேட்..."


"ம்....அவரோட ரிட்டர்ன் பேப்பர்ஸ் கொஞ்சம் தான் கிடைச்சது...அத யாரோ ப்ரிண்ட் பண்ணியிருக்காங்க... இன்னும் கொஞ்சம் இன்ஃபோ கிடைச்சிருந்தா என் ரிசர்ச் சூப்பரா ஆயிருக்கும்...பட் மை பேட் லக்"


"லீவ் இட் மேடி...பாவம் ஓல்ட் மேன்...என்ன பண்றது!"


"நோ சுஷ்!ஹி வாஸ் நாட்...ஹி டெட் அட் யங் ஏஜ்...அவர் இறக்கும் போது அவருக்கு வெறும் முப்பது வயசுதான்"


"ஹோ காட்...சாரி..மேடி எதுவும் சேன்ச் பண்ண முடியாது...ஆகறது ஆயிடுச்சு...உன்னால முடியும் மேடி!"


"ஹோப் ஸோ...ஓகே நீ உன் லீவ் நல்லா என்ஜாய் பண்ணு... இந்த தலவலியெல்லாம் விட்டு நிம்மதியா இரு"


"ம்..."என்றவள் மாலை வரை தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள்.


புறப்படும் முன் அவளின் சித்தப்பா மகன் ஸார்தக்கை பார்க்க அவன் வீட்டிற்குச் சென்றாள்.ஸார்தக் ஒரு மிஷின் பயித்தியம்.ஏதாவது ஒன்றை கண்டுப்பிடித்துக் கொண்டேயிருப்பான்.புதிதான ஒன்றை கண்டுப்பிடித்து விட்டதாக முதல் நாள் தான் போன் செய்திருந்தான்.


பேச்சுலர் வீடு என்பதற்கிணங்க பொருட்கள் நான்குப்புறமும் கிடந்தது.கதவை தாழிடாமல் இவன் என்ன செய்கிறான் என்று அவன் மிஷின் ரூமில் நுழைந்தவள் அங்கே ரூமை அடைத்துக் கொண்டிருந்த பெரிய பொருளைக் கொண்டு பயந்து விட்டாள்.


பலவிதமான ஒயர்கள் இணைக்கப்பட்ட உருண்டையான அதன் கீழ் பாகத்தில் எதையோ திருகியவாறு இருந்த ஸார்தக் பக்கத்தில் நிழலாடவும் எழுந்து நின்றவன் அது சுசித்ரா என்றதும்,


"அக்கா!எப்ப வந்தே?என்ன இப்படி திகைச்சுப் போயி நின்னுட்டே...நா நேத்தி சொன்னேன்ல புதுசுன்னு அது இதுதான்...எப்படியிருக்கு?"


"டேய் ஸாது!என்னடா இது?ஏதோ குட்டி குட்டியா பண்ணறேன்னு பாத்தா...இது என்னடா இவ்ளோ பெருசா?"


"ஐய்யே நீ ஒரு சயின்டிஸ்டா...இது என்னன்னு கூடவா தெரியல...டைம் மிஷின்...இதுவரை யாரும் பண்ணாத முறைல புதுமையா பண்ணியிருக்கேன்"


"வாட்...டைம் மிஷினா!ஹா ஹா டேய் டேய் என்னை என்ன லூசுன்னு நினைச்சியா!எதையோ உருண்டையா பண்ணிட்டு டைம் மிஷினாம்...போடா போடா"


"ஏய் அக்கா!என்னைப் பத்தி என்ன வேணா சொல்லு...ஆனா என் மிஷினைப் பத்தி தப்பா சொன்னே..இதுக்குள்ள வைச்சு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி கொண்டு விட்ருவேன் ஜாக்கிரத"


"ஏன்டா நெஜமாவா சொல்ற இந்த மிஷின் எந்த காலத்துக்கு வேணா போகுமா?"


"எங்க வேணா எந்த இயருக்கு வேணாலும் போகும்...வா இங்க"என்று தன் கண்டுப்பிடிப்பை அவளுக்கு உணர்த்தி விடும் வேகத்தில் அதைப் பற்றிய எல்லா விவரத்தையும் அவளுக்கு போதித்தான்.மேலே அவன் ஏதோ சொல்லத் தொடங்கும் முன் அவன் போன் அழைக்கவே அதை எடுக்கச் சென்று விட்டான்.


மிஷினையே சுற்றி வந்த சுசித்ராவின் மனம் மாதவனின் பிரச்சனையிலேயே உழன்றது.


'எங்க வேணா எந்த இயருக்கு வேணாலும் போகும்'


பளீரென அவள் மூளையில் உதித்தது அந்த யோசனை...அதன் சாதக பாதகங்களை ஆராயாமல் எதிரே தெரிந்த திரையில் படபடவென எண்களை அழுத்தியவள் அதன் ரிமோட்டை தன் பேக்கெட்டில் வைத்துக் கொண்டாள்.


ஆன் என்று இருந்த பட்டனை அழுத்தி கண்களை இறுக மூடிக் கொண்டு விட்டாள்.இரண்டொரு நொடியில் கண்ணை குருடாக்கும் ஒளி வெள்ளம்...பின் எங்கும் காரிருள்....
 
#10
:D :p :D
உங்களுடைய "லவ்
கெமிஸ்ட்ரி"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பவ்யா டியர்
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top