• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Love guru -11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
பெண் பார்க்க வந்த படலம் நம்ப சக்தியை கண்டதும் வாயை பிளந்தது..அழகான பச்சை நிற பட்டுபுடவையுடன் கையில் ஜோடி தங்க வளையலும் நெற்றியில் சின்னதாக கருப்பு நிற பொட்டும் ...தலையை பின்னலிட்டு அது இடை வரை தொட்டதும் ஒரு பெண்ணுக்கு உண்டான நேர்த்தி அவளிடம் இருந்தது

"டேய் முருகேஷ்..... சக்தி அழகா இருக்கா டா என்று அவன் அத்தை காதில் கிசுகிசுக்கள்?????

சபையில் இருந்த பெரியவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிக்க கையில் ஜூஸ் டம்ளர் கொண்டு வந்து நீட்டினாள் நம்ப சக்தி...

"எடுத்துக்கோங்க....என்றபடி தலை குனிய.....கதிர்வேலன் தனது வருங்கால மருமகளை கண்டு அசந்து போனார்....நல்ல பொன்னா இருக்காளே....

உடனே முருகேஷ் வெட்கத்துடன் அவள் முகத்தை ஏறிட்டு ஜூஸை கையில் வாங்கியவன் "அவளை கண்ணடிக்க தற்போது வெக்கம் அவளுக்கும் ஒட்டிக்கொண்டது...

சித்தி நீங்களும் ஜூஸ்....."சித்தியா...என்ன தாயி முறை எல்லாம் பலமாக இருக்கு...ஹாஹா எனக்கு காபி கொண்டா தாயி ஜூஸ் பழக்கம் இல்லை...

சரிங்க சித்தி....?என்று புன்னகை சிந்திவிட்டு முருகேஷின் அத்தைக்கு காபி தயாரித்து வந்து தந்தாள்.

"அண்ணே...முருகேஷ் க்கு இவ பொறுத்தமாக இருப்பா...கட்டி வச்சிரலாம்..பேச வார்த்தை யே இல்லை"

சரிமா...."ஆமா நவின் நீ உன் அக்காவோட இருக்கிறதா சொன்னாங்க கல்யாணம் ஆயிட்டு நீ எந்த கவலையும் படாத தம்பி உனக்கு சகல வசதிகளும் செய்து தரோம்"?????

ம்ம்ம் இப்ப நீங்கள் இருக்கிற வீடு சொந்தமான வீடா "??? "இல்லை அங்கிள் இது லீசுக்கு இருக்கிறோம் சொந்த வீட்டை வித்து தான் அந்த பணத்தை பேங்கில் ஃபிக்ஸட் போட்டு அந்த பணத்தில் வாழ்க்கை நடத்துகிறோம் என்றான் நவின்.

சரிப்பா.... பரவாயில்லை அப்போ....நாங்க கிளம்பறோம் ..கல்யாணம் தேதி குரித்து போன் பன்றோம்....
"ஏலேய்...முருகேஷ் வா....வந்து அந்த பொன்னு நெற்றியில் குங்குமம் வச்சி விடு...இனி இந்த பொன்னு விதவை இல்லை ,உன் மனைவி .....என்றாள் அத்தை.

அவன் குங்குமம் எடுத்து நெற்றியில் வைக்கும் போது அவள் உடம்பே புல்லரிக்க.... அவள் மீண்டும் சுமங்கலி ஆக போகிறாள் என்ற சந்தோஷம் அவளுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வளமாகும்.என்ற பாடலின் வரி தற்போது முருகேஷ் க்கு நினைவில் எட்டியது. "......அவனரியாமல் அவன் கண்களும் கலங்கின.

அன்று மதியம் நவினும் அவன் அக்கா சக்தி இருவரும் ஆனந்த பவனில் மதிய உணவு சாப்பிட சென்றனர். நல்ல அருமையான மீல்ஸ்....?

"அக்கா வயிறும் நிறைஞ்சிறுச்சு மனசும் நிறைஞ்சிறுச்சு"???

ஆமாடா எனக்கும் தான்......

அக்கா உனக்கு தேவையான புடவை ஆக்ஸஸரிஸ் எல்லாம் வாங்கி வச்சிக்க காசு பற்றி கவலை படாமல். நானும் கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன்.

ஹாஹா டேய் தம்பி நீயும் காசு சேர்க்க ஆரம்பிச்சிட்டியா ????

ம்ம்ம்..... பின்ன ? எனக்கு கஷ்டத்தை சொல்லி வளர்த்தது நீ தானே.

????

என்னங்க ...ஆனந்த பவன் போலாம் வாங்க னு வீரா கணவர் தனுஷூடன் அதே ஹோட்டல் வர.....எதர்ச்சையாக இவர்களை பார்த்தவள்
"ஹாய்.... அண்ணி....என்று சக்தியை கூப்பிட...

அண்ணியா.....என்ன வீரா இந்த பக்கம் திடிருனு ????

ஆமாம் என் அண்ணனை கட்டிக்க போற உங்களை அண்ணி தானே சொல்லனும். ஹாஹா ...அப்புறம் நானும் தனுஷ் சும்மா வீட்டில் சாப்பிட போர் அடிக்கது...னு ஹோட்டல் வந்தோம்......

நவின் தன் தோழியை பார்த்த சந்தோஷத்தில்..."ஹே.....வீரா..கண்டுக்கவே மாட்ற என்னை...

அடபோங்க நவின் மாம்ஸ் சும்மா கிண்டல் பன்னிட்டு.... என்று அவனையும் முறையை வைத்து கூப்பிட நவினுக்கு ஆச்சரியம் ...நட்பு அப்படிங்கறது தாண்டி ஒரு நெருக்கமான உறவு முறையை உணர்ந்தான்.

தனுஷ் - அக்கா வாழத்துக்கள்???என் மச்சான் முருகேஷ் கூட நல்ல படியாக வாழ இந்த தம்பியின் வாழ்த்துக்கள்.

சக்தி - தாங்க்ஸ் தனுஷ்.

இதுவரை யாரும் இல்லாது தனியே வாழ்ந்த நவினுக்கும் சக்தி க்கும் இந்த உறவுகள் வரப்பிரசாதம் போல் இருந்தது. ?

உறவுகள் வளரட்டும்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top