• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Lunch box Recipe

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Easy Lunch Box Recipe Variety Rice எப்படி பண்றதுனு பாக்கலாம் வாங்க டியர்ஸ்.....

இதுக்கு ரொம்ப முக்கியமான மற்றும் தேவையான ஒரு மெயின் ingredient பெரிய வெங்காயம் தான்..


தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி அல்லது நீங்க
எப்போதும் பயன்படுத்தும் அரிசி - 1 கிளாஸ்
பெரிய வெங்காயம் - 6
பட்டை - 4
கிராம்பு -4
ஏலக்காய் - 4
இஞ்சி - 5 துண்டு
பூண்டு 10 பல்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 1
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தண்ணீர் - நீங்க உபயோகிக்கும் அரிசிக்கேற்றது போல
சோம்பு - 1 ஸ்பூன்
நெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை :

பாஸ்மதி அரிசியை ஒரு 20 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்க எந்த அரிசி எடுக்குறீங்களோ அந்த அரிசி ஊற வச்சுக்கோங்க. ஊற வைக்காம பண்றதுனாலும் உங்க விருப்பம் தான்....

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கோங்க.

பச்சைமிளகாயை ரெண்டா கீறி வச்சுக்கோங்க..

ஒரு மிக்ஸில் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இதெல்லாம் போட்டுட்டு கொஞ்சமா தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைச்சுக்கோங்க....

அடுப்பு ஆன் பண்ணிட்டு குக்கர் வச்சு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் சோம்பு போட்டு, பொரிந்ததும், நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.....

பொன்னிறமாக வந்ததும் அரைத்து வைத்த கலவையை இதில் சேர்த்துக்கோங்க, மிக்ஸில் ஜாரில் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கழுவி அந்த தண்ணியையும் சேர்த்துடுங்க..

பச்சை வாசனை போகும் வரை நல்லா கலந்து விடுங்க, கூடவே தேவையான உப்பு சேர்த்துக்கோங்க....

பச்சை வாசனை போனதும் ஊற வைத்த அரிசி சேர்த்து நல்ல பிரட்டி விடுங்க. இந்த மசாலா அரிசில நல்லா சேரும் அப்போதான்....

நல்ல கலந்துவிட்ட பிறகு , தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்க. கொதிச்சு வந்ததும் மூடி வச்சு விசில் விட்டு எடுக்க வேண்டியது தான்....

சுவையான வெங்காய மசாலா சாதம் தயார்.....




ithula nan solli irukka kaaram and alavu ellam ungalukku thevaiyaana mathiri serthukkonga....
vaeirty 1.jpg

vaeirty 2.jpg
ithu book la parthu try pannathu than makkale... nalla vanthuchu. athan ungakuda share pAnren
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Ohh super akka

No no tom akka babies school ku pona morning eh elundhu tiffin and lunch onna araka paraka seiyanumla veetula irundha lunch medhuvaaga pannalam adhan ketten🤗🤗🤗🤗🤗🤗
Ohooooo
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top