• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Lunch Box Recipes - Aloo Paratta & chenna masalaa

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
லன்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ்


ஆலூ பராட்டா & சன்னா மசலா



மைதாமாவினால் செய்யப்படும் கடையில் விற்கும் பராட்டாவை வாங்கிக் கொடுப்பாதற்கு பதிலாக வீட்டிலேயே நல்ல கோதுமை மாவில் பராட்டா செய்யலாம். அனைவருக்கும் பிடித்தமான லன்ச் பாக்ஸ் உணவு இது. இதற்குத் தொட்டுக்கொள்ள சன்னா மசலா செய்யலாம்.



ஆலூ பராட்டா



தேவையான பொருட்கள்:



உருளைக்கிழங்கு - 3 (பெரியது)

கோதுமை மாவு - 3 கப்

பச்சை மிளகாய் - 2

உப்பு : தேவையான அளவு

தண்ணீர் - தேவைக்கேற்ப

நெய்/எண்ணெய் - போட்டு எடுக்க

கொத்தமல்லி : தேவையென்றால்



செய்முறை:



உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் (வாசனைக்குப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கலாம்) ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இப்போது கோதுமை மாவோடு இந்தக் கலவையைப் போட்டு உப்புப் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும். கைகளில் மாவு ஒட்டாமலிருக்க எண்ணெய் தடவிக்கொள்ளலாம். பிசைந்த மாவை பெரிய பெரிய உருண்டைகளாக ஆக்கிக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக்கல்லில் பொட்டு சற்றே தடிமனாக இட்டுக்கொள்ளவும். இவற்றை சப்பாத்திக்கல்லில் எண்ணெய்/நெய் ஊற்றி இரு புறமும் நன்றாக வேகுமாறு போட்டு எடுக்கவும்.

வாசனையான சுவையான சத்தான ஆலூ பரட்டா தயார். இதனை ஊறுகாயோடு அல்லது தயிரோடும் உண்ணலாம். இல்லையென்றால் சன்ன மசாலாவும் செய்யலாம்.



சன்னா மசலா:



தேவையான பொருட்கள்:



கொண்டைக்கடலை (வெள்ளை) - 100 கிராம்.

வெங்காயம் - 2

தக்காளி - 1 (பெரியது)

பட்டை, கிராம்பு ஏலக்காய், சோம்பு - எல்லாம் சேர்த்து 2 ஸ்பூன்

பூண்டு - 7 அல்லது 8 பல்

கரம மசலா : 1/2 ஸ்பூன்

உப்பு: தேவையான அளவு



செய்முறை:



முந்தைய நாள் இரவே ஊற வைத்த கொண்டைக் கடலைகளை உப்புப் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருக்கும் தண்ணீரை வடிக்க வேண்டாம். வெங்காயம் தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாகக் காய்ந்ததும் பட்டை+கிராம்பு+ ஏலக்காய்+ சோம்பு கலவையைப் போடவும் லேசாக வாசனை வந்தவுடன் பூண்டைப் போட்டு வதங்கியதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளியோடு அளவான உப்பு சேர்க்கவும். எல்லாப் பொருட்களும் மொத்தமாக நன்றாக வதங்கிய உடன் கொண்டைக்கடலையை அதில் சேர்க்கவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். மிகவும் நீராக இருந்தது என்றால் சிறிதளவு கடலைமாவைக் கரைத்து விடலாம். எல்லாப் பொருட்களும் நன்றாக கலந்து கொதித்த பிறகு கரம் மசாலாவைச் சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்து விடவும். இதோ கமகம சன்னா மசலா தயார்.



இதே முறையில் ராஜ்மா, சோயா, டபிள் மீன்ஸ் போன்றவற்றையும் செய்யலாம். ஆலூ பராட்டாவோடு இந்த மசாலாவையும் லன்சுக்கு வைத்துக் கொடுத்தீர்கள் என்றால் இன்னும் இன்னும் எனக் கேட்டுக் கேட்டு சாப்பிடுவார்கள். செய்து பாருங்களேன்.



சிறு குறிப்பு:குக்கரில் கொண்டைக் கடலையையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வேக விட்டால் நேரமும் எரிபொருளும் மிச்சம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top