• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 23 – மதுமிதா

ஒரு மழைப்பொழுதினை இரவு முழுக்க பயணத்தில் கழித்துவிட்டு காலையில் தென்றல்நகர் வந்து இறங்கிய போது, சென்னை வெள்ளப் பேரழிவு செய்தியே அவளை வரவேற்றது.

வெள்ளக்காட்சியின் முழு விபரம் வரவர அனைவரும் அதிர்ந்தனர்.

மின்சாரம், தொலைபேசி இயங்காத நிலையில் பேஸ்புக்கில் நல்லிதயங்கள் தன்னார்வலர்களை இணைத்து மீட்புப் பணியில் இறங்கினார்கள்.

அரசு முனைந்து எடுக்க வேண்டிய பேரிடர் மேலாண்மையை மக்களே இணைந்து எடுத்து சாதி மத வேறுபாடின்றி மனித நேயத்தை உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள்.

மகள்ஜோதியிடம் பேச முடியவில்லை. தி. நகர் பகுதியிலும் வெள்ளம் என்ற விஷயம் தெரிந்ததும், ஏன் ஊருக்கு வந்தோம் என்றிருந்தது சுரேகாவுக்கு. ரொட்டி, பால், இட்லிமாவு சப்பாத்திமாவு காய்கறிகள் அனைத்தும் பிரிட்ஜில் இருந்தாலும் கரெண்ட் இல்லாமல் எப்படி அவற்றைப் பாதுகாக்க முடியும். மேலே வாட்டர்டேங்க்கில் நீர் ஏற்ற மோட்டர் போட முடியவில்லையென்றால் கழிவறைக்கு தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று தோன்ற கோபம் அரசாங்கத்தின் மேல் முதலில் வந்த கோபம் அசோக்கின் மேல் திரும்பியது. எத்தனை முறை சொல்லியும் அன்றைக்கே வர வேண்டும் என்று சொன்னாரே. வந்தது தான் பாதுகாப்பாக இருந்தாலும் மகனும் மருமகனும் அங்கே சென்னையில் மாட்டிக்கொண்டார்களே என்று உள்ளம் துடிதுடித்தது.

உள்ளுக்குள் கொதித்தெழும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. வாய் திறந்து பேசினால் யாரையேனும் காயப்படுத்தி விடுவோம் என்று தோன்றியது. அதனால் சுரேகாவால்
மௌனமாக எதுவும் பேசாமல் மட்டுமே இருக்க முடிந்தது.

அத்தனை லட்சம் பேர் சென்னையில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருக்கையில் மகளையும் மருமகனையும் மட்டும் இன்னும் நெருக்கமாகப் பார்க்கத் தோன்றியது பெரும் சுயநலமாகத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.

தங்கை மித்ராவின் மகன் அஸ்வின் தன் நண்பர்களுடன் இணைந்து பல மீட்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தான்.

அஸ்வின் மூலமாக மூன்றாம் நாள் ஜோதியும் மருமகன் அருணும் நலமாக இருக்கிறார்கள் என்னும் செய்து கிடைத்து ஆறுதல் அடைந்தார்கள்.

வீடு இரண்டாம் மாடியில் என்பதால் வீட்டில் சேதம் இல்லையென்றாலும், போர்டிகோவிலும் முதல் மாடிப்படிகளில் பாதி வரையிலும் தண்ணீர் வந்துவிட்டதால் கார் முற்றிலுமாக சேதம் அடைந்திருந்தது.

அமீரகத்தில் இருக்கும் நண்பர் ஆஸாத் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்று வாட்ஸப் நண்பர்கள் குழுமத்தில் கூறியிருந்தார்.

சுரேகா அவரிடம் விலாசம் கேட்டாள். அப்போதுதான் புதிதாக குடிபோயிருந்தார்கள் என்பதால், வீட்டு விலாசம் சொல்லத்தெரியாமல், அந்த இடம், அங்கிருந்து வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும் என்று அடையாளம் சொல்லி இருந்ததை அஸ்வின் நண்பர்கள் குழுமத்திற்கு அனுப்பி இருந்தாள்.

மாலை அஸ்வினின் நண்பன் குமாரிடமிருந்து அங்கே நீங்கள் குறிப்பிட்ட இடத்துக்குப் போய் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டோம். ஆஸாத் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. இதை குழுமத்தில் ஆஸாத்திடம் தெரிவித்ததும் மனம் நெகிழ்ந்து போனார்.

பத்து நிமிடங்களில் ஒரு வீடியோ வந்தது. அதை குழுமத்தில் பகிர்ந்தாள். அந்த காணொளியில் ஆஸாதின் மனைவி, அம்மா, மகள்கள் என அனைவரும் மெழுகுவர்த்தியின் ஒளியில் நலமாக இருக்கிறோம் என்று சிரித்தபடி சொன்ன காட்சியைக் கண்டதும் அனைவரும் ஆனந்தக் கண்ணீரில் ஆழ்ந்தனர்.

ஆஸாத் பேஸ்புக்கில் அதனைப் பதிவாகவே இட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

தென்றல் நகரில் இருந்து பல தன்னார்வல தொண்டர்கள் இணைந்து சென்னைக்கும் கடலூருக்கும் உணவுப் பொருட்களையும் உடைகளையும் அளித்தனர்.

நூலக உறுப்பினர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கான சப்பாத்திகளையும், இட்லிகளையும், தக்காளி, தயிர் சாத வகைகளையும் பெட்ஷீட் கம்பளிகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.

தென்றல்நகர் தன்னார்வலர்கள், தென்றல் நகர் முகநூல் உறுப்பினர்கள், சமூக நலத் தொண்டர்கள் என தனித் தனியாக இயங்கியவர்கள் ஒன்றிணைந்து தென்றல் நகருக்கான வளர்ச்சிப் பணிகளில் இணைந்து இயங்க முடிவு செய்ய ஒரு வாய்ப்பாக இந்த பேரிடர்க்கால உதவிப் பணி அமைந்தது.

ஒரு வாரத்துக்குப் பிறகே சுரேகாவால் ஜோதியிடம் பேச முடிந்தது. ஜோதிக்கும் அருணுக்கும் மாற்றி மாற்றி போன் செய்து, இரவு ஒரு மணிக்கு அருணின் மொபைல் எண் கிடைத்தது.

என்ன அத்தை இந்த நேரத்தில் நானும் ஜோதியும் நல்லா இருக்கிறோம் என்றார் அருண்

இல்லைப்பா உங்க ரெண்டு பேரிடமும் பேச முடியாமல் உறக்கம் வரல. இப்ப தான் லைன் கிடைத்தது என்றாள்

ஜோதி போனை வாங்கி அம்மா என்றதும், செய்தியில் அடுத்த வாரம் மழை இருக்குன்னு சொல்லறாங்களே நீயும் அருணும் இந்த சாக்கில் ஒரு வாரம் இங்கே வந்து இருந்துட்டு போங்களேன் என்று சொல்லும்போதே போன் கட்டாகி விட்டது.

இந்த அளவு பேசியதில் பயம் ஒன்றும் இல்லை. குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆசுவாசமடைய முடிந்தது.

புயல் எச்சரிக்கை குறித்து பேசியபோதே ரமணன் இந்த மழை பற்றிய எச்சரிக்கையை கொடுத்திருந்தார். ஆப் தி ரெகார்ட் என்று சொல்லும்போதே அதுவே நமக்குப் புரியும்போது, பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஊருக்குப் போக வேண்டாம் என்று நினைத்தோமே, செக்ரட்ரியேட்டுக்கு ஃபைலைக் கொண்டு சென்று விளக்கமாக அவர் சொன்ன பின்பும் மக்களைக் காக்க அரசு ஏன் ஆவன செய்யவில்லை என்னும் கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.

உயிர்ப்பிரச்சினையையே கணக்கில் எடுக்காத இந்த அரசு நூலகப் பிரச்சினையை எந்த அளவுக்கு எடுக்கும். எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான் என்று ஆயாசமாக இருந்தது.

இருந்தாலும் முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் போல, நூலக வாடகைப் பிரச்சினையை முதலமைச்சருக்கு மனுவாக எழுதலாம் என்று இணையம் வழியே முதலமைச்சருக்கு மனு அனுப்பிவிட்டு அதை வலைப்பதிவிலும் பதிந்தாள்.

முதலமைச்சருக்கு இணைய வழி மனு முறையாக அனுப்பப்பட்டது அப்படியே வலைப்பதிவில் அளிக்கப்பட்ட விதத்தில் இங்கே.

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அம்மா, வணக்கம்.

1. தென்றல்நகர் தமிழக அரசு பொதுநூலகத்துறை, தென்றல்நகர் பெண்கள் நூலகத்துக்கு (சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நூலகம்) கட்டடம் கட்ட இடம் வேண்டும்.

2. மூன்று வருடங்களாக அரசு நூலகம் இயங்கிவரும் கட்டடத்துக்கு வாடகை கொடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. வாடகை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த இரண்டையும் ஆவன செய்யுங்கள்.

மேலதிக விபரங்கள்:

நீங்கள் சென்ற முறை பதவியேற்றதும்,1992இல் தென்றல்நகரில் பெண்கள் சிறுவர் நூலகம் ஆரம்பித்துள்ளோம் என வானொலியில் உரையாற்றிய விபரம் அறிந்து பெரிதும் மகிழ்ந்தோம். அப்போது உடனடியாக உங்களுக்கு நூலகத்துக்கான இடம் கேட்டு மனு அளித்தோம். அந்த இடம் அப்போது வருவாய்த்துறையினரிடம் இருந்தது. நீங்கள் இடத்தை வருவாய்த்துறையிலிருந்து நூலகத்துறைக்கு மாற்றினால் மட்டும் போதும் என்னும் நிலமை. அப்போது அந்த இடம் முனியம்மன் பொட்டலாக இருந்தது. அந்த இடம் சிலவருடங்களுக்கு முன்பு முந்தையஅரசால் அரசியல்காரணங்களுக்காக கைமாறிவிட்டது. பின்னர் கேட்கப்பட்டஇடமும் கொடுக்கப்படவில்லை. இப்போது இயங்கிவரும் வாடகைக்கட்டடத்தில் 3 வருடங்களாக வாடகைகொடுக்கப்படாமலேயே நூலகம் இயங்கி வருகிறது. என்வலைப்பதிவில் இருபதிவுகள் பதிவு செய்துள்ளேன். இதைக்கண்டு ஆவனசெய்யும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், சுரேகா அசோக், கன்வீனர், தென்றல்நகர் மாதர்சங்கங்களின் கூட்டமைப்பு, தென்றல்நகர். 11.06.2014

இது போதாதென்று மறுமுறையாக இரண்டாவது மனுவும் அனுப்பப்பட்டது.

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அம்மா,வணக்கம்.

தென்றல்நகர் சக்கராஜாகோட்டை ஊர்ப்புறநூலகத்தை தென்றல்நகர் பெண்கள்கிளைநூலகமாக தரம்உயர்த்தித்தர கோரிவிண்ணப்பம்.

முந்தையகோரிக்கைஎண்:2014/784085/TX மேல்விபரம்//

1.தென்றல்நகர் தமிழகஅரசு பொதுநூலகத்துறை, தென்றல்நகர் பெண்கள்நூலகத்துக்கு (சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நூலகம்)கட்டடம்கட்ட இடம் வேண்டும். 2.3ஆண்டுகளாக அரசுநூலகம் இயங்கிவரும் கட்டடத்துக்கு வாடகைகொடுக்கப்படாமல் நிலுவையிலுள்ளது. வாடகை கொடுக்க நடவடிக்கைஎடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தஇரண்டையும் ஆவனசெய்யுங்கள்.

மேலதிக விபரங்கள்:

நீங்கள் சென்றமுறை பதவியேற்றதும்,1992இல் தென்றல்நகரில் பெண்கள் சிறுவர்நூலகம் ஆரம்பித்துள்ளோம் என வானொலியில் உரையாற்றிய விபரமறிந்து பெரிதும்மகிழ்ந்தோம்.அப்போது உடனடியாக உங்களுக்கு நூலகத்துக்கான இடம்கேட்டு மனு அளித்தோம். அந்தஇடம் அப்போது வருவாய்த்துறையினரிடம் இருந்தது. நீங்கள் இடத்தை வருவாய்த்துறையிலிருந்து நூலகத்துறைக்கு மாற்றினால் மட்டும்போதும் என்னும் நிலை. அந்த இடம் சிலவருடங்களுக்கு முன்பு முந்தையஅரசால் அரசியல்காரணங்களுக்காக கைமாறிவிட்டது. பின்னர் கேட்கப்பட்டஇடமும் கொடுக்கப்படவில்லை. இப்போது இயங்கிவரும் வாடகைக்கட்டடத்தில் 3 வருடங்களாக வாடகைகொடுக்கப்படாமலேயே நூலகம் இயங்கி வருகிறது. என்வலைப்பதிவில் இருபதிவுகள் பதிவுசெய்துள்ளேன். வலைப்பதிவின் லிங்க்கும் இணைத்துள்ளேன். இதைக்கண்டு ஆவனசெய்யும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன்,சுரேகா அசோக்,கன்வீனர், தென்றல்நகர் மாதர்சங்கங்களின் கூட்டமைப்பு, தென்றல்நகர்.11.06.2014//அன்புடன்,சுரேகா அசோக்.22.06.2014

இந்த இரண்டு மனுக்களை அனுப்பியபின் சில மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்தன. இரண்டு வாரங்களில் இணைய வழியாக அனுப்பிய மனுவின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
விருதுநகர் மாவட்ட நூலக அலுவலர் அதிரடியாக தென்றல்நகர் நூலகத்துக்கு வருகை தருவதாக செய்தி வந்தது.

நூலகர் முத்துலட்சுமி அவசரமாக சுரேகாவை தொலைபேசியில் அழைத்தாள்.

“அக்கா இன்னிக்கு டிஎல்ஓ நம்ம நூலகத்துக்கு வர்றாங்க. எதுக்கு முதலமைச்சருக்கு மனு எழுதினீங்கன்னு கேட்டாங்க. நான் அனுப்பல. எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். பயமா இருக்கு. அவர் வந்ததும் மிஸ்ட் கால் தர்றேன் உடனே லைப்ரரிக்கு வர்றீங்களாக்கா”

“ஒண்ணும் பயப்பட வேணாம். எனக்கு எதுவும் தெரியாது. சுரேகா தான் எழுதி இருப்பாங்கன்னு சொல்லிடுங்க. நான் லைப்ரரிக்கு வர்ற வரைக்கும் தெரியாதுன்னு சொல்லி சமாளிங்க. நான் வந்து பேசிக்கிறேன்”

சுரேகா நூலகத்துக் போகும்போது ஜெகதீசன் டிஎல்ஓ சீரியஸான முக பாவனையுடன் வேகவேகமாக ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். சராசரி உயரத்தில் இருந்தார்.

வணக்கம் என்றதும் திரும்பிப் பார்த்துவிட்டு வேலையில் ஆழ்ந்தார்.

இவங்க தான் சுரேகா என்றதும்,

வணக்கம்மா. எதுவா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லலாமே. முதலமைச்சருக்கு இணைய வழி மனு ஏன் குடுத்தீங்க

இயக்குநர் இராமேஸ்வர முருகன் அவர்களை சென்னையில் பார்த்தோம். அவரை இரண்டு முறை சந்தித்து நேரடியாக மனு குடுத்தோம். அப்படியும் மூன்று வருடமாக வாடகைப் பணம் பாக்கி வரல. உடனே இந்த விபரத்தை அனுப்பச் சொல்லி விருதுநகருக்கு என் முன்னால்தான் போனில் பேசினாங்க. அது எதுவும் நடக்கலியே. அதனால் தான் முதலமைச்சருக்கு மனு எழுதினேன்.

அவர் என்னுடைய நண்பர்தாம்மா. வாடகை கட்டடக்காரங்களை கடிதம் எழுதி அனுப்பச் சொல்லுங்க

அன்னிக்கே கடிதம் அனுப்பியாச்சுங்க

நாளைக்கு இங்கே வருவேன். அப்போ மறுபடியும் கடிதம் எழுதி வாங்கி வையுங்க. இதோ இப்போ உடனே வாடகை பணத்துக்கு ஏற்பாடு பண்ணறோம். மறுபடி இனையத்துல முதலமைச்சருக்கு மனுன்னு எழுதப் போக வேணாம்.

சரிங்க. இப்போ இடம் ஒண்ணு பார்த்திருக்கிறோம். அதையும் நீங்க பார்த்து அந்த இடத்தை நூலகத்துக்காக கேட்டால் நல்லது. முனிசிபலில் நாங்க கேட்டால் நீங்க ஏன் நூலகத்துக்கு இடம் கேட்கிறீங்க, லைப்ரரி டிபார்ட்மெண்ட்டில் இருந்து கேட்கச் சொல்லுங்கன்னு சொல்லறாங்க. நீங்க நேரடியா கேட்காமல் எங்களைக் கேட்கச் சொல்லறீங்க. இருபத்தி மூணு வருஷமா இதுதாங்க நடக்குது.

சுருக்கென்று முகத்தில் ஏறிய கோபத்தை சட்டென்று மறைத்துக்கொண்டு சுரேகாவைப் பார்த்துச் சிரித்தார்.

நடக்கும்மா. உங்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் தோழியாமே. நூலகர் சொல்லறாங்க.

ஆமாங்க. அவங்க என்னுடைய தோழி. அவங்க முதல் புத்தக வெளியீடு கருத்தரங்கில் பேசி இருக்கிறேன். நம்ம ஊருக்கு சுமதி வந்திருக்கிறாங்க. என்னுடைய மகள் ஜோதியின் திருமணத்துக்கும் வந்திருந்தாங்க. நூலக விஷயமாக அவங்க கிட்ட பேசுவேன். தம்பி தென்னரசுகிட்ட நூலக இடம் விஷயமா பேசலாமேன்னு சொல்லி இருந்தாங்க. அவரையும் தமிழச்சி தங்கபாண்டியனின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். ஆனா ஆட்சி மாற்றம் இருந்ததால பேச முடியல.

அவங்க அப்பாவும், அவரும் எனக்கு நல்லாவே தெரிஞ்சவங்க மேடம். உங்களுக்கு நம்ம நூலக விஷயத்துல என்ன வேணும்னாலும் சொல்லுங்க. நான் இருக்கிறப்போ என்னோட பீரியட்ல செஞ்சு தந்துடறேன்.

ரொம்ப நன்றிங்க. மாரியம்மன் கோயிலுக்கு அந்தப் பக்கம் யூனியன் ஆபீசுக்கு எதிரில் இருக்கும் இடத்தை நம்ம நூலகத்துக்கு கேட்கலாம். நீங்களும் வந்தால் முனிசிபல் சேர்மனைப் பார்த்து இந்த விஷயமா பேசிடலாங்க என்றாள் சுரேகா.

முத்துலட்சுமி பயம் தெளிந்து நிம்மதியாக சுரேகாவைப் பார்த்தாள்.
மறுநாள் டிஎல்ஓ வந்ததும் உடனே வாசகர் வட்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்து யூனியன் ஆபீசுக்குப்போய் அந்த இடத்தை டிஎல்ஓக்கு காட்டிவிட்டு, அப்படியே டிஎல்ஓ ஜெகதீசனும் முத்துலட்சுமியும் ஆனந்தமும் முனிசிபல் சேர்மன் வீட்டுக்குப் போய் இதைக் குறித்து பேசிவிட்டு வந்தனர்.

அதை சுரேகா தன்னுடைய வலைப்பதிவில் பதிந்தாள். அப்போது வார்ட் எண் சர்வே எண் அனைத்தையும் பதிய வேண்டும் என்ற போது, அப்பா ராஜாராம் அதைத் தடுத்து விட்டார்.

விளக்கமாக எழுதாதே சுரேகா. நாம லைப்ரரிக்கு கேட்கிற இடமெல்லாம் உடனே வேறு காரணத்துக்காக அந்த இடங்களை எடுத்துக்கிறாங்க. இதையும் எடுத்துப்பாங்க என்றார்.

அப்பா நீங்க நினைக்கிறது தப்பா படுது எனக்கு. இந்த இடத்தின் எண்ணை மனுவில் குறிப்பிட்டால்தான், இதை நாம முதலிலேயே கேட்டிருக்கிறோம், பிறகு வந்தவங்க மத்தவங்க இந்த இடத்தை ஆக்கிரமிச்சிருக்கிறாங்கன்னு நாம சொல்ல முடியும். இதை ஏன் நினைக்க மாட்டேங்கிறேங்க

சுரேகா உனக்கு சொன்னால் புரியாதா என்று தந்தை சொல்லும்போதே அசோக் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்ததும் சுரேகா எதுவும் பேசாமல் இருந்து விட்டாள்.

மறுநாள் வீட்டு வேலைகளை வேலைமுடித்ததும், இந்தப் பதிவை வலைப்பதிவில் எழுதினாள். புகைப்படத்தையும் பதிவிட்டாள். இடத்தின் சர்வே எண் விபரங்களை எழுதவில்லை.

11.06.2014 ஆம் நாளிலும், 22,06.2014 ஆம் நாளிலும் இணையவழியாக முதலமைச்சருக்கு அளித்த இந்த கோரிக்கைகளுக்குப் பிறகு 9.07.2014 விருதுநகர் மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன் அவர்கள் நேற்று தென்றல்நகர் நூலகத்துக்கு வந்திருந்தார். அவரின் வருகையையொட்டி பத்து நிமிடங்களில் சிறப்பு வாசகர் வட்ட கூட்டம் வந்திருந்த உறுப்பினர்களை வைத்து உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

நூலகத்துக்கான வாடகையைத் தருவதாகக் கூறினார். அதற்கான கட்டட உரிமையாளரின் கையெழுத்திடப்பட்ட கடிதத்தையும் அவரிடமே கொடுத்து அனுப்பியாகி விட்டது.

’சக்கராஜாகோட்டை ஊர்ப்புற நூலகம்’ என்னும் பெயரினை, ’சக்கராஜாகோட்டை பெண்கள் சிறுவர்கள் ஊர்ப்புற நூலகம்’ என பெயர் மாற்றவேண்டுமென கேட்டுக்கொண்டோம். இடம் கிடைத்து நூலக கட்டடம் கட்டப்பட்ட பின்பே, தென்றல்நகர் பெண்கள் சிறுவர்கள் கிளை நூலகமாக மாற்றப்படும் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் பெண்கள் கிளை நூலகம் இங்கே அமைக்க இந்த நூலகம் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும் தான் விருதுநகரில் மைய நூலகத்தில் எற்படுத்தித் தந்த வசதிகளை தென்றல்நகர் நூலகத்திலும் செய்வதாகக்கூறினார். அனைத்துக்கும் தேவையான என்னென்ன மனுக்கள், எப்படி எழுதி அனுப்பினால் தான் சிறப்பாக உடனடியாக செயல்பட முடியும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

23 வருடங்களாக அதைத்தானே செய்கிறோம் அரசு தரப்பிலிருந்து கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறதே, 1991 ஆம் ஆண்டு ’ தென்றல்நகர் பெண்கள் சிறுவர்கள் பகுதி நேர நூலகம்’ ஆக இயங்கி வந்த நூலகம், 1997 ஆம் ஆண்டு சக்கராஜாகோட்டை ஊர்ப்புற நூலகமாக தகுதி உயர்த்தப்பட்டது. 1450 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அனைவரும் பெண் உறுப்பினர்கள். புரவலர்களும் உள்ளனர். என அனைத்து விபரங்களையும் எடுத்துக் கூறியதும், இன்று நான் குறிப்பிட்டவற்றை சரியாக செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மறுபடியும் ஐந்தாறு இணைப்புகளுடன் மனு அனுப்ப வேண்டும்.

நூலகத்துக்கான ஒரு நிலத்தை பார்வையிட்டார். மிகப் பொருத்தமான இடம் என்றார். கலெக்டரிடம் சொல்லி இந்த இடத்தை முடிக்கலாம் என்றார். சகல வசதிகளுடன் நூலக கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யப்படும் என்றார்.

தென்றல்நகர் முனிசிபல் சேர்மன் தனலக்‌ஷ்மி செல்வ சுப்ரமணியம் அவர்களை மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன் அவர்கள் சந்தித்து தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை, இராஜபாளையம் பெண்கள் சிறுவர்கள் நூலகத்துக்கான இடம் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அந்த இடத்தில் விருதுநகர் மைய நூலகத்தில் தற்போது திறந்துவைக்கப்பட்ட சிறுவர்களுக்கான கட்டடம் போலவும் கட்டவேண்டும் என்று அந்த கட்டடத்தின் புகைப்பட நோட்டீஸையும் கொடுத்தார்.

முனிசிபல் எல்லைக்குள்ளான இடத்தினை நமது அரசு நூலகத்துக்கு ஒதுக்கித் தர முனிசிபல் சேர்மன் சம்மதம் தெரிவித்தார்.

நேற்றைய பொழுது வாய்வார்த்தையில் இனிதாக முடிந்தது. எழுத்து வடிவில் முடிவாகி சிறப்பாக செயல்பட மேலிருந்து அனைத்து தேவதைகளும் ஆசி அளிக்க சிரம் தாழ்த்தி குருவினை வேண்டிக்கொள்கிறேன்.

நண்பர்களான உங்களின் ஆதரவும் வாழ்த்தும் மிகவும் முக்கியம்.

புகைப்படங்கள் அனைத்தையும் நானே எடுத்ததால் எந்தப் புகைப்படத்திலும் நான் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :)

என்று மேலே எழுதப்பட்டதை சுரேகா தன்னுடைய வலைப்பதிவில் எழுதினாள். முதலமைசருக்கு மனுவை எழுதினாள்.

தமிழக முதலமைச்சருக்கு மனு - தென்றல்நகர் மகளிர் நூலகத்துக்கான கோரிக்கை

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை தென்றல்நகர் மகளிர் நூலகத்துக்காக 1991 ஆம் ஆண்டிலிருந்து பணிகள் செய்து வருகிறோம்.

இன்று 23 வருடங்களுக்குப் பிறகான நம் நூலகத்தின் வளார்ச்சியினைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. ஆனாலும் நம்முடைய கோரிக்கையான, நமது நூலகத்தை பெண்கள் கிளை நூலகமாக தரம் உயர்த்தித் தருவதும், அதற்கான இடத்துக்கான போராட்டமும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையவழி பதிவில் கோரிக்கை வைத்ததன் நகல் இது.

மனுவின் லிங்க் இங்கே

https://www.dropbox.com/sh/5i81jkajor69pnh/AABuYY2F5F7HqBiU2r1CxZl5a

நல்லார்வலர்கள், நண்பர்கள் அனைவரின் வாழ்த்தும் ஆதரவும் இந்த பணிக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் இயங்கி வருகிறோம்.

விரைவில் பணி சிறப்பாக நடக்க வேண்டும். என் வாழ்க்கை முடியுமுன்பு இதனை கண்குளிர கண்டுவிட்டால் ஜென்மசாபல்யம் :)

இப்படி மனு மனுவாக எழுதி அனுப்ப மட்டுமே முடிந்தது. முதலமைச்சருக்கு இணையம் வழி மனு அனுப்பியதால் மூன்று வருட வாடகைப் பணம் வந்து சேர்ந்தது ஒரு மகிழ்ச்சியான விஷயம். அதையும் வலைப்பதிவிலும் பேஸ்புக்கிலும் எழுத முடிந்தது.

*

நல்ல மனம் கொண்ட சுப்ரமணியின் தாயாதியினர், ஆயிரம் ரூபாய் வாடகைப் பணத்திலேயே நூலகத்தை தங்கள் கட்டடத்தில் வைத்திருக்க ஒப்புக்கொண்டதால் நூலகம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வந்தது.

ஆனாலும் சொந்த இடம் கிடைத்த பாடில்லை.

சொந்த இடத்திற்கான அடுத்த இடம் தேடும் பணியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் எம் எல் ஏ அவர்கள் ஆர்வத்துடன் ஒத்துழைக்க வந்தார் என்பது எதிர்பாராமல் நம்ப முடியாத விஷயமாக அமைந்தது.
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
miga arumai sis . 3varuta vadakai pakki oru vazhiya kidaithathu........ ini sontha idathukana muyarchi... surekhavin oyatha poratathirku kidaitha veti than thangapandian udava munvaruvathu so nice sis
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
miga arumai sis . 3varuta vadakai pakki oru vazhiya kidaithathu........ ini sontha idathukana muyarchi... surekhavin oyatha poratathirku kidaitha veti than thangapandian udava munvaruvathu so nice sis
Thank you so much ma Sridevi.

Innum irandu chapter il novel mudikkanum
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
Happa 23 yrs
Padikkum pothe thalai suththudhu
Namma government ippadi irrundha makkal eppo munneruradhu?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top