• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 21

கல்லூரி இல்லையென்றதும் கடற்கரைக்கு வந்த கமழினியின் மனம் ஆள் ஆரவாரம் இல்லாத இடத்தை நோக்கி செல்ல தூண்டியதும் கடலை வேடிக்கைப் பார்த்தபடியே மெல்ல மணலில் நடந்தாள் கமழினி..

அவளின் மனம் ஆழ்ந்த யோசனையில் இருந்தது.. கால்கள் தன்போக்குள் செல்ல மணலில் கால் புதைய நடந்தவளின் காதுகளில் விழுந்தது கடலலையின் ஆர்ப்பரிக்கும் சத்தம்.. அந்த சத்தம் எல்லாம் அவளின் கவனத்தை கொஞ்சம் கூட கலைக்கவே இல்லை..

‘நான் முதல் நாள் பார்த்த துகிலனுக்கும், இப்போ நேற்றில் இருந்து நான் பார்க்கும் துகிலனுக்கும் ஆயிரம் வித்தியாசம்..? இவனின் நிஜமுகம் இதுதானா..?’ என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது.. அவனின் மனம் மனதில் தோன்றிய மறுநொடியே பூவிழியின் நினைவும் வந்தது..

அவளின் நினைவு வந்த மறுநொடி, ‘அக்கா ஏன் நேற்று சரியாவே பதில் சொல்லல..? அவளோட பதில் எதுவுமே நம்பும்படி இல்லையே..?!’ என்ற யோசனையில் நடந்தவள் ஆள்ஆரவாரம் இல்லாத இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.. அப்படியே மணலில் அமர்ந்தவளின் சிந்தனை மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது..

அவளின் மனம் என்னதான் சிந்தனை செய்தாலும் அவளின் விபத்து எங்கே எப்படி நேர்ந்தது என்ற கேள்விக்கு மட்டும் அவளுக்கு விடையே தெரியாமல் மீண்டும் மீண்டும் யோசித்தாள்..

துகிலனின் இந்த மனமாற்றம், பூவிழி துகிலனின் நட்பு, வசந்த் மற்றும் துகிலனின் சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் தனித்தனியாக நிற்க அதை யோசிக்க ஆரம்பித்தவளின் தலையே வெடிப்பது போல இருக்க தன்னுடைய தலையை இரண்டு கைகளில் தங்கியபடியே அமர்ந்தாள்..

மணலில் அமர்ந்த கமழினி பிறகு ஏதோ எண்ணம் தோன்ற தன்னுடைய பேக்கை திறந்து அதில் இருந்த போட்டோ ஆல்பத்தை கையில் எடுத்தாள்.. அவளின் விழிகள் இரண்டும் தன்னுடைய கையில் இருந்த போட்டோ ஆல்பத்தில் இருந்தது..

அவளின் மனம் முழுவதும் பலவகையான குழப்பங்கள்... அந்த ஆல்பம் அவளின் சிந்தனையைத் தூண்டியது... ‘யாரும் இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும்..’ என்று நடந்தவளின் கவனம் முழுக்க ஆல்பத்தில் இருந்ததால், ‘கடற்கரையில் யார் யார் இருக்காங்க..? என்ன நடக்கிறது..?’ என்ற சிந்தனை இன்றி நடந்தவள் யாரும் இல்லாத ஒரு இடத்தில் வந்து அமர்ந்தாள்..

அவளின் கைகள் தானாகவே ஆல்பத்தைப் புரட்ட அதில் இருந்த சில புகைப்படங்கள் அவளின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியது.. சிலது அவளின் எண்ணத்தை தூண்டியது.. சிலது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..

அந்த போட்டோகளைப் பார்க்க பார்க்க அவளின் விழிகள் இரண்டும் விரிந்தது.. எந்த அளவிற்கு அவளுக்கு ஆச்சர்யமாக இருந்ததோ அதே அளவு அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் படையெடுத்தது..

அவளின் கைகள் தானாக எழுந்து அந்த போட்டோகளை வருடியது.. அவளின் கண்களில் குழப்பத்தை மீறிய ஒரு சிந்தனை.. அந்த சிந்தனைக்கு காரணம் எல்லாம் அந்த ஒரு போட்டோ மட்டுமே.. அந்த போட்டோவில் துகிலனும், வசந்த்தும் கடற்கரையில் சிரித்த வண்ணம் அருகருகே அமர்ந்திருந்ததுதான்..

அதை பார்த்த கமழினி அடுத்த போட்டோவைப் பார்க்க அதில் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்த துகிலனின் தோளில் சாய்ந்திருந்த கமழினியின் முகத்தை அழகாக போட்டோ எடுத்திருந்தனர்..

அதையெல்லாம் பார்த்த கமழினி, “துகிலனுக்கு ஏற்கனவே என்னை தெரியுமா..?” என்று தனக்குதானே கேட்டுக் கொண்டாள்..

அந்த கேள்விக்கு பதிலாக அவளின் புன்னகை முகமே அவளின் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த அவளின் மனம் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பிக்க அவளின் ஆழ்மனம் மெல்ல மெல்ல தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு அவளை இழுக்க அவளோ அந்த கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் அதனிடமிருந்து தப்பிக்க போராடினாள்..

நாம் காண்பது எல்லாம் கண்ணின் வழியாக பதிவு செய்யபட்டு அது நினைவுகளாக மூளையில் சேமிக்கிறது.. அந்த நினைவுகளை சேமிக்கும் அடுக்குகளுக்கும் மனதிற்குள் சில ஒற்றுமைகள் உண்டு.. அதாவது மனம் எதை எல்லாம் வேண்டாம் என்று ஒதிக்கி வைக்கிறதோ அந்த நினைவுகளை எல்லாம் ஒதுக்கு வைத்துவிடும்..

இந்த ஒற்றுமைதான் சில இடங்களில் நாம் பார்க்கும் காட்சிகள், ‘இதை நான் எங்கோ பார்த்த நினைவு..’ என்று யோசிப்போம் இதற்கு எல்லாம் நமது நினைவு அலைகள் தான் காரணம்.. தான் சேமிக்கும் நினைவுகளை தேவை இல்லையென்று ஒதுக்கினால் அது அந்த நினைவுகளை ஒதுக்கு வைத்துவிடும்..

மீண்டும் நாம் ஆழ்ந்து சிந்திக்கும் வேலையில் மனதிற்கும், மூளைக்கும் பெரிய போராட்டம் நடக்கும்.. அந்த போராட்டத்தில் தான் இப்பொழுது சிக்கி இருக்கிறாள் கமழினி.. அவள் சிந்தனை செய்ய செய்ய அவளின் நினைவுகள் மீண்டும் உயிர்பெற்று மனதின் அடியாழத்தில் இருந்து எழுகிறது..

அவளின் நினைவுகளுக்கு மூளை உயிர் கொடுக்க நினைக்கும் பொழுது அவளின் மனம் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது.. அதுதான் அவளுக்குள் பெரிய பிரளயமே நடந்துக் கொண்டிருந்தது.. சிந்தனையை மீண்டும் திசை திருப்ப கவனத்தை ஆல்பத்தில் செலுத்தினாள் கமழினி..

அவளின் மனம் அடுத்த போட்டோவைப் பார்க்க அதில் துகிலன் வசந்தின் தோளில் கைபோட்ட வண்ணம் அமர்ந்திருக்க இருவரின் முகத்திலும் புன்னகை அழகாக அரும்பியிருக்க அதை போட்டோ எடுத்து வைத்திருந்தனர்..

‘இவங்க இருவரும் நண்பர்கள் போல இருக்காங்க..? ஆனால் ஏன் என்னிடம் நடிக்கிறாங்க..? அதுவும் ஒரு பக்கம் உயிர் நண்பன் வசந்த்.. இன்னொரு பக்கம் கட்டிய கணவன் துகிலன்..’ என்று அவளின் மனம் எங்கெங்கோ சென்றது.. ஆனால் அதற்கு விடை மட்டும் கிடைக்கவே இல்லை..

இப்படி வரிசையாக ஆல்பத்தில் உள்ள போட்டோவைப் பார்த்துக் கொண்டே வந்த கமழினி ஆல்பத்தை மூடி வைக்கும் பொழுது அவளின் புருவங்கள் இரண்டும் சிந்தனையில் சுருங்கி இருந்தது.. அவள் நிமிர்ந்து கடலைப் பார்த்தாள்..

காலை வெயிலில் அலையலையாய் ஆர்ப்பரித்த கடலின் அலைகளைப் பார்த்தவளின் மனதில் கேள்விகள் அணிவகுத்து நின்றது.. ‘வசந்த் ஏன் என்னிடம் உண்மையை மறைத்தான்.. இந்த திருமணம் ஏன் நடந்தது..?’ என்று சிந்தனை திருமணத்தின் பக்கம் திரும்பியது..

அப்பொழுது அவளின் மனம் அந்த ஆல்பத்தில் பார்த்த தன்னுடைய போட்டோவை சுட்டிக்காட்ட, ‘நான் துகிலனை காதலித்தேனா..? அதைதான் பெண்பார்க்க வந்த அன்று சொன்னானா..?’ என்று தனக்குள் கேள்விகளைத் தொடுத்தாள்..

‘நீ விரும்பாமல் தான் அவனை திருச்சியில் இருந்து கன்னியாகுமரி அழைத்து வந்தாயா..?’ என்று அவளின் மனமே அவளை கேள்வி கேட்டது.. ஆனால் அந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை..

அதைப் பார்த்த அவளின் மனம், ‘நீ நிஜமாகவே அவனை உயிருக்கு உயிராக விரும்பினாய்..’ என்று சொல்லவும் அவளின் கைகள் மீண்டும் அந்த ஆல்பத்தைத் திறந்து அந்த போட்டோவைப் பார்த்தாள்.. அந்த போட்டோவைப் பார்த்தவளின் விழிகள் அதை ஆழ்ந்து ரசித்தது...

எப்பொழுதும் போலவே முழு கம்பீரத்துடன் மணலில் அமர்ந்திருந்த துகிலனின் முகம் முழுவதும் சந்தோஷமாக அமர்ந்திருந்த துகிலனின் தோளில் கொடி போல சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த தன்னை அவளின் கைகள் ஆசையோடு வருடியது..

‘இது எல்லாம் உண்மை என்றால் இவங்க எல்லாம் ஏன் என்னிடம் மறைக்கணும்..? துகில் என்னை விரும்பி இருக்கிறான் என்றால் அவன் என்னிடம் உண்மைச் சொல்ல வேண்டியதுதானே..?’ என்றவள் யோசிக்க அவளின் சிந்தனைக்குள் வந்தான் வசந்த்..!

‘சரி அப்படியே இருந்தாலும் வசந்த் என்னிடம் உண்மையச் சொல்ல வேண்டியதுதானே..? இவன் எதற்கு என்னிடம் உண்மையை மறக்கிறான்..?’ என்று யோசிக்க தன்னுடைய உடல்நிலை பற்றிய சிந்தனையே அவளுக்கு வரவில்லை..

அவளைப் பொறுத்தவரையில் அவள் கண்விழித்து பார்க்கும் பொழுது அவளின் சிந்தனையில் இருந்தது எல்லாமே வசந்த் மட்டுமே.. அவளுக்கு அடிப்பட்டு விட்டது என்று மட்டும் சொன்னார்களே தவிர, அது எங்கே எப்படி நடந்தது இது எதுவும் அவளுக்கு தெரியாது.. அவள் கேட்கவும் இல்லை.. அவர்கள் சொல்லவும் இல்லை..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவளின் மனம் மேலும் குழம்பியது.. ‘துகிலனும், வசந்த்தும் அடிக்கடி தொட்டதற்கு எல்லாம் சண்டை போடுவதே..’ அவளின் குழப்பத்திற்கு முழுக்காரணம்...! அந்த சண்டையை நினைக்கும் பொழுது எல்லாம் துகிலனின் முகமாற்றம் அவளின் மனதில் ஆழமாகப் பதிய அந்த பார்வை அவளின் நினைவுகளை மெல்ல மெல்ல தூண்டியது..

அவளின் மனதில் இருந்த பழைய நினைவுகள் ஆர்பரித்து கடலலை போலவே எழுந்தது.. காலையில் இருந்து அவள் சாப்பிட்டாமல் இருந்ததும், மாத்திரை போடாமல் இருந்ததும் அவளின் தலைவலியை அதிகமாக மாற்றிவிட சிந்தனை எல்லாம் கடந்தகாலத்தை நோக்கி செல்ல நினைக்கும் வேலையில் அவளின் விழிகள் வேறு திசையை நோக்கியது..

அவளின் மனதில் ஏற்பட்ட போராட்டத்தில் இருந்து தப்பிக்க விழிகளைத் திருப்பிய கமழினியின் கண்களில் விழுந்தனர் மூவரும்..! முதலில் அவர்களை கவனிக்காத கமழினி மீண்டும் அவர்களை ஆழ்ந்து பார்க்க அந்த மூவரையும் அடையாளம் கண்டு, ‘இவங்க இங்கே என்ன பண்றாங்க..?’ என்ற கேள்வியுடன் அவர்களை நோக்கி எழுந்து சென்றாள்..

மாணிக்கத்திற்கு மகன் இல்லாத காரணத்தால் மருமகன் என்ற முறையில் அவருக்கு திதி கொடுத்துவிட்டு பிண்டத்தைக் கரைக்க அவன் கடலில் கால்பதிக்கும் வேலையில் அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தவளின் பார்வை எல்லாம் அவர்கள் மூவரின் மீதும் இருந்தது..

‘இவங்க மூவர் மட்டும் இங்கே வந்திருக்க காரணம் என்ன..? வசந்த் என்ன செய்கிறான்..’ என்று ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து கவனித்த வண்ணம் வந்தவளின் விழிகளில் விழுந்தாள் பூவிழி.. அவளின் கண்கள் இரண்டும் கலங்குவதைப் பார்த்தாள் கமழினி..

அவளின் முகத்தைப் பார்த்த கமழினி, ‘இவள் எதுக்கு இப்படி கண்ணு கலங்குகிறா..?’ என்ற கேள்வியுடன் அவளின் விழியைத் தொடர்ந்து தன்னுடைய பார்வையைச் செலுத்திய கமழினியின் கண்களில் மாணிக்கத்தின் போட்டோ கண்ணில்பட்டது..

அதைப் பார்த்தும், ‘இது.. இது.. இது பெரியப்பா தானே..?’ என்று அவரை அடையாளம் கண்டுக்கொண்ட கமழினியின் கால்கள் இரண்டும் நின்ற இடத்திலேயே வேரோடி போக அவளின் தலையில் இடியே இறங்கியது.. அவளின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் இருந்தது..

அவளின் கண்கள் இரண்டும் அந்த போட்டோவை ஆழ்ந்து பார்க்க அவளின் மனம், ‘இல்ல என்னோட பெரியப்பாவுக்கு எதுவும் ஆகல..’ என்று மனதிற்குள் மீண்டும் மீண்டும் சொன்னாள்.. ஆனால் அவளின் மனம் அதை நம்ப மறுக்க அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாகச் சென்றது..

அவளின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் அங்கே நடப்பதை அவளால் நம்ப முடியாமல் அருகில் சென்றாள்.. சிரித்த முகமாக புகைப்படத்தில் இருந்து புன்னகைத்த தன்னுடைய பெரியப்பாவைப் பார்த்தவளுக்கு அந்த உண்மையை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் அப்படியே சிலையென்று நின்றாள்..

அவளின் மனம், ‘இல்ல இது என்னோட பெரியப்பா இல்ல.. என்னோட பெரியப்பா ரொம்ப நல்ல இருக்கிறார்..’ என்றவள் கண்கள் இரண்டும் கண்ணீரில் கலங்கியது.. அந்தநேரம் அவளின் சிந்தனைகள் விழித்துக்கொள்ள அவளின் மனம் அந்த நினைவுகளை நோக்கி அவளை இழுத்துச் சென்றது..

வீட்டின் நடுஹாலில் வெள்ளை வேஷ்டியில் தன்னுடைய பெரியப்பா கண்மூடி படுத்திருப்பது போலவும் அவரைச் சுற்றிலும் எல்லோரும் அழுவதை போல அவளின் நினைவு அலைகள் அவளுக்கு அவரின் இறப்பை காட்டிக்கொடுத்தது..

அவளின் மனம் நிஜத்திற்கும் நினைவுக்கும் இடையே ஊஞ்சலாட அவளால் அவளின் பெரியப்பா இறப்பை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் தவிக்க அந்த தவிப்பு, ‘இல்ல எங்க அக்கா என்னிடம் பொய் சொல்ல மாட்டாள்.. அவள் நேற்று சொன்னாலே பெரியப்பா உயிரோடு இருக்கிறார் என்று என்னிடம் சொன்னாளே..’ என்று யோசித்தாள்..

அவள் யோசிக்கும் பொழுது எல்லாம் அவளின் பெரியப்பா இறந்தது போல அவளின் மனகண்ணில் படம் போல அவளின் நினைவுகள் படையெடுக்க, “இல்ல என்னோட பெரியப்பா சாகல..” என்று தன்னால் எவ்வளவு வேகமாக காத்த முடியுமோ அந்த அளவுக்கு இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டு இரண்டு கைகளையும் காதில் வைத்து அடைத்த வண்ணம் தன்னால் முடிந்த அளவு முழுபலத்தோடு கத்தினாள் கமழினி..

பிண்டத்தை கரைத்துவிட்டு கரைக்கு வந்த வசந்த், கரையில் நின்றிருந்த துகிலன், பூவிழி மூவருக்கும் அவளின் குரல் கேட்டுவிட வேகமாக திரும்பிச் சுற்றும் முற்றும் பார்க்க அவள் தங்களுக்கு அருகில் நின்று இவ்வளவு வேகமாக கத்தியதைப் பார்த்ததும் மூவரும் அதிர்ந்தனர்.. இதில் யாருடைய அதிர்வு பெரியது..? யாருடைய அதிர்வு சிறியது என்று யாராலும் கணிக்க முடியாமல் போனது..

மூவரும் திகைப்புடன் அவளைப் பார்க்க துகிலன், ‘இது எல்லாம் நடக்கும் என்று நினைத்தேன்.. அதே போலவே நடந்துவிட்டதே..? ஒருவேளை வசந்த் சொன்னது போல அவளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமோ..?’ என்று மனதில் பயத்துடன் நினைதத்தவன் அவளை நோக்கி வேகமாக ஓடினான்..

வசந்தோ, ‘துகில் சொன்னது போல எல்லாமே நடந்துவிட்டது.. இதன்மூலம் இவளுக்கு எல்லாம் சரியாகிவிடுமா..?’ என்ற யோசனையுடன் அவளை நோக்கி வேகமாக சென்றான்.. இன்னும் அதிர்வில் இருந்து வெளிவராமல் இருந்தாள் பூவிழி..

இருவரும் சேர்ந்து கமழினியை அடையும் முன்னே கண்கள் இரண்டையும் திறந்த கமழினி வேகமாக ஓடிச்சென்று பெரியப்பாவின் போட்டோவின் மீது போடப்பட்டிருந்த ரோஜாப்பூ மாலையை ஆவேசத்துடன் கழட்டி எறிந்தாள்..

பூமாலையைக் கழட்டி எறிந்த கமழினியை துகிலனும் வசந்த்தும் அவளைத் திகைப்புடன் பார்க்க பெரியப்பாவின் போட்டோவை கையில் எடுத்தவள் வேகமாக பூவிழி பக்கம் திரும்பி, “உனக்கு என்னடி பைத்தியா..? பெரியப்பா உயிரோடு இருக்கும் பொழுதே காரியம் பண்ணிட்டு இருக்கற..?” என்று ஆவேசத்துடன் கேட்டாள்..

அவளின் கேள்வியில் அவளின் பக்கம் திரும்பிய பூவிழியின் கண்ணில் பளார் என்ற ஒரு அறையை விட்டவள் கமழினி.. இந்த நிகழ்வை அங்கே யாரும் எதிர்பார்க்கவே இல்ல.. பூவிழியின் கன்னங்கள் இரண்டும் தீயென ஏறிய நிமிர்ந்து கமழினியைப் பார்த்தாள் பூவிழி..

அவளின் திகைத்த முகத்தைக் காணும் முன்னே மயங்கிச் சரிய ஆரம்பித்தாள் கமழினி.. காலையில் இருந்து குழம்பி இருந்த அவளின் மனதிற்கு இந்த நிகழ்வு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க அதிகப்படியான அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத கமழினி மெல்ல சரிய ஆரம்பித்தாள்..

அவள் கீழே சரிவதைப் பார்த்த துகிலன் வேகமாகச் சென்று அவளைத் தாங்கி பிடித்தான்.. அவன் தன்னுடைய மடியில் அவளை முகத்தை வைத்த துகில், “தாமரை.. தாமரை.. இங்கே கண்ணைத் திறந்து என்னை பாருடா..” என்று அவளின் கன்னத்தில் தட்டினான்..

அதற்குள் அவளின் அருகில் வந்த வசந்த் கமழினியின் கைகளைப் பிடித்து பல்ஸ் பார்த்த வசந்த்தை பதட்டத்துடன் பார்த்தான் துகில்.. அவனின் பதட்டம் பூவிழிக்கும் தொற்றிக்கொண்டது.. அவளும் வசந்தின் பதிலுக்காகக் காத்திருக்க துகிலனை நிமிர்ந்துப் பார்த்தான் வசந்த்..

“இவளுக்கு சாதாரண மயக்கம் தான் துகில்.. இவளைத் தூக்குடா நாம் வீட்டிற்கு போகலாம்..” என்று சொன்னவன் பூவிழியின் முகத்தைப் பார்க்க அவளின் கன்னம் கமழினியின் அடியில் சிவந்திருந்தது.. அவன் சொன்னதைக்கேட்டு துகிலனின் மனதில் நிம்மதி பரவியது..

ஒரு குழந்தையைக் கையில் ஏந்துவது போல கமழிணியைக் கையில் ஏந்திக்கொண்டு முன்னே நடந்தான் துகில்.. அவனின் பின்னோடு நடந்தனர் வசந்த் மற்றும் பூவிழி இருவரும்..! அவளுக்கு பழைய நினைவுகள் வருமா..?

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கேட்டவுடனே அப்டேட் கொடுத்த
நம்ம சந்தியா செல்லத்துக்கு
முதலில் ஒரு பெரிய "ஜே"
போடுங்கப்பா
சந்தியா டியருக்கு ஜே ஜே
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கேட்டவுடனே அப்டேட் கொடுத்த
நம்ம சந்தியா செல்லத்துக்கு
முதலில் ஒரு பெரிய "ஜே"
போடுங்கப்பா
சந்தியா டியருக்கு ஜே ஜே
நான் சொன்னதை செய்தேன் இதில் என்ன பானும்மா இருக்கு..?
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis

nice ud sis..

Parthuta parthuta.. Kamazhini parthuta.. Perippa photovai.. Yapa sema aarai da poo valikuthada..

Manasa pathi psychologicalah super solirukinga sis..

Romba kasta padura kamazhini sis pavam.... Memory recoverahgum bt avloda reaction ena wat nxt waiting sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top