• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நான் மீண்டும் வந்துவிட்டேன் தோழிகளே... ஸாரிப்பா ஒருவாரமாக ud கொடுக்க முடியாமல் போச்சு.. நான் உங்க எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்ணினேன்.. லேப்டாப் சரி பண்ணிடேன் தோழிகளே.. அது சரியானதும் என்னை தேடிட்டு இருந்தவங்க எல்லோருக்கும் இன்னைக்கு ud உடன் உங்களைக் காண வந்துவிட்டேன்...

அத்தியாயம் – 25

அன்று ரயில் பயணம் ஒருவருக்கு ஒருவர் விடைகொடுத்து அனுப்பிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.. அந்த பிரிவுக்கு பிறகு எல்லோரும் தங்களின் படிப்பில் கவனம் செலுத்தினர்...

வசந்த், கிருஷ்ணா இருவரும் ஒரே கல்லூரி என்பதால் அவர்கள் இருவரும் சந்திக்க அதிகம் வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.. கண்ணன் படிப்பது இன்ஜினியரிங் என்பதால் அவனும் தன்னுடைய படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினான்..

துகிலன் கேட்கவே வேண்டாம் அவனும் படிப்பை தன்னுடைய முழு மூச்சாக எடுத்து படிக்க ஆரம்பித்தான்... கமழினியும் தன்னுடைய படிப்பை தவிர மற்ற எதையும் நினைக்காமல் இருந்தாள்.. நாட்கள் தெளிந்த நீரோடை போலவே சென்றது..

ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாற்றங்கள். முதலில் துகிலனிடம் பல மாற்றங்கள். அதில் முதல் மாற்றம் கமழினியின் மனதை கலைக்க நினைக்காத துகிலன் அன்னையை அழைத்துச் சென்று விடுவதோடு சரி மாலை அவரை அழைத்துச் செல்ல வருவதே இல்ல.. அதையெல்லாம் கொஞ்ச நாளாகவே கவனித்த சாரதா அதுபற்றி மகனிடம் கேட்க நினைத்தார்..

மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்த துகிலன் குளித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி கீழே வரும் வரையில் சாரதா வெகு அமைதியாக இருந்தார்.. அவரின் முகம் பார்த்து கேள்வியாக இடது புருவம் உயர்த்தினான் துகிலன்..

பிறகு அவன், “அம்மா என்னம்மா ரொம்ப அமைதியாக இருக்கீங்க..?” என்று கேட்டதும் மகனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர், “டேய் துகில் இப்போ எல்லாம் நீ ஏன் ஸ்கூல் பக்கமே வருவது இல்ல..?” என்று குரலில் ஒரு அழுத்தத்துடன் கேட்டார்.. ஆனால் அவரின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இன்றி சாதாரணமாகவே இருந்தது...

‘இவன் கன்னியாகுமரி போயிட்டு வந்ததில் இருந்தே ஒரு மார்க்கமாகவே இருக்கிறானே..? என்னவாக இருக்கும்..?’ என்று மனதினுள் யோசித்தார் சாரதா.. அவரின் யோசனையில் அவன் நகைக்கடைக்கு சென்று வந்த நாளும் நினைவு வந்தது..

‘எதுவாக இருந்தாலும் அவனே முடிவெடுக்கட்டும்..’ என்று நினைத்தவர் மகனின் முகத்தைப் பார்க்க அவனோ, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கும்மா.. மாலைநேரம் வருவதற்கு நேரம் இல்லம்மா.. இந்த இயர் பைனல் அதனால் படிக்கவே நேரம் சரியாக இருக்கு..” என்று சொல்ல அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார்..

அவரின் பார்வைக்கு எதிர்பார்வை பார்த்த துகிலன், “அம்மா நான் எது செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும் என்று புரிஞ்சிக்கங்க அம்மா..” என்றவன் சொல்ல, “எதுவாக இருந்தாலும் நல்லதாகவே நடக்கும் துகில்.. கவலைப்படாமல் நீ உன்னோட படிப்பை பாருடா..” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்..

அவரின் மலர்ந்த முகமே அவர் தன்னை புரிந்து கொண்டதை உணர்ந்தவன், “தேங்க்ஸ் அம்மா..” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான்.. வீட்டில் இருந்து கிளம்பிச் செல்லும் மகனையே பார்த்தவர், ‘நீ என்னோட மகன்டா நீ யாரோட வாழ்க்கையையும் வீண் பண்ண மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..’ என்று நினைத்தவர் பள்ளிக்கூடம் கிளம்பிச் சென்றார்..

அன்றிலிருந்து மகனை எதிர்பார்க்காமல் பஸில் வீட்டிற்கு வர ஆரம்பித்தார் சாரதா.. துகிலன் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க, ‘அவனின் மனதில் கமழினியைப் பார்க்க வேண்டும்..’ என்ற எண்ணம் எழுந்தாலும் அவளைப் பார்க்காமல் இருக்க பழகிக்கொண்டான்..

இரண்டாவது மாற்றம் கமழினி. அவளுக்கு இந்த பன்னிரண்டாம் வகுப்பு என்பது துகிலனும், வசந்த்தும் சொன்னதும் போலவே அவளின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்பதால் மிகுந்த கவனத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.. ‘அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு படித்தாளா..??’ என்று கேட்டாள் கண்டிப்பாக இல்லையென்றே சொல்வாள்..

காரணம் வசந்த் அறிவியலில் இருக்கும் சிலபல ஈஸியான வழிமுறைகளை கடைப்பிடித்து படிக்க ஆரம்பித்ததால் அவளுக்கு படிப்பு பெரிய கஷ்டமாகவே தெரியவில்லை என்று சொல்லலாம்.. எப்பொழுதும் போல இல்லாமல் ரொம்ப கவனமாக அதே அளவு அலட்டிக்கொள்ளாமல் படித்தாள்..

கருத்தோடு படிக்கும் மகளைப் பார்த்த அழகர், வசந்த் மற்றும் கண்ணனை அழைத்து விசாரித்தார்.. அன்று மாலை கமழினியை அழைத்துச் செல்ல வந்த வசந்த், கண்ணன் இருவரையும் தனியே அழைத்துச் சென்றவர், “என்ன வசந்த் நடக்குது..?? கமழினி இப்போ எல்லாம் டவுட் கேட்பதே இல்ல.. ஆனால் இப்பொழுது விளையாட்டுத்தனம் இருந்தாலும் மார்க்கில் முழு கவனம் செலுத்துகிறாள்...!” என்று சந்தேகமாகவே கேட்டார்..

கண்ணனோ, ‘அவளுக்கு அட்வைஸ் கொடுத்த ஆள் அப்படி..’ என்று நினைக்க அவனின் என்ன ஓட்டத்தைக் கவனித்த வசந்திற்கு கூட சிரிப்பு வந்தது.. அவனோ அழகரிடம், “மாமா அவள் நன்றாக படிப்பது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா..?” என்று சிரிப்புடன் கேட்டான்..

“இல்லப்பா மகள் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்பது போல தெரிந்தது.. சரிப்பா போகும் பொழுது அவளை பூங்காவுக்கு அழச்சிட்டு போங்க..” என்று சொல்ல சரியென்று தலையசைத்த இருவரும் தங்களுக்கு சிரித்த வண்ணம் வந்தனர்.. அன்றிலிருந்து மக்களைப்பற்றி அழகர் அதிகம் கவலைப்படாமல் இருந்தார்..

அடுத்த மாற்றம் கண்ணனிடம், ‘படிப்பு முடித்து பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல ஒரு வேலையில் இருக்க வேண்டும்..’ என்று நினைத்தவன் தன்னுடைய திறமைகளை வளர்ந்துக் கொள்ள ஆரம்பித்தான்..

வசந்த் கன்னியாகுமரியில் இருந்து வந்ததில் இருந்தே அவனுக்கு பூவிழியின் நினைவு அடிக்கடி எழுந்தது.. அதற்கு காரணம் அவள் வேறு யார் என்ன சொன்னாலும் அதை நம்பிக்கொண்டு அவள் வருந்துவது பத்தாது என்று தங்களையும் சேர்ந்தது வருத்துவாளே என்ற எண்ணம் தான் அவனின் மனதில் இருந்தது..

வசந்த் நினைத்தால் அவளிடம் தன்னுடைய காதலை உணர்த்த அவனுக்கு ஒரு நொடி போதும் ஆனால் அதில் அதிகமாக புரிதல் இருக்காது.. காதல் என்பது ஒருவரின் மனத்தை மற்றவர் படிக்கும் அளவுக்கு ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே அது கடைசி வரைக்கும் நிலைக்கும் என்று அவளை விட்டு விலகி’ நிற்கிறான் வசந்த்.. தன் மனதில் இருக்கும் பூவிழி நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய படிப்பை கவனித்தான் வசந்த்..

நாட்கள் வேகமாகச் சென்றது.. ரயில் பயணம் முடிந்தது பிரிந்தவர்கள் எல்லோரும் அடுத்து சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது என்பதைவிட அவர்களாக அந்த வாய்ப்பை உருவாக்கவில்லை என்று சொல்வது சரியாக இருக்கும்..

அன்று மாலை ஏனோ துகிலனுக்கு கமழினியின் நினைவாகவே இருக்க கல்லூரியில் இருந்து கிளம்பியவன் நேராக வந்தது பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டான்.. அங்கு வந்ததும் தான் என்ன காரியம் செய்திருக்கிறோம் என்று அவனுக்கு புரிந்தது..

‘திடீரென அம்மா வெளியே வந்தால் தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு..’ என்று நினைத்தவன் உடனே தன்னுடைய செல்லை எடுத்து அன்னைக்கு அழைத்தான்..

மறுப்பக்கம் அழைப்பை ஏற்ற சாரதா, “சொல்லு துகில்..” என்று சொல்ல, “அம்மா நான் இந்தபக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. நீங்க இணைக்கு பஸில் போகவேண்டாம்.. நான் உங்களை அழைச்சிட்டுப் போறேன்..” என்று சொல்லவும், “ம்ம் சரிப்பா..” என்று சொன்னவர் அழைப்பைத் துண்டித்தார்..

அப்பொழுது கமழினியை அழைத்துச் செல்ல வந்த வசந்த் துகிலனைக் கண்டதும், “என்னடா இவன் இங்கே நிற்கிறான்..?” என்று கேட்டதும் அப்பொழுதுதான் துகிலனைப் பார்த்த கண்ணன், “அவங்க அம்மா இங்கேதான் டீச்சராக வேலை பார்க்கிறாங்க வசந்த்..” என்று சொல்லிவிட்டு பைக்கில் இருந்து இறங்கினான்..

கண்ணன் சொன்னதும், ‘ஓ இப்படித்தான் துகில் கமழினியை பார்த்தானா..?’ என்று நினைத்தவனுக்கு அப்பொழுது விஷயம் புரிந்தது.. இத்தனைநாள், ‘துகில் ஏன் எங்களைத் தவறாக நினைக்க வேண்டும்..?’ என்ற கேள்வி அவனின் மனதின் ஓரத்தில் இருந்துக்கொண்டே இருந்தது.. அதற்காக விடை இன்றுதான் வசந்திற்கு புரிய அவனின் மனதில் நிம்மதி பரவியது..

வசந்த் தன்னுடைய பைக்கை நிறுத்துவிட்டு, “துகில் எப்படிடா இருக்கிற..?’ என்று கேட்ட வசந்தின் குரலில் நிமிர்ந்துப் பார்த்த துகில், “டேய் வசந்த் எப்படிடா இருக்கிற..?” என்று புன்னகை மாறாத முகத்துடன் கேட்ட துகிலனைப் பார்த்து வசந்த் முகத்தில் புன்னகை அழகாக மலர்ந்தது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“நான் கேட்ட கேள்விக்கு முதலில் நீ பதில் சொல்லுடா..” என்று அதட்டினான் வசந்த்.. அவனின் அதட்டலுக்கு எல்லாம் பயப்படாத துகில், “என்னோட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுடா..” என்று சொல்ல இருவரையும் பார்த்த கண்ணன், “நீங்க இருவரும் ஆரம்பிச்சிட்டீங்களா..?” என்று கேட்டான்..

துகிலனும், வசந்த் இருவரும் சிரிக்க கண்ணனோ, “துகில் நாங்க தினமும் இங்கே வருகிறோம்.. உன்னை ஒருநாள் கூட இங்கே நாங்க பார்த்ததே இல்ல..” என்று கேட்டான்.. வசந்தின் மனதிலும் அதே கேள்வி எழுந்ததும், “ஆமாண்டா நாங்க தினமும் வருகிறோம் உன்னை ஒரு நாள் கூட இங்கு பார்க்கவே இல்ல..” என்று கேட்டான்..

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த துகில், “இல்லடா நான் இப்போ எல்லாம் இங்கே வருவதே இல்ல.. அம்மாவை பஸில் வர சொல்லிவிட்டேன்..” என்று சொன்னதும் வசந்த் மட்டும் இல்லாமல் கண்ணனுக்கும் ஆச்சர்யமாக இருந்தது..

இருவரின் திகைத்த முகத்தைப் பார்த்த துகில், “ஒரு வாக்கு கொடுப்பது பெருசு இல்லடா.. அதை கடைசிவரை காப்பாற்றனும்..” என்று சொல்ல மற்ற இருவரும் புரியாமல் நின்றிருக்க அப்பொழுது வெளியே வந்தார் சாரதா.. இவர்கள் மூவரும் நிற்பதைப் பார்த்து, ‘இது கண்ணன் அழகர் சாரோட மகன்.. இது வசந்த் இவன் கண்ணனோட பிரண்ட்..’ என்று இருவரையும் அடையாளம் கண்டுகொண்டார்..

பிறகு மகனைப் பார்த்தவர், ‘துகிலனுக்கு கிருஷ்ணாவைத் தவிர மற்ற யாரும் பிரண்ட் இல்லையே.. அப்படி இருக்க இவர்களோடு எப்படி பழகினான்..’ என்று யோசித்தவருக்கு ஏதோ புரிவதுப் போல இருந்தது..

தன்னுடைய கணிப்பை மனதிற்கு வைத்துக் கொண்டவர் அவர்களை நோக்கிச் சென்றார்.. சாரதா அருகில் வருவதைக் கவனித்த துகிலன், “அம்மா..” என்று அழைக்க அப்பொழுது சாரதாவைப் பார்த்த வசந்த், கண்ணன் இருவரும், “ஹலோ ஆண்ட்டி..” என்று சொல்ல இருவரையும் பார்த்து புன்னகைத்தார்..

அவர்களிடம் இருந்து பார்வையை மகனின் பக்கம் திருப்பிய சாரதா, “டேய் துகில் இவங்க இருவரையும் உனக்கு எப்படி தெரியும்.. நீங்க நின்று பேசுவதைப் பார்த்தால் இப்போ பழகியது போலவே இல்லையே..” என்று கேட்டதும் துகிலன் முகத்தில் துளியும் மாற்றம் இல்லை..

துகிலனை முகத்தை பார்த்த கண்ணனும், வசந்த்தும், ‘இவனுக்கு அம்மா என்று பயமே இல்ல.. ரொம்ப சாதாரணமாகப் பேசுகிறான்..’ என்று நினைத்தவர்கள் அவன் என்ன பதில் சொல்ல போகிறான் என்று துகிலனைப் பார்க்க அவன் சொன்ன பதிலில் இருந்தே அவனை ரொம்ப பிடித்து போனது இருவருக்கும்..!

“அம்மா நான் கன்னியாகுமரிக்கு சுரேஷ் திருமணத்துக்குப் போனேன் இல்ல.. அப்போ இருந்து இவர்களைத் தெரியும்..” என்று சொல்லவும், “அப்புறம் ஏண்டா என்னிடம் நீ சொல்லவே இல்ல..” என்று சிரிப்புடன் கேட்ட அன்னையைப் பார்த்த துகில், “நீங்க கேட்டிருந்தால் சொல்லிருப்பேன்..” என்றான் முகத்தில் தோன்றிய குறுஞ்சிரிப்புடன்..

இருவரையும் பார்த்த வசந்த், ‘நல்ல அம்மா.. தன்னுடைய மகனிடம் இப்படி குறும்பாகப் பேசுகிறார்கள்..’ என்று நினைக்க கண்ணனோ, ‘என்னோட அப்பா இப்படி இருந்தால் பரவல்ல..’ என்று நினைத்தான்..

பிறகு இருவரையும் பார்த்த சாரதா, “டேய் மகனே நீ வந்த வேலை இன்னும் முடியல போல..?” என்று வசந்த், கண்ணன் இருவரையும் பார்த்தபடியே கேட்டவர் முகத்தைப் பார்த்தவன், “அம்மா..” என்று சொல்ல வசந்த், கண்ணன் இருவருக்கும் சிரிப்பு வந்தது..

“நீங்க மூவரும் பேசிட்டு உன்னோட வேலையை முடித்துவிட்டு நீ வீட்டுக்கு வா.. நான் எப்பொழுதும் போலவே பஸில் போகிறேன்..” என்று சொன்னவர் அவர்களைக் கடந்து செல்ல துகிலனின் தோளில் கைபோட்ட வசந்த்,

“டேய் என்னோட அம்மா எல்லாம் இப்படி பேசி நான் பார்த்ததே இல்லடா.. உன்னோட அம்மா நிஜத்திலேயே ரொம்ப நல்லாவே உன்னை காலய்க்கிறாங்க..” என்று சொல்ல வசந்த் முதுகில் ஒன்று போட்டான் துகில்..

அப்பொழுது கமழினி வெளியே வருவது தெரிய வசந்த் பக்கம் திரும்பிய கண்ணன், “வசந்த் நீயும் துகிலும் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து பேசிட்டு இருங்க நான் கமழினியை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்..” என்று சொல்லி கண்ணன் திரும்ப, “கண்ணா என்னைப் பார்த்தாக தாமரையிடம் சொல்லாதே..” என்று சொல்ல சரியென்று தலையசைத்த கண்ணன் கமழினியை நோக்கிச் சென்றான்..

அவன் சென்றதும் பக்கத்தில் இருக்கும் பார்க் சென்ற வசந்த் துகில் இருவரும் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர, “துகில் உன்னை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்குடா..” என்று வசந்த் கூறினான்..

அவன் சொன்னதைக் கேட்ட துகில், “இல்லடா நானும் கமழினியைப் பார்க்க வரக்கூடாது என்றுதான் நினைத்தேன்.. ஆனால் இன்னைக்கு என்னவோ அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதும் கிளம்பி வந்துவிட்டேன்..” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்..

அவனைப் பார்த்த வசந்த், “அது எல்லாம் ஒன்றுமே இல்லடா..” என்று கூறியவன், “நீ அவளோட படிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்டா..” என்று கூறிய வசந்தைப் பார்த்த துகில், “டேய் எனக்கு கமழினியைப் பார்க்கணும் போல இருக்குடா..” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் திடீரென நிறுத்தினான்..

“அவளை நான் இங்கே அழச்சிட்டு வரேன் போதுமா..” என்று வாக்கியத்தை நிறைவு செய்தான் வசந்த்.. அவன் சொன்னதைக் கேட்ட துகில், “ஸாரிடா..” என்று தயக்கத்தோடு சொல்ல, “நீ யாரு என்னோட தோழியைத் திருமணம் செய்ய போகிறவன் உனக்கு இது கூட நான் செய்ய மாட்டேனா..?” என்று கேட்டு அவனின் தயக்கத்தை நீக்கினான் வசந்த்.. அப்புறம் பேச்சு திசை மாறியது..

கமழினிக்கு காலாண்டு தேர்வுக்கு உண்டான தேதிகள் கொடுக்கப்பட அன்று மாலை வீட்டிற்கு வந்தவள் தன்னுடைய அறைக்கு சென்று உடையை மாற்றிவிட்டு வேணி கொடுத்த பச்சைபயிரை சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று மறந்தாள்..

அவளின் பின்னோடு வீட்டிற்கு வந்த வசந்த், “அத்தை எங்கே என்னோட தோஸ்த்..?” என்று கேட்டதும், இரவு உணவுக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்த வேணி, “அவள் அவளோட அறையில் படிச்சிட்டு இருப்பாள் பாரு வசந்த்..” என்று சொல்ல வேகமாகப் படியேறிச்சென்ற வசந்த புன்னகையோடு பார்த்தவர் தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்..

அவளின் அறைக்குள் வந்த வசந்த், “கமழி..” என்று அழைக்க அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவளின் பார்வையில் ஏதோவொரு மாற்றம் இருக்க, ‘ஏன் இப்படி இருக்கா..?’ என்று யோசனையுடன் அவளின் அருகில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்த வசந்த், “என்ன ஆச்சு கமழி..?” என்று கேட்டான்..

அவனின் கேள்வியில் கையில் இருந்த புக்கை மூடி வைத்தவள், “வசந்த் எனக்கு துகிலைப் பார்க்கணும் போலவே இருக்குடா..” என்றவள் சோகமாகச் சொல்ல வசந்திற்கு சிரிப்புதான் வந்தது.. அவனின் மனதில், ‘எப்படிடா இதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கீங்க..?’ என்று துகிலனை நினைத்தவன் மனதிற்குள் சிரித்தான்..

அவன் சிரிப்பதைப் பார்த்த கமழினி தன்னை கேலி செய்து சிரிக்கிறான் என்று நினைத்தவள் அருகில் இருந்த கணக்கு புத்தகத்தை எடுத்து அவனின் வலது கரத்தில் ஒரு போடு போட்டாள்.. அதில் நினைவுக்கு வந்தவன் போல, “ஏண்டி இப்போ அடிச்ச..?” என்று கையைத் தடவிக்கொண்டு அவன் கேட்டதும் அவளோ அவனை முறைத்தாள்..

“ஏண்டா என்னைப் பார்த்தால் உனக்கு கிண்டலாக இருக்கிறதா..? நானே அவனை பார்த்து மூன்று மாசத்துக்கு மேல் ஆகிறது என்று வருதத்தில் இருக்கிறேன்.. நீ என்னை கிண்டலாக நினைத்து சிரிச்சிட்டு இருக்கிற..?” என்று கோபத்தில் திட்டினாள்..

அப்போது அந்தபக்கம் வந்த வேணி, “ஏய் கமழி படிக்காமல் அவனிடம் என்ன சண்டை போட்டுட்டு இருக்கிற..?” என்று கேட்டதும் அவளோ பல்லைக் கடித்துக்கொண்டு, “இனிமேல் போடலமா.. படிக்கிறேன்..” என்று சொன்னவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்திற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

தன்னுடைய மொத்த கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் பதில் சொன்ன விதத்தை நினைத்து அவனுக்கு மீண்டும் சிரிப்பு பீறிட்டது.. அவன் சிரிப்பதைப் பார்த்து, “டேய் வசந்த் என்னோட கோபத்தை கிளறதே.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..” என்று சொல்ல சிரித்த வசந்த்,

“நாளைக்கு பக்கத்தில் இருக்கும் பார்க் போகலாம்.. அப்புறம் வேண்டுமென்றால் கண்ணனிடம் போன் நம்பர் வாங்கி துகிலனை கூப்பிடலாம்..” என்று அவளுக்கு சமாதானம் சொல்ல அவளும் சரியென்று தலையசைத்தாள்..

மறுநாள் பக்கத்தில் இருக்கும் பார்க் செல்வது உறுதியானதும் நிம்மதியாகப் படிக்க ஆரம்பித்த கமழினியைப் புன்னகை மாறாத முகத்துடன் பார்த்தான் வசந்த்..!

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெல்கம், வெல்கம்,
சந்தியா ஸ்ரீ டியர்
உங்களோட லேப்டாப்
சரியாகிவிட்டதா?
அப்பாடா
இப்போத்தான் நிம்மதியாக
இருக்கு, சந்தியா செல்லம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top