• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 42

வசந்த் வெளியே செல்வதைப் பார்த்த பூவிழி, “நான் துகிலனுக்கு தோழியாக மாறியதே உங்களோட நட்பை அவனுக்கு புரிய வைக்கத்தான்.. அதுவும் வசந்தோட ஐடியாதான் கமழி..” என்று கூறியவள் கமழினியைப் பார்த்து, “உனக்கு கிடைத்த நண்பன் போல எனக்கும் ஒரு நண்பன் வேண்டும் என்ற சுயநலமும் மனதில் இருந்தது கமழி..” என்று கூறியவள் கமழினி முகத்தைப் பார்த்துவிட்டு கடந்த காலத்தின் நினைவுகளோடு மூல்கிப்போனாள்..

தன்னுடைய படிப்பு முடிந்ததும் கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலை தனக்கு கிடைக்க முதல் இரண்டு வருடமும் வேறொரு ஊரில் வேலை செய்துவிட்டு மூன்றாவது வருடத்தின் தொடக்கத்தில் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு சாரதாம்மா வேலை செய்யும் அதே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள் பூவிழி..

அவள் திருச்சி மாற்றலான விஷயத்தை அழகர் மூலம் வசந்திற்கு தெரியவர வசந்த் கிருஷ்ணாவிடம் உதவி கேட்டதும் அவன் சாரதாம்மாவை பூவிழிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.. சராதாம்மாவிற்கு ஏற்கனவே எல்லா விஷயமும் தெரிந்திருக்க தன்னுடைய மகனின் தவறைத் திருத்த நினைத்தவர் பூவிழியை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்..

அன்று மாலை நேரத்தில் பூவிழியோடு வீட்டிற்கு நுழைந்த தன்னுடைய அம்மாவைப் பார்த்த துகிலன், “அம்மா இவங்க யாரு..?” என்று கேட்டதும் பூவிழி துகிலனைப் பார்த்திட்டு அமைதியாக நிற்க, “இந்த பொண்ணோட பெயர் பூவிழி. இவளோட அப்பா வாத்தியார் கண்ணா.. உன்னோட அப்பாவிற்கு ரொம்பவே நெருங்கிய நண்பர். இப்போ இந்த பொண்ணு வீட்டில் இவளுக்கு என்று யாரும் இல்லை..” என்று சொல்லவும், “இவங்களோட அப்பா..” என்று கேட்டான் துகிலன்..

துகிலனின் பார்வை பூவிழியின் மீது இருந்தாலும் கவனம் முழுவதும் அம்மா சொல்லும் விஷயத்தில் இருந்தது.. துகிலனின் முகம் பார்த்த பூவிழி மனம், ‘கமழிக்கு ஏற்ற ஜோடிதான்..’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள்..

“இவளோட அப்பா இறந்துவிட்டார்.. இவளுக்கு என்று யாரும் இல்லடா.. நான் வேலை செய்யும் அதே பள்ளியில் தான் இவளும் வேலை செய்கிறாள்..” என்று பூவிழியைத் துகிலனுக்கு அறிமுகம் செய்தார்.. பூவிழியின் முகம் பார்த்த துகிலன் அதன்பிறகு எதுவும் கேட்காமல் அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்..

அவன் சென்றதும் தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றவர், “இது என்னோட அறை பூவிழி.. நீ இங்கேயே இருப்பது என்றாலும் இரு.. இல்ல உனக்கு என்று கொடுத்திருக்கும் வீட்டில் இருப்பது என்றாலும் இரு..” என்று சொல்லவும், “இல்லம்மா நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று சொல்ல சரியென்று கூறியவர் அறையைவிட்டு வெளியே சென்றார்..

சராதாம்மா அறையைவிட்டு வெளியே சென்றதும் பூவிழி துகிலனைப் பற்றி யோசிக்க அவனோ வெளியே கிளம்பிச் சென்றான்.. அவன் சென்றதும் அறைக்கு வெளியே வந்தவள், “அம்மா துகில் யார் கூடவும் பேச மாட்டாரா..?” என்று சாதாரணமாக கேட்டாள்..

அவளின் கேள்வியில் சிரித்த சராதாம்மா, “அவன் இதுவரை என்னிடமே சரி என்ற வார்த்தைக்கு அதிகமாக பேசியது இல்ல.. அப்புறம் எப்படிம்மா மற்றவர்களுடன் பேசுவான்..” என்று கேட்டவர், “அவனிடம் பேசும் பொழுது கொஞ்சம் சாக்கிரதையாக இரு.. இல்லையென்றால் எல்லாமே வீணாகப் போய்விடும்..” என்று எச்சரிக்கை செய்தார்..

அவர் சொன்னதை மனதில் நன்றாக பதியவைத்துக் கொண்டவளுக்கு சாரதாம்மாவை ரொம்பவே பிடித்துவிட காலையில் எழுந்ததும் குளித்து முடித்து வெளியே வருபவள் அவருக்கு தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்துவிட்டு அவருடனே பள்ளிக்கூடம் செல்வது இப்படியே நாட்கள் நகர்ந்தது.. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தவன் ஒருநாள் சந்தோசத்தோடு வீட்டின் உள்ளே நுழைந்தான்..

அவன் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது, “அம்மா எங்கே இருக்கீங்க.. இங்கே ஒரு நிமிஷம் வாங்க...” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவனை அமைதியாக பார்த்த வண்ணம் ஹாலில் அமர்ந்திருந்தாள் பூவிழி.. ஏதோ ஒரு புக் எடுக்க அறைக்குள் சென்றவர் வேகமாக வெளியே வந்து, “என்ன கண்ணா வரும் பொழுதே அழைப்பு எல்லாம் பலமாக இருக்கிறது..?” என்று கேட்டார்..

அவரின் கேள்வியில் சிரித்த முகத்தோடு, “அம்மா நாளைக்கு என்ன நாள் தெரியுமா..?” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் பூவிழி யோசிக்க சராதாம்மா நொடி கூட தாமதிக்காமல், “தாமரை இல்லம் தொடங்கி நாளையோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது இல்ல..” என்று கேட்டார்..

அவரின் பதிலில் துகிலனின் முகம் பிரகாசமாக, “சூப்பர் அம்மா.. நாளையோடு தாமரை இல்லம் தொடங்கி ஒருவருடம் முடிந்தது.. அம்மா நாளைக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.. அங்கே இருக்கும் எல்லோருக்கும் புதுத்துணி எடுத்து வைத்திருக்கிறேன்.. குட்டிஸ்க்கு நிறைய பொம்மை வாங்கி இருக்கிறேன்.. அப்புறம் நல்ல நர்ஸ் அவங்களை கவனித்து கொள்ள முழுநேரம் வேலைக்கு நியமித்து இருக்கிறேன்.. எல்லோருக்கும் மெடிக்கல் கேப் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்..” என்று அவன் பட்டியலிட அதை கேட்ட பூவிழிக்கு தலையே சுற்றியது..

அதைப் பார்த்த துகிலன், “பூவிழி என்னங்க உட்கார்ந்துகொண்டு தூங்கறீங்க..?” என்று கேட்டதும், “நீங்க சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும் அதே அளவு ஆச்சரியமாகவும் இருக்கு..” என்று கூறினாள் பூவிழி..

அவளின் முகத்தைப் பார்த்த துகிலன் தன்னுடைய அம்மாவின் பக்கம் திரும்பி, “அம்மா இவங்களிடம் நம்முடைய இல்லம் பற்றி சொல்லவே இல்லையா..?” என்று கேட்டதும், “எனக்கு நினைவு இல்லடா..” என்று கூறியவர், “நீ அவளிடம் சொல்லி நான் உங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது செய்கிறேன்..” என்று சமையலறைக்குள் நுழைந்தார்..

அவர் செல்வதைப் பார்த்த துகிலன், “ஸாரிங்க.. உங்களை பூவிழி என்று பெயர் சொல்லி கூப்பிட்டுவிட்டேன்..” என்று சொல்ல சிரித்தவள், “நீங்க பூவிழி என்றே கூப்பிடுங்க துகில்.. எனக்கு உங்களைவிட சின்ன வயதுதான்..” என்று கூறியவள், “இந்த ‘ங்’ மட்டும் வேண்டாம்..” என்று சொல்லவும் துகிலனும் உடனே சரியென்றான்..

பிறகு அவளே, “இப்பொழுது சொல்லு துகில்.. அது என்ன தாமரை இல்லம்..” என்று கேட்டதும் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய மனதில் இருப்பதை யாரிடமும் சொல்லாத துகிலன் பூவிழியிடம், “நான் என்னோட மனதின் திருப்திக்காக தொடங்கிய இல்லம் இது பூவிழி.. இந்த ஒருவருடமாக இந்த இல்லம் தான் என்னோட மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது..” என்று சொல்ல பூவிழிக்கு அந்த பெயர் மட்டும் எங்கோ இடித்தது..

“இந்த ‘தாமரை..’ என்ற பெயர்..?” என்றவள் இழுக்கவும், “தாமரை என்பதற்கு காரணம் என்ன என்று கேட்காதீங்க.. அதை நான் இப்பொழுது சொல்ல முடியாது..” என்று கூறியவனின் முகம் நொடி பொழுதில் மாறிவிட எழுந்து சென்றுவிட்டான்..

அன்றில் இருந்தே அவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடாமல் இருந்தாள் பூவிழி.. அவனோடு மறுநாள் அவனின் இல்லத்திற்கு செல்ல வெளியே வந்தவள் துகிலன் பக்கத்தில் இருக்கும் வீட்டினருடன் சண்டை போடுவது தெரிய அவள் அருகில் சென்றாள்..

அவள் அருகில் வருவதைக் கவனிக்காதவன், “ஒரு பொண்ணு மத்தவங்க வீட்டில் வந்து தங்கினால் இப்படித்தான் கதைகட்டி விடுவீங்களா..? அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. அவங்க கணவரோடு சின்ன பிரச்சனை அதுதான் எங்கள் வீட்டில் வந்து தங்கி இருக்காங்க..” என்று சொல்லிக்கொண்டிருக்க அவனின் அருகில் வந்த பூவிழிக்கு முதலில் எதுவும் புரியாமல் நின்றாள்..

அப்பொழுதுதான் அவளைப் பார்த்த துகிலன், “பூவிழி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது தானே..?” என்று கேட்டதும், ‘எனக்கு திருமணம் நடந்தது இவனுக்கு எப்படி தெரியும்..?’ என்ற அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி.. அவளின் முகத்தைப் பார்த்தவன், “என்ன அதிர்ச்சியோடு பார்க்கிறாய்..? என்னிடம் மட்டும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன.. இப்பொழுது ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்.. அப்போ பொய் சொன்னாயா..?” என்று அதட்டலுடன் கேட்டான்..

அப்பொழுதுதான், ‘இவன் என்னை திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல சொல்கிறான்..’ என்று புரிந்து கொண்டவள், “எனக்கு திருமணம் ஆகிவிட்டதுதான்.. நான் எதுக்கு உன்னிடம் தேவை இல்லாமல் பொய் சொல்ல வேண்டும்..” என்று கேட்டவளுக்கு மனதிற்குள் திக் திக் என்று இருக்க, “இப்பொழுது நம்பிறீங்களா..?” என்று எதிர்வீட்டுப் பெண்ணைப் பார்த்து கேட்டான் துகிலன்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அங்கே நடக்கும் பிரச்சனை என்ன என்று அவளுக்கு முழுவதுமாக புரிய விட்டாலும், ‘தன்னைப்பற்றி அவங்க ஏதோ சொல்லிருக்காங்க..’ என்று மட்டும் புரிந்துகொண்டாள்.. அவள் அவர்களையே பார்க்க அந்த எதிர்வீட்டு பெண்மணி பூவிழியிடம், “என்னை மன்னித்துவிடுமா..” என்று மன்னிப்பு கேட்டதும், “நீ வா பூவிழி..” என்று அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அவனோடு பைக்கில் ஏறியவள், “எதுக்கு துகில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவங்களிடம் சொல்ல சொன்னாய்..?” என்று கேட்டதும், “நீ திருமணம் ஆகாமல் எங்களின் வீட்டில் வந்து தங்கிருப்பதாக நினைத்து அந்த அம்மா உனக்கும் எனக்கு காதல் என்று சொல்லி நம்மைச் சேர்த்து முடிச்சுபோட்டு பேச ஆரம்பிச்சாங்க.. அதுதான் அவளிடம் நான் அப்படி சொன்னேன்..” என்று கூறியவன் பைக்கை எடுத்தான்..

பூவிழிகோ, ‘அதுக்கு எதுக்கு இவன் எனக்கு திருமணம் ஆனதாக சொல்ல வேண்டும்..’ என்று யோசிக்க அவளின் மனமோ, ‘உனக்கு திருமணம் ஆனது உண்மைதானே..’ என்று கேட்டதும் அவள் அமைதியாகிவிட அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்தவன் அருகில் இருந்த பூங்காவில் வண்டியை நிறுத்தி பூவிழியை இறங்க சொன்னான்..

அவன் பூங்காவில் நிறுத்தி இருப்பதை அவள் புரியாமல் பார்க்க, “என்னோடு வா பூவிழி.. உன்னோடு கொஞ்சம் பேசணும்..” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு பூங்காவின் உள்ளே சென்றவன், அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சைக் காட்டி அதில் அவளை அமர சொன்னான்.. அதற்கு எதிரே இருந்த பெஞ்சில் அமர்ந்தவன், “உன்னிடம் நான் ஏன் இரண்டு வாரமாக பேசவில்லை என்று தெரியுமா..?” என்று கேட்டான்..

அவனின் கேள்விக்கு அவள், ‘தெரியாது..’ என்று இடதுவலதுமாக தலையசைக்க, “என்னோட மனதை மாற்ற என்னோட அம்மா உன்னை அழச்சிட்டு வந்ததாக நினைத்தேன்.. அப்புறம் உன்னோட நடவடிக்கை எல்லாமே சாதாரணமாகவே இருக்க எனக்குள் இருந்த சந்தேகம் மறைந்திட்டது..” என்று கூறியவன் அவளின் முகம் பார்த்தான்..

அவள் எதுவும் பேசாமல் இருக்க, “எனக்கு ஒரு தோழி வேண்டும் என்று நினைக்கிறேன் பூவிழி.. காரணம் மட்டும் கேட்காதே.. என்னவோ மனதில் இந்த எண்ணம் மட்டும் ஆழமாக இருக்கிறது..” என்று கூறியவனை அவள் அதிசயமாக பார்க்க அவளின் பார்வையைக் கணித்தவன், “உன்னோடஅமைதியும், நீ என்னுடைய சொந்த விஷயத்தை தலையிடாமல் இயல்பாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது..” என்று கூறியவன் பூவிழியின் முகம் பார்த்தான்..

அவளும் அவனின் முகத்தையே பார்க்க, “பூவிழி நீ இங்கே எத்தனை நாள் இருக்க போகிறாயோ அது எனக்கு தெரியாது.. நீ எங்கே இருந்து வந்திருக்கிறாய்.. உனக்கு என்ன பிரச்சனை என்று நீயாக சொல்லும் வரையில் நான் கேட்க மாட்டேன்.. நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போமா..?” என்று தெளிவாகக் கேட்டான்.. அவனின் தெளிவான பேச்சு பூவிழிக்கு ரொம்பவே பிடித்தது..

‘துகில் என்னோட விஷயம் எதுவும் தெரியாத வரையில் எல்லோருக்கும் நல்லது.. அதற்கு உண்டான நேரமும், காலமும் வரும் பொழுது இவனிடம் உண்மையைச் சொல்லிவிடலாம்..’ என்று மனதில் நினைத்தவள், “எனக்கும் நல்ல தோழன் வேண்டும் துகில்.. அது நீயாக இருக்கும் பச்சத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று அவனோட நட்பை மனதார ஏற்றுக்கொண்டாள்..

அவளுக்கு துகிலனிடம் பிடித்த விஷயம் அவனின் புரிதல் தான்.. காரணம் இதுவரை தான் அவனிடம் அவனின் தனிப்பட்ட விஷயம் பற்றி பேசாமல் இருந்ததை அவனும் கடை பிடித்ததும், தன்னுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசியதும் பூவிழிக்கு துகிலனை மிகவும் பிடித்துவிட்டது..

சிறிதுநேரம் சென்றபிறகு, “எதுக்கு துகில் நீ அவங்களிடம் அப்படி சொன்னாய்..” என்று கேட்டதும் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த துகிலன், “முதல் விஷயம் உன்னோடு என்னை சேர்த்து வைத்து தவறாக பேசுவது எனக்கு பிடிக்கல.. இன்னொன்று இதுயும் உன்னோட பாதுக்காப்புக்குத்தான்..” என்று எதார்த்தமாக கூறினான்..

அவனின் இயல்பான பேச்சு அவளின் மனதைக்கவர, “அதுக்கு எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பொய் சொல்ல சொன்னாங்களா..?” என்று கேலியாக அவள் கேட்டதும், “உனக்கு புரியல பூவிழி.. உனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொன்னால் உனக்கும் எனக்கும் திருமணம் ஆகும் வரை நம்மை தவறாக பேசுவாங்க.. நீ இந்த ஊருக்கு புதுசு..” என்று கூறியவனை அவள் புரியாமல் பார்க்க அவளின் பார்வை புரிந்து அவளுக்கு புரியும் வண்ணம் கூறினான் துகிலன்..

“என்னோடு சேர்த்து வைத்து உன்னை பேசினால் நாளை உனக்கு கணவனாக வருபவன் நாம் நண்பர்கள் என்று சொன்னாலும் நம்பாமல் சந்தேகப்பட்டால் உன்னோட வாழ்க்கையே வீணாகிவிடும்.. இதுவே இப்பொழுதே உனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னால் தேவை இல்லாத பிரச்சனைகள் வராது.. நீயும் தனியாக வெளியே வரும்பொழுது உன்னை யாரும் தவறாக பார்க்க மாட்டாங்க..” என்று கூறியவனின் விளக்கம் அவளுக்கு பிடித்தது..

ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்வதே அவளின் பாதுக்கப்பிற்குத்தான்.. அவளுக்கு திருமணம் ஆனது தெரியாமல் அவளின் பாதுக்கப்பிற்கு அவனாகவே ஒரு விஷயத்தை உருவாக்கி அதை செயல்படுத்தியது அவளுக்கு பிடித்தது.. தனக்கு ஒரு நல்ல நண்பன் வேண்டும் என்று பெண்கள் நினைப்பது முதலில் பாதுக்கப்பிற்குத்தான்.. மற்றது எல்லாம் அப்புறம்தான்..

ஆனால் இங்கே ஆண் – பெண் நட்பு என்பது தவறாக வர்ணிக்கப்படுகிறது.. ஒரு பெண் ஒரு ஆணோடு பழகினால் அது காதலில் தான் முடியும் என்று எல்லோரும் நினைக்கின்றனர்.. ஆனால் படிக்கும் பொழுது பள்ளியிலும் சரி, வளர்ந்த பிறகு கல்லூரியிலும் சரி, வேலைக்கு செல்லும் சரி எல்லா இடத்திலும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்..

இந்த எல்லா இடங்களிலும் பெண்கள் ஆண்களை கடந்துதான் வர வேண்டி இருக்கிறது.. எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் பெண்களுக்கு பாதுக்காப்பாகத்தான் இருக்கின்றனர்.. பள்ளிகூடத்தில் ஒரு மாணவன் பெண்ணை தவறாக பேசினால் அதை தட்டிக்கேட்பவன் இன்னொரு மாணவனாக இருப்பான்.. கல்லூரியிலும் அதுவே..!

வேலைக்கு செல்லும் இடத்தில் சகதொழிலாளிகளாக ஒரு பெண்ணுக்கு உடன்பிறவா ஒரு அண்ணனாக, உடன்பிறவா தம்பியாக, வயதில் முத்தவர் ஒரு தந்தையாக பாதுக்காப்பாக இருக்கத்தான் செய்கின்றனர்.. ஆனால் அவர்கள் எல்லோரும் நல்லவர்கள்..

அதுவே தன்னுடைய பெண்ணிற்கு ஒரு ஆண் நல்ல தோழனாக இருந்தால் அது மட்டும் தவறு என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதற்காக பழகும் எல்லோரும் ‘நல்ல நண்பன்’ என்று சொல்ல முடியாது.. ஒரு நல்ல நண்பனைத் தேர்வு செய்வதில் இருக்கிறது பெண்களின் சாமர்த்தியம்!

அதைதான் பெரியவர்கள் சிலநேரம் நமக்கு சொல்கிறார்கள்.. அது நமக்கு சில நேரங்களில் புரிவதில்லை.. எந்த ஒரு தோழன் முதலில் தன்னுடன் பேசியதும் அவளின் பாதுக்காப்பிற்கும், அவளை காயப்படுத்த நினைக்காமல், சுயநலம் இல்லாமல், தவறான கண்ணோட்டம் இல்லாமல், தவறான எண்ணம் இல்லாமல் இயல்போடு பழகுகிறானோ அவன்தான் நல்ல நண்பன்..!

அந்தவகையில் துகிலன் நல்ல நண்பனாக நான் உனக்கு என்றும் இருப்பேன் என்று முதல் செயலிலேயே அவளுக்கு புரிய வைத்தான்.. அவனோடு அவளின் காதலியையே இணைத்தே யாரும் தவறாக பேசக்கூடாது என்று நினைத்தவன் இன்றும், ‘தன்னுடைய தோழியை யாரும் என்னுடன் இணைத்து தவறாக பேசக்கூடாது..’ என்றவன் செய்த செயல்தான் பூவிழி அவனின் நட்பை தாங்காமல் ஏற்றதற்கு முதல் காரணம்..

அவனின் சுயநலம் இல்லாத பேச்சு அவளின் மனதை கவர்ந்துவிட வசந்த் சொன்னது போலவே பூவிழிக்கு ஒரு நல்ல நண்பனாக துகிலன் கிடைத்தான்.. துகிலனுக்கும் பூவிழி நல்ல தோழியாக கிடைத்தாள்.. அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு பாலம் பலமாக மாற ஆரம்பித்தது.. கொஞ்சநேரம் அங்கேயே அமர்ந்து பேசியவர்கள் பிறகு தாமரை இல்லத்திற்கு கிளம்பிச் சென்றனர்..

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top