• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்ன சொல்ல இந்த காதல் எத்தனை பேர பந்தாடுது துகிலின் அவசரபுத்தினு சொல்றாத இல்லைஅவனுக்கு அவள் மேல் இருக்கும் possiveness நு சொல்றாத??‍♀??‍♀
இப்போ அவன் பூவிழியிடம் காட்டுவதும் களங்கம் இல்லாத நட்பு தானே
அவள் இவன் வீட்டில் இருப்பதும் வெளியே இருக்கும் எத்தனை வாய்க்கு ஆவல் இல்லயா
துகிலுக்கு மா பூவிழி வசந்தின் மனைவி என்று தெரியாத ?ok??‍♀இப்போ இருக்கும் குழப்பாங்கல் முடிச்சுகள் எல்லாம் இப்போ வரும் FBல் தான் அவிழ்க்கபடும் என்று நினைக்கிறேன் பார்ப்போம் ???‍♀Nice ud sandhya?????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என்ன சொல்ல இந்த காதல் எத்தனை பேர பந்தாடுது துகிலின் அவசரபுத்தினு சொல்றாத இல்லைஅவனுக்கு அவள் மேல் இருக்கும் possiveness நு சொல்றாத??‍♀??‍♀
இப்போ அவன் பூவிழியிடம் காட்டுவதும் களங்கம் இல்லாத நட்பு தானே
அவள் இவன் வீட்டில் இருப்பதும் வெளியே இருக்கும் எத்தனை வாய்க்கு ஆவல் இல்லயா
துகிலுக்கு மா பூவிழி வசந்தின் மனைவி என்று தெரியாத ?ok??‍♀இப்போ இருக்கும் குழப்பாங்கல் முடிச்சுகள் எல்லாம் இப்போ வரும் FBல் தான் அவிழ்க்கபடும் என்று நினைக்கிறேன் பார்ப்போம் ???‍♀Nice ud sandhya?????
நன்றி மஹா அக்கா... சரியான கணிப்புதான் அக்கா... பெயருக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன் அக்கா....
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு ஒவ்வொருவரின் மனநிலையை எடுத்து சொல்லியா விதம் சூப்பர் சகோ????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மிகவும் அருமையான பதிவு ஒவ்வொருவரின் மனநிலையை எடுத்து சொல்லியா விதம் சூப்பர் சகோ????
நன்றி மதி அக்கா.....
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
துகிலன் சொன்ன மாத்திரைகளை எல்லாம் பார்த்த கிருஷ்ணா, “இது எல்லாம் நினைவு மறந்த பொழுது ஒருவர் சாப்பிடும் மாத்திரைகள்.. இது பற்றி ஏண்டா கேட்கிற..?!” என்று கேட்டவனின் குரல் துகிலனுக்கு கேட்கவே இல்லை..

அவன் சொன்ன, ‘நினைவு மறந்த பொழுது...’ என்ற வார்த்தை துகிலனின் தலையில் இடியென இறங்க அவனுக்கு பேச்சே வரவில்லை.. அவனின் மனமோ, ‘என்னோட தாமரைக்கு இந்த நிலையா..?!’ என்று அதிர்ச்சியடைந்தவன் அப்படியே நின்றான்..

திடீரென அவன் அமைதியானதை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் என்னடா பிரச்சனை..?” என்று கேட்டதும், “டேய் கிருஷ்ணா நான் அப்புறம் பேசுகிறேண்டா..” என்று சொல்லி போனை வைத்தவன் கண்கள் இரண்டும் கலங்கியது...

அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. தன்னுடைய மனம் முழுவதும் இருந்து மணம் வீசியவளின் இந்த நிலையை அவன் முற்றிலுமாக எதிர்பார்க்காத ஒன்று.. என்றோ ஒருநாள் அவளை சந்திப்போம் என்று மட்டும் நினைத்திருந்தான்..

அது எல்லாம் நடந்த பொழுதும் கூட அவனால் அவளின் இந்த நிலையை ஏற்றுகொள்ளவே முடியவில்லை.. அவனின் மனம் அவளின் நினைவுகளுடன் கலந்துறவாடியது.. அவனின் மனம் அவளின் காதலியின் இந்த நிலையை எண்ணி வலித்தது..

காரில் ஏறிய துகிலன் நேராக வீட்டிற்கு வர அவனின் முகத்தைப் பார்த்த பூவிழி, ‘ஏன் இவன் இப்படி வருகிறான்..? கமழினியின் உண்மையான நிலையைத் தெரிந்துவிட்டாதா..?’ என்று தனக்குள் பல கேள்விகளை அடுக்கியவள் அவனின் அருகில் சென்றாள்..

திடீரென அவளின் கைகளை யாரோ பிடிக்க நின்ற இடத்தில் இருந்தே திரும்பிப்பார்த்தாள் பூவிழி.. அவளின் கையைப்பிடித்திருந்த சாரதா, “வாம்மா..” என்றவளை அழைத்துச்சென்றார்..

வீட்டிற்குள் நுழைந்தவன் நேராக தன்னுடைய அறைக்குள் சென்று கதவை சாத்திவிட்டு படுக்கை விழுந்தான்.. ‘தன்னை திருமணம் செய்ய போகிறவள்..’ என்ற அக்கரையில் போய் கடமைக்காக அவன் சென்று விசாரிக்கவில்லை..

‘என்னுடைய காதலிக்கு இந்த நிலையா..?’ என்று பதறியவன் அவளின் இன்றைய நிலையைத் தெரிந்துக்கொள்ளவே அந்த மாத்திரைகளை எடுத்துச்சென்று அவள் விசாரித்தான்..அவளின் உண்மை தெரிந்தவனின் மனம் வலியில் துடித்தது.. அவனின் மனதை யாரோ கசக்கிப்பிழிவது போல இருந்தது..

அவனின் மனம், ‘அவளுக்கு நிஜத்திலேயே என்னை நினைவில்லையா..? நான் அவளுக்கு மூன்றாவது ஆளா..? என்னை வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டு போன அந்த தாமரை எங்கே..? இப்பொழுது நான் பார்த்துவிட்டு வந்த கமழினி எங்கே..?’ என்று அவனின் மனதில் ஆயிரம் கேள்விகள்..

‘தன்னுடைய காதலிக்கா இந்தநிலை..?’ என்று நினைக்கவும் முடியாமல், அவளின் நினைவுகளை மறக்கவும் முடியாமல், அவளை காயப்படுத்திவிட்டு வந்த துகிலனின் மனம் வலித்தது.. ‘உன்னை காயப்படுத்த நான் யாருடி..’ என்று யோசித்தவனுக்கு, ‘அவளின் இன்றைய நிலையை அறிய வேண்டும்..’ என்ற எண்ணம் அவனின் மனதில் ஆழ்ந்து வேர்விட்டது..

ஆனால் அது பற்றி யாரிடம் கேட்பது என்று அவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது.. அவனின் மனம், ‘அம்மாவிடம் கேட்கலாம்..’ என்று யோசித்தவன், ‘இல்ல அம்மாக்கு உண்மை தெரிந்து இந்த திருமணத்தை நிறுத்திவிட்டால்..?’ என்று யோசித்தவன் அமைதியாகிவிட்டது..

மறுபடியும் மனம் அமைதி இல்லாமல் அலைபாய, ‘அவளின் அப்பாவிடம் கேட்கலாமா..?’ என்றவன் நினைத்தவன் மறுநொடியே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.. அவளின் அண்ணனிடம் கேட்கலாம் என்று நினைத்தவன், ‘வேண்டாம் என்று ஒதிக்கினான்..

அவன் மனகண்ணில் வந்து நின்றான் வசந்த்.. அவனின் நினைவு வந்த மறுநொடியே எழுந்து அமர்ந்த துகிலன், ‘இவன் இந்த திருமணத்தை நிறுத்த ஏதாவது பிளான் பண்ணுகிறானா..?’ என்ற சந்தேகம் கூடவே அவனின் மனதில் எழுந்தது..

ஆனால் மறுநொடியே, ‘இருக்காது வசந்த் அப்படி பண்ணியிருக்க மாட்டான்..’ என்று துகிலனின் இன்னொரு மனம் சொல்ல, ‘அவன் பொய் சொல்லியிருந்தால்..?’ என்று மற்றொரு மனம் அவனை கேள்வி கேட்டது..

‘கண்டிப்பாக இருக்காது.. வசந்த் எப்பொழுதும் கமழினியின் நலம் விரும்பி அவன் பொய் சொல்ல மாட்டான்..’ என்று இன்னொரு மனம் வசந்திற்கு சப்போர்ட்டாக பேசியதும் கொஞ்சநேரம் யோசிக்க ஆரம்பித்தான் துகிலன்..

‘இதுவரை அவனை கண்டாலே பிடிக்காது.. இப்பொழுது எப்படி என்னோட மனம் அவனுக்கு சாதகமாகப் பேசுகிறது..? கமழினிக்கு இப்படி ஆனதும் தன்னுடைய மனம் அவனின் பக்கம் சாய்ந்துவிட்டதா..?’ என்றவன் யோசிக்க யோசிக்க அவனின் மனதில் இருந்த வன்மம் எல்லாம் மாறிப்போனது..

‘வசந்த் மீது நான் கொண்ட வெறுப்பிற்கு பெயர் பொறாமை... அவளின் மீது காதல் கொண்ட என்னால் அவன் எங்கள் இருவரின் இடையே வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தது.. மற்றபடி தான் சொல்லிய வார்த்தைகளுக்கு நான் மட்டும்தான் பொறுப்பு..’ என்று நினைத்தவனின் மனம் தெளிவடைந்தது..

அந்த தெளிவுடன் அமர்ந்தவனின் மனம், ‘இதுநாள் வரையில் அவளின் நிலையை அறியாமல் இருந்தது என்னோட தவறு.. அவளுக்கு என்னை எந்தளவுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியாதா..?’ என்று நினைத்தவனின் மனம் அவளின் நினைவுகளில் சென்று நின்றது..

வசந்திற்கு போன செய்தவனின் நினைவுகளை கடந்தகாலம் செல்ல நினைக்க அதை தடுக்க முயற்சி செய்தவன் அது முடியாமல் போக அவளின் நினைவுகளுடன் உறவாடியவனின் உதட்டில் புன்னகை அழகாக மலர எழுந்து ஜன்னலின் அருகில் சென்றவனின் மனம் அந்த சூழ்நிலையை ரொம்பவே ரசித்தது..

மழை மெல்லிய தூரலில் நனைத்தபடியே கம்பீரமாக நின்றிருந்த மரத்தின் சிவப்பு நிறத்தில் பூத்து புன்னகை பூக்க அதை பார்க்க பார்க்க அவளின் நினைவுகள் அதிகமாக படையெடுக்க அவனுக்கு அவளை நினைத்து சிரிப்புதான் வந்தது.. அவனின் மனம் கடந்த காலத்தை நோக்கிச் சென்றது..

அதே மழையில் பூங்காவில் அமர்ந்திருந்த வசந்தின் மனம் துகிலனின் மீது இருந்தது.. அவனுக்கு தெரியும் தன்னைவிட பலமடங்கு காதலை அவன் கமழினி மீது வைத்திருக்கிறான் என்று..!

அதேபோல கமழினியின் மனம் என்னவென்று அவனுக்கும் தெரியும்.. கமழினி மனம் ஒரு பூவைப்போல.. எது வாங்கினாலும் அவள் எல்லோருக்கும் வாங்குவது போல துகிலனுக்கு சேர்ந்து எடுப்பது வசந்திற்கு மட்டுமே தெரியும்.. அவளின் மனம் பற்றி அறிந்த காரணத்தில் தான் வசந்த் தேடிபிடித்து துகிலனுக்கு திருமணம் செய்யும் முடிவையே எடுத்தான்..

அவனின் அலட்சிய பார்வை ஒவ்வொன்றும் அவளின் நினைவுகளைத் தூண்டும்.. கூடவே அவளின் மனதில் புதைந்திருக்கும் துகிலனின் நினைவுகளை தேடும்.. அந்த தேடலின் முடிவில் அவள் மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் என்றுதான் வசந்த் இந்த முடிவை எடுத்தது..

சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து தோழியின் நினைவுகளுடன் கடந்தகாலம் நோக்கிப் பயணித்தது வசந்த்தின் மனம்..

அதேபோல வீட்டில் அமர்ந்திருந்த பூவிழியின் மனமும் கமழினி பற்றிய எண்ணங்களுடன் உறவாடிச்செல்ல, ‘இவள் இல்லையென்றால் நான் வசந்தை கணவனாக அடைந்திருக்க முடியுமா..?’ என்று நினைத்தவளின் மனமும் கடந்த காலம் நோக்கிப் பயணித்தது..

கடந்த காலத்தின் காதலும், நட்பும், கனவுகளும் அழகாக கதவுகள் திறந்து மூவரையும் கடந்தகாலம் நோக்கி அழைத்துச் சென்றது...

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
Super?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top