• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mangalyam thanthu nanay 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
வணக்கம் நட்புக்களே ,

இன்றைய பதிவை படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கும்,
வெண்பா .
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
மாலை ஆறு மணி.பெங்களூர்.
அந்த பதினைந்து தள அடுக்குமாடிக் கட்டிடத்தை சுற்றிப் பார்த்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த வயதான தம்பதியர்.அவர்களுடன் அவர்கள் புதல்வன்.

எவ்வளவு ஏக்கர் தோட்டம் இருந்தாலும் தத்தம் தேவைக்கு ஏற்ப வீட்டைக் கட்டிவிட்டு மற்றவற்றை எல்லாம் நஞ்சை புஞ்சை நிலங்களாக மாற்றி விவசாயம் செய்யும் அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கும் குறைந்த இடத்தில் இவ்வளவு வீடுகளைப் பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது.

எட்டாம் தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றவர்கள் வடக்கே இருந்த மூன்றாம் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஐ கேட்சரின் மூலம் யார் வந்திருகிறார்கள் என்று பார்த்த விசாலாட்சி பின்பு கதவைத் திறந்து “வாங்க அத்தை!வாங்க மாமா!” என்று தன் மாமியார் மாமனாரை இன்முகமாக வரவேற்றார்.

வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க விசாலாட்சி சமையலறைக்குள் செல்ல “தாரிகா எங்க டா?” என்று தன் புதல்வன் பரந்தாமனிடம் கேட்டார் சௌந்தரம்.

“அவளுக்கு இன்னைக்கு காலேஜ் கடைசி நாள் ம்மா..அதனால இன்னும் வரல.பிரிண்ட்ஸ் கூட சேர்ந்து வெளிய போயிருக்கா” என்றவர் சொல்ல “என் தம்பி மணி ஆறு ஆச்சு...ஒரு வயசு புள்ளை இன்னுமா வீடு வராம இருக்கறது?” என்று சௌந்தரம் கோபப்பட

“நல்லா உங்க பையன்கிட்ட கேளுங்க அத்தை.எல்லாம் அவரு கொடுக்குற செல்லம் தான்” என்று தண்ணீர் சொம்பை மாமனார் ராஜுவின் கையில் கொடுத்துவிட்டு தன் மனக்குமுறலை தன் மாமியாரிடம் இறக்கிவைத்தார் விசாலாட்சி.

“வந்த உடனே மாமியாரும் மருமகளும் என் பேத்திய கறுச்சுக்கொட்ட ஆரம்பிச்சுட்டிங்களா?அவள் என்ன இன்னும் சின்ன பொண்ணா..அவளுக்கும் இருபத்திஒன்னு ஆச்சு.நல்லது எது கேட்டது எதுன்னு அவளுக்கு நல்லா தெரியும்” என்ற குடும்பத் தலைவரின் அதட்டலுக்கு பயந்து இரு பெண்மணிகளும் தங்கள் ராஜியமான சமையலறைக்குள் புகுந்தனர்.

விசாலாட்சி நான்கு பேருக்கும் காப்பி போட அங்கிருந்த சாப்பாட்டு மேஜை நாற்காலியை சமையலறைக்குள் போட்ட சௌந்தரம் மருமகளுடன் ஊர்க் கதைகளைப் பேசத் தொடங்கினார்.

தந்தையும் மகனும் பொதுவான விஷயங்களை வரவேற்பு அறையில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்க அழைப்புமணி ஒலித்தது.”தாரு வந்துட்டா” என்றபடி கதவை பரந்தாமன் திறக்க வந்திருந்ததோ துணிகளை இஸ்திரி போட்டுக்கொண்டு வந்த வண்ணான்.துணிகளை வாங்கிவிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்தவர் மீண்டும் வந்து இருக்கையில் அமரும்பொழுது காப்பி வந்திருந்தது.

நால்வரும் காப்பி அருந்த விசாலாட்சி தான் ஆரம்பித்தார் ”தாருக்கு தான் படிப்பு முடுஞ்சுருச்சுல இனி ஜாதகத்தை எடுக்கலாம்.மாப்பிள்ளை அமைய யார் யார்க்கு எத்தனை நாள் ஆகும்ன்னு சொல்லமுடியாது”

“ஆமா அத்தை நானும் இதத்தான் இவர்கிட்ட சொன்ன.ஆனா கேட்டா தான?அவள் இன்னும் சின்ன பொண்ணு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொல்லறாரு” என்று மாமியாருடன் கூட்டணியில் இணைந்தார் விசாலாட்சி.

“ம்மா..அவளுக்கு இப்ப தான் ம்மா இருபத்தி ஒரு வயசாகுது.இன்னும் ஒரு வெங்காயம் கூட அறுக்கத் தெரியாது.என் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள் நம்மகூட சந்தோசமா இருக்கட்டும்.அப்புறம் இருபத்தி மூணு வயசு ஆனதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்’” என்று மகளுக்காக பரந்தாமன் பேச

“ஏன் டா புள்ளைக்கு இருபத்தி ஒரு வயசு ஆச்சு இன்னும் வெங்காயம் கூட அறுக்கத் தெரியாதுன்னு சொன்ன ஊர் உலகம் நம்மளத்தான்டா தப்பாப் பேசும்.நீ செல்லம் கொடுக்கலாம்.ஆனா எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்கனும்.இப்படியே அவளுக்கு நீ செல்லம் கொடுத்துட்டே இருந்தன்னா போற எடத்துல அவளுக்கு தான் கஷ்டம்” என்று மகனைக் காய

“முதல்ல ஜாதகம் பாக்கலாம்.அப்புறம் முடிவு எடுக்கலாம்.இப்போதைக்கு நீங்க மூணு பெரும் கொஞ்சம் சும்மா இருங்க”என்று தற்காலிகமாக அவ்வாக்குவாதத்தை முடித்தார் ராஜு.

“பத்து மணிநேரம் பயணம் பண்ணி வந்துருக்கிங்க.கொஞ்ச நேரம் படுங்க” என்று பரந்தாமன் சொல்ல விசாலாட்சி அவர்களை படுக்கை அறைக்கு கூட்டிச் சென்றார்.
முதியோர்கள் ஓய்வெடுக்க விசாலாட்சி சமையலை கவனிக்க சென்றார்.பரந்தாமனுக்கு தன் அண்ணன் பத்மநாபனிடம் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேச ஆரம்பித்தார்.

“ஹலோ அண்ணா..அம்மா அப்பா அஞ்சரை மணிக்கே வந்துட்டாங்க” என்று சொன்னவர் பின்பு குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.அவர் பேசிவிட்டு அலைப்பேசியை வைக்கும் பொழுது அரை மணிநேரம் கடந்திருந்தது.
மணி எட்டு.அப்பொழுதும் தாரிகாவை காணாததால் அவளுக்கு அழைக்க அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.சமையலறையில் இருந்து வெளியே வந்தவர் “ஏங்க மணி எட்டு ஆச்சு.இன்னும் இவளைக் காணோம் ஒரு போன் பண்ணி பாருங்க” என்று சொல்ல “இப்ப தான் பண்ண.ஸ்விட்ச் ஆப்ன்னு வருது என்றவர் வ்தத்ஸ் ஆப்பை திறந்தார்.
தன் நண்பர்களுடன் அடுத்த புகைப்படங்களை எல்லாம் அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேட்டஸ் போட்டிருந்தவள் அதன் பின்பு ஆன்லைன் வரவே இல்லை.திரும்ப அழைத்துப் பார்க்க அதே பதில் தான் வந்தது.

“நான் அவள் பிரண்ட் கமலிக்கு கூப்பிட்டு பார்க்கிற” என்ற விசாலாட்சி அப்பெண்ணிற்கு தொடர்புகொள்ள அவள் எடுக்கவே இல்லை.மீண்டும் மீண்டும் அழைத்தும் தொடர்பு எடுக்கப்படவே இல்லை.மணி வேறு எட்டே முக்கால் ஆகிவிட்டுருந்தது.பெற்றோர் இருவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.

தூங்கி எழுந்த முதியோர்களும் வரவேற்பறைக்கு வந்துவிட அவர்கள் கேட்ட கேள்விக்கு பரந்தாமனால் பதில் சொல்ல முடியவில்லை.இப்பொழுது எங்கு சென்று அவளைத் தேடுவது என்றும் பரந்தாமனுக்கு தெரியவில்லை.வெளிய செல்கிறேன் என்று மட்டுமே சொன்னவள் எங்கே செல்கிறேன் என்று சொல்லவில்லை.
பெண் கேட்டவுடன் எதைப் பற்றியும் கேட்காமல் சரி என்று சொன்ன தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டவர் கையைப் பிசைந்து கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.

ஒன்பது மணிக்கு வீட்டின் அழைப்பு மணி ஒளிக்க வெளியே எல்லோரையும் பயப்படுத்திய தாரிகா கூலாக நின்றுகொண்டிருந்தாள்.அவள் உள்ளே வந்தவுடன் தான் நால்வருக்கும் உயிரே வந்தது.
உள்ளே நுழைந்தவுடன் அமர்ந்திருந்த தாத்தா பாட்டியைக் கண்டவள் “ஹாய் தாத்தா!எப்படி இருக்கீங்க?” என்று கேட்க “நல்லா இருக்க தாறு.இது தான் வீட்டுக்கு வர்ற நேரமா?” என்று மென்மையாக கேட்க சௌந்தரத்திற்கோ கோபம் தாளமுடியவில்லை.

“ஏன் டி வயசு புள்ள இப்ப ராத்திரி ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வர்றதா?நீ வர்ற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு உக்காந்துட்டு இருந்தோம்” என்று கோபமாக திட்ட

எங்க நெருப்பவே காணோம்?” என்று அவர் மடியில் தேடிய பேத்தியை முறைத்தவர் அப்பொழுது தான் அவள் உடையை கவனித்தார். ஆங்காங்கே கிழிந்து தொங்கும் அடர் நீல நிற ஜீன்ஸ் ஓபன் ஷோல்டர்ஸ் டாப் அணிந்திருந்தாள்.கழுத்தில் எதுவும் போடவில்லை, நெற்றியில் பொட்டில்லை.காதில் ஒரு சிறிய வைரத் தோடு.முடியை விரித்து விட்டுருந்தால்.ஆகமொத்தத்தில் ஒரு நவநாக மங்கை!

அவள் உடையைப் பார்த்து அஷ்டகோணமாக தன் முகத்தை திருப்பியவர் தன் மருமகளிடம் திரும்பி “ஏன் விசா உனக்கு உன் பொண்ண எப்படி வளர்க்கணும்ன்னு தெரியுமா தெரியாதா?இப்படியா உடுத்தி ஒரு வயசுக்கு வந்த பொண்ண வெளிய அனுப்புவ?” என்று கோபமாகக் கேட்க

விசாலாட்சியின் முகம் அப்படியே கூம்பிப்போய்விட்டது.கல்யாணம் ஆனது முதல் ஒரு வார்த்தை கூட கடிந்து பேசாத மாமியார் நறுக்கென்று ஒரு சொல் கேட்கவும் அவரால் தாங்க முடியவில்லை.
அவரும்தான் பாவம் என்ன செய்வர்?அவர் எவ்வளவு சொன்னாலும் இப்பெண் கேட்பதில்லை.பெண்ணை ‘ம்ம்’ என்று சொல்லவதற்கு முன் ‘என்னடி என் பொண்ண திட்டுற?’ என்று சண்டைக்கு வரும் கணவர்.அதனால் அவராலும் பெண்ணை மாற்ற முடியவில்லை.
மருமகளின் முகம் சிறுத்துவிட்டதைப் பார்த்தவர் அதற்குமேல் அவரைத் திட்டாமல் தன் மகனிடம் திரும்பியவர்

“ஏன் டா நீ தான் லட்சக்கணக்குள சம்பரிக்கிறையே உன் பொண்ணுக்கு ஒரு நல்ல டிரஸ் வாங்கித் தரக்கூடாது?கழுத்துல ஒரு சங்கிலி கூட இல்லாம இப்படியா மொட்ட கழுத்தா புள்ளைய விடுவ?” என்று கோபப்பட


“ம்மா..இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாம் அப்படித்தான் தான்.இது எல்லாம் இங்க சகஜம்.என்னைக்கு இருந்தாலும் நாம இன்னொரு வீட்டுக்கு கட்டிக் கொடுக்க போறோம்.நம்ம வீட்ல இருக்க வரை அவளுக்கு பிடிச்ச மாதிரி சந்தோசமா இருக்கட்டும்.இன்னைக்கு ஏதோ காலேஜ் கடைசி நாள் அதனால பிரிண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு லேட்டா வந்துட்டா” என்று மகளுக்கு பரிந்து பேச இப்பொழுதும் மகள் செய்த தப்பை அவளுக்கு சுட்டிக்காட்டாமல் அவளுக்கு ஒத்துஊதும் கணவரைக் கண்டு விசாலாட்சிக்கு ஆற்றாமையாக இருந்தது.


“இது தான் இந்த ஊரோட கலாச்சாரம்.இங்க என் பேத்தி இப்படித்தான் வளருவானா அவள் ஒன்னு இங்க இருக்க வேண்டாம்.எங்க கூட ஊருக்கு வந்து இருக்கட்டும்.எந்த ஊர்ல வளந்தாலும் நம்ம கலாச்சாரம் குடும்பம் எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தான வளக்கணும்?” என்று மகனிடம் கோபப்பட


“பாட்டி எதுக்கு இப்ப நீங்க என் அப்பாவ திட்டுறிங்க?இதுதான் பேஷன் .உங்களை மாதிரி இருந்தா எல்லாரும் பட்டிக்காடுன்னு சொல்லிருவாங்க”என்று தாரு தன் பாட்டியிடம் மல்லுகட்ட

“உங்க அப்பாவ சொன்னா மட்டும் அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வருமே?உங்க அப்பன் உன்ன சரியா வளர்த்திருந்தா நான் ஏன் சொல்ல போற?” என்று அவரும் பதிலுக்கு சண்டைப் பிடிக்க அவரை முறைத்தவள் மீண்டும் வாய் திறக்கும் முன் ராஜு தாத்தா குறிக்கிட்டார்.

தந்தை ‘இதற்கு மேல் எதுவும் பேசாதே’ என்பது போல் மகளிடம் கண்களால் பேச அமைதியானால்.

சிறு வயதில் இருந்தே பெங்களூரில் பிறந்து வளர்ந்ததினால் தாரிகவிற்கு இவை எதுவும் தப்பாகத் தெரியவில்லை.’எல்லாரும் இங்க இப்படிதான டிரஸ் பண்ணறாங்க...இதுல என்ன இருக்கு’ என்ற எண்ணம் அவளுக்கு.மேலும் தன் தாத்தா பாட்டியை பிற்போக்கு சிந்தனையாளர்களாகவே கருதினால்.பெரியோர்கள் சொல்வதிலும் ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினால்.காரணம் அவள் வளர்ந்த சூழல்!

“நீங்க இரண்டு பெரும் உள்ள போய் சமையலை பாருங்க” என்று பெண்மணிகளை உள்ளே அனுப்பியவர் மகனின் முகம் பார்த்தார்.தந்தை தன்னைப் பார்க்கவும் புரிந்து கொண்டவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.


“நீ இப்ப பண்ணது தப்பு சரின்னு நான் இப்ப சொல்ல வரல சாமி.எங்க எல்லாரையும் விட இந்த காலத்து புள்ள உனக்கு நிறையத் தெரியுமுனு நான் ஒதுக்குற.ஆனாலும் நம்ம குடும்பத்துக்குன்னு சில நெறிமுறைகள் இருக்கு.காலம் காலமா நாம அதை பின்பற்றிட்டு வரோம்.அது உன்னால எந்த விதத்துளையும் கெட்டுப் போகக் கூடாது.
இப்பகூட நீ நம்ம ஊர்த் தெருல நடந்து போனினா ‘முத்துசாமி அய்யன் வீட்டு பாப்பா நடந்து போகுதுன்னு’ சொல்லுவாங்களே தவிர தாரிகா நடந்து போறான்னு சொல்லமாட்டாங்கஎல்லாம் புருஞ்சு நடந்துக்கோ” என்றவர் அவள் தலையை தடவிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

தன் நண்பருடன் பேசிவிட்டு வெளியே வந்த பரந்தாமன் “ஏன் தங்கம் இன்னைக்கு இவ்வளவு லேட்?போன் வேற ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துச்சு.அப்பா ரொம்ப பயந்துட்டேன் டா” என்று மகளிடம் கேட்க “செல்பி எடுத்து எடுத்து சார்ஜ் போயிருச்சு” என்றவள் சொல்ல

“இன்னைக்கு சிக்பெட் போயிருந்திய?” என்று கேட்டதற்கு ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின்பு

“ஆமா ப்பா..அம்மா கூப்டற மாதிரி இருக்கு.நான் போய் பார்கிறேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

மகளின் தடுமாற்றம் அவருக்கு எதையோ உணர்த்த அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.பிறந்ததில் இருந்து எல்லாவற்றையும் தந்தையிடம் பகிர்பவள் இன்று ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றது அவருக்கு எதுவோ தப்பாகப் பட்டது.

கவிரிகா வருவார்கள்.....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "மாங்கல்யம்
தந்து நானே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கனிஸ்கா வர்ணா டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ennavo sariyilla tharikka.. ama kavi enge ivalai kavanikka avanthan sari.. super ud..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top