• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mannavan Karam Pidithey - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 5
ஒரு மாதம் மும்பையில், எப்படி ஓடி சென்றது என்று தெரியவில்லை பவிக்கு. மும்பையின் வாழ்க்கை முறை, அவளுக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து இருந்தது.
அதில் ஒன்று எத்தனை அடிகள் பட்டாலும், பீனிஸ் பறவை போல் மீண்டும் உயிர்த்தெழுந்து அன்றாட வாழ்க்கையை கவனிக்க செல்லும் மக்களை கண்டு அவள் வியந்து போனாள்.
இதற்கு நடுவில், இவள் தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை அபிஜித்யிடம் தொடர்ந்து கொண்டே இருந்தாள். அவள் அவன் காணாத நேரம், அவனை ஆசை தீர பார்த்து மகிழ்ந்தாள்.
அவள் ஆடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டமும், ஒரு நாள் முடிவிற்கு வந்தது. அபிஜித் இவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை புரிந்து கொண்டு, அதை முடித்து வைக்க எண்ணினான்.
அன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், படுக்கையில் இருந்து மெதுவாக ஒரு பத்து மணி போல் எழுந்தாள் பவித்ரசெல்வி. எழுந்ததுமே அவள் கண்டது, அவள் அறையின் உள்ளே சட்டமாக கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்து இருந்த அபிஜித் தான்.
அவனின் பார்வை முழுவதும், அவள் மேல் தான் இருந்தது. அவன் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்தவள், பெண்ணிற்கே உள்ள தற்காப்பு உணர்வில் தான் எவ்வாறு இருக்கிறோம் என்று தான் முதலில் சைட் கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.
இரவில் போடும் பைஜாமஸ் உடை, ஆங்காங்கு சற்று கசங்கி இருக்க, தலை முடி களைந்து இருக்க, நெற்றியில் வைத்து இருந்த ஸ்டிக்கர் போட்டு கண் இமையில் ஒட்டி இருக்க என்று பார்க்கவே கோமாளி லுக்கில் இருந்தாள்.
சட்டென்று சரி செய்ய கை பரபரத்தாலும், அவன் முன்னிலையில் அதை சரி செய்ய முடியாமல் தவித்தாள். அந்த எரிச்சலில், அவள் கோபத்தை அவன் மீது காட்டினாள்.
“மிஸ்டர் இப்படி இன்டிசென்ட்டா, ஒரு பொண்ணு தனியா இருக்கிற ரூம்குள்ள வந்து சட்டமா உட்கார்ந்து இருக்கிறது தப்பு. முதல எழுந்து வெளியே போங்க, எது பேசுறதா இருந்தாலும் நான் வெளியே வந்ததுக்கு அப்புறம் பேசலாம்” என்று சிடுசிடுத்தாள்.
“ஹா! ஹா! நல்ல காமெடி! நேத்து நடந்து உனக்கு சுத்தமா நியாபகம் இல்லை போல செல்லம். கொஞ்சம் நீ ரிவைண்ட் பண்ணி பாரேன், நேத்து என்ன நடந்ததுன்னு?” என்று அபிஜித் கூறவும், அவள் திடுகிட்டாள்.
“ஹையோ! நேத்து ஏதும் தப்பா நடந்துருச்சா? இப்படி இவன் சட்டமா உட்கார்ந்து இருக்கான்னா, அப்போ ஏதோ தப்பு நடந்து இருக்கு தான. என்ன நடந்து இருக்கும்? ஹையோ! எனக்கு ஒண்ணுமே நியாபகத்தில் இல்லையே! நான் என்ன செய்றது?” என்று நேற்று நடந்ததை நினைத்து பார்க்க முயன்றும் அவளால் முடியவில்லை.
“ரொம்ப யோசிக்காத செல்லம், நேத்து வீட்டில் புதுசா கல்யாணம் பண்ண ஒரு பஞ்சாபி ஜோடிக்கு விருந்து நடந்ததே நியாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
ஆம்! நேற்று வீட்டில் அந்த பஞ்சாபி ஜோடிக்கு விருந்து வைத்து, ஒரே ஆட்டமும், பாட்டமும் களை கட்டியதே! அடிக்கடி, இவன் முகத்தை வேறு பார்த்து, பார்த்து ரசித்தோமே என்று அப்பொழுது நியாபகம் வந்தது.
அதை அப்பொழுது நினைத்து பார்க்க தொடங்கினாள், அவன் அந்த அறையில் இருப்பதை மறந்து.
“ஹே கீர்த்தி! நீ ரொம்ப அழகா இருக்க, சஞ்சித் இப்போ உன்னை பார்த்து மயங்கி விழ போறார் போ” என்று கூறிக் கொண்டு இருந்தாள் பாவனா.
“ஏய் பாவனா! அவர் ஏற்கனவே இவ அழகுல மயங்கி போய் தானே, யாரும் தூக்கிட்டு போறதுக்கு முன்ன, இவர் தாலி கட்டிட்டாரு” என்று கீர்த்தியை கேலி செய்து கொண்டு இருந்தாள், மற்றொரு தோழி பூஜா.
இவர்கள் மூவருடன் தான் பவித்ரசெல்வி, சென்னையில் இருந்து இங்கே மும்பைக்கு ப்ராஜெக்ட் செய்ய வந்து இருந்தாள். இதில் இவள் மட்டும் தான் ஜூனியர் கிரேட், மற்ற மூவரும் இவளுக்கு சீனியர்ஸ்.
பவித்ரசெல்வி மீது முதலில் கோபத்தில் இருந்த மூவரும், அதன் பின் டீம் லீட் இவள் கூறிய அவுட்லைனால் தான் இந்த ப்ராஜெக்ட் கைக்கு கிடைத்த விவரம் கூறினார். மேலும் அபிஜித் இவளையும் இதில் இணைக்க சொல்லி கேட்டுக் கொண்டதால் தான், இவள் இங்கு இருப்பதே என்று தெரிவித்த பின் தான் சமாதானம் அடைந்தனர்.
“ஹே பவி! நீ ஏன் ஏதோ யோசனையில் இருக்க, அடிக்கடி என்ன விவரம்?” என்று கேட்டாள் பூஜா.
“ஒன்னும் இல்லை அக்கா, வீட்டு நியாபகம் அதான் வேற ஒன்னும் இல்லை” என்று கூறி சமாளித்தாள் அவர்களிடம்.
எல்லோரும் மாடியில் உள்ள அறையில் தான், கீர்த்திக்கு அலங்காரம் செய்துவிட்டு அவர்களும் தயாராகிக் கொண்டு இருந்தனர்.
அவளுக்கு அப்பொழுது, அபிஜித் உடனான திருமணம் எப்படி இருக்கும் என்பது பற்றிய சிந்தனை தான் ஓடிக் கொண்டு இருந்தது. எப்பொழுது அவன் அன்று தன்னை காக்க, அந்த செயலை செய்தானோ அப்பொழுதே அவளுக்கு நன்றாக புரிந்தது அவனும் தன்னை விரும்புகிறான் என்று.
அன்றே தந்தையிடம், இவன் தான் தன் மணாளன் என்று கூறிவிட்டாள். இவனிடம் தோன்றிய பாதுகாப்பு உணர்வும், அவனின் பால் ஏற்பட்ட காதலும் தான் அவளை அவ்வாறு கூற வைத்தது.
இப்படி அவள் அவனை பற்றிய யோசனையில் இருக்கும் பொழுது, பூஜாவும் மற்ற இருவரும் அவளை தட்டி இவ்வுலகிற்கு அழைத்து வந்தனர். அதன் பின் எல்லோரும் பார்ட்டி நடக்கும், ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்.
ஹாலின் ஒரு ஓரத்தில் போட பட்ட இருக்கையில், தனியாக சென்று அமர்ந்தாள். கையில் செல்போனில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பார்வையும், புதிதாக திருமணமான ஜோடிகளை கிண்டல் செய்துக் கொண்டும், போட்டி நடத்தி அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கும் அபிஜித் மீதும் இருந்தது.
அதுவும் அன்று அவன் அணிந்து இருந்த உடை, அவனுக்கு மேலும் அழகு சேர்த்து அவளை திணற வைத்தான்.
“ஒரு மனுஷி, எவ்வளவு நாள் தான் இப்படி வீராப்பா இருப்பா? டேய் இப்படி அழகை கூட்டிகிட்டே போனா, என்ன அர்த்தம்? இங்க ஒருத்தியை புலம்ப வச்சிட்டு, அவன் பாட்டுக்கு ஜாலியா இருக்கான்” என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் மனதிற்குள்.
அவளின் மன குமுறல், அவனுக்கு எட்டியதோ என்னவோ அவன் அப்பொழுது அங்கே அந்த கூட்டத்தில் இருந்து விலகி வந்து, இவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அவன் வருவதை உணர்ந்து, இவள் தீவீரமாக போனை நோண்டிக் கொண்டு இருந்தாள். அவனும், அவளின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை புரிந்து கொண்டு அவளை ஓர பார்வை பார்த்துக் கொண்டே, போனில் யாருடனோ ஹிந்தியில் பேச தொடங்கினான்.
“ஹையோ! கடவுளே! முதல இவனை இங்கு இருந்து, கொஞ்சம் தள்ளி போக சொல்லுங்க. பக்கத்துல வந்து இப்படி உட்கார்ந்தா, நான் எப்படி சைட் அடிக்கிறது?”.
“கிருஷ்ணா! கொஞ்சம் உன் பக்தைக்கு, கருணை காட்டு பா!” என்று மனதிற்குள் கடவுளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
கடவுளும், இவளின் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார் அப்பொழுது. அந்நேரம் அங்கு வந்த ஒருவர், இவனுக்கும் அந்த மணமகனுக்கும் வேண்டியவர் போலும் வாழ்த்த வந்து இருந்தார்.
அவரை வரவேற்று, மணமக்களிடம் அழைத்து சென்று அவருக்கு வேண்டியதை பார்த்து செய்ய இவனே எழுந்து சென்றான். அவன் அந்த பக்கம் எழுந்து செல்லவும் தான், இவளுக்கு மூச்சு சரியாக இழுத்து விட முடிந்தது.
பரேர் அங்கே கையில் சில குளிர்பானங்களுடன், சுற்றிக் கொண்டு இருந்ததை பார்த்து அவரை அழைத்து இவள் ஒன்றை அதில் இருந்து எடுத்துக் கொண்டாள்.
அந்த கிளாஸ்ஸில் இருந்த குளிர்பானத்தை ஒரு வாய் பருகியவளுக்கு, ஓமட்டிக் கொண்டு வந்தது.
“கருமோ! என்ன கன்றாவி இது? கெட்டு போனதை, ஜூஸ் போட்டுக் கொண்டு வந்துட்டாங்க போல. ச்சி! நல்லாவே இல்லை, இதை எப்படி எல்லோரும் குடிக்கிறாங்க?”
“ஒரு வேலை, இங்க இது எல்லாம் சகஜமா? குடிக்கவே பயமா இருக்கு! யார் கிட்ட இதை பத்தி கேட்கலாம்?” என்று சுற்றி எல்லோரையும் கவனித்துக் கொண்டே இருந்தாள்.
அங்கே அப்பொழுது, ஹை ஹீல்ஸ் தடதடக்க ஒரு மார்டர்ன் யுவதி, அந்த ஹாலுக்குள் பிரவேசித்தாள். புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து, அதன் பின் அபிஜித்தின் கைகளை பிடித்துக் கொண்டே அவனிடம் சரசமாக ஹிந்தியில் உரையாடிக் கொண்டு இருந்தாள்.
அது மட்டுமில்லாமல், இவள் சொன்ன கெட்டு போன ஜூஸ் ஒன்றை அவள் சர்வ சாதாரணமாக இது எனக்கு பழக்கம் என்பது போல், அதை ஒரே மூச்சில் வாயில் சரித்தாள்.
இதை பார்த்துக் கொண்டு இருந்த பவிக்கு, காதில் இருந்து புகை வராத குறை தான்.
“இப்படி ஒட்டி நின்னா தான், பேச வருமா இவளுக்கு? இவ இதை இப்படி குடிக்கும் பொழுது, ஏன் யாரும் ஒன்னும் சொல்லல? ஒரு வேலை எனக்கு மட்டும் தான், அந்த கெட்டு போன ஜூஸ் வந்துச்சோ?” என்று யோசித்தவள், அடுத்து அதே போல் இருந்த வேறு ஒரு கிளாஸ் ஜூசை எடுத்து பருகினாள்.
அதுவும் அதே போல் ஓமட்டவும், இது வேறு வகையான பழசாறு என்று நினைத்து அதை ஒரே மடக்கில் பருகினாள். கோபத்தில் இருந்த அவள், அதை ஒன்றுக்கு பின் ஒன்று என்று அருந்தி, நான்கு கிளாஸ் குடித்துவிட்டாள்.
பருகியவுடன், அவளுக்கு ஏதோ தலை விண்ணென்று வலி எடுக்கவும், வாந்தி வருவது போல் தெரியவும் உடனே அவளின் அறைக்கு ஓடினாள்.
அவள் அதை பருகிய விதத்தை பார்த்து, அபிஜித் பயந்து போனான். உடனே அவனும் யாருமறியாமல், அவள் பின்னே ஓடி அவளின் அறைக்குள் சென்றான். உள்ளே குளியறையில் உள்ள வாஷ் பேசினில், அவள் வாந்தி எடுத்துக் கொண்டு இருப்பதை அறிந்து அங்கே விரைந்தான்.
விட்டால், குடல் வெளியே வரும் அளவுக்கு அவள் வாந்தி எடுத்து விடுவாளோ என்று பயந்து, அங்கே உள்ள இண்டர்காம் மூலம் சமையல் அறையில் வேலை செய்யும் கரிஷ்மாவிடம், எலுமிச்சை சாறு கொண்டு வந்து கொடுக்கும் படி பணித்தான்.
அதன் பின், உள்ளே சென்று அவளின் தலையை தாங்கி பிடித்துக் கொண்டு அவளுக்கு உதவினான். அதற்குள் கரிஷ்மா, எலுமிச்சை சாறு கொண்டு வந்து கொடுக்கவும், அதை அவளுக்கு பருக கொடுத்தான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
சிறிது, சிறிதாக அவளுக்கு அந்த ஓமட்டலும், வாந்தியும் நிற்கவும் அவள் ஒரு நிலைக்கு வந்தாள்.
“ஆமா நீ யாரு? இங்க என்ன பண்ணுற?” என்று அவனை பார்த்து கேட்டாள்.
“விளங்கிடும்! இன்னும் தெளியல போல! இன்னைக்கு இவளுக்கு பதில் சொல்லியே, நேரம் ஓடிடும் போல” என்று எண்ணியவன், அவளை தூங்க வைக்க முயற்சி செய்தான்.
அவளோ, தூங்காமல் அவனிடம் அதே கேள்வியை கேட்டு, அவனை படுத்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.
“நான் யாருன்னு சொல்லுறேன், ஆமா நீ ஏன் அத்தனை ஜின்னை, ஒரே மடக்கில் குடிச்ச?. கிட்ட தட்ட நாலு கிளாஸ்! செம வேகமா காலி பண்ணி இருக்க. உனக்கு, குடிக்குற பழக்கம் இருக்கா என்ன?” என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டான்.
“ஜின்னா! நான் ஆரஞ் ஜூஸ் தான் குடிச்சேன், கெட்டு போய் இருந்து இருக்கும் போல அதான் இப்படி ஆகிடுச்சு. எல்லோரும் குடிச்சாங்களா, சொல்லலாம் பார்த்தேன், ஆனா எல்லோரும் குறை சொல்லாம குடிக்கும் பொழுது நாம ஏன் சொல்லனும்ன்னு விட்டுட்டேன்”.
“அப்புறம், ஏன் நீ குடிச்ச?அதான் உனக்கு அது கெட்டு போனதுன்னு, தெரிஞ்சிடுச்சு தான” என்று கேட்டான்.
“ஒ! அதுவா! அது அந்த ஹை ஹீல்ஸ்காரி ஒருத்தி வந்தா, நேரா அபி கூட போய் ஓட்டிகிட்டு ஹிந்தியில் பேசி என்னை வெறுபேத்திட்டா. அது மட்டுமா! அவனும் அவளை உரசி நின்னு பேசினான், அவ அப்படியே மடக்குன்னு குடிச்சதை பார்த்து, என்னாலையும் குடிக்க முடியும்ன்னு குடிச்சிட்டேன்”.
“உவ்வே! எப்படி தான் இதை குடிக்கிறாங்களோ. சத்தியமா, இனி இதை குடிக்கவே கூடாது?” என்று கூறியவளை பார்த்து சிரித்தான்.
“உனக்கு அபியை பிடிக்குமா? அப்போ அவன் கிட்ட நீ லவ் சொல்லிட்டியா?” என்று தெரிந்து கொள்ள கேட்டான்.
“ம்ஹும்... நான் சொல்லவே இல்லை இன்னும், கொஞ்ச நாள் நல்லா சைட் அடிச்சிட்டு அப்புறம் சொல்லுவோம்ன்னு நினைச்சு இருக்கேன். ஆனா அவன் பிராட், என் வாயால சீக்கிரமே அவன் கிட்ட ஐ லவ் யு சொல்ல வச்சிடுவான் போல, ஒவ்வொரு நாளும் அவன் ஒவ்வொரு விதமா என்னை டார்ச்சர் பண்ணுறான் தெரியுமா?” என்று சிணுங்கினாள்.
“அடி பாவி! நான் எப்போ டி, உன்னை டார்ச்சர் பண்ணேன்? என்ன மா பொய் புளுகுறா?” என்று எண்ணினான்.
“எப்படி டார்ச்சர் பண்ணுறான்?” என்று தெரிந்து கொள்ள கேட்டான்.
“ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமா டார்ச்சர் செய்வான். முதல் நாள் நான் ஏர்போர்ட் ல இருந்து வெளியே வந்த உடனே, இவனை தான் பார்த்தேன். எனக்கு பிடிச்ச ரெட் ஷர்ட், ப்ளாக் ஜீன், கண்ணுல ரே பான் கிளாஸ் போட்டு, ஒரு கை பான்ட் பாக்கெட் ல வச்சிட்டு ஸ்டைலா நின்னுகிட்டு இருந்தான்”.
“அப்போவே, பார்வையை அவன் பக்கம் இருந்து திருப்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இதுல ப்ராஜெக்ட் முடிச்ச பின்னாடி சொல்லலாம் பார்த்தா, இப்படி ஒவ்வொரு நாளும் செம ஹன்ட்சம் லுக் ல வந்து டார்ச்சர் பண்ணா, நான் என்ன செய்றது” என்று பரிதாபமாக கேட்பவளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
“அடிக் கள்ளி! இதுக்கு பேர் தான் டார்ச்சர் சொன்னியா? அப்படி பார்த்தா, நீயும் தான் டி என்னை அதிகமா டார்ச்சர் செய்து இருக்க, இரு உன்னை நாளைக்கு கவனிச்சுக்கிறேன்” என்று மனதிற்குள் ரசித்துக் கொண்டான்.
“சரி! இப்போவாவது நீ ஐ லவ் யு சொல்லலாமே, இன்னொரு பொண்ணு கூட நெருக்கமா வேற பார்த்தேன் சொல்லுற” என்று அவளின் பதிலை கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தான்.
“ம்ம்.. கண்டிப்பா நாளைக்கு சொல்லிடனும், இதுக்கு மேல நானும் வெயிட் பண்ண முடியாது. எங்க அம்மா, அப்பா கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க, இந்த மாசம் முடிஞ்ச உடனே எனக்கு மாப்பிள்ளை பார்க்கணும் சொல்லி”.
“சோ நாளைக்கே, அவன் கிட்ட ப்ரொபோஸ் செய்துட்டு, எங்க அப்பா கிட்ட சொல்லி சீக்கிரம் மாப்பிள்ளை கேட்டு வர சொல்லணும்” என்று கூறியவளை பார்த்து, மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.
“பார்ப்போம், செல்லம் நாளைக்கு தெளிஞ்ச உடனே நீ எப்படி எந்த மனநிலையில் இருக்கன்னு?” என்று எண்ணிக் கொண்டான்.
அதன் பின் அவளை தூங்க வைத்துவிட்டு, கதவை வெளி பக்கம் தாள் போட்டுவிட்டு ஹாலிற்கு சென்றான். அங்கு எல்லோருக்கும் பப்பே முறையில் ஏற்பாடு செய்து இருந்த சாப்பாடு கூடத்திற்கு, அனைவரையும் அழைத்து சென்றான்.
வந்தவர்கள் எல்லோரையும் அனுப்பிவிட்டு, எல்லா வேலைகளையும் ஆளுக்கு ஒன்று பிரித்து கொடுத்து சீக்கிரமாக எல்லோரையும் படுக்க சொல்லி அனுப்பி வைத்தான்.
மறுநாள், எல்லோருக்கும் ஊர் சுற்றி பார்க்க ஒரு கைட் ஏற்பாடு செய்து காலை ஒன்பது மணியளவில் அவர்களை அனுப்பி வைத்தான். கீர்த்தி, பூஜா இருவரும் பவித்ரா பற்றி கேட்டதற்கு, அவளுக்கு உடம்பு சரியில்லாததால் வர முடியாது என்று கூறிவிட்டதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு, அவள் அறை கதவை திறந்து உள்ளே சென்றவன், இன்னும் தூக்கத்தின் பிடியில் இருப்பவளை தான் பார்த்தான்.
நேற்று நடந்ததை நினைத்து பார்த்த பவித்ரசெல்விக்கு, தூக்கி வாரி போட்டது. உண்மை தன் வாயால் அவனுக்கு தெரிந்துவிட்டதை அறிந்து, அவள் வாயடைத்து போனாள்.
“என்ன மேடம்? கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லவா? இல்லை இப்போ ஐ லவ் யு சொல்லுறீங்களா?” என்று கண் சிமிட்டி கேட்டான்.
“யு சீட்! உன்னை யாரு நேத்து ஜின், ரம், விஸ்கின்னு மெனு ல வைக்க சொன்னது. அதனால தான், இவ்வளவும்” என்று அங்கு இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள்.
“ஹே! உனக்கு தெரியும் நினைச்சேன், இங்க பார்ட்டி அப்படினா இது தான் இங்க செர்வ் செய்வாங்க” என்று விளக்கினான்.
“அது எல்லாம் எனக்கு தெரியாது? நான் முதல இருந்து திரும்பவும் வரேன், கோட்ட அழிங்க” என்று பரோட்டா சூரி போல், திரும்ப திரும்ப அதையே கூறி அவனை வெறுபேத்தினாள்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அவள் அருகில் வந்தவன், அவள் முகத்தை கையில் ஏந்தவும், அவள் திடுகிட்டாள். அதுவரை அவனிடம் வம்பு வளர்க்க, கத்திக் கொண்டு இருந்தவள், அவன் அருகே வந்து அவள் முகத்தை பற்றிய அடுத்த நொடி பேசாமடந்தையாகி போனாள்.
“குட்! இதை தான் எதிர்பார்த்தேன்! இன்னும் ஒரு வாரத்தில் உன் பார்ட் வேலை எல்லாம் முடிச்சிட்டு, என் கூட சென்னை வா. சேர்ந்தே உங்க வீட்டுக்கு போவோம், அங்கேயே உங்க அப்பா, அம்மா கிட்ட கல்யாண டேட் பிக்ஸ் பண்ணிடுவோம் ஒகே செல்லம்” என்று கூறி அவள் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு சென்றான்.
அவளோ, வாயை பிளந்தபடி அவன் சொல்லி சென்றதை நினைத்து பார்க்க தொடங்கினாள். சேர்ந்தே சென்றால், அங்கே அன்னையிடம் வாங்கும் பாட்டு எப்படி இருக்கும் என்று அறியாதவளா அவள், அபிஜித்தை நினைத்து பல்லை கடித்தாள்.


கரம் பிடிப்பான்...


 




rathisrini

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
141
Reaction score
380
Location
Chennai
hahaha.. pottu vangitare abhijith... sothapitaye pavithra
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hahaha:LOL:pavi pulla Enma comedy pannudhu chooooo sweet :love: Abi hit & pavi Tom& Jerry ????
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
ha ha superrrrrrrrrrrrr
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top