• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Maramam - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 4

கெளதம் சைமன் கூண்டில் ஏறி நின்றவுடன் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். சைமன் தனக்கு எதிரான சாட்சி என்பதை ஏற்று கொள்ளவே நேரம் எடுத்தது கெளதமிற்கு. தன்னுடைய நண்பனே தனக்கு எதிராக மாறியது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மனதளவில் நொருங்கிவிட்டான். சைமன் மீது கெளதம் வைத்த நம்பிக்கையில் இத்தனை நாளாக தன்னை அவன் பார்க்க வரவில்லை என்று கூட அவன் வருந்தவில்லை. இன்று அவன் இப்டி வந்து நின்றது தாங்க முடியாத வலி தந்தது கெளதமிற்கு. சைமன் கெளதமிற்கு எதிரே வந்து நின்றும், கெளதமை பார்க்காமல் நின்றான். அரசு வக்கீல் வந்து அவனை விசாரிக்கிறார்.

“சொல்லுப்பா.. உன்னோட பேரு என்ன..? கெளதம்க்கு நீ யாரு..?”

“சார்... என்னோட பேரு சைமன். நானும் கெளதமும் ப்ரெண்ட்ஸ்.”

“ஓகே... முருகன் உங்களோட ப்ரெண்டு தானா..?”

“ஆமாம் சார். நான், சந்தோஷ், கெளதம், முருகன் எல்லாரும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்.”

“அன்னைக்கு என்ன நடந்தது..? நீ அங்க என்ன பாத்த..?”

“அன்னைக்கு நான் பேசணும்னு கெளதம் வீட்டுக்கு வந்தேன். அப்போ கெளதம் வீடு தொறந்து கிடந்துச்சு. அதுவும் இல்லாம உள்ள லைட் எரிஞ்சது, அதுனால உள்ள போய் பாத்தேன், அங்க யாருமே இல்ல. வெளில வந்துட்டு போகலாம்ன்னு நினைச்சப்போ பின்னாடி தென்னந்தோப்புக்குள்ள கெளதம் குரல் கேட்டுச்சு. நான் போய் பார்க்கும் போது...” சிறு அமைதி

“ம்ம்ம்... சொல்லுங்க..”

“கெளதம் முருகன விரட்டிட்டு போற மாதிரி இருந்துச்சு. நானும் பின்னாடியே போனேன். என்ன விட்டுரு விட்டுருன்னு முருகன் சொல்லிட்டே ஓடினான்...”

கெளதம் முகத்தில் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை, அவன் சைமனையே பார்த்து கொண்டிருந்தான், ஆனால் சைமன் கெளதமை பார்க்கவில்லை. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் வந்தது. சைமன் பேசுவதை கேட்டு அவனுக்கு கோபம் வரவில்லை, அதற்கு மாறாக தன் நண்பன் தன்னை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொள்வது, தன்னுடைய கைகளே தன் கழுத்தை நெறிப்பது போன்று இருந்தது.

“கேட்டீங்களா சார்...? கெளதம் முருகன விரட்டிட்டி போயிருக்கான்... முருகன் தப்பிக்க விட்டுரு விட்டுருன்னு சொல்லிட்டு போயிருக்கான்...”

நீதிபதி குறித்து வைத்து கொண்டார்.

“ம்ம்ம்.. அப்பறம் என்னாச்சு...”

“நான் கௌதம கூப்பிட்டேன்... உடனே அவன் குனிஞ்சுட்டான்.”

கெளதம் புரியாமல் விழிக்கிறான்.

“அதாது தெரிய கூடாதுன்னு ஒழிஞ்சுகிட்டான்..? அப்டி தான..?”

“எனக்கு தெரியல சார்...”

“ஓகே... நீ சொல்லு...”

“அப்பறம் முருகன் ரோட்டுக்கு போய்ட்டான்... கெளதம் கொஞ்ச தூரம் குனிஞ்சே போனான்.. அப்பறம் அவனும் ரோட்டுக்கு போய்ட்டான். அதுக்குள்ளே முருகன் ரோட கடந்து அந்த பக்கம் போய்ட்டான்... நான் போகலாம்ன்னு நினைச்சப்ப எனக்கு கால் வந்தது. பேசிட்டு நான் திரும்பி அந்த பக்கம் போகும் போது... ரோட்டுக்கு அந்த பக்கம் யாரோ ஒருத்தர், யாரையோ தூக்கி ரோட்டுல எறிஞ்சாங்க... நான் கிட்ட போய் பார்க்கும் போது கெளதம் அந்த கீழ கிடந்தவர் கிட்ட உக்காந்து இருந்தான்...”

“ம்ம்ம்... கேட்டீங்களா சார்.. இந்த கெளதம் தான் முருகன ரோட்டுல துக்கி போட்டுருக்கான்... இதுல இருந்தே தெரியும் கெளதம் தான் கொலைகாரன்னு..”

நீதிபதி கெளதம் பக்கம் திரும்பி, “நீ சொல்லுப்பா..? நீ தான் கொலை பண்ணுனியா...?”

“இல்ல சார்... நான் கொலை எதுவும் பண்ணல...” என்றான் வெறுமையுடன்.

அரசு வக்கீல் சிரித்து கொண்டே, “பாருங்க சார்.. இவன் ப்ரெண்டே இவன் தான் முருகன தூக்கி போட்டான்னு சாட்சி சொல்லுறான், அப்டி இருந்தும் இவன் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்லிட்டு இருக்கான்..”

“நடராஜர்... நீங்க எதுவும் விசாரிக்கனும்மா..?” என்று நீதிபதி கேட்கிறார்.

“எஸ் சார்..” சைமன் அருகில் சென்று, “தூக்கி போட்டது கெளதம் தானா...? நீ பாத்தியா..? நல்லா யோசிச்சு பாத்து சொல்லு..?”

“எனக்கு தூக்கி போட்டது யாருன்னு தெளிவா தெரியல... நான் கிட்ட போய் பாக்கும் போது கெளதம் தான் அங்க உக்காந்திருந்தான்.”

“சார் சைமன் துக்கி போட்டது யாருன்னு தெரியலன்னு சொல்லிட்டான். அப்பறம் எப்டி கெளதம் கொலை பண்ணினான்னு சொல்ல முடியும்...?”

அரசு வக்கீல் உடனே, “அங்க அவன் தான இருந்தான்... அப்போ அவன் தான கொலை பண்ணி போட்டுருப்பான்... அங்க நீ வேற யாரையாது பாத்தியா..?”

“நான் வேற யாரையும் பாக்கல சார்..” என்று சைமன் பதில் கூற,

நடராஜர் நீதிபதியை பார்த்து, “முருகன் கெளதமோட ப்ரெண்டு... அப்டி இருக்க முருகன கெளதம் கொலை பண்ண எந்த நோக்கமும், காரணமும் இல்ல சார்..”

அரசு வக்கீல் உடனே, “காரணம் இருக்கு சார்... சில மாததிற்கு முன்னரே முருகன் உங்க கூட பேசுறத நிப்பாட்டிடான்... இல்லையா...?” என்று சைமனை நோக்கி கேள்வி எழுப்ப,

“ஆமாம்... முருகன் எங்க கூட கொஞ்ச நாளா பேசாம இருந்தான்.”

“ஏன்..?”

“அதுவந்து... சந்தோஷ், காதம்பரி காதலிக்கிறது தெரிஞ்சதும், முருகன் எங்க கூட சண்ட போட்டு பிரிஞ்சுட்டான்...”

“காதம்பரி சிவசங்கர் அவரோட பொண்ணு, முருகனோட தங்கை சார்.. ம்ம்ம்... அப்பறம்...”

“அன்னைக்கு சந்தோஷ் காதம்பரி ரெண்டு பேரும் வீட்ட விட்டுட்டு ஓடி போய்ட்டாங்க.”

“ம்ம்ம்... இது தான் சார் காரணம். தன்னோட தங்கச்சிய சந்தோஷ் கூட அனுப்பி வச்சதுக்காக கேக்குறதுக்கு தான் முருகன் கெளதம் வீட்டுக்கு வந்துருக்கான். அப்போ தான் ரெண்டு பேருக்கும் இடையில சண்டை வந்துருக்கு.. அதுல கோபமான கெளதம் முருகன கொலை பண்ணிருக்கான் சார்...”

நீதிபதி குறித்து வைத்தார்.

“நீங்க போகலாம் சைமன்.”

“சார்... கெளதம் கொலை பண்ணிருக்க மாட்டான் சார்.. அவன் ரொம்ப நல்லவன் சார்...”

“நாங்க என்ன நடந்ததுன்னு தான் கேட்டோம்... என்ன நடந்திருக்கலாம்ன்னு இல்ல... நீங்க போகலாம்...”

சைமன் சோகமாக கெளதமை நிமிர்ந்தே பார்க்காமல் சென்றான். நீதிபதி அரசு வக்கீலிடம்,

“முருகனின் சித்தப்பா சிவசங்கரை கூப்பிடுங்க... விசாரிக்க..”

“சாரி சார்... அவரால வர முடியல...”

“ம்ம்ம்...” ஏதோ எழுதினார். பின் நிமிர்ந்து, “கேஸ் விசாரணை பதினைந்து நாட்களுக்கு ஒத்திவைக்கிறேன்.

அதுவரை கெளதமை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்...

அடுத்த விசாரணைக்கு சிவசங்கர் கண்டிப்பா வரணும்.”

“எஸ் சார்...”

விசாரணை முடிந்து அனைவரும் வெளியே வருகின்றனர். சௌந்தர்யா கோபத்தோடு இருந்தாள், அதை விட நண்பனே எதிரியாகி விட்டதால் அவர் மனசு எவ்ளோ வருத்தத்துல இருக்கும் என்றே அதிகம் கவலை கொண்டாள். வெளியே வந்த உடன் நடராஜரிடம் சென்று,

“என்ன சார்.. நீங்க எதுவும் அதிகமா பேச மாட்டுறீங்க..?” என்றால் சோகமும், கோபமுமாக

“என்னம்மா என்னையே குறை சொல்லுற.. அவனுக்கு எதிரா கேஸ் ஸ்ட்ரோங்கா இருக்கு...

இப்போ எப்டி வெளில கொண்டு வர்றதுன்னே தெரியல..?”

“என்ன சார்.. இப்டி சொல்லுறீங்க...”

“பார்போம்மா... நெக்ஸ்ட் ஹியரிங்ல அவுங்க சித்தப்பா வருவாருல... ”

“ம்ம்ம்...” என்றால் கோபமாக,

அப்போது கெளதமை போலீஸ் வெளியே கூட்டி கொண்டு வந்தனர். அவனை பார்த்ததும் சௌந்தர்யா வேகமாக அருகில் சென்றாள்.

“சார்... நான் அவர் கூட கொஞ்சம் பேசணும்...”

“அதெல்லாம் முடியாதும்மா...” என்று இன்ஸ்பெக்டர் அவனை இழுத்து கொண்டு செல்ல, கெளதம் ஏதோ பொம்மை போல் இழுத்த இழுப்பிற்க்கு சென்றான். நடராஜர் அருகில் சென்று

“சார்...” இன்ஸ்பெக்டர் திரும்பி பார்த்தார், “நாங்க அவர் கூட கொஞ்சம் பேசணும்.”

“என்ன சார்...?” என்று முகத்தை திருப்பி கொண்டார் இன்ஸ்பெக்டர். பின் அவராக திரும்பி, “உங்களுக்கு அஞ்சு நிமிஷம் தான்... அதுக்குள்ள பேசுங்க...”

“ஓகே.”

கெளதமை தனியாக அழைத்து சென்று நடராஜர், “உண்மையிலே நீ கொலை பன்னலைல..? தப்பா நினைக்காத... எனக்கு உண்மை தெரிஞ்சா தான் உன்னை வெளில எடுக்க முடியும். அதுக்கு தான்.”

வெறுமையான சிரிப்போடு, “உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகம் வந்தது தப்பே இல்ல... என்னோட ப்ரெண்டே என்ன நம்பாம எனக்கு எதிரா வந்து நிக்கிறான்... ம்ம்ம்...”பெருமூச்சு விடுகிறான், பின்

“நான் கொலை பண்ணல சார்...”

சௌந்தர்யா முகம் முழுவதும் கோபத்தோடு, கெளதம் நிலையை நினைத்து மனதில் வருந்தி கொண்டிருந்தாள். கெளதம் பேசியதை கேட்டவுடன், சைமனை திட்ட ஆரம்பித்தாள்.

“அவனெல்லாம் ஒரு ஆளா..?

சொந்த ப்ரெண்டுக்கே இப்டி துரோகம் பண்ணுறான்...

நல்லாவே இருக்க மாட்டான்...”

“அவன எதுக்கு இப்போ நீ இப்டி பேசுற..?” என்று கெளதம் சைமனை நல்லவனாக்கி பேசினான். சௌந்தர்யா கண்கள் கோபத்தை கொட்டின.

“இன்னும் நீங்க அவன நம்புறீங்க பாருங்களேன்...

ரொம்ப கஷ்டமா இருக்கு...

இவ்ளோ பெரிய துரோகத்த எப்டி அவனால உங்களுக்கு பண்ண முடிஞ்சதுன்னு தெரியல..?

ச்சி... அவன வக்காலத்து வாங்கி இனி என்கிட்ட பேசாதீங்க...

ஆனா ப்ரெண்ட் ப்ரெண்டுன்னு இருந்தீங்க, அதுக்கு நல்ல வேல பண்ணிருக்கான் அவன்...”

“நீ என்னோட ப்ரெண்டுகல பத்தி தப்பா பேசாத...

அவன் ஒன்னும் நான் கொலை பண்ணேன்னு சொல்லல...”

“என்ன ப்ரெண்டா...?

யாரு இருக்கா இப்போ...?

ஒருத்தன் செத்து உங்கள ஜெயிலுக்கு அனுப்பிட்டான்...

ஒருத்தன் அதுக்கு காரணமா இருக்கான்... அவன் உங்கள தனியா தவிக்க விட்டுட்டு அவனோட வாழ்கைய தேடி ஓடிட்டான்...

இன்னொருத்தன் என்னானா உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வந்துட்டான்...

அப்பா... நல்ல ப்ரெண்ட்ஸ்...”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
வாழ்க்கையின் போராட்டம் எல்லையற்றது, வாழ்வு முடியும் வரை போராட வேண்டும், உயிர் உள்ளவரை உறவை சேர்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தவன் கெளதம். இன்று தன்னுடைய நிலை தனக்கு கஷ்டங்கள் பல கொடுத்தாலும் அவன் உறவை விட்டு கொடுக்க மனம் இன்றி நட்பை இறுக மனதளவில் பிணைத்து கொண்டிருக்கிறான். ஆனால் கெளதம் நிலைமையை புரிந்து வைத்தும் சௌந்தர்யா இப்படி பேசியது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. வெளியே சொல்லவில்லை என்றாலும் அவனது சோகம் அவனது கண்கள் காட்டி கொடுத்தது. கலங்கிய கண்களை கைகளால் துடித்து கொண்டான்.

“நான் ஒன்னும் தப்பா பேசுறதா நினைக்காதீங்க...

நான் உங்க நல்லதுக்கு தான் சொல்லுறேன்...

நீங்க நினைக்கிற மாதிரி அவன் நல்லவனா இருந்தா உங்க கிட்ட வந்து கேட்டுருக்கணும், நீங்க கொலை பண்ணீங்கலான்னு...

அப்போ ஏத்துட்டு இருக்கலாம்... அது தான் இல்லையே...

சைமன் ஏதோ நீங்க கொலை பண்ண மாட்டீங்கன்னு கோர்ட்டுல சொன்னத வச்சு அவன நல்லவன்னு நினைக்காதீங்க... பச்ச துரோகி அவன்.

உங்களுக்கு கிடைச்ச ப்ரெண்டே யாரும் சரி இல்ல...

அதுனால தான் இப்டி எல்லாம் நடக்குது...

நீங்க உங்க மனச கஷ்ட படுத்தாதீங்க...

இனியும் அவுங்கள நினச்சுட்டு இருக்காதீங்க...”

அவள் பேசி கொண்டிருக்கும் போதே கான்ஸ்டபில் வந்து,

“போதும் போதும் பேசினது... வாடா...” என்று கூறி கொண்டே அவனது கைகளில் விளங்கு மாட்டினார்.

நடராஜர் அவனிடம், “ஏதாது சந்தேகம்ன்னா வர்றேன்... பேசலாம்..” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

கெளதமை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லும் வரை நின்று கொண்டிருந்தாள் சௌந்தர்யா. பின் மெதுவாக சௌந்தர்யா நடக்க ஆரம்பித்தாள். வெளியே வந்து ஆட்டோ ஏறி வீட்டிற்கு சென்றாள். இதை அனைத்தையும் தூரத்தில் ஒரு மரத்தின் பின்னிருந்து சைமன் பார்த்து கொண்டிருந்தான்.

போலீஸ் ஸ்டேஷன் சென்ற பின்னர் கெளதமை சிறையில் அடைத்து விட்டு இன்ஸ்பெக்டர் வெளியே செல்கிறார்.

“முத்து...” என்று கூறி கொண்டே போனில் ஏதோ பார்த்து கொண்டிருந்தார்.

“எஸ் சார்...”

“அவன அடச்சுட்டீங்களா...?”

“ம்ம்ம்... வேற ஏதாது வேணுமா சார்...?”

“இல்ல...” கான்ஸ்டபில் திரும்ப மீண்டும், “ம்ம்... அந்த கான்ஸ்டபில் வந்துட்டாங்களா...?”

“இன்னும் இல்ல சார்...”

“ஓகே. நீங்க போங்க...”

சிறிது நேரத்தில் கான்ஸ்டபில் இருவர் வருகின்றனர். இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கைதிகளுக்கு சென்று சாப்பாடு வாங்கி வர சொல்லுகிறார். அவர்கள் சென்ற பின்னர் இன்ஸ்பெக்டர் போனிற்கு கால் வருகிறது. எழுந்து வெளியே சென்று பேசுகிறார் இன்ஸ்பெக்டர். பத்து நிமிடத்திற்கு பிறகு உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை அழைத்தார்.

“முத்து... நான் சாப்பிட போறேன்... நீங்க பாத்துக்கோங்க...”

“எஸ் சார்...”

மீண்டும் கால் வருகிறது. எடுத்து பார்த்த இன்ஸ்பெக்டர் முகத்தில் அலட்சியம், அட்டென்ட் செய்து பேசுகிறார். பேசுவது இன்ஸ்பெக்டர் மனைவி.

“என்ன வேணும்..? எதுக்கு சும்மா சும்மா கால் பண்ணி தொந்தரவு பண்ணுற..?”

“சாப்பிட எப்போ வருவீங்க..?”

“நான் சாப்பிட்டுட்டேன். நான் வரல...”

உடனே கால் கட் செய்து விட்டார்.

முத்து இன்ஸ்பெக்டரிடம், “யாரு சார்..? மேடமா..?”

“ஆமாம்.”

“சாப்ட்டேன்னு சொல்லுறீங்க சார்...?” என்றார் மெதுவாக,

“நான் வெளில சாப்பிட போறேன்...

சரி நீ பாரு... நான் அப்பறம் வர்றேன்.”

இன்ஸ்பெக்டர் எழுந்து சென்று விட்டார். கான்ஸ்டபில் முத்து கெளதமை சென்று பார்க்கிறார். கெளதம் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது, ஆனால் அவன் முகம் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. கான்ஸ்டபில் கெளதமை பார்த்து,

“நல்ல நடிகன்டா நீ...” என்று அவனை ஏளனத்தோடு பேச, அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பாக்குற...?”

“கஷ்டம் எனக்கு தான சார்... அப்போ நான் தான அழுகனும்...”

“ஓ... சார் அவ்ளோ நல்லவனா..? நடிக்காத..? நல்லவனா இருந்தா உண்மைய சொல்லுடா..?”

கெளதம் கான்ச்டபில்லை முறைத்து விட்டு, பதில் பேசாமல் குனிந்து கொண்டான்.

“என்ன திமிரு உனக்கு..? என்ன பாத்த எப்டி தெரியுது...

கேவலம் ஒரு கொலைகாரன் நீ, நீ என்னை முறைப்ப...?” என்று அவனது தலை முடியை பிடித்து நிமிர்த்த, கெளதமோ பதில் பேசவோ, இல்லை எதிர்த்து பேசவோ பேசாமல் வாயை மூடி இருந்தான். அது கான்ஸ்டபில் முத்துக்கு இன்னும் கோவத்தை தூண்டியது.

“ஏய்..! திமிரு பிடிச்சவனே...” என்று கெளதமை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கெளதம் கீழே சாய்ந்து விழுந்து விட்டான். வலித்தது இருந்தும் கெளதம் பிடிவாதமாக ஊமையாக இருந்தான். அவனை அடிக்க கையை ஓங்கினார் கான்ஸ்டபில், அதற்குள் சாப்பாடு வாங்க சென்ற மற்ற இரண்டு கான்ஸ்டபில் வந்தனர்.

“என்ன சார்...? என்னாச்சு..?” என்று இருவரும் உள்ளே வந்தனர்.

“சரியான திமிரு பிடிச்சவன இருக்கான்..? கேட்ட பதில் பேச மாட்டுறான்...” என்று அவனை முறைத்து விட்டு வெளியே செல்ல, மற்ற இரு கான்ஸ்டபிளும் வெளியே சென்றனர்.

“சரி அத விடுங்க... நீங்க சாப்பாடு எனக்கு வாங்கிட்டு வந்தீங்களா..?”

“ம்ம்ம்... இந்தாங்க..”என்று ஒரு பொட்டலத்தை நீட்டினர்.

அதை வாங்கி கொண்டு, “மிச்சத போய் கொடுங்க...

குடுத்துட்டு வாங்க சாப்பிட...”

இருவரும் சாப்பாடை எல்லாருக்கும் பிரித்து கொண்டு போய் கொடுத்தனர். கெளதம் மட்டும் வாங்க வில்லை. அவனுக்கு அருகில் வைத்து விட்டு சென்று விட்டனர். கெளதம் முகம் சுருங்கி வாடி போய் இருந்தது. வெளியே வந்த கான்ஸ்டபில் அவன் வாங்கவில்லை என்று கூறுகின்றனர். உடனே முத்து அவர்களிடம்,

“சாப்பிடாம இருந்த இருக்கட்டும்... பசிச்சா தான வழிக்கு வருவான்... நீங்க வாங்க... சாப்பிடுவோம் நாம...”

கெளதமிற்கு ஒன்றும் பிடிக்கவில்லை. காலையில் நடந்ததை நினைத்து நினைத்து வருந்தி கொண்டிருந்தான். சைமன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று புரியாமல் தவித்தான். என்னை பற்றி தெரிந்தும் ஏன் அவ்வாறு செய்தான் என குழம்பியும் கொண்டிருந்தான். ஆனால் சைமன் எந்த தப்பிற்கும் துணை செல்ல மாட்டான் என்று உறுதியாக நம்பினான். சௌந்தர்யா சொன்னது நினைவிற்கு வந்தது,

‘முருகன் செத்துட்டான், நான் கொலைகாரன், இதுக்கு காரணமா சந்தோஷ், சாட்சியா சைமன்..

நாலு பேரும் பிரிஞ்சுட்டோம்..

என்ன பாவம் பண்ணேனோ..? எனக்கு யாரையுமே நீ கொடுக்க மாட்டேங்கிற கடவுளே...

உறவுன்னு யாருமே எனக்கு கிடைக்க கூடாது போல...

அது தான் உன்னோட விருப்பம் போல...

இப்போதைக்கு எனக்குன்னு மிச்சம் இருக்குறது சௌந்தர்யா மட்டும் தான்...

அவளையும் நீ என்கிட்டே இருந்து எப்போ பிரிக்க போறியோ..?

அவளாது இனி சந்தோசமா இருக்கணும்...

இனி நான் அவ கிட்ட இருந்து விலகனும்...

அது தான் அவளுக்கு நல்லது...

ஆனா நான் இனி யாரையும் ஏத்துக்கவும் மாட்டேன், பிரியவும் மாட்டேன்...

என்ன விட்டுரு கடவுளே...

உன்ன நான் நம்பினதுக்கு நல்ல அடி கொடுத்துட்ட...’

என்று கண்களில் நீர் வழிய உள்ளம் நொந்து வாழ்வதை வெறுத்து, உறவுகளின் மேல் இஷ்டம் இல்லாதது போல் கடவுளிடம் வேண்டினான்.

நேரம் சென்று கொண்டிருந்தது. கெளதம் சோகம் மற்றும் மாறவில்லை. கான்ஸ்டபில் முத்து வந்து பார்க்கிறார். கெளதம் அருகில் வைத்த சாப்பாடு பொட்டலம் அப்படியே இருந்தது. எரிச்சலுடன் திரும்பி சென்று விட்டார் முத்து. மாலை வந்து விட்டது. இன்ஸ்பெக்டர் வருகிறார், கலெக்டர் ஆபிசில் மீட்டிங் இருப்பதாகவும், நாளை நடக்க இருக்கும் கட்சி மீட்டிங் ஒன்றிற்கு பாதுகாப்பு பற்றிய கலெக்டர் உடன் ஆலோசனை மீட்டிங் என்றும் கூறினார். நாளை ஸ்டேஷனில் யார் இருக்க வேண்டும், மீட்டிங்கிற்கு யார் செல்ல வேண்டும் என்று அனைவரையும் அழைத்து பேசினார்.

நாளை கான்ஸ்டபில் முத்து மட்டும் ஸ்டேஷனில் இருக்க சொன்னார் இன்ஸ்பெக்டர். மற்ற அனைவருக்கும் அவர்களது வேலைகளை பிரித்தும் கொடுத்தார். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் கலெக்டர் ஆபிஸிற்கு கிளம்புகிறார். அப்போது சௌந்தர்யா வருகிறாள். அவளை பார்த்ததும்,

“ம்ம்... வந்தாச்சு மேடம்...” என்று எரிச்சலுடன் கூற, கான்ஸ்டபில் முத்து

“நான் பாத்துக்கிறேன் சார்... கொஞ்ச நேரத்துல வெளில அனுப்பிடுறேன்... நீங்க போயிட்டு வாங்க சார்...”

“ம்ம்ம்.. பாத்துக்கோ...”

வெளியே சென்ற உடன் உள்ளே வந்த முத்து சௌந்தர்யாவை தடுத்து நிறுத்தினார்.

“நில்லுமா...”

அவள் திரும்பி பார்த்து, “நான் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போய்டுவேன் சார்... உங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்க மாட்டேன் சார்... ஓகே வா...”

“நான் எதுவுமே இன்னும் சொல்லல... அதுக்குள்ளே நீயே பேசுவியா...”

“இன்ஸ்பெக்டர் இத தான சொல்லிட்டு போனாரு...?”

“ம்ம்...” என்று எரிச்சல் பட்டார். “டெய்லியும் பாக்க வர்ற... எப்போ பாரு அவன காப்பாத்த நினைக்கிற... ஆனா அவன் நல்லவனே இல்லையே... உன்னையே அவன் கலட்டி விட தான் நினைக்கிறான்... நீ அவனையே நம்பிட்டு இருக்க... ஏன்மா..?”

“நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க அண்ணா...”

“இல்லம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். இப்டி ஒரு கொலைகாரனோட பழக்கம் நல்லது இல்ல.. அவ்ளோ தான்..”என்று திரும்பி அவரது சீட்டில் போய் அமர்ந்தார்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அவள் அருகில் சென்று, “இல்ல அண்ணா அவர் கொலை பண்ணல...”

“ஏம்மா... அப்டினா அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உன்கிட்டயாது சொன்னானா அவன்...? இல்லேல...” என சலிப்போடு கேட்டார்.

அவள் பதில் பேசவில்லை இருந்தும் அவள் மனசில் எந்த சந்தேகமும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அது புரிந்ததும் முத்து,

“ம்ம்ம... போம்மா அவன் அங்க தான் இருக்கான்...”

அவள் உள்ளே சென்றால், கெளதம் திரும்பி பார்த்தான். அவள் அருகில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை கவனித்து விட்டு,

“நீங்க சாப்பிடலையா..?”

அவனிடம் பதில் இல்லை, எழுந்து நின்றான்.

“இன்னும் நீங்க அங்க நடந்தத நினச்சுட்டு இருக்கீங்களா..?

எல்லாம் நல்லதுக்குன்னு நினைங்க...

இப்போவே அவன பத்தி தெரிஞ்சு போச்சு...

நல்லவுங்களுக்கு எப்போவும் நல்லது தான் நடக்கும்...

நட்பு மேலயும் நண்பர்கள் மேலயும் எவ்ளோ பாசமா இருந்தீங்க...

அதுக்கு அவுங்க எல்லாரும் உங்கள இப்டி நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க...

இனி அவுங்க எல்லாரையும் மறந்துடுங்க...

அது தான் நல்லது...

நான் இருக்கேன் உங்களுக்கு...

நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க...”

பெருமுச்சு விட்டான் கெளதம்.

“நம்ம வக்கீல் அய்யா எப்டியாது உங்கள வெளில கொண்டு வந்துருவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு...

நீங்க கவலை படாதீங்க...”

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...”

“என்ன...?” என்று அவனை கவனித்தாள்,

அவன் குனிந்தவாறே, “நீ இனி என்ன பாக்க வராத...”

“ஏன்..? எதுக்கு இப்டி பேசுறீங்க..? நான் என்ன பண்ணேன்...”

“நீ எதுவும் பண்ணல... இருந்தாலும் வேண்டாம்...”

“எனக்கு புரியல... தெளிவா சொல்லுங்க..”

அவர்கள் பேசுவது கேட்டு கொண்டிருந்த முத்து, “பாத்தியாம்மா... நான் சொன்னேன்ல... அவன் உன்ன கலட்டி விட பாக்குறான்னு... இப்போவாது புரிஞ்சுக்கோ...”

“அவர் சொல்லுறது தான் சரி... நீ என்ன விட்டு விலகி இருக்குறது தான் உனக்கு நல்லது.”

“ஏன் கெளதம் நீங்க என்னை வர வேண்டாம், விலகி போன்னு சொல்லுறீங்க..?”

“என்னால நீ ரொம்ப கஷ்ட படுற... அதுவும் இல்லாம”

அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவள் இடைமறித்து, “நிறுத்துங்க... ஏன் இப்டி பேசுறீங்க..? உங்க கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல இப்டி பேசாதீங்கன்னு... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...”

“நான் இப்போ கொலைகாரனா நிக்கிறேன்...

நான் வெளில வருவேனா என்னனே தெரியல..?

நீயும் என்கூட இருந்து கஷ்ட படுறத பாக்குற சக்தி எனக்கு இல்ல...”

“என்ன கஷ்டம் வந்தாலும் சரி, உங்கள விட்டுட்டு போக மாட்டேன்...

நீங்க மோதல பயப்படாதீங்க...

நீங்க கொலை பண்ணல, யாருக்கும் கெடுதல் பண்ணல, அப்பறம் ஏன் நீங்க பயப்படுறீங்க...?

நான் இருக்கேன் உங்களுக்கு..”

“நான் அதுக்காக சொல்லல சௌந்தர்யா...

என்னோட உறவா நினைக்கிரவுங்க எல்லாம் என்னை விட்டுட்டு பிரிஞ்சு போய்டுறாங்க...

என்னோட அம்மா, அப்பா தான் உலகமா இருந்தேன், அவுங்க என்னை விட்டுட்டு போனாங்க..

ஏன் மேல பாசமா இருந்த சிவகுரு அய்யாவும் போய்ட்டாரு...

அப்பறம் என் உலகமாவே என்னோட நண்பர்கள் தான் இருந்தாங்க...

இப்போ அவுங்களும் இல்ல...

என்னால தான் எல்லாருக்கும் இந்த நிலைமை...

இப்போ என்கூட இருக்குறது நீ மட்டும் தான்...

நாளைக்கு உனக்கும் அந்த நிலைமை வர கூடாது...

இனியும் என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம்...

நான் தனியாவே இருக்கேன்... அது தான் நல்லது...” என்று கண்களை துடைத்து கொண்டே அவளது முகத்தை பாராமல் தன்னை தானே வருத்தி கொண்டு பேசினான்.

அவன் பேசியதை கேட்டதும் சௌந்தர்யாவின் கண்களிலும் நீர் வழிந்தது. அப்போது தான் அவள் ஒன்றை உணர்ந்தாள். கெளதம் மனசு மிகவும் காயப்பட்டு இருக்கு, அதை நாம் சரி செய்யாமல் நாமும் மேலும் காய படுத்தி இருக்கிறோம் என்பது புரிந்து விட்டது.

இத்தனை நாளாக தன்னுடைய உறவுகள் அனைத்தும் தன்னை விட்டு செல்கின்றன, அதற்கு தானே காரணம், என்று தன்னையே வருத்தி கொண்டு மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தான் கெளதம். மனதளவில் அவன் மிகவும் தனிமையை உணர்ந்திருந்தான். அன்பிற்காக அவன் ஏங்கி, அனைவரையும் உறவாக எண்ணி, அவர்கள் பிரியும் போது எல்லாம் அவன் தனியே வருந்திருக்கிறான், என்றாளும் அவன் வெளியே சாதரணமாக இருந்து அனைவரிடமும் அன்பாக பழகினான். இதுவரை தன்னுடைய மனசில் உள்ளதை யாரிடமும் சொல்லியது இல்லை. இன்று தான் சௌந்தர்யாவிடம் கூறுகிறான்.

இத்தனை நாளாக நாம் இவரோடு பழகியும் இதை அறியாமல் இருந்திருக்கிறோம் என்று அவள் வருத்த பட்டாள். இனி நாம் அவருக்கு துணையாக மட்டும் இன்றி எல்லா உறவாகவும் நாம் தான் இருக்க வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்தாள்.

அவனது கைகளை பாசத்தோடு பற்றினாள். அவன் நிமர்ந்து கூட பார்க்கவில்லை, அவன் கண்கள் கலங்கி இருந்தன. அவனது தலை நிமிர்த்தினால்,

“நான் சொன்னத மறந்துடீங்களா..?

என்னோட வாழ்க்கை இனி உங்க கூட தான்... என்ன நடந்தாலும் சரி...

உங்கள என்னால பிரிச்சு பார்க்க முடியாது...

நீங்க என்னோட உயிர் மாதிரி... நீங்க இல்லைனா நான் இல்ல...

உங்களுக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு நினைக்கிறேன்...

நீங்க ஜெயிலுக்கே போனாலும் சரி... நான் உங்களுக்காக தான் வாழுவேன்...

எனக்கு நீங்க மட்டும் தான் முக்கியம்... வேற எதுவும் கிடையாது...

உங்களுக்காக நான் எதுனாலும் பண்ணுவேன்... ஏன்.. என்னோட உயிரை கூட கொடுப்பேன்...

நீங்க மட்டும் இப்டி பேசாதீங்க... அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...”

அவளது பேச்சு அவனுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவனது கண்களில் சிறு சந்தோசம் தெரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றிருந்தனர். கண்களிலே அன்பையும் காதலையும் பரிமாறி கொண்டனர் இருவரும். அது போலீஸ் ஸ்டேஷன் என்பதை மறந்து இருவரும் கைகளை பிடித்தே நின்றிருந்தனர்.

“ஏய்..?! என்ன இது ஸ்டேஷனா இல்ல, பார்க்கா..? என்ன நினச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்... கிளம்புமா, கொஞ்சம் விட்ட ஓவரா பண்ணிக்கிட்டு..” என்று கான்ஸ்டபிள் முத்து சத்தம் போட, இருவரும் கைகளை விடுத்து தள்ளி நின்றனர்.

“நான் எதுக்காக வந்தேனே சொல்ல மறந்துட்டேன்..”

“என்ன விஷயம்..? சொல்லு..”

“வக்கீல் அய்யா உங்ககிட்ட ஏதோ கேக்கணும்ன்னு சொன்னாங்க.”

“ஓ! என்னவாம்..? உன்கிட்ட எதுவும் சொன்னாரா..?”

“இல்ல... எனக்கு எதுவும் தெரியாது.”

“அவர் நாளைக்கு இல்லைனா, நாளானைக்கு வருவேன்னு சொன்னார்..”

“சரி.. இத சொல்லவா நீ வந்த..?!”

“நான் உங்கள பாத்து இத பத்தி சொல்லிட்டு, வேற ஒன்னும் கேக்கணும்ன்னு வந்தேன்...”

“என்ன கேக்கணும்..?”

“தப்பா நினைக்காதீங்க..? அன்னைக்கு சைமன் நிஜமாவே அங்க வந்தானா..?”

“தெரியல..”

“நீங்க பாக்கலையா..?”

“இல்ல நான் பாக்கள... ஏன் நீ அவன சந்தேக படுறியா..?”

“ஆமாம்.. இத நான் கோர்ட்லே கேக்க நினச்சேன்... அங்க பேச முடியல.. ஒரு வேல அவன் யாருக்காவது உதவி செய்யுறானா..?”

“சைமன் அப்டி பட்டவன் இல்ல..”

எரிச்சலுடன், “ம்ம்... இன்னும் நீங்க அவன நம்புறீங்களா..?”

“நான் நிஜமாவே சொல்லுறேன்... சைமன் நான் பழகின வரைக்கும் அப்டி பட்டவன் கிடையாது.. அவனுக்கு சட்டுன்னு கோபம் வரும், அவ்ளோ தான்... மிச்சப்படி அவன் ரொம்ப நல்லவன்...”

“நல்லவனா இப்படி நண்பனுக்கு துரோகம் பண்ணுவாங்களா..?”

“இத பத்தி நீ இனி பேசாத.. இத அப்டியே விட்டுரு...” என்று கூறி அவன் திரும்பி கொண்டான்,

“சரி, சரி.. நீங்க எதுவும் நினைக்காதீங்க.. நான் இனி இத பத்தி பேசல... அவன் நல்லவனாவே இருக்கட்டும்..”

“நாளைக்கு வக்கீல் சார் வரும் போது, நீ வருவியா..?”

“எதுக்கு கேக்குறீங்க...? நான் வரனுமா..?”

“அது... இல்ல ஒன்னும் இல்ல... உன் இஷ்டம்..”

“என்னனு சொல்லுங்க..?”

கான்ஸ்டபில் முத்து உள்ளே வந்தார், “ஏம்மா! உனக்கு சொன்னா புரியாதா..? கிளம்பு..”

“ஒரு நிமிஷம் அண்ணா..” சௌந்தர்யா கெஞ்சினாள்,

“அதெல்லாம் முடியாது.. போம்மா நீ..” என்று கடுகடுத்தார்.

“சௌந்தர்யா நீ கிளம்பு.. நான் அடுத்து சொல்லுறேன்..” கெளதம் அவளை போகுமாறு கண்ணசைக்கிறான்.

“நான் நாளைக்கு வர்றேன்...” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டாள்.

மறுநாள் காலையே சௌந்தர்யா வக்கீல் வீட்டிற்கு சென்று பார்க்கிறாள். நடராஜர் அவளிடம் இன்று கெளதமை பார்க்க நேரம் இல்லை, அடுத்து செல்லுவோம் என்று கூறுகிறார். அவள் நடராஜரிடம்,

“கெளதம் கிட்ட ஏதோ கேக்கணும்ன்னு சொன்னீங்களே அய்யா... நேத்து நான் கௌதம பாக்க போனப்போ அவரு என்னன்னு கேட்டாரு... எனக்கு தெரியல நான் கேட்டு சொல்லுறேன்னு சொன்னேன். நான் இன்னைக்கு அவர பாக்க போறேன், சொன்னீங்கன்னா நான் கேட்டுட்டு வர்றேன் அய்யா... சொல்லுறீங்களா...?” என்று கேட்ட உடன்,

ஏதோ யோசித்தார் பின், “நான் கேட்டுக்கிறேன், நீ ஒன்னும் கேக்க வேண்டாம்... ”

“சரி அய்யா...”

“ம்ம்... அதுவும் இல்லாம நீ அடிகொருக்க அங்க போகாத,”

“எதுக்கு அய்யா நீங்க அப்டி சொல்லுறீங்க..?” என்று யோசனையோடு கேட்டால்,

“சொன்னா கேளும்மா, எதுக்கு எடுத்தாலும் கேள்வி கேட்டுட்டு.. போ...” என்று எரிச்சலோடு பேச, சௌந்தர்யாவிற்கு கோபம் வந்தது. ஆனாலும் அவள் அதை வெளியே காட்டாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

அதே நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபில் அனைவரும் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்காக சென்று விட, கான்ஸ்டபில் முத்து மட்டும் ஸ்டேஷனில் இருந்தார். கான்ஸ்டபில் முத்து கெளதமிடம் சென்று பேசுகிறார்.

செல்லுக்கு வெளியே நின்று உள்ளே பார்த்தார், கெளதம் அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான். கெளதமை அழைத்து அவனை வெளியே வர சொல்லி விட்டு அவர் சென்று சீட்டில் அமர்ந்தார். அவன் வெளியே வந்து கான்ஸ்டபில் முன் வந்து நின்றான்.

“சார்...”

“ம்ம்ம்... வந்தாச்சா, உண்மையா சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது..?”

“சார்.. நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல சார்..”

“ஏன் இப்போ சொல்ல மாட்டியா..?” என்று கண்களை சுருக்கி கோபத்தோடு கேக்க,

“சார் நான் கொலை பண்ணல.”

“ஏய்!? நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்லுற, திமிரா..?”

“அன்னைக்கு நான் முருகன தேடி போனேன், அவன காணோம், நான் திரும்பி வந்துட்டேன்.. அவ்ளோ தான் சார் நடந்துச்சு.”

“முருகன் கூட என்ன சண்டை அன்னைக்கு..?”

“நாங்க சண்டை எதுவும் போடல..”

“அப்போ என்ன பேசுனீங்க..? அவன் என்ன சொன்னான்..?”

“அவன் சந்தோஷ் பத்தி பேசினான், அப்பறம் போய்ட்டான். அவ்ளோ தான் சார்.”

“நான் உன் நல்லதுக்கு தான் கேக்குறேன், சொல்லுப்பா..”

“நிஜமாவே அவ்ளோ தான் சார்.”

கௌதமையே சிறிது நேரம் பார்த்தார். பின்,

“நீ போ..?”

கெளதம் மறுபடியும் உள்ளே சென்று விட, முத்து வெளியே சென்று யாருக்கோ கால் செய்கிறார்.

“ஹலோ... சார், நான் கான்ஸ்டபில் முத்து பேசுறேன்.”

எதிர்முனையில் இருந்து ஒரு ஆண் குரல் பேசுகிறது.

“சார்.. என்ன பண்ணாலும் அவன் கிட்ட இருந்து ஒன்னும் வாங்க முடியல, கடைசி வரைக்கும் ஒன்னும் சொல்ல மாட்டுறான்.”

மறுபடியும் எதிர் முனையில் ஏதோ பேச,

“சார்.. நான் எப்டிலாமோ கேட்டு பாத்தேன் அவன் கிட்ட இருந்து ஒன்னும் வாங்க முடியல. அவனுக்கு எதுவும் தெரியாது போல..”

சிறிது நேரம் எதிர் முனையில் அமைதி, பின் ஏதோ சொல்ல,

“ஓ.. அப்டி சொல்லுறீங்களா.. சரி,சரி.. இன்னைக்கு யாரும் இல்ல. நான் பண்ணுறேன்.. நீங்க கவலை படாதீங்க..”

தொடரும்...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
yaar muruganai kolai seithathuo_Oo_Oo_Oo_Osanthosha allathu avan sithappava:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:muthu enna seiya porar gowthamai:unsure::unsure::unsure::unsure::unsure:interesting epi sis(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top