• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 13

யாருமே எதிர் பார்க்கவில்லை முருகனை கடத்த சொன்னது கந்துவட்டி பாலு என்று. முருகன் வேகமாக சென்று அவனிடம், “நீ உண்மைய தான் சொல்லுறியா..?” என்று சந்தேகத்தை கேட்கவும் செய்தான்.

“ஆமாம்.”

இன்ஸ்பெக்டர், “உண்மையை தானா..?! இல்ல அடிக்கு பயந்து பொய் சொல்லுறியா..?”

“இல்ல சார்... அவர் தான். எனக்கு வேற எதுவுமே தெரியாது. அவர் தான் இந்த முருகன கொண்டு வந்து கொடுத்து அடிச்சு வைக்க சொன்னாரு..”

இன்ஸ்பெக்டர், “என்னைக்கு சொன்னாரு..?”

“அன்னைக்கு அந்த கொலை நடந்ததே, அன்னைக்கு தான் நைட்டு கூட்டிட்டு வந்து அவுங்க ஆளுக விட்டாங்க.. அடைச்சு வைக்க சொன்னாங்க..”

“நீ வேற ஊருல இருக்கேள..? அவருக்கு தான் வேலை செய்றியா..?!”

“ஆமாம் சார் நான் அவருக்கு வேலை செய்யல.. அவரு எப்போவாது பணம் வசூலிக்க தான் என்ன கூப்பிடுவாரு.. இந்த முறை தான் இப்படி பண்ண சொன்னாரு... நிறையா பணம் கொடுக்குறாருன்னு ஒத்துக்கிட்டேன்.”

“சரி உனக்கு அன்னைக்கு நடந்த கொலைய பத்தி ஏதாவது தெரியுமா..?”

“இல்ல சார் தெரியாது. சார் என் பொண்டாட்டியயும் குழந்தைகளையும் விட்டுருங்க. அவுங்கள அடிக்காதீங்க, அவுங்களுக்கு எதுவும் தெரியாது.”

“ஏய்..! இங்க வாம்மா..” என்று இன்ஸ்பெக்டர் அழைக்க, அவனது மனைவி அங்கு வருகிறாள். அவளுக்கு எந்த காயமும் இல்லை.

அவனுக்கு பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. அப்போது தான் தோன்றியது அவனது மனைவிக்கு எந்த காயமும் இல்ல, அவள் பின் எதற்கு அழுதாள் என்று.

அவனது முகத்தை பார்த்து சிரித்து கொண்டே இன்ஸ்பெக்டர் அவனது சந்தேகத்திற்கு விடை அளித்தார்.

“உன் கிட்ட இருந்து உண்மையா வரவழைக்க, நாங்க தான் உன் மனைவிய அடிக்கிற மாதிரி சவுண்ட் விடுவோம், நீ அழுகுற மாதிரி நடின்னு சொன்னோம். அவ பண்ணா, நீயும் ஒத்துகிட்ட..”

அவனுக்கு நடந்தது அப்போது தான் புரிந்தது, அவசர பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று எண்ணினான். அதே போல் முருகனும் சைமனும் இன்ஸ்பெக்டரை தவறாக நினைத்து விட்டோமே என்று எண்ணி வருந்தினர்.

தேவன் இன்ஸ்பெக்டரிடம் சென்று, “சார் உடனே அந்த பாலுவ அர்ரெஸ்ட் பண்ணுங்க... அவனுக்கு அந்த கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு.. அதான் முருகன் கடத்த சொல்லிருக்கான்...”

இன்ஸ்பெக்டர், “ஆமாம். கண்டிப்பா அந்த ஆளுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கும். அவன் தான் கொலைய இவன் பாத்துருப்பானோன்னு முருகன கடத்திருக்கான்..”

“ஆமாம் சார். அந்த ஆள விசாரிச்சா உண்மை வெளில வந்துரும்.”

“கான்ஸ்டபில் கிளம்புங்க.. அந்த கந்துவட்டி பாலுவ அர்ரெஸ்ட் பண்ணுவோம்..” என்று எழுந்து கூறி கொண்டே வெளியே செல்கிறார்.

“ஒரு வழியாக கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சது. இனி நம்ம கெளதம் வெளில வந்துருவான். இப்போ தான் நிம்மதியா இருக்கு..” என்று சைமன் கூறவும்,

முருகன், “இன்னும் எதுவும் முடியல.. அவன இங்க கொண்டு வரட்டும்.. அவன் யார கொன்னான், எதுக்கு கொன்னான்ன்னு தெரிஞ்சுக்கனும்.. அப்போ தான் எல்லாம் முடியும்.” என்று முருகன் கூறுகிறான்.

“அதான் அந்த ஆள பிடிக்க போலீஸ் போயிருக்காங்கள.. இனி நாம கவலை பட வேண்டியது இல்ல... நான் இந்த சந்தோஷமான விசயத்த சௌந்தர்யா, சந்தோஷ் எல்லார் கிட்டயும் போய் சொல்லிட்டு வர்றேன்.” என்று கூறிக்கொண்டே சந்தோஷத்துடன் கிளம்பினான் சைமன்.

தேவன், “நீயும் கிளம்பு முருகா.. நான் மற்ற பார்மாலிட்டி எல்லாம் பாத்துக்கறேன்..”

“இல்ல நான் போகல.. எனக்கு எல்லாம் முழுசா தெரிஞ்சுக்காம போனா எனக்கு நிம்மதியே இருக்காது... போக மனசு இல்ல... நான் இருந்து அந்த ஆள விசாரிக்கிறத பாத்துட்டு அவன் எதுக்கு பண்ணான்னு சொல்லுறான்னு கேட்டுட்டு போகுறேன்..”

அவனை அனுப்பவோ சமாளித்து பேசவோ முடியாது என்பது தேவனுக்கு புரிந்தது. “சரி” என்று கூறி அவனை தடுக்காமல் இருக்க விட்டான். போலீஸ் சென்று அதிக நேரம் ஆகியும் வரவில்லை.

முருகன் தான் பதட்டமாக இருந்தான். அவனுக்கு கற்பனை பலமாக இருந்தது. பாலு தப்பித்து விட்டானா..? இல்லை அவனை பிடிக்க செல்லும் போது வேற ஏதாது பிரச்சனை வந்ததா..? என்று கற்பனை செய்து பயந்து கொண்டிருந்தான்.

தேவனை பார்த்து, “என்ன இன்னும் போலீஸ் வரல..? என்ன நடந்துருக்கும்..?” என்று முருகன் கூறுகிறான்.

தேவன் முருகனை பார்த்து, “என்ன நீ இவ்ளோ பதட்டமா இருக்க..? அதான் எல்லாம் நல்லதா நடக்குதுல, கண்டிப்பா இனியும் நல்லதா தான் நடக்கும்.. நீ தேவை இல்லாம எதையும் யோசிக்காத..” என்று கூறி அவனது இந்த செயலை நினைத்து சிரித்தான்.

மனதில் ‘ப்ரெண்ட்ஸ் மேல எவ்ளோ பாசம் வச்சுருக்கான் இப்டி ஒரு ப்ரெண்ட் கிடைக்க நாங்க எல்லாரும் கொடுத்து வச்சுருக்கணும். ப்ரெண்ட்ஸ்காக எப்டி உருகுறான்..’ என்று எண்ணி பெருமை கொண்டான்.

அவன் கூறுவது உண்மை என்று புரிந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் முருகன் இல்லை. அவனுக்கு எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்பிக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. பதட்டத்தில் அங்கும் இங்கும் நடந்தான். வாசலுக்கு அடிக்கொருமுறை சென்று பார்க்கவும் செய்தான்.

வெகு நேரம் கழித்து போலீஸ் வாகனம் வரும் சத்தம் கேட்டு வேகமாக சென்று பார்த்தான். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபில் அனைவரும் வண்டியில் இருந்து இறங்கி வருகின்றனர். அவர்கள் பாலுவை அர்ரெஸ்ட் பண்ணி கூட்டி கொண்டு வர வில்லை.

முருகனின் பயம் உண்மை ஆனது. இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து கோபமாக கையில் இருந்த தொப்பியை மேஜையில் தூக்கி எறிந்தார். தேவனுக்கும் இப்போது என்ன நடந்தது என்ற ஆவல் அதிகரித்தது.

முருகன், “என்ன சார்.. அந்த ஆள அர்ரெஸ்ட் பண்ணலையா..?”

இன்ஸ்பெக்டர், “ஒன்னும் நடக்கல, அந்த ஆளு சென்னைக்கு போயிருக்கானாம்..”

“சார் அவன் தப்பிச்சுட்டானா..?”

“தெரியல, அவன் நமக்கு உண்மை தெரிஞ்சுருச்சுன்னு தப்பிச்சு போயிட்டானா..? இல்ல உண்மையாவே எதுவும் வேலையா போயிருகானான்னு தெரியல..?” என்று குழப்பத்தில் சொல்லுகிறார்.

முருகன், “அவன் கண்டிப்பா தப்பிச்சு தான் போயிருக்கான்... இப்போ நாம எப்டி அவன பிடிக்குறது..?” என்றான்.

இன்ஸ்பெக்டர், “நான் கமிஷனர் கிட்ட இன்பார்ம் பண்ணிருக்கேன்... அவரு சென்னைல வச்சு அர்ரெஸ்ட் பண்ண அங்க இருக்க போலீஸ்க்கு சொல்லிருக்காரு.. எப்டியும் அவன இன்னைக்குள அர்ரெஸ்ட் பண்ணிருவாங்க. நாளைக்கு அவன கோர்ட்ல ஒப்படைக்கணும். ஒப்படைப்பேன்..” என்று தீர்க்கமாக சொல்லினார்.

தேவன், “அது சரி சார்.. ஆனா அந்த இறந்து போனது யாரு..? அது எப்டி நாம கண்டு பிடிக்குறது..?”

முருகன், “ஆமாம் சார். போன முறையே ஜட்ஜ் அது எல்லாம் கேட்டாரு..?”

இன்ஸ்பெக்டர், “அவனோட ஆளுகள விசாரிச்சா எந்த உண்மையும் சொல்ல மாட்டுறாங்க.. இத வேற மாதிரி டீல் பண்ணனும்..”

இன்ஸ்பெக்டர் சொல்வது அவர்களுக்கும் சரி என்று பட்டது. “ஆனா எப்டி விசாரிக்க போறீங்க சார்..?!” என்று சந்தேகத்தோடு முருகன் கேட்டான்.

“அவனோட இடத்த நல்ல சோதன போடலாம்.. அப்பறம் ஏதாவது க்ழு கிடைக்குதான்னு பார்ப்போம்... அவனுகள அர்ரெஸ்ட் பண்ண கேட்டுருக்கேன்.. ஆர்டர் வரவும் போய் அர்ரெஸ்ட் பண்ண வேண்டியது தான்..”

“ம்ம்...” என்று சமாதானத்துக்கு சொல்லினான். ஆனால் சோதனை செய்து எதுவும் கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது..? எப்படி கண்டு பிடிப்பது..? என்று சிந்தித்து கொண்டிருந்தான்.

தேவன், “இந்த கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா..?”

“அத கரெக்ட்டா சொல்ல முடியல சார்... அந்த ஆள விசாரிச்சா தான் நமக்கு எல்லாம் தெரிய வரும். இருந்தாலும் அந்த ஆளு தான் அப்டின்னு நினைக்கிறேன்...” என்று இன்ஸ்பெக்டர் தனது எண்ணத்தை சொல்லினார்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“அந்த ஆளு தான் அப்டின்னா, கொலைக்கு என்ன மோடிவ்வா இருக்கும்..?” என்று தேவன் சந்தேகத்தை சொன்னான்.

முருகன், “அந்த ஆளு இப்போ ஏதோ கட்சில சேர்ந்ததா கேள்விபட்டேன். ஒரு வேல இது அரசியல் கொலையா இருக்குமா..?” என்று எல்லாரையும் சந்தேகத்தில் அதிர்ச்சியாக்கினான்.

இன்ஸ்பெக்டர் வேகமாக, “அப்டி இருக்காது.”

தேவன், “அது எப்டி அவ்ளோ உறுதியா சொல்லுறீங்க..?”

இன்ஸ்பெக்டர் சாதரணமாக, “அப்டி இருந்தா அவருக்கு பெரிய சப்போர்ட் இருந்துருக்கும்.. அதுவும் இல்லாம அவரு இன்னும் அரசியல்ல பெரிய ஆளா ஆகல. அதுனால அரசியல் சம்பந்த பட்ட கொலையா இருக்காது..

எனக்கு தெரிஞ்சு பணம் வாங்கின யாராது கொடுக்காம இருந்துருப்பாங்க.. அதுக்கு தான் இப்டி பண்ணிருப்பான் அந்த ஆளு..”

மாறி மாறி எல்லாரும் அவர்களது சந்தேகத்தை கூறி குழம்பி கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் கூறுவது ஒத்து போவதாக தோன்றியது. அதனால் முருகன் “அப்போ அந்த ஆளு கிட்ட யாரு எல்லாம் பணம் வாங்கினாங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் நல்லா இருக்கும். அது எப்டி தெரிஞ்சுக்குறது..?”

இன்ஸ்பெக்டருக்கு கால் வருகிறது. கமிஷ்னர் கால் செய்து பாலுவை பிடிக்க சென்னை காவலர்களுக்கு தெரிவித்துள்ளத்தை சொல்லுகிறார். பின்பு இன்ஸ்பெக்டர் கமிஷனரிடம் அந்த பாலுவுக்கு சொந்தமான எல்லா இடத்தையும் சோதனை செய்ய அனுமதி பெறுகிறார்.

“வாங்க போகலாம்..” என்று கூறி கொண்டு இன்ஸ்பெக்டர் முருகன், தேவன் கான்ஸ்டபில் அனைவரும் சேர்ந்து அந்த பாலுவின் இடத்தை சோதனை செய்ய செல்கின்றனர்.

இடத்தை முழுதும் தேடி எந்த பலனும் இல்லை. கடைசியில் அங்கிருந்த அடி ஆட்களை அடித்து பணம் குடுக்கல் வாங்கல் எல்லாம் எதில் எழுதி வைப்பார்கள் என்று தெரிந்து அதை எடுத்து பார்த்தனர். ஒரு நோட்டில் பணம் வாங்கியவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், வாங்கிய பணத்திற்கான டீட்டைல்ஸ் அனைத்தும் இருந்தது. மற்றறொரு நோட்டில் வட்டி கட்டுவதற்கான குறிப்புகள் இருந்தது.

பார்த்தவுடன் மலைத்து தான் போய் விட்டனர் அனைவரும். அதில் மொத்தம் இருநூற்று ஐம்பத்தி எட்டு பேர் கடன் வாங்கி இருப்பதாக தெரிந்தது. இதனை பேருக்கு கொடுக்கும் அளவுக்கு இவனுக்கு என்கிருந்து பணம் வரும் என்ற சந்தேகமே வந்தது.

இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் யோசித்தவாறே, “இத்தன பேர நாம எப்போ விசாரிச்சு, தெரிஞ்சுக்க போறோமோ..?” என்று மலைப்புடன் கூறினார்.

தேவன், “சார் அதெல்லாம் தேவை இல்ல.. ஒருத்தர கொலை பண்ணனும் னா காரணம் என்னவா இருக்கும்ன்னு நினைக்கிறீங்க..?

கண்டிப்பா கொடுக்க வேண்டிய பணம் அதிகமா இருக்கும்... பணம் கட்டாம அதிக தடவ ஏமாத்திருப்பாங்க.. அதுனால தான் இப்டி கொலை பண்ணிருப்பான்.

நாம இப்போ இதுல யாரு யாரு பணத்த கட்டாம இருக்குறதுன்னு பார்க்கணும், அப்பறம் அதுல யாரு பணம் அதிகமா இருக்குன்னு தெரிசுக்கணும். அது போதும்.

அப்பறம் அவுங்கள மட்டும் விசாரிச்சா தெரிஞ்சுடும்.”

தேவன் கூறியது கேட்டு அனைவரும் அவனை புகழ்ந்தனர். புத்திசாலித்தனமாக அவன் கூறிய யோசனை உதவியாக இருந்தது. அவன் கூறியது போல் தேடி பிடித்து எடுத்ததில் மொத்தம் இருபது பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்தனர். எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே இருந்தது. எவரும் காணாமல் போனதாக கூட தகவல் இல்லை.

தகவல் ஏதாவது தெரிந்தாலோ இல்லை அந்த பாலுவை பிடித்தால் சொல்லுமாறு சொல்லிவிட்டு முருகனும், தேவனும் கிளம்பினர்.

முருகன் நேராக வீட்டிற்கு சென்றான். உண்மை எதுவும் தெரியாததால் அவனுக்கு இன்னமும் ஒரு கலக்கம் இருந்தது. ஏதோ நெருடலாக இருந்தது.

வேலைகார பெண் வந்து, “சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தம்பி, வந்து சாப்பிடுங்க.” என்று கூறிவிட்டு சென்றார். முருகன் எழுந்து சென்று சாப்பிட அமர்ந்தான். சாப்பிட இஷ்டம் இன்றி யோசனையில் இருந்தான்.

சிவசங்கர் அப்போது தான் வருகிறார். அவர் முருகனை பார்த்ததும், “என்னாச்சு முருகா..? சாப்பாடு தட்டுல அப்டியே இருக்கு.. நீ ஏதோ யோசனையிலே இருக்க..?”

“அது ஒன்னும் இல்ல சித்தப்பா..” என்று கூறி சமாளித்தான். சிவசங்கர் உள்ளே சென்று உடை மாற்றி கொண்டு வந்து அவரும் சாப்பிட அமருகிறார்.

“நான் எடுத்து வைக்கவா சித்தப்பா..?” என்று கூறி கொண்டே கரண்டியை எடுத்தான். அவர், “நான் வச்சுகுர்றேன்..” என்று சாப்பாடு எடுத்து வைக்கிறார்.

முருகன் சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது சித்தப்பா அவனிடம், “முருகா..”

“ம்ம்... சொல்லுங்க சித்தப்பா..”

“அது வந்து...” எழுக்கிறார். பின், “உன் தங்கச்சி எப்டி இருக்கா..? ஏதோ ஹாஸ்பிட்டல்ல இருக்கன்னு சொன்னாங்க.. என்னாச்சு..?” என்று கேக்கிறார்.

என்ன தான் பிரிந்து இருந்தாலும் பாசம் விட்டு போகாது என்பது உண்மை தான். தன் மகளுக்காக சிவசங்கர் துடிப்பது முருகனுக்கு புரிந்தது. அவனுக்கு காதம்பரியை பற்றி அப்பா கேட்டது அவள் மீது இருந்த கோபம் குறைந்தது போல் தோன்றியது. சந்தோஷ பட்டான்.

“அவ நல்ல இருக்கா சித்தப்பா... சரியா சாப்பிடாதனால மயங்கி விழுந்துட்டா, அவ்ளோ தான். மற்ற படி வேற எந்த பிரச்சனையும் இல்ல சித்தப்பா.. நீங்க கவலை படாதீங்க..”

“அவுங்க அவள சரியா பாத்துக்க கூட மாட்டாங்களா..? கல்யாணத்துக்கு முன்னாடியே இப்டி அந்த சந்தோஷ் கவனம் இல்லாமா நம்ம கதம்பரிய கஷ்ட படுத்துறான்.”

அவுங்க கல்யாணத்துக்கு மறைமுகமா சித்தப்பா சம்மதம் சொல்லிட்டாருன்னு சந்தோஷபட்டான் முருகன்.

“அப்டியெல்லாம் இல்ல சித்தப்பா.. அன்னைக்கு சந்தோஷ் எங்க கூட கோர்ட்ல இருந்தான். அங்க வீட்டுல அப்பா, அம்மா அவள சாப்பிட சொல்லிட்டு தான் இருந்துருக்காங்க. அவ தான் வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்துருக்கா. அதான் இப்டி.

அவளுக்கு உங்கள கஷ்ட படுத்திட்டு அவ மட்டும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க முடியல, அது தான் பிரச்சன.”

தங்கையின் நிலையை சித்தப்பாவிற்கும் புரியுமாறும் அதேசமயம் அவளை நல்லவலாக்கியும் பேசினான்.

சிறிது நேரம் அங்கு எதுவும் பேச்சு இல்லை. இருவரும் சாப்பிட்டு முடித்தனர். முருகன் செல்லும் போது சித்தப்பா அவனை கூப்பிட்டார்.

“முருகா...!” அவன் திரும்பி பார்த்தான். “நீ காதம்பரிய நாளைக்கே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா.. அடுத்த முகூர்த்தத்துல அவுங்களுக்கு நாமலே கல்யாணம் பண்ணுவோம்.”

முருகனுக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது. சித்தப்பாவை கட்டி பிடித்து “ரொம்ப தேங்க்ஸ்ப்பா.. நீங்க இதுக்கு ஒத்துக்கிட்டத காதம்பரி கேட்டா ரொம்ப சந்தோஷ படுவா... அதுவும் நீங்க வந்து அவள கூட்டிட்டு வந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷ படுவா...”

“சரிப்பா... ஆனா நான் அவுங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டேன்.”

“ஏன் அப்பா அப்டி சொல்லுறீங்க..?”

“இல்ல எனக்கு அங்க வர இஷ்டம் இல்ல. நீங்க நாளைக்கு அந்த கெளதம் கேஸ் விசயமா கோர்ட் போவீங்கள, அப்போ அங்க காதம்பரிய வர சொல்லு. நானும் அங்க வர்றேன். அப்டியே அவள கூட்டிட்டு வந்துடலாம்.”

“சரிப்பா.. அது கூட சரி தான். நாளைக்கோட கேஸ் முடிஞ்சு கெளதம் வெளில வந்துருவான். நாம எல்லாரும் சேர்ந்து ஏதாது ஹோட்டல் போய் லஞ்ச் சாப்பிட்டு, அப்டியே காதம்பரி சந்தோஷ் கல்யாணத்த பத்தி பேசி முடிவு பண்ணிட்டு வந்துடலாம்.”

“சரிப்பா... நீ சொன்னது போல செய்யலாம். நீ அவுங்க எல்லார் கிட்டயும் சொல்லி வர சொல்லு.”

“சரிப்பா..”

சிவசங்கரும் சந்தோஷத்தில் அழுதார். முருகன் சென்று காதம்பரிக்கு போன் செய்து பேசுகிறான். விஷயத்தை தெரிந்து கொண்டதும் அங்கு அனைவரும் மகிழ்ந்தனர்.

“நான் சொன்னேன்ல அப்பா ஒத்துப்பாருன்னு... இனி எல்லாம் நல்லதா தான் நடக்கும். கோபம் இருக்க இடத்துல அதிக பாசமும் அக்கறையும் இருக்கும். சித்தப்பா உன்மேல அளவு கடந்த பாசம் வச்சுருக்காரு. உனக்காக தான் அவரு இருக்காரு. உன் கல்யாணம் எப்டி நடக்க போகுது பாரு..
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
‘எல்லாம் நல்லதா தான் நடக்குது. அப்போ கெளதம் கேஸ் நல்லபடியா முடிஞ்சு நாளைக்கு அவனும் வெளில வந்துருவான். நம்ம கஷ்டம், சங்கடம் எல்லாம் நாளைக்கு முடிவுக்கு வந்துடும்.’ என்று மனதில் சந்தோசப்பட்டு கொண்டிருந்தான்.

அடுத்த நொடியே அவனுக்குள் காலையில் நடந்த எல்லாம் நினைவுக்கு வந்தது. இன்ஸ்பெக்டருக்கு கால் செய்கிறான். அவர் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறுகிறார். பாலுவை இன்னும் பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார். கேட்டு இன்னும் உண்மை தெரியலையே என்று யார் அது இறந்தது என்று எண்ணி கொண்டிருந்தான்.

அப்போது வேலைகார பெண்மணி வந்து, “தம்பி...”

அவன், “என்ன அக்கா..?” என்றான்.

“தம்பி.. துணி துவைக்கனும், இருந்தா குடுங்க துவைக்க போறேன்.”

“ம்ம்.. இதோ தர்றேன்.” என்று கூறி கொண்டே ஆளுக்கு துணிகளை எடுத்து கொண்டே விசாரிக்கிறான்.

“என்ன அக்கா நீங்க துவைக்க போறீங்களா..? அந்த அக்கா வரலையா..?

“இல்ல தம்பி..”

“ஏன் அவுங்க ரொம்ப நாள் வரல..?” துணியை குடுத்து கொண்டே அக்கறையில் விசாரித்தான்.

“அவளுக்கு உடம்பு சரி இல்லையாம்.. அதான் இத்தன நாளா வரலாம். பாருங்க தம்பி இத கூட நான் போய் தான் கேட்டு தெரிஞ்சுருக்கேன். இத அவ யார் கிட்டயாது சொல்லி அனுப்பிருக்கலாம் ல... இப்டி இருந்தா அய்யா அவள வேலைய விட்டு அனுப்பிருவாருன்னு சொல்லிட்டு வந்தேன்.”

பேசிவிட்டு கிளம்பினார் அந்த பெண்மணி. அவர் கூறிய பின்னர் தான் முருகனுக்கு ஒரு யோசனை வந்தது. இன்ஸ்பெக்டருக்கு கால் செய்கிறான்.

“ஹலோ சார்.. நான் முருகன் பேசுறேன்.”

“இப்போ தான சொன்னேன் உங்களுக்கு..?”

“அது இல்ல சார்.. எனக்கு வேற ஒரு யோசனை வந்தது.”

“என்ன முருகன் நீங்க..?” என்று எரிச்சல் பட்டார்.

“சார் ஒருவேள கொலை பண்ணது அவன் கிட்ட வேல பாக்குற யாராது இருக்கலாம்ல. அந்த விதத்துல யோசிச்சு பாருங்க...”

அவன் கூறியதும் இன்ஸ்பெக்டருக்கும் சந்தேகம் வந்தது.

“இருக்கலாம் அப்டியும்.. அங்க நான் யாரு யாரு வேல பாக்குறான்னு ஒரு நோட்ல எழுதி வச்சுருந்தாங்க. அத பாத்தா தெரிஞ்சுடும். நான் விசாரிக்கிறேன்.”

“ம்ம்.. ஓகே சார். நானும் வர்றேன்.”

கிளம்பி ஸ்டேஷன் செல்கிறான். அங்கு இன்ஸ்பெக்டர் அவனது வருகைகாக காத்திருந்தார். “வாங்க முருகன்..” என்றார்.

“என்ன சார் போய் பார்த்து எடுத்துட்டு வந்துடீங்களா..? ஏதாவது தெரியுதா..?”

“நான் கான்ஸ்டபில் அனுப்பிருக்கேன். அவர் எப்டியும் இப்போ வந்துருவாரு. நீங்க வெயிட் பண்ணுங்க..”

கான்ஸ்டபில் வருகிறார். வேலை செய்யும் நபர்களின் டீட்டைல்ஸ் இருப்பதாக ஒரு நோட் தருகிறார். அதை வாங்கி பார்த்ததும் அதில் பதினைத்து பேர் இருந்தது. அதில் ஒரு பெயர் மட்டும் கடந்த ஒன்றை மாதங்களாக அடித்து வைக்க பட்டுள்ளது.

அதை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் முருகனை அழைத்து பார்க்க சொல்லுகிறார். முருகன் பார்க்கிறான். அதில் அவன் பெயர் தேவேந்திர முருகன் என்று எழுத பட்டிருந்தது.

முருகனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது, இருந்த நபரின் கையிலும் முருகன் என்று பச்சை குத்த பட்டிருந்தது.

“சார், எனக்கு இப்போ தான் ஞாபகம் வந்துச்சு, அந்த இறந்து போன ஆளோட கைல முருகன்னு பேரு இருந்துச்சு...”

“ஆமாம் முருகன். நீ சொன்னதுக்கு அப்பறம் தான் எனக்கும் ஞாபகம் வருது.”

“அப்போ இந்த ஆளு தான் கொலை செய்யபட்டவர்.”

“கரெக்ட். இது யாரு என்னன்னு விசாரிச்சா நமக்கு எல்லாம் தெரிஞ்சுடும். இதுல அவுங்க அட்ரஸ் இருக்கு..”

“அப்போ போய் விசாரிப்போமா சார்..”

“கண்டிப்பா.. நீங்க கூட வர்றீங்களா..?”

“எஸ் சார். நான் வர்றேன், நாம போய் விசாரிக்கலாம்.”

அவர்கள் கிளம்பி தேவேந்திர முருகனின் ஊரான திருச்சிக்கு செல்கின்றனர். அங்கு அவரது அட்ரஸ் சென்று பார்கின்றனர். அங்கு அவரது தாய் மட்டும் இருக்கிறார். அவரை விசாரித்ததில் தேவேந்திர முருகன் அவருக்கு ஒரே மகன் என்பதும், அவன் மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் அங்கு வேலைக்கு சென்றதாகவும் கூறுகிறார்.

மகன் அங்கு தான் இன்னும் வேலை பார்கிறான் என்று நினைத்து கொண்டு இருகின்றார். அவருக்கு வேற எதுவும் தெரியவில்லை. கடந்த ஒன்றை மாதங்களாக அவருக்கு மகன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்.

தனது மகனது கைகளில் முருகன் என்று பச்சை குத்திருக்கும் என்று சொல்லுகிறார் அந்த அம்மா. போலீஸ் சந்தேகம் உறுதியானது. இந்த தேவேந்திர முருகன் தான் இறந்தது என்று உறுதி செய்தனர்.

அன்று நடந்த அனைத்தையும் அவரிடம் கூறுகின்றனர். அந்த அம்மா மகனை இழந்த சோகத்தில் அதிகமாக அழுகிறார்.

அப்போது இன்ஸ்பெக்டருக்கு கால் வருகிறது. எடுத்து பேச வெளியே செல்கிறார். அந்த பாலுவை பிடித்து விட்டதாக தகவல் வருகிறது. அவனும் தான் தான் தன்னிடம் வேலை பார்த்த தேவேந்திர முருகனை கொலை செய்ததாக கூறுகிறார்.

தன்னிடம் இருந்த பணத்தை திருட முயற்சி செய்ததாகவும், அதனால் கோபம் கொண்டு அவனை கொலை செய்ததாகவும் அந்த பாலு வாக்குமூலம் தந்து இருப்பதாகவும் தகவல் வருகிறது.

இன்ஸ்பெக்டர் வந்து நடந்ததை முருகனிடமும், அந்த தாயிடமும் கூறுகிறார். அப்போது அந்த தாய் வேற ஒன்று கூறுகிறார். அதை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சியாகினர்.

முருகன் புரியாமல் நிற்கும் போது அவனுக்கு கால் வருகிறது. சௌந்தர்யா பேசுகிறாள். அவள் நேரடி சாட்சி கிடைத்து விட்டதாக கூறுகிறாள். மற்றும் ஒன்று கூறுகிறாள். அவனால் அதை ஏற்கவே முடியவில்லை.

தொடரும்...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
intersting sis iranthavan yaarunu kandu pidithu vittanga sooper............ murugan amma enna sonnanga.......... sondarya sonna neradi satchi yaaru waiting sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top