• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
மரணத்தின் மர்மம்​

அத்தியாயம் 6

கெளதம் நான் தான் கொலைக்கு காரணம் என்று கூறியவுடன் சௌந்தர்யாவிற்கு ஒன்றும் புரிய வில்லை. ஆனால் அவனது முகம் இறுகி போய் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் அவளுக்கு அவர் தானாக இப்படி சொல்லுறார.. இல்லை போலீஸ் அடிச்சு இப்படி சொல்ல வச்சுருக்காங்களா என்று சந்தேகம் எழுந்தது.

நீதிபதி ஏதோ பேச வரும் போது நடராஜர் இடைமறித்து, “சார்... என்னோட கட்சி காரற போலீஸ் அடிச்சு இப்படி சொல்ல வச்சுருக்காங்கன்னு நான் சந்தேக படுறேன். நீங்க அவசர பட்டு முடிவு சொல்லிடாதீங்க..” என்று பதற்றத்தோடு பேச,

அரசு வக்கீல் விடாமல், “அது எப்படி சார் இப்போ தான அவன் வாயால அவனே ஒத்துக்கிட்டான்.”

“சார்... நான் கௌதம விசாரிக்கணும்..” என்று நடராஜர் கூறவும்,

அரசு வக்கீல் இடைமறித்து, “என்ன சார்.. கேஸ் முடியுற ஸ்டேஜ்ல மறுபடியும் விசாரிக்கணும்ன்னு சொல்லுறீங்க... அவன் தான் சொல்ல வேண்டியது சொல்லிட்டான்ல...” என்று சொல்ல,

“நீங்க விசாரிங்க நடராஜர்...” என்று நீதிபதி அனுமதி கொடுக்கவும் அரசு வக்கீல் பேசாமல் சென்று அமர்ந்து விட்டார்.

“ஏன் நீங்க ஆரம்பத்துல நான் கொலை பண்ணலன்னு சொல்லிட்டு, இப்போ நான் தான் காரணம்ன்னு சொல்லுறீங்க..?”

கெளதம் பேசவில்லை, அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கோபமாக வந்தது நடராஜருக்கு, இருந்தும் மறுபடியும் கேட்டார்.

“சொல்லுங்க கெளதம்... ஏன் இப்படி சொல்லுறீங்க... யாரும் உங்கள அடிச்சு சொல்ல வச்சாங்களா..?”

“என்ன யாரும் சொல்ல வைக்கல.. நானா தான்...” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் வழிய பேச முடியாமல் தொண்டை அடைக்க, எச்சிலை விழுங்கி விட்டு,

“முருகன் என்கிட்டே நான் உயிரோட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனான்... நான் அவன தடுத்து நிருத்திருக்கணும் எப்டியாது. பண்ணாம விட்டுட்டேன் அதுனால தான் அவன் இறந்து போய்ட்டான். எல்லாத்துக்கும் நான் தான் காரணம், அவன் சொன்ன மாதிரி நான் அவனுக்கு நல்ல நண்பனா இல்லாமா போயிட்டேன்... நான் தான் காரணம்.. நான் தான் காரணம்...” என்று விம்மி அழுக ஆரம்பித்தான்.

கோர்ட்டில் இருந்த எல்லாரும் எரிச்சலடைந்தனர். கோபமாக வந்தது, விட்டால் அடித்து விடுவார் நடராஜர், இப்படி ஒரு லூசுக்கு நான் வாதாட வந்துருக்கேன் பாரு அய்யோ.. என்று மனதில் தன்னையே நொந்து கொண்டார். சௌந்தர்யாவுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. அவனது மனம் எப்படி பாடு படுகிறதோ என்று எண்ணி வருந்தினாள்.

நீதிபதி கோபமாக, “என்னப்பா நினைச்சுட்டு இருக்க.. நீ கொலை பண்ணுனியான்னு கேட்டா... நீ என்னன்னா விளையாண்டுட்டு இருக்க..”

“ஆமாம் சார்... இவன் நல்ல ட்ராமா பண்ணுறான் சார்.. இவன் இப்டி எமோசனல் ட்ராமா பண்ணா தான் வெளில விடுவாங்கன்னு நினைச்சுட்டு பண்ணுறான் சார்... எனக்கு என்னம்மோ சந்தேகமா இருக்கு சார்...?!”

“நீங்க ஏதாது விசாரிக்கனும்னா விசாரிங்க” என்று நீதிபதி அரசு வக்கீலிடம் சொல்ல, அவர் கெளதமிடம் விசாரிக்கிறார்.

“ஏன்ப்பா நீ இத கேஸ் ஸ்டார்ட் பண்ணும் போதே சொல்லிருந்தா சரி... நீ இப்போ சொல்லுற, ஏன்..?”

“நான் இத்தனை நாளா முருகன் இறக்கலன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு சிவசங்கர் அய்யா சொன்னதுக்கு அப்பறம் தான் முருகன் உண்மையிலே இறந்துட்டான்னு எனக்கு தெரிஞ்சது... ” பேசும் போதே அழுகை வந்தது கெளதமிற்கு.

நடராஜர் கெளதமை மறுபடியும் விசாரிக்கிறார்.

“நீ அன்னைக்கு சைமன், அதாது உன்னோட ப்ரெண்ட பாத்தியா..?”

“இல்ல சார்... நான் பாக்கலை..”

“ஆனா அவன் உன்ன கூப்பிட்டதா சொன்னானானே... அப்போ நீ ஒழிஞ்சு ஒழிஞ்சு போனதாவும் சொன்னான்... உனக்கு தெரியுமா நீ பாத்தியா, கேட்டியா...?

“சார் எனக்கு எதுவும் கேக்கல.. நான் ஒன்னும் ஒழிஞ்சு கிட்டும் போகல..”

“ஓகே... அப்போ அவன் பொய் சொல்லுறான்னு சொல்லுற...?!”

“இல்ல சார்... எனக்கு அது தெரியாது.”

நீதிபதி பக்கம் திரும்பி, “சார்... நான் சாட்சி குமாரவேல விசாரிக்கணும்...”

“ம்ம்ம்...” குமாரவேல் வருகிறார்.

“நீங்க அந்த வீட்டுல எத்தன வருசமா இருக்கீங்க...?”

“நான் அந்த வீட்டுல ஐஞ்சு வருசமா இருக்கேன்.”

“ஓகே... நீங்க அன்னைக்கு கெளதம் வீட்டுல இருந்து என்ன சத்தம் கேட்டீங்க..?”

“அது சார்... ‘ஏன் இப்டி பண்ண சொல்லு சொல்லு’ அப்டின்னு கேட்டுச்சு...”

“சரி... அது யாரு சொன்னா..? உனக்கு தெரியுமா..?”

“அது முருகன் தான் சார்...”

“எப்படி நீங்க அது முருகன் தான்னு சொல்லுறீங்க..? ஒரு வேலை அது கௌதமா இருந்துருக்கலாம்ல...?”

“சார் அது முருகன் பேசின மாதிரி தான் இருந்துச்சு...”

“அதெப்படி நீங்க உறுதியா சொல்லுறீங்க... நீங்க முருகன் கூட இதுக்கு முன்னாடி பேசிருக்கீங்களா...?”

“இல்ல சார்... நான் கெளதம் கூட தான் பேசிருக்கேன் ஒரு சில முறை.. அத வச்சு தான் அது முருகன் தான்னு சொன்னேன்.”

“ம்ம்..? நீங்க வெளில வரும் போது முருகன பாத்தீங்களா..?”

“இல்ல சார்... அது முருகன் மாதிரி தான் இருந்துச்சு...”

“அப்போ நீங்க அவர சரியா கவனிக்கல..?! இல்லையா, அப்பறம் எப்படி பேசிட்டு இருந்தது முருகன் தான்னு இவ்ளோ உறுதியா சொல்லுறீங்க..?”

“சார்... அது வந்து...”

“கேட்டீங்களா சார்... முருகன் தான் போனானான்னு உறுதியா தெரியல, இருந்தும் அவன தான் பார்த்தேன், அவன் தான் பேசினான்னு சொல்லுறாரு..”

அரசு வக்கீல் எழுந்து, “சார்... அதான் கௌதமே முருகன் தான் வந்தான்னு சொன்னாணுல... அப்பறம் என்ன இது கேள்வி...”

“அது இல்ல நான் சொன்னது. கௌதம அர்ரெஸ்ட் பண்ணதே சாட்சிகளை வச்சு தான.. அவருக்கு உறுதியா தெரியாமலே அவரு எப்டி ஒருத்தர் மேல போய் சாட்சி சொல்லலாம்...? அத தான் நான் சொல்லுறேன்..”

பதில் பேச முடியாமல் அரசு வக்கீல் குமாரவேலை பார்த்தார். பின் சென்று அமர்ந்து விட்டார்.

“ஓகே... அவுங்க சண்ட போட்ட மாதிரி இருந்துச்சுன்னு சொன்னீங்க... எப்டி அடிக்கிற மாதிரியா சத்தம் கேட்டுச்சு..?”

“இல்ல சார்... ஏதோ வாக்குவாதம் பண்ணுற மாதிரி இருந்துச்சு...”

“கெளதம் அப்போ பேசினது கேட்டுச்சா..?”

“இல்ல சார்.. முருகன் பேசுறது மட்டும் தான் கேட்டுச்சு.”

“அப்பறம் எப்டி அது வாக்கு வாதமா இருக்கும்...?”

“அது வந்து சார்...” குமாரவேல் இழுத்து பேச தடுமாறவும் அரசு வக்கீல் எழுந்து,

“சார்... மிஸ்டர் நடராஜர் சாட்சிய குழப்ப பாக்குறார்..”

“அவர் கரெக்டா தான் கேக்குறார். நீங்க கேளுங்க நடராஜர்..” என்று நீதிபதி கூறவும் அடுத்து பேச முடியாமல் அரசு வக்கீல் அமர்ந்து விட்டார்.

“சொல்லுங்க அது எப்டி வாக்குவாதமா இருக்கும்..?”

“இல்ல சார்... அன்னைக்கு அவுங்க சண்ட போட்டாங்களா இல்ல சத்தமா பேசிட்டு இருந்தாங்கலான்னு எனக்கு தெரியல..”

நடராஜருக்கு உதட்டில் ஏளன புன்னகை.

“ம்ம்ம்.... ஓகே. அப்பறம் நீங்க முருகன கெளதம் தொரத்திட்டு போனதா சொன்னீங்க.. அப்போ அவுங்க எந்த மாதிரி நடந்து கிட்டாங்கன்னு சொல்லுங்க.”

“முருகன் என்னை விட்டுடு விட்டுடுன்னு சொல்லிட்டு ஓடினான், அவன நில்லு நில்லுன்னு சொல்லிட்டு தொரத்திட்டு ஓடினான் கெளதம்.”

“ஓஹோ... அப்போ அவுங்க ஒருத்தர ஒருத்தர் தள்ளி விட்டுட்டு கோபமா... அப்டி போகல..?”

“இல்ல சார்... முருகன் வீட்ட விட்டு வெளில வரும் போது அழுதுட்டே ஓடினான். அவன கெளதம் கைய பிடிச்சு நிறுத்தினான், அவன் கண்ணை துடைச்சு கிட்டே அவன் கைய தள்ளி விட்டுட்டு ஓடினான் வேகமா... பின்னாடியே கெளதமும் ஓடினான்.”

“அப்போ அவுங்க சண்ட போடல... கெளதம் முருகன சமாதான படுத்தினான், அப்டித்தான..?”

“அப்டியும் இருக்கலாம்...”

“அப்டிதான் நடந்துருக்கு சார்... கெளதம் முருகன தொரத்தல... சமாதான படுத்த பின்னாடி போயிருக்கான்...”

நீதிபதி குறித்து வைத்து கொள்கிறார்.

“அப்பறம் நீங்க அன்னைக்கு சைமன அங்க பாத்தீங்களா..?”

“நான் அங்க வேற யாரையும் பாக்களை...”

“ஓகே... நீங்க போகலாம்.” என்று குமாரவேலிடம் கூறிவிட்டு, நீதிபதியிடம், “சார்... நான் சாட்சி சைமன விசாரிக்கணும்...”

“ஓகே..” சைமன் வந்து கூண்டில் ஏறி நின்றான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“நீங்க அன்னைக்கு எப்போ அங்க வந்தீங்க...? எதுக்காக வந்தீங்க..?”

“சார்... நான் அன்னைக்கு எத்தன மணிக்கு அங்க வந்தேன்னு தெரியல.. எனக்கு கால் வரும் போது டைம் 3 க்கு மேல தான் இருந்துச்சு.

அதுவும் இல்லாம்மா நான் கௌதம தான் பாக்க வந்தேன்.”

“எதுக்காக கௌதம பாக்க வந்தீங்க..?”

“சார்.. நான் சந்தோஷ் பத்தி பேச வந்தேன்...”

“என்ன பேச...?”

“சந்தோஷ் ஓடி போறான், அது கெளதமுக்கு தெரியுமா என்னன்னு கேக்க வந்தேன்.”

“அப்போ உங்களுக்கு ஏற்கனவே சந்தோஷ் ஓடி போக போறது உங்களுக்கு தெரியும்... இல்லையா..? அப்போ நீங்க தான் அனுப்பி வச்சீங்களா..?”

“இல்ல சார்... அவன் எனக்கு அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு கால் பண்ணி நாங்க ஓடி போகலாம்ன்னு முடிவு எடுத்துருக்கோம்... அப்டின்னு சொன்னான். அதுவும் அவன் முழுசா எதுவும் சொல்லல... நான் அதனால தான் கெளதம் பாத்து இத பத்தி கேட்டுட்டு போகலாம்னு நினைச்சுட்டு வந்தேன்... நான் அவுங்க ஓடி போறதுக்கு உதவியும் பண்ணல... எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடின்னா, அப்போ மணி என்ன...”

“அப்போ நேரம் 11 க்கு மேல இருக்கும் சார்.”

“அது தான் அந்த கொஞ்ச நேரமா...?!” என்று நக்கலாக கேக்கிறார்.

“அது வந்து சார்... அவன் அப்போ தான் ஓடி போகலாம்ன்னு நினைச்சுருக்கோம் அப்டின்னு மட்டும் தான் சொன்னான்... அதுனால நான் அவுங்க ஓடி போகல அப்டின்னு தான் சும்மா இருந்தேன். அப்பறம் சந்தேகம் வந்து, அவனுக்கு மறுபடியும் கால் பண்ணி பண்ணி பாத்தேன் எடுக்கல. ரெண்டு மணிக்கு மேல போன் நாட் ரீச்சபல் அப்டின்னு வந்துருச்சு. அதுநாள தான் கௌதம பார்க்க வந்தேன்.”

“ஓகே... நீங்க முருகன கெளதம் தொரத்திட்டு போனதா சொன்னீங்க... அப்போ நீங்க என்ன பண்ணுனீங்க...? எங்க இருந்தீங்க...?”

“சார் நான் வரும் போதே கெளதம் வீடு தொறந்து கிடந்துச்சு... நான் உள்ள போய் பாத்துட்டு வரும் போது பின்பக்கம் கௌதம் குரல் கேட்டுச்சு... நான் அங்க வந்து பார்க்கும் போது அவுங்க தூரமா ஓடிட்டு இருந்தாங்க.”

“அந்த இடம் வெளிச்சமா இருந்துச்சா..?”

“இல்ல சார்.. கொஞ்சம் இருட்டா தான் இருந்துச்சு... பின்னாடி ரோட்டுல போற வண்டி வெளிச்சம் பட்டு அப்போ அப்போ தெரிஞ்சது.”

“ஓகே... அப்போ அப்போ தெரிஞ்ச வெளிச்சத்த வச்சு எப்டி கெளதம் முருகன தான் தொரத்திட்டு போறான்னு தெரிஞ்சது...?”

“அது எனக்கு மொதல கெளதம் யாரையோ தொரத்திட்டு போற மாதிரி தான் தெரிஞ்சது. கெளதம் தான் இடைல ஒரு முறை முருகனோட பெயர் சொல்லி கூப்பிட்டான். அப்பறம் தான் எனக்கு அது முருகன்னு தெரிஞ்சது சார்.”

“ஓகே. கெளதம் அப்போ எதோ ஒளிஞ்சு ஒளிஞ்சு போனதா சொன்னீங்களே... ஆனா கெளதம் அப்டி போகலன்னு சொல்றான்.. எது உண்மை..?”

“சார்... நான் கௌதம கூப்பிட்டேன், ஆனா அவன் உடனே உக்காந்துட்டே திரும்பி திரும்பி பார்த்துட்டே அப்டியே குனிஞ்சே போனான். அப்டி தான் நடந்துச்சு.”

“சரி... ஆனா கெளதம் வீட்டுக்கு பின்னாடில இருந்து ரோட்டுக்கும் இடைல இருக்க தூரம் எக்சாக்லி பைவ் ஹன்ட்ரடு மீட்டர்ஸ்க்கு கொஞ்சம் அதிகமா இருக்கலாம்.. அந்த இடத்துல மெதுவா நடந்தாலும் மேக்சிமம் பிவ்டீன் டூ டவுன்ட்டி மினிட்ஸ்ல கடந்துடலாம். அப்டி இருக்கும் போது அவர் குமாரவேல் பார்க்கும் போதே அவுங்க ஓடிட்டு இருந்தாங்க... நீங்க வரும் போதும் ஓடிட்டு இருந்தாங்க... அதிகபட்சம் நீங்களும் குமாரவேலும் பாத்துருக்க வாய்ப்பு இருக்குல...?! ஆனா அவர் உங்கள பாக்கள.. அது போல கெளதமும் உங்கள பாக்கலன்னு சொல்லுறான்... நிஜமாவே நீங்க அங்க வந்தீங்களா..?! இல்ல நீங்க கொலை பண்ணிட்டு அதை மறைக்க கெளதம் மேல பலி போடுறீங்களா..?”

வேர்வையை ஊத்தியது, முகம் சிவந்து கண்கள் சுற்றி சுற்றி பார்த்தன. கைகளினால் முகத்தை துடைத்து கொண்டும், பயத்தில் உடம்பு நடுங்கி கொண்டும் இருந்தன சைமனுக்கு.

“சார்... நான்... நான் கொலை பண்ணல...

நிஜமாவே நான் அங்க வந்தேன் சார்...

நான் குமாரவேல பாத்தேன். அவரு தான் என்னை பாக்கள...

அதுக்காக நான் கொலை பண்ணின மாதிரி ஆகிடுமா...?!

இல்ல.. இல்ல, நான் கொலை பண்ணல...”

தட்டு தடுமாறி வார்த்தைகள் உளற விட்டு விட்டு பேசுகிறான்.

“நிஜம் தான் சொல்லுறீங்கன்னா, எதுக்கு உங்களுக்கு வார்த்தைகள் இப்படி தடுமாறுது..? உண்மைய சொல்லுறீங்களா..?!”

நடராஜரது பார்வை சைமனை ஆழம் பார்த்தது.

“இல்ல சார்... அப்டிலாம் இல்ல... நான் உண்மை தான் சொல்லுறேன்.”

நக்கலான சிரிப்புடன், “சார்... நான் சொல்லுறேன்... இந்த சைமன், சந்தோஸ் ரெண்டு பேரும் சேர்ந்து தான் முருகன கொலை பண்ணிருக்காங்க...

சந்தோஷ் கூட தன்னோட தங்கை சேருவது முருகனுக்கு பிடிக்கல, வீட்டுல இருந்து கிளம்பின முருகன் தங்கச்சிய தேட போயிருக்கனும், அவுங்க எங்க இருக்காங்கன்னு தெரியாததால, கௌதம தேடி போயிருக்கனும்... அங்க அவன் கிட்ட கேட்டு பாத்து கெளதமுக்கு எதுவும் தெரியலன்னு, மறுபடியும் கோபத்துல சந்தோஷ் தேடி போகும் போது... வழியிலே சந்தோஷ் தங்கச்சி ரெண்டு பேரையும் பார்த்து சண்ட போட்டுருக்கான். கோபத்துல சந்தோஷ் சைமனோட உதவியோட முருகன கொலை பண்ணிருக்கான். அதை மறைச்சுறுக்காங்க... அப்போ அங்க முருகன கெளதம் தேடி வரவும் அவன் மேல கொலை பழிய போட்டுருக்காங்க...

இது தான் சார் நடந்துருக்கணும்... நாம சைமன நல்ல விசாரிச்சா உண்மை வெளில வந்துரும்.”

நீதிபதி நடராஜரை பார்த்து, “ஒரு நிமிஷம் நடராஜர், சந்தோஷ் பேமிலி வந்துருக்காங்களா விசாரணைக்கு...?”

“சார்... அவுங்க வரல...”

“இன்ஸ்பெக்டர் முரளி நீங்க சந்தோஷ் பேமிலி கிட்ட விசாரிச்சீங்களா..?” நீதிபதி இன்ஸ்பெக்டரிடம் கேக்க, அவர் எழுந்து நின்று

“இல்ல சார்... நாங்க அவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்கன்னு தேடிட்டு இருந்தோம், அத பத்தி ஒருமுறை சந்தோஷ் பேமிலி கிட்ட விசாரிச்சோம். ஆனா இன்னும் எந்த தகவலும் கிடைக்கல...”

“எப்படி, எங்க விசாரிச்சீங்க..?”

“சார்... அவுங்க காதலிச்சு ஓடி போனதால எங்கயாது கல்யாணம் பண்ணிருப்பாங்கன்னு, ரிஜிஸ்ட்டர் ஆபீஸ், கோவில் அப்டின்னு பக்கத்துல இருக்க எல்லா டிஸ்ட்ரிக்ளையும் விசாரிச்சோம். அப்டி யாரும் கல்யாணம் பண்ணலன்னு தெரிஞ்சது... விசாரிச்சு கிட்டு இருக்கோம் சார்...”

நடராஜர் உடனே, “சார்... இதுல இருந்தே உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். காதலிச்சு ஓடி போனவுங்க கல்யாணம் இன்னும் பண்ணலைன்னா... என அர்த்தம்... சந்தோஷ் பண்ண கொலை பத்தி காதம்பரிக்கு தெரிய வந்துருக்கு... அவள் ஏதாது சண்டை போட்டுருப்பா... அதுனால அவள வெளில விட்டா கொலை பத்தி வெளில போய் சொல்லிருவான்னு பயந்து சந்தோஷ் காதம்பரிய அடச்சு வச்சுருக்கணும் இல்ல வேற ஏதாது பண்ணிருக்கணும்...

சந்தோஷ கிடைச்சா நமக்கு இன்னும் நிறையா தகவல் கிடைக்கும் சார்...”

“நடராஜர் சார்... உங்க கற்பனை கதைய இங்க சொல்லாதீங்க... உங்களுக்கு தெரியும் கோர்ட்க்கு ஆதாரமும் சாட்சியும் தான் தேவை. நீங்க சொல்லுற கதை இல்ல.” அரசு வக்கீல் நடராஜரை ஏளனமாக பார்த்து சொல்ல, நடராஜருக்கு கோபம் வந்தது. எரிச்சலோடு,

“நீங்க நினைக்கிற மாதிரி இந்த கொலைய கெளதம் பண்ணினத பாத்த எந்த நேரடியான சாட்சியும் இல்ல சார்... அப்பறம் எப்டி இந்த கொலைய கெளதம் தான் பண்ணினான்னு நீங்க உறிதியா சொல்லுறீங்க...?! இதுக்கும் சாட்சியும் ஆதாரமும் வேணும்ல..?! இப்போ என்னோட கட்சிகாரர் விசாரணை கைதி தான், கொலைகாரர் இல்லை.” பதிலுக்கு பதில் பேசி அரசு வக்கீலை பேச விடாமல் செய்தார் நடராஜர்.

நீதிபதி அவர்களது சண்டையை பார்த்து கோபப்பட்டு மேஜைமேல் தட்டி, “ஆர்டர்... ஆர்டர்...” சொன்னதும் இருவரும் முகத்தை திருப்பி கொண்டனர்.

“நீங்க மொதல சண்ட போடாதீங்க... அடுத்த விசாரணைக்கு சந்தோஷ் பேமிலி வரணும். வேற ஏதாது விச்சரிக்கனுமா நீங்க..?” என்று நீதிபதி நடராஜரை கேக்க அவர், “எஸ் சார்... சிவசங்கர்...”

“அப்போ தான விசாரிச்சீங்க...?! மறுபடியும் எதுக்கு..?” என்று அரசு வக்கீல் குறுக்கிட,

“எஸ்... க்ரான்ட்டடு..” நீதிபதி சொல்லவும் கோபத்தோடு சென்று அமர்ந்து விட்டார்.

“அன்னைக்கு நைட் உங்க பொண்ணு ஓடி போயிட்டான்னு உங்களுக்கு எப்டி தெரியும்...?”

“சார்... நான் வீட்டுக்கு வரும் போது மணி 10 ஆச்சு... பொண்ணு ரூம்ல இல்ல அப்போ... அவுங்க அண்ணா கூட எதுவும் வெளில போய்ருப்பான்னு நினைச்சு நான் அமைதியா இருந்தேன். முருகன் வரவும் கேட்டேன், அவன் தெரியாதுன்னு சொல்லிட்டான். அப்பறம் சந்தேகமாகி தேட ஆரம்பிச்சேன்.”

“ம்ம்ம்... அப்போ முருகன நீங்க கடசியா பார்க்கும் போது, மணி பதினொன்றுக்கு உள்ள தான் இருந்துருக்கும் இல்லையா..?”

“ஆமாம் சார்...”

“காதம்பரி ஓடி போனது சந்தோஷ் கூட, அப்போ முருகன் சந்தோஷ தான பார்க்க போகணும்... ஏன் கௌதம பார்க்க போறதா சொன்னான்...

நீங்க கொஞ்சம் நல்ல யோசிச்சு பாத்து சொல்லுங்க, முருகன் கெளதம் பேரு தான் சொன்னானா...? இல்ல சந்தோஷ் பேரு சொன்னானா...?”

சிவசங்கர் பதில் பேசாமல் யோசிப்பது போல் நிற்க, அரசு வக்கீல்

“இது என்ன கேள்வி, கெளதம் சந்தோஷ் ப்ரெண்டு... காதம்பரி சந்தோஷ் கூட தான ஓடி போயிருக்கா.. அப்போ அவுங்கள அனுப்பி வச்சது கெளதமா தான் இருக்கும்ன்னு அவன பார்க்க போறதா சொல்லிட்டு போயிருக்கான்...

அதுவும் இல்லாம, மிஸ்டர் நடராஜர் சாட்சிய குழப்புறார் சார். ஆரம்பத்துல இருந்தே எல்லா சாட்சியையும் இவர் குழப்புறார்... சாட்சிய கலைக்க பாக்குறார்.”

“நடராஜர் அவர் சொல்லுறது சரி தான்...” என்று நீதிபதி கூறவும், அரசு வக்கீல் முகத்தில் சந்தோசம்... “கௌதமே ஒத்துக்கிட்டான்ல முருகன் தன்ன பார்க்க வந்தத... அப்பறம் எதுக்கு இந்த கேள்வி..?!”

“இல்ல சார்... அது வந்து...”

“நீங்க வேற ஏதாது விசாரிக்கனுமா...?”

“இல்ல சார்...”

“ஓகே... அப்போ இந்த கேஸ் விசாரனைய ரெண்டு நாளைக்கு ஒத்திவைக்கிறேன். அடுத்த விசாரணைக்குள்ள, சந்தோஷ் எங்கன்னு கண்டுபிடிங்க... அதுவும் இல்லாம சந்தோஷ் பேமிலி விசாரணைக்கு வரணும்.”

கேஸ் விசாரணை முடிந்து அனைவரும் வெளியே வருகின்றனர். சௌந்தர்யா முகம் வாடி இருந்தது. நடராஜர் வரவும் அவரிடம் சென்று பேசுகிறாள்.

“என்ன அய்யா... இப்படி நடந்துருச்சு..?!” வேறு புறம் திரும்பி நின்று அவளது பேச்சை கவனிக்காமல் இருந்தார்.

“அய்யா...! அய்யா...!” என்று அவள் கூப்பிடவும், அவர் திரும்பி பார்த்தார்.

எரிச்சல் அவரது முகம் பேச்சு அனைத்திலும் வெளிப்பட்டது. “என்னம்மா...? என்ன தான் வேணும் உனக்கு..?”

“இல்ல அய்யா நான் என்ன சொல்ல வந்தேன்னா... நீங்க இன்னும் கொஞ்சம் பேசிருந்தா நல்ல இருந்துருக்கும்... அதுவும் இல்லாம கௌதம இன்னும் வெளில விடல...”

“ஏம்மா...! உனக்கு எல்லாம் அறிவே இருக்காதா... நான் இவ்ளோ கஷ்டப்பட்டு கேஸோட எல்லா சாட்சியையும் உடைச்சுருக்கேன்... ஆனா நான் இந்த கேசுல இருக்குறது வேஸ்டு...” கோபத்தோடு வேகமாக கிளம்ப, பதறிய சௌந்தர்யா நடராஜரின் முன் சென்று

“போகாதீங்க அய்யா... போகாதீங்க... நான் ஏதோ தப்பா பேசிட்டேன். நான் நீங்க இவ்ளோ கஷ்ட பட்டும் சைமன நீதிபதி எதுவும் பண்ணலன்னு சொல்ல தான் அப்படி மாத்தி சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்க அய்யா... மன்னிச்சுடுங்க... நீங்க போய்ட்டா அவர வெளில கொண்டு வர முடியாது...”

கெளதமை போலீஸ் வெளியே கூட்டி கொண்டு வருகின்றனர். கெளதம் இன்ஸ்பெக்டரிடம் அனுமதி வாங்கி விட்டு வக்கீலிடம் பேச வருகிறான். அவனை பார்த்ததும் நடராஜருக்கு அதிகமாகியது கோபம்.

“சும்மா நிறுத்தும்மா... எப்போ பாரு அவர வெளில கொண்டு வந்துருங்க... கொண்டு வந்துருங்கன்னு சொல்லிட்டு... இப்டி ஒரு முட்டாளுக்கு தான் நான் வாதடனும்ன்னு தெரிஞ்சா நான் ஆரம்பத்திலேயே வேணாம்ன்னு சொல்லிருப்பேன். ஆனா நீ என்னையே எப்டி சொல்லுற...?! நான் பாவம் பாத்து இவனுக்காக பேசாம இருந்து, இவனே உள்ள போகணும்ன்னு இருக்கப்போ போகட்டும்ன்னு விட்டுருக்கனும்... அப்போ தெரிஞ்சுருக்கும் உனக்கு...” வார்த்தைகள் கோபத்தை கொட்டின.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அவர்கள் இருவரும் அமைதியாகவே நின்றன பதில் பேச முடியாமல். இருந்தும் நடராஜரை சாமாளிக்க வேண்டியது கட்டாயம் என்பது அவளுக்கு தோன்றியது. கெளதமிற்காக நடராஜர் இன்று கோர்ட்டில் நன்றாக வாதாடி அவனுக்கு எதிரான சாட்சியை அவர் உடைத்ததும், கெளதம் இந்த கேஸில் இருந்து வெளி வர இவரால் மட்டுமே முடியும் என்று அவலுக்கு முழு நம்பிக்கையை கொண்டு வந்து விட்டது. அது மட்டுமின்றி இனி வேறு ஒரு வக்கீலை பார்ப்பதும் நடக்காத ஒன்று.

“இல்ல அய்யா அவர் ரொம்ப பாசம் வச்சுருந்தாரு அந்த முருகன் மேல, அதுவும் இல்லாம இவர் ரொம்ப வருத்த பட்டதுனால தான் அப்டி எல்லாம் நடந்து கிட்டாரு... அவரு அவ்ளோ நல்லவர்...”

“இதுக்கு பேரு பைத்தியகாரத்தனம், இப்டி இருந்தா எல்லாரும் இவன ஏமாளி, லூசுன்னு தான் சொல்லுவாங்க. யாரும் நல்லவன்னு சொல்ல மாட்டாங்க...” கெளதம் பக்கம் திரும்பி,

“நீ எதுக்கு அப்டி எல்லாம் சொன்ன...? உனக்கே வெளில வர இஷ்டம் இல்லையா.. அப்பறம் எதுக்கு என்ன கூப்பிட்டீங்க..? இல்ல... உண்மையிலே நீ தான் கொலை பண்ணுனியா..? இப்போ கூட ஒன்னும் ஆகல... உண்மைய சொல்லிடு...”

“அப்போ நான் முருகன் இறந்துட்டான்னு ரொம்ப மனசு வருத்ததுல இருந்தேன், அதுவும் இல்லாம அன்னைக்கு அவன் என் கிட்ட நான் எதுக்கு வாழனும் அப்டின்னு சொல்லிட்டு போனான் அப்டி இருந்தும் நான் அவன காப்பத்தாம விட்டுட்டேனேனு குற்ற உணர்ச்சில அப்டி எல்லாம் பேசிட்டேன்...”

“என்ன பேசுறீங்க நீங்க...? அவன் தற்கொலை பண்ணிருந்தா உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்குறதுல அர்த்தம் இருக்கு... அவன கொலை தான பண்ணிருக்காங்க...?!” சௌந்தர்யா கேட்கவும்,

“ஆமாம்...! ஆனா இது எனக்கு தோணவே இல்ல... ஆமாம் நான் உன்னையும் மறந்துட்டேன் பாரு... இனி நான் அப்டி எல்லாம் நடந்துக்க மாட்டேன். முருகன் இறந்துட்டான்னு இன்னுமே என்னால நம்பவே முடியல...”

“நீ இப்டியே பேசிட்டு இருப்பா... இதெல்லாம் ஒத்து வராது நமக்கு... அப்பறமா நான் தான் ஏமாந்து போகணும்... இங்க பாரும்மா, நீ மொதல பாக்கி பீஸ் கட்டிடு... நான் இனி வாதாடல...”

“சார்... அப்டியெல்லாம் சொல்லாதீங்க... நான் இனி அப்டியெல்லாம் நடந்துக்க மாட்டேன். உங்க பேச்ச கேக்குறேன். என்ன எப்டியாது வெளில கொண்டு வாங்க சார்...”

கோபத்தோடு வேகமாக நடக்கிறார் நடராஜர். கெளதம் சௌந்தர்யாவின் கைகளை பிடிக்கிறான். அவனது கண்கள் கலங்கி இருந்தன.

“நீ போய் அவர் கிட்ட சொல்லு இனி நான் அப்டி நடந்துக்க மாட்டேன். பீஸ் நீ கட்ட ஏதோ ஏற்பாடு பண்ண போறதா சொல்லிருந்த..? என்னாச்சு..?”

“நான் கேட்ட இடத்துல இருந்து இன்னும் பணம் வரல... அவுங்க அப்டி குடுக்கலைன்னா, நான் வேற இடத்துல ஏற்பாடு பண்ணிடுவேன்.... நீங்க கவலை படாதீங்க... நான் வர்றேன்...”

அவள் பேசிவிட்டு கிளம்பினாள். கெளதம் நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான். மனதில் ‘அவள எப்டி இருக்கன்னு கூட கேக்காம விட்டுட்டேன்... அன்னைக்கு நடந்த அவுமானத்துக்கு மன்னிப்பு கூட கேக்கல நான்... ஆனா அவள் இப்டி வெளில வந்தத பார்த்தா அவ அத மறந்துட்டா... நாம அத ஞாபக படுத்த கூடாது...’ என்று நினைத்தான்.

சௌந்தர்யாவும் நடந்து கொண்டே அவனையே நினைத்தாள். ‘நாம அன்னைக்கு நடந்தத பத்தி ஒன்னு கூட அவர் கிட்ட கேக்கல... அவர அங்க எவ்ளோ கஷ்ட படுத்தினாங்களோ...? நினைச்சா கஷ்டமா இருக்கு... ஒரு வேல அவர் கிட்ட இத பத்தி பேசி அவர் ஏதாது கேட்டு... அப்பா..!’ இறுக கண்களை மூடி கொள்கிறாள். ‘ஏன் தான் நான் இப்டி இருக்கேனோ... என்ன பாட்டி தைரியமானவன்னு எப்போ பாரு சொல்லும்.. நானும் இத்தன நாளா நம்பிட்டு இருந்தேன் பாரு..! நானும் சாதாரண பொண்ணு தான். எனக்கு மானம் மரியாதைன்னா பயம் இருக்குன்னு இன்னைக்கு நல்லாவே புரிஞ்சுருச்சு...’

நடராஜருக்கு பணத்தை ரெடி செய்து கொண்டு போய் சமாதான படுத்த நினைத்து, கந்துவட்டி பாலுவை பார்க்க செல்கிறாள் சௌந்தர்யா. அங்கு சென்றவுடன் அவரது அடியாட்கள் அவளை உள்ளே விடாமல் தடுக்கின்றனர். அவள் பணம் கேட்க வந்தாக கூறியும் அவர்கள் உள்ளே விடவில்லை. பின் சௌந்தர்யா மிகவும் கெஞ்சவும் அவர்களில் ஒருவன் அவளை இங்கயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே செல்கிறான். சிறிது நேரத்தில் வெளியே வந்து அவளை உள்ளே வர சொன்னதாக சொல்கிறார். உள்ளே சென்றதும்,

“ஏம்மா..! உனக்கு எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டியா..? வேற யார்ட்டயாது போய் கேளும்மா..”

அவள் சிறிது நேரம் கெஞ்சினாள். அவளை கெஞ்ச விட்டு பின் பணம் கொடுக்க ஒப்பு கொண்டார். நாளை வர சொல்லி அவளை போக சொன்னார். அவளுக்கு அப்போது தான் மனம் நிம்மதியாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி நேராக வக்கீலை பார்க்க சென்றாள். அவரிடமும் கெஞ்சி சமாதன படுத்தி ஒத்துக்க வைத்தாள். நடராஜர் நாளை பணம் வந்து விடும் என்ற நம்பிக்கையினால் ஒப்பு கொண்டார்.

மறுநாள் காலை கிளம்பி பாலுவை பார்த்து பணத்தை வாங்க சென்றாள். அங்கு சென்ற பின் தான் பாலு எங்கயோ வெளிஊருக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. அவரது அடிஆட்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ‘அய்யா எப்போ வருவார்ன்னு எங்களுக்கு தெரியாது... அப்டினாலும் நாங்க அய்யா இல்லாம யாருக்கும் பணம் தர மாட்டோம்..’ என்று அவர்கள் கூறியதால் ஏமாற்றத்தோடு கடைக்கு கிளம்பி சென்றுவிட்டாள்.

மாலை வீடு திரும்பிய போது தான் சுந்தரி மூலமாக அவளுக்கு தெரியவந்தது, வக்கீல் நடராஜருக்கு உடம்பு சரி இல்லாமல் போனதால் அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பது. தகவல் தெரிந்தவுடன் வேகமாக ஹாஸ்பிட்டலுக்கு சென்றாள். அவள் ரூம் நம்பர் தெரிந்து கொண்டு சென்றாள். அங்கு உள்ளே நடராஜர் பெட்டில் படுத்திருந்தார். அருகில் அவரது மனைவி, இரு மகன்கள், மருமகள் என எல்லாரும் நின்றிருந்தனர். அதை பார்த்ததும் அவள் அங்கேயே நின்று விட்டாள். அவர்கள் பேசி கொண்டிருந்தது அவளுக்கு தெளிவாக கேட்டது.

“ஏங்க இப்டி இருக்குறீங்க...? உங்களால நான் எவ்ளோ பயந்துட்டேன்னு தெரியுமா..?! நீங்க பீபி லோ ஆனதால தான் மயங்கிட்டீங்கன்னு டாக்டர் சொன்ன பிறகு தான் எனக்கு நிம்மதியாச்சு...” என்று அழுது கொண்டு பேசினார் அவரது மனைவி... அவரால் எதுவும் பேச முடிய வில்லை.

“உங்களுக்கு ஏற்கனவே ரெண்டு அட்டாக் வந்தருக்கு.. ஒருவேல இது அடுத்த அட்டாகான்னு நினைச்சு நாங்க ரொம்ப பயந்துட்டோம் அப்பா.. நீங்க என்னனா இந்த வயசுல இப்டி கஷ்ட பட்டு வேல பாக்கணுமா... அதுவும் நைட் எல்லாம் கண் முழிச்சு... இனி சம்பாரிக்க தான் நாங்க இருக்குரோம்ல... நானும் தம்பியும் நல்ல தான சம்பார்க்கிறோம்... அப்பறம் என்ன அவசியம் வந்தது உங்களுக்கு கேஸ் நடத்தனும்ன்னு..?”

“உங்களுக்கு பீபி, சுகர் எல்லாம் இருக்குப்பா... நீங்க எதுக்கு இந்த கேஸ் நடத்த ஒத்துக்கிட்டீங்க...?”

அனைவரும் மாத்தி மாத்தி கேள்வியை கேட்டு அவரை மனசு மாத்த நினைத்தனர். நடராஜரோ,

“ஏண்டா என்னை என்ன நினைச்ச..? எனக்கு வயசு ஆச்சுன்னா... அதுக்காக நான் ஓரமா ஒதுங்கி இருக்கனுமா... போடா..” என்று மெதுவாக பேச முடியாமல் பேசினார். அவரது மனைவி,

“நீங்க கேஸ் எதுவுமே நடத்த கூடாதுன்னு சொல்லல... நீங்க ஏதாது சின்ன கேசா நடத்தலாம்ல...”

“ஏய்..! போடி...”

சௌந்தர்யா மெதுவாக உள்ளே சென்றாள்.

“அய்யா..”

அவர்கள் அனைவரும் திரும்பி பார்த்தனர். நடராஜரின் மனைவிக்கு கோபம் வந்தது. எழுந்து வந்தார்.

“உன்ன யாருடி இங்க வர சொன்னா..? உன்னால தான் இவர் இப்டி இருக்காரு... உன் கேசுக்காக நைட் எல்லாம் முழிச்சு முழிச்சு இப்போ இப்டி இருக்காரு... இதுக்கு எல்லாம் நீ தான் காரணம்... நீ என்னனா ஒழுங்கா பீஸ் கூட கட்ட மாட்டுற... உனக்கு எல்லாம் கேஸ் நடத்தி குடுக்க முடியாது... போடி இங்க இருந்து..” என்று அவளை திட்டி அவமானபடுத்தி அங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டனர்.

வெளியே வந்தவள் செய்வது அறியாமல் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றாள். ஹாஸ்பிட்டலில் நடராஜரை எல்லாரும் கேஸ் நடத்த வேண்டாம் என்று கட்டாய படுத்தி கொண்டிருந்தனர். கடைசியாக அவரும் ஒப்பு கொண்டார்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
மறுநாள் காலை. சௌந்தர்யா சோகத்தோடு இருக்கிறாள். அப்போது சுந்தரி பார்த்து அவளிடம் விசாரிக்கிறாள். அவள் நடந்ததை கூறவும் ஆறுதல் கூறுகிறாள். பின் சுந்தரி அவளிடம்,

“நீ கவலை படாத... அவுங்க குடும்பமே பணம் பணம்ன்னு அலையும்... நீ பீஸ் பணத்த கொண்டுட்டு போய் பேசு, அப்பறம் அவுங்க சம்மதிச்சாலும் சம்மதிக்கலாம்... யாருக்கு தெரியும்...

ஆமாம் நீ பணத்த ரெடி பண்ணிட்டியா..?”

“இல்ல அக்கா... அது வேற ஒரு பிரச்சனை... எனக்கு ஒரே குழப்பமாவே இருக்கு..”

“எதுக்கு குழப்பம்...? அப்டி யார்கிட்ட நீ பணம் கேட்ட..?”

“அந்த கந்துவட்டி பாலு கிட்ட தான் கேட்டுருந்தேன். அவர் நேத்து வர சொன்னாரு பணம் வாங்க... போனேன் ஆளே இல்ல... இன்னைக்கு போய் பாக்கணும்..”

“அந்த ஆளா..?! அவர் ஒரு சரியான ரவுடியே... அவர் கிட்ட போய் வாங்குற... அவரே அதிக வட்டி போடுவாரு. நீ வேற யாராது போய் பார்க்கலாம்ல..”

“இல்ல அக்கா... நான் வேற ரெண்டு இடத்துல கேட்டு கிடைக்கலன்னு தான் இவர் கிட்ட போனேன். அதுவும் இல்லமா இவர் பணம் தர்றேன்னு ஒத்துக்கிட்டார். இனியும் வேற ஒருத்தர் கிட்ட போய் கேட்டு அது இவருக்கு தெரிஞ்சு பணம் தர மாட்டேன்னு சொல்லிடாருன்னா.. அப்பறம் மொத்தமும் சொதப்பிடும்... இன்னும் கொஞ்சம் கஷ்டம் தான் வரும்..”

“ம்ம்ம்.... நீ சொல்லுறதும் சரி தான்... ஆனாலும் என்ன தான் காதலோ இப்டி கஷ்ட படுத்துது உன்னை..

நீ ஏற்கனவே கஷ்டத்துல இருக்க.. இதுல கெளதமுக்கு வேற பாத்துட்டு... அவன கடைசி வரைக்கும் வெளில கொண்டு வர முடியலைன்னா என்ன பண்ணுவ..?!”

“ஏன் அக்கா அப்டியெல்லாம் சொல்லுறீங்க..? அவர் எந்த கொலையும் பண்ணல... அவரு ரொம்ப நல்லவரு... அவருக்கு எந்த கஷ்டமும் வராது.. அவர் இதுல இருந்து கண்டிப்பா வெளில வருவாரு, எனக்கு நம்பிக்கை இருக்கு..”

“அப்பறம் உன் இஷ்டம்... என்ன தான் காதலோ...

என்னை கேட்டா இதெல்லாம் காதலே இல்ல... இந்த வயசுல உனக்கு வர போற கணவர பத்தி என்ன கற்பனை பண்ணுறியோ, வெளி தோற்றத்துக்கு அது போல யாரு இருக்காங்களோ அவுங்கள மனசுக்கு பிடிக்கும்.. அது தான் இது... இது இயல்பு. இத காதல்ன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க... “

“இல்ல அக்கா நீங்க தான் தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க... நீங்க காதலிக்களைன்னா காதல் இல்லைன்னு சொல்லிட முடியுமா..?! அது ஒரு உணர்வு...”

“சரிம்மா... நான் உன் கூட சண்டை போட முடியாது, எனக்கு வேலை இருக்கு... அதுவும் அய்யா ஹாஸ்பிடல் போனதுல இருந்தே ரொம்ப வேல எனக்கு... நான் வர்றேன்...”

“அக்கா.... ஒரு நிமிஷம்...” சுந்தரி திரும்பி என்ன என்றால், “அய்யா எப்போ வீட்டுக்கு வருவாருன்னு உங்களுக்கு தெரியுமா அக்கா...?”

“நாளைக்கு தான் வருவாருன்னு சொன்னாங்க... ஆனா எனக்கு சரியா தெரியாது. நான் தெரிஞ்சுட்டு வர்றேன்.”

“சரி அக்கா...”

“நீ பணத்த ரெடி பண்ணு சீக்கிரம்..”

“ம்ம்ம்...”

சுந்தரி சென்ற பின், சௌந்தர்யா பாலுவை பார்த்து பணத்தை வாங்க செல்கிறாள். இன்று அங்கு யாருமே இல்லை. என்ன பண்ணுவது என்று புரியாமல் சிவசங்கரை பார்த்து உதவி கேக்க செல்கிறாள். அங்கும் அவளுக்கு ஏமாற்றமும் தான் கிடைத்தது. வேலையாக வெளியூர் சென்று இருப்பதாக சிவசங்கரின் வீட்டு வேலை ஆள் சொல்லவும், சோகத்தில் கடைக்கு செல்கிறாள்.

கடையை திறக்க மனமின்றி சிறிது நேரம் நின்றிருந்தால், பின் தன மன கவலையை கொட்டி தீர்க்க கோவிலுக்கு செல்லலாம் என்று யோசித்து போகிறாள். கோவிலில் நடை சாத்தும் நேரம் வந்துவிட்டது என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. உள்ளே சென்று பிள்ளையாரை வணங்குகிறாள். சிறிது நேரம் அங்கேயே நின்று மன குமுறல்களை கொட்டி அழுகிறாள். பின் பெருமாள் முன் வந்தும் அதே போல் வேண்டுகிறாள்.

கஷ்டங்கள் வந்ததும் உடைந்து போகும் அளவுக்கு அவள் தைரியம் இல்லாததால் இல்லை. இருந்தாலும் இது தன்னுடைய வாழ்கை துணையின் வாழ்வே இப்படி கஷ்டத்தில் இருக்கிறது என்று என்னும் போது அவளுக்கு தைரியம் குறைந்து கொண்டே வந்தது. ஆரம்பத்தில் கெளதமிற்கே அவள் தான் தைரியம் சொன்னாள். இன்று நடப்பதை எல்லாம் பார்த்த பின் கடவுளும் தங்களை கை விட்டு விடுவார் போல என்று எண்ணி வருந்தி கொண்டிருந்தாள். இப்படி நினைப்பது அவளது தைரியத்தை குறைத்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அவளுக்கு அதை கட்டு படுத்த முடியவில்லை. தன்னுடைய எண்ணத்தை யாரிடமாது சொல்லி அழுதால் கூட மனதின் பாரம் குறைந்து தைரியம் அதிகரிக்கும் என்று நினைத்து இன்று கோவிலில் கடவுளிடம் முறையிட்டு கொண்டிருந்தாள்.

அப்போது அய்யர் வருகிறார். அவரை கவனிக்காமல் அவள் அழுது கொண்டிருக்க, அவர் அவளிடம் வந்து பேசிகிறார். அவருக்கும் கெளதம் சௌந்தர்யாவை பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால், அவளுக்கு ஆறுதல் கூறுகிறார்.

“நீ வருத்த படாதேம்மா... கடவுள் நல்லவுங்களை சோதிப்பார், கடைசியில் கை விடமாட்டார். நம்ம கெளதம் நல்லவன்னு எல்லாருக்குமே தெரியும். அவனோட குணத்துக்கு நல்லது தான் நடக்கும். கஷ்டங்கள் எவ்ளோ கொடுக்குறாரோ கடவுள், அதற்கேற்றார் போல நல்லதையும் அதிகமா தருவார்மா.. நீ வருத்த படாத... நீ இந்த பெருமால கும்பிடு, அவர் எப்போவும் கைவிட மாட்டார்.”

தனக்கு முடிந்த அளவுக்கு ஆறுதல் கூறிய அய்யர் அங்கிருந்து சென்ற பின், அவளும் கடவுளிடம் வேண்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.

மறுநாள் காலை நடராஜரை பார்க்க செல்கிறாள். அங்கு அவரை பார்த்து எப்டியாது பேசி கேஸ் நடத்தி தருமாறு கேக்க எண்ணி வருகிறாள். அவர் வர முடியா விட்டாலும் அவருக்கு பதில் யாராவது கேஸ் நடத்த சொல்லி உதவி பண்ண சொல்ல வேண்டும் என்று எண்ணி சென்றாள்.

அங்கு அவள் சென்ற போது நடராஜர் ஆபீசில் இல்லை, வீட்டில் ஓய்வு எடுப்பதாக தெரிந்தது. இன்று அடுத்த ஹியரிங் என்பதால் அவரிடம் பேச வேண்டும் என்று அவள் நடராஜரின் மனைவியிடம் கேக்கிறாள். அவர் அவளை அங்கிருந்து துரத்துவதிலே குறியாக இருந்தார். அவளை பேச விடாமல் அவர் அவளை வெளியே இழுத்து கொண்டு போனார். அங்கு நின்று அவளை திட்டி வெளியே அனுப்ப முயன்றார். அவளோ

“அம்மா.., நான் அய்யா தான் வரணும்ன்னு சொல்லல... அய்யாவுக்கு பதிலா யாராது இருந்தா கூட அனுப்பி வைச்சா உதவியா இருக்குமேன்னு தான் கேக்க வந்தேன். அய்யா கிட்ட பேச விடுங்க அம்மா.. ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு உடனே போய்டுவேன். அவர தொந்தரவு பண்ண மாட்டேன்.”

“அதெல்லாம் முடியாது... அவரே இப்போ தான் ஹாச்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்துருக்காரு, அவர் கிட்ட நீ பேச முடியாது. அவர் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். நீ போம்மா... சுந்தரி... இங்க வா...”

சுந்தரி வெளியே வந்தவுடன், “இவள இங்க இருந்து தொறத்து... போடி வெளில...” கோபத்தோடு அவளை தள்ள, அதற்குள் உள்ளிருந்து நடராஜரே வெளியே வந்து விடுகிறார். அவரோ பார்க்க ஓய்வு எடுப்பவரை போன்று இல்லாமல் நன்றாக ரெடி ஆகி கிளம்பி இருந்தார். அவரை பார்த்ததும் சிறு நம்பிக்கை வந்தது சௌந்தர்யாவுக்கு. நடராஜரை பார்த்ததும், அவரது மனைவி கோப பட்டு,

“ஏன் நீங்க வந்தீங்க..? நீங்க உள்ள போய் ரெஸ்ட் எடுங்க, டாக்டர் உங்கள ரெஸ்ட் மட்டும் தான் எடுக்க சொன்னாரு... போங்க..”

என்று அவரது அருகில் வந்து அவரை உள்ளே கூட்டி கொண்டு போனார். நடராஜர் மனைவியின் கையை தடுத்து வெளியே சௌந்தர்யாவிடம் வந்து பேசுகிறார்.

“சொல்லும்மா...”

“அய்யா... உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு எனக்கு தெரியும்... உங்கள வர சொல்லுற அளவுக்கு நான் சுயநலவாதி இல்ல... நீங்க வேற யாராது கூட அனுப்பினா நல்ல இருக்குன்னு தான் கேக்க வந்தேன் அய்யா...”

“இங்க பாரும்மா... நானே வர தான் போறேன்..”

“உங்களுக்கு உடம்பு இன்னும் சரி ஆகலன்னு அம்மா சொன்னாங்க அய்யா... நீங்க வந்து கஷ்ட பட வேண்டாம் அய்யா...”

“அப்டியெல்லாம் ஒன்னும் இல்ல... நான் வர்றேன்...”

“என்ன..? ஒன்னும் இல்லையா... உங்கள டாக்டர் கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும்ன்னு சொன்னாரு...”

“இந்த கேஸ் எப்டியும் இன்னைக்கோட முடிஞ்சிடும்...”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நீங்க வீட்டுலே இருங்க..”

“எனக்கு நீ ஆர்டர் போடாத... நான் போக தான் போறேன். போயிட்டு கொஞ்ச நேரம் தான, வந்துருவேன். நீ கவலை படாத..”

கோபத்தோடு முறைத்து கொண்டு இருந்தார் நடராஜரின் மனைவி. அவரை எதிர்த்து பேசவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தார். நடராஜர் சௌந்தர்யா பக்கம் திரும்பி,

“இன்னைக்கோட கேஸ் முடிஞ்சிடலாம்... நான் முக்கியமான ஆதாரம் ஒன்னு கிடைச்சுருக்கு... இத வச்சு கௌதம நாம வெளில கொண்டு வந்துடலாம்... வா போகலாம்.”

தொடரும்...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
natarajan than vathathal satchikalai udaithathu arumai:):):)gowthamai veliya kondu vara atharam kidaithu vitatha nice sis(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top