• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 8

தஞ்சாவூர் கோர்ட், கெளதம் தான் தான் மாதவனை கொலை செய்தேன் என்று கூறுவான் என்று சற்றும் எதிர் பார்க்காத சௌந்தர்யா அதை ஏற்க முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள். பேச கூட முடியாமல் சிந்திக்க முடியாமல், அவனையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள். கெளதமின் முகமோ எந்த மாற்றமும் இன்றி இருந்தது.

நாம் நினைத்தது போல் இவர் உண்மையில் நல்லவர் இல்லையோ என்று ஒரு நிமிடம் எண்ணி, பின் அதற்கு தன்னையே திட்டியும் கொண்டாள். அவனிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலே கொலை பண்ணலைனா கூட அன்னைக்கு முருகனோட சாவுக்கு நான் தான் காரணம் அப்டின்னு சொன்னவரு... அவரு போய் இப்டி கொலை பண்ணுவாரா...? இல்ல இதுவும் அன்னைக்கு போல சொல்லுறாரா...? ஒண்ணுமே புரியல... என்று மனதில் புலம்பி பின் அதை அவனிடம் சொன்னாள்.

“நீங்க அன்னைக்கு முருகன் சாவுக்கு நான் தான் காரணம் அப்டின்னு சொன்னது போல தான இன்னைக்கும் இத நான் தான் பண்ணேன் அப்டின்னு சொல்லுறீங்க... ஏன் நீங்க இப்டி இருக்கீங்க..?”

“இல்ல நான் உண்மைய தான் சொல்லுறேன்...” சிறு அமைதி. இருவரும் பேசவில்லை. யோசனையோடு மறுபடியும் கேட்கிறாள்,

“என்ன சொல்லுறீங்க... பொய் இல்லையா அது... உண்மையா...?!”

“ஆமாம்... நான் தான் அவனுக்கு தண்ணிய குடுத்தேன்... மூச்சு விட கஷ்ட பட்டு அப்டியே அவன் மயங்கி விழுந்தான், எல்லாரும் வந்தாங்க... அவன ஹாஸ்பிட்டல சேர்த்தாங்க... ஆனா அவன் இறந்துட்டான்...”

“ஆனா அந்த கேஸ் க்ளோஸ் பண்ணிட்டதா நீதிபதி சொன்னாரு...?!”

“ஆமாம்... நான் சின்ன பையன்னு பாவம் பார்த்து அவுங்க அம்மா தான் கேஸ் வேணாம்ன்னு எழுதி குடுத்து என்ன மன்னிச்சு விட்டுட்டாங்க...

நான் கொலை தான் பண்ணிட்டேன்...”

சௌந்தர்யாவிற்கு அடுத்து எதுவும் பேச முடியவில்லை, ஆனால் கெளதமோ முகத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து பேசி கொண்டிருந்தான்.

“அன்னைக்கு நான் பண்ண தப்புக்கு தான் இன்னைக்கு கடவுள் என்னை தண்டிக்கிறாரு... நான் பண்ண அந்த கொலைக்கு அவுங்க மன்னிச்சுட்டாலும் அந்த கடவுள் என்ன மன்னிக்கல... அதான் இப்போ தப்பு பண்ணலைனாலும் தண்டனை கொடுத்துருக்காரு.. இது எனக்கு சரியானது தான்...”

“ஏன் நீங்க இப்டியெல்லாம் பேசுறீங்க..? நீங்க கொலை பண்ணதா சொன்னா அத நான் நம்ப மாட்டேன். எனக்கு உங்கள பத்தி நல்லாவே தெரியும்... நீங்க எவ்ளோ பாசகாரர்ன்னு எனக்கு தெரியும்... நீங்க ஒருத்தர கொன்னதா சொன்ன நான் அத நம்ப மாட்டேன்...”

அவனிடம் பதில் எதுவும் வரவில்லை.

“நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன், இப்போவும் அத தான் சொல்லுறேன் நீங்க தப்பே பண்ணிருந்தாலும் நான் உங்க கூட தான் இருப்பேன்... இனி நீங்க தான் எனக்கு வாழ்க்கை...”

சௌந்தர்யா கௌதம் கொலை செய்ததாக கூறியதை முழுசாக ஏற்கவில்லை. அவனிடம் மறுபடியும் கேட்டால்,

“நான் நம்ப மாட்டேன் நீங்க சொல்லுறத... நீங்க எதுக்காக கொலை பண்ணுனீங்க அத சொல்லுங்க அப்போ...?”

“நான் கொலை பண்ணனும்ன்னு நினைச்சு பண்ணல அத...

அன்னைக்கு நாங்க விளையாண்டுட்டு இருந்தோம்... அப்போ மாதவ் ஏதோ மூச்சு விட கஷ்ட பட்டுட்டு கீழ விழுந்து கிடந்தான். நான் கிட்ட போனப்போ.. அவன் தா, தான்னு தண்ணி கேட்டு அத சொல்ல முடியாம இருந்தான். நான் தண்ணி எடுத்துட்டு வந்து குடுத்தேன்... அவன் அத தடுத்தான்...

குடிக்க முடியாம தான் தடுக்குறான் போல அப்டின்னு நினைச்சு, நானே குடுத்தேன்... ஆனா அவன் அப்டியே மயங்கி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டான். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க... ஆனா அவன் பிழைக்கல... இறந்துட்டான்.

என்னை அப்போ போலீஸ் வந்து கூட்டிட்டு போனாங்க... ஆனா மாதவ் அம்மா வந்து கேஸ் வேணாம்ன்னு எழுதி குடுத்துட்டு போய்ட்டாங்க... அதனால என்னையும் வெளில விட்டுட்டாங்க...

நான் கொலை பண்ணிட்டேன்... கொலைகாரன்... நான் கொலை காரன் தான்...

இனி நீயும் என்னை நம்பிட்டு இருக்காத...

நான் வெளில வர மாட்டேன்... நான் தண்டனை அனுபவிச்சே ஆகணும்...

என்னால நீயும் வாழ்க்கைய இழந்துடாத... போய்டு...

நீ நல்லவ... நீ நல்லா வாழனும்... என் கூட சேர்ந்தா, நான் செய்த பாவம் எல்லாம் உன்னையும் கஷ்ட பட வைக்கும்... வேணாம் நீ போய்டு..”

“என்ன நீங்க இப்டி பேசுறீங்க...?”

அவளை பேச விடாமல், “நான் கிளம்புறேன்... கேஸ் ஆரம்பிச்சுடுவாங்க...” என்று கூறி வேகமாக சென்று விட, சௌந்தர்யாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘நாம இப்டி இவருக்காக கூடவே இருந்தா நம்மள இவர் எப்டி போ, போன்னு பேசுறாரு...’ என்று கோபமும் வந்தது.

ஆனால் ‘மனசு எந்த அளவிற்கு காயம் பட்டிருக்குமோ... அத மறக்க நம்ம மேல இப்டி கோப படுறாரு... கோபம் இருக்க இடத்துல தான் குணமும் இருக்கும்... நம்ம மேல உரிமை இருக்குன்னு தான் இவரு இப்டி எல்லாம் பேசுறாரு...’ என்று தனக்கு தானே சமாதானமும் செய்து கொண்டாள்.

அரை மணி நேரம் ஆனது. கேஸ் ஸ்டார்ட் ஆக நேரம் எடுத்தது. வக்கீல் எங்கு இருக்கிறார் என்று தேட சென்றாள். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. வக்கீல் வரவில்லை என்பது அவளுக்கு தெரிந்தது. வக்கீல் பார்க்க சென்ற போது அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாக சொன்னது ஞாபகம் வந்து அவருக்கு கால் செய்து பார்க்கலாம் என்று எண்ணி டெலிபோன் செய்ய வெளியே செல்கிறாள். அங்கு வக்கீல் வந்து கொண்டிருப்பது தெரிகிறது.

வேகமாக அருகில் செல்கிறாள். அவரிடம் ‘என்ன அய்யா... இவ்ளோ லேட்டா வர்றீங்க... நல்ல வேல இன்னும் கேஸ் ஸ்டார்ட் பண்ணல...’ அப்டின்னு சொல்ல, அவர் முகம் எரிச்சல் காட்டுகிறது. அதை பார்த்ததும் அடுத்து அவரிடம் சௌந்தர்யா எதுவும் பேசவோ, கேக்கவோ இல்லை. அவர் நேராக உள்ளே செல்கிறார்.

அவர் கூடவே அவளும் உள்ளே செல்ல எரிச்சல் பட்டு கொண்டே, “இங்கயே நிள்ளும்மா... நான் எவிடன்ஸ் சப்மிட் பண்ணிட்டு வர்றேன்.” கூற அவள் நின்று விடுகிறாள். பின் சிறிது நேரத்தில் வெளியே வந்தார். இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன் என்றார்.

சௌந்தர்யா தயக்கத்தோடு வக்கீலிடம், “அய்யா... அந்த ஆதாரம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா நான்..?” என்று கேக்கிறாள். ஆனால் அவரது முகம் எரிச்சலோடு இருந்தது, எந்த மாற்றமும் இன்றி. பதில் கூறவில்லை. சிறிது நேரத்தில் அவருக்கு ஏதோ கால் வருகிறது. எடுத்து பேச விலகி செல்கிறார்.

பேசிவிட்டு ஒரு சில நிமிடத்தில் வருகிறார். அப்போது அவரது முகம் நன்கு மாறியிருந்ததை அவள் உணர்ந்தாள். ஆனால் அவள் எந்த கேள்வியும் கேக்க வில்லை. ஆனால் வக்கீல் அவராக சொல்லுகிறார்.

“நான் கோர்ட்க்கு தான் கிளம்பிட்டு இருந்தேன். ஆனா யாரோ எனக்கு என்னோட குழந்தைக்கு ஆக்சிடெண்ட்ன்னு கால் பண்ணி சொன்னாங்க... நான் கால் பண்ணா போன் நாட் ரீச்சபல்... அப்பறம் வீட்டுக்கே நேர போய் பார்த்தா, அங்கயும் இல்ல... அப்பறம் இப்போ தான் வீட்டுல இருந்து போன் வந்துச்சு... வேற யாருக்கோ ஆக்சிடென்ட், அதுக்கு தான் இவுங்களும் ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க... இப்போ தான் கொஞ்சம் ரிலிபா இருக்கு...

சாரிம்மா... இப்போ சொல்லு... நீ என்ன கேட்ட...?”

“ஐயா... அந்த ஆதாரம் என்னன்னு கேட்டேன்...”

“அதுவாம்மா... இறந்து போனது முருகன் இல்ல... வேற யாரோ...”

சௌந்தர்யா முகத்தில் அதிர்ச்சி கலந்த ஆனந்தம், சொல்ல முடியாத சந்தோஷம். பேச முடியவில்லை. வக்கீலே பேசுகிறார்.

“முருகன் போட்டோ ஒன்னு கெளதம் வீட்டுல இருந்து கிடைச்சுருக்கு நடராஜர் சார்க்கு... அந்த போட்டோவும், இறந்து போனவானோட போட்டோவும் பார்த்து தான் அது வேற ஒருத்தர்ன்னு தெரிஞ்சது..”

“எப்டி சார்...?”

“அது...” அவர் சொல்ல போகும் போது கேஸ் நம்பர் சொல்லவும், திரும்பி பார்த்து விட்டு, “போவோம் வாம்மா...” என்று கூறி உள்ளே செல்கின்றனர்.

பட்டுகோட்டை, வளவன்புரம். இருள் சூழ்ந்த நூலாம்படையும் குப்பையும் சேர்த்து வைத்து இருக்கும் ஒரு பழைய வீடு. கையில் சாப்பாடு பொட்டலத்தோடு அந்த வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். ஆறு அடி உயரத்துடன் முரட்டுதனமான உடல்வாகுடன் பார்ப்பதற்கு அடியால் என்பதை தெளிவாக சொல்லும் திமிரான நடையில் அலட்சியத்துடன் வருகிறான். நுழைந்ததும் இடது புறம் திரும்பி ஒரு அறை. அதன் கதவு லேசாக சாத்தப்பட்டு இருக்கிறது, அதனை திறக்கிறான். அங்கு இன்னும் சில அடிஆட்கள் அமர்ந்து தண்ணி அடித்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்த்ததும் கோபமாக அதிகாரத்தோடு தான் தான் உங்களுக்கு தலைவன் என்பது போல்,

“ஏய்..! அறிவே இல்லையாடா உங்களுக்கு எல்லாம்... எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்டி எல்லாரும் ஒரு சேர குடிக்காதீங்க... அப்பறம் காரியமே கெட்டுடும்... புரியவே புரியாதா...”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் எழுந்து வந்து அவனின் தோளில் கைவைத்து, “விடுடா... எவ்ளோ நாள் தான் இப்டி இருக்குறது... கொஞ்சம் சந்தோசமா இருக்கோம்...”

“டேய் அறிவு கெட்டவனே.., உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது... எல்லாம் என் தலையெழுத்து... இந்த மாதிரி முட்டாளுகள வச்சுட்டு இருக்கேன்...” என்று திட்டிவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறான்.

மறுபடியும் இடது புறம் திரும்பி நேராக நடந்தான். அங்கு சிறு அறை இருந்தது. அது பூட்ட பட்டிருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஏதோ சாவி எடுக்கிறான். பின் கதவை திறந்து வலது புறம் மேல் நோக்கி கை விட்டு தேடி பிடித்து லைட் சுவிட்ச் போடுகிறான். அரை வெளிச்சம் பெற்றவுடன் மூலையில் இருந்த ஷேர் பக்கம் திரும்பினான்.

ஷேரில் கட்டப்பட்ட நிலையில் தலை குனிந்து சோர்வோடு ஒருவன் இருக்கிறான். கை கால்கள் அனைத்திலும் காயம், சில இடங்கள் வீங்கி இருந்தது. அவனது இடது கையில் முருகன் என்று பச்சை குத்தியிருந்தது. அவன் அருகில் சென்று அவனது தலையை நிமிர்த்தினான். அது முருகன் தான். கண்கள் மூடி மயங்கிய நிலையில் இருந்தான். சாப்பாடு பொட்டலத்தை அருகில் இருந்த மேஜையின் மீது வைத்து விட்டு கட்டை அவிழ்க்கிறான். அவன் கட்டு கழட்டும் போது கூட முருகன் அப்படியே மயங்கியே இருந்தான்.

திடீரென்று ஒரு அலறல் சத்தம் வெளியில் இருந்து வருகிறது. வேகமாக வெளியே நோக்கினான் அந்த அடியாள். அப்போது முருகனும் கண் திறந்து பார்க்கிறான். அடியாள் திரும்பவதற்குள் மறுபடியும் கண்ணை மூடி கொண்டு மயங்கியது போல் நடிக்கிறான். அலறல் சத்தம் மாறி மாறி கேட்டு கொண்டிருக்க, கயறை மறுபடியும் கட்டுகிறான். எல்லாரும் அலறும் சத்தம் கேக்கவும் முருகன் மயங்கி தானே இருக்கிறான் என்று எண்ணி, கயறை சரியாக கட்டாமல் வெளியில் செல்கிறான்.

அடிஆட்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். இவன் வந்து அவர்களை பிரித்து விடுகிறான். சமாதானம் செய்து வைத்து பேசுகிறான். சிலரை அடித்து திட்டுகிறான்.

“உனக்கு எல்லாம் அறிவே இல்லையா... இங்க நாம எதுக்கு இருக்கோம்ன்னு கூட மறந்து போச்சா உங்களுக்கு... இதுக்கு தான் குடிக்காதீங்கன்னு சொன்னேன்..”

திட்டி கொண்டிருக்கும் போதே முருகனை அப்படியே விட்டுட்டு வந்தது ஞாபகம் வர வேகமாக அந்த அறைக்கு ஓடுகிறான். அங்கு முருகன் இல்லை. கயறு கீழே கடந்தது. அறையின் வெளியே கீழே பூட்டு கிடந்தது. அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது, நாம் கதவை திறந்து விட்டு சாவியையும் பூட்டிலே விட்டு விட்டோம் என்று. வேகமாக வெளியே சென்று பார்க்கிறான். பின்புறம் கதவு திறந்து கிடந்தது. வெளியே சென்று பார்த்தான். அங்கு யாரும் இல்லை. கோபத்தில் கதவில் ஓங்கி தட்டுகிறான்.

அவனுக்கு கோபம் அதிகமாக வருகிறது. நேராக மற்ற அடி ஆட்களிடம் செல்கிறான்.

“போச்சு... எல்லாம் போச்சு... அவன் ஓடிட்டான்... இப்போ நாம அவர எப்டி சாமாளிக்க போறோமோ...?!”

அனைவரும் பயந்து போய் திரு திரு என்று விழிக்க, செய்வது அறியாமல் இருக்கின்றனர்.

“இன்னுமும் ஏன் அப்டியே நிக்கிறீங்க..? உங்களுக்கு எல்லாம் சொல்லவேற செய்யணுமா... போங்கடா... போய் அவன தேடுங்க... போங்க...

எப்டியாது அவன கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்துடுங்க... இல்ல நாம சாக வேண்டியது தான்... போங்க...”

அனைவரையும் திட்டி அடித்து முருகனை சென்று தேட சொல்கிறான். எல்லாரும் வெளியே சென்று தேடுகின்றனர். அவன் மட்டும் யாருக்கோ போனை எடுத்து கால் செய்கிறான். பதற்றமும் பயமுமாக பேசுகிறான்.

“அய்யா... நான் தான்...”

எதிர்முனையில் எதோ ஆண் குரல்.

“அய்யா அது வந்து....”

“சொல்லு...”

“அவன் தப்பிச்சுட்டான்...”

“என்னடா சொல்லுற தப்பிச்சுட்டானா... மடையா... உனக்கு ஏதாது இருக்கா... நான் உன் கிட்ட எத்தன தடவ சொன்னேன், அவன கவனமா பாத்துக்கோ.. பாத்துக்கோன்னு... உன்னை நம்பி விட்டேன் பாரு.... என்னை சொல்லணும்...”

எதிர்முனையில் பேசுபவரின் கோபம் இங்கு இவனது முகத்தில் எல்லையும் கொள்ளையும் வெடிக்க செய்தது.

“மன்னிச்சுருங்க அய்யா... நான் எப்டியாது கண்டு பிடிச்சுடுவேன்... அவன பிடிச்சுட்டு உங்களுக்கு மறுபடியும் கால் பண்ணுறேன்...”

எதிர் முனையில் கால் கட் செய்த பிறகு, அவனது ஆள் ஒருவனுக்கு கால் செய்கிறான். அவன் கிடைக்கவில்லை என்று கூறவும் கோபத்தில் “அவனை எப்டியாது கண்டு பிடிங்க...” என்று கூறி கால் கட் செய்கிறான். சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்தவாறு டென்ஷன் ஆக இருக்கிறான். மறுபடியும் கால் வருகிறது. அவனுடைய ஆள் போன் செய்து கிடைக்கவில்லை என்று கூறி சிலர் நேரே இங்கு வந்து விட, எல்லாரையும் திட்டுகிறான். செய்வது அறியாமல் இருக்க, மறுபடியும் கால் வருகிறது. எடுத்து பார்த்த வுடன் “அய்யோ...” முகத்தில் பயம் வருகிறது.

“அய்யா சொல்லுங்க...”

“என்னடா கண்டுபிடிச்சுட்டீங்களா...?”

“தேடிட்டு இருக்கோம் அய்யா... எப்டியும் கண்டு பிடிச்சுடுவோம்...”

“கிழிச்ச... போடா பொறம்போக்கு... அவன் அங்க கேஸ் நடக்குற இடத்துக்கு போனா எல்லாமே முடிஞ்சது...”

“என்ன அய்யா அவனுக்கு தான் கேஸ் நடக்குறதே தெரியாதே...?! அதுவும் இல்லாம அய்யா அவனுக்கு தான் நாம எங்க அடச்சு வச்சோம்ன்னே தெரியாதே... அதுவும் அவன் கிட்ட காசு எதுவும் இல்ல... அப்டி இருக்கும் போது அவன் எப்டி அங்க வரைக்கும் போவான்..? நீங்க கவலை படாதீங்க...”

“டேய்..! மடையா... அவன் காசு இருந்தாதான் தப்பிச்சு போவானா...? லூசு மாதிரி இருக்காத... அவன் கார் பிடிச்சு நேரா தஞ்சாவூர் போனா, அப்பறம் கேஸ் பத்தி தெரிஞ்சுடும்... உடனே கெளதம் காப்பாத்த போய்டுவான்... அப்பறம் நாம நினைச்சது நடக்காது...”

“ஐயா... அவன் எப்டியும் அங்க போக குறைஞ்சது ஒரு மணி நேரமாது எடுக்கும்ல... அவன் அங்க போறதுக்கு உள்ள கேஸ் முடிஞ்சுடும்... நாம அங்கயும் ஆள் வச்சு அவன பிடிச்சுடலாம்...”

“டேய்... அது கோர்ட்... உங்க அப்பன் வீடு இல்ல... நீ நினைச்சத பண்ணுறதுக்கு... அப்டியே அவன் வரும் போது கேஸ் முடிஞ்சாலும், மறுபடியும் கேஸ் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க...”

“அய்யா அப்டியெல்லாம் நடக்காது... நாம போற வழில ஆள் வச்சு பிடிப்போம்...”

“போடா லூசு... அவன் ஒருவேள அங்க பட்டு கோட்டைலயே போலீஸ் கிட்ட போனா என்ன பண்ணுறது... அதுவும் இப்போ எங்க இருந்தான்னு வேற அவனுக்கு தெரிஞ்சுருக்கும்...”

“போலீஸ் கிட்ட போவானா...?! அச்சோ...”

“ம்ம்ம்... இப்போ நல்லா மாட்ட போறீங்க.. மொதல அங்க இருந்து கிளம்புங்க... நீங்க அங்க இருந்ததுக்கான அடையாளமே தெரியாத மாதிரி எல்லா தடயத்தையும் அழிச்சுட்டு போங்க...”

“சரி அய்யா... நாங்க எல்லாரும் இங்க இருந்து உடனே கிளம்புறோம்...”

“டேய்..! அதுவும் அங்க எந்த ஒரு அடையாளத்தயும் விட்டுட்டு போய்டாதீங்க... அதுவும் அவன கட்டி வச்ச இடத்த நல்லா சுத்தமா ஆக்கிட்டு போங்க... கொஞ்ச நாளைக்கு வெளில தலை காட்டாதீங்க... அது தான் நல்லது. ஒரு வேல நீங்க மாட்டினா கூட என் பேர சொல்ல கூடாது... என்ன..?”

“சரி ஐயா... அப்பறம் செலவுக்கு காசு...?”

“குடுத்து விடுறேன்... நீங்க எதுவும் கால் பண்ண வேண்டாம்... நானே கால் பண்ணுறேன் உங்களுக்கு இனி... சரியா... கிளம்புங்க அங்க இருந்து...”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
தஞ்சாவூர் கோர்ட், சௌந்தர்யாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி. இன்று அவர் வெளியே வந்து விடுவார் என்று நம்பிக்கை வந்து விட்டது அவளுக்கு. அவளது முகமே மலர்ந்து இருந்தது. சிரிப்புடன் உள்ளே சென்றாள். கேஸ் ஸ்டார்ட் ஆனது. லாஸ்ட் விசாரணையை கூறி அரசு வக்கீல் தொடங்குகிறார். நீதிபதி இன்ஸ்பெக்டரிடம் கேட்கிறார்.

“இன்ஸ்பெக்டர்... சந்தோஷ் கண்டு பிடிச்சாசா..?”

இன்ஸ்பெக்டர் எழுந்து, “சாரி சார்... இன்னும் கிடைக்கல...”

“இன்னும் எவ்ளோ நாள் ஆகும் கண்டு பிடிக்க...?”

“சார்... அது வந்து கிட்டத்தட்ட நெருங்கிட்டோம்... எப்டியும் டூ த்ரீ டேஸ்ல பிடிச்சுடலாம்...”

“ம்ம்ம்... ஓகே...”

அரசு வக்கீல், “சார்... கெளதம் சின்ன வயசுல கொலை பண்ண மாதவனோட பிரதர் தேவன் வந்துருக்காரு...”

“ஓகே... விசாரிங்க...”

தேவன் வந்து கூண்டில் ஏறி நிற்கிறான். அரசு வக்கீல் அவனிடம் விசாரிக்கிறார்.

“உங்க பேரு என்ன..? உங்க அப்பா பேரு என்ன...?”

“எங்க அப்பா பேரு வேதராஜ். என்னோட பேரு தேவன்.”

“உங்களுக்கு இந்த கௌதம தெரியும்ல...?”

“ம்ம்.. தெரியும் சார்... இவன் தான் என்னோட தம்பி மாதவ கொன்னான்.”

“இவன் தான் கொன்னானா..? எப்டி தெரியும்..? நீங்க தான் கேஸ் வாபஸ் வாங்கிட்டீங்களே...”

“சார்... இவன் தான் மாதவ கொன்னான். எங்க அம்மா தான் இவன விட்டுட்டாங்க...”

“உங்களுக்கு இவன் உங்க தம்பிய எதுக்கு கொன்னான்னு தெரியுமா..?”

“அவனோட அப்பா சரியா கார் ஓட்டாதனால தான் எங்க அப்பா இறந்து போயிட்டாருன்னு மாதவ் சொன்னான்... அத கேட்டுட்டு கோபத்துல இவன் என் தம்பிய ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சுட்டான்...

மறுநாள் நாங்க எல்லாரும் கண்ணாமூச்சி விளையாண்டுட்டு இருந்தோம்.... நான் தான் கண்ண கட்டிட்டு இருந்தேன்...

நான் தேடிட்டு போகும் போது... கெளதம் போறத பார்த்து, அவன பிடிக்க போனேன்...

அவன் எங்கயோ வேகமா போனான்... எங்கன்னு பார்க்க பின்னாடியே போனேன்..

அங்க மாதவ் கீழ கிடந்தான். அவனுக்கு கெளதம் கட்டாய படுத்தி தண்ணி கொடுத்தான்.. நான் பயந்து போய் வேகமா கிட்ட போனப்போ...

அவன் மயங்கி விழுந்துட்டான்... நான் பயந்து போய் கத்த பக்கத்துல இருந்த எல்லாரும் வந்தாங்க... மாதவ நாங்க ஹாஸ்பிட்டல் ல சேர்த்தோம்.

ஆனா அவன் எங்கள விட்டுட்டு போய்ட்டான். அது எல்லாத்துக்கும் காரணம் இந்த கெளதம் தான். இவன் ஒரு கொலைகாரன் தான்... நான் பார்த்தேன் இவன் என்னோட மாதவ கொன்னத... என்னால இன்னும் அத மறக்கவே முடியல... இவன் தான்... இவனே தான்...”

“சார்... இவர் சொல்லுறது போல கெளதம் தான் அந்த மாதவ கொன்னுருக்கான்...” தேவனிடம் மறுபடியும் கேட்கிறார். “நீங்க கெளதம் கூட பழகிருக்கீங்களா.. அவன் எப்டி பட்டவன்...? கோபகாரனா...?”

“நான் தான் அதிகமா பழகிருக்கேன்... மாதவ்க்கு கெளதம் அவ்ளோ பிடிக்காது... அவன் சந்தோஷ் கூட தான் அதிகமா இருப்பான்...

எப்போவுமே கௌதம் ரொம்ப நல்லவன்... ரொம்ப அதிக பாசம் காட்டுவான்... எனக்கும் அதுனால கெளதம ரொம்ப பிடிச்சது....

எங்க அப்பாவும், அவுங்க அப்பாவும் ஒரே நேரத்துல இறந்து போய்ட்டாங்க... அதுல இருந்தே மாதவும் கெளதமும் சரியா பேசிக்க மாட்டாங்க...

ரெண்டு பெரும் அன்னைக்கு தான் விளையாடும் போது பேசிக்கிட்டாங்க... அப்போ கெளதம் நடந்து கிட்டது பார்த்து நான் ரொம்ப வருத்த பட்டேன். கெளதம் கோபம் வந்தா கண்மூடிதனமா நடந்துப்பான்... எனக்காகவாது மாதவ அவன் அடிக்காம இருந்துருக்கலாம்... ஆனா அவன் அப்டி பண்ணல...

அவன் பாசம் காட்டுறதும் அதிகம், கோபம் காட்டுறதும் அதிகம்...

மாதவ அவன் கொன்னதுல இருந்தே அவன நான் வெறுக்க ஆரம்பிச்சேன்... அவனுக்கு தண்டன வாங்கி தரணும்ன்னு நினைச்சேன்... ஆனா எங்க அம்மா தான் அவனும் சின்ன பையன் அப்டின்னு சொல்லி கேஸ் வித்ட்ராவ் பண்ணிட்டாங்க...”

“சார்... கெளதம் பாசம் காட்டினாலும் அதிகம், கோபம் வந்தாலும் அதிகம் அப்டின்னு சொல்லிருக்கார்...

இதுல இருந்தும் நமக்கு தெளிவா தெரியுது... கெளதம் ஒரு சைக்கோ... அவன வெளில விடுறது ஆபத்து... அவனுக்கு தூக்கு தண்டனை குடுக்குறது தான் சரி...”

அரசு வக்கீல் கூறியவுடன் நீதிபதி ஏதோ எழுதி வைக்கிறார். சௌந்தர்யா ஒரே குழப்பதில் இருக்கிறாள். ‘நம்ம வக்கீல் ஒண்ணுமே சொல்ல மாட்டுறாரு...’ என்று எண்ணி கொண்டிருந்தாள்.

“நீங்க சொல்லுறது எல்லாம் ஓகே... இந்த சாட்சி மட்டும் போதாது, கெளதம் சைக்கோன்னு முடிவு பண்ண... இத நான் போன விசாரணையிலே சொல்லிட்டேன்...

டாக்டர் ரிப்போர்ட் வேணும்... அது இருந்தா தான் இவர சைக்கோன்னு சொல்ல முடியும்...

அது போல இந்த கேசுக்கு இவர் தான் கொலை பண்ணாருன்னு சொல்ல எந்த நேரடி சாட்சியும் இல்ல... அதுக்காக நாம சைமனோட சாட்சிய ஒதிக்கிட முடியாது...

சந்தோஷ் கிடைச்சா தான் இன்னும் தெரியும்... அடுத்த விசாரணைக்கு சைகாட்றிக் ரிப்போர்ட் சப்மிட் பண்ணுங்க...”

நீதிபதி சொல்லி கொண்டிருக்கும் போதே கெளதம்காக வாதாடும் வக்கீல் எழுந்து,

“இல்ல சார்... அதுக்கு அவசியமே இல்ல... கெளதம் கொலை பண்ணலன்னு ப்ரூப் பண்ண எங்க கிட்ட ஆதாரம் இருக்கு...”

அரசு வக்கீல் முகத்தில் அதிர்ச்சி. சௌந்தர்யா முகத்தில் சந்தோஷம். கெளதம்கோ எதையும் ஏற்க முடியாமல் புரியாமல் அப்டியே நிற்கிறான். வக்கீல் எதோ செர்டிபிகேட் நீதிபதி பார்க்க குடுக்கிறார்.

இன்ஸ்பெக்டர்க்கு ஏதோ கால் வருகிறது. அவர் மெதுவாக எழுந்து வெளியே செல்கிறார். அட்டென்ட் செய்து பேசுகிறார்.

“ம்ம்.. சொல்லுங்க சார்... இன்னும் கேஸ் முடியல...”

“நான் சொல்லுறத மட்டும் கேளு...”

“என்ன சார்...?”

“அந்த முருகன் தப்பிச்சுட்டான்... அவன் அங்க தஞ்சாவூர்க்கு தான் வந்துருக்கான்... அவன் எப்டியும் அங்க கோர்ட்க்கு வந்தாலும் வருவான்... நீ பாத்துக்கோ... அவன் அங்க கேஸ் நடக்குற இடத்துக்கு வந்துற கூடாது...”

“அவன் இப்போ எங்க இருக்கான்...?”

“தெரியல... ஆளுகள ஏற்பாடு பண்ணிருக்கேன்... அவுங்க கோர்ட்க்கு வெளில, அப்பறம் ஊர்ல எல்லாம் தேடுறாங்க... எப்டியும் கிடைச்சா கொன்னுர சொல்லிருக்கேன்...”

“என்ன நீங்க இப்டியெல்லாம் சொல்லுறீங்க...?!”

“அதுக்கு தான் உனக்கும் கால் பண்ணேன்... ஒருவேள அவன் அங்க வந்தா நீயும் கொன்னுறு... அப்டி இல்லைனாலும் அவன எங்கயாது அடச்சு வச்சுரு...”

“ஐயோ...! இது கோர்ட், கொஞ்சம் மிஸ் ஆனாலும் அப்பறம் அவ்ளோ தான்... நான் போலீஸ் எனக்கு அப்பறம் என்குயரி வச்சு வேலைய விட்டு தூக்கிடுவாங்க...”

“நீ கவலை படாத... பிரச்சன வராம நான் பாத்துக்கிறேன்...”

“இல்ல சார்... அது கொஞ்சம் கஷ்டம்... அவன பிடிக்கலாம், அதுல எதுவும் ப்ராப்லம் வராது... ஆனா அவன கொல்லுறது கொஞ்சம் கஷ்டம்... நீங்க ஏதாது ஆளுகள அனுப்புங்க, நான் அவுங்கள வச்சு பிடிச்சு கொண்டு போய் தனியா வச்சு கொன்னுறலாம்... அப்டி தான் என்னால பண்ண முடியும்... நான் நேரடியா இறங்க முடியாது...”

“ம்ம்ம்... சரி அது கூட ஓகே... நான் ரெண்டு பசங்கள அனுப்பி வைக்கிறேன். நீ பாத்து சரியா பண்ணு... கேஸ் எப்போ முடியும்...?”

“சரி சார்... நான் பாத்துக்கிறேன். தெரியல சார்... முடிஞ்சுடும் கவலை படாதீங்க நான் அவன பாத்து பிடிக்கிறேன்..”

“ம்ம்ம்... முடிச்சுட்டு கால் பண்ணு...”

கால் கட் செய்து விட்டு உள்ளே செல்கிறார். அங்கு நீதிபதி அந்த ஆதாரத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.

நீதிபதி பார்த்து விட்டு, “இதுல என்ன இருக்கு...?”

“சார்... அது முருகனோட ஸ்கூல் டீசி... அதுல அவனோட பெர்த் டேட் இருக்கு... அதுல இருந்து அவனுக்கு இப்போ வயசு இருபத்தி எட்டு.

ஆனா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ல இறந்தவருக்கு வயசு இருபத்தி நாலு இல்லைன்னா.. இருபத்தி ஐந்து இருக்கும்ன்னு சொல்லிருக்கு...”

நீதிபதி மறுபடியும் பார்க்கிறார். பார்த்து விட்டு

“ம்ம்ம்....”

“இதுல இருந்தே முருகன் இல்ல அது... இறந்து போனது வேற யாரோ அப்டின்னு தெளிவா தெரியுது...”

அரசு வக்கீல் எழுந்து, “சார் ஒரு வேல முருகன ஸ்கூல் ல சேர்க்கும் போது பெர்த் டேட் மாத்தி சொல்லிருக்கலாம் ல...”

சிரித்து கொண்டே வக்கீல், “அது மட்டும் இல்ல எங்க கிட்ட இன்னொரு ஆதாரமும் இருக்கு...”

என்று கூறி அடுத்த ஆதாரத்தை எடுத்து நீதிபதியிடம் கொடுக்கிறார்.

“சார்... அது முருகன் தன்னோட ப்ரெண்ட்ஸ் கூட எடுத்த போட்டோ... அந்த இன்னொரு போட்டோ டெட் பாடி போட்டோ...

முருகன் கைல இருக்க அவனோட பேர பாருங்க...”

“அதுலயும் முருகன் தான் பச்சை குத்திருக்கு, டெட் பாடிளையும் அதே தான் பச்சை குத்திருக்கு...” என்று நீதிபதி சொல்லவும்

“இல்ல சார்... அந்த முருகன் போட்டோ ல அவன் இடதுகை ஸ்ட்ரைட்டா பார்த்தா, அதாவது கட்டை விரல் மேல் நோக்கி இருக்குற மாதிரி பார்த்தா... முருகன் அப்டின்னு ஸ்ட்ரைட்டா தான் இருக்கும்.

ஆனா... அந்த டெட் பாடில அதே போல ஸ்ட்ரைட்டா கட்டை விரல் மேல பார்த்த மாதிரி இருக்குதுன்னா... அதுல பேரு ரிவர்ஸ் ல இருக்கும்... தலைகீழா இருக்கும்...

இப்போ உங்களுக்கே தெளிவா தெரியுதா சார்... இறந்து போனது முருகன் இல்ல, வேற யாரோ...”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
கெளதம் முகம் மாறியது. முருகன் உயிரோடு தான் இருப்பானோ என்று என்ன ஆரம்பித்தான். தைரியம் தானாக வந்தது. அப்போ முருகன் எங்க போயிருப்பான்...? அவர் கூறுவது உண்மை என்றால் இறந்தது யாரு...? என்று குழப்பம், சந்தேகம் என்று எல்லாம் வந்தது. ஆனால் முருகன் உயிரோட தான் இருக்கான் இப்போ அதுவே நமக்கு போதும் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தான்.

இன்ஸ்பெக்டர்க்கு ஏதோ மெசேஜ் வருகிறது. எடுத்து பார்த்து விட்டு வெளியே செல்கிறார். அங்கு இரண்டு தடி தடியாய் எருமைமாடு போல் அடியாள் நிற்கின்றனர். அவர்களை பார்த்து விட்டு அவர்களுக்கு கால் செய்கிறார். கால் வந்த வுடன் அந்த இருவரும் சுத்தி பார்க்கின்றனர். இன்ஸ்பெக்டரை பார்த்து விடுகின்றனர். உடனே இன்ஸ்பெக்டர் நகர்ந்து சென்று ஒரு மரத்தடியில் நிற்கிறார். இவர்களும் யாரும் கவனிக்காதவாறு அருகில் சென்று வேறு ஒரு புறம் திரும்பி நிற்கின்றனர். இன்ஸ்பெக்டர் போன் பேசுவது போல் அவர்களிடம் பேசுகிறார்.

“எங்க எங்க எல்லாம் ஆளுக இருக்காங்க..?”

“கோர்ட் முன்னாடியே நிக்கிறாங்க... அப்பறம் வர்ற வண்டி எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காங்க...”

“அவன் இப்போ எங்க இருக்கான்னு தெரியுமா..?”

“இல்ல சார்... தெரியாது எங்களுக்கு... கடைசியா அங்க கோவில் தெருவுக்கு போயிருக்கான்.. போயிட்டு விசியத்த தெரிஞ்சுட்டு கிளம்பிருக்கான்..”

“எப்போ..?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்... எப்டியும் அய்யா சொன்ன மாதிரி இங்க தான் வருவான்...”

“சரி... நான் இங்க தான் நிப்பேன்... நீங்க ரெண்டு பேருல ஒருத்தரு கோர்ட் கேஸ் நடக்குற இடத்துக்கு முன்னாடி போய் நில்லுங்க... ஒருத்தர் என்கூட நில்லுங்க...”

“சரி சார்...” என்று கூறி ஒருவன் சென்று அங்கு முன்னாடி நிற்கிறான்.

உள்ளே கோர்ட்டில் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. முருகன் இறக்கவில்லை என்று கூறியது முதல் அரசு வக்கீல் முகம் பதற்றமானது.

அரசு வக்கீல் ஆதாரத்தை உடைக்க முடிவு எடுத்து யோசிக்கிறார். கெளதம்காக வாதாடும் வக்கீலை கேள்வி கேக்கிறார்.

“ஏன் சார்... உங்களுக்கு இந்த போட்டோ எங்க இருந்து கிடைச்சது...?”

வக்கீல் பதில் சொல்லவில்லை. உடனே நீதிபதி, “சொல்லுங்க..”

“சார்... இந்த போட்டோ கெளதம் வீட்டுல இருந்து கிடைச்சது...”

“இப்போ புரியுது சார்... வக்கீல் சார் தன்னோட கட்சிகாரற காப்பாத்த இந்த பொய்யான ஆதாரத்த சப்மிட் பண்ணிருக்கார்... இத காட்டி ஏமாத்த பாக்குறாரு...”

“நான் எதுக்கு ஏமாத்தனும்... இது தான் சார் உண்மை...”

“இது ஒரிஜினல் போடவே கிடையாது சார்...”

நீதிபதி உடனே, “இங்க பாருங்க ஆதாரமா காட்ட பட்ட போட்டோ, செர்டிபிகேட் ரெண்டும் எப்டி பொய்யா இருக்க முடியும்..?

சரி நீங்க முருகனோட சித்தப்பாவ கூப்பிடுங்க.... விசாரிக்க..”

சிவசங்கர் வந்து கூண்டில் ஏறி நிற்கிறார். வக்கீல் விசாரிக்கிறார்.

“சொல்லுங்க சிவசங்கர்... அந்த டெட் பாடிய பார்த்து அது முருகன் தான்னு நீங்க தான அடையாளம் சொன்னீங்க..?”

“ஆமாம் சார்...”

“எப்டி இப்டி தப்பா சொன்னீங்க..? உங்க மகன உங்களுக்கே அடையாளம் தெரியாதா..?”

“இல்ல சார் எனக்கு தெரியும்... அவனோட கைல அது போல தான் பச்சை குத்திருக்கும்...”

“ஆனா அவரோட கைல இருக்க பேரும், டெட் பாடி ல இருக்க பேருக்கும் வித்தியாசம் இருக்கே...?!”

“நான் அன்னைக்கு பார்க்கும் போது ரொம்ப பதற்றத்துல தெளிவா கவனிச்சு பார்க்கல...”

“அது எப்டி சார்...? தப்பா பாத்து அடையாளம் சொல்லிருக்கீங்க... இப்போ அத சாதாரணமா சொல்லுறீங்க... உங்களுக்கு உங்க மகன சரியா அடையாளம் காட்ட தெரியலைன்னா எதுக்கு தெரிஞ்ச மாதிரி கன்பார்ம் பண்ணுறீங்க...?”

“சாரி சார்... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பேரு அந்த மாதிரி தான் பச்சை குத்திருந்த ஞாபகம்... அதான் நான் சொன்னேன்...”

நீதிபதி எரிச்சல் பட்டு கொண்டே ஏதோ குறித்து வைத்து கொள்கிறார். பின் அரசு வக்கீலை பார்த்து, “நீங்க விசாரிக்கனுமா...?”

“எஸ் சார்...”

“ம்ம்ம்... விசாரிங்க...”

“முருகனோட கைல இருக்க பச்சை குத்திருக்க பேரு எப்டி இருக்கும்...?”

“சார்... நான் பாத்த வரைக்கும் அப்டி தான் இருக்கும்...”

“அவரோட போட்டோ உங்க கிட்ட எதுவும் இருக்கா..?”

“இல்ல சார்... அவன் எந்த போடோவும் எடுத்துக்க மாட்டான்...”

“அப்போ அந்த போட்டோ ஒருஜினல் கிடையாதுன்னு சொல்லுறீங்க...?!”

“இல்ல சார்... எனக்கு தெரியாது... நான் எடுக்க கூப்பிட்ட வேணாம்ன்னு சொல்லுவான்... ஒருவேள அவுங்க கூட எடுத்துருக்கலாம்... எனக்கு தெரியல..”

நீதிபதி ஏதோ எழுதி வைக்கிறார்.

வெளியே அங்கு இன்ஸ்பெக்டர் முரளி கவனமாக வரும் வண்டியை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வண்டி வருகிறது. அதில் இருந்து காதம்பரி, சந்தோஷ் இருவரும் இறங்குகிறாள். அதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிறார் இன்ஸ்பெக்டர் முரளி.

“அது சந்தோஷ் தான..?!” அதிர்ச்சியோடு சொல்ல, அருகில் இருந்த அடியாள் “எனக்கு தெரியாது சார்...”

“அந்த பரதேசியே தான்... இந்த பரதேசியால தான் நான் எப்போ பாரு அந்த ஆளு கிட்ட திட்டு வாங்கிட்டேன் இருந்தேன்... எனக்கு வேல பார்க்கவே தெரியல அப்டின்னு எல்லாம் திட்டுச்சு...”

“அவன் கூட போற பொண்ணு முருகனோட தங்கச்சியா சார்...?”

“ஆமாம்... இதுகளால நமக்கு தான் பிரச்சன... இதுக உள்ள தான் போகுதுக... நான் போறேன், நீங்க பாத்துக்கோங்க...”

“என்ன சார்...? நீங்க போய்ட்டா அப்பறம் எப்டி சமாளிக்கறது..?”

“டேய்..! எப்டியும் என்னை அந்த நீதிபதி ஏதாது கேப்பான்... நான் அங்க இருக்கணும்... நாம ப்ளான் பண்ண மாதிரி செய்யுங்க, அது போதும்...”

என்று கூறிவிட்டு விறுவிறுவென உள்ளே செல்கிறார். அங்கு அவர்கள் இருவரும் அப்போது தான் உள்ளே நுழைகின்றனர். சந்தோஷ் சத்தமாக “சார்...” என்று கூப்பிட, எல்லாரும் திரும்பி பார்க்கின்றனர்.

சௌந்தர்யா, கெளதம், சைமன் என எல்லாருக்கும் அதிர்ச்சி கலந்த ஆனந்தம். சிவசங்கருக்கு கோபம் கொந்தளித்தது. வக்கீல் பார்த்ததும்,

“சார் இவர் தான் சந்தோஷ். அவர் கூட நிக்கிறது முருகனோட தங்கச்சி காதம்பரி.”

நீதிபதி பார்த்து இருவரையும் விசாரிக்க சொல்லுகிறார். அவர்கள் வந்து கூண்டில் ஏறி நிற்கின்றனர்.

அரசு வக்கீல் வந்து விசாரிக்கிறார். “நீங்க சந்தோஷ் தானா...?”

“ஆமாம் சார் நான் தான்...”

“நீங்க ரெண்டு பேரும் இத்தன நாளா எங்க இருந்தீங்க...?”

“சார்... நாங்க கொடைக்கானல் ல இருந்தோம்...” என்று சந்தோஷ் கூற அடுத்து தொடர்ந்து காதம்பரி பேசுகிறாள்.

“அங்க எங்களுக்கு தெரிஞ்சவுங்க இருக்காங்க... அங்க அவுங்க வீட்டுல தங்கி இருந்தோம்...”

அரசு வக்கீல், “நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டீங்களா..?”

“இல்ல சார்...” என்றதும்,

“ஏன்...? வேற எதுவும் பிரச்சனையா..?” என்று காதம்பரியிடம் கேக்கிறார்.

“இல்ல சார்... அப்டியெல்லாம் இல்ல...”

“நீங்க ஓடி போன அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லுறீங்களா..?”

“அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை பாத்தாரு... அதுவும் அந்த மாப்பிள்ளைக்கு என்னை பிடிச்சுருக்கு, அதுனால அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணிடலாம் அப்டின்னு சொன்னாரு... நான் வேணாம்ன்னு சொன்னேன், கேக்கல... அதான் நாங்க ஓடி போகலாம்ன்னு நினைச்சோம்... நைட் அப்பா வர லேட் ஆச்சு... அந்த நேரத்துல நான் கிளம்பிட்டேன்...”

“ம்ம்... அன்னைக்கு உங்க அண்ணாவ கொலை பண்ணிருக்காங்க... அது உங்களுக்கு தெரியுமா..?”

“எனக்கு ஆரம்பத்துல தெரியாது சார்... எங்களுக்கு நேத்து தான் தெரியும்... அப்பறம் இங்க நடக்குற கேஸ் பத்தி தெரிய வந்தது, உடனே கிளம்பி வந்தோம்...”

“நீங்க அன்னைக்கு ஓடி போனதுக்கு யாரு ஹெல்ப் பண்ணா..? இந்த கெளதம் தான..?”

சந்தோஷ் வேகமாக, “இல்ல சார்... கெளதம்க்கு நாங்க ஓடி போறதே தெரியாது. அவனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...”

காதம்பரி, “எங்க அண்ணா தான் எங்கள அனுப்பி வச்சாரு..”

“யார சொல்லுறீங்க...?”

“முருகன் அண்ணா தான்...”

சந்தோஷ், “அதுவும் அவன் தான் எங்கள கல்யாணம் பண்ண வேண்டாம், ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க... நான் அப்பாவ சம்மதிக்க வச்சுட்டு உங்களுக்கு கால் பண்ணுறேன் அப்பறம் நீங்க வாங்க... எல்லாரோட சம்மதத்தோட கல்யாணம் பண்ணலாம் அப்டின்னு சொல்லி எங்கள பஸ் ஸ்டான்ட் வரைக்கும் வந்து அனுப்பி வச்சான்...”

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என்று எல்லாரும் குழம்பி கொண்டிருந்தனர். சிவசங்கருக்கு இப்போது முருகன் மேல் இன்னும் அதிகமாக கோபம் வந்தது. கூடவே இருந்து இப்டியெல்லாம் பண்ணிருக்கான் என்று எண்ணி திட்டு கிறார்.

இன்ஸ்பெக்டர்க்கு மெசேஜ் வருகிறது முருகன் கோர்ட்க்குள் வருவதாக. மெதுவாக எழுந்து வெளியே செல்கிறார். அங்கு அடியாள் ஒரு வண்டியை கை காட்டுகிறான். அந்த வண்டி மெதுவாக வந்து கோர்ட் முன்பு நிற்கிறது.

அடியாட்கள் இருவரும் கத்தியை எடுத்து மறைத்து கொண்டே அருகில் செல்கின்றனர். முருகன் உள்ளே இருந்து இறங்குகிறான். அடியாள் அருகே சென்று கத்தியை வைத்து குத்த, ரத்தம் சொட்ட சொட்ட முருகன் அவனை தள்ளி விடுகிறான்.

தொடரும்....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
sema interesting epi sis .:love::love::love::love:ippidi oru turning pt ethitpakkalai.(y)(y)(y)(y) murugan than santhoshku help pannana......... muruganai kathiyal kuthitangala cout vasalil:unsure::unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top