• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Marcus Weds Chaitanya-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் முதல் எபியோட வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்....



மரங்கள் சூழ்ந்த அந்த பங்களாவின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தாள் சைதன்யா... ஐந்தடி உயரம் மலர் முகம் நீண்ட கூந்தல் காதளவோடிய கண்கள் என பார்ப்பவர் மயங்கும் பேரழகி அவள்.


தந்தை பிரபாகரன் வியாபார புள்ளி.. தாய் மீனாட்சி வீட்டரசி தங்கை விதன்யா என சிறிய தேன்கூடு அவர்கள் குடும்பம்.
சைதன்யா பி.எஸ்.ஸி வேதியியல் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.அவள் தங்கை விதன்யா பன்னிரெண்டாம் வகுப்பு.பள்ளியிலிருந்து கல்லூரி வரை அவளோடு ஒன்றாக இருப்பவள் தான் அர்ச்சனா.



அர்ச்சனா தீனதயாளன் மதுரா தம்பதிகளின் மூத்த மகள்.இரண்டாவது அவள் தம்பி வருண்... என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவன்.


சைதன்யா அர்ச்சனா இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பர்.விடுமுறை கூட ஒன்றாக சினிமா பீச் பார்க் என கழியும்.அப்படியிருக்கும் போது அர்ச்சனா இரண்டு நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை.முதல் நாள் பேசாமல் இருந்த சைதன்யா மறுநாள் மாலை கல்லூரி முடிந்ததும் நேரே அவள் வீட்டிற்கே வந்துவிட்டாள்.


கதவை திறந்த வேலையாள் சென்று எஜமானியம்மாளை அழைத்து வந்தான்.ஹாலுக்கு வந்த மதுரா ஆண்ட்டியின் முகம் கவலை அப்பிக் கிடந்ததைக் கண்டு துணுக்குற்றாள் சைதன்யா. (அட!முகத்த பாத்தே கண்டுப்பிடிக்குதே இந்த பொண்ணு!சைட்ல சைக்காலஜி படிக்குதோ!)


உள்ளே நுழைந்த சைதன்யா


"ஆண்ட்டி!ஏன் டல்லா இருக்கீங்க? அர்ச்சனா ஏன் காலேஜுக்கு வரலே?எனி ப்ராப்ளம்?"(மூச்சு விடாம கேட்டா அவங்க எப்பிடிம்மா பதில் சொல்வாங்க)


சிறிது தயங்கிய அவர்


"அச்சு..ரூம்ல தான்மா இருக்கா..போயி பாரு..அவளே சொல்லுவா"(உங்கள கேட்டா அவளை கைகாட்றீங்களே)


அர்ச்சனாவின் ரூமை அடைந்தவள் அங்கே அவள் கட்டிலில் எதையோ இழந்தவள் போல சோக முகத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டு அவள் அருகே சென்று அவள் தோளைத் தொட்டாள்.அதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் அவள்(பாவம் புள்ள பயந்திருச்சி)


"அச்சு!ஏன்டி இப்பிடி இருக்கே? காலேஜுக்கு ஏன் வரல?உடம்பு சரியில்லையா?"(இந்த பொண்ணாவது பதில் சொல்லுதான்னு பாப்போம்)


அடைத்த தொண்டையை எச்சிலை விழுங்கி சரிசெய்த அர்ச்சனா


"சைத்து!என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுடி!சாகறது ஒண்ணுதான் இந்த கஷ்டத்துலேந்து தப்பிக்க எனக்கு ஒரே வழி"(ஐயோ)


அவள் பேச்சில் அதிர்ந்த சைதன்யா


"சே! அப்படியெல்லாம் பேசாத அச்சு...இப்ப என்ன நடந்துடுச்சின்னு சாகற பேச்சு பேசற...எது வந்தாலும் எதிர்த்து நிக்கனும்..அத விட்டு சாக நினைக்கறது கோழைத்தனம்"(அப்படி சொல்லு ஜான்சிராணி)


"அப்பா முடிவ கேட்டா நீயும் நான் சொல்றது கரெக்டுன்னு சொல்லுவ"(அப்பிடிங்கற)


"முடிவா?என்ன முடிவு? கொஞ்சம் புரியும்படி சொல்லேண்டி.."(ஆமா எங்களுக்கும் புரியல)


நீண்ட பெருமூச்சறிந்த அர்ச்சனா விவரிக்கத் தொடங்கினாள்.அர்ச்சனாவின் தந்தை தீனதயாளன் தேர்ந்த பிஸ்னஸ் மேன்.இந்தியா மட்டுமல்லாது அவரது பிஸ்னஸ் வெளிநாடுகளிலும் பரந்து விரிந்திருந்தது.அதிலும் அவரின் முக்கிய பங்குகள் லண்டனில் இருந்தது.அதன் உரிமையாளன் மார்கஸ் வெஸ்ட்க்ளிஃப்.


லண்டன் முக்கிய கோடிஸ்வர்களில் ஒருவன்.வளர்ச்சியின் முன்னனியில் இருக்கும் இளம் தொழிலதிபன்.தீனதயாளனோடு வியாபாரம் மட்டுமல்லாது நல்ல நட்பும் இருந்தது.இந்த முறை அவர் லண்டன் சென்ற போது மார்கஸின் திருமணப் பேச்சு எழுந்தது.ஐரோப்பா அமெரிக்கா ஆசியா என அவனுக்கு பெண் கொடுக்க காத்திருக்கும் பெரிய மனிதர்கள் பலர்.ஆனால் அவனோ தனக்கு இந்திய பெண் தான் அதுவும் தமிழ்நாடு பெண்தான் வேண்டும் என்று தீர்மானமாக கூறிவிட்டான்.


உடனே தீனதயாளன் தம் மகளை அவனுக்கே கொடுப்பது என்று தீர்மானித்து விட்டார்.அவனிடம் லேசுபாசாக கேட்டப் போது பார்க்கலாம் என்றான்.தன் அழகு பதுமை மகளை நேரில் பார்த்துவிட்டால் அவன் மறுக்கவே மாட்டான் என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயமில்லை.அவனோடு மட்டும் இந்த திருமணம் நடந்து விட்டால் தம் மகள் மகாராணியாகி விடுவாள்.சீக்கிரத்தில் கட்டாயமாக இந்தியா வருமாறு அவனுக்கு அழைப்பு விடுத்து விட்டு இந்தியா திரும்பி விட்டார்.


திரும்பி வந்ததிலிருந்தே அவனதே புராணம்.அவன் அப்படி அவன் இப்படி என மனைவி மகள் காதுகளில் ரத்தம் வருமளவு ரம்பம் போட்டவர் முடிவில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவனே அர்ச்சனாவின் மணவாளன் என அறிவித்து விட்டார்.


அவன் வேறு ஜாதி அவன் வாழ்க்கை முறை வேறு நம் வாழ்க்கை முறை வேறு அவ்வளவு பணக்காரனான அவனுக்கு என்ன என்ன கெட்டப் பழக்கங்கள் உள்ளனவோ? உள்ளூரிலேயே வேறு நல்ல மாப்பிள்ளையாக பாருங்கள் என்ற மனைவியின் எதிர்ப்புகள் செவிடன் காதில் ஊதிய சங்கானது.(செவிடா!அடப்பாவமே)


அர்ச்சனாவோ அழுது புரண்டு சண்டைப் போட்டும் உண்ணாவிரதம் இருந்தும் அதற்கெல்லாம் எந்த பலனும் இல்லை.(வெயிட் குறைஞ்சிருக்குமே!)அவர் முடிவை மாற்ற முடியாத தோல்வி தாளாமல் தன் அறையிலேயே அடைந்துக் கிடந்தாள்.இதையெல்லாம் தோழியிடம் விவரித்தவள் ஹோவென அழுதாள்.


"அடச்சீ அழறத நிறுத்து!இப்ப என்ன ஆயிடுச்சு..‌வெறும் பேச்சுவார்த்தைதானே ஆயிருக்கு..என்னமோ கல்யாணமே நடந்திட்டது மாதிரி பொங்கி பொங்கி அழறியே..."(அதானே!)


"வெறும் பேச்சு வார்த்தையா? நாளைக்கு காலை ஃப்ளைட்ல அவன் வரானாம்... சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு அவனோட என்னை பேக் பண்ண அப்பா முடிவு பண்ணிட்டாரு...என் விக்கிய தவிர யாருக்கும் நா கழுத்தை நீட்ட மாட்டேன்"(அது வேறயா!)


சிறிது நேரம் தோட்டத்தை ஜன்னல் வழியே வெறுத்த சைதன்யா(அங்க ஏதாவது ஐடியா கிடைக்குமோ) முடிவில் தோழி அருகே வந்தவள்


"அச்சு!இங்க பார்...இந்த மேரேஜ் கண்டிப்பா நடக்காது...என்னை நம்பு...ஏதாவது செஞ்சு அவனே இந்த கல்யாணம் வேண்டாம்னு பண்ணிடலாம்...நீ தைரியமா இரு... உன் கல்யாணம் விக்னேஷோட நடத்தறது என் பொறுப்பு..."(உன்னால முடியுங்கற)


அவளின் தைரியமானப் பேச்சில் அர்ச்சனாவும் தெளிந்தாள்.பின் தோழியர் இருவரும் அவனை விரட்டும் வழிகளை ஆராய்ந்து சிலபல திட்டங்களை வகுத்தனர்.


சைதன்யா வந்த மேல் மகள் முகம் தெளிந்து அதில் சந்தோஷம் தெரிந்ததில் தீனதயாளன் வெகுவாக மகிழ்ந்தார்.அவள் ஏதோ புத்திமதி கூறி மகளை சரிசெய்து விட்டாள் என்று மனதுள் சைதன்யாவிற்கு நன்றி கூறினார்.(ஐயோ பாவம் வெள்ளந்தி மனுசரு)


அர்ச்சனாவின் திருமணம் முடியும் வரை சைதன்யா அவளுடனே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அவர்.அவர் கோரிக்கையில் உள்ளூர சிரிப்பு பொங்கினாலும் வெளியே பதிவிசாக அப்படியே செய்வதாக வாக்களித்தாள் சைதன்யா.(திருடன் கிட்டயே சாவிய கொடுக்கறீங்களே சார்!)


மறுநாள் காலை புது மாடல் பிஎம்டபிள்யூ காரில் வந்திறங்கிய மார்கஸை கண்டு விழிவிரித்தாள் சைதன்யா.வெள்ளையருக்கே உரிய வெண்மை நிறமல்லாது சிறிது கோதுமை நிறத்தில் இருந்தான் அவன்.ஆறடி உயரமும் சிக்ஸ் பேக் உடலும் கறுமை நிறக் கோட் சூட்டில் கம்பீரமாக இருந்தவனை


'வாவ்! வாட் எ ஹேண்ட்சம் மேன்'


என்றது அவள் உள்ளம்.உடனேயே


'சீச்சி இவன் விரட்டியடிக்கப்பட வேண்டிய விரோதி!அவனை போயி சைட் அடிக்கறதா!நோ நெவர்...டேய் மாக்கு!நா கொடுக்கற ட்ரீட்மெண்ட்ல துண்டைக் காணும் துணியைக் காணும்னு லண்டனுக்கு உன்ன முட்டைய கட்ட வைக்கல நான் சைதன்யாவே இல்ல...'என்று மனதுள் சூளுரைத்தாள்(பேர மாத்தும்படி ஆயிடுமோ!)
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "மார்க்கஸ்
வெட்ஸ் சைதன்யா"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி குறுநாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பவ்யா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பவ்யா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top