Marcus Weds Chaitanya-3

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
அந்த பார்ட்டி ஹால் வண்ண விளக்குகளாலும் நவநாகரீக உடை அணிந்த மனிதர்களாலும் அழகுறக் காட்சியளித்தது.இசைத் தொகுப்பாளரால் மெல்லிய இசை பின்னனியில் ஒலித்தது.அங்காங்கே போடப்பட்டிருந்த வட்ட மேஜையை சுற்றிப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சைதன்யாவும் அர்ச்சனாவும் மெல்லியக் குரலில் அன்றைய பிளானை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.அர்ச்சனா நீலநிற பார்ட்டி உடையில் மிளிர்ந்தால் சைதன்யா பிங்க் வண்ண உடையில் தேவதையாக ஜொலித்தாள்.


"சைத்து!எப்படியாவது இந்த பிளானையாவது வெற்றிகரமா முடிச்சிடுடி....இத விட்டா இது மாதிரி சான்ஸ் இனிமே கெடைக்காது..."


"டோண்ட் வொரி பேபி!நா பண்ற வேலைல மாக்குவோட மானம் கப்பலேறி லண்டன் போய்தான் நிக்கும்... கொஞ்சம் பார்ட்டி களைக்கட்டட்டும்... அப்புறம் நம்ம பிளான அரங்கேற்றலாம்..."


பேசியவாறு எதேச்சையாக திரும்பிய சைதன்யா ஒரு நொடி மூச்சு விட மறந்தாள்.அங்கே ஹால் வாயிலில் கருநீல கோட்சூட்டில் வந்த மார்கஸின் கம்பீரத்தில் சுற்றுப்புறம் மறந்தாள்.தீனதயாளனோடு பேசியபடி வந்து இவர்கள் எதிர்ப்புறத்தில் அமர்ந்த மார்கஸ் சைதன்யாவின் எழிலில் நிலைத்தடுமாறினான்.


அவன் பார்வை தன் மீதே நிலைத்திருப்பதை அவளால் உணர முடிந்தது.ஆனால் அதைப் பார்த்து உறுதி செய்ய முயலவில்லை அவள்.தோழிக்கு உதவுவதாக கூறியதை நிறைவேற்றாமல் தன் மனம் அவனிடம் பாயத் துடிப்பது பயத்தை அளித்தது அவளுக்கு.


சிறிது நேரத்தில் பார்ட்டி களைக்கட்டியது.மெல்லிய இசை நடனத்திற்கு தகுந்தாற்போல் வேகமான இசையாக மாறியது.அவரவர் ஜோடியோடு இணைந்து ஆடத் துவங்கினர்.அர்ச்சனா தன் காதலன் விக்னேஷோடு ஆடத் துவங்கிவிட்டாள்.


அதைக் கண்டு கோபிக்க தீனதயாளன் தன் நண்பர் ஒருவரோடு பங்குச்சந்தை பற்றி தீவிர விவாதத்தில் இருந்தார்.


தங்கள் பிளானின் முதல் கட்டமாக மார்கஸ் அருகே நெருங்கிய சைதன்யா,


"ஹாய் மிஸ்டர் மார்கஸ்!வில் யு டேன்ஸ் வித் மி"என்றாள் கொஞ்சும் குரலில்.


ஒரு கணம் தான் காண்பது கனவோ என எண்ணித் திடுக்கிட்டான் மார்கஸ்.நேற்றிலிருந்து தன்னை பலவிதத்தில் பாடாய்படுத்தும் அழகு மோகினி இன்று அவளாகவே வந்து நடனமாட அழைக்கிறாளே!இதில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ?'என்று சில நொடி யோசித்தவன் பின் தன் ட்ரேட்மார்க் மயக்கும் புன்னகையோடு,


"இட்ஸ் மை ப்ளஷர்"என்று எழுந்தவன் நீட்டிய அவள் கைகளை அழுத்தமாக பற்றியபடி ஹாலின் நடுவே அழைத்துச் சென்றவன் அவள் கையை சுண்டி இழுத்தான்.பூப்பந்தென அவன் மார்பில் வந்து மோதினாள் அவள்.


ஒரு கையை அவள் கையோடு கோர்த்தவன் மறுகையை அவளின் பொய்யோ எனும் இடையில் அழுத்தினான்.இசைக்கு தகுந்தாற்போல் வளைந்தும் நெளிந்தும் சுற்றியும் ஆடினர் இருவரும்.தங்களை சுற்றியிருந்த எல்லாவற்றையும் மறந்தனர்.எதிரில் இருந்த கண்களைத் தவிர மற்ற எதுவும் அவர்கள் கருத்தில் பதியவில்லை.மனம் மயக்கும் இசையும் இதுவரை அறிந்திடாத நெருக்கமும் இருவரையும் வேறு உலகிற்கு அழைத்துச் சென்றது.இசை முடிந்து படபடவென கைத்தட்டல் வானை எட்டவும் அவர்கள் தன்னிலை அடைந்தனர்.


செங்கொழந்தாக சிவந்த தன் முகத்தை அவன் பார்க்கும் முன் அங்கிருந்து விரைந்து விட்டாள் சைதன்யா.வாஷ்ரூமில் குளிர்ந்த நீரில் முகம் கழுவி ஏறி இறங்கிய மூச்சை சரி செய்த பின் கலைந்த மேக் அப்பை மீண்டும் சரி செய்துக் கொண்டு ஹாலில் குளிர்பானங்கள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தவள் மார்கஸை கவிழ்க்கும் பிளானை அரங்கேற்ற குளிர்பான கிளாசில் அதனோடு மிகவும் போதையேற்றும் மதுபானத்தை கலந்தாள்.


'டேய் மாக்கு!இத மட்டும் குடி...போதை தலைக்கேறி வாய்க்கு வந்ததை உளறி மட்டையா விழுந்து அங்கிளே சீச்சி இந்த மாப்பிள்ளையே வேண்டாம்னு உன்னை மூட்டைக் கட்டி லண்டன பாக்க அனுப்பிடுவார்....ஸோ பை பை மிஸ்டர் மாக்கு'


அவனுக்கு சந்தேகம் வராமலிருக்க தட்டில் இன்னொரு க்ளாசில் தனக்கு குளிர்பானத்தை நிரப்பி இன்னுமும் தங்கள் நடனத்தையே எண்ணி தன்னை மறந்து அமர்ந்திருந்த மார்கஸை நெருங்கினாள்.தான் வந்ததை உணராமல் இருந்தவனை கண்டு திகைத்த சைதன்யா அவன் தோளை லேசாகத் தட்டினாள்.அதில் தன்னிலை அடைந்த மார்கஸ் அவள் கையிலிருந்த பானத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.


"ப்ளீஸ் ஹாவ் இட் மிஸ்டர் மார்கஸ்!உங்களுக்காகவே ஸ்பெஷலா நானே கொண்டு வந்தேன்..."


"ஹோ...தேங்க் யூ ஸோ மச் மிஸ் சைதன்யா!....."என்று பானத்தை கையிலெடுத்தவன் "மிஸ் சைதன்யா உங்க ப்ரெண்ட் உங்கள கூப்பிட்றாங்க..அங்க பாருங்க"


"என்ன அச்சுவா கூப்பிட்றா?"என்று சைதன்யா திரும்பிய போது கண் இமைக்கும் நேரத்தில் க்ளாசை மாற்றியிருந்தான் மார்கஸ்.என்னதான் அவள் மேல் ஈர்ப்புத் தோன்றியிருந்தாலும் முன் பட்ட அனுபவம் அவளை நம்ப முடியவில்லை அவனால்.அதனாலையே அந்த பானத்தில் அவள் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கலாம் என்று அவளை திசைத்திருப்பி பானத்தை மாற்றிவிட்டான்.


அங்கே மார்கஸ் காட்டிய திசையில் விக்னேஷோடு இழைந்தபடி பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.அவள் இருந்த நிலை அவள் தன்னை அழைத்ததுப் போலவே தெரியவில்லை சைதன்யாவிற்கு.ஏதோ மிஸ் ஆகும் உணர்வுடன் திரும்பியவள் மார்கஸ் தன் பானம் முழுவதும் முடிந்திருந்ததை கண்டவள் மற்றதை மறந்து அவன் ஆகப் போகும் நிலையை எண்ணிக் குதூகலித்தாள்.தன் கையிலிருந்ததை ஒரே மூச்சில் குடித்தாள்.தொண்டையெல்லாம் கசப்பாக உணர்ந்தாலும் ஒருவித ஆனந்தம் உடலெங்கும் பரவுவதை உணர்ந்தாள்.இன்னும் வேண்டும் என்று அடம் பிடித்தது மனம்.


தட்டுத்தடுமாறி எழுந்தவள் ஒருவிதமான சிரிப்போடு மார்கஸைப் பார்த்தவள்,


"ஒன்ன்..மினினிட்...ஐஐ வில் கம்ம் பேபேக்"என்றபடி எழுந்துச் சென்றாள்.இந்த நிலையில் எங்கு செல்கிறாள் என்று பயந்த அவனும் அவள் பின்னேயே சென்றான்.


ஹார்ட் ட்ரிங்க்ஸ் ஓரமான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.அதே திசை நோக்கி சைதன்யா செல்வதை கண்டு மேலும் விரைவாகப் பின் தொடர்ந்தான் மார்கஸ்.ஆனால் அவன் அவளை நெருங்கும் முன் அங்கிருந்த பெரிய பாட்டிலை ஒரே மூச்சில் உள்ளே செலுத்தியிருந்தாள் சைதன்யா.ஐயோ என்றானது அவனுக்கு.


போதை தலைக்கேற கையில் பாட்டிலோடு வாயில் ஏதோ பாட்டை பாடியபடி தள்ளாடினாள் அவள்.நடை தடுமாற கீழே விழ இருந்தவளை ஓடிச் சென்று பிடித்தான் மார்கஸ்.அவன் கையை உதறியவள்,


"ஏய்... டோண்ட் டச் மி!ஐம் ஆல்ல்வேஸ் ஸ்ஸ்டடிடி...ஃபுல்ல்ல் ஸ்டடிடி..."என்றவள் உரத்தக் குரலில்


"மச்சி ஓப்பன் த பாட்டில்
இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலமுற"என்று பாடத் தொடங்கிவிட்டாள்.சுற்றிலும் இருந்தவர் என்னவென்று திரும்பிப் பார்க்கவும் சைதன்யாவின் வாயைப் பொத்தியவன் அவளை இழுத்துக் கொண்டுச் சென்று லிஃப்ட்டில் ஏற்றியவன் டெரஸ் பட்டனை அமுக்கினான்.அவன் பிடியிலிருந்து நழுவ படாதுபாடுப்பட்டாள் அவள்.ஆனால் அவன் பிடி இரும்பாக இருந்தது.


டெரஸை அடையவும் அதுவரை அவள் வாயைப் பொத்தியிருந்த கைகளை அகற்றினான்.


"ஏய் என்னன ஏஏன் இங்க கூட்டிட்டு வந்தே... எனக்குகு அந்தத மாமாக்குவோட ஷோ... பாக்கனும்ம்ம்..."


"மாக்கு?அது யாரு?"


"அதுது தாதான் லண்டன்லேந்து வந்திருந்திருக்காகானே....மார்கககஸ்...அவனேதாதான் மா....க்கு"


"என்னது மாக்குவா?!... க்கூம்....சரி அவனோடது என்ன ஷோ?"


அவன் கேள்விகளுக்கு ஒருவிதமாக சிரித்த சைதன்யா தன் வாயில் விரலை வைத்து,


"ஷ்ஷ்... யாருக்கும் சொல்லிடாதே...அந்த மாக்கு குடிச்ச ட்ரிங்க்ல சரக்க மிக்ஸ்ஸ் பண்ணிட்டேன்ன்ன்...இத்தன நேரம்ம் போத ஏறி கண்டபடி உளறிக்கிட்டு இருருப்பான்..."


"ஏன் அப்படி பண்ண?அவனுக்கும் உனக்கும் அப்படி என்ன விரோதம்?"


"ஹ...எனக்கும் அவனுக்கும் சொந்த விரோததம் எதுவுமில்ல்லை....பேசாம லண்டன்லையே யாராச்சும் வெள்ளக்காரிய மேரெஜ் பண்ணி நாலோ அஞ்சோ பறங்கிக்காய பெத்துக்கறத விட்டுட்டு இங்க வந்து என் பெஸ்ட் பிரண்ட் அச்சுவ கல்யாணம் பண்ண பாக்குறான்...இட்ஸ் டூ பேட் யு நோ..."


"பறங்கிக்காயா?"என்றான் மார்கஸ்.தமிழ் தெரியும் என்றாலும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை அவனுக்கு.


"பறங்கிக்காய்ய் தெதெரியாது...இட்ஸ் பம்ப்கின்ன்..."


பக்கென தன்னை மீறிச் சிரித்துவிட்டான் மார்கஸ்.அவள் உதாரணத்தில் அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.ஆனால் அதை ரசித்துக் கொண்டிருந்தால் முக்கியமான விஷயத்தை அறிய முடியாது என்பதால் இன்னும் கொஞ்சம் அவள் வாயை கிளற முடிவெடுத்தான்.


"ஏன் உன் பிரண்ட்க்கு இந்த மேரெஜ் இஷ்டம் இல்லையா?"


"இல்லல...அவ விக்கியத்தான்‌ லவ் பண்றா..."


"விக்கி...யு மீன் விக்னேஷ்?"


"எஸ் அவரு தாதான்...அவளுக்காக அமெரிக்கா வேலைய தூக்கி எறிஞ்சிட்டுடு அங்கிள் ஆபிஸ்ல குப்ப கொட்றார்...சே...அவர் எங்க குப்ப கொட்றாரு.. பொன்னம்மால கொட்டுது...வேலைப் பாக்குறார்...ஜாப்ப்"


"அத மிஸ்டர் தீனதயாளன் கிட்ட சொல்லி மேரெஜ் செட்டில் பண்ணலாமே?"


"அவருகிட்டயாயா...நோ சாசான்ஸ்...அவருதான் மாக்குவ கண்டு மயங்கிக் கெடக்குறாரே...அதுனால நா மாக்குவவ எப்பிடியாவது வெரட்டறேன்னு அச்சுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன்ன்...வெள்ளையனே வெளியேறு போராட்டம்...பறங்கியே போ போ இயக்கம்ம்ம்"


அவன் தடுக்கும் முன் கையிலிருந்த பாட்டிலை முழுவதுமாக வாயில் ஊற்றியவள் மட்டையாக விழுந்துவிட்டாள்.கீழே விழுந்தவளை பார்த்து மர்மமாக சிரித்தான் மார்கஸ்.
 
Last edited:
#7
மாக்குவ மாட்டி விடரண்ணு இப்படி பேக்கு மாதிரி சரக்கு அடிச்சி மட்டை ஆகிட்டயே சைது ???????????போச்சு போ அவன் உன்ன வச்சி பிளான் பண்ணிட்டான்???சூப்பர்??
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top