You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Marcus Weds Chaitanya-6

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...ஐம் பேக்...உங்க மாக்கு சைத்துவ கூட்டிட்டு வந்திட்டேன்...இனிமே கரெக்டா யூடி கொடுப்பேன்னு நம்பறேன்....
அர்ச்சனா விக்னேஷ் திருமண நாள் அழகாக விடிந்தது.இரவு பன்னிரெண்டு மணி வரை ரங்கோலி டெக்ரேஷன் என தன் திறமையை தோழிக்காக செலவிட்ட சைதன்யா ஐந்து மணி வரை குட்டித் தூக்கம் போட்டு எழுந்தாள். தான் முதலில் ரெடியாகி அர்ச்சனாவை தயார் செய்ய வேண்டியிருந்ததால் வேகமாக குளியலறையில் புகுந்துக் கொண்டாள்.

வேகவேகமாக குளித்து தலையை துவட்டியபடி வெளியே வந்து கண்ணாடி முன் அவள் நின்ற போது அவள் எதிரே அழகிய ரேப்பரில் சுற்றிய கிஃப்ட் பாக்கெட் ஒன்று இருந்தது.இவ்வளவு சீக்கிரம் அர்ச்சனாவிற்கு யார் கிஃப்ட் கொடுத்திருப்பார்கள்?என யோசித்தவள் ஒருவேளை விக்னேஷ் ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்திருப்பானோ?என யூகித்தவள் அவளைப் பார்த்தவள் அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை கண்டு அதை அனுப்பியவர் பெயரைத் தேடியவளின் கண்களில்

'டூ மை டியர் ஏஞ்சல் சைதன்யா
வித் லவ் மார்கஸ்'

என்ற கார்டை காணவும் திகைத்து நின்று விட்டாள்.

'இது அச்சுக்கு வந்ததில்ல மாக்கு எனக்கு கொடுத்தது!'

வித் லவ் என்ற எழுத்தை மென்மையாக வருடியவள் பேக்கெட்டை கவனமாகப் பிரித்தாள்.உள்ளே இருந்த மயில் கழுத்து வண்ணப் புடவை அவளை பார்த்து பளீரென சிரித்தது.அவள் மிகவும் ஆசைப்பட்டு வேண்டாம் என விட்டு வந்த புடவை இப்போது அவள் கைகளில்... அதுவும் மார்கஸின் பரிசாக.சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள் அவள்.கண்களில் லேசாக கண்ணீர் கூடத் துளிர்த்து விட்டது.

அதை அழகாக பின் வைத்து உடுத்தியவள் தலை நிறைய மல்லிகைச் சரத்தை சரியவிட்டாள்.கை காது கழுத்து கைகளில் அதற்கு பொறுத்தமான நகைகளை அணிந்து கண்ணாடி முன் நின்றவளுக்கு அதில் தெரிந்த அழகிய ஆரணங்கு யார் என திகைத்து விட்டாள்.

காலையில் சீக்கிரமாக முகூர்த்தமாதலால் ஆறு மணியிலிருந்தே சடங்குகள் தொடங்கிவிட்டது.பேச்சும் சிரிப்பும் கொண்டாட்டமாக நடந்துக் கொண்டிருந்தது திருமணம்.குறுகிய காலமானலும் விக்னேஷ் மற்றும் மார்கஸ் நெருங்கிய தோழர்கள் ஆகிவிட்டனர்.மணமகனின் தோழனாக அவனுடனே இருந்தான் மார்கஸ்.

மணமகன் செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்து மணமகள் வரும் நேரம் நெருங்கியது.விக்னேஷின் காதில் ஏதோ கூறி கேலிச் செய்துக் கொண்டிருந்த மார்கஸின் பேச்சு திடிரென நின்றுவிடவே என்னவாகயிருக்கும் என திரும்பிய விக்னேஷ் அங்கே அர்ச்சனாவை அழைத்து வந்த சைதன்யாவின் அழகே அவனை வாய்மூடச் செய்து விட்டது என புரிந்துக் கொண்டான்.

அர்ச்சனாவை மெதுவாக அழைத்து வந்து மணவறையில் விக்னேஷ் அருகே அமர்த்திய சைதன்யா லேசாக நிமிர்ந்த போது பார்வையாலையே தன்னை விழுங்கிவிடுவான் போல தன்னையே நோக்கிய மார்கஸின் பார்வை குங்குமமாக சிவக்க வைத்தது அவளை.

குறித்த நல்ல நேரத்தில் மங்கல நாணை அர்ச்சனாவின் கழுத்தில் கட்டி அவளை தன் வாழ்க்கை துணையாக ஏற்றான் விக்னேஷ்.

திருமணத்திற்கு பின்னான சடங்குகள் முடிந்து மணமக்கள் இருவரும் ஓய்வாக அமர்ந்திருந்த போது,

"விக்கி!அது..‌"

"நீ என்ன சொல்லப் போறேன் தெரியும்...நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்..நம்ம கல்யாணம் நடக்க மார்கஸும் சைதன்யாவும் தான் காரணம்...இப்ப நம்ம டேன்...எப்படியாவது பெரியவங்ககிட்ட பேசி கூடிய சீக்கிரம் அவங்க கல்யாணத்த நடத்தி வைக்கனும்... இன்னும் நாலைஞ்சு நாள்ல பேசிடலாம்... டோண்ட் வொரி"

சொன்னபடியே சைதன்யா வீட்டு விருந்துக்குச் சென்ற போது விஷயத்தை மெதுவாக பிரபாகரனின் காதில் போட்டுவிட்டான்.ஆனால் அவர் முகத்திலிருந்து அவனால் எதையும் யூகிக்க முடியவில்லை.யோசித்து இரண்டு நாட்களில் கூறுவதாக பேச்சை முடித்துவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு பாரடைஸ் ஹோட்டலுக்கு விக்னேஷ் அர்ச்சனா மற்றும் மார்கஸ் மூவரையும் அழைத்தாள் சைதன்யா.பிரபாகரனிடம் பேசியதை மார்கஸிடம் விக்னேஷ் கூறியிருந்ததால் அதைப் பற்றிக் கூறத் தான் அழைத்திருக்கிறாள் என்று மகிழ்ச்சியோடு தயாராகி ஹோட்டலை வந்தடைந்தான்.வாயிலில் அப்போது தான் வந்திறங்கிய அர்ச்சனா விக்னேஷோடு உள்ளே சென்று தன்னவளை கண்களால் தேடினான்.ஆனால் அவளின் சுவடே அங்கே இல்லை.முன்பே ஃபோனில் ரிசர்வ் செய்த டேபிள் பற்றி சைதன்யா கூறியிருந்ததால் மூவரும் சென்று அங்கே அமர்ந்தனர்.

புதுமணத் தம்பதியை மார்கஸ் கேலி செய்ய அவர்கள் திருப்பி அவனையும் சைதன்யாவையும் சேர்த்து கேலி செய்ய என பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் திடிரென அர்ச்சனாவின் பேச்சு நின்று ஒரே இடத்தில் நிலைக்குத்தி நிற்கவும் மார்கஸ் மற்றும் விக்னேஷ் என்னவென்று திரும்பிப் பார்த்தவர் திடுக்கிட்டனர்.அங்கே மார்கஸின் வயதையொத்த ஒரு இளைஞனின் கையில் தன் கையை பிணைத்தவாறு இவர்கள் இருந்த திசைக்கு வந்துக் கொண்டிருந்தாள் சைதன்யா.

அது சாதாரண நட்பு ரீதியான தொடுகையாக இல்லை.பார் பார் நாங்கள் நெருக்கமானவர்கள் என்று சூழ இருப்போருக்கு காட்டும் செய்கை என்பது வெட்டவெளிச்சமாக காட்டியது.டேபிள் அருகே வந்ததும் இருவரும் நெருக்கமாக இவர்கள் எதிரே அமர்ந்தனர்.

"ஹாய் சாரி ஃபார் தி லேட்...பீச்லேந்து வரத்துக்கு இவர் கேட்கவேயில்லை... எப்படியப்படியோ சமாளிச்சு கூட்டிட்டு வந்தேன்...பை த பை ஹி இஸ் மை டார்லிங்...சாரி...மை லவ் விஷ்வா...இவர உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த தான் இங்க வர சொன்னேன்..."என்று மாபெரும் அணுகுண்டைத் தூக்கி அவர்கள் தலையில் போட்டாள் சைதன்யா.

அதிர்விலிருந்து முதலில் மீண்ட அர்ச்சனா,

"சைத்து!என்னடி இது?இது யாரு எனக்கு தெரியாத பாய்ஃபிரெண்ட்?"

"சாரிடி அச்சு...நா சொல்லனும்னு தான் நினைச்சேன்...பட் இவரு பிஸினஸ் விஷயமா ஃபாரின் ட்ரிப் போய்ட்டார்.‌.‌.திரும்பி வர வரைக்கும் யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு ப்ராமிஸ் வாங்கிட்டார்...நேத்திக்கு தான் ட்ரிப்ப வெற்றிக்கரமா முடிச்சிட்டு இந்தியா வந்தார்...அதான் உடனே உங்களுக்கெல்லாம் இன்ட்ரோட்யூஸ் பண்ண கூட்டிட்டு வந்திட்டேன்...விஷ்...இது அர்ச்சனா மை பெஸ்ட் பிரண்ட்...இது அவர் ஹஸ்பெண்ட விக்னேஷ்...இவர் எங்க ம்யூச்வல் பிரெண்ட் தி கிரேட் பிஸ்னஸ்மேன் மார்கஸ் ஃப்ரம் லண்டன்...அண்ட் காய்ஸ் இவர் விஷ்வா...இந்தியாவின் நம்பர் ஒன் பிஸ்மேன்...மை லவர்....மூணு வருஷமா சின்சியரா லவ் பண்றோம்..கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க டிசைட் பண்ணியிருக்கோம்"என்று அவன் விரல்களோடு தன்னதை பிணைத்தவாறு கூறினாள்.

சேர்ந்திருந்த விரல்களை சிறிது நேரம் உறுத்து விழித்த மார்கஸ் சட்டென எழுந்து நின்று,

"எக்ஸ்க்யூஸ் மீ!விக்னேஷ் எனக்கு ஒரு இம்பார்ட்டனட் வீடியோ கால் வரதா மெசேஜ் வந்திருக்கு...ஸோ ஐ ஹவ் டூ கோ...யூ காய்ஸ் கேரி ஆன்...அண்ட் கங்கிராஜுலேஷ்ன்ஸ் மிஸ் சைதன்யா அண்ட் மிஸ்டர் விஷ்வா...பை..."என்றவன் மறுமுறைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து விரைந்து விட்டான்.

புயல் வேகத்தில் தன் காரை கிழக்கு கடற்கரை சாலையில் விட்டவன் மஹாபலிப்புரத்தின் ஆளரவமற்ற பீச்சில் சென்று நிறுத்தினான்.மனம் உலைக்களமாகக் கொதித்தது.தன் வாழ்நாளில் முதல்முறையாக தான் விரும்பிய பெண்ணை இழந்த வலி அவன் இதயத்தை குத்திக் கிழித்தது.அவளை முதன்முதலில் சந்தித்ததிலிருந்து இன்றைய தினம் வரை மனதில் ஓட்டிப் பார்த்தவன் ஸ்டேரிங்கில் முகம் புதைத்து உடல் குலுங்க அழுதான்.

"சைதன்யா........."
 
#7

வித் லவ் மார்கஸ்'என்ற கார்டை காணவும் திகைத்து நின்று விட்டாள்.

Nice update inimel regular update kidaikuma????
 
Sponsored

Advertisements

Top