• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak koattai - Minnal , Aththiyaayam 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
மாயக்கோட்டை - மின்னல்

எழுத்து : ஸ்ரீஜா வெங்கடேஷ்

அத்தியாயம் 1:

நாள் 21.11.2018

சென்னை மெரீனா கடற்கரையில் அலைகள் வந்து வந்து மோதும் கரையோரம் மெதுவாக மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருந்தனர் பூஜாவும் அருணும். அவர்களுக்கு சற்று பின்னே பூஜாவின் தந்தையும் அருணின் தந்தையும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தனர். பெரியவர்கள் இருவரிடமும் பேச்சு சுவாரசியம். இளையவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல பேசிக்கொண்டு தான் வந்தனர். ஆனால் இருவரின் பேச்சின் சாராம்சம் வெவ்வேறு. பெரியவர்கள் இருவரும் பூஜாவுக்கும் அருணுக்கும் எப்போது கல்யாணத்தை முடிக்கலாம் என பேசினர் என்றால் சம்பந்தப்பட்ட இருவரும் கடற்கரையில் இருக்கும் சுற்றுப்புற சீர்கேட்டைப் பற்றிக் கவலையோடு பேசினர். இளைஞர்கள் என்றாலும் இருவருமே மேல்படிப்பு சுற்றுப்புறவியல் படித்து விட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்தனர். மக்களுக்கு சுற்றுச் சூழல் பற்றியும் அது எப்படி சீர் கேடடைகிறது அதனால் நாம் எப்படி பாதிக்கப்படுவோம் என்பது பற்றியும் வீதி நாகடங்கள் மூலமும் பேச்சுக்கள் மூலமும் அறிவுறுத்தி வந்தனர். பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்ல முடியாது என்றாலும் சிலர் அவர்களது செய்கையால் மாறவே செய்தார்கள். நூறூ பேருக்கு சொல்வோம் ஒருவர் மாறினாலும் நமக்கு வெற்றியே என்ற நோக்கோடு செயல்பட்டனர் இருவரும்.

பூஜாவின் தந்தை பெரியசாமியும் அருணின் தந்தை குமரகுருவும் பாலிய கால நண்பர்கள். பெரியசாமியின் தங்கையைத்தான் குமரகுரு திருமணம் செய்து கொண்டார் எனவே நட்பு உறவானது. குமர குருவுக்கு அருணும் அதைத்தொடர்ந்து மூன்று வருடங்களில் பெரியசாமிக்குப் பூஜாவும் பிறக்கவே இவனுக்கு இவள் தான் என அப்போதே முடிவு செய்து கொண்டனர். குமரகுருவுக்கு ஒரு தனியார் அலுவலகத்தில் பெரிய வேலை. பெரியசாமி தனது குடும்பத்தொழிலான ஜவுளி வியாபாரத்தைக் கவனித்து வந்தார். சிறு வயது முதலே பூஜாவும் அருணும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். வீட்டில் பொருளாதார பிரச்சனை இல்லை என்பதால் இருவராலும் தங்கள் லட்சியத்தை நோக்கி நடக்க முடிந்தது.

நடைப்பயிற்சி முடிந்து பூஜாவின் வீட்டில் நுழைந்தனர் நால்வரும்.

"டிஃபன் எடுத்து வை சாந்தி! குமாரும் வந்திருக்கான் பாரு! எல்லாருக்கும் முதல்ல காப்பி கொண்டா. எனக்கும் காப்பியில ரெண்டு ஸ்பூன் சக்கரை போடும்மா" என்றார் பெரியசாமி.

"அப்பா! சர்க்கரை போட்டு காப்பி சாப்பிட்டா நீங்க ஓடினதுக்கு பலனே இல்ல! "

"அடபோம்மா! நாக்கு செத்து போச்சு! ஒரு ஸ்பூனாவது போட்டுக்கறேனே" என்று கெஞ்சினார் மகளிடம். சிரித்துத் தலையசைத்தாள் பூஜா.

"நாம பேசுனதை இவங்க கிட்ட சொல்லுடா சாமி" என்று எடுத்துக்கொடுத்தார் குமரகுரு.

இளைஞர்கள் இருவரும் கேள்விக்குறியோடு பார்த்தனர்.

"இதைப்பாருப்பா அருண்! எங்களுக்கும் வயசாகிக்கிட்டே போகுது! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டா எங்களுக்கு நிம்மதி ஆயிடும். இன்னும் எத்தனை நாள் கல்யாணத்தைத் தள்ளிப் போடப் போறீங்க?"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அருணின் பார்வையின் பொருளை புரிந்து கொண்ட பூஜா தாயின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.

"அம்மா! நாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு சொல்லலியே? எனக்கு இப்பத்தான் 22 ஆகுது. அருணுக்கு 25. அதுக்குள்ள என்னம்மா அவசரம்? ஏதாவது பெரிய விஷயம் ஒண்ணை செஞ்சிட்டு தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கோம். அடுத்த வருஷத்துக்குள்ள அதை செஞ்சிருவோம்"

"இதையே தானே போன வருஷமும் சொன்னீங்க! இன்னமும் நீங்க எதையும் சாதிச்சதா தெரியலியே?"

"அந்த மாதிரி விஷயம் எதுவும் எங்க கவனத்துக்கு வரலியே மாமா!"

"நீங்க என்ன தான் எதிர்பாக்கறீங்க?"

"நம்ம தமிழ் நாட்டைப் பொறுத்தவரைக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுத்தமா இல்ல! அதனால நம்ம இயற்கை வளம் அழிஞ்சுக்கிட்டே போகுது. இத்தனை நதிகள் ஓடுற நம்ம நாட்டுல குடிக்கவே தண்ணி கிடைக்க மாட்டேங்குது. இதையெல்லாம் மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க்கணும் மாமா!"

பூஜா தொடர்ந்தாள்.

"ஆமாப்பா! எங்களால ஏதாவது ஒரு பகுதி மக்களுக்காவது நல்லது நடக்கணும். அவார்டு வாங்கணும் பணம் சேர்க்கணும்னு நாங்க ஆசைப்படல்ல! மக்கள் எங்களை புரிஞ்சுக்கிட்டா போதும். அதைத்தான் நாங்க எதிர் பார்க்குறோம். இது தப்பா மாமா?" என்றாள் குமரகுருவைப் பார்த்து.

அவர் சில நொடிகள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். கண்ணாடியைக் கழற்றி அதை கர்சீப்பால் துடைத்த படி பேசினார் குமரகுரு.

"சாமி! பிள்ளைங்க சொல்றதுலயும் பாயிண்டு இருக்குப்பா! இந்தக் காலத்துல ஒவ்வொரு வீட்டுல பிள்ளைங்க தண்ணீ அடிக்குறதும் சாயங்காலத்துல டிஸ்கோதே போயிட்டு கன்னா பின்னானு ஆடுறதும்னு இருக்காங்க. ஆனா இவங்க நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு தானே நினைக்கறாங்க! செய்யட்டுமே?"

பூஜாவின் தாய் சாந்தி இடை மறித்தாள்.

"அவங்க தாராளமா நாட்டுக்கு நல்லது செய்யட்டும் அண்ணா! நாம என்ன தடுக்கவா செய்யுறோம்? அதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு செய்யட்டுமே? அதுல என்ன பிரச்சனை?"

தாயை முறைத்தாள் பூஜா. அவசரமாக மறுத்தான் அருண்.

"இல்லத்த! அது முடியாது. கல்யாணம்னா அது வாழ்க்கையை வேற கட்டத்துக்கு கொண்டு போறது. நிறைய கடமைகளும் பொறுப்பும் வேணும். நாங்க ரெண்டு பேருமே மெண்ட்டல்லி அதுக்கு இப்ப தயாரா இல்ல. எங்களுக்கு கொஞ்சம் டயம் கொடுங்க"

"கொஞ்சம் டயம்னா எவ்வளவு நாள்? மூணு மாசமா இல்ல மூணு வருஷமா?"

சங்கடமாக நெளிந்தார்கள் இளையவர்கள். நல்ல வேளையாக அருணின் ஃபோன் ஒலிக்க அதை எடுத்துப் பேசினான். உள்ளே சரியாக சிக்னல் கிடக்காததால் வெளியே சென்று பேசி விட்டு வந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சியும் ஆர்வமும் இருந்தது.

"யாரு அருண் ஃபோன்ல?"

"நம்ம ஃபிரெண்டு அரவிந்த் தான் பூஜா! ஒரு முக்கியமான விஷயம் சொன்னான்"

"என்ன?"

"அரவிந்த் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்னு உனக்குத் தெரியும் இல்லையா?"

"ஆமா"

"அங்கே பாவநாசம்னு ஒரு ஊர் இருக்கு. அது பொதிகை மலையோட அடிவாரம். மேலே காணிகள்னு சொல்லுற மலைவாழ் மக்கள் இன்னமும் இருக்காங்க! அவங்க கூட அரவிந்த ரொம்ப குளோஸ். அதனால தான் நமக்கு இந்த தகவல் கெடச்சது"

"என்ன தகவல்?"

"பொதிகை மலைக்காடு ரொம்பவும் பழைமையானது. அகஸ்திய முனிவர் வாழ்ந்த இடம்னு சொல்லுவாங்க! அது இப்ப அரசாங்கத்தால புலிகள் காப்பகம்னு அறிவிக்கப்பட்டிருக்கு. அங்க கன்னிமார் துறைன்னு சொல்லப்படுற ஒரு இடம் இருக்கு. அங்க தாமிரபரணி நதி சீறிப்பாஞ்சு ஓடுமாம். பார்க்கவே அத்தனை அழகாம். ராத்திரியில புலிகள் நடமாட்டம் கூட இருக்காம்."

"அதுக்கென்னப்பா இப்ப? உனக்கு என்ன தகவல் வந்தது அதைச் சொல்லு"

அவசரப்பட்டாள் அத்தை சாந்தி.

"சொல்றேன் அத்த! அங்க அதான் அந்த கன்னிமார் துறைங்குற இடத்துக்கு மேல யாரோ வட நாட்டுக்காரங்க ஒரு ரிசார்ட் கட்ட முயற்சி செய்யுறாராங்களாம். கிட்டத்தட்ட 25 ரூம் கொண்ட பெரிய பங்களா மாதிரி வடிவமைக்க திட்டம் போட்டு பிளான்னுக்கு அப்ரூவல் எல்லாம் வாங்கிட்டாராம். ஆனா கட்ட விடாம ஊர் மக்களும் மலை மக்களான காணிகளும் தகறாரு பண்றாங்களாம்"

"ஏனாம்?"

"வெளி ஆட்கள் வந்தா எங்க வாழ்வாதாரமே பாதிக்கும் அது எங்களுக்கு வேன்டாம்னு சொல்றாங்களாம்"

"இதுக்கு நீ என்ன நினைக்குற அருண்?"

"இல்லப்பா! இந்த மாதிரி ரிசார்ட் வரணும். அப்பத்தான் நாட்டு மக்களுக்கு மலையும் அதோட அழகும் அது கொடுக்குற சுத்தமான காத்தோட மகிமையும் புரியும். அது மட்டும் இல்லப்பா. இந்த மாதிரி ரிசார்ட் வந்தா உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கும். இப்ப காணிகள் ரொம்ப ஏழமையான நிலையில் தான் இருக்காங்க! அவங்க கிட்ட பண நடமாட்டம் கூடும்."

"இதையெல்லாம் அவங்க யோசிக்காமயா இருப்பாங்க?" என்றார் பெரியசாமி.

"இல்லப்பா! அவங்களுக்கு காட்டைப் பத்தின நல்ல அறிவு இருக்கே தவிர மத்த விஷயங்கள் அவ்வளவா தெரியல்ல! நாம எடுத்து சொன்னாத்தான் புரிஞ்சுக்குவாங்க. உதாரணமா ரெண்டு வருஷத்துக்கு முந்தி நானும் அருணும் அங்கே போயிருந்தோம் இல்ல? அப்ப காட்டுல அரசாங்கமே ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருக்கு. ஆனா அதுல படிக்கவே பிள்ளைங்களை அனுப்பல்ல அவங்க. ஏன்னா கல்வியினால என்ன பயன்னு அவங்களுக்குத் தெரியல்ல. அப்புறம் அரவிந்தனோட சேர்ந்து நாங்களும் எடுத்துச் சொன்ன பிறகு தான் அவங்களுக்குப் புரிஞ்சது. இப்ப 30 பசங்க படிக்குறாங்க"

"உம் அப்படியா? சரி இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க?"

"செய்யுறது என்ன? நாளைக்கே பூஜாவும் நானும் கிளம்பி பாவநாசம் போயிட்டு அங்க இருந்து மலை ஏற வேண்டியது தான். "

"எப்ப திரும்புவீங்க?"

பூஜா தான் பதிலளித்தாள்.

"எனக்கென்னவோ இந்த முறை எங்க போராட்டம் அத்தனை சீக்கிரம் முடியாதுன்னு தோணுது மாமா! எப்படியும் ஒரு மாசமாவது ஆகும்னு நினைக்கறேன்"

"ஏம்மா! உள்ளூர் மக்களைப் பார்த்து எடுத்துச் சொல்லிட்டு திரும்ப வேண்டியது தானே? அதுக்கு எதுக்கு ஒரு மாசம்?" என்றார் பெரியசாமி.

"இல்ல மாமா! முதல்ல அவங்களுக்கு எங்க மேல நம்பிக்கை வரணும். நாங்க அந்த ரிசார்டோட சொந்தக்காரங்களுக்கு வேண்டியவங்க இல்லைன்னு மக்கள் நம்பணும். அப்பத்தான் எங்க நோக்கம் நிறைவேறும். அதுக்கு கொஞ்சம் சமயமாகும்."

பெரியவர்கள் அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டனர். தொண்டையைக் கனைத்துக்கொண்டு குமரகுரு பேசினார்.

"இதைப் பாருங்க! உங்க மேல நம்பிக்கை வெச்சு நீங்க போறதுக்கு நாங்க அனுமதிக்கறோம். ஆனா திரும்பி வந்ததும் கல்யாணப் பேச்சு எடுப்போம். அப்பவும் இன்னும் ஒரு வருஷம் போகட்டும் ரெண்டு வருஷம் போகட்டும்னெல்லாம் பேசக் கூடாது. இந்த நிபந்தனைக்கு நீங்க சம்மதிச்சா பாவநாசம் போகலாம் இல்லைன்னா இல்லை தான்" என்றார் உறுதியான குரலில். அதை மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

தங்களை கிடுக்கிப் பிடியில் மாட்டி விட்டார்கள் என்று புரிந்து கொண்ட இளைஞர்கள் இருவரும் வேறு வழியின்றி சம்மதித்தனர்.

"அபடீன்னா நீங்க நம்ம காரையே எடுத்துட்டுப் போங்க! அது தான் வசதி உங்களுக்கு. நாளைக்கு நாள் நல்லா இருக்கு நாளைக்கே கெளம்புங்க" என்றார் பெரியசாமி. பூஜாவும் அருணும் கிளம்ப எத்தனித்த அதே நேரம் பாவநாசம் கன்னிமார் துறையில் ரிசார்டுக்காக நிலத்தை அளக்க வந்த இரு அதிகாரிகள் கோரமான முறையில் இறந்து கிடந்தனர். கை ரேகையோ விலங்கின் காலடித்தடமோ எதுவுமில்லை. உடலில் இருந்த மொத்த ரத்தமும் வெளியேறிய நிலையில் வெளுத்துக் கிடந்த பிரேதத்தை போலீசாரும் பொது மக்களும் பார்த்தனர்.

காணிகள் குடியிருப்பில் மாயக்கோட்டை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதாகவும் இனியும் எத்தனை பலிகள் விழுமோ என்றும் அவர்கள் பயத்தோடு பேசிக்கொண்டனர்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top