• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak koattai - Minnal Aththiyaayam 6.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 6.

அந்த பங்களா இருளடைந்து கிடந்தது. போகும் வழியெங்கும் செடிகள் புதர்கள் என வளர்ந்திருந்தன. மனித நடமாட்டமே இல்லை என்பதன் அடையாளமாக பாதையே இல்லாமல் இருந்தது. மெல்ல முன்னேறினார்கள் பூஜாவும் அருணும். அந்த பங்களாவை நெருங்க நெருங்க இன்னும் இருட்டு மையிருட்டானது. டார்ச்சின் ஒளியால் தான் இப்போது சுமாராகவாவது பார்க்க முடிந்தது. அந்த சூழலின் அமைதியே வயிற்றைக் கலக்கியது பூஜாவுக்கு. சில் வண்டுகளின் ரீங்காரம் கூட இல்லாமல் அமைதியான அந்த இடத்தில் காலடிச் சத்தம் கூடக் கேட்கவில்லை. பங்களாவின் பெரிய இரும்புக் கதவு சமீபித்தது. அதை திறந்து உள்ளே போனான் அருண். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவன். உள்ளே செல்ல காலடி எடுத்து வைத்த பூஜாவால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அவள் நின்றிருந்த இடமே புதை மணலாக மாறி அவளை உள்ளே இழுக்க ஆரம்பித்தது." அருண் அருண் " என்று கத்தத் துடித்தாள். ஆனால் நாவு அசையவே இல்லை. மூச்சு அடைத்தது. தொப்பலாக வேர்த்தது.

"பூஜா பூஜா" என்ற குரல் கேட்டு சட்டென விழித்தாள் அவள். எங்கே இருக்கிறோம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை அவளுக்கு.

"என்ன முழிக்குற பூஜா? நாம அம்பையில லாட்ஜுல இருக்கோம். நேத்து பூங்குளத்துல இருந்து வந்தது தான் நீ என் ரூமுலயே படுத்துத் தூங்கிட்ட. அதனால நான் உன் ரூமுக்குப் போயிட்டேன். விடிஞ்சு இவ்வளவு நேரம் ஆச்சு நீ எழுந்துக்கலையேன்னு வந்தா என்னென்னவோ உளறிக்கிட்டு இருக்கே?" என்றான் அருண்.

அவனைக் கண்டதும் கண்ணீர் பெருக அப்படியே அணைத்துக்கொண்டாள். எப்போதும் உணர்ச்சி வசப்படாத அவள் அப்படி அணைத்துக்கொண்டது புதிராக இருக்க அவளை ஆசுவாசப்படுத்தினான் அருண்.

"ரிலாக்ஸ் பூஜா! என்ன ஆச்சு? எதுக்கு அழற?" என்று தோளை அணைத்துத் தட்டிக்கொடுத்தான்.

"அருண்! உனக்கு ஒண்ணும் ஆக்லையே? நான்...நான் ...புதை மணல்ல மூழ்கிட்டேன்..." என்று கோர்வையாக இல்லாமல் பேசினாள்.

"கண்ணம்மா! இதோ பாரு நான் முழுசா இருக்கேன். உனக்கும் ஒண்ணூம் ஆகல்ல! எதுவும் ஆக நான் விடவும் மாட்டேன். கண்ணைத் தொடை நீ முதல்ல. கனவு ஏதாவது கண்டு உளறுரியா?" என்றான் மென்மையாக.

அப்போது தான் கண்டது கனவு என்ற உண்மை உறைக்க அவனிடமிருந்து விலகினாள்.

"முதல்ல பல்லைத் தேய்ச்சிட்டு காப்பி குடி. நாம ரெண்டு பேரும் சேர்ந்து பலகாரம் சாப்பிடுவோம். இங்க ரமணா ஹோட்டல்ல இட்லி சும்மா பூ மாதிரி இருக்குமாம். " என்று இயல்பாகப் பேசினான். அவன் சொன்னபடியே செய்தாள். காப்பி கொண்டு வந்த லாட்ஜ் பணியாளன் இருவரையும் ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனான்.

"இப்ப சொல்லு நீ என்ன கனவு கண்ட?" என்றான் அருண்.

அந்த நினைவே பயத்தைக் கொடுக்க சிலிர்த்தாள் பூஜா. கனவை அவனிடம் விவரித்தாள்.

"ஃபூ! இதுக்கா இப்படி பயந்த? நேத்து மலையில அந்த மக்கள் பேசினதைக் கேட்டிருக்கே. அதோட அரவிந்தனும் என்னென்னவோ சொல்லிக் குழப்பிட்டான். டெட் பாடியைப் பார்த்த அதிர்ச்சி வேற அதான் இப்படி ஒரு கனவு வந்திருக்கு. ஆழ் மனசுல நீ ரொம்ப பயந்து போயிருக்கே பூஜா" என்றான் அருண்.

மௌனமாக அமர்ந்திருந்தாள் அவள்.

"உம் நீ சொல்றா மாதிரியும் இருக்கலாம். நான் என் ரூமுக்குப் போய்க் குளிச்சுட்டு ரெடியாகி வரேன். அரவிந்தனுக்கு ஃபோன் பண்ணு அவனும் வந்துரட்டும். மூணு பேரும் டிஃபன் சாப்பிட்டுட்டு அப்படியே மலை ஏறிடலாம்" என்றூ சொல்லியபடி தன் அறைக்குப் போனாள். அரை மணியில் தயாராகி ரமணாஸ் கஃபே என்ற ஹோட்டலில் அமர்ந்திருக்க அரவிந்தன் வந்து சேர்ந்து கொண்டான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை.

"மாயக்கோட்டைக்குப் போறதுன்னு நீங்க முடிவே செஞ்சுட்டீங்களா?" என்றான். அந்த நேரம் வெயிட்டர் வர ஆளுக்கொரு பிளேட் இட்லி வடை ஆர்டர் செய்தார்கள். மீண்டும் அரவிந்தன் பக்கம் திரும்பிக் கேட்டான் அருண்.

"ஆமா! ஏன் கேக்குற?"

"எங்க தாத்தா ஒரு காலத்துல பாவநாச அணைக்கட்டுல தான் வேலை பார்த்தாராம். காணிங்களைப் பத்தி நிறையத் தெரிஞ்சிருக்கு அவருக்கு. நாம மாயக்கோட்டை போகப்போறோம்னு சொன்னதும் பயந்துட்டாரு" என்றான் கலக்கமாக.

"அப்படி என்னடா சொன்னாரு உங்க தாத்தா?"

"அது எப்பவோ பிரிட்டிஷ் காரன் கட்டுன பங்களாவாம். கட்டுனதுக்கப்புறம் அவங்களால அங்க தங்கவே முடியலியாம். தங்கப்போனவங்களும் உயிரோட திரும்பலையாம். அதனால அதை அப்படியே பூட்டி வெச்சிட்டாங்களாம். ஆனா எங்க தாத்தா அந்தக் கட்டுக்கதையெல்லாம் நம்பாம அந்த பங்களாவுக்குப் போயிருக்காரு."

"உம் வெரிகுட்! "

"என்ன வெரி குட்? முழுசாக் கேளு. காணிங்க எவ்வளவோ எச்சரிக்கை செஞ்சும் கேக்காமப் போயிருக்காரு. குறிப்பிட்ட தூரம் வரை போனது தான் அவருக்கு நினைவு இருக்காம். பங்களாவை நெருங்க நெருங்க ஏதோ புகை மாதிரி வந்து சூழ்ந்து இவரு மயங்கி விழுந்துட்டாரு போல. கண் விழிச்சுப் பார்க்கும் போது காணிக் குடியிருப்புல இருந்திருக்காரு. கிட்டத்தட்ட மூணு நாளா நினைவே இல்லையாம். அப்ப எங்க அப்பா சின்னக் குழந்தையாம். எங்க பாட்டி புருஷனைத் தேடிக்கிட்டு பாவநாசத்துக்கே வந்து விசாரிச்சிருக்காங்க! காணிங்க தான் எங்க தாத்தா கிட்ட கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க எங்க பாட்டியை"

"என்ன இது? மாயமா இருக்கு? பங்களா பக்கத்துல மயங்கி விழுந்த உங்க தாத்தா எப்படி காணிக்குடியிருப்புக்கு வந்தாராம்? அதைக் கேட்டியா நீ?"

"கேக்காம இருப்பேனா? அவருக்கு சுத்தமா நினைவே இல்லையாம். அது மட்டுமில்ல எங்க பாட்டி கூட காணிங்க கிட்ட கேட்டாங்களாம். ஆனா அவங்க சொல்ல மறுத்துட்டாங்களாம். " என்றான்.

தகவலின் தாக்கத்தில் அப்படியே அமர்ந்திருந்தார்கள் பூஜாவும் அருணும். பூஜாவுக்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டாள். ஆனால் அருண் சிரித்தான்.

"படிச்ச நீயே இப்படி புரளிகளை நம்புறியே அரவிந்தா?" என்றான். அவனது சிரிப்பு கோபமூட்டியது அரவிந்தனை.

"அப்ப எங்க தாத்தா பொய் சொல்றாருன்னு சொல்றியா?" என்றான் காட்டமாக.

"இல்ல இல்ல அரவிந்தா! ஐ ஆம் சாரி நான் அந்த அர்த்தத்துல சொல்லல்ல! அந்த பங்களா பக்கத்துல நிறைய கஞ்சாச் செடிகள் இருக்கலாம். அந்தப் புகை பட்டு அவரு மயங்கி விழுந்திருக்கலாம். அதைத்தான் சொன்னேன்" என்றான் சமாதானமாக.

சற்றே தணிந்தான் அரவிந்தன். அவன் பேசுவதற்குள் பூஜா முந்திக்கொண்டாள்.

"நீ சொல்றபடி பார்த்தா கஞ்சாச் செடி கிட்டப் போனாலேவா மயக்கம் வரும்? அந்தப் புகையை சுவாசிச்சாத்தானே மயக்கம் வரும்? அந்தக் காட்டுல கஞ்சாப்புகை எப்படி வந்தது?" என்றாள். அதானே என்பது போல நிமிருந்து அமர்ந்தான் அரவிந்தன். சற்றே யோசிக்கும் பாவனையில் மேஜையில் தாளம் போட்டான் அருண்.

"ஆங்க்! அந்தக் காட்டுல மூங்கில் மரங்கள் நிறைய இருக்கு இல்ல?ஒண்ணோடு ஒண்ணு உரசி நெருப்புப் பிடிச்சிருக்காலாம். அந்த நெருப்புப்புகை கஞ்சாச் செடிகள் மேலே பட்டு..."

"சரி அப்படியே வெச்சுப்போம். ஆனா காணிங்க ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க?"

"இது என்ன கேள்வி அரவிந்தா? அவங்க தான் மாயம் மந்திரம்னு இன்னமும் 12ஆம் நூற்றாண்டுல இருந்தே வெளிய வரலையே? எல்லாத்தையும் ரகசியமாத்தான் வெச்சுப்பாங்க. இல்லைனா உங்க காட்டுல கஞ்சா எப்படி வந்ததுன்னு கவர்மெண்ட் ஆளுங்க கேப்பாங்களே?" என்றான்.

சாப்பிட்டு விட்டு பில்லைக் கொடுத்து விட்டு காரில் ஏறிப் பறந்தனர் மூவரும். பூங்குளம் வந்ததும் இறங்கி டார்ச், கயிறு, அட்டை கடிக்காமல் இருக்க மூக்குப்பொடி, உப்பு இப்படி பல உபகரணங்களையும் சேகரித்துக்கொண்டு நடந்தனர். முதல் நாள் பார்த்த மூதாட்டி வந்தாள்.

"ஐயாமாரே! பயணம் தொலைவா?" என்றாள். அவள் கேள்வி கேட்ட விதம் பூஜாவுக்கு மிகவும் பிடித்தது.

"பார்த்தியா அருண்! எங்கே போறேன்னு கேக்காம பயணம் தொலைவான்னு பண்பா கேக்குறாங்க! என்று அருணிடம் சொல்லி விட்டு பாட்டியின் பக்கம் திரும்பினாள்.

"ஆமா பாட்டி! நதியோட அக்கரைக்குப் போறோம். அங்க நிறைய மீன் இருக்காமே?" என்றாள்.

"தாயி! என் பேரு கிளிக்குட்டி! எனக்கு வயசு 88 ஆகுது. என்னை ஏமாத்த முடியாது. நீங்க மாயக்கோட்டைக் போகப்போறீங்க! சரிதானே?" என்றாள்.

ஆமெத் தலையசைத்தாள் பூஜா.

"உம் போகலாம் போகலாம்! உங்களைப் பார்த்தா நல்லவங்களா தெரியுது! இந்தக் காட்டுக்கு தீம்பு நினைக்காம போயிட்டு வாங்க! போற வழியில பல விலங்குகள் இருக்கலாம் ஐயாமாரே! அதுங்களை எதுவும் செஞ்சுடாதீங்க! அப்புறம் படைச்சோனால கூட மின்னல் கிட்ட இருந்து உங்களைக் காப்பாத்த முடியாது." என்றாள்.

"நீங்க ஒருத்தர் தான் பாட்டி எங்களை போயிட்டு வான்னு சொல்லியிருக்கீங்க! சரி நாங்க கிளம்புறோம்" என்று திரும்பினார்கள்.

"ஐயாமாரே! நான் குடுக்குற வேரை கையில வெச்சுக்குங்க! திரும்பி வர முடியாதோன்னு பயம் வந்துச்சின்னா இந்த வேரை வாயில கடிச்சுக்குங்க! அப்புறமா நெருப்பை மூட்டி பாதி வேரைப் போடுங்க! நீங்க தானாகவே பூங்குள்ம் ஓடைக்கிட்ட வந்துருவீங்க" என்றாள்.

மரியாதை கருதி வேரை வாங்கிக்கொண்டு அவளுக்குப் பணம் கொடுக்கப் போனான் அருண். ஆக்ரோஷமாக மறுத்தாள் கிளிக்குட்டி.

"இது வந்து தான் எங்களை அழிச்சிரிச்சு ஐயாமாரே! இது சாத்தான் எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள். பிரமிப்பு அகலாமல் மேலே நடந்தனர். சந்தன மரங்கள், வாகை மரங்கள், மருத மரங்கள் என பல விதமான மரங்கள் தன் போக்கில் வளர்ந்திருந்தன. இடை இடையே பெயரே தெரியாத பூச்செடிகளும் பழ மரங்களும் இருந்தன. வானளாவ உயர்ந்த மரங்களால் சூரிய வெளிச்சம் மெலிதாகத்தான் நுழைந்து கொண்டிருந்தது. இனம் புரியாத பயம் நெஞ்சைச் சூழ மூவரும் மெல்ல நடந்தனர். திடீரென ஒரு ஓடை குறுக்கிட்டது. அதில் தண்ணீர் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. கால் நனைய நடந்தார்கள். சட்டென இருள் சூழ்ந்தது போலிருக்க வானம் பார்த்தார்கள். மேகங்கள் சூழ்ந்து இருட்டாக இருந்தது.

வானத்திலிருந்து கண் எடுத்த போது மூவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ஓடைக்கரையில் ஒரு பெண் வயது 18உம் இருக்கலாம் 80உம் இருக்கலாம். நிண்றிருந்தாள். அவள் பார்வை மூவரின் மேலேயும் நிலைத்திருந்தது. காலில் வித்தியாசமான உணர்வு தோன்ற ஓடையைப் பார்த்த போது தண்ணீர் சிவப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மூச்சை அடைக்க மூவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்துக்கொண்டனர்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
odaikaraiyil amarnthu irupaval than minnala sis. interesting sis
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
கிளி குட்டி நிஜமாகவே நல்லது செய்ய தான் நினைக்கிறார்?
யார் அது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top